









You Are Here: Home » Featured, Guest Article » ஆதாரத்துக்கு மேல் ஆதாரத்துடன் எந்திரனின் வசூல் விபரங்கள் — ஒரு முழு தொகுப்பு! GUEST ARTICLE!!
எந்திரனின் குவித்துள்ள மாபெரும் வெற்றி மற்றும் அதன் இமாலய வசூல் குறித்து, அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பதிவை நேற்று நாம் எழுத தீர்மானித்தபோது, நான் என்ன நினைத்தேனோ, அத்துனையும் அதற்க்கு மேலும் வார்த்தைகளை அடக்கி, நண்பர் விஜய் வாசு அவர்கள் நமது ‘Guest Article’ பகுதிக்கு விரிவான அலசல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் அவர் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக தெளிவாக அழகாக எழுதியிருக்கிறார்.
நமது தள வாசகர்கள் இத்துனை சிறப்பாக எழுதமுடியும் என்பதை என்னும்போது நமக்கு ஒரு வகையில் பெருமை தான்.
கட்டுரையின் கடைசியில் அவர் கூறியிருக்கும் ஒரு பத்தியை அப்படியே இங்கு இப்போதே தருகிறேன். காரணம், நான் சொல்ல நினைப்பதும் இதைத் தான். என் மனதில் உள்ள கருத்துக்களும் இவைதான்.
//என் வாழ்வில், நான் செய்யும் செயல்களில் கிடைக்கும் வெற்றிக்கு தலைவரின் பங்கு மிகவும் உன்னதமானது. தோல்வியையோ துக்கத்தையோ கண்டு நான் என்றும் மிரளாது இருப்பதற்கு காரணம் தலைவரின் பொன் வார்த்தைகள்.
அவரது வாழ்வு என்னை போன்று அன்பில் மட்டுமே உலகை ஆள நினைக்கும் உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு. அவர் கடந்து வந்த பாதை வாழ்வில் சோர்வுற்று இருக்கும் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வில் நிமிர்ந்து நிற்க தேவையான ஊன்றுகோல். தலைவரின் எளிமை நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துடமை அவரின் பண்பட்ட பேச்சு நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியதாகும். அவரின் குட்டி கதைகள் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க தேவையானவற்றை கூறும் கருத்துறைகள். அவரின் பொறுமை நாம் வாழ்வில் நாம் பயில வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
ஒரு தந்தையாகவும், கணவனாகவும் அவர் ஆற்றும் செயல்கள் நாம் வாழ்வில் நம்முடைய முக்கியமான கடைமைகளை நமக்கு எடுத்துக் கூறுபவை. அவர் நம் வாழும் காலத்தில் இவ்வுலகில் வாழ்ந்தவர் என்பது நமக்கு எல்லாம் பெருமை தர கூடிய விஷயம். வாழ்க தலைவர், வளர்க அவரது புகழ், வாழ்க மனித குலம், வளர்க மனிதகுல ஒற்றுமை .//
Over to Vijay Vasu…
Dear Friends,
It has been a while since I wrote my last article for OnlySuperstar.com. After a small journey to Malaysia and spending a few months there I am now back home in Coimbatore. As I wait for my next assignment, I am back again enjoying the news of Thalaivar’s next movie ‘RANA’. I must upfront tell you all that I was very impressed and proud to be a fan of Super Star Rajnikanth throughout my experience in Malaysia. Not only Tamilians or Indians were staunch followers of ‘Thalaivar’, but even the Malays and Chinese were huge fans of Super Star. I remember one occasion, where I was standing in front of my hotel in Penang, Malaysia. I was talking to a old Malay man and I was telling him I was from India and I live in Coimbatore, a district in Tamilnadu.
The first thing he conveyed me was that he was a huge fan of Rajinikanth and watches all his movies first day. He also told me that he enjoyed watching Enthiran and thought that it was the best asian movie he has ever seen. In fact, I lived with a group of Malaysian Indians who were not great admirers of Rajni. Yet, they always played Enthiran song at home and bought original Enthiran video songs DVD to view to the songs. Like, millions of others around the globe, they did make fun of Rajini. But the truth was that, even they were not able to ignore him. That is the speciality of our Thaliavar. You can like him or hate, you can never ignore him. That is why he is the biggest star India has ever seen.
In the last couple of days, there has been information on the collection records of Enthiran – The Robot from Sun Pictures. However, few of our friends who despise thalaivar are trying to use it to spread false news about the movie. So, this article is not only a direct reply to those detractors, but also an effort to bring in all the media coverage regarding the box office records of Enthiran in one single place. The detailed article in Tamil will cover the below facts with proof and media reports. I hope this will be a hit in the face for all those detractors of the one and only super star Rajnikanth.
Please note that given that the film of made for Tamil audience who are 7% of the Indian population, the movie has gone on to become the highest grosser ever across India. This shows the power and reach of Super Star. Also, this article will provide you authentic and trusted sources for the final collection report, unlike others who edit Wikipedia with incorrect information and use that to falsely sing praise of other actors.
At the end of it all, I write this simply because; just like you all I love Rajini. I am proud to be a Rajini fan and I will always be one. I do not have any shame in accepting my devotion for Rajni the human being. He has always been an inspiration and the story of his life is something that will motivate any person on planet earth. Long live Rajnikanth and we will dive straight to the article in Tamil.
சோதனைகளை தாண்டினால் தான் சாதனை படைக்க முடியும்! - இது நம் தலைவரின் பொன்னான வார்த்தைகள். இதற்கு உதாரணமும் நமது தலைவரே தான்.
