









You Are Here: Home » Featured, Moral Stories » அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி மனதில் உண்மையில் இருப்பது என்ன?
எல்லாம் அறிந்த இறைவன் சிரிப்பது எப்போது தெரியுமா? தனது திட்டங்களை பற்றி ஒருவன் தம்பட்டம் அடிக்கும்போது தான். ஆகையால் தான் ஞானமுள்ளவர்கள் எதிர்கால திட்டங்கள் பற்றி தம்பட்டம் அடிப்பதில்லை. கர்வம் கொள்ளுவதில்லை. வாழும் கணத்தை இறைவனிடம் அர்ப்பணித்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு போய்கொண்டேயிருப்பார்கள். இதை புரிந்துகொள்வதற்கு தீவிர பக்திமானாகத்தான் ஒருவர் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகம் இயங்கும் போக்கை புரிந்துகொண்டாலே போதும்.
ஆகையால் தான் தலைவர் ஒரு முறை ஒரு விழாவில் சொல்லியிருப்பார்… “நான் எப்போதுமே நாளை பற்றி தான் யோசிப்பேன். நாளை மறுநாளை பற்றி யோசிக்கமாட்டேன்!” என்று. காரணம் மனிதனின் வாழ்க்கை நிச்சயமற்றது. நொடிக்கு நொடி மாறும் இயல்புடையது. காலம் எந்த திசையில் யாருக்கு எப்படி வேண்டுமானாலும் சாதகமாக மாறும். எனவே தலைக்கனத்தை தவிர்த்துவிட்டு அடக்கத்தோடு நடந்தால் நன்மை உண்டு. இல்லையெனில்….
வள்ளுவரும் இதை தான், “ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல” என்று கூறுகிறார். இதன் பொருள்: மனிதனின் வாழ்க்கை அடுத்த நொடி நிச்சயமல்ல. ஆனால், அவனது கனவுகளும் எண்ணங்களும் கோடிக்கணக்கில் இருக்கும்.
இப்படி சொல்வதானால் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள் என்று பொருள் அல்ல. நேற்றை பற்றிய கசப்பை மறந்துவிட்டு, நாளை பற்றியும் கவலை கொள்ளாது, நிகழ்காலத்தில் வாழுங்கள். திட்டமிடுங்கள். அதற்காக வியர்வை சிந்துங்கள். ஆனால் கனவில் கோட்டை கட்டி நிஜத்தில் செயலை காட்டாது விட்டுவிடாதீர்கள் என்று தான் வள்ளுவர் சொல்கிறார் என்று நான் கருதுகிறேன். (இதை அவரது மற்ற குறள்கள் படித்தால் புரிந்துகொள்ளலாம்).
சமீபத்தில் தலைவரை பற்றி எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணர் விகடனில் கூறிய பதிலில் (நமது தளத்தில் வெளியிட்டுள்ளோம்) “ரஜினி அரசனாக வாழ்ந்தபடியே துறவியின் மனநிலையில் இருக்கிறார். இது மிகவும் அபூர்வமானது.” என்று கூறியிருப்பார். எத்துனை உண்மை தெரியுமா அது…!
இந்த மருத்துவ ஒய்வு காலத்தை கூட தலைவர் தன்னை சுய பரிசோதனை செய்ய தான் பயன்படுத்தியிருப்பாரே தவிர, சிலர் நினைத்துக்கொண்டிருப்பதை போல எதிர்காலம் குறித்து தீவிரமான திட்டங்கள் தீட்டுவதில் அல்ல.
நடந்த நிகழ்வுகள் தமக்கு உணர்த்துவது என்ன? இறைவன் இதன் மூலம் என்ன கூற விரும்புகிறான்? தனது நலம் விரும்பிகள் யார்? அப்படி நடிப்பவர்கள் யார்? தமிழக மக்கள் தம் மீது வைத்துள்ள அன்பு எத்துனை… இவற்றை பற்றி தான் அவர் எண்ணங்கள் சுழன்றுகொண்டிருக்கும்.
