









You Are Here: Home » Featured, VIP Meet » ‘ராஜா என்பார் மந்திரி என்பார்..’ பாடல் தோன்றிய பின்னணி & ‘ப்ரியா’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரின் எளிமை! இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் நேர்காணல் – Part 2
இயக்குனர் எஸ்.பி.எம். அவர்களுடனான நமது சந்திப்பின் தொடர்ச்சி இது.
இம்முறை நாம் எஸ்.பி.எம் அவர்களை சந்திக்க செல்லும்போது, நம் நண்பர்கள் சிலரையும் உடன் அழைத்து சென்றிருந்தேன். அதற்காக அவரது அனுமதியும் பெற்றிருந்தேன். நண்பர்கள் மாரீஸ் கண்ணன், ரோபோ சத்யா, ஜான், ஹேமந்த் ஆகியோர் வந்திருந்தனர். ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள அவரது அறையில் தான் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் நாம் சென்றவுடன், திரு.எஸ்.பி.எம். நம்மை வரவேற்றார்.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் அவர்களின் படிப்பு மற்றும் செய்து வரும் வேலை ஆகியவைபற்றி கூறி அறிமுகம் செய்து வைத்து வைத்தோம்.
நமது கேள்விகள் தவிர நம் நண்பர்களும் ஏதாவது எஸ்.பி.எம். அவர்களிடம் கேட்க விரும்பினால் கேட்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் கேட்க விரும்பிய கேள்விகளை கேட்டார்கள். எஸ்.பி.எம் அவர்கள் எங்கள் அனைவரது கேள்விகளுக்கும் கூறிய பதில்கள் இந்த பதிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. கேள்வி-பதிலுக்கு பொருத்தமான சம்பந்தப்பட்ட பட வீடியோ காட்சிகளும் தரப்பட்டுள்ளன. அந்தந்த கேள்வி-பதிலை படித்தவுடன் அந்தந்த வீடியோவை பார்ப்பது உங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்கும் என்பது உறுதி. சம்பந்தப்பட்ட படத்தை உடனே முழுதும் பார்க்க விரும்புவீர்கள்.
இது போன்ற நேர்க்கானல்களில் எமக்கு கிடைக்கும் நேரத்தில் இயன்றளவு சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டுள்ளோம். இந்த எளிய முயற்சியை குறைகளை பொருட்படுத்தாமல் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம்.
உரையாடலின் தொடர்ச்சி…
நாம் : “புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் இடம்பெறும் ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ பாடல் ரஜினி அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல இருக்கும்…. அத்துனை ஆண்டுகளுக்கு முன்பே (1977 ) அப்படி ஒரு பாடல் அவரை வைத்து தோன்றியது எப்படி? அந்த பாடலின் பின்னே ஏதாவது சுவாரஸ்யம் உண்டா? (கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள். எனவே தான் எதுவெல்லாம் தனக்கு இல்லை என்று இந்தப் பாடலில் ரஜினி பாடினாரோ (மனுஷன் சும்மா அனுபவச்சி பாடி நடிச்சிருப்பாருய்யா இந்த பாட்டுல மட்டும்!) அதுவெல்லாம் அவருக்கு பின்னாளில் குறைவின்றி கிடைத்தது. அது தான் இந்தப் பாடலின் சிறப்பு. (பாடலாசிரியர் : பஞ்சு அருணாச்சலம்)
எஸ்.பி.எம். : அது அந்த காரெக்டரை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது. இருப்பினும் ரஜினி சாருக்கு அப்படியே சூட் ஆகிவிட்டது. எல்லாம் இருந்தும் எதுவும் அற்றது போல ஒரு கேரகடர் அது. நண்பன் ஏமாற்றிவிட்டு செல்லும் பெண்ணை, ஊராரின் பழியிலிருந்து காப்பாற்ற தான் மனைவி போல நடிக்க வைப்பார் ரஜினி. “திரையை நான் விலக்கமாட்டேன். நீங்களாக விலக்கி வருவது உங்கள் விருப்பம்” என்று ரஜினி சுமித்ராவிடம் சொல்வதும், அதற்கு சுமித்ரா “களங்கப்பட்ட இந்த உடலை தெய்வமா இருக்கிற உங்களுக்கு தர விரும்பவில்லை” என்று சொல்வார். அந்த சூழலில் தோன்றியது தான் இந்தபாடல். பஞ்சு அருணாச்சலம் எழுத, இளையராஜா இசையமைப்பில் வந்த அந்தப் பாடல் காலத்தால் அழியாது இன்றும் நிற்கிறது என்றால் அதற்கு காரணம், பாத்திரத்தின் தன்மையோடு வரிகள் ஒன்றியிருந்ததும், ரஜினி அவர்களின் இயல்பான அற்புதமான நடிப்பும் தான். அந்த காலகட்டங்களில் ரஜினி அவர்களுக்கு அந்த பாடல் மிகவும் பொருந்தியிருப்பதாக ரசிகர்கள் சொன்னார்கள்.
