You Are Here: Home » Fans' Corner, Featured » மாநாடை போல வள்ளுவர் கோட்டத்தில் நடந்த சென்னை ரசிகர்களின் பிறந்த நாள் விழா! ரசிகர்கள் உற்சாகம்!! Highlights + Full Gallery

* வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ரசிகர்களின் விழா பேனர்கள், போஸ்டர்கள் என கிட்டத்தட்ட  ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டை போல வெகு விமரிசையாக நடைபெற்றது.

* வள்ளுவர் கோட்டம் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

* வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

* நிகழ்ச்சி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட மாலை  4 மணி முதலே கூட்டம் அலைமோதியது.

* சிக்குபுக்கு குழுவினரின் கலைநிகழ்ச்சி மற்றும் ரஜினி படப் பாடல்கள் கூட்டத்தினரை வெகு நேரம் உற்சாகத்துடன் வைத்திருக்க உதவியது.

* கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், எஸ்.பி.முத்துராமன், நடிகர் விஜயகுமார், செந்தில், கருணாஸ், சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் பேசினர்.

* முக்கிய விருந்தினர்கள் ரஜினி பற்றி கூறும்போதெல்லாம் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர்.

* உள்ளே வாட்டர் பாட்டில்கள், சுண்டல், பஜ்ஜி உள்ளிட்டவைகளுக்கு தனித் தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. வந்தவர்கள பசியாறுவதற்கு அவை பெரிதும் உதவின.

* போலீசார் பாதுக்காப்பு ஏற்பாடுகளுக்காக பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர்.

* கருணாஸ் பேச்சில் காரம் அதிகமாக வெளிப்பட்டது. அரசியல் கட்சி துவங்கியுள்ள ஒரு நடிகரை விட்டு வெளுத்து வாங்கிவிட்டார்.

* இறுதில் பேசிய லாரன்ஸ், உங்கள் கைத்தட்டல் மற்றும் விசில் சத்தத்தால் அவர் வளர்ந்ந்து மேலே வந்தாலும், அவரை நம்மிடம் மீட்டு கொண்டு வந்தது நமது அமைதியான பிரார்த்தனையே. எனவே, அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து அவருக்காக பிரார்த்திப்போம். என்று கூறியதும் ஒட்டுமொத்த கூட்டமும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தது.

* சூப்பர் ஸ்டார் இறுதிவரை வரவில்லை. (இது தொடர்பாக நண்பர் தியாகி கமெண்ட்டில் கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்).

Also Check
—————————————————————
டிசம்பர் 8 அன்று காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை ரசிகர்களின் விழா - Gallery + Full Coverage
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13262
—————————————————————

Chennai fans’ celebrations @ Valluvar Kottam - Full Gallery

[END]

26 Responses to “மாநாடை போல வள்ளுவர் கோட்டத்தில் நடந்த சென்னை ரசிகர்களின் பிறந்த நாள் விழா! ரசிகர்கள் உற்சாகம்!! Highlights + Full Gallery”

 1. Thyagi Thyagi says:

  சூப்பரான சுவரொட்டிகள். தலைவர் இந்த வள்ளுவர் கோட்ட விழாவிற்கு வரமாட்டார் என்பது முன்பே தெரிந்த விஷயம் தான் அதனால் தான் அவர் சார்பாக SPM வந்திருந்தார். இதற்கு தலைவர் வராதது சரியே, அவர் அங்கு மட்டும் வந்திருந்தார் என்றால் மற்ற எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

  அவர் வரவில்லை என்று எல்லோருக்கும் வருத்தமாக இருக்கும், என்னுடைய பதிவை படியுங்கள், அதில் உள்ள நேர்மை உங்களுக்கு புரியும்.

  அவர் தன்னுடைய பிறந்த நாளை தனியாக கொண்டாடுவார், அதாவது தனிமையில் அமைதியாக கழிப்பார் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல். இதில் என்ன சொல்லி கொள்ள விரும்புகிறேன் என்றால் தலைவர் விழாவிற்கு வராததால் அவரை தவறாக எடை போடாதீர்கள், ரசிகர்களை என்றுமே மதிப்பதில் அவரை விட சினிமாவில் யாருமே கிடையாது.

  1984 படிக்காதவன்-ஜப்பானில் கல்யாண ராமன் ரெலீசிர்க்கு பிறகு கமல் ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்தார், அவரை ரசிகர்களை மதிக்க தெரியாதவர்கள் என்று கூறினார்கள், அவரோ ஒரு ரசிகன் என்னை பற்றி புகழ் பாடி, போஸ்டர் மட்டும் ஒட்டி அவனின் வாழ்க்கையை வீணடிக்க விரும்ப வில்லை, என்று தைரியாமாக சொன்னார். MGR , சிவாஜி, தலைவர் எல்லோரும் அக்காலத்தில் எடுக்க தயங்கிய முடிவு அது. கமல் அவர்களோ நீங்கள் என்னுடைய படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள், நடிகர்களின் பெயரை வைத்து ரௌடித்தனம் செய்ய வேண்டாமென்று கண்டிப்பாக கூறிவிட்டார். அதில் எல்லா உழைப்பாளிகளுக்கும் இருக்கும் ஒரு நேர்மை இருந்தது.

  தலைவர் மட்டும் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் ரசிகர்களை அக்காலகட்டத்தில் பிரதி ஞாயிறு தன்னுடைய வீட்டில் சந்தித்து பேசுவார், சினிமாவை பார்த்து அவரை பெற்றோருடன் சந்திக்க வரும் சிறுவர்களை மட்டும் கண்டிப்பாக படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்.

  தமிழகம் என்றும் வாரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் அக்கால கட்டத்தில் அவருடைய வேளச்சேரி இல்லாதிருக்கு வந்து அவரை சந்திப்பார்கள். அவரின் வார்த்தை படி அவர் ஏன் அப்படி செய்தார் என்றால், அவரும், அவருடைய நண்பர் மகேந்திரன் (முள்ளும் மலரும், ஜானி ) சினிமாவில் முன்னேறும் காலகட்டத்தில் பலமுறை MGR அவர்களை காண சென்று அவர் ஊரில் இல்லாததால் ஏமாந்து இருகிறார்கள், அதனை போல் தன் ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக அதனை செய்தார், அனால் மக்களின் கூட்டம் பெருகியாதால், , மேற்கண்ட கமல் சொன்ன காரணத்தையே சிலடையாக கூறி நீங்கள் உங்கள் நேரத்தை வீனடிகாதீர்கள் என்று நேர்மையாக கூறி நிறுத்தி ரசிகர்களை சந்திப்பதை ஒரு இரண்டு வருடத்திற்கு பிறகு நிறுத்தி கொண்டு விட்டார். ரசிகர் மன்றங்கள் பெருகுவதையும் அவர் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.

  இவர்களின் வழியில் சென்ற வருடம் அஜித் அதையே செய்தார் என்பது வரவேற்க தக்க ஒன்று. அவர் தலைவரின் ரசிகர் என்பதை உறுதி படுத்தி விட்டார், தலைவர் மற்றும் கமல் அவர்களை போல் அவரின் செயல்பாடுகளில் அதே நேர்மை இருக்கிறது.

  இதில் கவனிக்க தக்க ஒன்று என்ன வென்றால் ஒரு நடிப்பே வராத நடிகன் மற்றும் கூவி, பிரியாணி கொடுத்து மக்கான் கூட்டத்தை சேர்க்கிறான். ஆனாலும் எதுவும் வேகவில்லை, விளம்பர படுத்தினாலும் படமும் ஓடவில்லை.

  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தானி தரும். மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தான், தலைவரை போல். தலைவரின் ரசிகன் என்பதை நினைத்து பெருமை படுங்கள். MGR , சிவாஜி, எல்லோருமே ரசிகர்களை ORGANIZE செய்தார்கள் என்றால் அவர்களுக்கு அன்றைக்கே தெளிவான அரசியல் செயல்பாடு மற்றும் ஆர்வம் இருந்தது அவர்கள் நாடகங்களிலும், சினிமாவிலும் நடித்த சிறுவர்களாக நடித்த காலத்திலிருந்தே அப்படிதான். . தலைவருக்கு அது என்றைக்குமே இருந்தது கிடையாது, LIKE A TRUE GENTLEMEN HE DOES NOT WANT TO TAKE HIS FANS FOR A RIDE

  நன்றி.

 2. vignesh vignesh says:

  THIS IS SURELY MUST WATCH for thalaivars dialogue

  ——————————————————-

  nama yarunu nama mathavanga kitta solla koodadhu.. mathavangadhan nama kitta sollanum

  ———————————————————————-
  http://www.youtube.com/watch?v=y_lzP1Fga_U&fe...

 3. SANKAR SANKAR says:

  Super fast Sundarji

  Thanks for the பிளாஷ் update….!!!!

  Long live super Star!!!!!!!

 4. Rajagopalan Rajagopalan says:

  Nambar Tyagi solluvadhu nyayam dhan.,.. edhuke evalo kutam enral thalaivar vandhu erundhal andha areavea stumbichu erukum…

 5. murugan murugan says:

  அருமையான கருத்துக்கள் தியாகி

  தலைவர் எப்போதுமே தன் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன் படுத்தியது இல்லை

  இது உலகறிந்த உண்மை

  சென்னை மாநாட்டிற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்திய சுந்தர் அவர்களுக்கு அங்கள் மனமார்ந்த நன்றிகள்!!!

 6. s.vasanthan s.vasanthan says:

  தலைவரின் எல்லா பிறந்தநாள் நிகழ்வுகளும் அருமையாக செய்துள்ளார்கள் ,அருமை ,நம்ம சுந்தர் கூட கலக்கிடர் ,(நம்ம தளம் சார்பான பிறந்த நாள் நிகழ்ச்சிதான் சுந்தர்)

 7. David David says:

  Dear Rajini Fans, I am now in SA and am a ardent fan of Thalaivar from childhood and have been a regular vistor of this super website for a long time now. Good to see the love of fans of our Thalaivar and their good deeds on his Birthday. I saw in another website that Karunas has condemned Rajini family yesterday for not attending the function. I am not sure about the authenticity of news, though I too didnt like any body condemning thalaivar or his Family, I sincerely believe that somebody from Thalaivar family should have graced the function. We all know Thalaivar couldnt attend the function, But Latha madam or Dhanush or Aishwarya/Soundarya should have come which would be a delight for the fans. Yeah, people who dont like thalaivar & media will find faults even if somebody from Thalaivar family would have come to the function, but they (Thalivar family members) could make exceptions for these kind of activities.

 8. Dinesh Murugesan Dinesh Murugesan says:

  உண்மையாக இது ஒரு மாநாடே என்று சொல்லலாம் . உண்மையான ஒரு தலைவனுக்கு , பாசமிகு ரசிகர்கள் நடத்திய அருமையான விழா !!!! தலைவர் வராதது ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் , நிகழ்ச்சி தொகுப்பு , ஆடல் , பாடல் , விருந்தினரின் ஆக்ரோஷ பேச்சுக்கள் என அவ் வருத்தத்தை போக்கியது என சொல்லலாம் .

  கடைசியில் கூட்டு பிரத்னையில் நாம் அனைவரும் வேண்டியது நிறைவேற விரும்புகிறேன் .

 9. Sankaranarayanan Sankaranarayanan says:

  நன்றி சுந்தர்ஜி மற்றும் திரு தியாகி.

  ப.சங்கரநாராயணன்

 10. bala bala says:

  தலைவரை பின்பற்றும் ஏராளமான ரசிகர்களில் நானும் ஒருவன்.உண்மையில் மற்ற நடிகர்களின் ரசிகர்களை(ஏன் சில நடிகர்களையும் சேர்க்கலாம்)பார்க்கும் போது தலைவரின் ரசிகர்களுக்கு பக்குவம் நிறையவே இருக்கிறது.இது மிகவும் அரிது.தலைவரின் ரசிகன் என்பதில் நானும் பெருமை கொள்கிறேன்.ஆனால், சிலர் கேட்கும் கேள்வி என்னவென்றால் தலைவரின் பட ரிலீஸ்,பிறந்த நாள் அன்றைக்கு ஒரு அரசியல் கட்சி போல் எதற்காக இவ்ளோ பந்தா(cutout),வெட்டி செயல் என்று கேட்கிறார்கள்.தலைவர் இதை விரும்ப வில்லை,அதுவும் இது நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்றும்,வெட்டி செயல் அல்ல என்று சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு அபொழுது எதற்காக cutout வைக்க வேண்டும்.எதற்காக விளம்பரபடுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.இதெற்கெல்லாம் காரணம்,தலைவர் ரசிகர்களுக்கும்,மக்களுக்கும் எத்தகைய உதவிகள் செய்கிறார் என்பது தெரியாமல் போகிறது.அதற்கு தக்க எ.கா உடன் ஒரு தொகுப்பை போடுகுரீரா

 11. Anonymous says:

  சூப்பர் ஸ்டார் வாழ்க!!!

 12. Ashraf Ali Ashraf Ali says:

  இந்த கூட்டம் சேர்த்த கூட்டம் இல்ல;

  அன்பால் சேர்ந்த கூட்டம்.

  ***********************************

  கவிஞர் வாலி எழுதியது போல்

  ***********************************

  அன்பில் தொடங்கி; அன்பில் முடியும் கூட்டம்.

  மழை யை போல எந்த எதிர் பார்பும்மின்றி;

  அன்பை பொழியும் கூட்டம்.

  ***********************************

  Wish you happy Birthday and Long Live “THALAIVA.”

  With regards,

  Ashraf Ali .S

 13. Rajinidasan @ Jayaku Rajinidasan @ Jayaku says:

  தியாகியின் கருத்தை நானும் ஏற்றுகொள்கிறேன். ரஜினியோ அல்லது அவரது குடும்பத்தினரோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருந்திருந்தால் குறை கூறுவதில் அர்த்தம் உண்டு. இவர்களாகவே கற்பனை செய்து விட்டு வரவில்லை என்று கூறுவதில் பயனில்லை. நிச்சயம் தலைவரின் ஆசி இந்த நிகழ்ச்சிக்கு இருந்திருக்கும்.

 14. Desi Desi says:

  I agree with David's comments. It definitely would have made fans happier, if someone from SS's family had attended.

 15. murthy murthy says:

  thaliva u are one and only super star in the world

 16. R O S H A N R O S H A N says:

  Chance eh illa…….semma super ah irukku…..nejamalume oru Manadu pola irukkuthu…….rasigarkal summa pattaya kelapirukkanga pola……..thalaivar varaamalaeye ippidi oru mass na, thalaivar mattum vanthiruntha summa chennai eh athirnthirukkum……ithellam etho oru karanathukka thaan nadakkuthu nu theiryuthu……antha nalla kariyam seekiram nadakka vendum kadavule,……….ithellam paakum pothu ennoda mudi ellam enthirichu nikkuthu ji……..

 17. thyagi thyagi says:

  நண்பர் டேவிட் கூறியது போல், கருணாஸ் கொஞ்சம் விரக்தியாகதான் பேசி இருக்கிறார்.

  ரசிகன் என்ற முறையில் அவர் கூறியது தவறில்லை, பல இலட்ச ரசிகர்களின் உள் வந்த கேள்வியைத்தான் அவரும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். திருமதி லதா ரஜினி அவர்களோ, ஐஸ்வர்யா, தனுஷ் மற்றும் அவரின் திறமை மிக்க சகோதரர் அல்லது YGM அவர்களோ யாராக இருந்தாலும், அவர்கள் தலைவரின் பெயரை இதுவரை விளம்பரத்திற்கு கூட பயன் படுத்தியது கிடையாது. அவரின் குடும்பத்தினர் இதில் தெளிவாகதான் இருகிறார்கள். இவர்களில் யாரும் வருவோம் என்று கூறி வராமல் இல்லை, அதனால் அவர்களை எந்த விதத்திலும் குறை கூற இயலாது.

  ஒரே ஒருவர் மட்டும், படம் எடுக்கிறேன் என்ற முயற்சியில் தலைவரின் இமேஜ் வைத்து ஏதோ செய்து கொண்டு இருகின்றார் . அவர் வந்திருந்தார் கூட மேற் சொன்னவர்கள் முக்கியாமாக திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் வந்த தாக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

  தவிர ரஜினியின் கலையுலக தந்தை களில் ஒருவரானவரும், அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்தியவருமான SPM இருக்கும் பொழுது, உறவினர்கள் எவரும் வரவில்லை என்று சொல்ல முடியாது. ரஜினியின் பர்சனல் வாழ்விலும், தொழில் முயற்சியிலும், SPM அவர்களின் பங்கு மகத்தானது. அவர் வந்து விட்டார் என்றால், சூப்பர் ஸ்டார் வருவதற்கு சமம்.

  LETS ENJOY THE CELEBRATION , THANK GOD FOR HELPING SUPERSTAR TO RECOVER , MOVE ON AND AWAIT HIS NEXT MOVIE

 18. thyagi thyagi says:

  _________________________________________________

  விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த மாதிரி பேசியது,"தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜினிதான்," என்பதே. மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட அனைவரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர். நிச்சயம் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

  இதனால் உற்சாகத்தின் விளிம்புக்கே போய்விட்ட ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ரசிகர்களின் மனநிலை புரிந்து போலீசாரும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டனர்.

  விழாவுக்கு ரஜினி வருவார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.

  __________________________________________________

  ரசிகர்களை மகிழ்விக்க ஒரு வேலை இவர்கள் இதனை கூறி இருக்கலாம். SPM அவர்கள் தலைவரின் மக்கள் சக்தியை பற்றி பொதுவாக கூறி இருக்கலாம்,

  SPM அவர்களை தவிர மற்றவர்களின் குரல்கள் நம்முடைய குரலை போன்றது தான் - ஒரு ரசிகனின் குரல், ஆபீசியால் ஸ்டாடேமென்ட் டாக ஆகி விட முடியாது .

  ஆனால் இது மாதரி செய்தியை மீடியா திரித்து சொல்லுவதால்தான் ,கருத்துவேறுபாடும், குழப்பமும் வருகிறது. இந்த விஷயத்தில் அஜித் அவர்களோ, கமல் அவர்களோ இல்லை என்று கூறி மறு நாளே கறாராக முற்று புள்ளி வைத்து விடுவார்கள்.

  தலைவரோ எல்லா விஷயத்தை போல LIGHTAAGA எடுத்துக்கொண்டு INDIFFERENTAAGA புன்னகைப்பார். எந்த செய்தியும் தலைவர் வாயில் இருந்து வரும் வரை நாமும் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.

 19. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

  நானும் இந்த அருமையான (மாநாடைப் போல) தலைவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன்… மிகவும் மகிழ்ச்சி.. நன்றி சுந்தர் அண்ணா & ரஜினி மனோஜ் அண்ணா…

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 20. swami swami says:

  I think all our SS fans should continue to do whatever service they do silently and continue with their work! That's what our OSS wants! If our OSS had come, they might have forced him to announce some party name or something! He might have wanted to avoid it! Let all of us hope that he recovers from him his illness completely and becomes agile. I hope all fans understand!

 21. Vinod Vinod says:

  http://ibnlive.in.com/news/id-do-anything-rajni-a...

  Idhu than pa NATPU…. Both legends ROCK!!!

  What a camaraderie????

 22. Arjun Rajakutty Arjun Rajakutty says:

  Superb celebrations….

 23. RAJA RAJA says:

  கருணாஸ் சும்மா பிரிச்சு மேஞ்சுட்டார்

 24. tharun tharun says:

  கருணாஸ் speech was chance less in this function SS fans don't miss it.
  http://www.youtube.com/watch?v=LNwWxvBK-eY&fe...

 25. sidhique chennai sidhique chennai says:

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates