









You Are Here: Home » Featured, VIP Meet » “அதான்டா இதான்டா பாடலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மகா மந்திரமும்!” — தேனிசைத் தென்றல் தேவா அவர்களுடன் ஒரு சந்திப்பு! Part 1
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவிற்கு அறிமுகம் தேவையில்லை. ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ என சூப்பர் ஸ்டாரை வைத்து ஹாட்-ட்ரிக் அடித்தவர். மூன்று படங்களும் ஆடியோ விற்பனையில் அபார சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 1994 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட ‘பாட்ஷா’ படத்தின் ஆடியோ, விற்பனையில் சரித்திரம் படைத்தது. வெளியான அன்றே 1.5 லட்சம் காசட்டுகள் விற்று ‘டபுள் பிளாட்டினம்’ பெற்றது.
‘மனசுக்கேத்த மகராசா’ (1989) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா அவர்கள் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகில் இவரை வைத்து முகவரி தேடிக்கொண்ட தயாரிப்பாளர்கள், மற்றும் இவர் கைதூக்கி விட்ட இயக்குனர்கள், நடிகர்கள் பலர் உண்டு. 1992 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாமலை’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற தேவா பின்னர் ரஜினி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இன்றளவும் இவர் இசையமைத்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய மூன்று படங்களும் ரஜினி ரசிகர்களின் எவர்க்ரீன் ஃபேவரைட் படங்களுள் நிச்சயம் உண்டு. அதுவும் மூன்று படங்களும் ஒன்றையொன்று விஞ்சிய எதிர்பார்ப்புக்கள் கொண்ட நேரத்தில் வெளியானது. பாடல்களை ஹிட்டாக்கியே தீரவேண்டும் என்ற கடுமையான பிரஷருக்கிடையே மேற்படி படங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதை கச்சிதமாக செய்தார் தேவா.
மேற்படி மூன்று படங்களின் பாடல்களும் குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் அறிமுகப் பாடல்கள் இன்றளவும் நம் ரசிகர்களிடையே பாப்புலர். முன்னனி இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா, இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி - லதா தம்பதியினர் அளித்த விருந்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவர்
‘ரஜினிகாந்த்’ என திரு.கே.பி.யால் பெயர் சூட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு முதன் முறையாக ரஜினிகாந்த் & லதா தம்பதிகள் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அளித்த விருந்தில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் திரு.தேவா அவர்களும் ஒருவர். சூப்பர் ஸ்டாரின் நலம் விரும்பிகளில் ஒருவர். நண்பர்களில் ஒருவர்.
தேவாவின் அலுவலகத்தில் சந்திப்பு
இவரை நமது தளத்திற்காக சந்திக்க விரும்பி அப்பாயின்மென்ட் கேட்டிருந்தோம். தொடர் முயற்சிக்கு பிறகு ஒரு நாள் தேவா அவர்களிடமே பேசினோம். அவருக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நமது தளம் சார்பாக அவரிடம் சில வார்த்தைகள் நேரில் பேச வேண்டும் என்றோம். அடுத்த நாள் நம்மை தொடர்பு கொள்ளுமாறு சொன்னார். அடுத்த நாள் பேசியபோது ஒரு விடுமுறை நாளன்று அவரது தி.நகர் அலுவலகத்தில் சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைத்தது.
நண்பர்கள் மாரீஸ் கண்ணன் மற்றும் விஜய் ஆனந்த் இருவரையும் உடன் அழைத்து சென்றிருந்தேன். தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் காத்திருந்தோம். பக்தி பாடல்கள், மியூசிக் ஆல்பங்கள், மற்றும் வெளிநாட்டு பயணம் என தேவா அவர்கள் ஒரு பக்கம் தன்னை தொடர்ந்து ENGAGE கொண்டிருக்க, இந்தபக்கம் அவரது சுறுசுறுப்பிற்கு ஈடுகொடுத்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அவரது அலுவலகம் கம் ரெக்கார்டிங் ஸ்டூடியோ.
காத்திருந்த நொடிகளில் பாடலாசிரியர் கவிஞர் கபிலன் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அநேகம் பேரை அங்கே வருவதும் போவதுமாக பார்க்க முடிந்தது. சில நிமிடங்களில் தேவா அவர்கள் வர, எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தோம். வெள்ளைப் பைஜாமா, குர்தா, நெற்றி நிறைய விபூதிப் பட்டை, என எளிமையான தோற்றத்தில் தேவா அவர்களை பார்ப்பது சூப்பர் ஸ்டாரின் ஒரு பிரதியை பார்ப்பது போலிருந்தது.