ஏந்திரன் படத்திற்கு முன் தலைவரின் குசேலன் படம் வெளிவந்தது. தலைவர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த படம் அது. ஒரு சிலரின் சுயநலத்தால், நமது தலைவரின் பெயருக்கு களங்கம் வந்தது உண்மை. ஆயினும், சூரியனின் கதிர்களை எந்த மேகத்தினாலும் மறைக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போல தலைவரின் புகழையும் யாரும் அழிக்க முடியாது என்பதற்கு காலம் காட்டிய உதாரணம் தான் ‘ஏந்திரன்’.
இப்படத்தின் மூலம் இந்திய திரை உலகில் என்றுமே ஒரே ஒரு வசூல் சக்கரவர்த்தி தான் என்பதை மீண்டும் பசுமரத்தானி போல மிக தெளிவாக நிரூபித்து உள்ளார் நம் தலைவர். இந்த திரைப்படத்தை நம் தலைவர் தவிர வேறு யார் நடித்து இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்க சாத்தியமே இல்லை. இதை நான் கூறவில்லை, இந்திய திரை உலகமும், வட மற்றும் தென் இந்திய ஊடகங்களும் ஒரே மூச்சில் கருத்து வேறுபாடு இன்றி பதிவு செய்துள்ளன.
ஆயினும், ஒரு சிலர் இதை ஏற்க மறுத்து ‘கண் மூடிய பூனை உலகமே இருண்டதாக நினைப்பதை போல்’ தங்களுடைய நாயகன் தான் மிகப் பெரிய நாயகன் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். வெறும் 25 நாட்கள் ஓடுவதற்கே திண்டாடிக்கொண்டு இருக்கும் படம், நமது ஏந்திரனை பிளந்தாதாக உதார் விட்டுக்கொண்டு திரியும் இவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வர வில்லை, பரிதாபம் தான் வருகிறது. இவர்கள் இப்போது மட்டும் அல்ல, எப்போதும் திருந்தாதவார்கள். இவர்களுக்கு பதில் கூற நாம் இப்பதிவை இடவில்லை. நமது நோக்கம், ஏந்திரன் என்னும் மிக பெரும் வெற்றிப் படத்தின் இமாலய வெற்றியை குறித்து பற்பல செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை ஒரே இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும் என்பது தான். ஏந்திரன் வெற்றி குறித்து பற்பல ஊடகங்களின் கருத்துக்களை கீழ்காண்போம்.
படத்தின் தயாரிப்பு செலவு 132 கோடி ரூபாய். படத்தின் மூலம் சன் நிறுவனத்தின் மொத்த வருமானம் 179 கோடி ரூபாய். இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது சன் டீவீ. இதை நீங்கள் இந்த லிங்க்ல் இருந்து படித்து தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் பக்கத்தில் தெளிவாக வெளியிட்டு உள்ளனர்.
அவர்களின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆஜய் வித்யாசாகர் அவர்கள் ‘எகநாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மிக தெளிவாக, ஏந்திரன் திரைப்படத்தின் மொத்த வருவாய் 375 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவே அவரது குறைந்த பட்ச மதிப்பீட்டின் படியாகும். இந்த செய்தி எகநாமிக் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ளதை நீங்கள் கீழ்க்கண்ட முகவரியில் சென்று காணலாம்.
இதை போலவே, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ‘ராணா’ திரைப்படம் குறித்து வெளிவந்துள்ள செய்தியில் மிக தெளிவாக, ரஜினியின் ஏந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்ததை சுட்டி காட்டி உள்ளனர். இதை நீங்கள் இங்கு சென்று காணலாம்.
இதை போலவே சில நாட்களுக்கு முன்பு NDTV தொலைக்காட்சியில் இந்தியாவின் மிக அதிகமான வசூலைக் குவித்து சாதனை படைத்த படம் ஏந்திரன் என்று தெளிவாக செய்தி வெளியிட்டார்கள். அந்த செய்தி தொகுப்பினை நீங்கள் இங்கு சென்று காணலாம்.
http://www.youtube.com/watch?v=f4ZBdQ3q0xQ
இதே செய்தியினை supergoodmovies.com என்னும் தெலுங்கு மாநில வெப்ஸைட் தெளிவாக வெளியிட்டது. இந்த பக்கம் ஏந்திரன் திரைப்படத்தின் அதிகார பூர்வ மிடீயா பார்ட்னார்ஸ் என்பது இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி. அவர்கள் இந்த திரைப்படம் முதல் வாரத்திலேயே 117 கோடி ரூபாய் வசூலித்து இதற்கு முன் 82 கோடி ரூபாய் வசூலித்த ‘டபாங்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்ததாக தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். அதை நீங்கள் இங்கு சென்று பார்க்கலாம்.
http://www.supergoodmovies.com/9203/tollywood/Endhiran-Collections-beats-Salman-Dabangg-Collections-News-Details
மேலும் ஒரு இந்திய திரைப்படம் செய்த உலக சாதனையாக வெளி நாடுகளில் மட்டும் 61 கோடி ரூபாய் வசூலித்த முதல் திரைப்படமும் ஏந்திரன் தான் என்பதை அய்ங்கரன் நிறுவனத்தினர் அதிகரப்பூர்வமாக கீழ்க்கண்ட முகவரியில் வெளியிட்டு உள்ளனர்.
http://online.hemscottir.com/ir/eros/ir.jsp?page=news-item&item=538475082285258
அவர்கள் தெளிவாக, “Ayngaran, EIML’s 51% subsidiary that specialises in Tamil films had a brilliant first half, driven by the huge success of Endhiran which was released in the original Tamil version and Telugu version by Ayngaran internationally. Endhiran broke all records and grossed box office collection in excess of Rs 600 million overseas.” என்று தெரிவித்து உள்ளனர்.
இது மட்டும் இன்றி சன் நிறுவனத்தின் அதிகார பூர்வ ஊடகமான தினகரன் நாளிதழில் தெளிவாக ஏந்திரன் 50 நாட்களில் செய்த வசூல் 350 கோடி என்று அறிவிக்க பத்து உள்ளது. அதில் மிக தெளிவாக
“சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே. தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ. குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.” என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதை நீங்க கீழ்க்கண்ட முகவரியில் சென்று வாசித்துக் கொள்ளலாம்.
http://cinema.dinakaran.com/cinema/EndhiranDetail.aspx?id=3840&id1=18
இந்த செய்திகள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், மேலும் சில ஏந்திரன் செய்திகளை நான் இங்கு இணைத்துள்ளேன். இவை அனைத்தும் நம் தளத்தில் முன்பே வந்தது தான்.
மேலும் ஏந்திரன் ஆந்திரா நாட்டிலும் மிக பெரும் வெற்றி என்பதற்கு சாட்சியாக மிகவும் அதிகமாக வசூல் செய்த தெலுங்கு படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதை நீங்கள் இங்கு பார்த்துக் கொள்ளலாம்.
http://andhraboxoffice.com/info.aspx?id=41&cid=8&fid=26
நமது தலைவரின் பெருமையை வட இந்திய பத்திரிக்கைகள் மட்டும் இன்றி, நமது சக மாநிலமான ஆந்திராவின் மிகவும் புகழ் பெற்ற நாளிதழான ‘இ நாடு’ பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியினை கீழே கொடுத்துள்ளோம். அதன் ஆங்கில மொழியாக்கத்தினை கீழே கொடுத்துள்ளோம். இந்த செய்தியின் உட்கருத்து நாம் மேல கொடுத்துள்ளவையே ஆகும்.
Translation of the above Eenadu article:
Rajinikanth has once again proved he is the boxoffice badsha with his recent movie Robo. The movie has greatly contributed to Kalanidhi Maran’s Sun Network’s third quarter revenues. It helped Sun network post 48% increase in revenue over the previous year. The film is estimated to have grossed at least Rs.375Cr from the trade. The film collected in Rs.117Cr in the first week of its release. It opened in 2400 screens worldwide. Sun Network COO Ajay Vidaysagar informed this in a press release. The film was the most searched movie in Google at the time of the movie’s release.
(Thanks to Orkut Tamil Cinema Community Member T.S Mahesh for the translation from Telugu);
இது மட்டும் இன்றி, ஹிந்தி சினிமாவின் வசூல் இணையதளமான IBOS network க்கும் இந்தியாவின் அதிக வசூலை பெற்ற படம் ஏந்திரன் தான் என்று உறுதி படுத்தி உள்ளது. இந்த தளத்தில் தரப்பட்டுள்ள தொகையான 232 கோடி என்பது நிகர வருவாயாக தந்துள்ளது. அதாவது சன் குழுமம், வெளியீட்டாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியவர்களுக்கு கிடைத்த லாபம் மட்டும் கிட்டதட்ட 232 கோடி ரூபாய் என்று கூறுகிறது. இது மொத்த வசூல் அல்ல.
http://ibosnetwork.com/asp/rawalltime.asp
இதை தவிர நமது தலைவரின் வெற்றி பற்றிய செய்தி மேலும் சில தளங்களிலும் உள்ளது. எடுத்துக்காட்டாக Wikipedia.org, imdb.net ஆகிய தளங்களிலும் உள்ளன. ஆயினும், நம்முடைய onlysuperstar.com தளத்தில் எப்போதும் இந்த தளங்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அதற்கு காரணம் இந்த தளங்களின் செய்திகளை யார் வேண்டுமானாலும் மாற்றலாம். அவ்வாறு மாற்றுவதால் இந்த தளங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறி யாகிறது. எனவே இந்த தளங்களின் செய்திகளை நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் இங்கு நாம் குறிப்பிடாத மற்றும் ஒரு தளம் கப்ஸாவுட்ஸ். அதற்கு காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். சென்னை பாக்ஸ் ஆஃபீஸ்ல் ஏந்திரன் தான் முதல் இடம் என்று அந்த தளம் கூட கூறுகின்றது.
மேற் கூறிய செய்திகள் அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல் அமைந்துள்ளது CNN IBN தொலைக்காட்சியில் இன்று வெளிவந்துள்ள செய்தி தொகுப்பு. சன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், திரு. வித்யாசாகர் அவர்களின் பேட்டியுடன் வெளிவந்துள்ள இந்த செய்தி அறிக்கை, நாம் மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடதக்கது. இச் செய்தியினை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் காணலாம்.
IBNLive news on Enthiran’s Gross of 375 crores!
http://ibnlive.in.com/videos/142049/rajinikanth-starrer-robot-grosses-rs-375-crore.html
செய்தியின் தமிழாக்கம் உங்களுக்காக இதோ:
|||||||||||| அவருக்கு வயது அறுபதிற்கும் மேல்! ஆனால் இன்றும் கோலோச்சி நிற்கும் மனிதர் அவர். ஆம், நாம் இங்கு பேசுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தான். அவர் இந்த முறையும் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்த முறை ஆச்சரியம், அவரை வைத்து கடைசியாக திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 2010 - 2011 ஆம் நிதியாண்டுக்கான மூன்றாவது காலண்டு வருவாய் கணக்குகள் தான்! அவர் நடித்த பெரிய முதலீட்டுத் திரைப்படமான ஏந்திரன் அல்லது ரோபோ இதுவரை பாக்ஸ் ஆஃபீஸ்ல் 375 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. படம் வெளியான முதல் வார இறுதி நாட்களில் மட்டும் 60 கோடி ரூபாயும், முதல் வாரம் முழுவதும் சேர்த்து 170 கோடி ரூபாயும் இப்படம் வசூலித்து சாதனை படைத்தது.