எதிர்காலத்தை பற்றி அவர் இந்த காலகட்டங்களில் திட்டமிடவில்லை என்றாலும், தம் மீது இத்துனை அன்பு செலுத்தும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அதை பன்மடங்கு திருப்பி செலுத்துவது என்று மட்டும் அவர் முடிவு செய்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான வழியை இறைவன் அவருக்கு காட்டுவானாக….
இந்நிலையில், அரசியல் பிரவேசம் குறித்து தலைவரின் மனோநிலையை விளக்க, கீழ்காணும் கதை ஒன்றை உங்களுக்கு தருகிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு மாலை நாளிதழில் இந்த கதை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியதாக வெளிவந்தது. (சில வருடங்களுக்கு முன்பு இந்த கதையை நாம் நமது தளத்தில் கூறியிருக்கிறோம்). இந்த சூழ்நிலையில் இங்கு அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். நமது தளத்தின் திரு.ராஜா அவர்களின் பிரத்யேக ஓவியத்துடன் இதோ…
அரசன் ஆண்டியாவது எப்போது? ஆண்டி அரசன் ஆவது எப்போது?
மன்னன் ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் நிம்மதியில்லை. மனதில் எப்பவும் சஞ்சலம் தான். ஒருநாள் கிழிந்த உடைகளை உடுத்தி கொண்டிருந்த துறவியை பார்த்தான். அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றான் . அது ஒரு குடிசை. அன்று பிச்சை மூலம் கிடைத்த உணவை சாப்பிட்ட துறவி சிறிது நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். சிலமணி நேரத்திற்கு பிறகு கட்டாந்தரையில் நிம்மதியாக உறங்கினார்.
நமக்கு எல்ல வசதிகளும் இருக்கிறது… பஞ்சு மெத்தையில் படுத்தும் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் எந்த வசதியுமே இல்லாத இந்த துறவி நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறாரே என எண்ணினான்.
துறவி எழுந்த பின் அவரிடம் தன்னை அறிமுக படுத்திக்கொண்ட மன்னன் “சுவாமி ! எல்லா வசதிகளும் எனக்கு உண்டு. மிகப்பெரிய நாட்டை ஆண்டு வருகிறேன். ஆனால் மனதில் எப்பவும் சஞ்சலம் தான் . ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க முடிவதில்லை.. ஆனால் எந்த வசதியும் இல்லாத தாங்கள் , நிம்மதியாக வாழ்கிறீர்கள் இது எப்படி? என்று கேட்டான். துறவி சிரித்தார்.
“இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் அரண்மனையில் சில காலம் தங்க வேண்டும். எல்லா வசதிகளும் செய்து தர வேண்டும், கேட்பதை கொடுக்க வேண்டும்.” என்றார் துறவி, மன்னன் சம்மதித்தான்
அரண்மனைக்கு வந்த துறவிக்கு ராஜ மரியாதை நடந்தது. மன்னனை போலவே பஞ்சு மெத்தையில் தூங்கினார். நகைகளை கேட்டு அணிந்து கொண்டார் .
சில நாட்கள் கழிந்தது. மன்னனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மன்னனும் எதுவும் கேட்கவில்லை. நாட்கள் கடந்தன. துறவியின் ராஜவாழ்க்கை தொடர்ந்தது. மன்னன் தினமும், துறவி ஏதாவது சொல்வார் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்க, ஆனால் துறவி அதைப் பற்றியே கவலைப்படாமல், அரண்மனை தந்துள்ள உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தார்.
“நாம் ஏமாந்து விட்டோம். இவர் போலி துறவி. ராஜ வாழ்க்கை கிடைத்த உடன் பழைய வாழ்கையை மறந்து விட்டார். இன்று அவரையே கேட்போம் பதில் சொல்லாவிட்டால் அரண்மனையிலிருந்து போக சொல்லி விடுவோம்” என்று முடிவு செய்து துறவியிடம் சென்றான் மன்னன்.
“சுவாமி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் , அரண்மனை வாசத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதுதான் உங்களது பதிலா ?” என்று கேட்டான் . துறவி இபோதும் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள் ? பதில் தெரியாவிட்டால் அரண்மனையிலிருந்து சென்று விடுங்கள்” என்றான் மன்னன்.
“இதைதான் மன்னா எதிர்பார்த்தேன். இந்த நிமிடமே அரண்மனையை விட்டு சென்று விடுகிறேன். அடுத்த நிமிடம் முதல் எனக்கு குடிசை வாசம் .இதை சந்தோசமாக ஏற்று கொள்கிறேன் . உன்னால் அரண்மனை வாசத்தை , அதிகாரத்தை விட்டுவிட்டு வரமுடியுமா ? என்று கேட்டார் துறவி..
அது எப்படி முடியும் ? என்று கேட்டான் மன்னன்.
இதுதான் மன்னா உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம். ஏனெனில் எனக்கு எதன் மீதும் பற்றில்லை. இறைவன் எண்ணப்படிதான் எதுவும் நடக்கும் என்று அதீத நம்பிக்கை உள்ளவன் நான் . என்னை துறவியாக படைத்த இறைவன் , உன்னை மன்னனாக படைத்துள்ளான்.
இறைவன் எண்ணத்தால் தான் எனக்கு சில நாட்கள் அரண்மனை வாசம் கிடைத்தது அது முடிந்து விட்டது இதோ குடிசைக்கு திரும்புகிறேன் இறைவன் நினைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பதால் , எதன் மீதும் எனக்கு அக்கறை இல்லை , பற்றில்லை . இதனால் என் மனதில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் துறவி
உண்மைதான். இறைவன் எண்ணப்படி நடக்கும் இந்த உலகில், நம்முடைய விருப்பம் எதுவும் இல்லை எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் வாழ்கையில் எதுவும் நம்மை பாதிக்காது. மனதில் சஞ்சலம் ஏற்படாது. எப்போதும் நிம்மதிதான்.
தலைவரும் மேற்கூறிய துறவியின் மனநிலையில் தான் இருக்கிறார். அரசியல் பிரவேசத்தை பற்றி குறிப்பிடும்போது ஏன் தலைவர் மேலே கையை காட்டுகிறார் என்று இப்போது புரிகிறதா? எனவே, நண்பர்களே, ஆண்டவன் நினைத்தால் எதுவும் நடக்கும். எப்போதும் நடக்கும். அது எப்படி நடக்கும் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் நடந்துவிடும். சரி தானே?
(தலைவர் ஒரு துறவியின் மனநிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பது திரு.ராமகிருஷ்ணன். மேற்படி கதையை கூறியதும் ராமகிருஷ்ணன் தான். இவர் பகவான் ராமகிருஷ்ணர். மற்றவர் எழுத்தாளர் ராமகிருஷ்ணன். எப்படி?)
——————————————————————-
For previous stories, please check:
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11386
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11168
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11028
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10947
——————————————————————-
[END]
Good story..good post.. "தலைவரும் மேற்கூறிய துறவியின் மனநிலையில் தான் இருக்கிறார்" …well done Sundarji..
தலைவர் அவருடைய ரசிகர்களுக்கு என்ன செய்தர்ர் என்று சில ஞானிகள் கேள்வி கேட்பார்கள். அவர் பல உதவிகளை மறைமுகமாக செய்திருக்கிறார் அது வேறு .ஆனால் அவர் செய்த மிக பெரிய காரியம் என்ன தெரியுமா வேறு ஒன்றுமில்லை சுந்தர் பதித்த இந்த பதிவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற கதையை பாருங்கள்.எப்பொழுது எப்படி சிந்திக்கவேண்டும் என்று நமக்கு நம் தலைவர் அவர் வாழ்ந்த வாழ்க்கையாலேயே சொல்லி தந்திருக்கிறார்.. ஒவ்வொரு தலைவரின் உண்மையான ரசிகனும் இப்படிதான் சிந்திப்பான்.