நம்மை வரவேற்று, கைகுலுக்கினார். நண்பர் மாரீஸ் கண்ணனையும், முரட்டு பக்தன் விஜய் ஆனந்தையும் அவருக்கு அறிமுகப்படுத்தினோம்.
தமிழக முதல்வர் அவர்களால் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் தேவா. எனவே முதலில் அதற்க்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். “தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு உங்களுக்கு முதலில் எங்கள் தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் சார்!” என்று கூறி நாம் கொண்டு சென்ற பொக்கேவை அவருக்கு கொடுத்தோம்.
“தேங் யூ…தேங் யூ… வெரி மச்” என்றார்….!
நாம் புகைப்படமெடுக்க மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தார். “நீங்க இப்போ வாங்க…!” என்று கூறி நம்மையும் அருகே நிற்க சொல்லி, மாரீஸ் கண்ணனை க்ளிக் செய்ய சொல்லி போஸ் கொடுத்தார்.
பின்னர் எங்களை தான் அருகே அமரச் செய்தார்.
நாம் கொண்டு சென்ற புகைப்படத்தை காண்பித்து, “என்னுடையை புகைப்படத் தொகுப்பில் நான் கண்ட ஒரு ஃபோட்டோ இது. இது எப்போது எடுத்தது, எடுக்கப்பட்ட சூழல் இதை பற்றி எங்கள் வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க சார்!” என்று கேட்டோம்.
‘அருணாச்சலம்’ — ‘அதாண்டா இந்தாண்டா’ ஸாங் கம்போசிங்
புகைப்படத்தை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டார். சந்தோஷப்பட்டார். புகைப்படத்தை சில வினாடிகள் உற்றுநோக்கியவர் “இது ‘அருணாச்சலம்’ படத்தோட ‘அதாண்டா இந்தாண்டா’ ஸாங் கம்போசிங்கப்போ எடுத்தது.”
“பாட்ஷா என்கிற மிகப் பெரிய ஹிட்டுக்கு பிறகு, நான் இசையமைத்த படம் ‘அருணாச்சலம்.’ ஆகையால் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கூடவே ‘முத்து’ என்கிற மிகப் பெரிய ஹிட்டுக்கு பிறகு ரஜினி சார் நடிக்கும் படம் வேறு… கேட்கவா வேண்டும்? அதுவும் ரஜினி சாரின் இன்ட்ரோ சாங்குக்கு ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பு பற்றி கேட்கவே வேண்டாம்… சும்மா அடிச்சி தூக்கிட்டு வரணும்.. அப்போ தான். இல்லைன்னா… அவ்வளவுதான்… ”
நீங்கள் அந்த சமயத்தில் அளித்த டெலிவிஷன் பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தீர்கள்… ‘அதாண்டா இதாண்டா’ பாடலுக்கு நீங்கள் எந்தளவு முயற்சி எடுத்துக்கொண்டீர்கள்.. என்று… எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - என்றேன்.
கமர்ஷியல் பாட்டில் அருணாச்சலேஸ்வரரின் மகா மந்திரம் நுழைந்தது எப்படி ?
“ஆமாம்… இந்த பாட்டுக்கு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ‘வந்தேண்டா பால்காரன்’… பாட்டை எடுத்துகிட்டீங்கன்னா ஒரு பால்காரன் தான் நேசிக்கிற பசு மாட்டைப் பத்தி பாடுற பாட்டு. அது ஒரு வகை. ‘நான் ஆட்டோக்காரன்… ஆட்டோக்காரன்….’ ஒரு ஆட்டோ டிரைவர் தன்னோட தொழிலைப் பத்தியும் ஆட்டோவை பத்தியும் பாடுறது… இது ஒரு வகை. ஆனா… இந்த அருணாச்சலம் படத்தோட “அதாண்டா இதாண்டா…” பாட்டு … இது கம்ப்ளீட்டா டிஃபரன்ட்டான ஒன்னு… காரணம் இதுல ‘ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹா’ என்கிற அந்த மகா மந்திரம் வரும். கோவிலில் வேறு பாடலை ஷூட் செய்யப்போவதாக சொன்னார்கள். ஒரு கமர்ஷியல் பாட்டுக்குள்ளே அதுவும் ரஜினி சாரின் அறிமுகப் பாட்டுக்குள்ளே சிவா பெருமானின் மந்திரத்தை கொண்டு வர்றது என்ன அத்துனை சுலபமான வேலையா? ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. ரஜினி சார் அருணாச்சலலேஸ்வரர் மந்திரத்தை எப்படியாவது கொண்டு வரணும்னு விருப்பப்பட்டாரு. நான் ட்யூன் கம்போஸிங் பண்ணி பாடி காட்டினேன். தேவா.. எங்கே உன்னொரு முறை பாடுங்களேன்னு சொல்லி சொல்லி ரொம்ப ரசிச்சு கேட்டாரு. அப்போ எடுத்தப் படம் தான் இது.”
Adanda Idhana Song Video
“இதுல ரெண்டு விஷயம் இருக்கு… ஒன்னு நம்ம ஸ்டைல்ல பாட்டு பண்றது… இன்னொன்னு யார் ஹீரோவோ அவங்க ஸ்டைல்ல அவங்க ரசிகர்களுக்காக பாட்டு பண்றது. ரஜினி சாருக்காக நான் பண்ணின இது இது ரெண்டாவது வகை.”
வெற்றிகரமான இசையமைப்பாளர் யார்? - தேவா தரும் விளக்கம்!
தொடர்ச்சியாக தேவா அவர்கள் பேசியது..இசையை பற்றி நமக்கு ஓரளவு உண்மைகளை புரியவைத்தது…
“இசையமைப்பதில் மூணு விதம் இருக்கு. ஒன்னு ஆர்க்கெஸ்ட்ராவுக்கே பிடிக்காது. இவன்கிட்டே STUFF ஏ இல்லே. இவன் எப்படி ம்யூசிக் டிரைக்டர் ஆனான்? அப்படின்னு ஆர்க்கெஸ்ட்ராவுல இருக்குறவங்களே நினைப்பாங்க. ஆனா, அவன் படம் மக்கள் கிட்டே ரீச் ஆகும். ‘பி’ & சி ல நல்லா ஹிட்டாகும். ரெண்டாவது வகை… ஆர்க்கெஸ்ட்ராவுல இருக்குறவங்க நல்லா ரசிப்பாங்க… அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மூணாவது வகை தான் ஆர்கேச்ற்றாவுல இருக்குறவங்களும் ரசிப்பாங்க… ஜனங்களும் ரசிப்பாங்க. அவன் தான் வெற்றிகரமான இசையமைப்பாளரா வர முடியும்.”
பாறை…பால்… பனிக்கட்டி!
இதற்க்கு மேல்.. தேவா அவர்கள் கூறிய உவமை தான் டாப்…
“பாறை… பால்… பனிக்கட்டி மாதிரி தான் இது. பாறை என்ன பண்ணினாலும் உடையாது. பால்… அதை காய்ச்சி, பாலாக்கி, தயிராக்கி, வெண்ணையாக்கி, நெய்யாக்கி இப்படி பல விதங்களில் பயன்படுத்தலாம். அதாவது முயற்சிக்கு பின் பலன். அடுத்து பனிக்கட்டி… அதாவது தொட்டாலே உடையும்…. இப்படி ஒவ்வொன்றிலும் மூணு விதம் இருக்கு…. ரஜினி சாரை பொறுத்தவரைக்கும் அவர் கிட்டே ஒர்க் பண்ரோப்போ நாம் பால் மாதிரி ஆயிடுவோம். முயற்சிக்கு பின்னால் பலன் நிச்சயம் உண்டு.”
“அதாண்டா…. இதாண்டா…பாடலை பொறுத்தவரை மந்திரத்தை உள்ளே கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்து, கம்போஸ் செய்த பாடல்.”
“இந்த விபரம் போதுமா?” என்பது போல நம்மை பார்த்தார்… நாம் “MORE THAN ENOUGH” என்றோம்.
ரஜினி சாரை பத்தி கொஞ்சம்…
திருப்பதிக்கு போய் லட்டு வாங்கிட்டு வரலைன்னே எப்படி? தேவா சாரை பார்த்துட்டு தலைவர் பத்தி கேள்விகள் கேட்டகலேன்னா எப்படி…?
சார்.. கொஞ்சம் ரஜினி சாரை பத்தி கொஞ்சம் கேள்விகள்… என்றோம்…
“ஓ.. எஸ்… தாராளமா” என்றார் ஆர்வமுடன்.
மார்ச் 19 அன்று ரஜினி சார் வீட்டில் நடைபெற்ற “ரஜினிகாந்த் விழா” நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொண்டீர்கள்… அந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்….
“அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஆக்சுவலா வீட்டுல ஒரு விசேஷம் இன்னைக்கு. லன்ச்சுக்கு வாங்கன்னு சொல்லி தான் கூப்பிட்டாங்க. அங்கே போனதுக்கு பிறகு தான் எனக்கு தெரிஞ்சுது என்ன விசேஷம்னு. ரொம்ப சர்ப்ரைசா வெச்சிருந்தாங்க. அவோரோட பழைய நண்பர்கள் எல்லாரும் வந்திருந்தாங்க. கே.பி.சார், முத்தப்பா மாதிரி பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வந்திருக்குற அந்த நிகழ்ச்சியில என்னையும் கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவங்களையெல்லாம் ஒண்ணா பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு… சார் அன்னைக்கு எல்லார்கிட்டேயும் அன்பா பேசினாரு. விசாரிச்சாரு. அவரு இயற்கையாவே எல்லார் கிட்டேயும் நல்லா பேசுவார். அன்னைக்கு நல்ல சர்வீஸ்.. அந்தம்மாவும் எங்களை நல்லா கவனிச்சாங்க. மொத்தத்துல மறக்க முடியாத நாள் அன்னைக்கு…”
(அது பற்றிய நம் பிரத்யேக பதிவிற்கு http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10689 )
ரஜினி சார் பற்றி உங்கள் பர்சனலான ஒபீனியன் என்ன?
“நல்ல நடிகர். நல்ல மனிதர். அவர் கிட்டே கத்துக்க வேண்டியது நிறைய விஷயம் இருக்கு. நானே அவரை சந்திச்ச பிறகு.. நிறைய விஷயங்களை அவர் கிட்டேயிருந்து கத்துக்கிட்டேன். அவர் கிட்டே எல்லாமே நல்ல விஷயமாத் தான் இருக்கும். உதாரணத்துக்கு யாரவது வந்தா எழுந்து நின்னு மரியாதை தர்றது. வாங்க போங்கன்னு கூப்பிரடுறது… மனசு நோகாம பேசுறது. அவரு ஒரு சூப்பர் ஸ்டார். ஆனா உள்ளத்தாலே உண்மையில் ஒரு குழந்தை. அவரை பொறுத்தவரை எனக்கு தெரிந்து அவரது ஒரே சிந்தனை நடிப்பு தான். ஜனங்களோட பல்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கிறதுல தான் அவர் ஆர்வம் இருக்கும். மக்கள் எதை விரும்புவாங்க… எதை செய்யாலாம் இப்படி தான் அவரோட சிந்தனை இருக்கும். ராணாவோட சப்ஜெக்ட் என்கிட்டே சொன்னாரு. பிரமாதமான சப்ஜெக்ட் அது.”
அவர் உடல் நலம் சரியில்லாது சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு சென்று தற்போது நலம் பெற்று திரும்பியிருக்கிறார். அது பற்றி என்ன நினைக்கிறீங்க சார்…?
“அவருக்கு உடல் நலம் சரியில்லாது போனது பற்றி கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் பக்தன். அவர் நலம் பெற பராசக்தியிடம் தொடர்ந்து பிரார்த்தனை செஞ்சேன்.”
“ரொம்ப நன்றி சார்… எங்க தளம் சார்பாக ரசிகர்கள் சார்பா உங்க பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி”
ரஜினி அவர்களின் செல்வாக்கை பார்த்து நீங்கள் வியந்த தருணம்…
அடுத்து, நாம் கேட்டது… “சார்.. நீங்க அவருடன் மூன்று படங்கள் வொர்க் பண்ணியிருக்கீங்க… அவரோட செல்வாக்கை பார்த்து வியந்த தருணம்.. சம்பவம் … நிச்சயம் ஏதாவது இருக்கும்… பிரமாண்டமா…ஏதாவது?”
