You Are Here: Home » Featured, Moral Stories » நல்லவர்களுக்கு துன்பம் ஏன்?

லைவர் உடல் நலம் குறித்த நல்ல விஷயங்களும் மற்றும் தமிழகம் & உலகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர்களின் பிரார்த்தனை விபரங்களும் விரைவில் தனித் தனியாக வரவிருக்கின்றன. அதற்க்கு முன், இந்த பதிவை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நமது அன்பிற்குரிய தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இப்படி உடல்நலம் பாதிக்கப்படுவார் என்றோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்றோ கனவிலும் நாம் நினைத்திருக்க முடியாது. நமக்கு  தெரிந்து இத்துனை ஆண்டுகாலம் உடல் நலம் குன்றி ரஜினி அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாக கேள்விப்பட்டதேயில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில், தலைவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து கண்ணீர் வடிக்காத ரசிகரே இல்லை எனலாம்.

யோகா, தியானம், நல்ல சிந்தனை, என அவரை விட உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர் யாரும் இல்லை… அப்படியிருக்கும் போது அவரது உடல் நலத்தை இந்தளவு பாதித்தது எது? புகைப் பழக்கம் தான் காரணம் என்றால், அவரை விட அதிகமாக சிகரெட் புகைத்தவர்கள், வயதில் இன்னும் மூத்த ஆரோக்கியமாக இருப்பவர்களை என்னால் காட்டமுடியும். அப்படியிருக்க, இப்படி ஆனது ஏன்?

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தலைவரைப் பற்றி கூறியிருந்ததை கூட பார்த்தோம். “எனக்கு தெரிந்து ஒரு எறும்பை கூட அவர் மிதித்ததில்லை. அதை கூட பாவம் என்று நினைப்பவர் அவர். இதுவரை அவரது நாவில் தவறான ஒரு விஷயம் வந்ததில்லை. தன்னால் இயன்றவரை அனைவருக்கும் நல்லதையே செய்திருக்கிறார். செய்துவருகிறார். அவரை பொறுத்தவரை அவருக்கு வேண்டாதவர்கள் என்றே யாரும் கிடையாது.” என்றார்.

உண்மை தானே… இத்தனை நல்லவரான சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு நிலை? இது பற்றி அவரது எண்ணவோட்டம் எப்படி இருக்கும்?

எல்லாவற்றுக்கும் காரணம் கர்மா தான். (வினைப் பயன்). சூப்பர் ஸ்டார் அவர்கள் ‘கர்மா’ மீது ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் என்பது நாம் அறிந்ததே.

கர்மா என்றால் என்ன?

நமது முந்தைய செயல்களின் விளைவால் (பெரும்பாலும் பூர்வஜென்மத்தில் ) தற்போது நமக்கு ஏற்படும் நிகழ்வுகளே ‘கர்மா’ எனப்படுவது. (இதைத் தான் அறிவியலும் “Every action has equal and opposite reaction” என்று கூறுகிறது.)

கர்மா மிகவும் வலிமையானது. அதிலிருந்து யாராலும் தப்ப இயலாது. கடவுள் நம்பிக்கை தீவிரமாக உடையவர்களுக்கு கர்மாவின் கடினம் தெரியாது. அல்லது அது ஏற்படுத்தும் தீய பலன்களின் தீவிரம் குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகவும் கடுமையாக இருக்கும்.

கர்மாவை பற்றி சரியாக புரிந்துகொள்ள இங்கு நமது வாசகர் திரு.மகேஷ் அவரால் சமீபத்தில் நமது தளத்தின் கமெண்ட் பகுதியில் அளித்த கதை ஒன்றை நமது பிரத்யேக ஓவியத்துடன் தருகிறேன். கர்மாவையும் கடவுள் அருளையும் இதை விட எளிமையாக யாராலும் விளக்க முடியாது.

கர்ம வினையும் கடவுள் நம்பிக்கையும்!

