You Are Here: Home » Featured, Moral Stories » “பழிக்கு பழி வாங்கணும் சாமி…” சீடனின் குமுறலும், குருவின் தீர்வும்!

நமது கதை தொகுப்பில் அடுத்த கதை. இதில் சிறப்பு என்னவென்றால், இங்கு இடம் பெற்றிருக்கும் ஓவியம் நமக்காக வரையப்பட்டது.

நான் முன்பே கூறியபடி, ஒரு ரஜினி ரசிகராக உங்கள் ரசனைக்கு இந்த கதை நல்ல தீனி போடும் என்றும் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புகிறேன். - சுந்தர்

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.

சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செடுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் - நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றார்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை செகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலகத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்…  சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வபோது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்னை உருளைக்கிழங்கில்லை. கோணிப்பை. கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே, உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. உனக்கு துன்பம் இழைத்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான். நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூட என அந்தச் சீடன் புரிந்து கொள்ளச் சற்று நேரமாகியது.

[நன்றி : புதிய தலைமுறை அக்டோபர் 2009]

[Illustration Copyright : OnlySuperstar.com]

———————————————————————————
நிஜத்திலும் முன்பு இதே போன்று உருளைக்கிழங்கு மூட்டையோடு அலைந்தவன் நான். அப்போது என்னை பார்த்து பரிதாப்பட்ட நண்பர் ஒருவர், “புதிய தலைமுறையில் இந்த வாரம் வந்திருக்கும் கதை உங்களுக்காகத் தான். தயவு செய்து அதை படித்து நடைமுறையில் பின்பற்றுங்கள்!” என்று கேட்டுக்கொண்டார்.

கதையை படித்த பின்பு தான், நான் எத்துனை பெரிய தவறை செய்துகொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அன்று தூக்கி எறிந்த மூட்டை தான். அதற்கு பிறகு தீயவைகளை பற்றி யோசிக்க கூட நேரமில்லாது, பாசிட்டிவ்வான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்’. குறள் 158

பொருள் : ஆணவத்தினால் தங்களுக்கு தீமை செய்தவர்களை தங்கள் பொறுமையால் வெற்றி கொள்ளவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தவறு செய்தால் - ஒரு தவறான முடிவை எடுத்தால் - அதை சுட்டிக்காட்டி என்னை நல்வழிபடுத்தக்கூடியவர்கள் தான் என் நண்பர்களாக இருக்கிறார்கள். நான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு, என்னை குப்புறத் தள்ளுபவர்கள் அல்ல. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இறைவனுக்கு தான் அதற்கு நன்றி சொல்லவேண்டும்.

அடுத்த முறை, இன்னுமொரு சுவாரஸ்யமான கதையோடு உங்களை சந்திக்கிறேன்…!
———————————————————————————

[END]

29 Responses to ““பழிக்கு பழி வாங்கணும் சாமி…” சீடனின் குமுறலும், குருவின் தீர்வும்!”

  1. dr suneel dr suneel says:

    எளிய நடையில் சீரிய கருத்தை சொல்லும் அற்புத கதை .படம் வரைந்தவருக்கு நமது பாராட்டு :)

  2. Anonymous says:

    கடமையை செய் ……பலனை எதிர்பார்…..

    -

    நல்லதொரு சிந்தனை சுந்தர் அண்ணா ….தலைவரின் வாழ்விற்கு மிகவும் பொருத்தமான கதை தான்……

    -

    இந்த தளம் கண்டு நான் மகிழும் விசயங்கள் மூன்று:

    -

    1 . தலைவரைப் பற்றி தெரிந்துகொண்டது / புரிந்து கொண்டது

    2 . நல்ல நண்பர்கள் கிடைத்தது

    3 . முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்திருப்பது

    -

    தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் நானும் ஒரு துளி என்பதில் பெருமை அடைகிறேன்

    ..

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  3. harisivaji harisivaji says:

    எத்ரிகளை நண்பர்களாக மாற்றும் சக்தி பொறுமைக்கும் அமைதிக்கும் தான் உண்டு …அதை தான் அவர் கடைபிடிக்கிறார் நினைக்கிறன்
    சுந்தர் இந்த படங்கள் அருமை.

  4. Manikandan Bose Manikandan Bose says:

    Great Story…

    Thanks for sharing Sundarji..

  5. Prasanna Kumar Prasanna Kumar says:

    அருமையான கதை நன்றி சுந்தர் சார் ……..!!!!!

  6. Ganesan Ganesan says:

    ஹலோ சுந்தர்,

    அருமையான வாழ்வியல் அர்த்தம் கொண்ட கதை….

    Keep posting this kind of stories….

    Who draw this picture…excellent….

    Best Regards,

    M.Ganesan

    ————————————-
    He is Mr.Raja, my friend and an artist.
    - Sundar

  7. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    அருமையான கதை. நல்ல நீதி. படம் வரைந்தவங்க பேர் போட்ருக்கலாமேண்ணா? ரொம்ப அழகா இருக்கு.

    ——————————————-
    I just got his consent to disclose his name. He is Mr.Raja, a commercial artist.
    Will carry his name in next illutration onwards.
    - Sundar

  8. murugan murugan says:

    அருமையான மற்றும் அறிவு பூர்வமான கதை - நன்றி சுந்தர்ஜி

  9. Jegan Jegan says:

    Good story. thank you sir. Expecting more such stories.

  10. arun slm arun slm says:

    மிக அருமையான கதை வாழ்த்துக்கள் !

    *மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.

  11. B. Kannan B. Kannan says:

    அருமையான கதை.. அருமையான கதைக்கேற்ற ஓவியம்..

    Keep posting these kind of stories சுந்தர்..

  12. G.RAAMANAND G.RAAMANAND says:

    அது தான் நம்ம தலைவர் செஞ்சாரு. எவ்வளவு பேரு அவர் முதுகில் குத்தினாங்க. அவரை பத்தி தப்பா பேசினாங்க.அவங்களை எல்லாம் தலைவர் மன்னிசிட்டாரே.தலைவர் உண்மையிலே தங்கம்.

  13. Ananth Ananth says:

    Nice Story. The artist has a lot of talent. Good Job.

    Above all, your acceptance about your self and expressing in a public forum is great. Not everyone can do that!.

  14. ganesh ganesh says:

    நல்ல கதை நல்ல நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதற்கு இந்த வெப்சைட் ஒரு உதாரணம் வாழ்க வளமுடன்

  15. Sudhagar_US Sudhagar_US says:

    அருமையான நீதி கதை. ஏற்கனவே நாம் தலைவர் வாழும் வாழ்க்கை முறை மூலம் படித்து இருந்தாலும் உங்களின் எழுத்து வடிவில் படிப்பதில் ஆனந்தம்.
    Wonderful and opt picture for this moral story.
    Pls convey our sincere thanks to Mr.Raja

  16. harisivaji harisivaji says:

    Mrs Krishnan வந்து மிரட்டினா தான் வேலையே நடக்குது

  17. Rajkumar Rajkumar says:

    Sundar you are you are taking this site step by step up side.I proud i am also join this site.

  18. mettustreet k.muthu mettustreet k.muthu says:

    அற்புதமானக் கதை, அருமையான ஓவியம், நன்றி சுந்தர்ஜி…….., நன்றி ராஜா !

  19. ஈ. ரா ஈ. ரா says:

    ஜி,

    நல்ல கதை. மிக அருமையான படம்.

    ———————————

    நாம் எல்லோருமே எதோ ஒரு வகையில் ஏதாவது தவறுகளை செய்கிறோம். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படுகிறோம்.

    ———————————-

    எல்லா மனிதருக்கும் வெவ்வேறு குணங்கள் உள்ளது. பிறர் மீது கோபப்பட்டு நாம் உருளையில் பெயர் எழுதுகிறோம். அதே சமயம் நமது பெயர் வேறு பலரின் உருளைக்கிழங்கில் செதுக்கப்பட்டு சுமக்கப்படுகிறது.

    ——————————————————-

    இதற்கு ஒரே தீர்வு, முனிவர் சொன்னதைப் போல எல்லோருமே கோணியை தூக்கி எறிவதே.

    ——————————————-

    ஆழமான கருத்து. படிப்பதை விட, பின்பற்றுவதில்தான் இதன் வெற்றி இருக்கிறது..

    அன்புடன்

    ஈ. ரா

  20. Balaji_Dubai Balaji_Dubai says:

    Excellent & Nice story…Keep it up.

    Thanks to Mr.Sundarji & Mr.Raja such a great job.

    Cheers,

    Balaji .V

  21. maalan maalan says:

    நானும் செதுக்க ஆரம்பித்தால் மூட்டையை தூக்க முடியாது. அந்த அளவுக்கு பயல்கள் இருக்கிறார்கள். அதனால் அடைந்த மன துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இது கதை அல்ல. போதனை. இந்த சின்ன போதனை வாழ்க்கையை மாற்றிபோட்டு விடும் என்பது தான் உண்மை. இதுமாதரி நிறைய போதனைகளை எதிர்பார்கிறேன்.

    ———————————-
    இது போதனையோ உபதேசமோ அல்ல. என்னை பாதித்த, எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவு தான்.
    - சுந்தர்

  22. k raja k raja says:

    ஓவியத்திற்கு பாராட்டு தெரிவித்த அனைவர்க்கும் நன்றி .. தொடர்ந்து ஓவியங்கள் மூலம் உங்களை சந்திக்கிறேன் .
    நன்றி
    ராஜா கே

    —————————————
    Welcome sir.
    - Sundar

  23. Mrs. Krishnan Mrs. Krishnan says:

    @ ஈரா: /பிறர் மீது கோபப்பட்டு நாம்

    உருளையில் பெயர்

    எழுதுகிறோம் . அதே சமயம்

    நமது பெயர் வேறு பலரின்

    உருளைக்கிழங்கில்

    செதுக்கப்பட்டு சுமக்கப்படுகிறது./

    -

    பெரிதும் சிந்திக்க வைத்த வரிகள். நன்றி சார்.

  24. Nandakumar Nandakumar says:

    Nice story…

    Die hard Thalaivar fan

    Nanda

  25. Siva Siva says:

    Xcellent story…Great picture

  26. alagan.rajkumar alagan.rajkumar says:

    டியர் சுந்தர் நான் எல்லாம் சொன்னா கேட்க்க மாட்டீங்க .புக் பார்த்து தான் தெரியனும் .ஆனாலும் திருக்குறள் சூப்பர் .

  27. ILHAM ILHAM says:

    கதை நல்லம் ஆனால் இதை விட நல்ல கதைகல் எனக்கு தெரியும் ?

  28. Mike Mike says:

    அருமையான கதை. இதன் படி நடந்தால் உண்மையிலேயே வாழ்க்கையில் வுயரலாம்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates