You Are Here: Home » Featured, Guest Article » இதயமற்றவர்களின் கேள்விகளுக்கு ரசிகனின் மனசாட்சி கூறும் பதில்கள்!

லைவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது… எப்படியெல்லாம் எண்ணற்ற ரசிகர்கள் & பொதுமக்கள் தலைவர் மீது அன்பையும் அக்கறையையும் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி நெகிழ்ச்சியடையிறோம். அதேசமயம், இந்த சூழலிலும் வார்த்தையில் அமிலத்தை தோய்த்து, மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்து, அவரை கடுமையாக விமர்சிக்கும் - அற்ப சந்தோஷம் கொள்ளும் - சில வக்கிரம் பிடித்த மிருகங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

ரஜினிக்கு எதற்கு இந்த முக்கியத்துவம்? அவர் என்ன புரட்சி வீரனா? சுதந்திர போராட்ட தியாகியா? அவருக்காக ஏன் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்? அவர் கிட்டே இல்லாத பணமா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு தங்கள் மேதாவித்தனத்தை தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்.

ஒரு சராசரி ரஜினி ரசிகனிடத்திலோ அல்லது அவரது உடல் நலம் பற்றி கவலைப்படும் ஒரு சாதாரண தாய்க்குலத்திடமோ இந்த கேள்விகளை கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால், அவர்களது மனசாட்சிக்கு தெரியும். ஒரு நல்ல மனிதனுக்காக, தன்னலமற்ற ஒரு தலைவனுக்காக தான் இந்த உள்ள அழுகிறது என்று. ஆனால், வார்த்தை ஜாலம் செய்து மேதாவித்தனமாக கேட்பவர்களிடம் மனசாட்சியால் அழத் தான் முடியுமே தவிர பதில் சொல்ல முடியாது.

அப்படி அவர்களுக்கு பதில் சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்…?

இதோ ரஜினி ரசிகர்களின் மனசாட்சியை பிரதிபலிக்கும் விதமாக அன்பர் ஒருவர் எழுதியிருக்கும் பதிவு.

நம் தள வாசகர்கள் சகோதரி சரண்யா மற்றும் கார்த்திக் இருவரும் இந்த பதிவு குறித்து இ-மெயிலை நமக்கு அனுப்பி நமது தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

நாமும் படித்து பார்த்து ஒரு கணம் நெகிழ்ந்து, பதிவின் ஆசிரியர் அதிஷா அவர்களை தொடர்புகொண்டு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். மேலும், நமது தளத்தில் மேற்படி பதிவை எடுத்தாள அனுமதியும் கேட்டோம். “இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி கேக்குறீங்க பாஸு… carry on ப்ளீஸ்” என்றார் பெருந்தன்மையுடன்.

மேலும் மற்றொரு விஷயத்தையும்  நம்மிடம் தெளிவுபடுத்த விரும்புவதாக கூறினார். அதாவது, தாம் ரஜினி அவர்களின் ரசிகன் அல்ல என்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட பொது வாழ்க்கை பற்றி தாம் ஏற்கனவே கடுமையாக விமர்சித்து பதிவுகள் அளித்திருப்பதாகவும்… அதே சமயம் தற்போது அவர் உடல் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில் அவரை தனிப்பட்ட ரீதியில் சிலர் விமர்சனம் செய்வதையும் அவரது ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள பேரன்பை கொச்சைப்படுத்துவதையும் தம்மால் ஏற்கவே முடியாதென்றும் … அப்படி விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தான் இந்த பதிவை எழுதியிருப்பதாகவும்… கூறி அவரது ரஜினி பற்றிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி கூறினோம்.

சரி… ரஜினியையும் அவர் மீது பக்திகொண்டுள்ள அவரது ரசிகர்களையும், அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வரும் பொதுமக்களையும், மேற்படி செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிலர் கேலி செய்வதை பற்றியும் அதிஷா என்ன கூறுகிறார்…? பார்க்கலாம் வாருங்கள்….!

—————————————————————————
ரஜினி என்னும் அசுரன்

எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை… ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.

சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

Courtesy : http://www.athishaonline.com/

[END]

47 Responses to “இதயமற்றவர்களின் கேள்விகளுக்கு ரசிகனின் மனசாட்சி கூறும் பதில்கள்!”

 1. Dinesh Dinesh says:

  //"ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள்" //.

  //"ரஜினி நிச்சயமாக அ(சு)ரசன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அ(சு)ரசன்தான். அந்த

  அ(சு)ரசன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்" //.

  நன்றி சுந்தர் & அதிஷா

 2. harisivaji harisivaji says:

  திரு ஆதிஷா வை எனக்கும் (எங்களுக்கும்) பிடிகவில்லை என்றாலும் .அவரது நேர்மை எனக்கு பிடித்திருகிறது .

  எங்கள் மனசாட்சியை பிரதிபளிததிர்காக

  அதிலும் இந்த வரிகளுக்காக

  //இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?//

  //ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.//

  ஆதலால் தலை வணங்குகிறேன் …நன்றி ஆதிஷா

  (மன்னித்துவிடுங்கள் தலைவரை பிடிக்காதுன்னு சொல்றவங்களை எங்களுக்கு பிடிக்காது ).

  எல்லாம் நன்மைக்கே

  ஹரி.சிவாஜி

 3. Ananth Ananth says:

  Excellent one. Get well soon Thalaiva!!.

  Friends,
  Ignore the idiots who talk ill of Thalaivar. எல்லாத்துக்கும் நொள்ள சொல்ற கூட்டம் இங்க இருக்கு. Unfortunately most of them are educated. Everything will be alright soon.
  ———————————————-
  //Unfortunately most of them are educated.//

  நாட்டில் இன்றைக்கு இருக்கும் அனேக பிரச்னைகள் மற்றும் ஊழல்கள், மெத்த படித்தவர்களால் ஏற்பட்டவையே. அதிகம் படிக்காதவர்களால் என்றைக்கும் ஆபத்து இல்லை. படித்தவர்களால் தான் பிரச்னையே.

  பாரதி சொல்லியிருக்கிறார் அன்றே…. "படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்… போவான்.. போவான்… ஐயோ என்று போவான்" என்று. பாரதி வாக்கு பொய்க்குமா?
  - சுந்தர்

 4. balaji balaji says:

  ரஜினி தமிழ்நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்? இதுதான் அறிவாளிகளாக தம்மை நினைக்கும் சிலரது கேள்வி.

  சென்னயில் ஒரு குப்பத்தில் பிறந்து, பின்பு சண்டை பயிர்ச்சாளர் சுப்பர் சுப்புராயன் மாஸ்டரிடம் கார் தூடைபவராக வேலை செய்து கொண்டிருந்த ராகவா லாறன்ஸ் என்ற தமிழர் இன்று இந்தியாவில் ஒரு சிறந்த டான்ஸ் மாஸ்டர் மற்றும் டைரக்டர். தன்னுடைய இந்த வாழ்விற்கும் வளர்ச்சிக்கு காரணம் சூப்பர் ஸ்டார்தான் என்று மேடைக்கு மேடை சொல்கிறார். இது ஒரு துளிதான், ரஜினிக்கு விளம்பரம் புடிக்காது என்பதால், அவர் கொடுப்பதை வெளியல் சொல்வது இல்லை.

  ரஜினி என்ன செய்துவிட்டார் என்று கேட்க்கும் மக்களே, உங்களை பற்றி யாராவது ஒருவர் இப்படி சொல்வர்கள? மொதல்ல,நீங்க என்ன பண்றிங்க இந்த நாட்டுக்குன்னு யோசிங்க.

 5. KADKAT KADKAT says:

  சில நாட்கள் முன்பு http://www.athishaonline.com/ இல் படித்து நெகிழ்ந்தேன். நன்றி Mr அதிஷா & சுந்தர்.

 6. vasi.rajni vasi.rajni says:

  அருமையான கட்டுரை சுந்தர்ஜி. தலைவர் மீது ஒரு நடுநிலையாளர் கொண்டுள்ள மனப்பான்மையை இந்த கடுரையில் காண முடிகிறது. ரஜினி எனும் காந்த சக்திக்கு பின்னல் உள்ள சுயநலமற்ற அன்பை நண்பர் அதிஷா அவர்கள் மிக அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.

  .

  இந்த சூழ்நிலையில் நமது தலைவரை பற்றி குறை கூறும் கூட்டம், அவர்களை நாம் என்ன செய்யமுடியும்.தனக்கு தான் எல்லாம் தெரியும், தனது consciousness க்கு தெரிந்தது மட்டும் தான் பூரண உண்மை, மற்றதெல்லாம் பொய், மூடத்தனம் என்று அகங்காரத்தின் உச்சியில் வாழும் இவர்களுக்கு மிக பெரிய தண்டனை அவர்களது வஞ்சகமான மணம் .அந்த அழுக்கான மணமே அவர்களின் ஒட்டு மொத்த வாழ்கையின் நிம்மதியையும் அழித்து விடும்.