இந்த பதிவிற்கு ஒரே பதில் தான்:
"நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில கரெக்ட்-ஆ வருவேன்.
.
.
.
.
.
இப்புடு ச்சுடு…. Get ready folks (for the battle - next assembly elec)..
*******
நாட்டையே உலுக்கபோகும் ஒரு ஆட்சியை ஆளப் போகும் எங்களின் மன்னனின் வருகைக்காக காத்திருக்கும் அன்பு தொண்டர்களில் ஒருவன்,
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
DOT.
ஜி
//(தலைவர் ஒரு துறவியின் மனநிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பது திரு.ராமகிருஷ்ணன். மேற்படி கதையை கூறியதும் ராமகிருஷ்ணன் தான். இவர் பகவான் ராமகிருஷ்ணர். மற்றவர் எழுத்தாளர் ராமகிருஷ்ணன். எப்படி?)//
சுந்தர் ஜி, நீங்கள் சரியான நேரத்தில், சரியான தருணத்தில், மிக சரியான ஓவியத்துடன் விளக்கி, தலைவரின் நிலையை விளக்கி உள்ளீர்கள். அத்துணையும் உண்மை. உண்மையை தவிர வேறு இல்லை. கட்டுரையை மிக தெளிவாக விளக்கி உள்ள நமது சுந்தர் ஜிக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
சங்கர்
பொருத்தமான காட்டூன்!!!! அருமையான கதை!!!
தலைவரின் மனதில் உள்ளதை இந்த கதை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது!!!!!!!!
தலைவர் ஒரு துறவியின் மனநிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பது திரு.ராமகிருஷ்ணன். மேற்படி கதையை கூறியதும் ராமகிருஷ்ணன் தான். இவர் பகவான் ராமகிருஷ்ணர். மற்றவர் எழுத்தாளர் ராமகிருஷ்ணன். எப்படி?
சூப்பர் …. கலகிட்டிங்க … தலைவரை பற்றி நன்கு புரிந்தவர்களுக்கு இந்த கதை புரிந்திருக்கும் ..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்,..
அருமையான கதை சுந்தர் , குறிப்பாக அந்தத் திருக்குறள் , உங்கள் பொருள் சரியானதே. எதிர்காலத்தை திட்டமிடுங்கள் ஆனால் அங்கேயே போய் வாழாதீர்கள் அப்பொழுது நிகழ் காலத்தைத் தவற விடுவீர்கள் என்பது உண்மையே .
நான் உண்ட உணவை நாமா செரிக்கிறோம் ? அல்லது இந்த மூச்சு, சுவாசம் நாமா நிகழ்த்துகிறோம் ? தானே நடக்கிறது , வெளியே சென்ற மூச்சு திரும்பவில்லையென்றால் ? இந்நிலையில் இதை நான் செய்தேன் நான் இதை செய்து முடித்து விடுவேன் , இதை நான் மாற்றிக் காட்டுவேன் என்றெல்லாம் சொல்வதில் ஏதேனும் துளி அர்த்தமாவது இருக்கிறதா ?
எதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைய வேண்டும் அது இறைவன் சித்தம் …அதை மனபூர்வமாக ஏற்று அதில் ஒளிந்திருக்கும் வாழ்கையின் சாரம்சத்தை புரிந்து வாழ்ந்தால்
நமக்கும் எல்லோருக்கும் நல்லது
இதை தான் தலைவர் சிவாஜி இல் சொல்லுவார்
சாகுற நாள் தெரிந்துவிட்டால் வாழ்ற நாள் நரகமாகிடும்
//நாம் ஆர்வம் மற்றும் அன்பின் மிகுதியால் செய்வது தலைவரை எந்த விதத்திலும் சங்கடப்படுத்திவிடக்கூடாது. கஷ்டப்படுத்தியும் விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
எனவே, தலைவரின் வருகையை நாம் வேறு விதத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். //
தலைவரை மற்றும் இல்லை பொது மக்களையும் சங்கடப்படுத்திவிடக்கூடாது
From 2016 …. Superstar will be the CM of Tamil Nadu.
Thalaivar in varugai anru ethavathu open stadium vaithu rasigargal Thalaivarai varaverkalam
இதை படித்தவர்களுக்கு புரியும் தலைவரின் பஞ்ச்
“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில கரெக்ட்-ஆ வருவேன்.
.
Sundarji,
I think the meaning given for thirukural is wrong. If possible please remove it.
—————————————————————
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
மு.வ உரை:
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
கலைஞர் உரை:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
- http://www.thirukkural.com/
நாட்டை ஆள்வது அரசியல்வாதி என்றாலும், என்றும் மக்களை ஆள்வது நம் தலைவர் மட்டுமே .
குறிப்பிட்ட மாநிலத்தை மட்டுமே ஆளும் அரசியல்வாதி எங்கே, அன்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆழும் என் தலைவர் எங்கே ….
ஆனால் கண்டிப்பா நல்லது நடக்கும்…
thalaivar return should do the changes.
அருமையான பதிவு மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற அருமையான கதை சுந்தர் அண்ணா.
பொருத்தமான திருக்குறள்.
தலைவரது தற்போதைய எண்ண ஓட்டங்கள் குறித்த உங்களது வரிகள் மிக மிக அருமை. தலைவரை நன்கு புரிந்து கொண்டவர்கள் இவ்வண்ணம் தான் சிந்திப்பார்கள்.
////இந்த மருத்துவ ஒய்வு காலத்தைக்கூட தலைவர் தன்னை சுய பரிசோதனை செய்யத்தான் பயன் படுத்தி இருப்பாரே தவிர, சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதைப்போல எதிர் காலம் குறித்து தீவிரமான திட்டங்கள் தீட்டுவதில் அல்ல.////
தலைவரது மன நிலையைப்படம் பிடித்துக்காட்டும் அற்புதமான வரிகள். நண்பர் ஹரி சிவாஜி கூறி உள்ளதைப்போல எதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலை வேண்டும். அது இறைவன் சித்தம்.அதை மனப்பூர்வமாக ஏற்று அதில் ஒளிந்திருக்கும் வாழ்க்கையின் சாராம்சத்தைப்புரிந்து வாழ்ந்தால் நமக்கு எல்லோருக்கும் நல்லது-உண்மையான வரிகள்.
மதிப்பிற்குரிய திரு.பாலகுமாரன் அவர்கள் கூறியதைப்போலவும், மேற்கண்ட கதை கூறுவதைப்போலவும் தலைவர் ஆன்மீக உலகை ஆளப்பிறந்த ஞானிகளில் ஒருவர்.அவர் அரசியலுக்கு வரவோ, நாட்டை ஆளவோ மாட்டார். இதை அவரது மேடைப்பேச்சுக்களையும்,திரைப்பட வசனங்களையும் நன்கு கூர்ந்து கவனித்தால் புரியும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பெரிதாக நல்லது எதையும் செய்து விட முடியாது என்பதை நன்கு உணர்ந்து வைத்திருப்பவர் நம் தலைவர்.அரசியலுக்கு வந்து ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்ய அவர் முயன்றாலும்,அவருக்குக்கீழ் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு தருவது என்பது இன்றைய சூழ்நிலையில் இயலாத காரியம் என்பதால் தலைவர் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டார் என்பதே நிதர்சனமான, யதார்த்தமான உண்மை.
அதைப்போலவே தலைவர் சென்னை திரும்பும் பொழுது அவரை வரவேற்க மிக அதிகமாக கூட்டம் கூடுவது அவரையும், பொதுமக்களையும் பாதிக்கக்கூடியதாக அமையும். எனவே யாருக்கும் பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அவரது வருகையை கொண்டாடுவதோடு, இனி வரும் காலங்களில் தலைவர் எவ்வித நோய்க்கும் ஆட்படாமல் பூரண உடல் நலத்தோடு பல்லாண்டு காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி வேண்டுவதே சிறந்தது.அதையே தலைவரும் விரும்புவார்.
//நண்பர்களே, ஆண்டவன் நினைத்தால் எதுவும் நடக்கும். எப்போதும் நடக்கும். அது எப்படி நடக்கும் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் நடந்துவிடும். சரி தானே?//
நாம் நினைப்பது போல் தலைவர் வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும், நம் மக்கள் நன்றாக இருப்பார்கள்..
இது நம் எல்லோருடைய கனவு..
கடவுள் அருளோடு இது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருப்போம் . நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்..
தலைவர் வரும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கும்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
//அரசியலுக்கு வந்து ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்ய அவர் முயன்றாலும்,அவருக்குக்கீழ் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு தருவது என்பது இன்றைய சூழ்நிலையில் //
நண்பர் திரு உதயகுமார் :
எதுவும் சாத்தியமே … இன்றைய சூழ்நிலையை மாற்ற தான் கடவுள் தலைவரை அன்றே படைத்திருந்தால்
நடக்கிறது நடக்காம இருக்காது
நடக்காம இருபது என்றைக்கும் நடக்காது
சுந்தர்ஜி தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற கதையையும் கருத்தையும் கூரியுளிர்கள். எழுத்தாளர் சொன்ன அதே வாசகம் தான் என்னுடைய மனத்திரையில் வந்து வந்து செல்கின்றன.
.
1975 தலைவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் 1981 லதா என்ற பெண்ணை மணப்பார் என்று.
.
1978 நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் 1990 களில் இந்திய சினிமாவின் icon -அக தான் வருவார் என்று.
.
1990 களில் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் 1996 தன்னை தேடி தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வரும் என்று.
.
2000 அவருக்கு தெரியாது, 2010 - இல் இந்திய நாடே அவர் நடித்த எந்திரன் படத்தை துக்கி வைத்து கொண்டாடும் என்று.
.
இவை அணைத்து தன்னுடைய உழைப்பால் கிடைத்து என்று தலைவர் நினைத்ததே இல்லை. இறைவன் தனக்கு வழங்கியது தான் என்று தலைவர் எண்ணுகிறார். இது போல தனது வாழ்கையில் அவர் பாத்த ஏற்றங்களும் இறக்கங்களும் ஏராளம் ஏராளம். இவை அனைத்தும் இறைசெயல் என்று நம்புகிறார்.
.
தலைவரின் அரசியல் பிரவேசமும் இப்படி தான் அமையும் என்று என்னுடைய உள்மனம் சொல்கிறது. கணப்பொழுதில் எது வேண்டுமானாலும் நடக்கும். தலைவர் நிச்சயம் வருவார்!!!!!!!!
.
rajni will rule tamil nadu
இந்த வார அனந்த விகடனில்
(பக்கம் 27 - 06.07.2011) லதா ரஜினிகாந்தின் பேட்டி வந்துள்ளது.
மிகவும் அருமையான பதிவு.
அதை நீங்கள் வெளி இடுங்கள்.
நன்றி
விமல்
——————————————-
Ya… i too saw it. It is ready. Just have to type intro and publish.
- Sundar
super 100% correct.
Awesome story & message…
ஏற்தாமோ, ஏறக்கமோ எதைமே ஏற்பவர்…
ஆயிரம் அதிசயம் அமைந்தது தலைவர் ஜாதகம்….