- by மகேஷ்

30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை ! 30 வருடம் வீழ்ந்தவரும் இல்லை . -ஜோதிடத்தில் சனி ஒரு சுற்று வர 30 வருடங்கள் ஆகும். அதனால் எந்த ராசி ஆக இருபின்னும் 7 1/2 சனியின் பாதிபையோ அல்லது திசை மாற்றத்தையோ சந்தித்தே ஆக வேண்டும் . இது அனைவருக்கும் பொருந்தும் விதி. இதையே உடைத்து தூள் செய்தவர் நம் தலைவர். சரிதரத்தில் 30 வருடம் மேலாக உச்சத்தில் இருந்தவர் எவரேனும் உண்டா??. அது எப்படி சாத்தியம் ஆகிற்று என்றால் , தலைவருக்கு கஷ்டங்கள் எல்லாம் பட்டும் படாமலும் (ஒகேனக்கல், பாபா movie,குசேலன் movie etc.. ) நன்மைகள் எல்லாம் பல மடங்கு பெருகியும் ஆண்டவன் கருணையில் கிடைகின்றன.

ஒரு சிறு கதை உண்டு. ராமு , சோமு என இரு நண்பர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். ராமு கடவுள் மேல் அளவற்ற அன்பு உடையவன்.சோமு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவன்.ராமு கோவிலுக்குள் சென்று கடவுளை மனமார வேண்டுகின்றான். சோமு கோவிலுக்கு வெளியே நின்று கொண்டு ,காலால் மணலை தள்ளி விளையாண்டு கொண்டுள்ளான்.ராமு கடவுளை நீண்ட நேரம் கும்பிட்டு விட்டு திரும்பும்போது ஆலய மணியில் இடித்து கொண்டு , நெற்றியில் சிறிய அடி பட்டு ,சிறிய ரத்த காயத்துடன் திரும்புகிறான்.அங்கே சோமுவோ மணலில் இருந்து ஒரு நூறு ரூபாயை கண்டு எடுகின்றான். ரத்த காயத்துடன் திரும்பிய தன் நண்பனை பார்த்து சிரித்த சோமு ,” பார்த்தாயா ! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 100 ரூபாய் ! ” என சொல்லி சிரிகின்றான் .

இந்த காட்சியை மேலே இருந்தபடி பார்த்துகொண்டு இருந்த பார்வதி சிவனிடம் சோமுவின் கேலியை சுட்டி காட்டி சிவனிடம் கேட்கிறார் .சிவன் புன்முறுவலுடன் சொல்கிறார் ,”பார்வதி ! கர்ம வினைப்படி , இப்பொழுது ராமுவிற்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம்.அனால் அவன் நானே கதி என நல்வழியில் வாழ்ந்ததால் , அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று !! சோமுவிற்கோ அவன் விதிப்படி பெரிய அதிர்ஷ்டமான நேரமிது. பெரிய புதையலையே கிடைக்க வேண்டிய தருணம் , அனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் நூறு ரூபாயோடு முடிந்தது ” என கூறினார்.

நம் அன்பு தலைவர் ராமுவா அல்லது சோமுவா என கூறவும் வேண்டுமா? !!
இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனிடம் நம்மை அர்பணித்துவிட்டால் நமது கர்மாவை நாம் அனுபவிக்கும்போது அதன் கடுமை தெரியாமல் அவன் பார்த்துக்கொள்வான்.

இதைதான் சூப்பர் ஸ்டார் தமது 1995 தூர்தர்ஷன் பேட்டியில் கூறியிருப்பார்.

கேள்வி : “கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது பற்றி?”

சூப்பர் ஸ்டார் ரஜினி :
“காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கும் பாதையில் நடப்பது போல அது!” என்று.

—————————————————————-
Our earlier stories from our archives…
ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு? குட்டிக்கதை!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11028

“பழிக்கு பழி வாங்கணும் சாமி…” சீடனின் குமுறலும், குருவின் தீர்வும்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10947

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10870

விதியை வென்ற மதி!

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=8571
—————————————————————-
[END]

23 Responses to “நல்லவர்களுக்கு துன்பம் ஏன்?”

 1. vasanth vasanth says:

  சுந்தர் உங்களிடம் இருந்து தலைவரை பற்றி நல்ல செய்தி வரும் என்று கம்புட்டேர் ஒவ்வோர் 1 மனித்தியலயமும் பார்துகொண்டுள்ளேன் ,கண்டிப்பா இந்த கெட்ட சமுதாயத்திற்கு முன் இன்னும் சாதிப்பார் .

  ———————————-
  Sure. Check my tweets meanwhile
  http://twitter.com/thalaivarfans
  - Sundar

 2. Anonymous says:

  அருமையான பதிவு. நன்றி திரு. மகேஷ் அவர்களே.

  ——————————

  மாரீஸ் கண்ணன்

 3. Bupesh Bupesh says:

  நல்ல பதிவு, கச்சிதமான கதை

  ஆறுதலாக இருந்தது

  நன்றி

  வாழ்க தலைவர்

 4. ravee ravee says:

  thamizhnaattil matrum alla ….ulagathil endha hero-kkachum …avar rasigargal …alathu ..matravar …herovudaiya characterai patri pesiyathu unada ….endral theriyavilai….thalaivar patri mattum thaan naam karvamaaga sollikolla mudiyum……thalaivar vaazhga

 5. G.Udhay (RAJINIROX) G.Udhay (RAJINIROX) says:

  அழகான கதை .. அருமையான பதிவு … நன்றி sundar anna …

  THALAIVAR VIRAIVIL VEEDU THIRUMBUVAAR..

  THALAIVAR KAAGA IRAIVANAI PRARTHIPPOAM..

  NALATHEY NINAIPOAM.. NALATHEY NADAKKUM…

  Endrum Thalaivar Valiyil.. G.Udhay..

 6. Vijay Vijay says:

  Hi Sundar,
  Can you please keep us updated on the health status of our great humar being? i am worried after talking to a friend in india. There are lot of stories spread. i am getting worried as i hear them.
  My first ever movie was thalaivar movie — from then on i got addicted to the great human being and he will be forever my role model and kind of a guru. Please keep us posted . May god be with him and get him back with a bang in RANA.

  —————————————-
  Can you ask your friend to call me…?
  I will explain it right.
  - Sundar

 7. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  தலைவர் மிக விரல் இந்த உடல் நலப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார்……..,

  நன்றி மகேஷ்……..,

  நன்றி சுந்தர்ஜி……..,

  நல்லதே நினைப்போம்……..,

  நல்லதே நடக்கும் !

 8. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  தலைவர் மிக விரைவில் இந்த உடல் நலப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவார்……..,

  நம் தலைவர் நலம் பெற நாங்களும் எங்கள் திருவொற்றியூர் ரசிகர்கள் சார்பாக நாளை பிரசித்திப் பெற்ற அருள்மிகு வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் செய்யவிருக்கிறோம்……..,

  நல்லதே நினைப்போம்……..,

  நல்லதே நடக்கும் !

 9. Santhosh Santhosh says:

  bollywood wishing our thaliavar for his speedy recovry.

  http://www.ndtv.com/album/listing/entertainment/w...

 10. jai jai says:

  SUPER sundar ….YOU are a boon to people like us who are away from India …..but our hearts are in porur ramachandra now …. The story is very apt for this situation and you are very right in explaning about the KARMA ……..Thalaivar will deifnitely get well and discharged this week . because of his present pure karms ….making all of us happy …..

 11. harisivaji harisivaji says:

  பொருத்தமான கதை

  எல்ல்லாம் நன்மைக்கே

 12. ARAVINDHAN.G ARAVINDHAN.G says:

  nandri sundarji, intha kathai en manadhirkku oru nallunarvai aerpeduthiyullathu. kandippaaga nam iniya thalaivar intha thunbathilirunthu meendu varuvaar. kadavul nallaasiyudan melum 30 varudam thiraiththuraiyum , nam manadhayum aalwaar. ithu sathyam

 13. S.Vijay S.Vijay says:

  Sundar,

  Naan antha Vijay illai :)

 14. Mohanraj Mohanraj says:

  நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் …………..

  கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்…….

  தலைவர் மிக விரைவில் குணமாகுவார்…..

