









You Are Here: Home » Featured, VIP Meet » ‘வெற்றி நிச்சயம்’ பாடல் ரஷ் பார்த்துவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவை வாரி அணைத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி! – Behind the Scenes – Part 2
…..வெற்றி நிச்சயம் பாடல் தோன்றிய விதம் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில் :
“வெற்றி நிச்சயம் பாட்டு, ஆக்சுவலா ஒரிஜினல் பிக்சர்ல கிடையாது. ரஜினி ஏழ்மை நிலையிலிருந்து வளர்ந்து பெரிய ஆள் ஆகும் நிகழ்வை ஒரு பாடலாக இல்லாமல் ம்யூசிக் மாண்டேஜாகத் தான் (montage - assembling different pieces together) திட்டமிட்டிருந்தோம். அதற்காக பம்பாய் சென்று, அவர் நிற்பது போல, நடப்பது போல இப்படி வேறு வேறு கோணங்களில் ஷூட் செய்துவிட்டு வந்தோம். கதையாக அது வரும்போது, பால் பண்ணை வைக்கிறது, ஸ்வீட் பாக்கட் தயார் செய்றது, அண்ணாமலை ஸ்வீட்ஸ், அப்புறம் ஓட்டல், அது இது என்று அதை விரிவுபடுத்துதல் இப்படி தான் ரெடி செஞ்சோம். இது எல்லாமே பாட்டே இல்லாம ஷூட் பண்ணினது. எல்லாமே ஒரு மாண்டேஜ் தான்.
திடீர்னு ஒரு நாள், நான், தேவா சார், இவங்க எல்லாம் டிஸ்கஷன்ல இருக்கும்போது இது வெறும் மாண்டேஜா இல்லாம பாட்டாயிருந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சு. உடனே, வைரமுத்து சாரை கூப்பிட்டு, இது தான் சார் சிச்சுவேஷன் — “ஒரு நேர்மையான அப்பாவி ஏழை பால்காரன் நண்பனால துரோகம் இழைக்கப்பட்டு, அவமானப்பட்டு, இறுதியில் வீட்டையும் இழந்து, பல கஷ்டங்களுக்கு இடையே, போராடி வாழ்க்கையில் உயர்கிறான். வளர்ச்சி அடைகிறான்.” இதற்க்கு ஒரு பாட்டு வேணும்னு சொன்னேன்.
வைரமுத்து யோசிக்க ஆரம்பிச்சார். கடைசியில், எங்க டிஸ்கஷன் முடிவுல, “வெற்றி நிச்சயம்” அப்படிங்கிற வார்த்தையோட வந்தாரு வைரமுத்து. வார்த்தைகள் எல்லோருக்கும் பிடித்துப் போக அந்த பாடலை முழுசா எழுதி கம்போஸ் கூட பண்ணியாச்சு. இத்துனை பிரமாதமா வந்திருக்கிற வார்த்தைகளை வெறும் விஷுவல்ஸ் மேல போட்டா கிக் இருக்காது. அந்த “வெற்றி நிச்சயம்” அப்படிங்கிற வார்த்தைகளாய் லிப்ல ரஜினி சார் பாடினா தான் கிக்.
ஷூட்டிங் உட்பட எல்லாமே கிட்டத்தட்ட முடிந்துவிட்ட ஒரு ஸ்டேஜ் அது. அந்த பாடல் வரிகளை ரஜினி சார் உட்பட நாங்க எல்லாருமே ரொம்ப லைக் பண்ணினோம். என்ன பண்றது… ஷூட்டிங் இனிமே வெச்சுகிட்டு இருக்க முடியாது. ரஜினி சார் கொடுத்திருந்த டேட்ஸ் கூட முடிஞ்சிப் போச்சு. எல்லாரும் யோசிச்சிகிட்டு இருந்தோம். அப்போ நான் ஒரு ஐடியா கொடுத்தேன். “சார்…. எனக்கு ஒன்னும் வேண்டாம். சும்மா டார்க்கா ஒரு ரூம் இல்லே ஹால் போதும். இருட்டா ஒரு குடோன் மாதிரி ஒரு இடம். பேக்ரவுண்ட்ல ஒரு ஷட்டர். இது போதும். நான், நீங்க ஜஸ்ட் ‘வெற்றி நிச்சயம்’ அப்படின்னு ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் லிப் மூவ்மென்ட் மட்டும் கொடுக்குற மாதிரி மட்டும் சீன்ஸ் ஷூட் பண்ணிக்கிறேன். அதை வெச்சு நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.” அப்படின்னு சொன்னேன். உடனே அவர் அதுக்கு ஒத்துகிட்டார்.
அதே போல ஒரு இடத்தை பிடிச்சோம். ஷட்டர், ஒரு ஃபேன் இது ரெண்டு தான் அந்த சீனை ஷூட் செய்ய எனக்கு தேவைப்பட்டது. ஆரம்ப ஸ்டேஜ், அப்புறம் கொஞ்சம் பணக்காரர் ஆகிறது, அப்புறம் வளர்ந்து பெரிய ஆள் ஆகிற மாதிரி, ஜஸ்ட் மூணே மூணு கெட்டப் தான். கிராஃபிக்ஸே இல்லாத அந்த காலகட்டத்துல கூட கார்ல அவர் வந்து இறங்குறதை ஒரு DRAWINGல இருந்து கொண்டு வந்து அது காரா மாற்றுவதை டெவலப் பண்ணி காண்பிச்சிருப்போம். நிறைய சீன்ஸை அப்படி இப்படி மாத்தி மாத்தி போட்டு போட்டு பாத்து, எடிட் பண்ணி எடிட் பண்ணி ரெடி பண்ணினோம்.
“பாடல் உருவான விதம் பத்தி ரஜினி சாரோட ரியாக்ஷன் என்ன?”
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. ஏ.வி.எம். ஸ்டூடியோவுல டப்பிங் போய்கிட்டிருந்தப்போ, ரஜினி சார் டப்பிங் பேசுறதுக்கு வந்தார். “சார்…. அந்த வெற்றி நிச்சயம் சாங்கை சும்மா ரஃப்பா (ROUGH) எடிட் பண்ணி கொண்டுவந்திருக்கேன். பாக்குறீங்களா?ன்னு கேட்டேன்… “ஓ.. எஸ்…!” அப்படின்னு சொன்னவர்… பாட்டை பார்த்துட்டு அப்படியே கட்டி பிடிச்சிகிட்டாறு… எங்கேயோ கொண்டு போய்டீங்க சுரேஷ்…. மார்வலஸ் ஜாப்” அப்படின்னு பாராட்டி தள்ளிட்டார். அவர் இதை எதிர்பார்க்கவேயில்லை. இதுல என்ன விஷஷம்னா ஷூட்டிங்ல உருவான பாட்டு இல்ல அது. எடிட்டிங்க்ல உருவான பாட்டு அது.”
நாள் கணக்கில் டிஸ்கஷன் செய்து, கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரமாண்டமாக எடுக்கப்படும் எந்த ஒரு பாடலையும் விட, மிகவும் எளிமையாக, எதிர்பாராதவிதமாக எடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட இந்த பாடல், எப்படி காலத்தால் அழியாது நிற்கிறது பார்த்தீர்களா?
எளிமை தான் என்றுமே வலிமை.
இது தான் நண்பர்களே காலத்தால் அழியாத “வெற்றி நிச்சயம்” பாட்டு உருவான கதை. தலைவரோட வாழ்க்கையே முழுக்க முழுக்க அதிசயங்கள் நிரம்பியது. திட்டமிட்டு செய்யப்படும் செயல்களை விட, அவரது வாழக்கையில் எதேச்சையாக அமையும் அனேக விஷயங்களே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. (இது எதேச்சை என்பதை விட, இறைவனின் பரிபூரண ஆசி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.).
அடுத்து வருவது….
“இந்த நாள்…. உன்னோட காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ….” சிங்கமென சீறும் தலைவர், சரத்பாபுவின் வீட்டில் தொடையை தட்டி சவால் விடும் அந்த காட்சி எடுக்கப்பட்ட விதம் மற்றும் இதர சுவையான தகவல்கள் 3 ஆம் பாகத்தில்…. விரைவில் எதிர்பாருங்கள்….!
… to be continued!
………………………………………………………………….
Watch Vetri Nichayam song in our Youtube
http://www.youtube.com/watch?v=wONm_WNDTmQ
………………………………………………………………….
————————————————————-
Also read Part 1
எவர் கிரீன் ஹிட் ‘வெற்றி நிச்சயம்’ பாடல் பிறந்தது எப்படி? இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ஒரு நேர்முகம் – Behind the Scenes – Part 1
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10499
————————————————————-
வாழ்த்துக்கள் சுந்தர்.. உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டியது. அருமையான தகவல்கள். சிவாஜியிலே ஒரு வசனம் வருமே ' தற்செயலோ, கடவுளோ அது என்னோட பாதை தீர்மானிக்கட்டும்' ன்னு. தலைவர் வாழ்க்கை முழுவதும் அப்படி தான் நடந்து வந்திருகிறது.. அதனால் தான் அவர் எப்போவும் ' கடவுளின் அருள்' என்கிறார்.
உங்களது முயற்சி மென் மேலும் வெற்றி பேர் ஆண்டவன் அருள் புரிவார்.
Hats off to you Sundarji for bringing such news to us. Your efforts are massive. Thank you so very much for the unbelievable service you do to Rajini fans community. As a fan, i have learnt a lot on the personal side of Thalaivar only after I started reading this blog. Please keep ROCKING !
Can't wait for the next post
செய்திக்கும் உழைபிட்கும் மிக்க நன்றி சுந்தர் ஜி!
அடுத்து வருவது….
//“இந்த நாள்…. உன்னோட காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ….” சிங்கமென சீறும் தலைவர், சரத்பாபுவின் வீட்டில் தொடையை தட்டி சவால் விடும் அந்த காட்சி எடுக்கப்பட்ட விதம் மற்றும் இதர சுவையான தகவல்கள் 3 ஆம் பாகத்தில்…. விரைவில் எதிர்பாருங்கள்….!
… to be continued!//
வாவ் வாவ் இப்படி pulse எகுற வைகுரீங்களே…
இந்த காவிய பாடல் இவளோ வித்யாசமானதா எடுதுருபாங்க என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை …
உண்மையில் இதை படித்த பின்பு தான் சுரேஷ் கிருஷ்ணா சார் எவளோ யோசிச்சிருக்காங்க தெரியவருது அவுங்களோட உழைப்பு எல்லாம் ..சிலிர்க்க வைக்குது
அதுவும் நீங்கள் சொல்வது போல் …தலைவர் படத்துக்கு ஒரு இன்டர்நேஷனல் லுக் வரதுக்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டது இவர் தான்
என்ன கலக்கல் ஹேய் ஹேய் மியூசிக் அதுவும் முக்கியமா தலைவர் படத்துல பேர் போடும்போதே உற்சாகத்தின் உச்சத்துக்கு அழைத்து செல்லும் அந்த இன்றோ பேர் போடும் வித்தையை நம்மக்கு அறிமுக படுத்தியவர்
இதற்காகவே ரஜினி ரசிகர்கள் .எல்லோரும் ..இவருக்கு கடமை பட்ட்ருகாங்க
ஒரு ஒரு சீன் யும் ஒரு ஸ்டைல் சாம்ராடிற்கு ஏற்றார் போல் கனகச்சிதமாய் அமைத்திருப்பார்
அதிலும் அந்த election ரிசல்ட் இன்றோ சீன்
எப்பா ……தெறிக்கும் ….
". தலைவரோட வாழ்க்கையே முழுக்க முழுக்க அதிசயங்கள் நிரம்பியது. திட்டமிட்டு செய்யப்படும் செயல்களை விட, அவரது வாழக்கையில் எதேச்சையாக அமையும் அனேக விஷயங்களே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. (இது எதேச்சை என்பதை விட, இறைவனின் பரிபூரண ஆசி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்"………
Enna sariyaana vaarthaigal ivai sundar !!!! naalaikku nadaka pogardhum apadidhaan ….neenga venumna paarunga …
Indha paadal ella rajini rasigargalin vali nivarana paadal ….superb efforts sundar …..thnaks a lot
சுந்தர் உங்களின் இந்த மகத்தான முயற்சிக்கு அனைத்து நண்பர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்.
தர்மதுரை என்னை தலைவரோட ரசிகன மாத்திய படம்னு சொன்ன அண்ணாமலை தலைவர் வெறியனா மாத்திய படம்….சூப்பர் ஸ்டாருக்கு எவ்வளவோ பேர் வெற்றி படங்கள் கொடுத்து இருக்கலாம் ஆனா ரசிகனின் நிரந்தர விருப்ப படங்களை தந்தவர் திரு.சுரேஷ் கிருஷ்ணா தான்…. இன்னைக்கு வரைக்கும் அண்ணாமலை, பாட்ஷா போல ஒரு படத்த யாராலயும் தர முடியல (இத விட பிரம்மாண்ட வெற்றி படங்கள இருக்கலாம் அது வேற…)
அதுவும் இந்த சாங் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமுனே சொல்லலாம். இதுல வர ஒவ்வொரு ப்ரேமும் அத்துபடி… 'ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதேனு …' அவர் சொல்லும் போது ஒரு பார்வை பார்பார் பாருங்க பார்க்க கண் கோடி வேணும். இந்த பாட்டுக்கான பிளாஷ் பேக் உண்மைலேயே ஸ்வீட் சர்பிரைஸ் தான்… திரு.சுரேஷ் கிருஷ்ணா அவர்களை எவ்வளவு வேனா பாராட்டலாம்… அதே போல பாட்டுக்கு உயிரோட்டத்த குடுத்த தேவா, தலைவரே பாடுன பீல் தந்த S.P.B, வைர வரிகள் குடுத்த வைரமுத்து, எல்லாத்துக்கும் மேல நம்ம அண்ணாமலையார்.
சுந்தர் உங்க அடுத்த பதிவுகளுக்கு ரொம்ப ஆர்வத்தோட காத்துக்கிட்டு இருக்கோம்.
வாழ்த்துக்கள் சுந்தர்….. மேலும் வளர வாழ்த்துக்கள்
Excellent Sunder.Fantastic work.
During Annamalai time I was working in Kellambakam PHC(primary health care).
Lots of poster depicting Rajini as CM. Thaliver did not like this and asked it to be removed, old memories.
Once again great work by you and your team.
cheers
Dev.
சுந்தர்ஜி முதலில் வாழ்த்துக்கள், ஒரு blogspot இல் இருந்து இன்று நமது தளம் இந்த வளர்ச்சியை அடைந்ததை கூடவே பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல்வேறு சோதனைகளுக்கிடையே நீங்கள் நமது தளத்தை வழிநடத்தும் விதம் எங்களை மெய்சிளிர்க்கவைகிறது. சுந்தர்ஜி, நன்றிகள் பல. இந்த புதிய அங்கம் சுப்பர். மீண்டும் கோடி நன்றிகள். 3 ஆம் பகத்துக்கு waiting
.
rajni will rule tamil nadu
சுந்தர் அண்ணா!!!! சூப்பர்!!! வெற்றி நிச்சயம்… பாடல் தற்செயலாக அமைந்தது என்றால் நம்ப முடியவில்லை!!! அவ்வளவு அழகாக எடிட் செய்ய பட்டிருக்கிறது!!!!!! நீங்கள் கூறியது போல் "எளிமை தான் என்றுமே வலிமை"!!!! தலைவர் எளிமையிலும் எளிமை!!! வலிமையிலும் வலிமை!!!!
***“இந்த நாள்…. உன்னோட காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ….” சிங்கமென சீறும் தலைவர், சரத்பாபுவின் வீட்டில் தொடையை தட்டி சவால் விடும் அந்த காட்சி எடுக்கப்பட்ட விதம் மற்றும் இதர சுவையான தகவல்கள் 3 ஆம் பாகத்தில்…. விரைவில் எதிர்பாருங்கள்….******
அண்ணா என்னால் 2 நாட்களுக்கு மேல் காத்திருக்க முடியாது!!! அவ்வளவு ஆர்வமாக உள்ளேன்… தயவு செய்து சீக்கிரம் கூறுங்கள்!!!!!!!
Dear Sundar! Fantastic article! Hats Off to you!!!
இந்திய வெப்சைட்களிலேயே முதல் முறையாக இது வரை வெளியாகாத தலைவர் பட தகவல்கள்…. on the way…
aaahh…God Thanks to u.. for bringing sundar to us!!!
நண்பர் சுந்தர் அவர்களே:
கே.பி.க்கு அடுத்த படி ரஜினி மிகவும் மதிக்கும்,
விரும்பும் இயக்குனர் மகேந்திரன் அவர்கள்.
அவர்கள் இணைந்து கொடுத்த "முள்ளும் மலரும்",
"ஜானி" படங்களை பற்றி - நீங்களே குறிப்பிட்ட
கெட்ட பையன் சார் இந்த காளி (YouTube) - காட்சி பற்றி,
ஜானியில் மிகவும் வித்தியாசமாக அவர் செய்த அந்த
வில்லன் (வித்யாசாகர் - பார்பர்) ரோல் பற்றி நீங்கள்
ஒரு பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர் செய்த
அந்த ஜானி ரோல் மிகவும் மென்மையான ரோல்.
எந்திரன் விஞானி பாத்திரம் கூட சில சமயங்களில்
ஜானியை எனக்கு நினைவுபடுத்தியது. "ஒரு இனிய
மனது", "என் வாழ்விலே ஒரே வெண்ணிலா" - தேன்
போல் இனிக்கும் பாடல்கள் (அசோக் குமார் ஒளிப்பதிவு)
சுரேஷ் கிருஷ்ணா அனைவரும் அறிந்த இயக்குனர்.
பாட்சா படம் எடுத்தவர் என்று பட்டி, தொட்டி எல்லாம்
தெரியும். மகேந்திரன் - மக்கள் (new generation) அறியாத
இயக்குனர். பட்டம் விடும் தம்பி அவர் படம் பார்த்தாரா
என்று தெரியாது.
அன்பான வேண்டுகோள். நேரம், சந்தர்ப்பம் கை கூடினால்
இந்த சிறப்பான பகுதியில் - அவரையும் - எங்களுக்காக
பேட்டி எடுங்கள். நன்றி.
-டாக்டர் சுப்பாண்டி
—————————————-
Yes… sir. Our next appointment is scheduled with SPM sir. God's grace after that will try to do Mahendhiran sir's.
- Sundar
அட்டகாசம், அமர்களம்.
-
இந்த பாடல் எப்போ பார்த்தாலும் கேட்டாலும் தன்னம்பிக்கைக்கும், உற்சாகத்துக்கும் கேரண்டி.
-
பாடல் காட்சியை எடுக்க ஒரு டார்க் ரூம், ஒரு ஃபேன் போதும்கற நம்பிக்கையை டைரக்டர் சார்க்கு குடுத்தது கூட இருக்கறது ஒரு சூரியன்கற தைரியம்தான். அற்புதமான காட்சியமைப்பும், எடிட்டிங்கும் டைரக்டரை எவ்ளோ பாராட்டினாலும் போதாது. அதோட இந்த படத்தில எல்லா வசனங்களுமே பன்ச் தான். அடுத்த பகுதிக்கு waiting அண்ணா.
-
இந்த புதிய பகுதி மேலும் பல பிரபலங்களை பேட்டி கண்டு, தலைவரையும் நீங்க சந்தித்து ஒரு பேட்டி எடுக்கும் ஒரு தினமும் வரும் என்கிற நம்பிக்கையும், ஆவலும் இருக்குண்ணா. வாழ்த்துக்கள். நன்றிகள்.
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சுந்தர்.
Awesome Sundar…Nice job….Very interesting…Can't wait for the next Blog… Cheers…
hi sundar anna………….
grt effort… hats off to your service to all thalaivar fans… cant wait for the next post…. also pls dont forget to post abt baba movie experiences…
Good work Sundar..
//திட்டமிட்டு செய்யப்படும் செயல்களை விட, அவரது வாழக்கையில் எதேச்சையாக அமையும் அனேக விஷயங்களே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன. (இது எதேச்சை என்பதை விட, இறைவனின் பரிபூரண ஆசி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.).//
நிதர்சனமான உண்மை..
பாடல் உருவான விதம் குறித்து டைரக்டர் சார் சொன்ன விதம் மெய்சிலிர்க்கிறது.. ஒரு தேசிய கீதம்(நம்ம) இப்படி வித்யாசமான முறையில் உருவானதா!!!!!!!!!
அண்ணாமலை படம் ஒவ்வொரு தலைவர் பக்தர்களுக்கும் மறக்க முடியாத படம்..
தலைவர் மேல் அரசியல் சாயம் விழுந்த முதல் படம்..
திருச்சியில் இந்த படத்திற்கு அப்படி ஒரு கூட்டம்.. மாரிஸ் 70mm ரிலீஸ் ஆனது.. reservation முதல் பத்து நாளைக்கி full..
அதுவும் JJ படத்தை தடை பண்ண போறாங்க என்று சொன்னவுடம் படம் பிச்சுக்கிச்சு.. தலைவர் படங்களில் மிக steady ஆ வசூலான பல படங்களில் இந்த படமும் ஒன்று..
Eagerly Waiting for the third part ..
சீரஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
Song Lyrics:
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !
(வெற்றி நிச்சயம்)
பாடல் பத்திகள்:
1 )
இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வியர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே !
ஒவ்வொரு விடியலுமே எனது பெயர் சொல்லுதே!
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே!
அடே நண்பா ! உண்மை சொல்வேன்!
சவால் வேண்டாம் ! உன்னை வெல்வேன் ! (வெற்றி)
2 )
இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்
பாறைகள் நீங்கினால் கோடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடி படுமே
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன் (வெற்றி)
Extra Comments:
1) If TMS is most suitable for Shivaji songs, then SP Bala is most
suitable for this type of "intro" or "important" Rajini songs.
Deva did an excellent job in tune and music accompaniments for
this song. Deva's intro music, this type of songs added extra spice
in Rajini movies.
2) If SPBala's singing added greatness, Vairamuthu lyrics are
unbeatable. Due to lack of time, I am not able to write more.
Lyrics are very very great. But I have to add some thing at least.
What Vairamuthu means by "Vetri nichchayam,ithu vEtha saththiyam"
is the classical saying in India (Vedas)
-> SatyamEva jayathE (vaaymaiyE vellum - in thamizh)
Rupees/Coins/Ashoka Pillar have these great line inscribed
Detailed Meaning:
Satyam -> Truth, Honesty, Vaaymai
Eva —> Only
JayathE -> Shall win
in the context of this movie, Rajini was cheated by his friend
and he loses everything. But honesty is with Thalaivar's side.
With hard work, he is set to triumph again. Lyrics proclaim ->
"எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே!"
[Each line glorifies our Thalaivar - Superstar ]
These type of songs must be seen in theaters for the full effect !
என்றும் அன்புடன்,
டாக்டர் சுப்பாண்டி
Sundar Anna,
Really superb.
Many thanks and hats off for yr great effort.
சூப்பர் சார்.. படிக்கும்போதே புல்லரிக்குது.. எங்க பாமிலி எலோரையும் ரஜினி rasigargal ஆனது அண்ணாமலை படம் பாத்துத்தான்.. எங்க பாமிலி favourite ரஜினி movie "அண்ணாமலை" .. படத்தை ஒரு 50 தடவை பார்த்து இருப்பேன் சுந்தர் ஜி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி…
அருமையான பதிவு சுந்தர். வாழ்த்துக்கள். அந்த போட்டோ - ல தலைவர் என்ன அழகா இருகார் பாருங்க…ஹையோ…..சூப்பர்.
மாரீஸ் கண்ணன்
Thanks for the Awesome post Sir……
I very much liked the Superstar Title & music which they used in Annamalai film, but from Sivaji film onwards they aren't using the same title & music. Anyway we are Eagerly waiting for the next post…………!!!!
புதிய பகுதிக்கு வாழ்த்துக்கள் சுந்தர்ஜி
முதல் பதிவே அசத்தலா இருக்கு
கலக்குங்க
//இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வியர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது//
-
என் வாழ்க்கையை மாற்றிய வரிகள்…தோல்விகளால் துவண்டு கிடந்த என்னை தூக்கி நிறுத்தி , என்னை மீண்டும் உயிர்ப்பித்த வரிகள்…….இதை உருவாக்கிய அனைவருக்கும் நாம் நன்றி சொல்வோம்……..
-
திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும் இந்த பாட்டின் நாயகனாய் இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் என் தலைவருக்கு நன்றி…..
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
டியர் கண்ணன்
நான் முதல் முதலில் தனியா படம் பார்க்க அதும் முதல் நாள் முதல் ஷோ போனது அருணாசலம் தான்
அதற்கு முன்பு இந்த முதல் நாள் முதல் ஷோ ரணகள சந்தோசங்களை நான் கேள்வி பட்டத்தோட சரி
அண்ணாமலை வந்தபோ நான் ஆறாவது படித்த நியாபகம் (இதை எடிட் செய்யாமல் பெருசு approve பண்ணுவார ???? )
என் வகுப்பு தொழலர்களின் சகோதர்களின் அனுபவத்தை கேட்டு மகிழ்வோம்
அவர்கள் கூறியது இன்று நெஞ்சில் நிழலாடுகிறது
" தலைவர் போல் பால்காரன் வேடம் அணிந்து அதே போல் சைக்கிள் இல் பால் கேன் வைத்து ஊர்வலாமாக வந்து பல கேன் பாலை ஊற்றி அபிஷேகம் செய்தார்கள் என்றும்
அதே போல் பாம்பு (உண்மை பாம்ப இல்ல பொம்மை பாம்ப தெரியல ) கழுத்தில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்றும் கூறினார்கள்
ஆனா jj moolamaga என்ன வம்பு அப்போ ???
அது எப்படி சுந்தர் உங்களால் ஒவ்வொரு ரஜினி ரசிகனின் மனதையும் துல்லியமாக புரிந்துகொண்டு எழுத முடிகிறது? அண்ணாமலை படத்தை 20 முறையாவது பார்த்திருப்பேன். பாபா படத்தை பற்றி அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. தலைவர் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது பாபா.
eagerly waiting for the third part and further more about baba.. Post it as soon as you can sir…
அண்ணாமலை RELEASE ஆனா நேரம் ( I THINK 23 OR 27 JUNE 1992 ) ADMK மதுரையில் மாநாடு நடத்தியது. படம் ரிலீஸ் ஆனால் அவர்கள் மாநாட்டிற்கு மவுசு குறையும் என்ற ஒரு அற்ப புத்தியால் படத்தை தடை பண்ண போவதாக ஒரு பேச்சு அப்போது எழுந்தது. JJ ரஜினியிடம் ரிலீஸ் ஐ தள்ளி வைக்க சொல்லியதாகவும் , ஆனால் ரஜினி மறுத்து விட்டதாகவும், அதனால் படம் ரிலீஸ் ஐ தடை பன்னபோவதாகவும் பரபரப்பு எழுந்தது . இந்த படம் நெல்லையில் பூர்ணகலாவில் ரிலீஸ் செய்ய பட்டு அதிகாலை 6 மணிக்கு முதல் ஷோ போடப்பட்டது .
//ஆனா jj moolamaga என்ன வம்பு அப்போ ??? //
ஒரு சமயம் ஜே ஜே கூட நின்ன கூட்டம், நம்ம ரஜினி சார் வந்த பிறகு அவர சுத்தி கூடிவிட்டது …..
இது அந்த அம்மாவுக்கு பிடிக்கல..
அப்புறம் ஒரு தடவ security ய காரணம் காட்டி ரஜினி சார security gate லிருந்து வீட்டுக்கு car allow பண்ணாம நடந்து போக சொன்னாங்க
ஆனாலும் படத்தில் இடம்பெற்ற வசனம் (ஜோஸ்ய காரன் சொல்வது ) ஏதார்தமாக அமைந்தது
" மேற் கூறிய இரண்டு சம்பவங்களும் நண்பர்கள் கூற காதால் கேட்டவைகளே"
தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
மைதீன் muscat
தென்காசி (பாக்கியலக்ஷ்மி theater என்று நினைக்கிறேன் ) யில்
படத்தை வெளியிடாவிட்டால் தற்கொலை செய்து கொல்வேன் என்று ஒருவர் பட்டாசை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு போராட்டம் செய்தார்
இதற்கு ROSHAN , மும்பை கூறிய காரணமாக இருக்கலாம்
Excellent Job Sundar. Keep up the good work. வர வர ரொம்பத்தான் கலக்கறிங்க! வாழ்துக்கள்!!.
Annamalai padatirku pinnadi ittanai swarasyamana sambavangal irukiratha.
ini nam thalatil swarasyathirku panchame irukathu.
nigalvugalai pagirndu konda nanbargalukku nandri,
melum vivarangal terindavargal pagirndu kollavum.
Vaazhga thalaivar.
//எளிமை தான் என்றுமே வலிமை.//
உண்மையான வரிகள்……..,
அருமையான படம் அளித்த சுரேஷ் கிருஷ்ணாவிற்கு நன்றி……..,
நன்றி சுந்தர்ஜி……..,
வளர்க நம் தலைவர்ப் புகழ் மென்மேலும் !
My Dear Humane Rajni Aficionados,
Coooooooooool……
***
"வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்" - என்ன ஒரு வைர வரிகள்!!! - வைரமுத்துவிற்கு இந்த பாடலின் வரிகளுக்காக எனது மற்றும் நம் தள நண்பர்களுக்காகவும், கோடான கோடி நன்றிகள்!
***
இந்த பாடலை பாடிய எனக்கு மிகவும் பிடித்த SPB -க்கும் மனமார்ந்த நன்றிகள் பல!!
***
இந்த பாடலை மிகவும் எளிமையாக, இந்த அளவிற்கு திறமையுடன், அழகாக உருவாக்கிய சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும், இசையமைத்த தேவ அவர்களுக்கும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் சிவாஜி ராவின் ரசிகர்கள் அனைவரின் சார்பாக நன்றி, நன்றி, நன்றி……….
***
எல்லாவற்றிக்கும் மேலாக என் தலைவனுக்கு(தோழனுக்கு) எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!!!!!!!!!!!!!!!!!
***
என்ன ஒரு பாடல்! இது வரைக்கும் நான் இந்த பாடல் ஒரு சிலருக்கு தான் பிடிக்கும் என நினைத்து இருந்தேன். நமது தலைவனின் குடும்பத்தில், அனைவருமே இப்படிதான், ஒன்று தான் என்று உணர்த்திவிட்டீர்கள்!!!
மிக்க, மிக்க, மிக்க மகிழ்ச்சி…. வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி!!
***
//"மேற்கூறிய சூழ்நிலைகளில் இந்தப் பாடலை கேட்கும்போது, தலைவரே நமது அருகில் வந்து நமது விழிகளை துடைத்து, தட்டிகொடுத்து, இந்த பாடலை நமக்காக பாடுவது போல இருக்கும். உங்களில் எத்துனை பேர் இதை உணர்ந்திருப்பீர்கள் என்று தெரியாது. இருப்பினும் இது முற்றிலும் உண்மை. எத்துனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. இந்தப் பாடல், பாதிப்பு ஏற்படுத்தாத ரஜினி ரசிகனே இல்லை எனலாம்"http://
உண்மை. உண்மை.உண்மை.
***
//"இன்றும் எப்போதெல்லாம் மனதிற்கு சஞ்சலம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தப் பாடலை எனது அறையில் தனிமையில் ஒலிக்கவிட்டு திரும்ப திரும்ப கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பாடலை கேட்டவுடன் தனி சக்தியும் உத்வேகமும் நம்பிக்கையும்நிச்சயம் நமக்கு கிடைக்கும். புதிதாக பிறந்தது போல தோன்றும்."http://
நிச்சயமாக. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இப்போது எல்லாம் எனக்கு யாரும் இல்லாதது போல தோன்றும் (பெற்றோர்கள் அல்லாது) (அருகில்). ஏனெனில், நான் தனிமை படுத்தப்பட்டு இருக்கின்றேன் - இப்போது. நான் புனேவில் வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். ஒரு சில நேரங்களில், நாம் எதற்காக, யாருக்காக இங்கு வந்து வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்? இப்படியும் (தாய், தந்தையரை பிரிந்து) வேலை பார்கதான் வேண்டுமா? இப்படி வேலை பார்த்து நாம் எதை சம்பாதிக்க போகிறோம் - (பெற்றோர்களின் அருகில் இருக்கும் சந்தோஷத்தை விடுத்து). அப்போதெல்லாம், என்னை தாலாட்டி, ஊக்கம் கொடுத்து, ஒரு சக்தியினை கொடுத்து, மனசுக்கு ஆறுதல் தருவது நம் தலைவர் தான் - அவரின் வாழ்கை முறையாலும், படங்களில் ஏற்கும் வேடங்களினாலும், அதில் தரும் ஊகங்களாலும்.
***
எனக்கு மற்றொரு தாயாக இருந்து, தந்தையாக இருந்து, ஆசானாகவும், நண்பனாகும், வழிகாட்டியாகவும், மனதில் சோர்வு வரும் போதெலாம் ஊக்க சக்தியாகவும் இருக்கின்றாயே - நீ இருக்கும் இந்த காலத்தில், நான் இருப்பதையே ஒரு கவுருவமாகவும், பெருமையாகவும் நினைக்கின்றேன்!!!
***
உன்னை கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி!!
***
நேர்மை மற்றும் உண்மை, தன்னம்பிக்கை, உழைப்பின் சிகரமே,
உன்னை வழிகாட்டியாக நினைத்து உன் வாழ்க்கை முறையை எனது வழி முறையாகக உழைத்து கொண்டு இருக்கின்றேன்!!!
***
உமக்கு எனது நன்றியினை சொல்வதை தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை!
***
மேலும் சுந்தர்ஜிக்கும் , அவரின் இந்த அடுத்த முயற்சிக்கு வித்திட தூண்டுகோலாக இருந்த அந்த காரணத்திற்கும் நன்றி!!!
*******
எல்லா புகழும் என் இறைவனுக்கே(தலைவனுக்கே)!!!
DOT .
**சிட்டி**.
மேலே உள்ள அந்த புகைபடத்தில்,
தலைவர் என்ன ஒரு அழகாக உள்ளார்.
அந்த ஒரு கலை நயம் யாருக்கு வரும்.
***
@"நீங்கள் அழகு இல்லை என்று வருத்தமா"
- யார் இந்த கேள்விய கேட்டதுன்னு தெரியல??
கருப்பிலும் கலையாக இருப்பவர் நம் தலைவர். என்னமோ கேள்வி கேட்டது தன்ன தான் ஐஸ்வர்யாராய்-ன்னு நினச்சிட்டுது போல..
***
ஆனா அதில் கவனிக்க படவேண்டியது என்னன்னா, தலைவரின் பதில் தான்.
"மனசு அழகா இருந்த போதுமே!!!"
- என்ன ஒரு அழகான பதில். அருமை தலைவா. இதே WORLD HERO கருப்பாக இருந்து, அவர்ட்ட கேட்ருந்தா
மனிதர் யார்க்கும் புரியாத பாஷையில் எதோ ஒன்றினை கூறி இருப்பார்.
***
நம்ம தலைவர்,நம்ம தலைவர் தான்யா. இவனுக்கு நிகர் இவன் தான்.
***
தலைவா, ராணா வில்லனின் வில்லத்தனமான, அதிரும் சிரிப்புக்காக காத்திருக்கிறோம்.
***
மேஏஏஏஏஏஏஏஏஏஏஎ
*******
எல்லா புகழும் என் இறைவனுக்கே(தலைவனுக்கே)!!!
DOT .
**சிட்டி**.
Hai Sundar intha site matum than only Thalivar news matum varuthu.Romba santhosama iruku but engalukaga nenga unga velai elam vitutu nenga updates kuduthutu irukenga ipa site a next stepku kondu poirukinga All the best intha site melum pala step muneri oru nall nenga thalivarium exclusive interview edipinganu nan nambaren ungaluku enoda valthukal.Nanga elam Movie vantha first day papom avlothan.But nenga entha athyamum ilama engalukaga ithaelam seyaringa intha oru karnathukagave kandipa oru nal nenga thalivara interview edupinga. nenga intha sitea paying sitea kuda mathunga enga atharavu ungaluku epavum undu.
Please publish facts on the sakthi kodu song in baba! I request all rajini fans to go to a karthik (singer)'s concert and hear him sing that song! I felt I touched God, when he sang it here in phoenix,AZ. I hope others may have also felt it! Infact, the song was so nice when he sang it on stage, than it was in the movie!
சூப்பர் சுந்தர்ஜி.
எனக்கு பிடித்த பாடல்களில் முதல் பாடல் தலைவரின் இந்த பாடல் தான். அதை பற்றி விரிவாக விளக்கியதற்கு நன்றி.
சக்தி கொடு பாடல் - மிக மிக அருமையான பாடல்.
ஆனால் - அந்த பாடலின் கடைசியாக வரும் வரிகள்
"முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்..
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்..
[...............]
கட்சிகளும் பதவிகளும் நான் விரும்ப மாட்டேன்..
காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்.."
அரசியல் கருத்துக்களாக அமைந்து விட்டன. இந்த
வரிகள் அந்த தருணத்தில் இருந்த அரசியல் நிலையை
பிரதிபலிக்கிறது. இதை தவிர்த்திருந்திருக்கலாம்
என்பது எனது தனிப்பட்ட கருத்து. ரஜினி ரசிகர்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். (தியேட்டரில்
படம் பார்க்கும் போதும், கேசட்டில் கேட்கும் போதும்
படத்தின் கதையோடு ஒத்துப்போகாமல் இந்த வரிகள்
இருக்கின்றன. இது போன்ற வரிகளை ஷங்கர் போன்ற
இயக்குனர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கலாம்.)
சுரேஷ் கிருஸ்ணா படம் படித்த பாடல்களிலேயே
ரஜினியின் நடிப்பு மிகவும் சிறப்பாகவும், மிகவும்
இயற்கையாகவும் இருப்பது, #1 , பாடல் இந்த சக்தி கொடு
பாடல் தான்! எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில்
இதுவும் ஒன்று. அபாரமான நடிப்பு.
என்றும் அன்புடன்,
டாக்டர் சுப்பாண்டி
It seems that there are interesting facts behind Annamalai movie…as some of our fans has shared with us, Sir could you pls tell us what exactly happened during Annamalai movie release time during that time i was just
6 years old .especially the opposition from JJ.
டியர் சுந்தர் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி நிச்சியம் உண்டு .வாழ்த்துக்கள்
டியர் ஹரி,
It was basically a chain of events that lead to that gossip..
First Thalaivar was really upset on her blocking the road for hours before
she crosses that area..
Traffic jam for hours.. மக்களுக்கு இடையூறு..
Secondly thalaivar was stopped before the road leading to poes garden citing that JJ was about to start from her home in half an hour..
Thalaivar requested the cop to permit ஹிம் to go and since only a negative reply came he came out of the car and sat on the bannet and lighted his cigar..
கட்டுக்கு அடங்காத கூட்டம் கூடியது என்று சொல்லவும் வேண்டுமா.. JJ க்கு இந்த நியூஸ் போனது.. கூட்டம் கட்டுக்கடங்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.. மவுண்ட் ரோடு கூட டிராபிக் ஜாம் ஆனது,,
உடனே தலைவர் வண்டிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது..
நம் அண்ணாமலை படத்தில் சில வசனங்கள் அந்த அம்மாவை டார்கெட் பண்ணதாகவும் தடை விதிக்க படலாம் என்று அன்றைய சூழ்நிலை..
நான் அன்று வரை பார்த்த கூட்டத்தில் அண்ணாமலைக்கே முதல் இடம்..
நானும் என் நண்பர்கள் ஒரு ஏழு பேர் காலை 0710 மணிக்கு படம் பார்க்கு queue வில் நின்றோம்..
அன்று மாரிஸ் காம்ப்லேசில் Black மார்க்கெட் டிக்கெட் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தது..
எந்த ஷோ நாங்க டிக்கெட் கிடைத்து படம் பார்த்தோம் தெரியுமோ!!!!!!!!!!!!!!!
Evening ஷோ.. அது வரை நாங்களும் ஷிப்ட் மாறி மாறி டிபன், லஞ்ச் முடித்து கொண்டோம்..
அந்த அளவிற்கு ஒரு வெறியோடு queue வில் நின்று பார்த்தோம்.. இன்று அப்படி ஒரு நிலை இருக்கா? நீங்களே நினைத்து கொள்ளுங்கள்.. Dvd piracy, net booking , alternate entertainment என்று இன்று அது போன்ற ஒரு சூழ்நிலைக்கு வாய்ப்பே இல்லை எனலாம்..
திருச்சி ஊர் மக்களுக்கு தெரியும் queue theatre விட்டு வெளியே 300 -350 மீட்டர் நின்று டிக்கெட் வாங்கினார்கள்..
அண்ணாமலை ஒரு மலை தான் வசூலில்..
சீரஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
Sunder fabulous write up and your work amazes me.
Those golden period of Rajini when he was the undisputed power-house and king. He was so powerful, but never abused it for selfish reasons(like the current super heros).From this period there was constant conflicts with JJ and we all know what happened in 1996.
One thing I can tell every one, when VK can claim 10% vote share, VJ 7-8%, Thaliver at peak atleast would have got 16% - 18%.
Thaliver with the late Moopanar would have easily defeated all dravidian parties. Anyway Sunder you have rekindled all old memories.
warm regards
Dr.KK.
very good sundar
Thanks Kannan sir for Sharing the information
யாருக்கும் தெரியாத தகவல். முயற்சி செய்து வெளிக்கொண்டுவந்தமைக்கு பாராட்டுக்கள். இன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. ஆனால், இதன் பின்னணயில் இவ்வளவு விஷயம் இருப்பது இப்போது தான் தெரிகிறது.
இன்றும் இப்பாடல் நம்மில் பலரது ரிங் டோனாக ஒலித்து கொண்டிருப்பதே… இது காலத்தால் அழியாத காவிய பாடல் என்பதை நிரூபித்து கொண்டிருகிறது. உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி. சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி. இது போல் பல உணர்வுபூர்வமான பேட்டிகளை வரும் நாட்களில் எதிர்பார்க்கிறோம்.
+++++++++++
ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா,
சாதிக் (மதுரை)
அருமையான இந்த நிகழ்ச்சியை படித்த பின், அண்ணாமலை படத்தை பற்றி என் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது:
). ஏன் என்றால் அவரை தந்தை போல் பார்க்க தொடங்கிய காலம் அது. அன்று ஒரு நாள் அண்ணாமலை படம் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டதை கேள்விபட்டேன்… தியேட்டர் செல்ல காசு இல்ல.., அப்போ 10 பைசா கிடைத்தாலே அதை பொற்காசு போல பாது காப்பேன். எப்படியாவது படத்தை பார்க்க வேண்டும் என்று வெறி கொண்டேன். பக்கத்து வீட்ல அண்ணாமலை படத்தை டெக் மூலமா பார்க்க போறாங்கனு என் நண்பன் தூது வந்தான். அவங்க கொஞ்சம் orthodax பாமிலி. அதனால வீடுக்குள்ள போயி பார்க்க முடியாது. நானும் என் நண்பனும் (அவனும் ரசிகன்) எங்கள் வீட்டு compound சுவர் ஏறி அவர்களுக்கு தெரியாமல், அவர்களின் ஜன்னல் வழியாக படத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கால் கடுக்க நின்று கொண்டே பார்த்தோம். அவர்கள் அதட்டும்போது கீழே தவ்வி விடுவோம், பின் மறுபடியும் ஏறுவோம். இருந்தும் சில இடங்களில் எங்களை அறியாமல் கை தட்டினோம், விசில் அடித்தோம் (அப்போ அடிக்க தெரியாவிட்டாலும்!!). படம் முடிந்த போது.. கால் வலியும் பறந்து போனது. எதையோ ஜெயிச்ச சந்தோஷம் கிடைச்சது! அதில் வரும் வசனங்களும், (esp : I'm a bad man @ கிளைமாக்ஸ் ), அடே நண்பா பாடலும் என் வாழவின் திசையை மாற்றியது."
"அப்ப எனக்கு ஒன்பத வயசு…(1992) எங்க வீட்ல வீ.சீ.ஆர்.(டெக்) பிளேயர் கிடையாது, வாங்குற அளவு அப்ப வசதியும் இல்ல… நானோ ஐந்து வயது முதலே தலைவரின் காந்த சக்தியால் இழுக்கபட்டவன்..(தீவிர வெறியன் இல்லை என்றாலும், தலைவரை பற்றி யாராவது அப்ப தப்பா பேசுனா ரணகளம் பண்ணிடுவேன்
அன்று முதல், ரஜினி என்ற நடிகரை தலைவராக ஏற்று, அவர் கூறும் நற்பண்புகளை நடைமுறையில் ஒவ்வொன்றாக செயல் படுத்த முயற்சிக்கிறேன். வெற்றி பெறுவேன்.
_____________
தன்னலம் இல்லா தலைவனின் தொண்டன்,
சாதிக் (மதுரை)
சுந்தர், தனித்தன்மையுடன் உங்களுக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு தளத்தை நீங்கள் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் நான் அறிவேன். உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் அறிவேன். நீங்கள் குவிக்கப்போகும் சாதனைகளையும் அறிவேன். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அண்ணாமலை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் :
அண்ணாமலை படம் ரஜினிக்கு ஒரு மலை போன்ற படம்தான். சரியாக 1987 ஆம் ஆண்டு தலைவர் உத்தர் தக்ஷின் என்ற ஹிந்தி படத்தில் நடித்த சமயம் பிரபல ஹிந்தி நடிகரும் இயக்குனருமான ராகேஷ் ரோஷன் தனது படமான குத் கர்ஸ் என்ற படத்தில் நடிக அழைத்தபொழுது ரஜினி நடிக்க மறுத்துவிட்டார் காரணம் அதே போன்ற கதாபத்திரத்தில் நான் உதார் தக்ஷின் படத்தில் நடித்துவிட்டேன் என்று கூற பின்னர் அந்த ரோலில் சதுருகன் சின்ஹா நடித்தார். பின்னர் ரஜினி அவர்கள் அந்த படத்தின் வெற்றி பார்த்து அதே கதையை அருமையாக் மூன்று வித நிலைகளில் திரைகதை அமைத்து அண்ணாமலையாக நமக்கு விருந்து படைத்தார்.
தளபதி மற்றும் மன்னன் பட வசூலை அண்ணாமலை முறியடித்து சாதனை படைத்தது. 1992 இல் மூன்று வெள்ளி விழா படங்களை தந்த பெருமை தலைவருக்கு உண்டு. 91 இல் வெளியாகி 1992 இல் வெள்ளிவிழா கண்ட தளபதி, 1992 இல் தொடர்ந்து இரன்று வெள்ளி விழா மன்னன், அண்ணாமலை. மேலும் தலைவரு சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது இந்தபடத்தின் நடிபிர்க்காக. சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் கார்டு சுரேஷ் கிருஷ்ணா படு அசத்தல். இன்று வரை (signature card tune) நிலைத்து விட்டது. மொத்தத்தில் ரஜினிக்கும் மட்டும் மல்ல கவிதாலய மற்றும் தேவா சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு அண்ணாமலை ஒரு மாபெரும் திருப்புமுனை. தமிழ் சினிமாவிற்கு ஓர் TREND SETTER.
—————————————————-
நன்றி TVE ராஜேஷ்.
மேலும் இந்த பதிவு பற்றி தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும், பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன்றி.
தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி.
தங்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றும் வல்லமையை இறைவன் எனக்கு தொடர்ந்து அளித்து, நமதுன் தளம் மேன்மேலும் வளர அருள் புரிவானாக.
- சுந்தர்
Thanks for sharing this news! I was certainly not aware of this.
And TVE Rajesh, thanks for sharing some more news! Though I was aware that Annamalai was based on the Hindi movie, I did not know the background.
மலை டா அண்ணாமலை டா சும்மா அதிர்ர சீன்