You Are Here: Home » Featured, Flash from the Past » சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!

மிழக அரசியல் களத்தில் தேர்தல் காட்சிகள் சூடுபிடித்துவிட்டன. கொள்கைக் கூட்டணிகளை அவரவர் தங்கள் வசதிக்கேற்றபடி அமைத்துக்கொண்டுவிட்டனர். மக்களுடன் தான் இறுதி வரைக் கூட்டணி என்று சூளுரைத்தவர்கள்  நிதர்சனத்தை உணர்ந்து உரிய அடைக்கலம் தேடி சென்றுவிட்டனர். தொண்டர்களோ கைக்காசு இந்த முறையாவது தப்பித்த சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்று பட்டையை கிளப்ப வேண்டிய தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் பல காமெடி காட்சிகள் அரங்கேறுவதை கண்டு ஆங்காங்கு நம் ரசிகர்கள் பொருமிக் கொண்டுள்ளனர்.

(Thalaivar @ Padayappa launch)

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். “வந்தால் வெற்றி பெறுவாரா?” என்ற கேள்விக்கு விடையை பார்ப்போம்.

ரஜினி அவர்கள் வருவதற்கு ஏற்ற அரசியல் சூழல் தற்போது இல்லை என்பதே உண்மை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதங்களில் அரசியலை ரஜினி ஆழமாக படித்து வருகிறார். உரிய காலம் எதுவென்று அவருக்கு தெரியும். எதிர்காலத்தில் ஏற்றதொரு சூழல் ஏற்பட்டு அவர் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்தால், சுலபமாக சிம்மாசனத்தில் அமர்வார் என்பது மட்டும் உறுதி. எனவே, “அவர் அரசியலுக்கு வரவேண்டும்!” என்று கருதும் ரசிகர்கள், அதற்க்கு முற்றிலும் பொறுமை காக்கவேண்டும்.

‘படையப்பா’ படத்தின் வெள்ளிவிழாவில் மணிகண்டன் என்ற மாணவன் ஆற்றிய உரையின் வீடியோவை இணைத்திருக்கிறேன். (நீண்ட தேடுதலுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியின் வீடியோ எனக்கு கிடைத்தது. அதில் மணிகண்டனின் உரையை மட்டும் இத்துடன் தருகிறேன். பிற பகுதிகள் ஒவ்வொன்றாக YOUTUBE இல் அப்லோட் செய்யப்படும்.)

ஒரு முறை இதை பார்த்தீர்களானால், சிம்மாசனம் என்பது நம் தலைவருக்கு என்ன என்பது உங்களுக்கு புரியும்….

‘படையப்பா’ வெள்ளி விழா மேடை மணிகண்டனுக்கு கிடைத்தது எப்படி?

புகழ் பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நம்மைப் போல சூப்பர் ஸ்டாரும்  பல ஆண்டுகளாக விரும்பி பார்க்கும் வழக்கம் உள்ளவர். 1999 ஆம் ஆண்டு, சன் டி.வி.யில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் மணிகண்டன் என்ற மாணவனின் உரையை கேட்ட சூப்பர் ஸ்டார் உருகிப் போனார். அவனது பேச்சில் தெரிந்த உறுதியும், நாட்டுப் பாற்றும், நாட்டின் மீதான நம்பிக்கையும் சூப்பர் ஸ்டாரை ஈர்க்க, அடுத்த சில நாட்களில், படையப்பாவின் நாளிதழ் விளம்பரத்தில் மணிகண்டனை பற்றி குறிப்பிட்டு, “உன்னில் விவேகானந்தரை கண்டேன். வியந்தேன். படையப்பா வெற்றி விழாவில் நீ கௌரவிக்கப் படுவாய்” என்று ரஜினியே கையொப்பமிட்டிருந்தார்.

(Padayappa - 175 days function)

அதே போல ‘படையப்பா’ வெள்ளி விழா கமல் முன்னிலையில், இயக்குனர் சிகரம் கே.பி. தலைமையில் நடைபெற்ற போது, மணிகண்டனுக்கு ஐந்து பவுனில் சூப்பர் ஸ்டாரின் கையால் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. பரிசை பெற்ற மணிகண்டன், அம்மேடையில் எழுச்சி மிகு உரை ஒன்றை ஆற்றினான். ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் எதிர்ப்பார்ப்புக்களையும் செந்தமிழால் வடித்து, சூப்பர் ஸ்டாருக்கு விண்ணப்பம் வைத்தான் மணிகண்டன். சூப்பர் ஸ்டாருக்கு அவரது பலம் என்ன என்பதையும் எடுத்துக் கூறினான்.

தனிப்பட்ட முறையில் மணிகண்டனை அழைத்து பாராட்டியிருந்தால், அது அத்துணை சிறப்பாக இருந்திருக்காது. முக்கியஸ்தர்கள் முன்னிலையில் - அதுவும் படையப்பா வெள்ளிவிழா மேடையில் - அவன் கௌரவிக்கப்பட்டதால், தமிழகம் முழுக்க மக்கள் அவனை அறிந்துகொண்டனர். அவனது புகழ் பன்மடங்கு பெருகியது. இரண்டாவது, மணிகண்டனை மேடைக்கு அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவிக்கும் திட்டம் மட்டுமே முதலில் இருந்தது. அவன் மேடையில் உரையாற்றுவது திட்டத்தில் இல்லை. ஆனால், அந்த மேடையில்; நிச்சயம் தாம் சில கருத்துக்களை சொல்லவேண்டும் என்று மணிகண்டன் சூப்பர் ஸ்டாரிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதால், கடைசியில் அதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மணிகண்டனின் பேச்சை கேட்டவுடன் நமக்கே ஒரு கணம் உயர பறப்பது போல இருக்கிறதே. ஆனால், விழா நாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினியோ எவ்வித சலனமும் இன்றி மணிகண்டன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது. வேறு யாராவது இருந்திருந்தால், இந்த உரைக்கே அரசியல் பிரவேசத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், தலைவருக்கு எத்துனை பொறுமை அப்பப்பா….. புகழ்ச்சிகளை ஹேண்டில் செய்வது எப்படி என்று தலைவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்றும் இந்த வீடியோவில் உள்ள கருத்துக்கள் தலைவருக்கு பொருந்துவது தான் இதன் சிறப்பு.

என்ன பேசினார் மணிகண்டன்?
Manikandan’s speech in Padayappaa Silver Jubilee Function 1999

VIDEO

[Youtube Upload & தயாரிப்பில் உதவி: கோடம்பாக்கம் நவீன்]

30 Responses to “சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!”

  1. senthilgdr senthilgdr says:

    சூப்பர் thalaiva

  2. jai jai says:

    என்ன ஒரு உணர்ச்சிபூர்வமான உண்மையான உரை !!! ஒவ்வொரு ரசிகனும் கேட்க வேண்டிய பேச்சு …நன்றி மணிகண்டா !!! தலைவா உங்கள் தர்மத்தை காணும் நாளை நோக்கி காத்திருக்கும் கோடான மனங்களில் ஒன்று !!! இன்னும் எத்துனை ஆடம்பர கல்யாணங்களையும் !! ஒரு குடும்பத்தின் எழுச்சியையும் 2G க்களையும் பார்த்து பார்த்து பொறுத்திருக்க வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் தலைவா !!!

  3. senthil senthil says:

    Thanks Sunder for sharing this video!

    It's the good sense of timing!

  4. Anonymous says:

    சொல்ல வார்த்தைகள் இல்லை….மணிகண்டன் அவர்களின் உரை உணர்வுப் பூர்வமானது…..உள்ளத் தெளிவுடன், எவ்வித பூச்சும் இல்லாமல் உண்மையை உரக்க சொன்ன மணிகண்டன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்……!

    -

    @சுந்தர் அண்ணா

    -

    இந்த அரிய பொக்கிசத்தை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றிகள்…..உங்கள் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது…!

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  5. Anonymous says:

    தலைவா….அமைதியின் உருவாய் இருக்கும் உங்களுக்கு இந்த ரசிகனின் பரிசு:

    -"திரை முன் நான் சிந்திய என் இரு விழி கண்ணீர்"-

    -

    இந்த வீடியோ-வில் மணிகண்டன் அவர்கள் பேசும் போது தலைவரை காண்பிப்பார்கள்….எல்லா புகழ் மாலைகளையும் ஏந்திக் கொண்டு அமைதியாய், எல்லாவற்றையும் உன்னிப்பாக தலைவர் மணி கண்டனையே பார்த்துக் கொண்டிருப்பார்….அந்த பணிவு, தெளிவு, பொறுமை, அடக்கம், அமைதி என்னை என்னமோ செய்து விட்டது….ஒரு கணம் நெகிழ்ந்து விட்டேன்….இறுதியில் என்னையும் அறியாமல் கண்ணில் நீர்…..!

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  6. vasi,rajni vasi,rajni says:

    உரையை கேட்டு அதிர்ந்தேன் சுந்தர்ஜி!!!

    .

    மணிகண்டன் அவருடைய கருத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவையாக இருக்கலாம். ஆனால், அதன் அர்த்தம் இன்றும் fresh தான். இது வரமோ சாபமோ தெரியாது. தலைவரை பற்று அந்த இளைஞர் கூறும் கருத்து இன்று நமது ரசிகர்கள் அனைவரும் கேட்க்க வேண்டியது.

    .

    சிலரின் நன்றி கடனுக்கவும், சிலரின் மீது உள்ள மரியதைக்ககவும் நமது தலைவர் தனது அரசியல் பிரவேசத்தை தள்ளிபோட்டுள்ளார் என்பது ரசிகர்கள் பலர் அறிந்த உண்மை.அவர்கள் அரசியலை விட்டு போகும் வரை நாம் பொறுத்திருபதே நல்லது. இது நாம் அனைவரும் உணரவேண்டிய விஷயம்.(பாபா படத்தின் claimax அர்த்தத்தை உறனரவும்!!ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது !!!!)

    .

    இன்றைய நிலையில் தமிழகத்தில் பல அதிரடி காமடிகள் நடந்து வருகின்றன. இதில் எவருமே சேவை செய்வதற்காக வரவில்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி உமிழ்ந்து கொள்ளும் இந்த கேவலமான சூழ்நிலை நிலவுகிறது.அரசியலை மக்களுக்காக செய்யாமல் தன் கட்சியின் சுயநலனுக்காக செய்யும் கேவலம் இன்று அரங்கேறி வருகிறது.ரஜினி அரசியில் இல்லை என்ற விரக்தியில் நான் பேச வில்லை. ஒரு பார்வையாளனாக எனது தனிப்பட கருத்து மட்டும் தான்.

    .

    நண்பர்களே 1996 யும் சேர்த்து இது நமக்கு(ஏமாற்றமான) நான்காவது சட்டமன்ற தேர்தல். நாம் அனைவரும் மிகவும் அமைதியாக இதுநாள் வரை பொறுத்திருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருப்போம். தலைவரின் நல்ல மனதிற்கும் நமது பொறுமைக்கும் அந்த இறைவன் சரியான பரிசை தருவான். நாம் அனைவரும் emotional-லாக இருக்காமல் practical -லாக இருக்க வேண்டும். தான் அரசியலுக்கு வராமல் போனால் தனக்கு பல கர்ம பலன்கள் சேர்ந்து விடும் என்பதை தலைவர் நன்கு உணர்வார்!!!! ஆன்மிகமும், அரசியல் தான் ரஜினியின் எதிர்காலம் என்று கூறுகிறது !!!

    .

    சரியான நேரம் விரைவில் வரும்!! அப்பொழுது வரலாறு நமது பொறுமையை பற்றி பேசும் !!!

    .

    rajni will rule tamil nadu

  7. Senthil Kumar Senthil Kumar says:

    Sir, please upload the remaining parts as soon as you can…. i was searching for the footage for such a long time, thank god you got it..

  8. Surendiran Surendiran says:

    சுந்தர் அண்ணா ….செம

    கலக்கல் ….தலைவர் வாழ்க்ஹா

  9. endhiraa endhiraa says:

    மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு ! எத்தனை உண்மைகள் !

    சுந்தர்ஜி ! YOU are ROCKING !!

  10. Suryakumar Suryakumar says:

    சுந்தர்ஜி, உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்… மிக மிக அரிய பொக்கிஷம் இது… மணிகண்டனின் பேச்சு உள்ளத்தை உலுக்கி விட்டது… அவர் சொன்ன சூழ்நிலைகள் இன்றும் உள்ளது… தலைவர் தன் தோள் துண்டை உதறினால் போதும். நாற்காலி அவரிடம் வந்து சேரும்… ஆண்டவனின் எண்ணம் என்னவோ…?

  11. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    வீடியோ இன்னும் பார்க்க முடியலைண்ணா. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்தா கலக்கலா இருக்கே! பார்த்துட்டு அப்பறம் வரேன் :-)

  12. harisivaji harisivaji says:

    Perfect Timing

    Right Video and Right Time

  13. Anonymous says:

    @vasi,rajni

    -

    //நாம் அனைவரும் emotional-லாக இருக்காமல் practical -லாக இருக்க வேண்டும்.//

    -

    உண்மை அண்ணா…நம் ரசிகர்கள் practical -லாக இருந்தாலும் , நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள் நம்மை emotional -ஆக மாற்றி விடுகின்றன…..மணிகண்டன் அவர்கள் சொன்னதைப் போல, தலைவருக்கு அரசியல் நாற்காலி என்பது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சல் மாதிரி….தன தோல் துண்டை சுழற்றினால் போதும், ஊஞ்சல் தானாக நம் தலைவரை ஏந்திக் கொள்ள கீழே இறங்கி விடும்….

    -

    படையப்பா பட வரிகள்;

    " ஒரு விதைக்குள் அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே……….! " ——இது நமக்கும் தான்……!

    -

    உங்க ஸ்டைல்-ல சொல்லணும்-னா

    -"rajni will rule tamilnadu "

    -

    "ராணா"-வின் "ரணகள" பக்தன்

    விஜய் ஆனந்த்

  14. peraveen peraveen says:

    What a apt post at a apt time!!!
    Thanks a lot for the video.
    Special thanks to Kodambakkam naveen!

  15. vasi,rajni vasi,rajni says:

    நண்பர் விஜய் ஆனந்த அவர்களே, நான் ஒரு மாணவன் தான். என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டாமே.

    .

    நாம் அனைவரும் விரும்புவது போல நிச்சயம் நல்லது நடக்கும்.தலைவருக்கு தெரியாதது இல்லை. தன் மேல் விழுந்துள்ள இந்த அரசியல் எதிர்பர்புகளுக்கு தான் தான் மூல கரணம் என்று தலைவருக்கு தெரியும். இன்று அந்த எதிர்பார்புகளை ரஜினி நிறைவு செய்யாவிட்டால் அவருக்கு கர்மங்கள் சேர்ந்து விடும் என்பதும் அவருக்கு தெரியும்.. ரஜினி ஆன்மிகத்தில் எதிர்பார்ப்பது எல்லாம் இதுவே தனக்கு கடைசி பிறவிய இருக்க வேண்டும் என்று தான். (தலைவரின் ஆன்மிக நண்பர்கள் விஜய் tv -யில் கூறியது). அப்படி அவர் அரசியலுக்கு வராமல் போனால் இந்த ஜென்மத்தில் அவர் சேர்த்துள்ள இந்த கர்ம வினைகளை (அரசியல் பிரவேசம்) அவர் அடைக்க மேலும் மேலும் பிறவிகள் எடுக்க வேண்டும்.இதை நிச்சயம் தலைவர் விரும்பமாட்டார்.

    .

    ஜனஷக்திக்கு முன்னால், மற்ற ஷக்தி ஒன்றும் இல்லை என்று தலைவரே கூறியுள்ளார். ஜனசக்தி அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறுகிறது. இதை அவர் மறுக்க முடியாது!!!! நிச்சயம் அவர் அரசியலுக்கு வந்தே ஆகா வேண்டும்!!!இது தான் விதி!!!

    .

    ஆண்டவன் சொல்ல இன்னும் வெகு நாட்கள் இல்லை!!

    தலைவன் செய்ய இன்னும் வெகு நாட்கள் இல்லை!!

    .

    rajni will rule tamil nadu

  16. Karthik Karthik says:

    நன்றி தலைவா

  17. Manikandan Bose Manikandan Bose says:

    மிக்க நன்றி சுந்தர் அவர்களே…

    மிக யுயர்ந்த விலை மதிப்பு உடைய இந்த வீடியோ வை அளித்தமைக்கு நன்றி..

  18. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    சரியான சமயத்தில் அருமையான வீடியோ. ரொம்ப சிந்திக்க வைக்கிறது. நன்றி அண்ணா.

  19. arulselvan1985 arulselvan1985 says:

    Sundar,

    I am searching for it for long time. Thanks for updating it.

  20. Jegan Jegan says:

    Really excellent speech….super star's silence has 1000 meaning…Only god can judge him….He is fit to be a good an decent politician

  21. rajini ramesh rajini ramesh says:

    i was present in this function. Before entering dosai, vadai along with bisleri water bottle was given. On this function I had shaken hands with Sathyanarayanan (Super stars brother) can't forget this incident.

  22. mettustreet k.muthu mettustreet k.muthu says:

    அற்புதமான இது வரை நாங்கள் பார்க்கத் தவறிய ஒரு பொக்கிஷம் போன்றதொரு வீடியோவைத் தேடி அளித்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி !

    நல்லதே நினைப்போம்…….., நல்லதே நடக்கும் !

    வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !

  23. TJ TJ says:

    என்ன தான் நம் மனதை நாமே சமாதனபடுதினாலும், மனதில் எங்கோயோ ஒரு ஓரத்தில் ஒருவித தவிப்பு ஏமாற்றம் இருக்க தானே செய்கிறது, இது கோடானகோடி தலைவரின் ரசிகனுக்கும் இருக்கும். ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அந்த கோடானகோடி ரசிகனின் எண்ணமும், கருத்தும், எதிர்பார்ப்பும் ஒரே மாதிரி வெளிபடுவதுதன் மூலம் தான் ரஜினி என்னும் அந்த மா மனிதனின் மாபெரும் ஒப்பர்ற்ற சக்தியை இந்த உலகம் இன்றும் அறிந்து கொள்ள முடிகிறது.

    தலைவா

    "உப்பிட்ட இந்த தமிழ் மண்ணை நீ மறக்க வில்லை, இந்த தமிழ் மண்ணும் உன்னை என்றும் மறுக்க-வே இல்லை, உன்னை தவிர வேறு எவனுக்கும் உன் ரசிகன் தலையசைததுமில்லை, ரசித்ததுமில்லை உன் ரசிகனின் ஒற்றுமையை, பொறுமையை, நம்பிகையை வேர் எவனும் எங்கேயும் கண்டதுமில்லை, உன் சிங்க படையை கண்டு தமிழ் நாட்டில் எவனும் நிம்மதியாய் தூங்குவதுமில்லை…… ஒரு நல்ல குடிமகனாக ஓட்டுரிமையை இந்த முறையும் கடமைகாக மட்டும் அளித்து ஏமாற காத்திருக்கும் கோடானகோடி உன் தொண்டனில் ஒருவன்… எதிர் காலம் வரும் உன் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பாய்….. காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு தலைவா …….

  24. govind govind says:

    அருமையான பேச்சு ,

  25. Dinesh Murugesan Dinesh Murugesan says:

    அருமையான பதிவு கொடுத்தமைக்கு சுந்தருக்கும் , தெள்ள தெளிவான பேசிய மணிகண்டனுக்கு நன்றிகள். .

  26. B. Kannan B. Kannan says:

    சுந்தர் அருமையான வீடியோ.. U timed it to perfection ..

    மணிகண்டனின் உரைக்கு ஹாட்ஸ் ஆப்..

    தலைவருக்கு டைம் ஒரு பொருட்டே இல்லை..

    தலைக்கு மேல் தொங்கும் ஊஞ்சல் போல் தான்..

    தலைவர் எப்போ நினைக்கிறாரோ அப்போது அது(அரியணை) வரும்..

    இவ்வளவு நாள் பொறுத்து விட்டோம்.. இன்னும் கொஞ்ச நாள் தானே.. அது வரை பொறுமை தலைவர் வழியில்..

    சீரஸ்..

    பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

    பா. கண்ணன்.

  27. Anonymous says:

    சுந்தர் அண்ணா……..சரியான நேரத்தில் மிகச்சரியான வீடியோ!!!!! மணிகண்டன் பேச்சு அருமை அருமை!!!!!! இதே தலைவர் இடத்தில வேறு எந்த ஹீரோவாகவும் இருந்திருந்தால் இந்த நேரம் தலைகனத்தில் ஆடிருப்பான்!!!! தன்னடக்கம் மற்றும் புகழை கையாள தெரிந்த உலக சூப்பர் ஸ்டார் வாழ்க!!

  28. sadique sadique says:

    மிகவும் உணர்ச்சிபூர்வமான போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ தொகுப்பு. இதை எங்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து படைத்தமைக்கு நன்றிகள் கூற வார்த்தை இல்லை சுந்தர் சார்.

    ………….

    எவ்வளவு பாராட்டினாலும் தன் நிலையை தாழ்த்தி கொண்டே போவது தலைவரின் இயல்பு! பாராட்டுக்கள் அவர் கால் தூசிக்கு சமம். மணிகண்டன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் நம் அடி மனதில் தலைவரை பற்றி குடி கொண்டுள்ள எண்ணங்களும்.., வினாக்களும்.., விருப்பங்களும்தான்!

    ………………..

    @VASI.RAJINI: //சரியான நேரம் விரைவில் வரும்!! அப்பொழுது வரலாறு நமது பொறுமையை பற்றி பேசும் !!!//

    உண்மையில் இந்த பொறுமையை நாம் அவரிடத்தில் இருந்துதான் கற்று கொண்டோம்!

    …………

    உன்னத தலைவனின் தொண்டன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா,

    -சாதிக் (மதுரை)

  29. Marutham Siva Marutham Siva says:

    இந்த மணிகண்டன் தற்பொழுது எங்கு இருக்கிறார்.

    —————————-
    Delhi.
    - Sundar

  30. MMK MMK says:

    நெல்லையில்…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates