









You Are Here: Home » Featured, Moral Stories » ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு? குட்டிக்கதை!
இந்தக் கதையை நண்பர் மணிகண்டன் போஸ் சில வாரங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் (E-mail Forward) நமக்கு அனுப்பியிருந்தார் . உரிய நேரம் வரும்போது வெளியிடலாம் என்று எண்ணியிருந்தேன். இதை விட பொருத்தமான நேரம் கிடைக்காது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நமது தளத்திற்காக வரையப்பட்ட பிரத்யேக ஓவியத்துடன் இதோ உங்கள் பார்வைக்கு…
ஆண்டவன் போடும் கணக்கு!
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்ல்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போது. யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.
அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான்.
முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.
சற்று நிறம் கழித்து ஒரு ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.
சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.
இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.
அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.
இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினார்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தான். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.
“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”
இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான். இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.
சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.
“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.
அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
சராசரி மனிதர்களுக்கே இப்படி இறைவன் கருணையோடு அனைத்தையும் பார்க்கிறான் என்றால், ‘நான்’ என்ற எண்ணமோ கர்வமோ இன்றி, இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து வாழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு…?
ராணாவின் கோலாகல துவக்கத்துக்கும், பின்னர் நடைபெற்ற சில எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும். அதுவும் நன்மைக்காகவே இருக்கும். ஏனெனில்…. நல்லவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும்!
————————————————-
Learn how God works
Once there was a sweeper in the Well Known temple and he was very sincere and devoted. Every time he saw thousands of devotees coming to take darshan of the Lord, he thought that the Lord is standing all the time and giving darshan and He must be feeling very tired.
So one day very innocently he asked the Lord whether he can take the place of the Lord for a day so that the Lord can have some relief and rest. The Deity of Temple replied, “I do not mind taking a break. I will transform you like Myself, but you must do one thing. You must just stand here like Me, smile at everyone and just give benedictions. Do not interfere with anything and do not say anything. Remember you are the deity and you just have faith that I have a master plan for everything.” The sweeper agreed to this.
The next day the sweeper took the position of the deity and a rich man came and prayed to the Lord. He offered a nice donation and prayed that his business should be prosperous. While going, the rich man inadvertently left his wallet full of money right there. Now the sweeper in the form of deity could not call him and so he decided to control himself and keep quiet.
Just then a poor man came and he put one coin in the Hundi and said that it was all he could afford and he prayed to the Lord that he should continue to be engaged in the Lord’s service. He also said that his family was in dire need of some basic needs but he left it to the good hands of the Lord to give some solution. When he opened his eyes, he saw the wallet left by the rich man. The poor man thanked the Lord for His kindness and took the wallet very innocently. The sweeper in the form of the Deity could not say anything and he had to just keep smiling.
At that point a sailor walked in. He prayed for his safe journey as he was going on a long trip. Just then the rich man came with the police and said that somebody has stolen his wallet and seeing the sailor there, he asked the police to arrest him thinking that he might have taken it. Now the sweeper in the form of Deity wanted to say that the sailor is not the thief and he could not say and he was greatly frustrated. The sailor looked at the Lord and asked why he an innocent person is being punished. The rich man looked at the Lord and thanked Him for finding the thief. The sweeper in the deity form could no more tolerate and he thought that even if the real Lord had been here, he would have definitely interfered and hence he started speaking and said that the sailor is not the thief but it was the poor man who took away the wallet. The rich man was very thankful as also the sailor.
In the night, the real Lord came and He asked the sweeper how the day was. The sweeper said, “I thought it would be easy, but now I know that Your days are not easy, but I did one good thing.” Then he explained the whole episode to the Lord. The Lord became very upset on hearing this whereas the sweeper thought the Lord would appreciate him for the good deed done.
The Lord asked, “Why did you not just stick to the plan? You had no faith in Me. Do you think that I do not understand the hearts of all those who come here? All the donation which the rich man gave was all stolen money and it is only a fraction of what he really has and he wants Me to reciprocate unlimitedly. The single coin offered by the poor man was the last coin he was having and he gave it to Me out of faith. The sailor might not have done anything wrong, but if the sailor were to go in the ship that night he was about to die because of bad weather and instead if he is arrested he would be in the jail and he would have been saved form a greater calamity. The wallet should go to the poor man because he will use it in My service. I was going to reduce the rich man’s karma also by doing this and save the sailor also. But you canceled everything because you thought you know My plan and you made your own plans.”
God has plans and justice for everyone….we just have to have patience…
[END]
Our earlier stories from our archives…
“பழிக்கு பழி வாங்கணும் சாமி…” சீடனின் குமுறலும், குருவின் தீர்வும்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10947
சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10870
விதியை வென்ற மதி!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=8571
vannakkam sundar,
u never posted my comments………….
don't think i'm against thalaivar……..
i want to expose the rasigar feelings…………thatz all
this type of postings wat the common people like……..
please post this type of stories once in a month…….
very good short story….
u peoples always praise about the thalaivar……..
i need to stand in way of truth………….
we should pinpoint the wrong things of the thalaivar…
talaivar wants to help others………
this site should project thalaivar as well as awakening stories…
very good sundar………..
Regards
Sakthivel.D.
————————————————
Sakthivel, be positive always. Then you will see the whole world positive.
You can't find reasons for each and every action of our beloved Superstar. But whatever decision he takes, we can trust 100% it has been taken on selfless basis.
I admit of course he too makes some mistakes — very rarely. But he is such a person who admits them and corrects them once it reaches his heart and mind. He has such a good friends and aides who takes care of such a task.
We as a fans site, just wanted to follow his priniciples in real life, upto the limit and means we can, without affecting others.
Thanks for your good words about the rest.
- Sundar
Dear Sundarji. What a beautiful story. Thanks to you and Mr. Manikandan who has sent this to you. I posted this in my blog without your permission by giving due credit to you. I hope you will not mind it as it will be useful for many of our friends who are suffering in life.
————————-
No probs. thanks. I am honoured.
- Sundar
நல்ல அருமையான கதை அண்ணா…..என்னுள் இருந்த சில சந்தேகங்களுக்கு/ புதிர்களுக்கு விடை கிடைத்ததைப் போல இருக்கிறது……….இந்த மாதிரி கதைகள் எங்களைப் போன்றவர்களுக்கு யோசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது……நன்றி அண்ணா, நன்றி மணிகண்டன் போஸ் அண்ணா………!
-
ஓவியம் மிகவும் அருமை…!
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
Wonderful Story,
I will share this with my employees as well.
Thanks to you sundar and Manikandan for sharing this.
—————————-
Thanks and Welcome Rajesh.
- Sundar
சுந்தர்ஜி மிகவும் அருமையான கதை. இறைவனுக்கு பல இடங்களில் 'ன்' பதிலாக 'ர்' என்று குறிப்பிட்டு இருக்கலாம்.
——————————————-
இறைவனை நமக்கு மிகவும் உரிமையுள்ளவனாக பார்ப்பதால், அப்படி எழுத வரவில்லை என்று நினைக்கிறேன்.
- சுந்தர்
அருமையான கருத்தாழம் பொதிந்த நீதிக்கதை. மிக அழகாக, தெளிவாக மொழிபெயர்த்து உள்ளீர்கள் அண்ணா. இந்த கதையில் வரும் அந்த துப்புரவு தொழிலாளி போல்தான் நாம் பல விசயங்களில் அவசரப்பட்டு, சந்தேகப்பட்டு நமக்கு நாமே தீங்கு இழைத்து கொள்கிறோம். "கடவுளின் சூட்சுமத்தை மிக தெளிவாக புரிய வைத்தீர்கள்!" பொறுத்தார் பூமி ஆழ்வார். மணிகண்டன் அவர்களுக்கும் எனது நன்றி.
'''''''''''''''''''''''''''''''''''''''
சாதிக் (மதுரை)
சூப்பர் கதை!!! நமது ஒவ்வொரு நல்லது கேட்டதுக்கும் காரணம் காரியம் இறைவன் கண்டிப்பாக வைத்து இருப்பார்!!
super story…it will help for me wen am sad and struggle in life….
thanks sundar and manikandan..
except more stories like this plzzzzzzz
மிகவும் நன்றி சுந்தர்ஜி அவர்களே..
மிக அருமையாக மொழி பெயர்ப்பு.
கருத்து கூறிய அனைவருக்கும் என் நன்றி.
இந்த கதையை எனக்கு அனுப்பிய என் தம்பி கனகராஜுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அற்புதம்…….
என் தந்தை மறைந்த இந்த நாட்களில் என் உறவினர்கள் செய்த நாடகங்களால் சோர்வுற்று இருந்த எனக்கு இந்த கதை புதிய தெம்பு கொடுத்திருக்கிறது…நன்றி சுந்தர் ஜி….
மிக்க நன்றி….
இந்த நீதி கதையை வெளீயிட இதை விட சரியான வேறு சந்தர்பம் இருக்குமா(?) எனக்கு தெரியவில்லை…. ஒட்டுமொத்த சந்தோசமும் கரைபுரண்டோடிய ராணா துவக்க நாள் அன்று தலைவரின் சுகவீனம் மனதை ரணபடுத்தியது என்ன தான் நமக்குள் ஆறுதல் சொல்லி கொண்டாலும் மனதில் நிம்மதி இல்லை ஆனால் இந்த நீதிகதையை படித்தவுடன் அப்படி ஒரு மனநிறைவும், நிம்மதியும் கிடைத்தது.
இந்த ஒரு விசயத்தில் மட்டும் இல்லாமல் நடந்து முடிந்த அனைத்து விசயங்களுக்கும் அற்புதமான விளக்கம் கிடைத்தது போல் உள்ளது.
ராஜாவின் ஓவியம் அருமை என்றால் நீங்கள் இணைத்த தலைவரின் ராணா பூஜை புகைப்படம் சூப்பரோ சூப்பர்…..!!!
நானும் ரொம்ப நாளா ஒரு tag லைன் கிடைக்கும் தேடிட்கிட் இருந்தேன் இணைக்கு கிடைத்துவிட்டது
‘எல்லாம் நமது நன்மைக்கே’ …..இதான் நமக்கு
நம்ம விஜய் ஆனந்த் மற்றும் வசி கண்ணன் போன்ற நண்பர்கள் போல use பண்ற tag போல
இவ்வுலகில் நடக்கும் ஒரு ஒரு நிகழ்விற்கும் ஒரு அர்த்தம் காரணம் தொடர்பு உண்டு ….
‘எல்லாம் நமது நன்மைக்கே’
ஹரி.சிவாஜி
thod
Sundar,
Is this true? I guess we fans should pray more for our OSS!
http://www.sify.com/news/rajni-hospitalised-for-b...
Regards
Swami.
Sundar,
There is a flash news that thalaivar is hospitalized again… we are very worried… pls give updates
"Superstar second time admitted in same mylapore isabella hospital and now he is alright" doctors confirmed. Only thing he need right now is rest. We pray to god for soon recovery.
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்..
REAL லிங்ஸ் இ லைக் இட் .. THANKS SUNDAR ANNA..
Dear Sundar Ji,
With current happenings in my life,I think GOD has conveyed his message through YOUR post.
Thanks a million!!!
wat happened to thalaivar how is he now
sundar sir,Looks like thalaivar once again hospitalized!!! Actually what is the problem?I am very worried…Please write a post about his health condition for the fans like us…
தலைவர் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை பிராத்திப்போம்.
தலைவர் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு? அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாகச் செய்வதே மேல்
Dear Friends,
I am regularly prayed about thalaivar's health.
Pls pray for Thalaivar's Health condition to all fans.
Surely he will get recover soon…
Pls don't worry, God with us.
Cheers,
Balaji .V
Hi Sundar,
I am a regular follower of our website. And i am very pleased and impressed with the work you are doing. I liked the story very much. It is very much true. I am going to share this with all my friends, with my cousins, nephew and niece. It is a very good story.
And My prayers as well to the Almighty GOD. Thalaivar should recover fast.
Regards,
Baskar.S
Surely RANA will get up soon & will create wonderful records…
Excellent story boss
ஆழ்ந்து சித்திக்க தூண்டும் அற்புதமான கதை
தலைவர் விரைவில் நலம் பெறுவார்
சாதனை பல புரிவார்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
அருமையான பதிவு அதுவும் இந்தமாதிரி நேரத்தில…
நன்றி சுந்தர் மற்றும் மணிகண்டன்
நல்ல கிளைமாக்ஸ்……….சூப்பர்