









You Are Here: Home » Fans' Corner, Featured » ‘காலனுக்கு டாட் வைத்த மகாரிஷியே’ - சென்னையில் தூள் பறத்திய சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் போஸ்டர்கள்! Complete Gallery!! - B’day Coverage 7
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளையொட்டி ஒரு பக்கம் கட்டுக்கோப்பான நலத் திட்ட உதவிகள் மற்றொரு பக்கம் அசத்தலான போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் என வழக்கம்போல தூள் கிளப்பிவிட்டனர் ரசிகர்கள்.
எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் போஸ்டர்களில் ஒரு வித உற்சாகம் தென்பட்டது ரசிகர்களிடம். ‘காலனுக்கு டாட் வைத்த மகாரிஷியே’ என்று ஒரு போஸ்டரின் வாசகம் கூறுவதிலேயே உங்களுக்கு காரணம் தெரிந்திருக்கும்.
போயஸ் கார்டன் அமைந்திருக்கும் பகுதிகளில் எப்போதும் அ.தி.மு.கவினரின் போஸ்டர்கள் மற்றும் பாணர்கள் தான் கண்ணுக்கு படும். ஆனால் டிசம்பர் இரண்டாம் வாரம் மட்டும் விதிவிலக்கு.
போயஸ்கார்டன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கும் அத்துனை போஸ்டர்களும் இத்துடன் கவர் செய்யப்பட்டிருக்கிறது.
அசத்தலான 8 பிட், 16 பிட் போஸ்டர்களுக்கு நடுவே காணப்பட்ட எளிமையான சிங்கிள் பிட் போஸ்டரை கூட விடவில்லை. ஏதோ அவர்கள் சக்திக்கு ஏற்றபடி சூப்பர் ஸ்டார் மீது தங்கள் அன்பை அவர்கள் வெளிபடுத்துகிறார்கள்.
போயஸ் கார்டனுக்கு செல்லும் பின்னி சாலைக்கு அடுத்து உள்ள சாலையில் (சோழா ஓட்டலுக்கு முன்பாக) ஒரு பெரிய பானரை பார்க்க நேர்ந்தது. அதுவும் கவர் செய்யப்பட்டுள்ளது.
அதே போல, நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கு அருகே அசத்தலான இரண்டு மூன்று பாணர்களை பார்க்க நேந்தது. அவற்றின் டிசைன் உண்மையில் டாப் டக்கர். சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு பாராட்டுக்கள்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு தந்த உற்சாகத்தில் ஒரு காலத்தில் நம் ரசிகர்கள் இது போன்ற பேனர்களை எழுப்பினாலும், தற்போது அனைத்து எதிர்ப்பார்ப்புக்களும் வற்றிவிட்ட சூழலிலும் அவரை விட்டுக்கொடுக்காது, இது போன்று பாணர்களை முன்பை விட உற்சாகமாக எழுப்புகிறார்கள் என்றால் அதை என்ன சொல்வது? ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சற்று உற்றுப் பார்த்தால் மேற்படி பேனர்கள் சொல்லவியலாத ஒரு ஏக்கத்தை, ஏமாற்றத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.
போயஸ் கார்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பார்த்த பெரும்பாலான பேனர்கள், சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று (செவ்வாய் டிசம்பர் 13) மாலை நடக்கும் சென்னை மாவட்ட ரசிகர்களின் விழா பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
மேற்படி விழாவில் சூப்பர் ஸ்டார் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. ஆகையால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் திரளாக வந்துகொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் வானவேடிக்கை தான்.
சூப்பர் ஸ்டார் அப்படி ஒருவேளை இதில் கலந்துகொண்டால், ரசிகர் மன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாளாக டிசம்பர் 13 அமையும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட நிர்வாகிகளும் மன்றப் பிரமுகர்களும் வெகு சிறப்பாக செய்துள்ளனர். விழாவில் கலந்துகொள்ள கடுமையான விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் இல்லாமல் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா வெற்றி பெற நமது தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Rajini Fans’ Birthday Posters & Banners @ Chennai - Full Gallery
[END]
I wish Thalaivar will attend
Yesterday Very usefully i started the birthday celebration. Thank you god
Dhoni wishes thalaivar
http://www.youtube.com/watch?v=uel0kuD-JWY
Dont miss this too
http://www.youtube.com/watch?v=wOr6pLnHE1c
i think u r studying the exact pulse of RASIGAR…..now……
s there is a yeeekkkkkaaaammmmmmm………….
this banner is being reduced nowadays…….
Try to accept………….
rasigar is no reduced………their involvement towards thalaivar is reduced compared to yesteryears…………
This will reflect one day………………..then i'll come out with a exact figure……..this sure will happen…….
தலைவர் பிறந்தநாள் விழா வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ,ரசிக நண்பர்களே பாது பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் நாம் ஒன்று செய்தால் அதை ஒன்பதாக திரித்து கூற ஒரு கும்பலே அலைந்து கொண்டு இருக்கிறது அதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைவரும் பாராட்டும் படியும் ,மூக்கின் மேல் விரல் வைக்கும் படியும் இந்த விழா நடக்கும் என்பதில் ஐயமில்லை
இந்த விழா மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்
தலைவர் வந்தால் நன்றாக தான் இருக்கும் ,ஆனால் அவருடை பஞ்ச் வசங்கள் அடங்கிய புத்தகதி வெளியிடவே நமக்கு நாமே ஆரத்தி எடுதுகனுமா என்று கேட்டவர் தலைவர் .
அவர் வந்தாலும் வர விட்டாலும் அவருடை ஆசிகளும் மனம் ஆர்ந்த வாழ்த்துக்களும் கண்டிப்பாக இருக்கும்
வாழ்த்து வரிகள் கண்டு பிடிப்பதில் நமது ரசிகர்கள் ரசிகர்கள் தான் அவர்களை யாருமே அடித்து கொள்ள முடியாது ,எனக்கு விவரம் தெரிந்த வரை "வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்ற வாக்கியத்தை முதன் முதலில் சொன்னது நமது ரசிகர்கள் என்று தான் நினைக்கிறன்,அதன் பிறகு பல பேர் அதை உபயோக படுத்த ஆரம்பித்து விட்டார்கள்
8 bit ,16 bit ku naduve single bit
படையப்பா படத்தில் வரும் வசனம் தான் என் பையன் கற்பூரம் மாதிரி ,ஏழை கொளுத்துனாலும் ,பணக்காரன் கொளுத்துனாலும் ஒரே ஜோதி தான் ,அது போல் திரு சுந்தர் அவர்களே நீங்களும் தலைவரின் ரசிகர் என்று மீண்டும் அருமையாக நிருபித்து விட்டீர்கள்
தலைவா கலக்குங்க தலைவா கலக்குங்க
இந்த கூட்டம் சேர்த்த கூட்டம் இல்ல;
அன்பால் சேர்ந்த கூட்டம்.
கவிஞர் வாலி எழுதியது போல்
அன்பில் தொடங்கி; அன்பில் முடியும் கூட்டம்.
மழை யை போல எந்த எதிர் பார்பும்மின்றி;
அன்பை பொழியும் கூட்டம்.
Wish you happy Birthday and Long Live "THALAIVA."
With regards,
Ashraf Ali .S
சூப்பர் !
RAJA on ‘காலனுக்கு டாட் வைத்த மகாரிஷியே’ – சென்னையில் தூள் பறத்திய சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் போஸ்டர்கள்!
RAJINE
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Happy Birthday Superstar…
கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல்
"ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு தந்த உற்சாகத்தில் ஒரு காலத்தில் நம் ரசிகர்கள் இது போன்ற பேனர்களை எழுப்பினாலும், தற்போது அனைத்து எதிர்ப்பார்ப்புக்களும் வற்றிவிட்ட சூழலிலும் அவரை விட்டுக்கொடுக்காது, இது போன்று பாணர்களை முன்பை விட உற்சாகமாக எழுப்புகிறார்கள் என்றால் அதை என்ன சொல்வது? ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சற்று உற்றுப் பார்த்தால் மேற்படி பேனர்கள் சொல்லவியலாத ஒரு ஏக்கத்தை, ஏமாற்றத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன."
உண்மையான வரிகள்……..,
இந்த போஸ்டர்களை பார்க்கும் போது நாங்க எல்லாம் இன்னும் நல்ல போஸ்டர் போடணும்னு தோணுது……..,
நம்ம ஆளுங்க தமிழ்நாட்டையே கலக்கிட்டாங்க……..,
அனைவருக்கும் நன்றி……..,
நன்றி சுந்தர்ஜி !
சூப்பரான சுவரொட்டிகள். தலைவர் இந்த வள்ளுவர் கோட்ட விழாவிற்கு வரமாட்டார் என்பது முன்பே தெரிந்த விஷயம் தான் அதனால் தான் அவர் சார்பாக SPM வந்திருந்தார். இதற்க்கு தலைவர் வராதது சரியே, அவர் அங்கு மட்டும் வந்திருந்தார் என்றால் மற்ற எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.
அவர் வரவில்லை என்று எல்லோருக்கும் வருத்தமாக இருக்கும், என்னுடைய பதிவை படியுங்கள், அதில் உள்ள நேர்மை உங்களுக்கு புரியும்.
அவர் தன்னுடைய பிறந்த நாளை தனியாக கொண்டாடுவார், அதாவது தனிமையில் அமைதியாக கழிப்பார் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல். இதில் என்ன சொல்லி கொள்ள விரும்புகிறேன் என்றால் தலைவர் விழாவிற்கு வராததால் அவரை தவறாக எடை போடாதீர்கள், ரசிகர்களை என்றுமே மதிப்பதில் அவரை விட சினிமாவில் யாருமே கிடையாது.
1984 படிக்காதவன்-ஜப்பானில் கல்யாண ராமன் ரெலீசிர்க்கு பிறகு கமல் ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்தார், அவரை ரசிகர்களை மதிக்க தெரியாதவர்கள் என்று கூறினார்கள், அவரோ ஒரு ரசிகன் என்னை பற்றி புகழ் பாடி, போஸ்டர் மட்டும் ஒட்டி அவனின் வாழ்க்கையை வீணடிக்க விரும்ப வில்லை, என்று தைரியாமாக சொன்னார். MGR , சிவாஜி, தலைவர் எல்லோரும் அக்காலத்தில் எடுக்க தயங்கிய முடிவு அது. கமல் அவர்களோ நீங்கள் என்னுடைய படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள், நடிகர்களின் பெயரை வைத்து ரௌடித்தனம் செய்ய வேண்டாமென்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதில் எல்லா உழைப்பாளிகளுக்கும் இருக்கும் ஒரு நேர்மை இருந்தது.
தலைவர் மட்டும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் ரசிகர்களை அக்காலகட்டத்தில் பிரதி ஞாயிறு தன்னுடைய வீட்டில் சந்தித்து பேசுவார், சினிமாவை பார்த்து அவரை பெற்றோருடன் சந்திக்க வரும் சிறுவர்களை மட்டும் கண்டிப்பாக படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்.
தமிழகம் என்றும் வாரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் அக்கால கட்டத்தில் அவருடைய வேளச்சேரி இல்லாதிருக்கு வந்து அவரை சந்திப்பார்கள். அவரின் வார்த்தை படி அவர் ஏன் அப்படி செய்தார் என்றால், அவரும், அவருடைய நண்பர் மகேந்திரன் (முள்ளும் மலரும், ஜானி ) சினிமாவில் முன்னேறும் காலகட்டத்தில் பலமுறை MGR அவர்களை காண சென்று அவர் ஊரில் இல்லாததால் ஏமாந்து இருகிறார்கள், அதனை போல் தன் ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக அதனை செய்தார், அனால் மக்களின் கூட்டம் பெருகியாதால், , மேற்கண்ட கமல் சொன்ன காரணத்தையே சிலடையாக கூறி நீங்கள் உங்கள் நேரத்தை வீனடிகாதீர்கள் என்று நேர்மையாக கூறி நிறுத்தி ரசிகர்களை சந்திப்பதை ஒரு இரண்டு வருடத்திற்கு பிறகு நிறுத்தி கொண்டு விட்டார். ரசிகர் மன்றங்கள் பெருகுவதையும் அவர் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
இவர்களின் வழியில் சென்ற வருடம் அஜித் அதையே செய்தார் என்பது வரவேற்க தக்க ஒன்று. அவர் தலைவரின் ரசிகர் என்பதை உறுதி படுத்தி விட்டார், தலைவர் மற்றும் கமல் அவர்களை போல் அவரின் செயல்பாடுகளில் அதே நேர்மை இருக்கிறது.
இதில் கவனிக்க தக்க ஒன்று என்ன வென்றால் ஒரு நடிப்பே வராத நடிகன் மற்றும் கூவி, பிரியாணி கொடுத்து மக்கான் கூட்டத்தை சேர்க்கிறான். ஆனாலும் எதுவும் வேகவில்லை, விளம்பர படுத்தினாலும் படமும் ஓடவில்லை.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தானி தரும். மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தான், தலைவரை போல். தலைவரின் ரசிகன் என்பதை நினைத்து பெருமை படுங்கள். MGR , சிவாஜி, எல்லோருமே ரசிகர்களை ORGANIZE செய்தார்கள் என்றால் அவர்களுக்கு அன்றைக்கே தெளிவான அரசியல் செயல்பாடு மற்றும் ஆர்வம் இருந்தது அவர்கள் நாடகங்களிலும், சினிமாவிலும் நடித்த சிறுவர்களாக நடித்த காலத்திலிருந்தே அப்படிதான். . தலைவருக்கு அது என்றைக்குமே இருந்தது கிடையாது, LIKE A TRUE GENTLEMEN HE DOES NOT WANT TO TAKE HIS FANS FOR A RIDE
நன்றி.
களிகிட்டிங்க சுந்தர் இளங்கோவனுக்கு சரியான பதிலடி குடுத்திங்க சூப்பர்