









You Are Here: Home » Featured, Role Model » சூப்பர் ஸ்டாரை உந்துதலாக வைத்து ஒரு சாமானியன், சாதனையாளன் ஆன நிஜ கதையை தெரிந்துகொள்ளுங்கள்!
வரும் ஞாயிறு டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நமது தளத்தின் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் + ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உங்களிடையே பேசவிருக்கும் வி.ஐ.பி.க்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.
அவர்களின் திரு.பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி) இருவரும் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். ஆனால், சிறப்பு விருந்தினராக கலந்தகொண்டு உங்களிடையே பேசவிருக்கும் அந்த மூன்றாவது நபர் யார் தெரியுமா? அவர் இந்த நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கப்பட்டிருக்கிறார் தெரியுமா?
தெரிந்துகொண்டால், நிகழ்ச்சிக்கு வரும் ஆர்வம் உங்களிடையே பன்மடங்கு அதிகரிக்கும்.
பொதுவாகவே தலைவரது படங்கள் ஒரு சாமனியன் பணக்காரனாகி ஊரே போற்றும் சாதனையாளனாக மாறுவதை அடிப்படையாக கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். (Rags to riches story). வெறும் சினிமாவில் மட்டும் அப்படி இல்லாமல் நிஜத்திலும் தலைவர் அப்படித் தான். ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை துவங்கி, மொழி தெரியாத ஒரு மாநிலத்தில், சினிமாவில் அறிமுகமாகி, (அதுவும் சொற்ப நிமிடமே வந்துவிட்டு, பின்னர் இறந்து போகும் ஒரு காரக்டரில்) தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் மேன்மைக்கு வந்து இன்று கோடானு கோடி ரசிகர்களை பெற்ற ஒரு மாபெரும் இயக்கமாக விளங்குகிறார்.
அதே போல முன்னுக்கு வந்தவர் தான் திரு.ஜான் யேசுதாஸ். செல்போன் வணிகத்தில் முதலிடத்தை பிடித்து பல பாராட்டுக்களை பரிசுகளை வாங்கி குவித்த WAVETEL என்ற குழுமத்தின் நிறுவனர், தலைவர் இவர் தான். தற்போது TECHBERRY என்னும் நிருவனத்தை வெற்றிகரமாக நிர்வகித்துவருகிறார்.
சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரியில் தமது என்ஜினீயரிங் பட்டப் படிப்பை முடித்த இவரது முதல் பணி, RPG செல்லுலார் நிறுவனத்தில் மார்கெடிங் எக்சிக்யூட்டிவாக ரூ.3,500/- சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். கருமமே கண்ணாக இரவு பகல் பாராது பணிபுரிந்து, செல்லுலர் ஃபோன் கனக்ஷன் துறையின் நெலுவு சுளிவுகளை கற்றுத் தேர்ந்தார். பின்னர் சுமதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தில் மார்கெட்டிங் மேனேஜராக சேர்ந்து, செல் போன் கனக்ஷன் விற்பனையில் நம்பர் 1 ஸ்தானத்திற்கு அந்நிறுவனத்தை கொண்டு வந்தார்.
ஓரளவு அனுபவங்கள் கிடைத்ததும், WAVETEL COMMUNICATIONS என்ற பெயரில் சொந்தமாக நிறுவனத்தை தொடங்கி RPG & SKYCELL நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து அதில் கடுமையாக உழைத்தார். கணிசமான பணம் சேர்ந்ததும், அதையே முதலீடாக வைத்து WAVETEL MOBILES என்ற செல்போன் சில்லறை விற்பனை மையத்தை துவக்கினார். அந்நிறுவனம் பின்னர் சென்னையில் மட்டுமே 23 கிளைகள் கொண்ட மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
இன்னும் அட்வான்சாக சிந்தித்து இதைவிட பெரிய சாதனை புரியவேண்டும் என்ற எண்ணத்தில் அயராத உழைப்பினாலும் எண்ணத்தினாலும் தோன்றிய WAVETEL MOBILES நிறுவனத்தை ஒரு நல்ல தொகைக்கு விற்றுவிட்டு, PROJECTOR MOBILES ஐ உற்பத்தி செய்யும் TECHBERRY என்னும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதை ஆண்டுக்கு ரூ.300 கோடிகள் TURN OVER செய்யும் ஒரு மிகப் பெரிய வணிக சக்தியாக அதை மாற்றியிருக்கிறார்.
தனது சாதனைகளுக்கு பல தொழில்துறை விருதுகளை பாராட்டுக்களை வாங்கி குவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண மார்கெட்டிங் எக்சிக்யூட்டிவ்வாக தனது பணியை துவக்கியவர் இத்துனை பெரிய சாதனையாளராக மாறியிருக்கிறார் என்றால் அவர் எத்துனை சோதனைகளை சந்தித்திருப்பார்? எப்படி உழைத்திருப்பார்?
தனது சாதனைகளுக்கு மூல காரணமாக அவர் குறிப்பிடுவது நம் அன்புக்குரிய சூப்பர் ஸ்டாரை தான். ஒரு தீவிர ரஜினி ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த சாதனையாளர் தாம் எப்படி ‘ரஜினி’ என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் உதவியால் சாதனை படிக்கட்டுக்களில் வெற்றிகரமாக் ஏற முடிந்தது & அவர் மூலம் தாம் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது என்ன உள்ளிட்ட பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவிருக்கிறார்.
சென்னை பூவிருந்தவல்லி அருகேயுள்ள, கரையாஞ்சாவடி, ஆவடி ரோட்டில் அமைந்துள்ள கல்யாணி ஸ்ரீனிவாசா பத்மாவதி திருமண மஹாலில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி ஞாயிறு காலை 9.30 மணிக்கு துவங்கவுள்ள நமது தளத்தின் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரை சந்தியுங்கள். அவர் ஏற்றம் பெற்ற கதையை கேளுங்கள். பயனடையுங்கள். வருங்கால சாதனையாளர் சரித்திரத்தில் உங்களாது பெயரையும் பதிவு செய்யுங்கள்.
உணவு ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளபடியால், வரவிருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து Onlysuperstar.eventbrite.com என்ற தளத்தில் எளிமையான மூன்று விபரங்கள் தந்து (உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரி) ஆகியவற்றை தந்தது பதிவு செய்துகொள்ளுங்கள். இலவச பாஸ் உங்கள் இ-மெயில் முகவரிக்கு உடனே தானாக வந்து சேரும்.
தள வாசகர்கள் அவரவர் தத்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வாருங்கள். இது உங்கள் விழா!
————————————————————————-
Please check our article for our Superstar’s B’day celebration Invitation, Venue address, Route map, RSVP & other details.
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13235
————————————————————————-
[END]
Dear John
Hats Off…Gr8…
"இமய மலை ஆகாமல் எனது உயிர் போகாது; சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது" என்ற வரிகள் இவருக்கு பொருந்தும்
சார் ஐ கண்டிப்பாக அன்று நான் மீட் பண்ணுவேன்!! தலைவர் ரசிகர்கள் என்றால் விசில் அடித்து டான்ஸ் ஆடுதல் என்றோடு இல்லாமல் "சிகரத்தை" அடைந்த திரு.ஜான் யேசுதாஸ் சார் மற்ற எல்லா ரசிகருக்கும் முன்னோடி!!
தலைவரை பெருமை படுத்திய ரசிகர்
தலைவரை சந்திக்கும் எல்லா வித தகுதியும் உள்ள ரசிகர்!!
super john…. my role model ….my best frd too
வாழ்ந்து காட்டுபவன் மனிதன் !
வழிநடத்துபவன் தலைவன் !
வாழ வைப்பவன் இறைவன் !
-
தலைவா ! உங்களைப் பின்பற்றி இன்று ஜான் யேசுதாஸ் ! நாளை நாங்கள் எல்லோரும் ! இது சத்தியம் ! சத்தியம் !!
-
ஜான் யேசுதாஸ் சாருடனான நம் சந்திப்பு கண்டிப்பாக ஒரு உந்துதலைத் தரும் !
-
தலைவா !!!!
உங்களைத் தான் நம்புதிந்த பூமி !
இனி எங்களுக்கு நல்ல வழி காமி !
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
North Indian media's hottest comment at the moment -"May be Sachin is god in cricket but now Sehwag ………… The Rajinikanth in cricket" !
"விழா வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர் ஜி"!!!
ஜான் சார் மட்டும் இல்ல… எத்தனையோ பேர் இதுபோல் நம் தலைவரை ரோல் மாடலாக கொண்டு முன்னேறி இருக்கிறார்கள்… முன்னேறி கொண்டு இருக்கிறார்கள்… முன்னேறுவார்கள்….!!
அன்புடன்,
சாதிக் (மதுரை)
roomba santhosam sundar
all the best in the near future
ரொம்ப inspiring ah இருக்கு ஜி இவரோட உயர்வா பாக்கும்போது…….நம்மை போன்ற இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய டானிக்……தலைவர பின்பற்றி நாமும் பயனடைய வேண்டும்………நிகழ்ச்சி மிகவும் அருமையா இருக்கும் போல……என்னுடைய வாழ்த்துக்கள் ஜி……
வாழ்துக்கள்
நல்லவன் வாழ்வான்
உழைப்பாளி உயர்வான்
இது உலக நியதி.
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
விழா வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர் ஜி!
கடும் உழைப்பாளிகளுக்கு என்றுமே வெற்றி தான் என்பதற்க்கு ஐவரும் ஒரு உதாரணம்
மிகவும் பொருத்தமான தேர்வு
இது மேலும் பலருக்கு வெற்றி பெற உந்துதல் சக்தியை தரும்
நேற்றுவரை நீ மனிதனப்பா இன்றுமுதல் நீ புனிதண்ணப்ப சீக்கிரம் வெற்றிக்கொடி கட்டு …….தலைவா……..பல்லாண்டு வாழ வணங்கி வாழ்த்துகிறேன் ந.இளமுருகன் ,சிங்கபூர்
வணக்கம் நீங்க எந்த கம்புட்டர் மொழி பயன்படுத்தி இந்த சைட் create பண்ணிங்க
—————————————-
Wordpress, Mysql PHP
- Sundar
Thanks sundar sir, I am guru doing mca in madurai… biggest thalaivar fan.. me too started to create a site for our thalaivar using php and mysql so ly i ask to you sir… dont mistake me…
and happy birthday to my thalaiva
Thank you! Thank you! Thank you!!! for sundarji - esp for penning down this article and for the function..
***
Again, I am regaining and reassuring my confidence and I have re-assigned my goal as well..
This article as well as the story of John would definitely be the inspiration for me since lot of aspects are appearing common in my life too comparing with Mr. john.
***
Thanks, Thanks, Thanks..My heartfelt thanks to Sundarji for bringing Mr. John and thanks to Mr. Kitty for bringing us this great man Mr. John.
***
I am pretty sure that after a span of ten years - say by 2023, I would have become developed measurably comparing with my own current condition.
***
In this write up, I loved the point that he made up the company to have its turn over of 300crore rupees.
"THOUGHTS BECOMES THINGS".
***
I'm proud to be the fan as well as admirer, follower of the great super star Sivaji Rao.
***
Thanks so much Sundarji for bringing such a great motivational things to us. God bless you.
***
by,
**Chitti**.
Jai Hind!!!
Dot.
Again n again, I am coming to this page. Thanks sooooooo much Sundarji for penning down this article and bringing this man to us through Kitti sir.
***
And I sincerely would say that this is the first step you(we) have taken to make our team 'FORCE' persons to move confidently in the direction of success, which then followed by Mr. Ilango, Mr. Chandrasekhar..goes on
***
Again, Thanks a ton Sundarji for this.
***
**Chitti**
Jai Hind!!!
Dot.