









You Are Here: Home » Featured, VIP Meet » எவர் கிரீன் ஹிட் ‘வெற்றி நிச்சயம்’ பாடல் பிறந்தது எப்படி? இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ஒரு நேர்முகம் – Behind the Scenes – Part 1
சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றிய இயக்குனர்களோ கலைஞர்களோ எப்போதாவது டி.வி. நிகழ்ச்சிகளில் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை கூறும்போது ஒவ்வொரு முறையும் வியப்பு மேலிட அவற்றை பார்க்கிறோம். ரசிக்கிறோம். உடனே நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறோம். தெரிந்ததே இவ்வளவு என்றால், தெரியாதது எவ்வளவு இருக்கும் என்று நம் எண்ணங்கள் சிறகடிப்பதுண்டு.
சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஹைலைட் காட்சிகள், வசனங்கள் மற்றும் காலத்தால் அழியாத பாடல்கள் — இவற்றின் பின்னணியில் கூட அனேக சுவாரஸ்யமான சம்பவங்கள் ஒளிந்திருக்கின்றன. அது பற்றி நாம் அறிந்துகொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஊடகம் மற்றும் தொலைக்காட்சி வளர்ச்சி என்பது கடந்த பத்து பனிரெண்டு ஆண்டுகளாகத் தான். எனவே வெளியுலகிற்கு தெரியாது புதைந்து கிடக்கும் நம் படங்கள் பற்றிய BEHIND THE SCENES விபரங்கள் எண்ணற்றவை.திரையில் நாம் தலைவரை பார்த்து பரவசப்படும், கைத்தட்டும், விசிலடிக்கும், கண்கலங்கும் காட்சிகளின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே நமது தளத்தில் இந்த ‘BEHIND THE SCENES’ என்னும் புதிய பகுதி தொடங்கப்படுகிறது.
இதற்காக முதலில் நாம் சந்திக்க முடிவு செய்தது ரஜினி ரசிகர்களின் எவர் ஃபேவரைட் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களை.
1991ல் ‘மன்னன்’ படத்தை முடித்த சமயம் - கவிதாலயாவுக்கு ஒரு படம் செய்யலாம் என்று தலைவர் முடிவு செய்தபோது, உருவான படம் தான் அண்ணாமலை. இப்படத்திற்கு ‘அண்ணாமலை’ என்று பெயரிட்டபோது, இண்டஸ்ட்ரியில் எழுந்த ஏளனச் சிரிப்புக்கள் ஏராளம். அண்ணாமலைக்கு அரோகரா என்று பலர் கிண்டலடித்தனர். பெயரை மாற்றும்படி சூப்பர் ஸ்டாருக்கு சில முக்கியஸ்தர்கள் வேண்டுகோளே வைத்தனர். அண்ணாமலை என்பது அந்த திருவண்ணாமலை ஈசனை குறிக்கும். எனவே இப்பெயரே இருந்துவிட்டு போகட்டும். படம் நிச்சயம் வெற்றியடையும். என்று அழுத்தந்திருத்தமாக சொன்னார் சூப்பர் ஸ்டார்.
அண்ணாமலையை முதலில் இயக்குவதாக இருந்தது கேளடி கண்மணி புகழ் வசந்த். சில காரணங்களால் வசந்த் இயக்க முடியாது போக, அந்த இடத்திற்கு வந்தவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. இருவருமே கவிதாலயாவில் பட்டை தீட்டப்பட்டு பயிற்சி பெற்றவர்கள். சூப்பர் ஸ்டாரின் ஜனரஞ்சக படங்களில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தவர் சுரேஷ் கிருஷ்ணா தான் என்றால் மிகையாகாது. தலைவர் அடுத்தடுத்து இரு படங்களுக்கு கால்ஷீட் தந்த சொற்ப இயக்குனர்களில் இவரும் ஒருவர். (வீரா, பாட்ஷா). தலைவரின் பெயரை டைட்டிலில் போதும்போது எழும்பும் ஹே…ஹே… ஹே… என்னும் சப்தத்தை கிராபிக்ஸ் விஷூவலுடன் துவக்கிவைத்து, ரசிகர்களை முதல் காட்சி முதலே விசிலடிக்க வைத்தார் சுரேஷ் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டாரின் படம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று ஒரு ரசிகன் விரும்பினானோ அத்துனையும் தவறாது தந்தது இவர் சிறப்பு. ரஜினி ரசிகர்களின் பல்ஸை இவர் போல உணர்ந்தவர் வேறு யாரும் இல்லை எனலாம். இன்றும் பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில், இவர் இயக்கிய படங்களுக்கு தனி இடம் உண்டு.
தலைவரின் படப்பாடல்களில், காலத்தால் அழியாத பாடல்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பது இந்தப் பாடல் தான். அதே போல, அவரது கொள்கைப் பாடல்களிலும் முதலிடம் இந்த பாடலுக்கே. தலைவரின் வழியைபின்பற்றி எப்போதும் எதையும் பாசிடிவ்வாகவே அப்ரோச் செய்பவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு வரப் பிரசாதம்.
சில மாதங்களுக்கு முன்பு, இப்பாடலை ஒரு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தபோது “இத்துனை அருமையான பாடல், ‘அண்ணாமலை’ படத்தில் இடம் பெற்றது எப்படி? அதன் பின்னணியில் நடைபெற்ற விஷயங்கள் என்ன? அதில் சூப்பர் ஸ்டாரின் பங்கு என்ன? இயக்குனரின் பங்கு என்ன? பாடலாசிரியரின் பங்கு என்ன?” ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் ஆவல் நமக்கு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களின் நாடி நரம்பு, ஊண் மற்றும் உயிரில் கலந்துவிட்ட இந்தப் பாடலை பற்றி மேல்விபரங்கள் அரிய நமது மனம் துடித்தது. அதன் விளைவாக, சுரேஷ் கிருஷ்ணா அவர்களையே சந்தித்து இப்பாடல் பற்றி கேட்டுவிட முடிவுசெய்து, அதற்க்கான முயற்சிகளில் இறங்கினோம்.
நமது முயற்சியின் பலனாக, சுரேஷ் கிருஷ்ணா அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. இப்படித் தான் நமது அடுத்தகட்ட பயணம் துவங்கியது. ’இளைஞன்’ பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இரவு பகல் பாராது பிசியாக இருந்த அந்த தருவாயில் கூட நமக்கு பெருந்தன்மையுடன் நேரம் ஒதுக்கி தந்தார் சுரேஷ் கிருஷ்ணா.
சுரேஷ் கிருஷ்ணா அவர்களை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைத்ததும், நண்பர் கோடம்பாக்கம் நவீனையும் அழைத்துக்கொண்டு நேரே அவர் வீட்டுக்கு சென்றேன்.
நம்மை அறிமுகம் செய்துகொண்டு நமது தளத்தை பற்றி சில வார்த்தைகள் கூறினோம். அவருக்கு நமது தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து, பூங்கொத்துக்களை அளித்தோம். பின்னர் புதிதாக வெளியாகியுள்ள, தலைவரின் பன்ச் டயலாக்குகள் கூறும் மேலாண்மை கருத்துக்கள் அடங்கிய “ரஜினியின் பன்ச்தந்திரம்” நூலை அவருக்கு பரிசளித்தோம். தலைவரை வைத்து சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கிய படங்களில் இருந்த சில பன்ச்கள் பற்றி அந்த நூலில் விரிவாக அலசப்பட்டிருப்பதை கூறியபோது, சுரேஷ் கிருஷ்ணா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். “தலைவரை வைத்து நீங்கள் மறுபடியும் ஒரு படம் செய்யவேண்டும் சார். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று இயக்குனர் அவர்களிடம் சொன்னார் நவீன்.
பின்னர் எங்கள் உரையாடல் துவங்கியது. வெற்றி நிச்சயம் பாடல் மற்றும் தலைவரை வைத்து அவர் இயக்கிய படங்களில் உள்ள முக்கிய காட்சிகள் மற்றும் அதன் பின்னணியில் நடந்த விஷயத்தை பற்றி அவர் விளக்கமாக கூறிக்கொண்டு வர, நாம் மெய்மறந்து கேட்டு கொண்டு வந்தோம். பல சம்பவங்களை அவர் கூறும்போது நமக்கு சிலிர்த்தது. குறிப்பாக ‘பாபா’ படத்தை பற்றி அவர் கூறியபோது.
சரி… முதலில் அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற “வெற்றி நிச்சயம்” பாடலை பற்றி சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
Continued in Part 2
———————————————————-
‘வெற்றி நிச்சயம்’ பாடல் ரஷ் பார்த்துவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவை வாரி அணைத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி! – Behind the Scenes – Part 2
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10507
———————————————————-
சுந்தர்ஜி நம் தலைவரின் நல்லாசியுடன் உங்கள் சீரியப் பணி வெற்றி நிச்சயம் அடையும்…….., நன்றிக் கலந்த வாழ்த்துக்கள் !
வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !
ஜி,
வாழ்த்துக்கள்..இது போல் இன்னும் பல பிரபலங்களை சந்தித்து இது போல் பல கட்டுரைகள் எழுதிட வேண்டுகிறோம்…
yenakku inda vaaipai valankiya sundar annanukku nandri,
ungalin inda pudiya muyarchi vetri petru menmelum valara vaazhtugal.
***“தலைவரை வைத்து நீங்கள் மறுபடியும் ஒரு படம் செய்யவேண்டும் சார். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று இயக்குனர் அவர்களிடம் சொன்னார் நவீன்***
நவீன் நமது தளத்தின் கருத்தினை எங்கள் சார்பாக நீங்கள் கூறியதிற்கு என் நன்றிகள்!!!
இவ்வளவு வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கிய சுரேஷ் சாருக்கு என் பல கோடி நன்றிகள்!!!
ஆம் சுந்தர் அண்ணா கூறியது போல் இந்த பாடல் எல்லா ரஜினி ரசிகர்களின் நாடியிலும் துடிப்பிலும் ஊரிக்கொண்டது!!!!!!! அண்ணா பாபா படத்தை பற்றி????
என்ன ஒரு உழைப்பு !!
இதற்கு ஏற்ற பலனை நீங்கள் நிச்சயம் அறுவடை செய்ய வேண்டும் ..செய்வீர்கள் என்று நம்புகிறேன் …
Thanks sundarji & Naveen for the wonderful article…
கடமையை செய் பலனை எதிர் பார்!
Sunder ji..
Excellent work. Thank you.
I want to mention about the change in the Director of the movie. Please correct me if I am wrong. I do not have a evidence to support but I still remember the news which was hurting me..not only me, most rajini fans that time.
Well, the news was, as all know, Annamali original Director was Vasanth. At that time, Vasanth was in lime light, with continueous hits…his movies were considered to be class. So one of his interviews, he mentioned that for directing Rajini, you do not need a good director or he is not so happy to Direct a Rajini movie…something like that… By hearing this only, the director has been changed.
Thalaivar proved his power later thru Suresh krishna and made the movie a mega blockbuster…
I still remember, when the songs were released, it was not that popular…people used too tease like movie is going to be utter flop…but due to Director's master packaging…smart picturization and ofcourse Thalaivar's Magnetic presence made the songs and movie a mega blockbuster of all time
Thalaivar showed his power by choosing a
//சில காரணங்களால் வசந்த் இயக்க முடியாது போக,//
வசந்தின் பதிலே ….. அந்த சில காரணம்
"சூப்பர் ஸ்டாரய் வைத்து இயக்குகிரேர்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் " என்று நிருபர் கேட்டதற்கு, வசந்த் கூறிய பதில் ……
"நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்க வில்லை , ரஜினி தான் நான் இயக்கும் படத்தில் நடிக்கிறார்"
இதுதான் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இடம் பெற காரணம்.
எல்லாம் நன்மைக்கே …
வசந்தால் இப்படி ஒரு படம் குடுத்து இருக்கமுடியுமா என்பது சந்தேகமே.
டைரக்கடர் வசந்த்-கும், தலைவருக்கும் இடையே இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்கெல்லாம் தெரியாது. ஆனா அதுவும் நன்மைக்கே… இவ்ளோ அருமையான டைரக்டர்கிட்ட இந்த படம் கிடைக்க இது ஒரு காரணமா பயன்பட்டு இருக்கு.
@ Mydeen muscat
U R 100 % CORRECT . அண்ணாமலை விளம்பரம் முதன் முதலில் தின தந்தியில் பார்த்த போது வசந்த் பெயர் தான் இருந்தது . ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் தின தந்தியில் மறுபடியும் அண்ணாமலை விளம்பரம் வந்தது ஆனால் DIRECTOR சுரேஷ் கிருஷ்ணா என்று இருந்தது. நீங்கள் மேலே கூறிய விஷயம் எதோ ஒரு பத்திரிகையில் ( KUMUDAM OR A V ) படித்தது.
நூணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு வசந்த் ஒரு சிறந்த உதாரணம்.
Congrats on this new section!!!