  ஆண்டவனை பிராத்திப்போம் …………

  நல்ல பதிவு, நன்றி மகேஷ்……..,

  நன்றி சுந்தர்ஜி……..,

  நல்லதே நினைப்போம்……..,

  நல்லதே நடக்கும் !

  ஆறுதலாக இருந்தது

  நன்றி

  வாழ்க தலைவர்

  என்றும் தலைவர் வழியில்

  by mohanraj madurai …………………..

 15. prabhu prabhu says:

  Once again rumours are spreading today in coimbatore… already 2 to 3 members asked me… ida paraparavana enna seiyarudhune theriyala?

  ————————————————-
  ஊர்வாயை மூட உலை மூடி இல்லை! ஆனால், உங்கள் வாயை மூட உங்களால் முடியும்!!
  - சுந்தர்

 16. ARAVINDHAN.G ARAVINDHAN.G says:

  hi sundarji, if u don't mind can u pls give me ur emailid or mob no. actually am from trivandrum, kerala, so am not getting updates of thalaivar at times thatswhy am little bit tensed. So kindly help me pls.

  ————————
  SMS me your name and mobile number.
  - Sundar
  9840169215

 17. Anonymous says:

  சுந்தர்ஜி எப்போதுமே நல்லவர்களுக்குத்தான் துன்பம் வரும் காரணம் அது இறைவனின் சோதனைகளில் ஒன்று.தலைவர் வார்த்தைகளில் சொன்னால் "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்".

 18. Mahesh Mahesh says:

  தேங்க்ஸ் சுந்தர் !!!

  https://lh4.googleusercontent.com/-RX1kMFhUuvQ/Td...

 19. Prasath Prasath says:

  தலைவரின் புகைப்படத்தை பார்த்தவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருக்கு …நன்றி தனுஷ் அவர்களுக்கு…

  நான் லண்டனில் உள்ள மகாலட்சுமி நாராயணர் கோயிலில் தலைவருக்காக அர்ச்சனை செய்தேன் …இன்று அன்னதானம் செய்கிறேன் …மேலும் விஷ்ணு சஹாச்ற நாமம் மற்றும் ஸ்கந்த ஷஷ்டி கவசம் படிக்கின்றேன்..

  இன்று பஞ்சமி யுடன் கூடிய உத்திராட நக்ஷத்ர நாள் ….இது தலைவரின் நக்ஷத்திரம் …

  ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவு பிரார்த்தனை செய்யும் பொழுது விழி ஓரத்தில் கண்ணீர் வழிகின்றது … வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் …இந்தியாவில் உள்ள நண்பர்கள் பகல் நேரத்தில் பிரார்த்தனை செய்கின்றார்கள் …மற்ற பகுதியில் வாழும் நாம் பிற நேரத்தில் பூஜை பிரார்த்தனை செய்தால் 24 மணி நேரமும் நம்முடைய பிரார்த்தனை தலைவரை சென்றடியும்…உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் இந்த சமயத்தில் பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே…எனக்கு தலைவர் முன் போல நலமாக வேண்டும்…..இறைவா வேண்டுமானால் என்ன உயிரை எடுத்துக்கொள் ….

 20. Manikandan S Manikandan S says:

  திரு பிரசாத் அவர்களே, ்உங்க வரிகள் மெய் சிலிர்க்க வைக்குது!!!! தலைவர் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர். இறைவன் நம்மைப்போன்ற ரசிகர்களுக்காக உருவாக்கிய விலை மதிப்பில்லா பொக்கிஷம் நம் தலைவர்!!!! கோடான கோடி ரசிகர்களின் இந்த அன்புதான் அவைரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண். இந்த அரன்னை ி ்

  ———————————-
  Pls repost the comment. There seems some error.
  - Sundar

 21. rajiniismysoul rajiniismysoul says:

  May GOD in heaven protect the GOD on EARTH…

 22. B.K.VINODKUMAR-BARGU B.K.VINODKUMAR-BARGU says:

  Mr.sundar sir. Thalaivarin photo parthathum avarai neril partha madhiri irukku thanks god.

 23. RAJA RAJA says:

  இதை தான் தலைவர் பதினைந்து வருடம் முன்பே சொன்னார்

  நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டான்

  கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates