You Are Here: Home » Featured, Moral Stories » சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சும்மா வந்தோமா, தலைவரை பத்தி நாலு ந்யூஸ் படிச்சோமா போனோமா என்பது மட்டும் நம் தளத்தின் குறிக்கோள் அல்ல. அதற்க்கு மேலும் சில நல்ல விஷயங்களையும் நம் ரசிகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்; அது அவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வேண்டும் என்பது நம் கருத்து. அதற்காக நான் விரும்புபவற்றை எல்லாம் இங்கு வந்து சொல்லிக்கொண்டிருந்தால் தளமே பிறகு DEVIATE ஆகிவிடும். எனவே, ஓரளவுக்கு - ஒரு ரஜினி ரசிகராக - உங்க ரசனையோடு ஒத்துப்போகிற விஷயங்களை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்த வகையில், தோன்றியுள்ள ஒரு பகுதி தான் நமது இந்த குட்டிக்கதை கார்னர். இனி இந்தப் பகுதியில், மேடைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைவர் சொன்ன கதைகள், மற்றும் நாம் கேள்விப்பட்ட, படித்த பிற சுவையான நீதிக்கதைகள் பிரத்யேக ஓவியத்தோடு இடம்பெறும். சிறப்பு என்னவென்றால், நமது தளத்திற்காக வரையப்பட்ட - இது வரை நீங்கள் காணாததாக - அவ்வோவியங்கள் இருக்கும்.

சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழில் ‘கழுகார் பதில்கள்’ என்ற புதிய பகுதியில், வெளியான ஒரு அற்புதமான அர்த்தம் பொதிந்த ஒரு கதையை இங்கு தருகிறேன். இதற்கான ஓவியம் GOOGLE இல் கிடைத்தது. இதை விட பொருத்தமான ஓவியத்தை யாரும் தந்துவிட முடியாது. (விகடனிலும் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது).

அடுத்த கதையிலிருந்து நமது தளத்திற்காக வரையப்பட்ட பிரத்யேக ஓவியங்கள் இடம்பெறும்.

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சிசிலித் தீவு, இத்தாலியின் தென் முனையில் இருக்கிறது. அதை டயனாசியஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் டெமாக்கிள்ஸ் என்ற அறிஞன் ஒருவனும் அந்த நாட்டில் இருந்தான். அரசனின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் குத்தலாகப் பேசுவது அவன் வழக்கம்.

அரசனை பார்க்கும்போதெல்லாம் “உனக்கென்னப்பா… நாட்டுக்கே நீ ராஜா. உனக்கு ஏதாவது கவலை இருக்கா. சொல்றதெல்லாம் செய்றதுக்கு வேலைக்காரங்க… அரண்மனை, சுகபோகங்கள், செல்வங்கள்… நீ நினைச்சு நடக்காத ஏதாவது ஒன்னு உண்டா?” இப்படி கேட்டு வந்தான். இதில் எரிச்சலான மன்னன், டெமாக்கிள்ஸுக்கு பாடம் கற்பிக்க நினைத்தான்.

தன் சேவகர்களை அவரிடத்தில் அனுப்பி, “நீங்கள் ஒரு நாள் அரண்மனைக்கு வர வேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம். அரசன் அனுபவிக்கும் அத்துணை சுக போகங்கள் உங்களுக்கு உண்டு. சிம்மாசனம் உட்பட!” என்று அழைப்பு விடுத்தான். டெமாக்கிள்ஸ் அதற்கு ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட நாளில் டெமாக்கிள்ஸ் வந்தார். சொன்னபடியே ராஜ மரியாதைதான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப் பட்டன. அரச மண்டபத்தில் டயனாசியஸுக்கு சமமாக டெமாக்கிள்ஸ் உட்காரவைக்கப்பட்டார். தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப் போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது, எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில்! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக்கொண்டு இருந்தது. அதன் கூர்மை கண்களை பறித்தது.

அதை பார்த்தத் பிறகு இவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. எந்த நேரமும் தலை போய்விடும் என்ற சூழ்நிலையில், உல்லாசமாவது உற்சாகமாவது. அதற்குப் பிறகு சாப்பாடு, சந்தோஷம் எதுவும் உள்ளே போகவில்லை டெமாக்கிள்ஸுக்கு. மன்னன் எப்போதும்போல உற்சாகமாகவே இருந்தார். டெமாக்கிள்ஸின் நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே! மன்னரிடம் பேசக்கூட முடியவில்லை.

எழுந்து ஓடலாம் என்று முடிவு செய்து அதற்க்கு தயாராகியும் விட்டார். ஆனால் அந்த முயற்சியில் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டு குதிரை முடி அறுந்துவிட்டால் என்ன செய்வது. உறைந்து போய் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

“என்னாச்சு நண்பா? ஏன் இப்படி பதட்டத்துடன் இருக்கிறாய்?”

“அந்த கத்தி… அந்த கத்தி… ” என்றார் திக்கித் திணறி.

மன்னன் சொன்னான்… “அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும்… கண்ணுக்குத் தெரியாத ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழி இல்லை! அதை நான் தினந்தோறும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். அது எப்போதும் ஏன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு தானிருக்கிறது. ஏதாவதோ யாராவதோ அதை அறுத்துவிடும் சூழல் எப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால்  என் நண்பர்கள் கூட சில சமயம் என் மீது பொறாமை கொண்டு, என்னை கொல்ல முயற்சிப்பர். அல்லது சில சமயம் என்னை பற்றி தவறான கருத்துக்களை வதந்திகளை பரப்பி எனக்கெதிராக என் மக்களை திசை திருப்ப முயற்சிப்பர். அல்லது எதிரி திடீரென படையெடுத்து வரலாம். அல்லது என் வீழ்ச்சிக்கு நானே காரணமாகும் வகையில் நான் ஏதாவது தவறான முடிவு எடுக்கலாம். நீ தலைவனாக சிம்மாசனத்தில் உட்கார ஆசைப்பட்டால், நீ எதற்கும் தயாராக இருக்கவேண்டும். அதிகாரம் வரும்போதும் இவையும் கூடவரும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை தெரியாது” என்றான்.

“இப்போது நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. உனது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பின்னால் இத்துனை விஷயங்கள் இருப்பது இப்போது தான் புரிந்தது. என்னை வீட்டிற்கு போக அனுமதி கொடு” என்றாராம் டெமாக்கிள்ஸ்.

‘டெமாக்கிள்ஸ் ஸ்வார்டு’ என்ற வார்த்தையே இந்தக் கதையில் இருந்துதான் பிரபலம் ஆனது! (நன்றி : -ஜு.வி.)

——————————————————————-
நாம் பார்த்து பொறாமைப்படும் பலரின் உண்மை பின்னணி மேற்கூறிய கதையில் உள்ள சிம்மாசனம் போல தான் இருக்கும். ஒரு மிகப் பெரிய இலக்கை அடைவதைவிட அதை தக்க வைத்துகொள்வது தான் மிகவும் கஷ்டம். தலைவரின் ‘சூப்பர் ஸ்டார்’ நாற்காலியும் இப்படித்தான். தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல, தலைவரை அந்த இடத்திலிருந்து அகற்ற இது வரை செய்யப்பட்ட சதிகள் எத்துணையோ. தலைவர் அதை உணர்ந்தே இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. மேற்கூறிய சிம்மாசனத்தில் இருப்பவர்கள் நிம்மதியற்று அச்சத்தோடு இருக்கிறார்கள்.

ஆனால் தலைவர் அதன் நிலையாமையை பற்றி  நன்கு உணர்ந்திருக்கிறார். ஆனால் அச்சத்தோடு இல்லை. தன்னிலை உணர்ந்து எப்போதும் பணிவோடு இருக்கிறார். (சன் டி.வி.யில் அவர் அளித்த தீபாவளி சிறப்பு பேட்டியில் இது வெளிப்பட்டது). தவிர, இறை பக்தி என்ற தலைக்கவசம் அணிந்திருக்கிறார். அவரை எந்த கத்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது.

நம் நாட்டில் புதிதாக பதவியேர்ப்பவர்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கும்போது, கூடவே இந்த கதையையும் படிக்கவேண்டும் என்று சட்டமிட்டால் மிக நன்றாக இருக்கும். பதவி இருக்கிறதே என்று எண்ணி ஆட்டம் போடுவது குறையும்.

அடுத்து ஒரு கதையில் பிரத்யேக ஓவியத்துடன் விரைவில் சந்திக்கிறேன்….

[END]

18 Responses to “சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!”

  1. venkatakrishnan venkatakrishnan says:

    Realy proud of you {sundar}

  2. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    சூப்பர் கதைண்ணா.

    இண்ட்ரஸ்டிங்கான பகுதி இது. அடுத்த கதையை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    இந்தக்கதை தலைவரை பார்த்து வயிற்றெரிச்சல் படும் பலரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.

  3. sures manickam sures manickam says:

    சூப்பர் பதிவு அண்ணா . ithu அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

  4. Balaji_Dubai Balaji_Dubai says:

    Excellent story sundarji…good keep it up…

    Right time !!! Right Story !!!

    Thanks for the nice article.

    Cheers,

    Balaji .V

  5. sures manickam sures manickam says:

    அண்ணா நான் மலேசியன். தமிழக தேர்தல்ல தலைவர் ஒட்டு போட்ட விசயத்தில் எதோ பிரச்சனை வரும்னு ( ஒட்டு போட்டதே படம் எடுத்தது ) நாளேட்டில் படித்தேன். என் மனுசு ரொம்பே கஷ்டமா போயிடுச்சி. எந்த விதத்திலேயும் நம்ம தலைவருக்கு கஷ்டம் வராமே தமிழ்நாட்டு ரசிக சகோதரர்களாகிய நிங்க எல்லாம் தலைவரை விட்டுடாம கூடவே இருந்து பாத்துகோங்க அண்ணா.நம்ம தலைவர் எப்போதும் நல்லா இருக்கணும்.

    என்றும் தலைவரின் நலம் விரும்பி
    அன்பு கோடான கோடி ரசிகரில் ஒருவன்
    சுரேஷ் மாணிக்கம் (மலேசியா)

    ————————————————————-
    இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல நண்பா. தலைவருக்கு தெரியாத விஷயமா? இந்த விஷயத்துல நிறையே பேர் அவரடோ செயல்பாட்டோட அர்த்தத்தை புரிஞ்சிக்கலை. Let it be….
    அப்புறம் you don't worry…. நாங்க தலைவரோட எந்த சூழ்நிலையிலும் துணை இருப்போம். எப்போவும்.

    தலைவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
    - சுந்தர்

  6. Marees Kannan Marees Kannan says:

    சூப்பர் சுந்தர்…..

    அதுவும் இந்த டைம் - ல இந்த செய்தி ரெம்பவும் அருமை.

  7. Arun Arun says:

    சூப்பர் ஸ்டோரி சுந்தர் கீப் இட் up

  8. Shankar K R Shankar K R says:

    ஜி,

    பகவான் ரமண மகரிஷி கூறியது போல், "அவரவர் பிராப்த பிரகாரம் அதற்க்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டிவிப்பான். என்றும் நடவாது. என் முயற்சிகினும் நடவாது. நடப்பது எதுவோ அது திண்ணம். ஆகையால் மௌனமாய் இருக்கை நன்று"

    தலைவர் அதை அறிந்து தான் மௌனமாய் இருக்கிறார் போலும். கிடைத்த அரியாசனத்தில் தான் அமராமல், வேறு சில பல மனிதர்களை அமரவைத்து பார்த்தார், நன்மை செய்வார்கள் என்று. அவர்கள் அதை செய்யவில்லை. தன்னையும் தன் இனத்தையும் வளர்த்தார்கள், மக்களுக்கு ஏதும் செய்யவில்லை..

    அதே அரியாசனம் தலைவருக்கு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை… சுந்தர் ஜி…சரியான நேரத்தில் மிக அழகான தொகுப்பை வெளி இட்டு அசத்திவிட்டீர்கள். மிக்க நன்றி.

    அன்புடன்,

    சங்கர் கே ர

  9. Rajan Rajan says:

    சுந்தர் அருமையான கதை .
    //தலைவரை அந்த இடத்திலிருந்து அகற்ற இது வரை செய்யப்பட்ட சதிகள் எத்துணையோ. //
    //தலைவர் அதன் நிலையாமையை பற்றி நன்கு உணர்ந்திருக்கிறார். ஆனால் அச்சத்தோடு இல்லை. தன்னிலை உணர்ந்து எப்போதும் பணிவோடு இருக்கிறார். தவிர, இறை பக்தி என்ற தலைக்கவசம் அணிந்திருக்கிறார். அவரை எந்த கத்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது.//

    சுந்தர் ஜி , 100 % உண்மை. அது மட்டும் அல்ல இறை அருள் என்ற கவசத்துடன் சேர்த்து "அவருக்கு எதிராக செய்யப்படும் சதிகள் அந்த நல்லவரை ஒன்றும் செய்யாமல் இருக்க, அவர் மேல் அளவு கடந்த அன்பு கொண்ட நம் ( கோடான கோடி ரசிகர்களின்) பிரார்த்தனையும் நல்லெண்ணமும் கூட இன்னொரு கவசமாக கொண்டு பல கோடி இதயங்களில் ஆட்சி செய்யும் அரசர் நம் தலைவர்.

    waiting for more stories like this.

    —————————————————
    நன்றி ராஜன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    சிம்மாசனம் என்றில்லை…. நம் ஒவ்வொருவர் மீதும் இது போன்ற கத்தி தொங்குகிறது. ஆணவத்தினால் நாம் ஆட்டம்போடும் போது ஆண்டவன் அதை அவிழ்த்துவிடுவான்.

    இதை புரிந்து, என்றும் நல்லதே நினைக்க வேண்டும். நல்லதே செய்யவேண்டும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பிறருக்கு உபத்திரவம் செய்யாது இருக்கவேண்டும்.

    - சுந்தர்

  10. SADIQUE SADIQUE says:

    மிக அற்புதமான கதை (நிஜமாக கூட இருக்கலாம்??!!). அந்த ஓட்டு விஷயம் வெளி வந்தது நன்மைக்கே (இதன் மூலம் பல போலி முகங்களை தலைவர் கண்டு கொள்வார், நாமும் இத்தேர்தலில் அவர் நம்பிய கூட்டணி கட்சிக்கே வாக்களித்தோம் என்று பெருமைப்பட்டும் கொள்ளலாம்!) அரசியல் வேறு நட்பு வேறு… என்று சிலர் எப்பொழுதுதான் புரிந்து கொள்வரோ…??!! (உதாரணம்: பொ.ச. சிறப்பு காட்சி)

    ''''''''''''''''''''''''''''''''''''''''''''

    சாதிக் (மதுரை)

  11. Manikandan Bose Manikandan Bose says:

    Great Story.. Too good..

  12. tveraajesh tveraajesh says:

    Dear Sundar

    Fantastic value add story. Really I delighted and keep up the good work. Yes you are correct instead of giving only film news on rajni and it is apt to give this type of moral stories to think in deeper.

    Really I appreciate it and enjoyed it. Thank you providing us the valueable information to the group.

    Thank you

  13. B. Kannan B. Kannan says:

    அருமையான பதிவு சுந்தர்..

    //சிம்மாசனம் என்றில்லை…. நம் ஒவ்வொருவர் மீதும் இது போன்ற கத்தி தொங்குகிறது. ஆணவத்தினால் நாம் ஆட்டம்போடும் போது ஆண்டவன் அதை அவிழ்த்துவிடுவான்.

    இதை புரிந்து, என்றும் நல்லதே நினைக்க வேண்டும். நல்லதே செய்யவேண்டும். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பிறருக்கு உபத்திரவம் செய்யாது இருக்கவேண்டும்.

    - சுந்தர்//

    ஹாட்ஸ் ஆப்..

  14. Sudhagar Sudhagar says:

    Simply Superb!!! Awaiting next one…

  15. **CHITTI** **CHITTI** says:

    My Dear Humane Rajni Aficionados,

    Coooooooool………..

    The Story is very opt for our Thalaivar's political entry. And also as Sundarji says,
    It might be correlated to the others who don't know what they are doing just because they are having all - will be punished for sure at the right moments.
    ***
    The point here we try to understand is,
    How well the story is related to SUPER STAR……
    Can anyone tell me???????
    .
    .
    .
    .
    As Sundarji said that, perhaps many would try to make Rajni get out of the SUPER STAR chair…
    Every one of them may be thinking/asking as though being Super Star is very great - you can attain craze, mass, fame, money, huge following fan base and what else you need more????/

    but the reason is not like that.. somewhere i read that…..
    "If you ask god for being as Rajnikant for one day… you will come to know the real truth of how much difficulty in being as Rajnikanth…."
    ***
    These bloody politicians are wanting him to keep him with them always wherever they go.
    And actors – selfish and those-who-could not-attain-name as rajnikanth but their origin as Tamil Nadu are bringing our Demi-god as the key of issue like Karnataka Cauvery water supply, few other major issues.
    ***
    If he says something - people who against him would dig out the words what he said and somehow find the ways to give a new perfect wrong meaning to his words and condemning him.
    If he doesn't says anything - that bloody rascals would make it a big issue as though since he didn't raise his voice and doing so only, the issues are not getting solved.
    ***
    few directors also try to make fun of him especially/mostly in TN only.
    ***
    And who else - of course our fans toooo..
    sorry, sorry - in the name of fans, some stupid guys wanting him to do something like why he didn't support this movement, till now why he didn't enter into politics, how can he act and mint money with us without doing any good things to us.
    ***
    - yes!!!
    of course, he too would/might be having both positive side as well as dark side.
    Why not he should be…
    After all, he is also human being only!!!!!
    Please try to understand him to the max……
    he is one of rare persons as of now who is really caring about his fans, his people (meaning Indians - why I am saying this - people will come and say he belongs to Karnataka/Maharashtra - If he is so, why damn he has to live here (TN) - It is only for us - please understand)……..
    "என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா"…
    - இதற்கு பதிலா சொல்லுங்கையா…….
    *******
    சிட்டியை(எந்திரன்) புரிந்து கொள்ள நினைக்கும் அவரின் உண்மையான ரசிகன் (அவரின் பாஷையில் அவரின் உயிர்)
    *******
    DOT.
    **சிட்டி**.

  16. Anonymous says:

    சூப்பர் கதை அண்ணா!!!!! தலைவர் பாபா படத்தில் சொன்னதை போல் ஒரு நாட்டை ஆள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல….

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates