









You Are Here: Home » Featured, Rajini Lead, Videos » ‘மனிதன்’ - தலைப்பு வந்தது எப்படி? & எஸ்.பி.எம். அவர்களின் விருது விழாவில் சூப்பர் ஸ்டாரின் உரை - முழு வீடியோ!
திரு.எஸ்.பி.எம். அவர்களுக்கு சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டாரை முன்பு போல அதே பொலிவுடன், வேகத்துடன் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்த திரு.எஸ்.பி.எம் அவர்களுக்கும், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கும் நமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று இரவு 11.00 மணிக்கு சன் டீ.வி. சினிமா செய்திகளில் அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் அவர்கள் பேசியதும், திரு.எஸ்.பி.எம் அவர்கள் பேசியதும் ஒளிபரப்பானது.
திரு.எஸ்.பி.எம் அவர்கள் மீது தலைவர் எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதை இந்த வீடியோவை பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம். மேலும், “எப்போ வருவேன் எப்படி வருவேன்னு எல்லாரும் பேசிக்கிட்டுருந்தாங்க. அதான் கரெக்ட்டான நேரத்துல வரணும்னு வந்தேன்”னு தலைவர் சொன்னபோது அந்த வார்த்தைகளின் வலிமை புரிந்தது.
தனது உரையில், தலைவருக்கு மெய்ஞ்ஞானி என்ற பெயரையும், கமல் அவர்களுக்கு விஞ்ஞானி என்ற பெயரையும் எஸ்.பி.எம். கூறியது சுவாரஸ்யம்.
சிறிதும் ஈகோ பாராமல், “நீ இந்த நிகழ்ச்சிக்கு வந்தா முழுசா உட்கார்ந்து கலந்துகிட்டு போகணும். இல்லேன்னா, நீ பேசிட்டு போன பிறகு எல்லாரும் கிளம்பி போய்டுவாங்க.” என்று தாம் ரஜினியிடம் வைத்த வேண்டுகோள் பற்றி திரு.எஸ்.பி.எம். கூறியது கலகல.
நாம் திரு.எஸ்.பி.எம் அவர்களை பேட்டிக்காக சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தபோது அவர் கூறியது.இந்த பதிவில் கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று கூறுகிறேன்… (அடுத்தடுத்த பாகங்களில் கூறலாம் என்று வைத்திருந்தேன். உங்களுக்காக ஒரு சிறிய பிட்).
‘மனிதன்’ - தலைப்பு வந்தது எப்படி?
“அவரை பார்த்து நான் ஆச்சரியப்படுற விஷயங்களில் ஒன்று மிக உயரமாக அவர் வளர்ந்த பிறகும், செல்வமும் செல்வாக்கும் பெற்ற பிறகும் பழைய சிவாஜி ராவாக தான் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆரம்பக் காலங்களில் அவர் பட்ட வலி, இன்றைக்கு எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஒருவராக அவரை மாற்றியிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்த செய்து வரும் உதவிகள் எண்ணற்றவை. அவரை வைத்து நான் எடுத்த ‘மனிதன்’ படத்திற்கு அந்த தலைப்பையே அவரை பார்த்து, அவரது மனித நேயத்தை பார்த்து நான் வியந்துபோய் வைத்த தலைப்பு தான்” என்றார்.
வீடியோ
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=gFF6LQIGy5M#!
——————————————————————
Also check, Mr.SP Muthuraman’s Excl. interview to our website
Part 1
கொடுத்த வாக்கை அடுத்தடுத்து நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் — இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் ஒரு சந்திப்பு! Part 1
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10658
Part 2
‘ராஜா என்பார் மந்திரி என்பார்..’ பாடல் தோன்றிய பின்னணி & ‘ப்ரியா’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரின் எளிமை! இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் நேர்காணல் – Part 2
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=12230
——————————————————————
[END]
மேலும் தலைவர் பேசி முடித்துவிட்டால் கூட்டம் இருக்காது அதுனால தான் நான் அவரை கடைசியஎ பேச சொனேன் என்று வெளிபடையாக பேசியது எங்களை சிலிர்க்க வைத்துவிட்டது
மிகவும் ஆர்வமாக suntv இல் தலைவர் பற்றிய சினிமா நிகழ்ச்சிய பார்க்க இருந்தால் ,பயங்கர மழை ,சிக்னல் தடை பட்டது ,நிகழ்ச்சி முடிந்த பின்தன மழை நின்றது ,நல்லவேளை நம் சுந்தர் நம்மை கை விடவில்லை ,மிக்க நன்றி
long wait over……..
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விடமாட்டார்…………. நம் தலைவர் ரொம்ப ரொம்ப நல்லவர் அவர மட்டும் எப்படி கை விட்டுடுவாரு…நீண்ட நாள் கழித்து தலைவர பொது நிகழ்ச்சில பாக்குறது ரொம்பவே சந்தோசமா இருக்கு . நன்றி சுந்தர் அண்ணா.
Great article by an American Journalist in Wall Street Journal which Shows that no one can match Superstar Rajinikanth.
http://blogs.wsj.com/indiarealtime/2011/11/01/bol...
திரு s p முத்துராமன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்
தலைவரை பற்றி அவர் பேசிய கருத்துக்கள் முற்றிலும் உண்மை
தலைவரின் பேச்சு நம்மை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டது என்றால் அது மிகை அல்ல
தலைவா எங்களை மகிழ்விப்பதற்காக உங்கள் உடலை வருத்திக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறீர்கள்
உங்களை என்னவென்று புகழ்வது?
நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உங்கள் உடல் நலம்
எங்களுக்கு தெரியும் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் எங்களை மறக்க மாட்டீர்கள் என்று
நாங்களும் அவ்வாறே
உங்களுக்காக காத்திருப்போம்
சுந்தர் ஜி
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
எங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டிவிட்டீர்கள் !!!
அருமையான பேட்டி,நன்றி அய்யா முத்துராமன் அவர்களே
————————-
என்ன சுந்தர் ஜி, தலைவர் அவர்கள் , திரு பி.வாசு அவர்களின் வீடு திருமண வீட்டில் கலந்து கொண்ட செய்தி டுவிட்டரில் போட்டிருக்கிறீர்கள். ஆனால் தளத்தில் இன்னும் போடவில்லை. நீங்கள் சொன்னால் தான் அங்கே தலைவர் உள்ளே நுழைந்தது முதல் வெளியில் செல்லும் வரை நடந்த அனைத்தையும் சொல்லுவீர்கள், சீக்கிரம்.
collections
http://i.imgur.com/mgdTO.jpg http://i.imgur.com/AfE9p.jpg http://i.imgur.com/LXdpc.jpg http://i.imgur.com/Oi2dT.jpg
http://www.youtube.com/watch?v=kufbMLHsNnw&fe...
indha maathiri ellam kooda nadikka vendiyatha iruku ….vaaazhkaila
http://www.youtube.com/watch?v=TWyo7QrsdRY&fe...
Thanks a million for the compilation. We, Super Star fans, got food for the next 2 months - till Rana relaunch. There is no doubt in my mind, Thalaivar will complete at least 50 years film industry. May God bless Super Star for good health, peace of mind & happiness.
Must see. written by an American about thalaivar in ra.one
http://blogs.wsj.com/indiarealtime/2011/11/01/bol...
Please find article about Thalaivar in Pakistan Daily and about this function. http://www.dailytimes.com.pk/default.asp?page=201...
“மனிதன்” என்ற சொல்லுக்கு அர்த்தமே நீங்கள் தான் தலைவா. பிறப்பால் ஒருவன் மனிதனாக முடியாது! தான் வாழும் வாழ்க்கையின் மூலமே ஒருவர் மனிதனாக முடியும். நீங்கள் மனிதனுக்கும் பல படி மேல் என்றால் மிகையாகாது!