You Are Here: Home » Featured, Guest Article » மாஸ் ஹீரோ மக்கள் ஹீரோவுடன் பேசிய அந்த தருணம் — அன்னா ஹசாரேவுடன் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி !

ழலுக்கெதிராக தேச மக்களை தட்டியெழுப்பிய அன்னா ஹசாரே, மத்திய அரசு கொண்டுவந்திருப்பதாக கூறப்படும்  லோக்பால் மசோதா வலுவற்றதாக உள்ளதால், மற்றொரு பெரும் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில், அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்துக்கு எதிராக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து, அதை வழிநடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. ஒரு பக்கம் தங்களை ஊழலுக்கு எதிரானவர்களாக காட்டிக்கொள்ளும் மத்திய அரசு, மறுபக்கம், அன்னா மற்றும் அவரது குழுவினரின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தந்திரமான சில சமயம் கீழ்த்தரமான வழிமுறைகளை  கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அன்னா குழுவினர் கூறுவது போல வலுவான ஒரு லோக்பால் வந்தால், தங்கள் பகுதியில் தான் சேதம் அதிகம் இருக்கும் என்பதை ஆளும் காங்கிரஸ் உணர்ந்தே உள்ளது. தவிர லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள்  உள்ளிட்ட வேறு சில கட்சிகள் தங்கள் பக்கமும் அது திரும்பக்கூடும், என்பதை உணர்ந்து அதை ‘பாராளுமன்றம், மாண்பு, ஜனநாயக அரசு, மக்கள் பிரதிநிதிகளின் உரிமை, எம்.பி.க்களின் கடமை’ என்று எதேதோ பெயரிட்டு ஆதரிப்பது போல பாவ்லா செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அன்னாவின் போராட்டம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகள் கேட்டுள்ளது. தமது போராட்டத்தின் வழிமுறைகளை பற்றி சுயபரிசோதனை செய்துகொள்ள அது நிச்சயம் அன்னாவுக்கு உதவும். “கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் புதியவர்கள். என்னைக் கேட்டிருந்தால் கோர்ட்டுக்கு செல்வதை அனுமதித்திருக்க மாட்டேன். எங்கள் போராட்டத்திற்கான நிதி, நன்கொடையாக பெறப்படும். அதுவும் காசோலைகளாக மட்டுமே. அது முறைப்படி தணிக்கை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்” என்று பதில் கூறியிருக்கிறார் அன்னா.

தவிர இன்னொரு விஷயத்தையும் இங்கே கூறவேண்டும். யாரும் இங்கே கடவுள் அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்களும் அல்ல. எந்த ஒரு விஷயத்தை பற்றியும் விவாதங்களும் விமர்சனங்களும் நடைபெறும்போது, அது குறித்த ‘விழிப்புணர்வு’ அதிகம் ஏற்படுகிறது. இன்றைய தேவை லோக்பால் பற்றிய விழிப்புணர்வு தான். போனவருடம் இந்நேரம் லோக்பால் மற்றும் அதன் தேவை குறித்து இதை படிக்கும் எத்துனை பேருக்குக் தெரியும்? இல்லை அன்னா அவர்களைத் தான் தெரியுமா??

எனவே லோக்பால் குறித்தோ, அன்னா குறித்தோ நடைபெறும் விவாதங்களோ விமர்சனங்களோ வரவேற்கத்தக்கதே. எதையும் சீர்தூக்கி பார்த்து ஆதரவோ எதிர்ப்போ தெரிவிப்பதே நலம். எதையும் கண்மூடித்தனமாக நம்புவதோ ஆதரிப்பதோ சரியானதாக இருக்காது.

ஒருவேளை தற்போது நடைபெறும் போராட்டத்தில் அன்னா ஹசாரே அவர்களுக்கு தோல்வி கிட்டினாலும் எதிர்காலத்தில் இன்னொரு அன்னா தோன்றுவார். இப்போது இந்த தலைமுறையிடையே ஏற்படும் இது குறித்த விழிப்புணர்வு அப்போது உபயோகமாயிருக்கும்.  (என்னைப் பொறுத்தவரை எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அன்னாவை எதிர்க்கிறோம் என்ற எண்ணத்தில் காங்கிரசுக்கு சிலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறார்கள் என்று தான் சொல்வேன்.)

வலையுலகில் அன்னாவை ஆதரித்தும் எதிர்த்தும் பல பதிவுகள் காணப்படுகின்றன. ஆதரிப்பவர்கள் சிலர், இன்னின்ன காரணத்தினால் ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழல் என்னும் அரக்கனுக்கு எதிராக மக்களை வெகுண்டு எழச் செய்ய இவர் ஒருவராவது வந்தாரே என்ற எண்ணத்தில் அவரை ஆதரிப்பவர்கள் அதிகம். அன்னா என்ன தனக்கு வீடும், மாட மாளிகையுமா கேட்கிறார்? 70 வயதை கடந்த இந்த வயதான பிரம்மச்சாரி, யாருக்காக போராடுகிறார்? நமது சந்ததிக்கு தானே? என்று தங்களது மனசாட்சியிடம் கேட்டு அவரை ஆதரிப்பவர்கள் மேலும் பலர்.

அவரை அவரது இயக்கத்தை எதிர்ப்பவர்களில் சிலரும் ஏன் எதிர்க்கிறோம் என்று அவர்களுக்கு தோன்றிய காரணத்தை  குறிப்பிட்டுள்ளனர். சிலருக்கு காரணமே தெரியவில்லை. ஒரு சிலர் அன்னாவை எதிர்ப்பதன் ‘நேரடி(?!)’ காரணத்தை கூறாமல் ‘வெள்ளை குல்லாய் போட்டவர்களை  எல்லாம் நாங்கள் ஆதிரிப்பதில்லை’ என்ற ரீதியில் நீட்டி முழக்குகிறார்கள். வேறு சிலரிடம் விமர்சனத்தை விட வக்கிரமே அதிகம் காணப்படுகிறது.  (வேறு யார்.. நம்ம HOLY SAINT தான்!).

பொதுநலனுக்காக இறங்குபவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதையும் அப்படி இறைப்பவர்களை வேடிக்கை பார்ப்பதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே. இன்னும் சிலர் எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் விசித்திரமானது. நகைப்புக்குரியது. “அவர் ஆதரிக்கிறாரா? அப்படி என்றால் நாம் எதிர்ப்போம்!” என்கிற ரீதியில் நிலைப்பாடு எடுத்திருப்பவர்களுக்கு வலையுலகில் பஞ்சமில்லை.

ஆதரவோ, எதிர்ப்போ அன்னாவும் அவரது இயக்கமும் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பது நிஜம். அதுவே மிகப் பெரிய வெற்றி தான்.

“நாடு எக்கேடு கேட்டால் என்ன? என் வீடும் குடும்பமும் மட்டுமே முக்கியம்” என்ற எண்ணத்தில் ஊறித் திளைத்த, நடுத்தர மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினரையும், மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால், பண்பாடுகளையும் பாரம்பரியத்தின் பெருமையையும் புதைத்தேவிட்ட, நமது தேசிய கொடியின் நிறத்தை கூட மறந்துவிட்ட இன்றைய பெரும்பான்மையான இளம் சமுதாயத்தினரை ஊழலுக்கெதிராக போராட வீதிக்கு கொண்டு வந்தது இந்த இயக்கத்தின் மறுக்க முடியாத ஒரு மகத்தான சாதனை.

எப்படியோ மேற்படி போராட்டத்தில் அன்னா வெற்றி பெற்றால் அது அவருக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. ஊழலுக்கெதிராக வெகுண்டெழுந்த இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு கிடைத்த வெற்றி. ஒருவேளை தனது முயற்சிகளில் அவர் தோற்றால் இழப்பு அவருக்கல்ல. அது ஊழல் பெருச்சாளிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதவேண்டும்.

இந்த வாரம் வெளிவந்திருக்கும் இந்தியா டுடே இதழில், அன்னா அவர்கள் குறித்து கவர் ஸ்டோரி இடம்பெற்றுள்ளது. அவரது போராட்டம் ஏற்படுத்திய மாற்றம், எழுச்சி, அவரது பிரத்யேக பேட்டி, அவர் மீதான விமர்சனம், அவரது சொந்த கிராமத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றம், அவர் கடந்து வந்த பாதை, அன்னாவின் அரிய புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷங்களை உள்ளடக்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய நூல். விலை ரூ.15/- தான்.

அந்த இதழில் இருந்து, சிலவற்றை கீழே தந்திருக்கிறேன். மேலும் விரிவான தகவல்களுக்கு http://indiatoday.intoday.in/anna/ என்ற லின்க்கை பார்க்கவும். விரிவான செய்திகளும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கீழே இடம்பெற்றுள்ள இந்த கீழ்காணும் ஸ்கேனிங் பக்கத்தில், அண்ணாவை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் கூறும் கருத்துக்கள் பற்றி அருமையான தொகுப்பு இடம்பெற்றுள்ளது. விமர்சகர்கள் கூறும் கருத்துக்களுக்கு போதுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஓகே. தலைப்புக்கான விஷயத்திற்கு வருவோம்.

அன்னா அவர்கள் சமீபத்தில் சென்னை வந்தபோது, அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில்  உரையாடியிருக்கிறார்.

இந்த தகவலை சில நாட்களுக்கு முன்பே முதன் முதலில் நம்மிடம் திரு.கிட்டி அவர்கள் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (அதை உடனடியாக நமது டுவிட்டரில் தெரிவித்தோம்). திரு.கிட்டி என்னிடம் பேசும்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அன்னாவிடம் பேசியதன் முழு சம்பவத்தையும் அதன் பின்னணியையும் விவரித்தார். நாம் உடனே, “இது பற்றி நீங்களே, ஒரு கட்டுரை எழுதி எங்களுக்கு அளித்தால் அதை Guest Article பகுதியில் வெளியிடுகிறேன். எங்களுக்கும் பெருமையாக இருக்கும்” என்றோம். மகிழ்ச்சியுடன் இசைந்த அவர், தமது கடுமையான அலுவல்களுக்கிடையே கட்டுரையை அழகாக எழுதி நமக்கு அனுப்பியிருக்கிறார்.

கிட்டி அவர்களை பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலின் இணை ஆசிரியர். ஊழலுக்கெதிரான இயக்கத்தின் தீவிர உறுப்பினர். தன்னார்வ தொண்டர். திரைப்பட நடிகர். எழுத்தாளர். கவிஞர். நமது அன்புக்கு பாத்திரமானவர். நமது தளத்தின் சார்பாக நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு நம்மை சிறப்பித்தவர். எளிமையானவர். படித்தவர். பண்புள்ளவர். எல்லாவற்றுக்கும் மேல் சூப்பர் ஸ்டாரின் நண்பர்களுள் ஒருவர். மொத்தத்தில் ஒரு சிறந்த மனிதர்.

இந்த கட்டுரையில் கூட, அடக்கத்தின் காரணமாக மேற்படி பொதுக்கூட்டத்தில் தான் ஆற்றிய பங்கு பற்றி பெரிதாக எதுவும் கிட்டி அவர்கள் கூறவில்லை. உண்மையில், ஊழலுக்கெதிரான இயக்கத்தில் கிட்டி அவர்கள் ஆற்றிய பணி மகத்தானது. குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெற்ற அன்று அன்னாவின் உரையை மொழிபெயர்த்ததன் மூலம் நடிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் கௌரவம் சேர்த்தார் திரு.கிட்டி என்பதை சூப்பர் ஸ்டார் கூட கிட்டி அவர்களிடம் பின்னர் பேசியபோது சுட்டிக்காட்ட தவறவில்லை.

ஆங்கிலத்தில் திரு.கிட்டி அவர்கள் அனுப்பிய கட்டுரையை கீழே தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறேன். அசல் ஆங்கில எழுத்துரு கடைசியில் தரப்பட்டுள்ளது.

————————————————————————-

அன்னா ஹசாரேவை சிரிக்க வைத்த சூப்பர் ஸ்டார்

- ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி)

ஆகஸ்ட் மாதம் திரு.அன்னா அவர்கள் ஊழலுக்கெதிராக வலுவான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றவேண்டி, 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். நாடெங்கும் மிகப் பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது இந்த உண்ணாவிரதம். அந்த சமயத்தில் அன்னா அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கடிதம் எழுதினார். ஆரோக்கியமான ஒரு சமூக மாற்றத்தை தாம் மிகவும் விரும்புவதாகவும் அதில் கூறியிருந்தார் ரஜினி.

அன்னா ஹசாரே அவர்கள் டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னை வரவிருப்பதாக டிசம்பர் முதல் வாரம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே, ரஜினி சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவர் அன்னாஜியை நேரில் சந்திக்கவேண்டும், தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று. ஆனால் எதிர்பாராதவிதமாக அன்னா வருகையின்போது ரஜினி சார் ஜலதோஷத்தில்  பாதிக்கப்பட்டு தேறிவந்ததால் அவரால் நேரில் சந்திக்க இயலவில்லை. (இப்போ புரியுதா அந்த பர்த்டே ஆடியோ இன்டர்வ்யூவை நான் ஏன் உண்மைன்னு நம்பினேன்னு? அதுல எனக்கு ஜலதோஷம்னு தலைவர் சொல்லியிருப்பார்!)

டிசம்பர் 18 ஆம் தேதி அன்னா அவர்கள் சென்னை வந்தபோது, ஊழலுக்கெதிரான இயக்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். (ஒரு சிலர் கறுப்பு கொடி காட்டி அவருடைய அந்தஸ்தை மேலும் உயர்த்தினர்!). அன்னா அவர்களின் மேற்படி சென்னை வருகை, ஊழலுக்கெதிரான கருத்து கொண்டுள்ள தமிழக மக்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்தது. அன்று மாலை சுமார் 5 மணியளவில் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் அன்னா. தமிழகம் முழுவதுமிலிருந்து பொதுமக்களும் ஊழலுக்கெதிரான இயக்கத்தினரும் (பெண்கள் உட்பட) பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அன்னா உரையாற்றுகையில், சுயநலக் கூட்டத்திடமிருந்து இந்த பாரதத்தை காப்பாற்றி, ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றும் பணியில் அவர்களை இணைத்துக்கொள்ளும்படி இளைய சமுதாயத்தினருக்கு உருக்கமான அழைப்பு விடுத்தார். மாவீரர்கள் பகத் சிங், சுக் தேவ் மற்றும் ராஜ் குரு போன்ற தன்னிகரில்லா சுதந்திர போராட்ட இளம் வீரர்களை இன்ஸ்பிரேஷனாக கொள்ளும்படி அவர்களை கேட்டுக்கொண்டார். இந்த தேசத்திற்காக பாடுபடுவது பிரதிபலனை எதிர்பார்க்கமுடியாத ஆனால் மிகப் பெரிய கௌரவமான கடமை என்பதை சுட்டிக்காட்டினார். ஒரு விதை தான் உயிரை தியாகம் செய்தால்தான், ஒரு கதிரின் விளைச்சலை உண்டாக்க முடியும் என்பதை நினைவூட்டினார். இப்படி தேசத்திற்காக போராடும்போது, எந்த சவாலையும், வலியையும், அவமானத்தையும் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றும் கூறினார். “பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது, அவமானத்தை வாங்கவும், தாங்கவும், விழுங்கவும் தயாராக இருங்கள்” இது தான் அவர் விடுத்த செய்தி. மக்களுக்கு அன்னாவின் உரை மிகப் பெரும் உத்வேகத்தை அளித்தது.

19 ஆம் தேதி காலை அன்னாஜி அவர்கள் தமது சென்னை பயணத்தை முடித்து திரும்புகையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவரையும் அவரது குழுவினரையும் வழியனுப்ப நானும் சென்றிருந்தேன். விமானத்தில் ஏற அன்னா அவர்கள் காத்திருந்த சமயத்தில்…. சரியாக காலை 10.30 மணிக்கு எனது மொபைலுக்கு ஒரு கால் வந்தது. எதிர் முனையில் யார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஒரு கணம் இன்ப அதிர்ச்சியில் திளைத்த நான், அன்னா அவர்கள் விமானத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஏற விருப்பதாக கூறினேன். அன்னா அவர்களுடன் சில நிமிடங்கள் தான் பேசவிரும்புவதாக கூறிய ரஜினி, அதற்கு வாய்ப்பிருக்குமா என்று என்னை கேட்டார். நான் உடனே அன்னாவை நோக்கி ஓடி, விஷயத்தை சொன்னேன். அன்னா உடனே அதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். என்னுடைய மொபைல் மூலமாக அன்னாவுடன் ரஜினி பேச, கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்படும் இரு பெரிய மனிதர்கள் பேசும் அந்த தருணத்தை நான் ஒரு வித சிலிர்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்னாவுக்கு அருகில் நின்றுகொண்டு, இந்த பக்கம் அன்னா பேசுவதை சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனா சிரித்துக்கொண்டே, “உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களிடம் பேசுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்” என்றார் அன்னா ரஜினி அவர்களிடம். ஒரு கட்டத்தில் அந்த பக்கம் ரஜினி சார் ஏதோ சொல்ல, அன்னா அதற்கு பலமாக சிரித்தார். ஏதோ ஜோக்கும் சொன்னார். அவர்கள் உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தது. ” அடுத்த தடவை நாம் நிச்சயம் சந்திப்போம்” இவ்வாறு கூறி அன்னா தனது உரையாடலை முடித்தார்.

ரஜினி அன்னாவிடம் பேசிவிட்டார். அட…. நான் பார்ப்பது கனவா…அல்லது நனவா? ஒரு கணம் என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

அன்னா அவர்கள் விமானம் ஏறிய பிற்பாடு நான் ரஜினி சாரை தொடர்புகொண்டேன். அன்னாவின் முழு உரையை தாம்  தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து ரசித்ததாகவும், அவரது உரைக்கு மக்களிடையே காணப்பட்ட ரெஸ்பான்ஸ் தமக்கு மிகவும் ஆச்சரியத்தை தந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஊழலுக்கெதிரான இயக்கத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பாராட்டுவதாகவும் கூறினார். தவிர, அன்னாவின் உரையை தமிழில் மொழிபெயர்த்தமைக்கு எனக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். நான் ஒரு கணம் பூரித்துப்போனேன். அடுத்து, அன்னா எப்போது சென்னைக்கு வருவார் என்றும் என்னிடம் கேட்டார். அதற்கு நான் அன்னா “லோக்பாலை நாம் விரும்பிய வடிவத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால், அதன் வெற்றிவிழாவுக்கு மீண்டும் சென்னை வருவேன்” என்று கூட்டத்தில் குறிப்பிட்டதை கூறினேன். அந்த நாளை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ரஜினி அதற்கு பதிலளித்தார்.

அவர் மட்டுமல்ல இரு பெரும் மனிதர்கள் சந்திக்கும் அந்நன்னாளை நானும் கூட ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

- இப்படிக்கு
ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி)
தான்னார்வ தொண்டன், ஊழலுக்கெதிரான மக்கள் இயக்கம்
இணை ஆசிரியர், ரஜினியின் ‘பன்ச்’தந்திரம்

————————————————————————-

Original transcript by Kitty sir is as follows:

Rajinikanth sir speaks to Anna Hazareji!

In the month of August, when Thiru. Anna hazare went on a 13 days fast; Super Star thiru Rajinikanth had sent a message supporting his fight against corruption. Rajinisir is deeply committed to positive social transformation.

Around the 1st week of December When I came to know about Thiru Anna Hazare’s visit to Chennai on the 18th & 19th I sent a message to Rajini sir expressing my wish that he should meet Annaji and exchange views. But unfortunately Rajini sir was still recovering from severe cold and infection during Annaji’s Chennai visit.

Thiru Anna Hazare visited Chennai on the 18th of December. He was given a rousing reception at the airport by eager volunteers of IAC. The visit was a morale booster for the youth & public of Tamil Nadu. He addressed a crowd of more than 15000 people at the Pachayappas’ college grounds at 5 pm that evening. Public and volunteers of IAC came from all parts of the state. Annaji spoke for almost 40 minutes that evening!

Giving a clarion call to the youth, Annaji called upon them to come forward to serve this country – Bharath-– from being run & controlled by selfish leaders to be transformed into a “great nation”. He also sought them to be inspired by people like Bhagath singh , sukh dev & Rajguru to sacrifice for the country. He said to serve society will be a thankless but highly valuable duty! “ oru vidhai than uyirai thyagam seidhalthaan, oru kadhirin vilaiychal undaagamudiyum” he clarified. He advised the youth to be prepared for any challenge, pain or insults when serving the public interest. “Podhu vazhkaiyil makkalukku sevai seyyumbodhu, avamanathai vaangavaum, thangavaum vizhungavam thayaragha inrungal” was his message. People were so inspired and energized by Annaji’ talk.

On the 19th of December Annaji left for the Airport to take a morning flight. I was luckily part of the entourage to see off Annaji & team at the airport.As he was waiting for boarding, around 10.30am, I got a call.SURPRISE! Rajini sir was on line!

Hurriedly I explained that Annaji was about to board the flight. Rajini sir expressed a wish to talk to him if it was possible. I rushed, checked with Annaji and he happily agreed. I connected the call thru my mobile for Rajini sir to speak with Annaji. I was so thrilled that two amazing personalities – so loved by millions of Indians- are connecting up!

Happily I stood in front of Annaji and heard this side of the conversation. Annaji was smiling and chatting. “I have heard so much about you , and I am happy to talk to you” he told Rajijinisir. I had goose bumps. In the course of the chat (I do not know what was told at the other end by Rajinisir) Annaji laughed lightly and responded humorously and joked too! They spoke for a few minutes. “May be next time we will meet” Annaji concluded.

Later after seeing Annaji off, I connected with Rajinisir. He stated that he saw the complete speech of Annaji live on TV! He was amazed by the response of the public. He was in full praise for the IAC efforts at the meeting at the pachayappas’ college and heartily congratulated me on the Tamil translation I had done of Annaji’s speech. I was humbled. Eagerly he asked as to when Annaji is coming back again to Chennai. I stated what Annaji had mentioned in the public meeting. “when we achieve our goal of Jan lok pal becoming a reality , I will come again for celebrations at Chennai”. Rajinisir said he will look forward to that.

That was a momentous occasion: two great personalities, two good souls getting connected!

- Raja Krishnamoorthy (khitty)- IAC volunteer &
Co-author of “Rajin’s Punchtantra”

——————————————————————————————————
Also Check:

ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நமது தளம் சார்பாக ஆகஸ்ட் 24 அன்று அவரவர் இருக்குமிடத்தில் உண்ணாவிரதம்!
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=12407

அன்னா ஹசாரே அவர்களின் போராட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரவு!

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=12396

——————————————————————————————————

[END]

20 Responses to “மாஸ் ஹீரோ மக்கள் ஹீரோவுடன் பேசிய அந்த தருணம் — அன்னா ஹசாரேவுடன் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி !”

 1. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  This clearly underlines your commitment and authenticity in collecting such ariticles/messages from a reliable source.. Entire media is behind our Super Star all over the country and failed miserably to collect authentic messages. With your good personal rapport, you have been regularly winning the battle time and again. Thanks for your untiring efforts. I wish you all the very best and hope you to get appointment from Thalaivar to see and discuss with him on our behalf.

  ————————————————-
  Thanks Suresh. I could feel my responsibility by the confidence and goodwill that friends like you keeping on me. Will try to be honest in everything.
  - Sundar

 2. R.Ramarajan R.Ramarajan says:

  But lot of controversary in his team like kejarwal, kiran pedi (collecting money for air ticket to travel first class but travelled in economy class). His agitation help for future.

  Thalaivar ippo fine a ? Take care Thalaivaa.. Waiting for public speech. KOCHADAIYAAN first look soon.

  ——————————————-
  அது மட்டுமா, மேற்படி அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் நடந்தவற்றை கூட தோண்டி துருவிக்கொண்டிருக்கிறார்கள். அதில், திடுக்கிடும்படியாக ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும். அதை வைத்து, ஊழலுக்கெதிரான இயக்கத்தை மூடிவிடலாம். ஓகே? பெருச்சாளிகள் வழக்கம் போல, கொட்டமடிக்கட்டும்.
  - சுந்தர்

 3. R.Ramarajan R.Ramarajan says:

  Sorry for my comments. Anna's lokpal and his fight towards politicians all must win as Thalaivar and we wish. I agree your points about his team. I understand that Anna's aim is just to bring a powerful lokpal and not any political aspirations.

  Thank you for your hard work. Thalaivar's birth day special programme article ready a?

 4. kumar kumar says:

  Pray to god that he should completely recover soon…

 5. Jayakumar.P Jayakumar.P says:

  நான் பெருங்குடியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். எந்திரன் ரிலீஸ் சமயத்தில் இருந்து நமது தளத்தை பார்த்து வருகிறேன். இது வரை கமென்ட் அளித்ததில்லை. இது தான் முதல் முறை.

  திருவான்மியூரில் அன்னா அவர்களின் ஆதரவாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதம் இருந்தபோது, நீங்கள் அங்கு சென்று வந்த அடுத்த நாள் நானும் சென்றேன். எனது தார்மீக ஆதரவை அதற்கு அளித்து கையெழுத்திட்டு வந்தேன். அடுத்த சில நாட்களில் நமது தலைவரும் அந்த போராட்டத்திற்கு ஆதரவாக கடிதம் எழுதியது எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை தந்தது.

  தற்போது தலைவர் அன்னா அவர்களுடன் பேசியதை கேள்வியுற்று மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

  அண்ணாமலையின் ஆதரவு அன்னாவுக்குக் இருக்கு. இனி கவலை எதற்கு?

  ———-ஜெயக்குமார் & முருகவேல் ராஜா ———

 6. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  அண்ணா ஹசாரே வுக்கு என்றுமே நம் தலைவர் துணை இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது மேலும் தலைவரின் ஆசையும் ஊழல் இல்லாத நாடு தானே..

  " இரு பெரும் மனிதர்களின் சந்திப்பை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஒரு ரசிகனாக:"

  என்றும் தலைவர் பக்தன்
  விஜய்

 7. Sankaranarayanan Sankaranarayanan says:

  நன்றி சுந்தர்ஜி.. நன்றி திரு கிட்டி அவர்களே..

  இரு மாபெரும் மனித சக்திகள் சங்கமிக்கட்டும். சத்யா யுகம் விரைவில் உருவாக்கட்டும்…

  ஜெய் ஹிந்த்….

  ப.சங்கரநாராயணன்

 8. saranya saranya says:

  nam thalaivar anna avargaludan pesiyathu migavum santhosham.. eppadiyaavathu intha naatukku nallathu nadakka vendum… hope thalaivar is well now. and expecting for kochadaiyaan first look soon

 9. Anonymous says:

  அன்ன ஹசாரே போன்ற தலைவர்கள் நடத்தும் இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும்..இந்த தேசியப் போராட்டத்திற்கு நம் ஆதரவு நிச்சயம் உண்டு ! அன்ன ஹசாரே அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு தழுவிய உண்ணாநிலை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பொழுது நாமும் நமது ஆதரவை பல்வேறு விதமாக வெளிப்படுத்தினோம் ! இறுதிவரை நம் ஆதரவும், ஒத்துழைப்பும் அன்ன ஹசாரே அவர்களுக்கு உண்டு !

  -

  தலைவர் எவ்வழி ! நாமும் அவ்வழி !

  -

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 10. **Chitti** **Chitti** says:

  My dear all humane Rajni Aficionados,
  ***********************************************
  Hope all of you're doing fine. Belated wishes of Christmas and also wishing you have a blast new year ahead - Wishing all of you, our readers and great personalities those who're giving their constant support to us like Mr. Kitty, Mr.P.C.B., Mr. John and so on. to have a great peaceful, wealthy, healthy and happiest life ahead of the new year on wards!!!
  ***************
  Coming to the article,
  HATS OFF to Mr. Kitty for his laudable support to Mr. Anna Hazare for being with him, translation to our massive people and everything while Anna's visit to Chennai as well as being a part of anti-crusading movement against corruption along with Annaji forever.
  **************************************************
  Dear Mr. Kitty,
  I am very happy to know that you're constantly being part of the great Anna's movement against the corruption. And Thanks so much for letting us know this info - Thalaivar spoke to Annaji.
  ***
  Yes, you perfectly said which I liked the most - " I was so thrilled that two amazing personalities – so loved by millions of Indians- are connecting up!" and "That was a momentous occasion: two great personalities, two good souls getting connected!"
  ***
  Indeed we're also waiting for the wonderful double bonanza - the moment when strong lokpal become a reality and Anna's meeting with our Super Star. It will be like another world cup for us and even more than that.
  And the time is not so far away for us for our great country getting become powerful. Once our country get rid of this powerful plague 'corruption' - I am damn sure that as per our Kalam's vision - by 2020, India will be super power than even USA and other dominating countries.
  ****
  Continue your good work Mr. Kitty sir. We, Rajni fans are there at every moment to kill this corruption plague to make our country proud and powerful along with my INSPIRATION 'SIVAJI RAO'.
  ****
  by,
  (இந்த பரத கண்டத்திற்கு நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு - பாபா).
  **சிட்டி**.
  ஜெய் ஹிந்த்!!!
  Dot.

 11. **Chitti** **Chitti** says:

  Dear Mr. Kitty,

  *****************

  Loving Thanks so much for your wonderful speech in our Super Star's Birthday celebration.

  ***

  What a clarity was in your speech!!! That's why you're so successful as you'd mentioned that clarity is one of the ingredients for the success of life.

  I loved each and every wordings you'd put - Extra ordinary courage, Self confidence, Self Realization.

  ****

  And Courage involves one's clarity, decision making skills, non-stop trying to achieve success and

  Self realization includes the realization of GOD/Nature/upper higher force, Charity (and defined what clarity is - it means not only giving the money to needy but also includes wishing others success through our thoughts) etc…

  I loved the most among the others you said was - clarity and self realization - since I heard of and know the benefits of others what you said, but these above two, somewhat they're new to my knowledge application section.

  And I hope both sincerely lift my life I feel. Thanks so much for this - for given a new dimension - for given such a clarity to my life.

  We're very happy and grateful to have you with us. Just please keep your support to us. Please!!!

  ***

  by,

  (இந்த பரத கண்டத்திற்கு நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு (உங்களை போன்ற நல்லவர்களால்) – பாபா).

  **சிட்டி**.

  ஜெய் ஹிந்த்!!!

  Dot.

 12. Anonymous says:

  தலைவர் India Against Corruption இயக்கத்தினர் சென்னையில் அன்னாவுக்கு ஆதரவாக மூன்று நாட்கள் மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரதத்துக்கு தனது ராகவேந்திரா மண்டபத்தை அளித்த தகவலை நமது டுவிட்டர் மூலம் தெரிந்துகொண்டேன். நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். நீங்கள் எப்போது அங்கு செள்ளவிருக்கிரீர்கள் என்று எனக்கு சொல்லவும்.

  மேலும் தலைவர் அன்னாவுடன் பேசினார் என்ற செய்தியை முதன் முதலில் எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு கிட்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
  .
  மாரீஸ் கண்ணன்

 13. Shriram.T.K.L. Shriram.T.K.L. says:

  ஒரு காலத்தில் நானும் ரஜினி என்கின்ற ஒரு வித்தியாசமான நடிகரின் ரசிகன் தான். ஆனால் இன்று அந்த அடையாளம் என்னிடம் இல்லை. ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அவரின் தனி மனித குணங்களால் ஈர்க்கப்பட்டவன். தமிழ் திரை உலகில் எந்த நடிகருக்கும் இல்லாத ரசிகர் ரசிகைகளை வைத்து கொண்டு, இது வரை எதையும் செய்தது இல்லை என்ற வருத்தம் என்னை போன்ற பல அபிமானிகளுக்கு உண்டு. இனி அவர் புகழோ, பணமோ பெற வேண்டிய எந்த வித கட்டாயத்திலும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி விட்டார். இனியாவது தன்னை வாழ வைத்த இந்த தமிழ் சமுதாயதிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். ஏன் என்றால், இங்கு உள்ள இளைய தலைமுறையை வழி நடத்த எந்த மனிதரும் இல்லை. தலைவனை திரை அரங்கத்தில் தேடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இங்கு உள்ள தற்போதைய அரசியில் தலைவர்களை நினைத்தால் குலை நடுங்குகின்றது. கலைஞர், ஜெயலலிதா இவர்களை தவிர்த்து, அடுத்த கட்ட அரசியில்வாதிகளை கொஞ்சம் பாருங்கள். வைகோ, ராமதாஸ், திருமா, இன்னும் பல குறுகிய வட்டார சிந்தனை உள்ளவர்கள் தான் எங்கும் உலா வருகின்றனர். தமிழனின் பிறவி பலவீனமான உணர்ச்சி வசப்படும் தன்மையை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு, மலிவான உணர்ச்சி பிரச்சாரங்களில் மூளையை மழுங்க அடித்து, ஒரு செம்மறி ஆட்டு கூட்டத்தை வளர்ப்பதில் தான் முனையாக உள்ளனர். இந்த நிலை மாறி, அடுத்த நூற்றாண்டிற்கு தமிழனை இட்டு செல்லும் பொறுப்பு ரஜினி போன்ற தேச, தெய்வீக சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே முடியும். இனியும் ரஜினி ஒதுங்குவது தமிழ் நாட்டிற்கு நல்லது அல்ல.

 14. Anonymous says:

  நம்ம தலைவர் அன்னா ஹசாரே அவர்களிடம் பேசியது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு,இந்த விஷயத்தை நம்ம தளத்துல முதல்ல ஷேர் பண்ணிகிட்டதுக்கு ரொம்ப நன்றி,திரு.கிட்டி சார் அவர்களே.

  அன்னா ஹசாரே அவர்களின் பாதையில் நம் தலைவர்,அவரை பின்தொடர்ந்து நாம்…

  " நல்லவர்வர்கள் வழியில் நாமும் நடப்போம்,நம் நாட்டைக் காப்போம்!!! "

  …ஜெய்ஹிந்த்…

 15. RAJA RAJA says:

  சிவாஜி ல தலைவர் சொன்னது தான் ஒருத்தன் நல்லது பன்னணனும் நு நினச்ச விடமாடீன்களே

  இந்த அன்ன எதிர்பாளர்கள் அண்ணாவை ஒழிப்பதில் காட்டும் அக்கறையை ஒரு சிறு அளவாது மக்கள் மேல் காட்டினால் நல்லது

 16. **Chitti** **Chitti** says:

  அன்புள்ள சிவாஜி ராவின் ரசிகர்களுக்கு,

  *****

  எனது வணக்கங்கள்….

  ******************************

  ஏனப்பா அவரை தொந்தரவு செய்கிறிர்கள்???? அவர் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார். (இதையே தான் ரொம்ப வருஷங்களாக சொல்றீங்கன்னு பின்னாடி பேசறது கேட்குது).. அவர் சொன்னதை தானே சொல்லிக்கொண்டே இருக்கிறார். மாற்றி சொல்லவில்லையே. அருணாச்சலம் படத்தில் வர மாதிரி திடீர்ன்னு முடிவெடுத்து கட்சிய பின்னாடி கலைச்சா நல்ல இருக்குமா????? சொல்லுங்க. எல்லாத்துக்கும் சந்தர்ப்பம், சூழ்நிலை ரொம்ப முக்கியம். இப்போ VK, TR, Chiru, கார்த்தி நிலை என்னனு பார்த்து இருப்பிங்க. இன்னும் கொஞ்சம் காலம் பொறுங்க. கண்டிப்பா அவர் வருவார். அதுதான் விதி. (ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டது. தர்மம் கடைசி நிலையில் அழியும் போது, பகவான் வந்து இந்த கலியுகத்தில் காப்பாத்தறத ஐதீகம். கடவுளால நேரடிய வரமுடியாது. அதனால MGR, ரஜினி…அப்டின்னு நல்ல மனிதர்களை பூமியில் படைத்து, நல்ல காரியங்களை செய்வதற்காக பயன்படுத்தி கொள்கிறார்) (ஏற்கனவே 'சிவாஜி ராவ்' அவரால் முடிந்த நல்ல காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார். அவர் அதை வெளிபடுத்தாமல் இருப்பதால் அவர் ஏதும் செய்யவில்லை என்று இல்லை). அதனால், நாம் கவலைப்பட தேவை இல்லை. இப்போதைக்கு, அவர் தன்னோட படங்களில் சொன்ன நல்ல விஷயங்களை மட்டும் பின்பற்றிகொண்டு வாருங்கள். முதலில், நம்மை நாம் (திருத்தி) உயர்த்திகொள்வோம் - நமது நல்ல குணங்களால். நம்ம வீட்டை நாம சுத்தபடுத்துவோம். பின்பு நாட்டை சுத்தபடுத்த தொடுங்குவோம்.

  Its like,

  "As Above, so below. As within, so without". Everything has to be started within, not without. That means start from yourself.

  "Be the change that you wish to see in the world" - a beautiful quote by Mahatma.

  எனவே, நாம எல்லோரும் முதலில் நம்மை சரி செய்து கொள்வோம் (அதாவது, பொறாமை, கோபம் மற்றும் பல தீய குணங்களை பொசுக்கி அன்பு, காலத்தை சரியாக உபயோகித்து கொள்வது, தானதர்மங்களை செய்வது போன்ற நல்ல குணங்களை வளர்த்து கொள்வோம்). பின்பு நாடு தானாக மாற துவங்கும்.

  Whatever you want to happen, believe, believe, believe..It will happen. Think positive things. Do good, Feel good. Be happy and make others happy.

  ***********************

  இப்படிக்கு,

  தீய எண்ணங்களை போராடி (நல்ல குணங்களால்) வெற்றி பெற துடிக்கும்,

  **சிட்டி**.

  - thoughts becomes things.

  ஜெய் ஹிந்த்!!!

  Dot.

 17. கிரி கிரி says:

  சுந்தர் ரொம்ப நன்றி. இந்த செய்தியை நான் இது வரை எந்த ஆன்லைன் தளத்திலும் படிக்கவில்லை. ரொம்ப முக்கியமான விஷயம் இது எப்படி மீடியாக்கு தெரியாமல் போனது.. தெரிந்து இருந்தால் பெரிய பரபரப்பு ஆகி இருக்கும் இனி இதில் படித்து பல செய்திகள் வர வாய்ப்புண்டு :-) பகிர்ந்தமைக்கு நன்றி

  ———————————
  கிரி, இதில் சம்பந்தப்பட்டவர் திரு.கிட்டி என்பதால் இந்த செய்தியை மிக மிக லாவகமாக கையாண்டார். 'ஒரு ரஜினி ரசிகர் நடத்தும் தளத்திடம் இதை பகிர்ந்து கொள்ளலாமே… அதுவும் நமக்கு அறிமுகமான சுந்தர் நடத்தும் தளத்தில் இந்த செய்தி முதலில் வெளியாகட்டும்!' என்று அவருக்கு தோன்றியது நமக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.
  - சுந்தர்

 18. dr suneel dr suneel says:

  idhu miga mukiyamana, seidhi, magilchi alikum seidhi.எங்கும் ஏற்பட்ட எழுச்சி தமிழகத்திலும் ஏற்பட வேண்டும்.விமரிசனம் d எனும் எயரில் vetru அவதுருகள் மட்டும் பரப்ப படுகிறது.அண்ணாவின் வாழ்கை பற்றியோ அவரது சாதனைகள் புரிவதில்லை.திரு கட்டிஅவர்களுக்கு நன்றி

 19. Robosathya Robosathya says:

  வெறித்தனம்

 20. Anonymous says:

  பதிவின் தலைப்பு சூப்பர்!!

  தலைவருக்கு ஆரம்பத்திலிருந்து இதில் நாட்டம் உள்ளதை நான் உன்னிப்பாக உத்து கவனித்து வருகிறேன் :) தலைவர் அன்று உண்ணாவிரதம் காவேரி நீருக்காக "மேற்கொண்டார்" :) இன்று அண்ணா ஊழலுக்கு எதிராக மேற்கொள்கிறார் :) இரு மாபெரும் தலைவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் ஒன்று சேர்ந்தால்?????

  ***சக்தி எல்லாம் ஒன்று சேந்தாலே!!! சொர்க்கம் வரும் இந்த மண் மேலே***

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
ில் சூப்பர் ஸ்டார் ரஜினி!
 • இத்தனை வருஷம் இந்த தளம் நடத்தி நான் சாதிச்சது என்ன?
 • Lingual Support by India Fascinates