Raja Enbaar Mandhiri Enbaar - Song video
நாம் : ரஜினி அவர்களை வைத்து நீங்கள் இயக்கிய படம் ‘ப்ரியா’. அவரின் கேரியரில் ஆரம்ப காலத்தில் (1978) வந்த படம் அது. அந்த சமயத்திலேயே - அதாவது வளர்ந்து வரும் சமயத்திலேயே - வெளிநாட்டிற்கு சென்று ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அனுபவம் அவருக்கு இதன் மூலம் கிடைத்தது. அதை அவர் எப்படி உணர்ந்தார்? ஏனெனில், ரஜினி அவர்கள் படப்பிடிப்புக்காக முதன் முதலில் அயல்நாட்டிற்கு ஷூட்டிங் சென்ற படம் ‘ப்ரியா’ தான்.
எஸ்.பி.எம். : எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாரான படம் ‘ப்ரியா’ மட்டும் தான். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வேறு சில வந்தபோதும், முழுக்க முழுக்க தயாரான படம் ‘ப்ரியா’ என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல 1978 இல் வந்த ‘ப்ரியா’ தான் ரஜினியின் 25 வது படம். மேலும் அவர் முதன்முதலில் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று நடித்த முதல் படம்.
‘ப்ரியா’ ஷூட்டிங் வித்தியாசமான அனுபவம் தான். ரஜினிக்கு அல்ல. எங்களுக்கு. ப்ரியாவின் பெரும்பான்மையான படப்பிடிப்பு ஹாங்காங்கில் தான் நடந்தது. அந்த நகரம் முழுக்க தீவுகளாக இருக்கும். ஆங்காங்கே ஏறி ஏறி இறங்கவேண்டும். சுமைகளை நாம் தான் தூக்கிக் கொள்ள வேண்டும். நமது சுமைகளை மட்டுமல்ல. படப்பிடிப்பு உபகரணங்கள் மற்றும் பேட்டரி இவற்றை கூட நாம் தான் சுமந்து செல்லவேண்டும். அதை சுமப்பதற்கு எல்லாம் அங்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே ஆளாளுக்கு எதையாவது தூக்கிக் கொண்டு நடந்தே செல்வோம். அப்போது ரஜினி தனது இரண்டு தோள்களிலும் இரண்டு பாட்டரிகள் தூக்கிகொள்வார். ‘நீங்க எதுக்கு ரெண்டு தூக்கறீங்க? ஒன்னு இங்கே கொடுங்க’ என்று கேட்டால், ‘இல்லையில்லே.. ரெண்டு தூக்கிகிறது தான் எனக்கு ஈசியா இருக்கு. இல்லேன்னா பாலன்ஸ் கிடைக்கமாட்டங்குது” என்று கூறி இரண்டு பாட்டரிகள் தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு வேகமாக நடப்பார். தான் ஒரு முன்னணி நடிகர் என்ற பந்தாவெல்லாம் அவருக்கு கிடையாது. கிடைத்ததை சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு, எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்றெல்லாம் அடம்பிடிக்காது ஷூட்டிங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அந்த பணிவு தான் அவர இந்த அளவு இந்த இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
நாம் : ‘ப்ரியா’ படத்தில் ‘ஜூலியஸ் சீசர்’ நாடகக் காட்சி இடம்பெற்றது எப்படி? அதற்கு பின்னணி ஏதாவது உண்டா? (தன்னை குத்த பயன்படுத்திய கத்தியை, தன்னை கொல்ல வந்த அடியாளிடம் தலைவர் கொடுத்து, “இந்த கத்தியை கொண்டுபோய் உங்க தலைவன் கிட்டே கொடுத்து, சந்திக்க வேண்டிய நேரத்துல சந்திப்பேன்னு சொல்லு” என்று கூறும் டயலாக் இருக்கிறதே…. எத்துனை முறை பார்த்தாலும் சலிக்காது….! வீடியோ இணைக்கப்பட்டிருக்கிறது.)
எஸ்.பி.எம். : அது எழுத்தாளர் சுஜாதாவின் ஐடியா. ரஜினிக்கு ஏதாவது வித்தியாசமான இன்ட்ரோ கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது தோன்றியது அந்த நாடக்காட்சி. ரஜினி படங்களில் வரலாற்று நாடகங்களின் காட்சிகள் இடம்பெறுவதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த படம்.
Superstar as Julies Caesar - Video
நாம் : அதில் ஏதாவது சுவாரஸ்யம் உண்டா?
எஸ்.பி.எம். : நண்பர்களாலேயே குத்தி கொலை செய்யப்படும் காரக்டரில் ரஜினி அந்த சீக்வென்ஸில் நடித்திருப்பார். காட்சிப்படி அவர் ஜூலியஸ் சீசர். ஜூலியஸ் சீசருக்கு மீசை கிடையாது. ஆனால் ரஜினி மீசையுடன் தான் நடித்திருப்பார். எவ்வளவோ சொல்லியும் மீசையை எடுக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார். இருப்பினும் அவரது ஆக்டிங் திறமையால் அந்தக் காட்சியை ரசிக்கும்படி செய்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி கூட இது பற்றி கேட்டார். ‘என்னடா ஜூலியஸ் சீசர் காரக்டருக்கு மீசையோடு அவன் நடிச்சிருக்கான்?” என்று. ஆனால், சில வருடங்கள் கழித்து கடைசீயாக அவர் அவரது குருநாதர் கே.பி. சொல்லித் தான் ‘தில்லு முள்ளு’ படத்துக்காக மீசையை எடுத்தார்.
நாம் : நீண்ட காலம் படம் தயாரிக்காமல் இருந்து பின்னர் எட்டு ஆண்டுகள் கழித்து 1980 இல் முரட்டுக்காளை தயாரிக்க ஏ.வி.எம். முடிவு செய்தபோது, அதில் நீங்க தான் டைரக்டர். அதை எப்படி உணர்ந்தீர்கள்? ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற பதட்டம் இருந்தததா?
எஸ்.பி.எம். : 1972 இல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்துக்கு பிறகு எட்டாண்டுகள் கழித்து ஏ.வி.எம் தயாரித்த நேரடி தமிழ் படம் ‘முரட்டு காளை’. இடையில் நானும் ரஜினியும் வேறு சில படங்களில் பணிபுரிந்திருந்தமையால் எங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்தது. மற்றபடி ஏ.வி.எம். எனக்கு தாய் வீடு என்பதால் நான் எந்த வித பதட்டத்தையும் உணரவில்லை.
‘Murattukkalai’ famous fight sequence in train - Video
நாம் : இன்றும் ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத படம் ‘முரட்டுக்காளை’. அந்த ட்ரெயின் ஃபைட் சீக்வென்ஸ் மறக்க முடியாத ஒன்று.
எஸ்.பி.எம்: இப்போதுள்ளதை போல, நவீன தொழில்நுட்பங்கள் அப்போது இல்லை. இருந்தாலும், சிறப்பாக அது கையாளப்பட்டிருக்கும்.
Raja Chinna Roja - Animation FX even decades ago - video
நாம் : தலைவரின் படத்தில் அந்தக் காலத்திலேயே கார்ட்டூனை புகுத்தியவர் நீங்கள். ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம்’ பாடல் இந்த வகை படங்களுக்கும் பாடல்களுக்கும் ட்ரென்ட் செட்டராக அமைந்தது.
எஸ்.பி.எம். : இப்போது திரைப்படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு CG, VFX என்று பல தொழில்நுட்பங்கள் உள்ளன. நினைப்பதை எடுக்க முடிகிறது. அப்போது அப்படியெல்லாம் கிடையாது. இருந்தாலும் குழந்தைகளை கவர வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பி, அந்த கார்ட்டூன் சீக்வென்ஸை உருவாக்கினோம். முதலில் அயல்நாட்டு நிபுணர்களின் உதவியோடு கார்ட்டூன் அனிமேஷனை உருவாக்கிவிட்டோம். பிறகு, ரஜினி சார், கௌதமி, அந்த குழந்தைகள் வரும் பாடல் காட்சியை ஷூட் செய்தோம். ஷூட் செய்யப்பட்ட பாடல் காட்சியை ஏற்கனவே உருவாக்கப்பட்ட அனிமேஷன் காட்சியில் FUSE செய்தோம். இதோ போல, கமலின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்திலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை ஒரு பாடலுக்கு பயன்படுத்தியிருக்கிறேன்.
Nallavanukku Nallavan - two contrast roles - Video
நாம் : தலைவரை வைத்து நீங்கள் இயக்கிய படங்களில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த படத்தில் தலைவரை இரு வித கான்ட்ராஸ்ட் ரோல்களில் - அதாவது ஒரு ரவுடி அப்புறம் தொழிலதிபராக விளங்கும் ஒரு பாசமிக்க அப்பா… என கட்டியிருப்பீர்கள். தலைவரும் பிய்த்து உதறியிருப்பார். அந்த படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும்போது தலைவரை மனதில் வைத்து எழுதியதா? அல்ல எழுதி முடித்தபின்பு அதற்கு தலைவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாரா?
எஸ்.பி.எம்: அந்த கதையை ரஜினி சாரை மனதில் வைத்தே எழுதினேன். எழுதும்போதும் சரி, ஷூட்டிங்கிற்க்கு தயாரான போதும் சரி… ரஜினி சாரை மனதில் வைத்தே பல விஷயங்களை அதில் சேர்த்தேன்.
நாம் : தலைவர் எப்படி இருக்கிறார்? அவர் வந்ததிலிருந்து அவரை நேரில் சென்று பார்த்தீர்களா?
எஸ்.பி.எம். : நல்லாயிருக்கிறார். நேர்ல இன்னும் போய் பார்க்கலை. ஃபோன்ல தான் பேசிக்கிட்டுருக்கோம். அவர் கூப்பிடத் தான் செய்றாரு. இருந்தாலும் நான் தான் போகலை. நேர்ல வரமாட்டோம்னு நான் தான் சொல்லிக்கிட்டுக்கேன். யாரும் அவரை நேர்ல போய் பார்த்து தொந்தரவு செய்யவேண்டாம்னு எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டுருக்கேன். நானே சொல்லிட்டு நானே போனா நல்லாயிருக்காதுன்னு போகலை.
நாம் : சார்… ரொம்ப நாலா எங்களுக்கு இந்த சந்தேகம் இருக்கு. ரஜினி அவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?
எஸ்.பி.எம். : பொது இடங்களில் ‘ரஜினி சார்’ என்று தான் கூப்பிடுவேன். தனிமையில் இருக்கும்போது ‘ரஜினி’ என்று பெயர் சொல்லி அழைப்பேன். அதுதான் அவருக்கும் பிடிக்கும்.
நாம் : தலைவரை வைத்து இயக்கிய எல்லா டைரக்டர்களும் ஏதாவது ஒரு காட்சியிலோ அல்லது பாடலிலோ காமிராவில் முகம் காட்டிவிட்டார்கள். நீங்க மட்டும் ஏன் இன்னும் அவருடன் நடிக்கவில்லை?
எஸ்.பி.எம்.: நான் திரைத்துறைக்கு வந்தது முதல் டைரக்ஷன் தான் எனது லட்சியமாக இருந்தது. நடிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. படங்ளை இயக்குவதே எனக்கு திருப்தியை அளித்தது. ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மட்டும் ஷூட்டிங் சம்பந்தமான ஓரிரு காட்சிகளில் வந்திருப்பேன். மற்றபடி நடித்ததில்லை.
SPM’s cameo in ‘Anbulla Rajinikanth’
நாம் : ஆனால் நீங்கள் ‘ராணா’வில் கண்டிப்பாக ஏதாவது ஒரு சிறிய காரக்டரிலாவது நடிக்கவேண்டும் சார். நடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நடித்தால் ராணா இன்னும் சிறப்பு பெறும்.
இதற்கு பதிலளிக்காது கையெடுத்து கும்பிட்டு போதும் போதும்… என்று சைகை செய்தார்.
நாம் : “சார் இவர்களெல்லாம் மிகத் தீவிர ரஜினி ரசிகர்கள். ரஜினி அவர்கள் மீது பெரு மதிப்பும் பாசமும் வைத்திருப்பவர்கள். ‘தலைவர்’ சார்பாக நீங்கள் இவர்களிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும்” என்று நண்பர்களை காட்டி கூறினேன்.
எஸ்.பி.எம். : எல்லாரும் அவங்கவங்க கடமையை முதல்ல ஒழுங்கா செய்யனும். படிப்பு, வேலை, அப்பா, அம்மா, குடும்பம் இது எல்லாத்துக்கு பிறகு தான் மத்ததெல்லாம். உங்களோட ஒய்வு நேரத்துல அவரை பற்றிய எந்த விஷயமானாலும் ஈடுபடவேண்டும். நிச்சயம் அவரவர் ஒரு வேலை செய்ய வேண்டும். அவர் சார்பாக நான் எங்கு போனாலும் இதை தான் அவரும் வலியிறுத்தச் சொல்கிறார். ஹேமந்த்தை பார்த்து, தம்பி குறிப்பா உனக்கு தான் என்றார். (ஹேமந்த்தின் சிற்சில லீலைகளை பற்றி நாம் ஏற்கனவே ஒரு சின்ன இன்ட்ரோ அவருக்கு கொடுத்திருந்தோம்!).
சந்திப்பின் போது எஸ்.பி.எம். அவர்களுக்கு நம் தளம் சார்பாக ஏதாவது பரிசளிக்க விரும்பி, ‘ரஜினியின் பன்ச்தந்திரம்’ நூலை பரிசளிப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் மாரீஸ் கண்ணன், ‘அவர் இதை ஏற்கனவே படித்திருப்பாரே சுந்தர். வேறு ஏதாவது வாங்கி செல்லலாமே’ என்றார். ‘அதில்லை மாரீஸ்… நான் சென்ற முறை இவரை சந்தித்த போதே இதை பரிசளிக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு உடனடியாக இந்த புத்தகம் கிடைக்கவில்லை. ஆகையால் இந்த முறை நிச்சயம் இதைத்தான் அவருக்கு கொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது’ என்று கன்வின்ஸ் செய்தேன்.
சந்திப்பு நிறைவு பெற்றபோது அனைவரும் எஸ்.பி.எம். அவர்களுடன் தனித் தனியாக புகைப்படமெடுத்துக்கொண்டோம். அப்போது மாரீஸ் கண்ணனை அவரிடம் அறிமுகம் செய்துவைத்து, “எங்கள் தளம் சார்பாக இந்த நூலை உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறோம் சார். இதை நீங்கள் ஏற்கனவே படித்துவிட்டீர்களா என்று எங்களுக்கு தெரியாது. இருப்பினும் எங்கள் ஆசை இது சார். அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறி நூலை காட்டினோம்.
“அட…இந்த புக்கை நான் இன்னும் படிக்கலியே. இங்கே பக்கத்துல கிடைக்குமான்னு ட்ரை பண்ணினேன். கிடைக்கலை. நல்லதா போச்சு” என்று கூறி அன்போடு அந்த நூலை ஏற்றுக்கொண்டார் எஸ்.பி.எம்.
சந்திப்பு முடியும் தருவாயில், அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தோம். அப்போது உடன் வந்த நண்பர் ஒருவர், “தலைவரை நேசிக்கும் அளவிற்கு உங்களையும் நாங்கள் நேசிக்கிறோம். தலைவரை வைத்து பல பிரமாதமான ஹிட்டுக்களை கொடுத்தவகையில் நீங்கள் என்றுமே எங்கள் அன்பிற்குரியவர்” என்று கூறியபோது, கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த சந்திப்பு, எளிமையாக, நிறைவாக, மறக்க முடியாத வகையில் இருந்தது.
நம் சந்திப்பு நடைபெற்ற அடுத்த சில நாட்கள் கழித்து அவரை தொடர்பு கொண்டு “இந்த தொகுப்பை விரைவில் வரவிருக்கும் நண்பர்கள் தினத்தில் ‘நண்பர்கள் தின ஸ்பெஷல்’ பதிவாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன். உங்கள் நண்பர் ரஜினி சார் பற்றி எங்கள் வாசகர்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது சொல்லுங்களேன்…” என்றேன். (இந்த பதிவு நண்பர்கள் தின ஸ்பெஷலாக வெளியிட தீர்மானித்திருந்தேன். ஆனால், தயார் செய்ய நேரம் பிடித்ததால் வெளியிடமுடியவில்லை. அதற்க்கு பதில் வேறு சில ‘பிளாஷ் பேக்’ பதிவுகளை அளித்திருந்தேன்.)
எஸ்.பி.எம் : “நட்புக்கு மரியாதை கொடுப்பவர் ரஜினி. நண்பர்களை பெரிதும் மதிப்பவர் ரஜினி. நட்பில், மதம், இனம், மொழி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு அனைவரையும் நேசிப்பவர் அவர். நட்பில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் எல்லாம் அவர் பார்ப்பதில்லை. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் நடந்துகொள்வார். அவர் ஒருவருடன் கொள்ளும் நட்பு என்பது வெறும் ‘ஹாய்’ சொல்லும் நட்பல்ல. அது இதயத்தின் அடியாழத்திலிருந்து வருவது.
‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு’
என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருவது அவர் எல்லோரிடமும் கொள்ளும் நட்பு. எங்கள் இருவருக்கிடையேயுள்ள நட்பும் அத்தகையதே…! ” என்று கூறி முடித்தார் எஸ்.பி.எம். அவர்கள்.
- Part 3 to be continued…
(Special thanks to : Kodambakkam Naveen for helping in encoding videos)
—————————————————————
சோதனையான காலகட்டங்களில் சூப்பர் ஸ்டாரின் சிந்தனை எப்படி இருக்கும்? அவர் அதை எப்படி எதிர்கொள்வார்? திரு.எஸ்.பி.எம். அவர்களின் பேட்டி தொடரும்…..
—————————————————————
Also check SPM sir’s interview Part 1 @
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10658
—————————————————————
[END]
மிக்க நன்றி சார் … தலைவரின் இயக்குனர் என்று அன்போடு அழைக்க படும் திரு.முத்துராமன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அளித்தது தலைவர் சூப்பர்ஸ்டாரின் ரசிகனாக எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ….
என்றும் தலைவர் வழியில் ஹேமந்த் ரஜினி………
Nice interview……and good pictures…..
Thanks for sharing na….
///பொது இடங்களில் ‘ரஜினி சார்’ என்று தான் கூப்பிடுவேன். தனிமையில் இருக்கும்போது ‘ரஜினி’ என்று பெயர் சொல்லி அழைப்பேன். அதுதான் அவருக்கும் பிடிக்கும்..////- கலக்கல் திரு.முத்துராமன் சார் ..
அணைத்து கேள்விகளுக்கும் மிக அழகாகவும், பொறுமையாகவும் பதில்கள் சொல்லி இருக்கும் திரு.முத்துராமன் சார் அவர்களுக்கு நன்றிகள்… கலக்கல் சுந்தர் அண்ணா… என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
Thank you anna and all for this interview..
When lion come out.. After polling date we are waiting for a speech.
அருமையான கேள்விகள்,அதற்குத்தகுந்த அருமையான, அழகான பதில்கள்.பொருத்தமான புகைப்படங்களும், வீடியோக்களும்அருமையாக உள்ளது.தலைவர் நட்புக்கு கொடுக்கும் மதிப்பை அருமையாகக்கூறியுள்ளார் திரு.முத்துராமன் அவர்கள்.இவ்வளவு நெருக்கமாக இருக்கக்கூடிய அவரே தற்போது தலைவரை நேரில் சந்தித்து தொந்தரவு செய்ய விரும்பாதது பாராட்டுதற்குரியது.ரசிகர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தலைவர் எண்ணுவதைப்போலவே இவரும் கூறியுள்ளார்.திரு.முத்துராமன் அவர்களக்கு மனமார்ந்த நன்றிகள் பல.அதோடு நமது தள நண்பர்களது புகைப்படங்களையும் கொடுத்துள்ளீர்கள்.மொத்தத்தில் மிக அருமையான பதிவு.நன்றி சுந்தர் அண்ணா.
தலைவர் மீசை மேல் எவளோ பற்று வச்சிருகிறார்
அவர் மீண்டும்இதனை வருடங்கள் கழித்து என்திரனுகாக மீசி எடுத்திருக்கார் என்றால் அவரது தொழில் பக்தி அவரது அந்த அர்ப்பணிப்பு ….
….
அதும் சீசர் நாடகத்தில் அந்த தமிழ் வசன உச்சரிப்பு (அந்த சிவாஜிக்கு அப்புறம் நம்ம தலைவர் தான் இவளோ தெளிவா பேசுறார் வேற எவனாவது இப்படி கணிர் என்ற குரலை கொண்டு பேச முடியும் ????)
மற்றும்
தலைவர் கத்தியை திருப்பி பிடிக்கும் ஸ்டைல்
அதற்கு உச்சமாய் அவரது இன்றோ
அப்போவே பாஷா ட்ரைலர் பார்த்த மாத்ரி இருக்கு
SPM sir ரொம்ப ரொம்ப நன்றி
தலைவர் superstar என்ற இமாலய பிம்மத்தை செதுக்கிய சிற்பி நீங்கள்
நாகை மாவட்ட தலைவர் ஜ ஹபீப்ரஹிமன்
மிக்க நன்றி சார்
இவ்வளவு பெரிய இயக்குனர்… தலைவரோடு பல படங்களில் பணிபுரிந்த SPM சார் அவர்களை நாங்கள் சந்திப்போம் என்று நினைத்து பார்கவில்லை… Thanx a lot fr giving this oppurtunity to us
It was a gr8 day… we had a superb experience
Ennoda Photo Caption //NALLAVANUKU NALLAVAN// konjam overathaan iruku
aana nalla iruku
thank u sundar ji
நல்ல பதிவு. நன்றி சுந்தர்
நண்பர்கள் SPM சார் ஐ சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!! குறிப்பாக என் இனிய நண்பன் ரோபோ சத்யா சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. ஒவ்வொரு கேள்வியும் எவ்வளவு தெளிவாகவும் “matured” ஆகவும் உள்ளது! SPM சார் சாதாரண மனிதர் அல்ல.. தலைவரின் நண்பரும், இயக்குனராகும்.. அவரை சந்திக்கும் போது எந்த வித பதட்டமும் இன்றி இவ்வளவு அழகாக நேர்காணலை முடித்ததற்கு தலைவர் ஸ்டைலில் “ஹட்ஸ் ஆப்”.
ஒவ்வொரு பதிவிற்கு அடுத்தும் ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் பொது அருமையாக உள்ளது..
*********************************************
Be Good; Do Good.
தலைவரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் தன்னடக்கதோடு எங்களை வரவேற்ற திரு.எஸ்.பி.எம். சாரை சந்திக வாய்பு அளித்த சுந்தர்க்கு எனது நன்றிகள்…
.
“தலைவரை நேசிக்கும் அளவிற்கு உங்களையும் நாங்கள் நேசிக்கிறோம். தலைவரை வைத்து பல பிரமாதமான ஹிட்டுக்களை கொடுத்தவகையில் நீங்கள் என்றுமே எங்கள் அன்பிற்குரியவர்” என்று கூறியபோது, கைகூப்பி நன்றி தெரிவித்தார்.'''
.
மறக்கமுடியாத சந்திப்பு…
.
சுந்தர்…நேரில் பார்த்து கேட்ட கேள்விபதிலைவிட நீங்கள் தொகுத்திருக்கும் இந்த பதிவு கிரேட்….அதுவும் பொருத்தமான போட்டோ மற்றும் வீடியோ செலக்ட் செய்து அசதிவிடீர்கள்….ஹட்ட்ஸ் of சுந்தர்…
.
மாரீஸ் கண்ணன்
அன்று spm சாரை சந்தித்த நம் நண்பர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள்..
தலைவர் பல முகங்கள் காமித்த படங்களில் spm சார் படங்கள் முக்கிய இடம் பிடிக்கும்..
மீண்டும் ஒரு "ஆறில் இருந்து அறுபது வரை", "முள்ளும் மலரும்"(மகேந்திரன்) போல் படங்களில் தலைவரை பார்க்க முடியுமா????????????
தலைவர் அப்படி நடித்தால் மிக மிக நன்றாக இருக்கும்..
நடிப்பாரா???????????
சியர்ஸ்..
பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
பா. கண்ணன்.
டாப் சந்திப்பு ….மிகவும் ரசித்த சந்திப்பு நன்றி சுந்தர் மற்றும் நண்பர்களுக்கு !!!
"எந்நிலை சென்றாலும் தன்னிலை மாறாதவர்" நம் தலைவர்.., "பிரியா" பட ஷூட்டிங் அனுபவங்கள் இன்றைய நடிகர்களுக்கு ஒரு பாடம் ! நமக்கும் கூடத் தான் !
-
'“இந்த கத்தியை கொண்டுபோய் உங்க தலைவன் கிட்டே கொடுத்து, சந்திக்க வேண்டிய நேரத்துல சந்திப்பேன்னு சொல்லு” '' — இதுவும் கூட தலைவரின் "பன்ச்" தந்திரங்களுள் ஒன்று..!
-
"பாஞ்சு பாயுற பட்டம்
இது பட்டயக் கிளப்பற பட்டம்
சூப்பர் ஸ்டாரு பட்டம்
நம் பட்டம் "
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
பேட்டி மிக சிறப்பாக வந்துள்ளது ,நண்பர்கள் எல்லாரும் கலக்குறாங்க ,வாழ்த்துக்கள் ,தொடரும் உங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஜி
்sp muthuraman sir movies thalaivar all are memorable except kazhugu which I enjoy n no of times hats off to great sp muthuraman who changed the fortunes of thalaivar
வாழ்த்துக்கள் நண்பர்களே
தலைவரின் மிக சிறந்த நண்பர் ,பழகுவதில் எளிமையானவர் ,அவரை பார்த்தால் இவரா இவ்வளவு ஹிட் கொடுத்தவர் என்று தோன்றும் அளவிற்க்கு எளிமை
// நண்பர்கள் SPM சார் ஐ சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!! குறிப்பாக என் இனிய நண்பன் ரோபோ சத்யா சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. //
மிக்க நன்றி அன்பு நண்பர் ரஜினி மனோஜ் அவர்களே…
sundarji, Please tell me where i wil get this "Rajinis Panchthantra" book? please give me book stall address. Tnx.
—————————————————-
It is available in all leading bookstores like Connexions, Landmark, Odyssey, Higginbothams etc. Anyway, you can purchase it thru online.
English version: (Rs.120/-) http://www.landmarkonthenet.com/books/rajini-s-pu...
Tamil version: (Rs.80/-) http://www.landmarkonthenet.com/books/rajini-s-pu...
- Sundar