(இதை குறித்து பேட்டியளித்த சன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. ஆஜய் வித்யாசாகர் கூறியதாவது) 179 கோடி ரூபாய் என்பது தயாரிப்பாளர்களின் நிகர வருவாய் ஆகும். இது தற்போதைய சந்தை நிலவரப்படி 375 கோடி ரூபாய் மொத்த வருவாய்க்கு ஒப்பாகும். 375 கோடி ரூபாய் என்பது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட உள்ள அனைத்து தரப்பினரின் மொத்த வசூலாகும். (இதே ஆஜய் அவர்கள் இந்த 375 கோடி ரூபாய் என்பது ஒரு குறைந்தபட்ச மதிப்பீடு என்று ‘எகநாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.)
இதெல்லாம் நிரூபிப்பது என்னவென்றால் ‘ரஜினி’ என்னும் பெயர் பாலிவுட்டின் மிகப்பெரிய பெயர்களான அமீர் கான், ஷாருக் கான் ஆகியோருக்கு கடும் சவாலைக் கொடுக்கும் வியாபார அடையாளமாக (Brand) உள்ளது என்பதைத்தான். இதைக் குறித்து கூறும் விமர்சகர்கள், தேன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்தியா தழுவிய இந்த புகழானது கடந்த இரண்டு வருடங்களில் வந்ததாக கருதுகின்றனர்.
(இது பற்றி பேசிய பாலாஜி ரங்கன் என்னும் திரை விமர்சகர் கூறுவது யாதெனின்) திடீர் என்று வட இந்திய ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரஜினியைப் பற்றி கண்டுகொண்டதாகவே தோன்றுகிறது. ரஜினி இப்படி, ரஜினி அப்படி என்று பல செய்திகள் வெளியாகின்றன. அவர்கள், 70களில் வந்த மசாலா ஹிந்திப் படங்களின் தற்போதைய உருவமாக ரஜினியைப் பார்க்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் வெளியிடும் செய்திகளின் காரணமாக, ரஜினி என்னும் பிம்பமும், வியாபார அடையாளமும், அவரது புகழும் இந்தியா முழுவதும் பரவி உள்ளது என்று தான் கூற வேண்டும். ||||||||||||
இதற்கு மேலும் உங்களுக்கு என்ன சாட்சியம் தேவை? இந்தியாவின் மிக பெரும் வெற்றிப் படம் ஏந்திரன் தான் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்து உள்ளது. ஆனால் சில உள்ளூர் நடிகர்களின் ரசிகர்களுக்கு புரியவில்லையே? நமது வெற்றிக்கு சாட்சியாக எண்ணத்ற்ற பத்திரிக்கைகள், நாளிதழ்கள், இணையதளங்கள் இருக்கின்றன. நமது தளத்திலேயே அனைத்திற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் உளளன. இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள், உலகத்திற்கு ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே உலக சூப்பர் ஸ்டார் தான்.
என் வாழ்வில், நான் செய்யும் செயல்களில் கிடைக்கும் வெற்றிக்கு தலைவரின் பங்கு மிகவும் உன்னதமானது. தோல்வியையோ துக்கத்தையோ கண்டு நான் என்றும் மிரளாது இருப்பதற்கு காரணம் தலைவரின் பொன் வார்த்தைகள். அவரது வாழ்வு என்னை போன்று அன்பில் மட்டுமே உலகை ஆள நினைக்கும் உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு.
அவர் கடந்து வந்த பாதை வாழ்வில் சோர்வுற்று இருக்கும் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வில் நிமிர்ந்து நிற்க தேவையான ஊன்றுகோல். தலைவரின் எளிமை நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துடமை அவரின் பண்பட்ட பேச்சு நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியதாகும். அவரின் குட்டி கதைகள் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க தேவையானவற்றை கூறும் கருத்துறைகள். அவரின் பொறுமை நாம் வாழ்வில் நாம் பயில வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
ஒரு தந்தையாகவும், கணவனாகவும் அவர் ஆற்றும் செயல்கள் நாம் வாழ்வில் நம்முடைய முக்கியமான கடைமைகளை நமக்கு எடுத்துக் கூறுபவை. அவர் நம் வாழும் காலத்தில் இவ்வுலகில் வாழ்ந்தவர் என்பது நமக்கு எல்லாம் பெருமை தர கூடிய விஷயம். வாழ்க தலைவர், வளர்க அவரது புகழ், வாழ்க மனித குலம், வளர்க மனிதகுல ஒற்றுமை.இப்படிக்கு, தலைவரின் ‘ராணா’ வுக்காக காத்துக் கொண்டு இருக்கும் பல கோடி ரசிகர்களின் கடலில் மேலும் ஒரு சிறிய நீர்த்துளி.!
Vijay Vasu,
About.me/vijay.vasu.nair
மிக அருமையான தொகுப்பு.. யார் நினைத்தாலும் தலைவரின் சாதனயை மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது…. வாழ்க தலைவர் வளர்க ராணா
Superb! Superb! Superb!!!
/இந்த திரைப்படத்தை நம் தலைவர்
தவிர வேறு யார்
நடித்து இருந்தாலும்
இவ்வளவு பெரிய
வெற்றி பெற்று இருக்க
சாத்தியமே இல்லை . /
-
நல்லா ‘நச்’ சுனு சொன்னீங்க.
அறிவுஜீவிங்களுக்கு
புரியறதுக்கு கொஞ்சம் லேட்
ஆகும் .
-
/இதற்கு மேலும்
உங்களுக்கு என்ன
சாட்சியம் தேவை /
-
இத அவங்ககிட்டதானே கேக்கறீங்க?
-
/ அவரது வாழ்வு என்னை போன்று
அன்பில்
மட்டுமே உலகை ஆள நினைக்கும்
உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு
/
-
அருமையான வரிகள்
நல்ல அலசல்.
விஜய்வாசு அவர்களுக்கு நன்றி.
Highest-grossing Tamil films of all time - Enthiran
Highest grossing Indian films of all time - Enthiran
Kalakal thilaiva………………………..
http://en.wikipedia.org/wiki/Enthiran http://en.wikipedia.org/wiki/List_of_highest-gros...
பின்னிடீங்க விஜய் வாசு ….
என்திரன் வெற்றி பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா இங்க இருக்கு Onlysuperstar.com என்று நச்சுனு சொல்லிடீங்க
இதெல்லாம் என்திரன் வெற்றி விழ நிகழ்ச்சில்யில் கண்டிப்பா யாரவது பேசுவாங்க …..
உங்கள் உழைப்பிற்கு சிரம் தாழ்ந்தி நன்றிகள்
================
The first thing he conveyed me was that he was a huge fan of Rajinikanth and watches all his movies first day. He also told me that he enjoyed watching Enthiran and thought that it was the best asian movie he has ever seen.
___Yes nowadays whenever iam meeting any person outside Tamilnadu and when iintroduce myself ….immediately the first point of attraction is "Ya you are from Superstar Rajini Place aa"
Our THalaivar is the only person who makes the word true
"Unity in Diversity"
===============
ஒரு சிலர் இதை ஏற்க மறுத்து ‘கண் மூடிய பூனை உலகமே இருண்டதாக நினைப்பதை போல்’ தங்களுடைய நாயகன் தான் மிகப் பெரிய நாயகன் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். வெறும் 25 நாட்கள் ஓடுவதற்கே திண்டாடிக்கொண்டு இருக்கும் படம், நமது ஏந்திரனை பிளந்தாதாக உதார் விட்டுக்கொண்டு திரியும் இவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வர வில்லை, பரிதாபம் தான் வருகிறது. இவர்கள் இப்போது மட்டும் அல்ல, எப்போதும் திருந்தாதவார்கள். //////
—-நண்பா தூங்கறவங்கள எழுபலாம் …நடிகுரவங்கள
முடியாது …அவங்களால முடிஞ்சது விக்கிபீடியா எடிட் பண்றது ….தலைவரை பத்தி தப்ப பேசி அவர புகழை மங்க வைத்து …தன நடிகர்களின் புகழை உயரவைபது….
இது ஓட்ட பந்தயத்தில் ஓடுபவன் தான் ஓடி ஜெயிக்கணும் என்று முயற்சி பண்ணாமல் …தன் பக்கத்தில் ஓடுபவனை தள்ளிவிட்டு ஜெயிக்க நினைப்பது
தலைவரின் துணைவியார் சமிபத்தில் ஒரு பேட்டியில் சரியான பதிலடி கொடுத்திருந்தாங்க
///அவருக்கு போட்டி அவர் படங்கள் தான் ….////
கன்னனுன்களா ….நாங்கலாம் உங்கள போட்டியாகவே நினைக்கவில்லை …அந்த தகுதியே உங்களுக்கு இல்லை
நீங்களா வந்து நாங்க போட்டி என்று நினைகறீங்க …
எங்க தலைவர் எப்போவோ நீங்க அடைய நினைக்கிற இடத்தை தொட்டும் அதை தாண்டியும் சென்றுவிட்டார் (இன்னும் சென்று கொண்டு இருக்கிறார் )…
நீங்க போட்டி போடுவது அவரது காலடி தடத்தை …
@ harianna.
இதுக்கு சுந்தர் அண்ணாவோட பக்குவ பாயசமே பரவாயில்லை போலிருக்கே.///
மேடம் திருப்பி கொடுக்கணும்ல …..
Dear Sundar & Vasu,
Very Fantastic & Excellent article….We all know about Enthiran's world wide success….Again our superstar movie will beat this record…Our Thalaivar is the One & Only World superstar…
Thanks for this article to Mr.Vasu & Mr.Sundarji….
Cheers,
Balaji
Dubai
Great…
kudos to Vijay Vasu.
and @ hari,
you have also expressed your comments heartily…
*********
All the credits should go to My GOD (THALAIVAR) alone!!!
*********
DOT.
**CHITTI**.
It has been reported in some web sites including SIfy that Sun Pictures while declaring its Q3 profit, has informed that the Enthiran profit is 47 crores. It is to be noted that the profit of Sun Pictures is the difference between its selling price (Rs.179 cr) and its cost (Rs.132 crores). The Box Office collections indicate the total collections made by all the theatres throughout the world by running the movie, which is approximately around 400 crores. It does not mean that all the 400 crores will go into the packets of Sun Pictures. These two things should not be confused. Sun Pictures sells the movie to Distributors, who in turn sell them to the Theatres and the theatres are collecting the money from the movie viewers. So, the 400 crores reportedly collected by Enthiran is not meant for Sun Pictures, but for those who are involved in screening the movie throughout the world. It is a procedure which is understood by an ordinary layman. But it is very silly on the part of web sites like Sify, who are directly dealing with film industry, reporting that the reported collection of Enthiran at Rs.400 crores is not true. Their intention is only to undermine the phenomenal performance of Enthiran worldwide. Let our friends not worry about this wrong reporting and silly propoganda.
இந்த கட்டுரை வருவதற்கு வாய்ப்பு அளித்த சுந்தருக்கு மிக்க நன்றி..
ஹாட்ஸ் ஆப் விஜய் வாசு.. பட்டய கிளப்பிடீங்க..
//தங்களுடைய நாயகன் தான் மிகப் பெரிய நாயகன் என்று கூறிக் கொண்டு திரிகின்றனர். வெறும் 25 நாட்கள் ஓடுவதற்கே திண்டாடிக்கொண்டு இருக்கும் படம், நமது ஏந்திரனை பிளந்தாதாக உதார் விட்டுக்கொண்டு திரியும் இவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வர வில்லை, பரிதாபம் தான் வருகிறது.//
நெத்தி அடி..
@ஹரி
//கன்னனுன்களா ….நாங்கலாம் உங்கள போட்டியாகவே நினைக்கவில்லை …அந்த தகுதியே உங்களுக்கு இல்லை
நீங்களா வந்து நாங்க போட்டி என்று நினைகறீங்க …
எங்க தலைவர் எப்போவோ நீங்க அடைய நினைக்கிற இடத்தை தொட்டும் அதை தாண்டியும் சென்றுவிட்டார் (இன்னும் சென்று கொண்டு இருக்கிறார் )…
நீங்க போட்டி போடுவது அவரது காலடி தடத்தை …//
ஆஹா பின்றீங்களே!!!!!!!!!! ரொம்ப சரியான கமெண்ட்..
விக்கிபீடியாவில் "அந்த" படம் BO யில் எப்படி இடம் பெற்றது என்று இன்றும் யோசித்து கொண்டிருக்கிறேன்..
மனசாட்சி இருந்தால் இப்படி எடிட் பண்ணி இருக்க மாட்டார்கள்..
தலைவரை பொறுத்த வரை அவருடைய முந்தைய பட வசூலை அவருடைய அடுத்த படம் தான் முறியடிக்க வேண்டும் - அது தலைவர் கடவுளிடம் வாங்கி வந்த வரம்.. டாட்..
சீரஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
அருமையான பதிவு. இப்படி ஒரு பதிவைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தோம்… நண்பர் விஜய் வாசுவிற்கு மிக்க நன்றி.
இனி யாராவது எந்திரன் வசூலை பற்றி குறை கூறினால் நம் தளத்தில் உள்ள இந்த பதிவை படிக்க சொல்லிவிடலாம்.
good article thanks to all .dont compare between imayamalai(rajini) and stone(others).
அருமையான பதிவு - நண்பர் விஜய் வாசு அவர்களுக்கும் இந்த செய்தியை தக்க நேரத்தில் தெளிவுபடுத்திய சுந்தர்ஜி அவர்களுக்கும் மிக்க நன்றி
Excellent analysis, thanks Vijay Vasu.
Dev.
விஜய் வாசுவிற்கு நன்றிகள்,அற்புதமாக அனைத்து தகவல்களயும் தொகுத்து வழங்கி உள்ளார்
Rajini sir is the god of indian cinema.
சூப்பர்!!!சூப்பர்!!!சூப்பர்!!!
சூப்பர் ஸ்டார் படத்தின் வசூல் சாதனைகளை நமக்கு பட்டியல் இட்டு தந்த நண்பர் விஜய் வாசு அவர்களுக்கு நன்றி!!! இனி எந்த கருப்பு ஆடுகளாலும் தலைவரின் வெற்றியை பற்றி பேச முடியாது!!! அவர்களுக்கு ஆதாரத்துடன் வேண்டும் என்றல் இதோ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10120
இங்கே வந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்!!!!!! மிகவும் மறுக்க முடியாத, அழிக்க முடியாத யாவராலும் கனவில் கூட மிஞ்ச முடியாத ஒரு வசூல் சாதனை!!!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தலைவரை யாராலும் நெருங்க முடியாது!!!!!!!!
உலகத்திற்கு ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே உலக சூப்பர் ஸ்டார் தான். அருமையான பதிவுக்கு நன்றி.நண்பர் விஜய் வாசு அவர்களுக்கும் சுந்தர்ஜி அவர்களுக்கும் மிக மிக நன்றி.
asusual sooper news sundar anna..thalaivar records can b breaked only by thalaivar
அருமையான பதிவு நண்பா.
எதிர் வீட்டு நண்பர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் எந்திரனை
மிஞ்சிய ஆதாரம் தேவையா ,
எங்கள் தலைவரின்
அதுத்த அவதாரம் ரானாவில் எதிர்பார்க்கலாம்.
நல்ல அலசல். விஜய்வாசு அவர்களுக்கு நன்றி.
-
////என் வாழ்வில், நான் செய்யும் செயல்களில் கிடைக்கும் வெற்றிக்கு தலைவரின் பங்கு மிகவும் உன்னதமானது. தோல்வியையோ துக்கத்தையோ கண்டு நான் என்றும் மிரளாது இருப்பதற்கு காரணம் தலைவரின் பொன் வார்த்தைகள்.
அவரது வாழ்வு என்னை போன்று அன்பில் மட்டுமே உலகை ஆள நினைக்கும் உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு. அவர் கடந்து வந்த பாதை வாழ்வில் சோர்வுற்று இருக்கும் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வில் நிமிர்ந்து நிற்க தேவையான ஊன்றுகோல். தலைவரின் எளிமை நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துடமை அவரின் பண்பட்ட பேச்சு நாம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியதாகும். அவரின் குட்டி கதைகள் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க தேவையானவற்றை கூறும் கருத்துறைகள். அவரின் பொறுமை நாம் வாழ்வில் நாம் பயில வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
ஒரு தந்தையாகவும், கணவனாகவும் அவர் ஆற்றும் செயல்கள் நாம் வாழ்வில் நம்முடைய முக்கியமான கடைமைகளை நமக்கு எடுத்துக் கூறுபவை. அவர் நம் வாழும் காலத்தில் இவ்வுலகில் வாழ்ந்தவர் என்பது நமக்கு எல்லாம் பெருமை தர கூடிய விஷயம். வாழ்க தலைவர், வளர்க அவரது புகழ், வாழ்க மனித குலம், வளர்க மனிதகுல ஒற்றுமை .//
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
விடுங்க பாஸ்…சொல்றவங்க நாம என்ன தான் சொன்னாலும் எதாவது புதுசு புதுசா பேசிட்டே தான் இருப்பாங்க,….அதை எல்லாம் கண்டுக்காம இந்த சீன்ல வர்ற மாதிரி , தலைவர் மாதிரி கூலா போயிட்டே இருப்போம் வாங்க……
—-
http://www.youtube.com/watch?v=ABEa6V_nNZQ&fe...
—-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
"தோல்வியையோ துக்கத்தையோ கண்டு நான் என்றும் மிரளாது இருப்பதற்கு காரணம் தலைவரின் பொன் வார்த்தைகள். அவரது வாழ்வு என்னை போன்று அன்பில் மட்டுமே உலகை ஆள நினைக்கும் உள்ளங்களுக்கு எடுத்துக்காட்டு."
- இது என் மனதில் என்றும் இருக்கும் எண்ணம் . இப்பொழுதுதான் தெரிந்தது , இதுவே அணைத்து ரசிகர்களின் நிலையும் என்று. மகிழ்ச்சி .
விஜய்வாசு அவர்களுக்கு நன்றி
ஏந்திரனை பிளந்தாதாக உதார் விட்டுக்கொண்டு திரியும் இவர்களை பார்த்தால் எனக்கு கோபம் வர வில்லை, பரிதாபம் தான் வருகிறது///
எனக்கு சிரிப்பு தான் வருது….
அருமையான தொகுப்பு
நண்பர் விஜய் வாசு அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு மேஞ்சுட்டாறு. சுந்தர் அண்ணா, சரியான தருணத்தில் உண்மையை உலகிற்கு உரக்க சொன்னீர்கள்!! உங்கள் இருவரது சிரத்தைக்கும் கரம் கூப்பிய நன்றி!
—————————————————————————————
இந்த தருணத்தில், ஊழல் பேர்வழிகளுக்கும் பணப்பேய்களுக்கும் - தலைவர் ஒரு பஞ்ச் சொன்னா அது இப்படித்தான் இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ http://www.youtube.com/watch?v=b9sFSsDwI74&fe...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராணாவின் ரசிகன்,
சாதிக் (மதுரை)
@விஜய் வாசு..
சான்சே இல்ல நண்பா! சும்மா பிரிச்சு மேஞ்சுடீங்க! கலக்கல் புள்ளிவிபரம்! நமது ஒன்லி சூப்பர் ஸ்டார் தளத்தின் பொக்கிஷ தகவல்களில் உங்களது பதிவும் ஒன்று..யாருடனும் ஆதாரத்துடன் பேச இது மிகபெரிய வரபிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.ஆதாரமே இல்லாமல் அலப்பறை அடிக்கும் காளான்களுக்கு ஒரு வாய்ப்பூட்டு இந்த கட்டுரை!
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் உங்களின் மகத்தான கட்டுரைக்கு.இதை வெளியிட்ட சுந்தர்ஜி க்கும் நன்றிகள்..தலைவரின் விக்கிபீடியா (onlysuperstar.com) இருக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை!
Great work Mr Sundar!
Hats off to you!!!!!
Sundar bro,
Thanks for including my small translation posted in Orkut Tamil Cinema community. Inspite of providing so many detailed explaination, there are still some komalis claiming the film is a loss. I now realize it is better to ignore them. But even some news chanels like TV9 has told in its cine tidbits program that the claims of 400cr collection etc are all false propaganda and the producer himself claimed that the film made only Rs.179cr. It is pity that even news channels do not know what is the basic thing of difference between the "Revenue" of a listed company and the Gross Theatrical collection of a film. They now run news channels and websites. But it is this senseless reporting that gets a wider reach than the truth. It is very unfortunate that inspite of creating records that others can't even dream of now and that others can't even beat in the next 15-20 years, we still have to put up with this false news. But other films that have not even made 100cr collection pass off to have made 285Cr. It is pity our industry does not have a reliable source for Boxoffice, even in this age of information.
@ நண்பர் விஜய் வாசு..
–
தலைவர் பற்றிய உங்கள் கருத்துக்கள அத்துனையும் அருமை……
–
உங்களுடைய தமிழ் நடை என்னை மிகவும் கவர்ந்து விட்டது……நீங்கள் ஒரு பண்பட்ட, தமிழின் பால் மிக்க அன்பு கொண்ட ஒரு தமிழ் ஆர்வலர் என்று எண்ணுகிறேன்….சரியா?….அதுவும் அந்த இறுதி பத்திகளில் நீங்கள் வார்த்தைகளை ஆட்கொண்ட விதம் அருமை…. தலைவரின் பண்பட்ட வார்த்தைகளை, வாழ்க்கையை தெளிந்த நீரோடை போல உலகிற்கு உணர்த்தி விட்டீர்கள் நண்பரே…..!
–
ஒரு சிலர் தமிழில் பேசத் தயங்கும் இன்றைய கால சூழ்நிலையில், நாம் இங்கு தமிழில் மட்டுமே உரையாடிக் கொள்வது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது….!
–
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதானது எங்கேனும் உண்டோ?..இல்லை …எங்கும் இல்லை….!”
–
“தமிழ் வளர்ப்போம்………!”
“தமிழால் வளர்வோம்….!”
–
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
நண்பர்களே,
தங்கள அனைவரது பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. இன்று காலை தான் உங்கள் கருத்துக்களை படிக்கும் வாய்ப்பு அமைந்தது.
சுந்தர்ஜி அவர்கள் நான் கொடுத்த கட்டுரையை சரியான படங்களையும் சேர்த்து மிகும் தெளிவாக வெளியிட்டுள்ளார். தங்களது ஆதரவுக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி.
உங்கள் அனைவரது கருத்துக்களும் கூறுவதும், காட்டுவதும் ஒன்றினை தான். இந்த கூட்டம் யாராலும் சேர்க்கப்பட்ட கூட்டம் அல்ல. அன்பினால், தானாக சேர்ந்த கூட்டம். இந்த சாம்ராஜ்யம் தனி சாம்ராஜ்யம். தலைவரின் அன்பு சாம்ராஜ்யம். இதை அழிக்க யாராலும் முடியாது!
- விஜய் வாசு
இந்த வீடியோ பாருங்க….அனேகமா எல்லாரும் பார்த்துருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்….இருந்தாலும் பாக்காதவங்க கண்டிப்பாக பாருங்க….
-
இத ஒரு தடவை பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா மறுபடியும் பார்ப்பீங்க…எத்தனை தடவை-ன்னு கணக்கு வச்சுக்கோங்க….
-
http://www.youtube.com/watch?v=SNH5cSGUrcM
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
விஜய் வாசுவின் கட்டுரை ஆணித்தரமான உண்மையை வெளிகொண்டுள்ளது. இதை மிகவும் அழகாக, அளவாக கொடுத்ததற்கு நன்றிகள் பல.
சுந்தர் அவர்களே "பாயசம்" philosophy யை எங்கே பிடித்தீர்கள்?
இதை பற்றியே எல்லோரும் பேசி,இதை ஒரு "பஞ்ச்" வசனமாகவே மாற்றி விட்டார்கள்.
நண்பர் விஜய் வாசுவின் கருத்துக்கள் அருமை, ஒவ்வொரு வரியும் உண்மை உண்மை உண்மை, இதை நடுநிலையாளர்கள் மட்டுமல்ல, எதிர்த்து விமர்சிப்பவர்களுக்கும் தெரியும்,(ஆயினும் வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள மறுப்பார்கள்), எனவே "எந்திரனின்" மகத்தானச் சாதனையுடன் "ராணாவை" வரவேற்க தயாராவோம் தோழர்களே………
அருமையான கட்டுரை அளித்த நண்பர் விஜய் வாசு அவர்களுக்கும், வெளியிட்ட சுந்தர்ஜி அவர்களுக்கும் நன்றி………
வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !
கட்டுரையில் எங்கள் திருவொற்றியூர் ஏரியா பேனர்களை வெளியிட்டமைக்கு நன்றி சுந்தர்ஜி………
வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !
நமக்கோ ஆதாரத்துக்கு மேல் ஆதாரம்! பலருக்கோ சேதாரத்துக்கு மேல் சேதாரம்! ம்.. ம்.. ம்.. பலே!! பலே!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராணாவின் ரசிகன்,
சாதிக் (மதுரை)
@ நண்பர் விஜய் ஆனந்த்: வீடியோ முகவரிக்கு நன்றி. பதிவிறக்கம் செய்து பார்த்தேன். இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்.
—————————-
என்றென்றும் தலைவரின் வழியில்,
சாதிக் (மதுரை)
அருமை
///////////////////////
நமக்கோ ஆதாரத்துக்கு மேல் ஆதாரம்! பலருக்கோ சேதாரத்துக்கு மேல் சேதாரம்! ம்.. ம்.. ம்.. பலே!! பலே!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராணாவின் ரசிகன்,
சாதிக் (மதுரை)
//////////////////////////////
அற்புதமான பின்னூட்டம். முற்றிலும் உண்மை.
மற்ற நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ரானாவும் இதே அளவு வெற்றி பெரும் என்று வேண்டிகொள்வோம்..
@விஜய் வாசு சார்: மிக்க நன்றி. "என்ன செய்றது… இனிமேல் நல்லவங்களுக்கும், மனசுல கொஞ்சம் கூட வஞ்சம் இல்லாதவங்களுக்கும் மட்டுமே ஆண்டவன் வெற்றிகளையும், மன நிம்மதியையும் கொடுப்பான் என்பது "தலைவரை" பார்த்தாலே பலருக்கு புரியும்!" இன்னும் திருந்தாத ஜென்மங்கள் நிறைய இருக்கு, அவங்களுக்கெல்லாம் இதுதான் கடைசி ஜென்மம், இந்த வாய்ப்பையும் நழுவ விட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் "நரகம்தான்" கதி".
எங்க தலைவரை பார்த்தாவது சீக்கிரம் திருந்துங்கப்பா… ப்ளீஸ்…!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைவரின் விழுதுகளில் ஒன்று,
சாதிக் (மதுரை)
ரா - ராஜ்ஜியம் உன்னால்
ணா - நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால்…..
சூப்பர் ஸ்டார் இளைஞர் அணி …. ஈரோடு
சூப்பர்!!!சூப்பர்!!!சூப்பர்!!!
''I am proud to be a rajini fan''