“ம்… ஒரே ஒரு பிரம்மாண்டம் சொல்றேன்… எத்துனையோ நடிகர்கள் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வருவாங்க….. ஆனா ரஜினி சார் மட்டும் இன்னைக்கு சாயந்திரம் வராருன்னு வெச்சிகோங்க.. அவரை பார்க்குறதுக்குன்னே ஜனங்க எங்கிருந்தாவது வந்துடுவாங்க. ஒரு 200, 300 பேர் வந்துடுவாங்க… எப்படியோ அவர் வரப்போகிற விஷயம் ஸ்டூடியோ STAFF மூலமா லீக் ஆகிடும். அவங்க அவங்கவங்க ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் இபப்டி தகவல் சொல்லி “ரஜினி சார் இன்னைக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வர்றாரு”ன்னு சொல்லி வரச்சொல்லிடுவங்க. கடைசியில் ஸ்டூடியோவே ஜே…ஜே..ன்னு இருக்கும். ஒரு வயசு குழந்தையெல்லாம் தூக்கிட்டு வருவாங்க…. அதுல நிறைய பேர் அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்படுவாங்க. அநேகமா எல்லாரும். அத்துணை பேரோடையும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம ஃபோட்டோ எடுத்துக்குவாரு. அவர் இருக்குற உயரத்துக்கு, அந்த பிஸிக்கு, சும்மா ஒருத்தரு ரெண்டு பேர்கூட மட்டும் ஃபோட்டோ எடுத்துகிட்டு போதும்னு சொல்லலாம். ஆனா, சொல்லமாட்டார். பொறுமையா எல்லார்கூடவும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு. அதுக்கே ரெண்டு மணி நேரம் ஆகும். அப்ப தான் நான் நினைப்பேன்.. என்ன ஒரு பிரமாண்டம் இந்த மனுஷன்… ஆனால் முழுக்க முழுக்க கருணை வடிவம் அவர். அதை நினைத்து நினைத்து நான் வியந்திருக்கிறேன்!”
———————————————————
Coming in Next Part…..
அடுத்த தொகுப்பில்…
‘அண்ணாமலை’, ‘பாட்ஷா, ‘அருணாச்சலம்’ - ஆகிய மூன்று படங்களில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம், பாடல்கள் கம்போசிங்கின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள்… என இன்னும் பலவற்றை தேவா அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…!
———————————————————
[END]
தேவா சார் ஒரு ஜாடையில் தலைவரை போல் உள்ளார்.. அதே உடை, பட்டை மற்றும் எளிமை. ஆதி பராசக்தியிடம் தலைவருக்காக வேண்டியதிற்கு என் நன்றிகள் பல.
"ராணா மிக பிரமாதமான சப்ஜக்ட்" அது என்ன என்று தெரிந்து கொள்ள மனம் துடியாய் துடிக்கிறது!!!
200 300 பேர் இருந்தாலும் முகம் சுளிக்காமல் போடோவிர்க்கு போஸ் கொடுப்பார், அதான் ஸ்டாருக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்.
எங்க பா இருக்கு அந்த பிரசாத் ஸ்டுடியோ?????? இதோ இப்பவே செல்கிறேன்
இந்த தொகுப்பே சூப்பர்ராக உள்ளது இதில் இன்னுமொரு பாகமா???? சீக்கிரம் போடுங்கள் அண்ணா!!!
*************************************
Be Good; Do Good
திரு தேவா அவர்கள் எந்த வித சர்ச்சைகளிலும் சிக்காத ஒரு நல்ல இசையமைப்பளார்.தற்பொழுதைய இசை trend மாறினாலும் வரலாற்றில் அவர் அமைத்த இசை என்றும் அவர் பெயர் சொல்லும்..
.
தேனிசை தென்றல் தேவா அவர்களை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 3 படங்கள் மட்டும் தான் திரு தேவா அவர்கள் தலைவருடன் செய்திருந்தாலும், தலைவரின் பெயர் இடம் பெரும் titile card டுக்கு அவர் அமைத்த இசை தமிழக வரலாற்றில் மறக்க முடியாது. அந்த இசையை கேட்கும் பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு வகையான பரசவசத்தை இங்கு வார்த்தைகளால் எந்த ரசிகனும் விளக்கி விட முடியாது. அனுபவித்தால் தான் புரியும்.
.
அதாண்ட இதாண்ட பாடல் one of the best தலைவருடைய அறிமுக பாடல். தேவுடா தேவுடவுக்கு பிறகு தலைவரின் அறிமுக பாடல்கள் பழைய கம்பீரத்தை கொடுக்கவில்லை என்பதை எந்த ரஜினி ரசிகர்களும் மறுக்க மாட்டார்கள்.
.
கடந்த 5 ஆண்டுகளில் தலைவரின் திரைபடத்தின் தரம், making style , box office record , international லெவலுக்கு இணையாக உள்ளது. சர்வதேச ரசிகர்களின் எதிர்பார்புகளை புர்திசெய்வதர்க்காக, அறிமுக பாடல் போன்ற சில மசாலா சமாச்சரங்கள் தலைவரின் படங்களில் தவிர்க்க படுகிறது.இதனை பன்ச்-தந்தர புத்தகத்தின் ஆசிரியர் கூட ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்..
.
நமக்கு தலைவரை பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை போன்ற அதிரடி அக்ஷன் படங்களில் தலைவர் நடிக்க வேண்டும் ஆசை மிக அதிகமாக உள்ளது. பார்போம் ஆண்டவனின் விளையாட்டை!!
.
இறுதியாக, இனிவரும் படங்களில், தலைவரின் பெயர் இடம்பெறும் title card இல் தேவா சார் இசையமைத்த அந்த இசையை சேர்த்தால்!!!! ஐயோ சொல்லும் பொழுதே உடல் சிலிர்கிறது!!
.
rajni will rule tamil nadu
.
அருமையான பதிவு படிக்கும் போதே ஒரு பரவசம் ஏற்படுது..
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !!!
உண்மையிலேயே மிகவும் எளிமையான மனிதர் தேவா அவர்கள் ! நம்மை வாசல் வரை வந்து வரவேற்று ஆச்சரியப்படுத்தினார் ! தலைவரைப் பற்றியும், தலைவர் படங்கள் பற்றியும் தேவா அவர்களின் பதில்கள் "சரவெடி"!
-
தலைவரைப் பற்றி தேவா சார் சொன்ன வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல ! நம் தலைவர் மேல் அவர் வைத்திருக்கும் மரியாதையின் வெளிப்பாடு ! ஒவ்வொருவர் மனதிலும் தலைவர் ஆழமாய் வேரூன்றி இருக்கிறார் என்பதற்கு இது சாட்சி ! தலைவர் தலைவர் தான்!
-
நம் கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்த தேவா சாருக்கு நன்றி ! எனக்கு இந்த வாய்ப்பை தந்த சுந்தர் அண்ணா-விற்கு நன்றி !
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
அருமையான நேர்காணல்..
looks like a real professional interview.
யாருக்கும் தெரியாத பல சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது இந்த பதிவின் மூலம்.
சுந்தர் இன்னும் பத்திரிக்கைக்கு கிடைக்காத தலைவர் பற்றிய நல்ல விசயங்களை எங்களுக்கு தொடர்ந்து தந்து எங்களை மகிழ்விக்கும் உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் தலைவர் ரசிகன்
ராஜன்.
எக்ஸலன்ட் நேர்காணல் சுந்தர். மிகப் பெரிய பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் மட்டுமே சாத்தியமாகி வந்த இது போன்ற சந்திப்புக்கள், உங்கள் முயற்சியால் நம் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சாத்தியப்பட்டுவருவது மிகப் பெரிய விஷயம். நீங்கள் தொடர்ந்து தந்து வரும் இத்தகைய பதிவுகளால் என் போன்ற ரசிகர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி தருகிறது.
நம் தலைவரையும் நீங்கள் இவ்வாறு ஒரு நாள் இவ்வாறு பேட்டி காண்பீர்கள் என்பது மட்டும் உறுதி. வாழ்த்துக்கள்.
அஸ்வின், ஹைதராபாத்
7207531244
சுந்தர் அண்ணா,
மிகவும் நல்ல நேர்காணல். ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்விகளிலேயே தெரிகிறது. இரண்டாம் பாகம் படிக்க ஆவலை தூண்டியது இப்பதிவு.
வினோத் சுந்தரம்
நான் இங்கே இதுவரை கமெண்ட் பண்ணியது இல்லை ஆனால் இப்பொழுது வரும் உங்களது பதிவினை பார்க்கும் போது கமெண்ட் போடாமல் இருக்க முடியவில்லை ,அவர் அவர்கள் தலைவர் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் வேலையில் நீங்கள் தலைவருக்காக எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் செயல் படுவது மிக்க மகிழ்ச்சி ,அதே போல் ஒரு சில புகை படங்கள் உண்மையில் அது சம்பந்த பட்டவர்களிடமே இருக்குமா என்று தெரியா வில்லை ஆனால் நீங்கள் வைத்துள்ளீர்கள் மிக அருமை
உங்கள் பணி சிறப்பாக தொடர நல் வாழ்த்துக்கள் ,மேலும் இதே போல் நட்சத்திரங்களின் சந்திப்பு போன்ற பதிவினை இன்னும் எதிர்பார்கிறேன் .
வெறும் வேறு பத்திரிக்கை யில் போட்டதை மட்டும் போடாமல் நீங்களாக நேரடியாக பெட்டி கண்டு போடுவது இன்னும் சிறப்பு
வாழ்த்துக்கள்
—————————————————————
என் எளிய முயற்சியை வாழ்த்திய, வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், நல்வார்த்தைகளுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் என் நண்பர்களுக்கு நன்றி.
எல்லாவற்றுக்கும் மேல், வாய்ப்புக்களை உருவாக்கி தரும் இறைவனுக்கும் நன்றி.
- சுந்தர்
ரொம்ப சுவாரசிமாய் இருக்கு இந்த பதிவு.
புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
-=== மிஸ்டர் பாவலன் ===-
great article abt thalaivar!!!!sundarji pls give any update abt rana….eagerly waiting for tat..lots of news r cmng abt rana tat movie is gonna start on oct3…is it true?if so very very happy abt that news.becoz rana wil take thalaivar to new level..thalaivar stoty vera kekanuma..randy,arr,ksr,rajeevan n anthony everyone r waiting for rana work only..
————————————-
Thalaivar is keen to start Rana. No doubt about that. But i am not sure about the time it is going to take off again. Once i am sure about it will present a detailed article.
- Sundar
கலக்கிட்டிங்க சுந்தர் அண்ணா… அருமையான ஒரு சந்திப்பு… தலைவர் பற்றி தெரியாத பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொண்டேன்… பிரசாத் ஸ்டுடியோ வில் யாரையாவது பழக்கம் பிடித்து வைத்து கொள்ள வேண்டும் போல தலைவர் வந்தால் தகவல் தெரிவிக்கும் படி…
தேவா அவர்கள் நம் தலைவருக்காக இசை அமைத்த பாட்சா படத்தின் மிரட்டலான தீம் மியூசிக் எவராலும் செய்ய முடியாதது… தங்களின் அடுத்த பதிவு இப்பவே ஆவலை தூண்டி விட்டது…
-என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்.
————————————————-
எந்திரன் ஷூட்டிங்கின் போது தலைவர் பிரசாத் ஸ்டூடியோ வந்தபோது இதே போன்று நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளன. விரைவில் அந்த பதிவை எதிர்பாருங்கள்.
- சுந்தர்
தலைவருடன் பழகும் நண்பர்களுக்கு தானாகவே அவரது நல்ல பழக்கம் வந்துவிடும்போல…..திரு.தேவா சாரை பார்த்தபொழுது அப்படித்தான் தோன்றியது…..என்ன ஒரு எளிமையான மனிதர்…அந்த வரவேற்பை எதிர்பார்கவில்லை!
.
ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்பு அளித்த நம் தளத்திற்கு நன்றி சொல்ல வாரத்தைகள் இல்லை…thanks a lot….
.
மாரீஸ் கண்ணன்.
நண்பர்களே:
இசைப் புயல் A.R. ரகுமானிடம் முன்பு ஒரு பேட்டியில்
பிற இசை அமைப்பாளர்களின் இசையில் அவருக்குப்
பாடல் பற்றி கேட்ட போது அவர் உடனே அளித்த பதில்
"அண்ணாமலை, அண்ணாமலை" என்ற தேவாவின்
சூப்பர் ஹிட் பாடல். எங்கே எப்போது இந்த பேட்டி
நடந்தது என்பது நினைவில்லை. மிக அருமையான
பாடல் தேர்வு - இசைப் புயல் அல்லவா அவர்?!
-=== மிஸ்டர் பாவலன் ===-
தலைவரின் ஒரு ஒரு ரசிகனும்
தேவா sirku கடமை பட்டுலார்கள்
//தலைவரின் பெயர் இடம் பெரும் titile card டுக்கு அவர் அமைத்த இசை தமிழக வரலாற்றில்//
அந்த தருணம் ஒரு ஒரு ரசிகனும் உச்சத்தின் உச்சத்திற்கு சென்று வருகிறான் இதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது …..
சுந்தர் ஜி ,
சூப்பர் பதிவு ! அருமையாய் இருக்கு ! உங்க சைட் வர வர ரொம்ப மெதுவா ஓபன் ஆகுதே என்ன காரணம் ??
————————————
Heavy load of database. Have to optimize.
- Sundar
Sunder great work.
Excellent.
cheers
Dev.
சுந்தர்ஜி சூப்பர்…. வர வர நமது தளத்தின் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது. நீங்கள் முழு நேர பதிவாளர் அல்ல. தங்களது அலுவலக பர்சனல் வேலைகளுக்கு பின் இத்தளத்தை திறம்பட நடத்தி வருகிறீர்கள்.
தலைவரை பற்றிய பல்வேறு பத்திரிகை செய்திகளை திரட்டி ஸ்கேன் செய்து தருவதிலும், ரசிகர்களின் நற்பணிகளை அப்டேட் செய்வதிலும், தலைவரின் அண்ணன், நண்பர்கள், நெருங்கி பழகியவர்களிடம் நேரடி பேட்டி எடுத்து பதிவு செய்வதிலும் எல்லாவற்றிக்கும் மேலாக தலைவரை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு தக்க சமயத்தில் ஆதரங்களுடன் தக்க பதிலடி தருவதிலும் தங்களது பணி வெகு சிறப்பாக உள்ளது.
தங்களது பணி மேலும் சிறக்க அன்படன் வாழ்த்துக்கிறேன்.
எதையும் இழப்போம் தலைவருக்காக
எதற்காகவும் இழக்க மாட்டோம் தலைவரை….
அன்புடன்
M . விஜய் ஆனந்த்
ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்,
தூத்துக்குடி.
————————————————-
நன்றி விஜய் ஆனந்த். தங்களை போன்ற நண்பர்களின் துணையும் ஆதரவும் இருக்கும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று கருதுகிறேன்.
- சுந்தர்
Nice article Great work. Anna.. Neenga yen leading media la web partner agi Thalaivar news publish pannalame?
நேத்து அருணாச்சலம் படம் போட்டு பார்த்தேன். எனக்கு எப்ப எப்பெல்லாம் மனசு சந்தோஷமாக இல்லையோ, 75 % தலைவரை பற்றி தான் நினைப்பேன். அவர் பாடல்களை கேட்பதாகட்டும், அவரின் பன்ச் வசனங்களை ஒரு முறை சொல்லி பார்பதாகட்டும், அவரின் படங்களை பார்பதாகட்டும், இப்படி எதாவது ஒன்றின் மூலமாக தலைவரை மானசிகமாக தொடர்பு கொள்வேன்.
*****
நேற்றும் அப்படி தான். வீட்டில், அருணாச்சலம் படத்தை போட்டு பார்க்க ஆரம்பித்தேன். தேவா சொன்ன பிறகுதான் அந்த பாடலில் அவர் பட்டு இருக்ககூடிய கஷ்டங்களை யுகிக்க முடிந்தது. ஆம், அவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்று புரிந்தது.
********
தேவா சார் உண்மையிலேயே உங்களுக்கு தலைவர் பாணியில் Hats off, Hats off, Hats off…..அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம். ஆன்மிகத்தில் தலைவரை கொண்டு வந்து, அதே சமயத்தில் தலைவரின் முதற் பாடலுக்கு உள்ள அதே எதிர்பார்ப்பை அதையும் தாண்டி பூர்த்தி செய்துவிட்டார்.
********
எனக்கு பாடல் கேட்கும் போது அதன் வரிகளையும் கேட்டு ரசிப்பேன். (ஏனெனில், எனக்கு கவிதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்). அந்த முதல் பாடலில், தாயை பற்றி தலைவர் பாடுவதை கேட்க, கேட்க ஆனந்தமாக இருக்கிறது. தான் தாயின் வளர்ப்பில் வளராத காரணத்தினாலோ என்னவோ, தலைவர் தாயின் பெருமையை ருசித்து அந்த வரிகளை பாடியது போல் இருந்தது. அதற்கேற்றாற்போல், SPB அவர்களும். என்ன அருமையான குரல். தலைவருக்கு ஆஸ்தான கவிஞன் வைரமுத்து என்றால், தலைவருக்கு ஆஸ்தான பாடகன் SPB அவர்கள்.
*******
மொத்தத்தில், மூன்று முத்தான படங்களை தலைவருக்கு வழங்கிய தேவாவுக்கு hats off மற்றும் என் தலைவனின் அன்பு ரசிகர்கள் சார்பாக நன்றி, நன்றி, நன்றி……….
*******
Thanks to sundarji for bringing this great article by meeting such a great ppl those who associated with our beloved Super star.
I heartily thanking sundarji and wishing as well as expecting him to take more and more interviews with the great people and also last but not least with this site hero none other than our beloved Super star Sivaji…….
*******
"இந்த பரத கண்டத்திற்கு நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு". - பாபா.
**சிட்டி**.
Dot.
என்னத்த சொல்ல simply super திரு.சுந்தர்.