  .

  எதைஎடுத்தாலும் குதர்க்கமாக பேசும் இவர்களிடம் நாம் வார்த்தை போர் புரிய முடியாது. உதரணமாக சொல்ல வேண்டும் என்றல் சின்மயி மற்றும் திரு ஞாநி இவர்கள் இடையே நடைபெற்ற விவாதம் நமது ரசிகர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை. முத்து படம் ரஜினியால் தான் ஜப்பான் திருநாட்டில் சக்கை போடு போட்டது என்பது உலகத்திற்கே தெரியும். இந்த உண்மையை அப்படியே மறைத்து, இல்லவே! இல்லை!! நடிகை மீனாவால் தான்!! என்று குச்சல் போடும் இவர்களை போன்ற குதர்க்கவதிகளிடம் சென்று நாம் என்ன கூறி என்ன பயன். மனசாட்சி இல்லாமல் ரஜினியின் புகழையும் நல்ல மனதையும் மறைத்து சிறுமை படுத்த நினைக்கும் இவர்களிடம் நாம் மன்றாடினால் நமது நேரம் தான் விரயமாகும்.

  .

  நமது தலைவரை இந்த நேரத்தில் விமர்சிக்கும் அனைவரும் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கள் தலைவரின் புகழை கெடுக்க நினைக்கலாம். ஆனால், எதிரியை நேசிப்பதை தான் எங்கள் தலைவர் எங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம்.

  .

  rajni will rule tamil nadu

 7. chenthil Krishnan chenthil Krishnan says:

  THnaks Sundar.. i too read this couple of days back… but nice to see in our forum…. its was like slapping the critics …. this media whoever portrays them as good are not actually good… and media whatever telling deliberately on thalaivar … is not even 1 percent common thought… those are the thoughts of writer who uses media to create negative thought or vengence against Rajini… they are the people again writting about Thalaivar for their sales… so thalaivar… yelathayum vaazha vaikuraru…. And true fans should feel pity on these people … that still they need more education to learn goods and bads.. we shouldnt be never angry… yetho avanga senja karma… they are made to speak like that…

 8. Kiruba,Nigeria Kiruba,Nigeria says:

  ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள்.

  இந்த வார்த்தைதான் உண்மை. இதற்கு மேல ஒன்றும் கிடையாது.

 9. Sudhagar_US Sudhagar_US says:

  உணர்ச்சிபூர்வமான கட்டுரை, ஆசிரியரின் அனைத்து கேள்விகளும் ரஜினி எதிர்ப்பு நிலை கொண்டவர்களுக்கு சம்மட்டி அடி. ஒரு மனிதனின் உடல் நல குறைவை பார்த்து வருத்த பட வேண்டாம், பிராத்தனை வேண்டாம்…. எதிர்மறை விமர்சனம் தவிர்க்கலாம் அல்லவா??? அதுவும் பிரதிபலன் பாராது தலைவனின் உடல் பூரண குணம் அடைய பக்தி உருகி வேண்டி கொள்ளும் உண்மை அன்புள்ளம் கொண்ட ரசிகனை கிண்டல் செய்பவன் மிருகத்திலும் மோசமான மனநிலை கொண்ட ஒரு மன நோயாளியே!

  தவறாக பேசுபவர்கள் பேசட்டும்….உங்கள் அற்ப சந்தோஷம் வெகு சில நாட்களே.

  தலைவனின் அடுத்த கட்ட சாதனைகளை விமர்சிக்க தயாராக இருங்கள்!!!

 10. Anonymous says:

  அருமையான பதிவு!!! ஒரு சராசரி மனிதாபிமானம் உள்ள ஒரு பத்திரிக்கையாளரின் கருத்துக்கள் மிக அருமை!!!!! இந்த பதிவை மறுத்து யாவராலும் பேச முடியாது!! அந்த அளவிற்கு உள்ளது!!! மிகவும் நடைமுறைக்கு ஏற்றார் போல் எழுதிய "அதிஷா" விற்கு என் நன்றிகள்… இந்த கட்டுரையை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த சுந்தர் அண்ணாவிற்கு நன்றி!!! கடைசியில் அதிஷா கூறியதை போல் "ரஜினி என்னும் அசுரன், மறுபடியும் அசுர பலத்தோடு திரும்பி வருவதற்கு என் வாழ்த்துக்கள்"

 11. swami swami says:

  I really cried when I read the sentence "Rajini is an asuran who has the love so many folks!". All this love was not gained in one day. It was provided by the divine! Also, our OSS has never used his fans for his own personal gain! Infact, rajini vazha vaithavar than athikam! You can recollect MK, for example! I sincerely hope our OSS recovers quickly and gives us Rana! I guess all this is a test for his mental prowess! I remember once Sundar wrote,"God test man to make him more perfect!" Probably, this is another test by him toshow the universal love that he has got! I request all fans to continue praying for him! Actually, if small kids pray, it would have immediate effect!

 12. arivalagan arivalagan says:

  வாவ்.வொந்டெர்புல்

 13. Devaanandh Devaanandh says:

  ஆதிஷாவின் இந்த பதிவை இங்கே விமர்சித்த சிலருக்கு: இன்னொருவருடைய விருப்பு/வெறுப்பு/கருத்தில் இருந்து நீங்கள் மாறுபட உரிமை உங்களுக்கு உண்டு! அனால் உங்களுக்கு ஒரு கருத்து ஒத்துவரவில்லை என்பதற்காக அதையும் உங்கள் கருத்தை போலவே மாற்றி நீங்கள் சாதிக்கப்போவதற்கு பெயர் "group think" (அடுத்த முறை வேறு கருத்தே யாருக்கும் இருக்காது, ஆடு மந்தைகளை போல அலையை வேண்டியது தான்). அதனால் எந்த நன்மையும் இல்லை. ஆதிஷாவின் கருத்தில் மாறுபடுபவர்கள் இந்த பதிவை புரிந்துகொள்ளும் பக்குவத்தை இன்னும் பெறவில்லை. இதை "ப்ரோ ரஜினி " பதிவாக நினைத்த நண்பர்களே, சாரி இந்த பதிவின் சாரம் 3 கருத்துக்கள் - ஜனநாயகம், மனிதநேயம், காமன் சென்ஸ்!

  ரஜினி அரசியலுக்கு வராதது நல்லது என்று நினைத்த சில anonymous நண்பர்களுக்கு, இரண்டே இரண்டு கேள்விகள்

  1. கருணாநிதி, மன்மோகன் சிங் போன்ற அறிவாளிகளால் நாட்டிற்க்கு ஏற்பட்டது அழிவு மட்டுமே! அறிவாளிகளால் நாசமாய் போனது போதும், ஒரு முறை, ஒரே ஒரு முறை ஒரு நல்லவர் நம்மை ஆண்டால் நல்லது என்று உங்களுக்கு எப்போது உதிக்கும்?

  2. நீங்கள் அரசியலுக்கு வராததும் நன்மையா பாஸ்?

  திரையில் தோன்றும் நடிகனை ரசித்து திரையரங்கோடு உறவை முறிப்பவன் பெயர் ரசிகன்.

  மேடையில் தோன்றும் அரசியல்வாதிக்கு கைதட்டி தெருவோடு உறவை முறிப்பவன் தொண்டன்.

  எங்களுக்கும் ரஜினிக்குமான உறவு இந்த எல்லைகளை கடந்து, இல்லத்தில் நுழைந்து, இதயத்தில் அமர்ந்து வருடங்கள் ஆகின்றன.

  கடல் கடந்து இங்கே இருந்தாலும் ஒரு மாதமாக உள்ளம் உறைந்து, சிந்தனை சிதறிப்போய், தினமும் சில நூறு தரம் தெரிந்த செய்தித்தளங்களஎல்லாம் தேடிப்பார்த்து, ராமச்சந்திரா மருத்துவமனையின் தளத்தில் அடுத்த செய்திக்குறிப்பு எப்போது வெளியாகும் என்று அதை மூடாத இமை போல் வைத்து கிடந்து தவிக்கும் எனக்கு, இப்போதும் ரஜினியை செத்தாலும் பரவாயில்லை என்று சொல்பவர்களை நினைத்து கோபம் கோபமாக வருகிறது. நீங்கள் சொன்னதுபோலவே உங்கள் தாய்/சகோதிரருக்கும் நடக்குமே என்று என்னை சொல்லவிடாமல் உங்கள் மீது இதயத்தில் இன்னமும் ஒட்டிக்கிடக்கும் மனிதம் தடுக்கிறது. எனக்குத் தெரிந்து ஒருவர் உடல் நிலை சரி இல்லை என்று இத்துணை பேர் கலங்கி நின்ற நிகழ்வு கடைச்யாக 1987ஆம் ஆண்டு நடந்தது. அதற்குப் பிறகு அத்துணை இதயங்களை துடிக்கவைத்த தலைவன் எங்கள் ரஜினி மட்டுமே. அவர் அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிடிலும் சரி, என்றும் என்னைபோன்ற எண்ணற்ற ரசிகர்களின் இதயத்தில் நிரந்தர முதல்வனாய் ஆளப்போவது ரஜினி மட்டுமே என்று உங்களுக்கு இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா இல்லையா? நீங்கள் ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரின் மீது, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, "அவர் எழுந்து நடந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம்" என்று என்றாவது அன்பு செலுத்தியது உண்டா? இல்லையென்றால் தொடங்குவதற்கு (உங்களுக்கு பிடித்தவர்களுக்காக) இப்போதே உகந்த நேரம்!

  அடுத்தவர் உணர்வுக்கு நாம் அளிக்கும் மதிப்பின் அளவே நாம் கற்ற கல்வியின் பலன். கருணை மட்டுமே நாம் கொடுக்கமுடியும் ஒரே கொடை. காமன் சென்ஸ் பெற்ற பிறவியின் உபயம். இதற்க்கு நன்றி சொல்லும் அளவு தமிழன் தாழ்ந்தது நம் தலைவிதி. எனினும், ஒரு நடுநிலையாளனின் கருத்தை மிகச்சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றிகள்! ரசிகர்களின் உணர்வுகளை புரிந்து எழுதுபவர்கள் இன்னமும் பதிவுலகில் இருகிறார்கள் என்ற எங்கள் நம்பிக்கைகள்!

 14. sures manickam (mala sures manickam (mala says:

  உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தல்லு….

  மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு ( சந்திரமுகி பாடல் )

  நம் தலைவர் ஒரு ஆகாயம் அதை யாரும் தொடவும் முடியாது மறைக்கவும் முடியாது….

 15. arulselvan arulselvan says:

  Adisha,

  Very nice article.

 16. G.Udhay (RAJINIROX) G.Udhay (RAJINIROX) says:

  "ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்"

  நன்றி ஆதிசா தங்கள் பதிவிற்கு…

  நன்றி சுந்தர் அண்ணா , கார்த்திக் ,சரண்யா…

  என்றும் தலைவரின் வழியில் ஜி.உதய்…

 17. G.Udhay (RAJINIROX) G.Udhay (RAJINIROX) says:

  மேலே உள்ள புகைப்படத்திற்கு இணையான படம் உலகில் வேறு ஏதுமில்லை…

  தலைவா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா ………….

  என்றும் தலைவரின் வழியில் ஜி.உதய்…

 18. R O S H A N R O S H A N says:

  தலைவரை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு சரியான சாட்டை அடி……

  //ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்//

  மிக மிக அற்புதமான் வரிகள்…..

  Devaanadh…..அருமையா சொனீங்க….

 19. Anonymous says:

  தலைவரை பிடிக்காதுன்னு சொல்றவங்களை எங்களுக்கு பிடிக்காது…இருந்தாலும் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை……..எங்களின் உணர்ச்சிகளின் தீவிரம் தெரியாமல், உணர்வுகளில் விளையாடும் இதயமற்ற மனிதரகளுக்கு உங்கள் பதில் சரியான சாட்டை அடி…

  -

  தலைவரைப் பற்றி உண்மையான கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்..மிக்க நன்றி………!

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 20. Srikanth Srikanth says:

  I heard that thalaivar is flying to singapore today // just saw in news .. i'm not sure on that whether he is flying to singapore or to any other place for treatment…. ENOUGH IS ENOUGH … sundar u just tel me…

  1. Why they doing like this…

  2. Come on the technology grown very much. People r matured so enough.

  3. Just the family supposed to hide things… we r with them only na from beginning.

  4.is they ready release photos of thalaivar in Isabella hospital .. Why can't they release latest picture.

  5. Sundar don’t mind I’m asking these question …just we r matured to understand what’s going on .. and u there for us to update .. Just think about the people who r not using the internet… dependent only on TV news or TV update. I hope u understand what I’m trying to say….people who r in village they r very much fed up with the rumours and worried a lot………my only concern is modi ,chanrababu naidu , doctors and family everybody telling he is superfine. He is cracking jokes kind of things …then why can't they take photo at that time …………///

  Just I thought to ask, asked………..

 21. sundar sundar says:

  is that true thalaivar flying to singapore for further treatment. how is he now. can we organise for a mass prayer for thalaivar speedy recovery.

 22. Selman Selman says:

  ரஜினி என்ற காந்தத்தால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியைவிட "ஈர்ப்பு" சக்திதான் அதிகம்!!! அதனால் தான் கடவுளைவிட அதிகமாக எங்கள் தலைவனை போற்றுகிறோம் !!! சொல்பவர்கள் சொல்லட்டும் !! கேட்பவர்கள் கேட்கட்டும்!! நம் தலைவனுக்கு நாம் செய்யும் வேண்டுதலை நிறுத்தாமல் செய்வோம் !!! தலைவர் வாழ்க!!!

 23. Anonymous says:

  இந்த பதிவை நன் முன்னமே படித்து மிகவும் உணர்சிவசபட்டேன்….நானும் இதை சுந்தருக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன்….நன்றி சகோதரி சரண்யா மற்றும் கார்த்திக் அவர்களுக்கு…

  இந்த மாதிரி ஒரு பதிவை எழுதிய திரு. அதிஷா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்த்த நன்றி….

  மாரீஸ் கண்ணன்

 24. Mahalingam.s Mahalingam.s says:

  பூபந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வச்சாலும் பந்து வரும் தண்ணி மேலேதான் .

 25. sundar_ko sundar_ko says:

  aishwarya confirmed about thalaivar travel to singapore tonight. but he is travelling like normal passenger only not in ambulance flight as media reported.

 26. vasanth vasanth says:

  தலைவரோட படத்தில பாத்திங்கன்ன தலைவர் எப்போதும் கிழ பார்த்துதான் வசனம் பேசுவர் ,அனா சரியான நேரத்தில நிமிந்து கண்ணா ,என்று எதிரிகளை quப்பிடும்போது எதரி என்னாவான் என்பது நமக்கு தெரியாத ,சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்து நிமிர்ந்து பார்க்கத்தான் போறார் ,அப்பா இவர்கள் என்ன செய்கிறார்கள் பார்ப்போம் .எத்த்தனை தடவை இந்த மிருகங்கள் பொய்யா எழுதி எழுதி தோத்துபோயும் இன்னும் திருந்துதுவளிலை இறைவ . இல்லையே

 27. vasanth vasanth says:

  எங்களின் உற்சாகமே விரைவில் குணம் அடைந்து எங்களிடம் வருவிர்கள் ,இறைவன் எப்போதும் உங்களுடன்

 28. sriram sriram says:

  திரு ஆதிஷா வை எனக்கும் (எங்களுக்கும்) பிடிகவில்லை என்றாலும் .அவரது நேர்மை எனக்கு பிடித்திருகிறது .

  அருமை ஹரி சிவாஜி சிறந்த வரிகள் …..

 29. jegan jegan says:

  i go with mr sudagar's comments expecialy last line.*morover there is a news that 2ngt ss and his family will leave to singapore for further treatment.they hav made made all arrangments to take him upto the tarmac,ie very close to the landing flight to avoid press people in the airport.they didn release any recent photos bcz it ll hurt his fans .he ll come back after he regain all…..puthiya manitha seekiram vaaaaaaaaaaa

 30. S.Vijay S.Vijay says:

  http://www.ndtv.com/video/player/news/rajinikanth...
  //டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு ஐஸ்வர்யாவின் பதில் எரிச்சலைக் கொடுக்கிறது! இதுதான் பிரச்சினை என்று உடைத்துக் கூறலாமே! என்னதான் ரஜினி என்கிற தனி மனிதரின் பிரைவசி, குடும்பம் என்று சொன்னாலும்…. ரஜினி என்கிற தனி மனிதரின் வீச்சு உலகமெங்கும் எந்த அளவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

  இணையத்திலும், பத்திரிகைகளிலும் வரும் செய்திகள் சாமனிய ரசிகனை குழப்பவே செய்யும்.

  அதற்கு பதிலாக ரஜினி குடும்பத்தினரே முன்வந்து சரியான விளக்கமளித்து “இது தான் பிரச்சினை….ஆனால் ட்ரீட்மெண்ட் நடக்கிறது. பயப்பட வேண்டாம்“ எனக் கூறினால் ஆச்சு!

  அதை விட்டு வெறும் சளிதான், காய்ச்சல் தான்` என்று கூறிக் கொண்டே இன்னும் எத்தனை நாட்கள் குழப்பத்தைப் பெருக்கப் போகிறார்கள்??

  இது போன்ற செயல்கள் சில ரசிகர்களை தவறான/ முட்டாள்தனமான முடிவிற்க்குச் செல்ல வழி வகுக்கும்.

  யார் ஒத்துக் கொண்டாலும் சர் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி…..

  ரஜினிகாந்த் என்பவர் ஒரு தனி மனிதன் மட்டுமே என்ற நிலையை என்றோ தாண்டிவிட்டார். இது வரமோ அல்லது சாபமோ……ஆனால் நிதர்சனம்!

 31. peraveen peraveen says:

  அசுரன் அசுரபலத்தோடு மீண்டும் நம்மை அசரடிக்க ஆண்டவனை பிராத்திக்கறேன்

  எங்கள் மன்னனுக்கு மரணமே இல்லை!

  என்றும் தலைவருக்காக,

  Pravin.

 32. mani mani says:

  /////ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும/////

  ada ithu ennanga periya vishayam… inga avarukkaaga uyiraye kodukka "kodi" kanakkaana rasigargal irukkaanga…….

 33. murugan murugan says:

  அருமையான பதிவு

  ஆதிஷாவிருக்கு எமது நன்றிகள்

  தலைவரையும் அவரது ரசிகர்களின் மன உணர்வை வெளிப்படுத்தியதற்கு

  ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்காதவர்

  தம்மை கொல்ல வரும் எதிரியின் குடும்பம் கூட நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புபவர்

  நிச்சயம் ஒரு அசுரனாக இருக்க முடியாது

  நமது தலைவர் மனிதரில் புனிதர்

  அவர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பிட அனைவரும் உளமார வேண்டுவோம்

 34. Mohanraj Mohanraj says:

  ஆதிஷாவிருக்கு எமது நன்றி கலந்த கோவம் …………
  எங்க தலைவரை பிடிக்லைன்னு சொல்லலாமா ………..

  அவர் எங்களுக்கு அசுரன் இல்லை ………. இந்த நாட்டை காக்க வந்தவர்……………..

  எங்க தலைவர்னா எங்களுக்கு உயிர்…………….

  இந்த ரசிகர்கள்னா தலைவருக்கு உயிர்………..

  எங்கள் தலைவர் சீரும் சிங்கம் ………. சீக்கிரமே எழுந்து விடுவார் …………..

  என்றும் தலைவர் வழியில்
  mohanraj madurai
  Mohanrajj_2004@yahoo.co.in

 35. k. saravanan k. saravanan says:

  என் போன்ற ரஜினி ரசிகர்களே?

  தலைவர் யோசிச்சி யோசிச்சே சில விஷயங்களை செய்யாதது தவறு தான். இருந்தாலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் செய்யவில்லை அதான் கஷ்டமா இருக்கு கொஞ்சம் . ஆனால் அவரும் அதை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவரோட பல விஷயங்கள நமக்கு பிடிச்சி இருக்கும். அந்த அளவில் தலைவர் மிகவும் மகத்தான மனிதர். அவர் போன்று எளிமையான மனிதரை பார்க்க முடியாது. சில விஷயங்கள அவர் கண்டிப்பா யோசிச்சி இருக்கனும் பரவால. அவர் கண்டிப்பா சரி ஆகி வந்து செய்வார். அப்படியே செயலானாலும் பரவால. அவர் குணம் ஆனா போதும் அவரோட நல்ல குணங்கள் மிக மிக அதிகம். நல்ல மனிஷன். அந்த விதத்தில் அவரோட ரசிகரா இருப்பதில் மிக மிக மகிழ்ச்சி. நீங்களெல்லாம் இதை பத்திலாம் விமர்சனம் பண்ணுவதற்கு பத்தில்லாக அவருக்காக ஆண்டவன வேண்டுங்கள்

 36. Sharath Sharath says:

  //ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். //

  I was pretty ok while reading this article. But, on reading the above lines I just got too emotional! How true is that statement!!!

 37. Sharath Sharath says:

  http://www.ndtv.com/video/player/ndtv-special-ndt...

  If you understand Hindi, please go through the entire video. You get a nice soothing feeling.

  BUT, don't miss the statement between 7.19-7.30. The presenter says "Rajinikanth, with his each film, breaks the records of his previous films be it Sivaji-The Boss or be it Robot. Who knows, in the coming future even RANA will break Robot's record"

  I like this statement because it is of so much positivity. They are already looking at Rana's success story. I am damn sure that there are quite a few who are aready predicting that Rana will not complete and are just stop of throwing a party to celebrate that!

  P.S.: YES! This program was reocorded and telecasted after Rajini was hospitalised.

 38. DARWIN DARWIN says:

  sir i feel shivered on seeing twitter pic………. லேசான மயக்கம் வந்துவிட்டது……. என்ன சொல்வது என்றே தெரியவில்லை வார்த்தை வரவில்லை.

 39. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  //எனக்குத் தெரிந்து ஒருவர் உடல் நிலை சரி இல்லை என்று இத்துணை பேர் கலங்கி நின்ற நிகழ்வு கடைச்யாக 1987ஆம் ஆண்டு நடந்தது. அதற்குப் பிறகு அத்துணை இதயங்களை துடிக்கவைத்த தலைவன் எங்கள் ரஜினி மட்டுமே. அவர் அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிடிலும் சரி, என்றும் என்னைபோன்ற எண்ணற்ற ரசிகர்களின் இதயத்தில் நிரந்தர முதல்வனாய் ஆளப்போவது ரஜினி மட்டுமே//

  @தேவானந்த்

  உண்மையான வார்த்தைகள்……..,

  தலைவர் நிச்சயம் பூரண நலம் பெற்று நம் அனைவரும் விரும்பும் நல்ல எதிர்காலத்தை வழங்குவார்……..,

  நல்லதே நினைப்போம்…….,

  நல்லதே நடக்கும் !

 40. ALAGAN.RAJKUMAR ALAGAN.RAJKUMAR says:

  தலைவர் சொல்றத தான் செய்வார் செய்யுறத தான் சொல்வார் எனவே நாம் எல்லோரும் தலை நிமிர்ந்து நிற்கும் படி செய்வார்.விரைவில் நலமுடன் வருவார்.

 41. Anonymous says:

  தலைவரை ஒரு தனிப்பட்ட மனிதராக பார்க்கவே முடியாது.முழு பலத்துடன் அவர் திரும்பி வருவதைப்பார்த்து வக்கிர புத்தி கொண்ட வஞ்சகர்கள் வாயடைக்கப்போவது நிச்சயம்.

 42. RAJA RAJA says:

  அதாவது ஒருவர் உடல் நிலை சரி இல்லை என்று அவர் குடும்பம் வருதபட்டால் அவர் நல்ல குடும்ப தலைவன்

  அதே அவர் உடல் நலம் சரி இல்லை,பூரண நலம் பெற வேண்டும் என்று நாடே (மன்னிக்கவும் உலகமே வேண்டினால் ) அவர் நல்ல மனம் கொண்ட மனிதர்

  அந்த மனிதர் மீண்டும் எழுந்து வருவார் சிங்கமாக ,இவ்வளவு நாள் எல்லாரும் பார்த்தது பூ பாதை இனி தான் அவரின் சிங்க பாதையை பார்க்க போகிறார்கள்

 43. ரஜினிகாந்த் என்கிற அந்த நல்ல மனிதர் விரைவில் நலம்பெற்று திரும்புவார் என உங்களோடு நானும் பிரார்த்திக்கிறேன்.

  நன்றி

  அன்புடன்

  அதிஷா

 44. தலைவா நீ இல்லாமல் தமிழகம் இருட்டில் உள்ளது நீ வந்தல்தன் தமிழகம் வெளிச்சம் ஆகும் அதுவே எங்கள் நேந்சங்கள் குளிர் ஆகும்.உங்கள் வாய்ஸ் இல்லை என்றால் எங்கள் உடம்பில் உயீர் இல்லை தலைவா.நீ வெற்றியோடு திரும்பி வா உன்னை வரவேற்க்க காத்து இருக்கிறோம்.

 45. venkat venkat says:

  ரஜினி.

  வரலாறு படிப்பவரு இல்லை…..

  வரலாறு படைப்பவர்………

 46. mano mano says:

  nice article
  thank u sunder jeeeeeeeeee..

 47. Siva Kumar Siva Kumar says:

  Well said really
  Thalaivar Oru Kadavul than …
  Thanks for this information.
  Thalaivar Valga Paalaandu …

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates