









You Are Here: Home » Featured, Guest Article » சூப்பர் ஸ்டாருடன் ஒரு ஹைவே பயணம்!!
சூப்பர் ஸ்டாரை நேரில் பார்க்கவேண்டும் என்பது லட்சோப லட்சம் ரசிகர்களின் கனவு. அப்படி பார்ப்பவர்களுக்கு அவருடன் ஒரு சில நிமிடங்களாவது பேசவேண்டும் என்பது கனவு. அப்படி பேசும் அரிதான சந்தர்ப்பம் கிடைப்பவர்களுக்கு, அவருடன் ஒரு சில மணிநேரம் இருக்கவேண்டும் என்பது ஒரு கனவு.
அப்படி அவரை நேசிக்கும் ரசிகர்கள் சிலர், எதிர்பாராதவிதமாக ஒரு பயணத்தில் அவரை சந்தித்து ஒரு சில மணிநேரங்கள் அவருட கழிக்க நேர்ந்தால்…? நினைத்து பார்க்கவே திரில்லிங்காக இருக்கிறது அல்லவா?
அப்படி நம் ரசிகர்கள் சிலர் அவரை உண்மையிலேயே சந்தித்து, மனம் விட்டு பேசியபடி பயணித்தால் அது எப்படி இருக்கும்?
இந்த் கற்பனைக்கு அழகாக உயிர் கொடுத்திருக்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர்.
http://crazycricketlover.blogspot.com/ என்ற பிளாக்கை நமது தள வாசகரும் சூப்பர் ஸ்டாரின் ரசிகருமான தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சாய், ராமசுப்ரமணியன் ஸ்ரீனிவாசன், ஜெயராமன், அர்விந்த், கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகிறார்கள். கிரிக்கட் பற்றிய இந்த பிளாக்கில் பிற விஷயங்களும் அவ்வப்போது பதிவிடப்படுகின்றன. நகைச்சுவைக்கும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.
சில மாதங்களுக்கு முன்பு கூட, சூப்பர் ஸ்டாரும் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்தால் எப்படி இருக்கும்? என்ற பதிவை அளித்திருந்தனர். நமது தளத்திலும் அது வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.
தற்போது இவர்கள் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். ஒரு ஹைவேஸ் பயணத்தில் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஸ்டாரை சந்தித்தால் எப்படியிருக்கும் என்பதை மிக அழகாக விளக்கியிருக்கின்றனர். உண்மையில் நாமே அவருடன் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை மேற்படி பதிவு ஏற்படுத்துகிறது என்பது உண்மை.
தலைவர் உடல் நலம் பெற்று திரும்பியிருப்பது, ராணா, மற்றும் கோச்சடையான் படங்கள் குறித்து உங்கள் மனதில் உள்ள சந்தேகங்கள், அவரது பேவரைட் ஆன்மிகம், சமீபத்திய டின்களின் சென்சேஷன் ‘கொலைவெறி’ பாடல் என உற்சாகமாக இவர்களது உரையாடல் நீண்டு கொண்டே போகிறது.
கடைசியில், இவர்கள் கேட்டிருக்கும், “வாழ்க்கை என்றால் என்ன?” என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கும் பதில் marvelous, amazing, stunning, realistic. இரண்டாம் பாகத்தின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பதிலை படிக்க தவறாதீர்கள். உண்மையில் தலைவருடன் நம்மில் யாருக்காவது இப்படி ஒரு chat செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படித் தான் தலைவர் பேசுவார் என்றே உறுதியாக கற்பூரம் ஏற்றி சொல்லலாம்.
அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள் தான் இப்படி இந்தளவு ரியாலிஸ்டிக்காக எழுதமுடியும். தினேஷ் மற்றும் நண்பர்களுக்கு வாழுத்துக்கள் மற்றும் நன்றிகள்.
Over to Dinesh, Jayaraman & Friends @
http://crazycricketlover.blogspot.com/
—————————————————————————————————-
Part 1
சென்னை - பெங்களூரு ஹைவே.
அலுவலக விஷயமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தோம். இளைப்பாறுவதற்காக ஒரு டாபாவில் வண்டியை நிறுத்திவிட்டு டீ மற்றும் பக்கோடாவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தோம். இரண்டு பெஞ்சு தள்ளி ஒருவர் மிகவும் நிதானமாக, ஸ்டைலாக டீ அருந்திக் கொண்டிருப்பதை கவனித்தோம்.
வயதான தோற்றம் ஆனால் வசீகரப் பார்வை. மிகவும் பரிச்சயமானவர் போலத் தோன்றவே உற்று நோக்கினோம். அட… நம்ம சூப்பர் ஸ்டார். உடனே அவர் அருகே சென்று “என்ன சார், நீங்க எப்படி இங்க? கனவு மாதிரி இருக்கு சார்”
தனக்கே உரித்தான புன்முறுவலுடன், “பிரெண்ட்ஸ், சத்தம் போடாதீங்க, அப்புறம் கூட்டம் கூடிடும். வெளியே என் வண்டி பக்கத்துல போய் நில்லுங்க. அங்கே பேசுவோம்”.
தலைவர் பேச்சை தட்ட முடியுமா? காரை நோக்கி நகர்ந்தோம்.
அவர் டீ குடித்து முடித்தவுடன் கடைப் பையன் க்ளாசை எடுக்க வந்தான். அவனைப் பார்த்து, “என்னடா, படிக்கறியா இல்லை முழு நேரமும் இங்கயே வேலை செய்யறியா?”
அந்தப் பையன், “இங்கே சாயந்திரம் தான் வேலை செய்யறேன். நீங்க சொன்ன மாதிரி காலையில பள்ளிக்கூடம் தான் சார் போறேன்,”
ரஜினி, ‘வெரி குட். லக்ஷ்மி தேவை. ஆனா அதைப் பாதுகாக்க சரஸ்வதி ரொம்ப முக்கியம். புரிஞ்சுதா!”
அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவர் யாரிடமோ பதற்றமாக போனில் பேசுவதை கவனித்தோம். விசாரித்ததில் அவர் குடும்பத்தில் யாருக்கோ உடம்பு சரியில்லையென்றும் அவர் உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும் அறிந்தோம். ஒரு பக்கம் டிரைவர், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் - என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்த போது தலைவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் எங்கள் மூவரையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். பிறகு, “என்ன எதாச்சும் பிரச்சினையா? சொல்லுங்க, முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்” என்றார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். சற்றும் தயங்காமல் “நான் பெங்களூர் தான் போறேன். நீங்க வேணும்னா என் கூடவே வாங்களேன், உங்களை மாதிரி யூத் கூட பேசினா எனக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்க டிரைவர் அவர் வீட்டுக்குப் போகட்டும் - என்ன சொல்றீங்க?”
அவனவன் தலைவரைப் பாக்கறதுக்கு வீட்டு வாசலில் தவம் இருக்கான், கரும்பு தின்னக் கூலியா? உடனே தலையாட்டினோம். பேச்சு காரினுள் தொடர்கிறது. அவரே ஆரம்பித்தார்.
“நீங்க என்ன பண்றீங்க?”
நாம், “முழுநேரமா கிரேசி கிரிக்கெட் லவ்வர்னு ஒரு ப்ளாக்ல கிரிக்கெட் மற்றும் பல விஷயங்களைப் பத்தி அப்பப்போ எதாச்சும் எழுதுவோம். பகுதி நேரமா ஒரு கம்பெனியில வேலை பாக்கறோம்.
ரஜினி, “ஒஹ்! நானும் சச்சினும் சந்திக்கற மாதிரி ஒரு ஆர்டிகிள் எழுதினீங்களே, அதுவா?”
“நீங்க படிச்சிருக்கீங்களா?”
“முழுசா படிக்க முடியல, பட் என் ஆபீஸ்ல எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி பிரிண்ட் எடுத்து வெச்சிருக்காங்க. இட் வாஸ் குட். எப்பெப்போ டைம் கிடைக்குதோ அப்பப்போ படிப்பேன்.”
“நீங்க நிஜமாவே லேட்டஸ்ட் தான் சார்”
“ஐயோ அதெல்லாம் இல்லை. பட் இது ஆபரேட் பண்றது எப்படின்னு என் பேரன் தான் எனக்கு சொல்லித் தரான். ஹி இஸ் தி லேட்டஸ்ட்”
“இப்போ நீங்க முழுசா குணமாயிட்டீங்களா சார்? நீங்க ஆஸ்பத்திரியில இருக்கறப்போ என்னல்லாமோ வதந்தி SMS அனுப்பிச்சு கலவரம் பண்ணிட்டாங்க”
சிரித்துக் கொண்டே, “யா, அது ரொம்ப funny. In fact, நான் செத்துப் போயிட்டேன்னு எனக்கே ஒருத்தர் மெசெஜ் அனுப்பியிருந்தார், இது எப்படி இருக்கு? ஹஹஹா.” அவரது ஸ்டைலான சிரிப்புக்குப் பிறகு அவரே தொடர்கிறார்.
“ஜோக்ஸ் அபார்ட், எந்திரன் வெற்றிக்கு வைத்த திருஷ்டிப் பொட்டுன்னு தான் அதை எடுத்துக்கணும். பட் இப்போ நான் முழுசா fit ஆயிட்டேன். கோச்சடையான்ல ரெண்டு மூணு ஹீரோயின் இருந்தாக் கூட டூயட் பாட நான் ரெடி. ஹஹஹா” - மீண்டும் அதே ஸ்டைல் சிரிப்பு.
உங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பற்றிக் கேக்கணும். கேக்கலாமா?
“ஷ்யூர் ஷ்யூர்”
ராணா ஏன் சார் டிராப் பண்ணிட்டீங்க?”
“சிறிது நேரம் யோசிக்கிறார். பிறகு தொடர்கிறார் “சொல்லப் போனா அது கொஞ்சம் பெரிய கதை - ஹனுமான் வால் மாதிரி. ஆக்சுவலா சுல்தான் எவ்வளவோ பிரமாதமா எடுத்தும் திருப்தி இல்லை. டயத்துக்கு முடியாம ரொம்ப இழுத்தடிச்சிடிச்சு. ரொம்ப கேப் விழுந்திடுமோன்னு நினைச்சு ராணா ஆரம்பிச்சோம். பட் முதல் நாளே எனக்கு உடம்பு சரியில்லாம போய், - உங்களுக்குத் தான் மீதிக்கதை தெரியுமே? அப்புறம், சிங்கப்பூர்ல நான் இருக்கும்போது ஒரு நாள் ரவி போன் பண்ணினார். “என்ன சார், முதல் நாளே இப்படி ஆயிடுச்சு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து எவ்ளோ ஹிட் குடுத்திருக்கோம், எப்பவும் இப்படி ஆனதில்ல, இது ஏதோ கடவுள் நமக்கு குடுக்கற எச்சரிக்கை மணி மாதிரி இருக்கு, நாம் இதை ஓரமா வெச்சுட்டு வேற ஒரு கதை பண்ணினா என்ன” அப்படின்னு சொன்னாரு. எனக்கு அது சரின்னு பட்டிச்சு. நீங்க ரெடி பண்ணி வைங்க. நான் வந்ததும் ஒரு ரஷ் பார்த்துட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னேன். சென்னை வந்த பிறகு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். கோச்சடையான் வொர்க் அவுட் ஆகும்னு கான்பிடென்ட்டா தோணிச்சு. ஸ்டார்ட் பண்ணிட்டோம். பட் ஆண்டவன் ஆசீர்வாதத்தோட ராணா கண்டிப்பா வரும்”
“எங்களுக்கென்னமோ அந்த தீபிகா படுகோனே ராசி சரியில்லையோன்னு தோணுது சார். பார்த்து சார், ஜாக்கிரதையா இருங்க”
சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “இந்த மாதிரி நீங்க பேசலாம், நான் பேச முடியாது. அதுவுமில்லாம நல்ல நேரம் கெட்ட நேரம்னு எல்லாருக்கும் அவன் (வானை நோக்கி கை காட்டுகிறார்) டைம் டேபிள் போட்டு வெச்சிருக்கான். அது இவரால வந்திச்சு அவரால வந்திச்சுன்னு சொல்றதெல்லாம் சரியில்ல. மனுஷன் வெறும் கருவி தானே. சுவிட்ச் அவர் (கை மறுபடியும் மேலே) கையில இருக்கு”
“சரியா சொன்னீங்க சார். சரி சார், இப்போ தமிழ் சினிமா எப்படி இருக்குன்னு நினைக்கறீங்க?”
“ரொம்ப நல்லா இருக்கு. நிறைய நியூ faces, நியூ டைரக்டர்ஸ், ஸ்டோரி,….. நல்லாருக்கு. மைனா, ஆடுகளம், இப்போ ஏழாம் அறிவு - சந்தோஷமா இருக்கு”
“உங்களுக்கு அந்த மாதிரி எளிமையான படம் பண்ணனும்னு ஆசை இருக்கா சார்?”
“நிறைய இருக்கு, ஆனா எப்போன்னு தெரியல”
“இது எல்லாரும் கேக்கற கேள்வி தான். உங்களுக்கப்புறம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு நீங்க யாரை சார் நினைக்கறீங்க?”
“அதெல்லாம் மக்கள் நம்ம மேல இருக்கற அன்புல குடுக்கறது. வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது”
“சரி, கமலுக்கு அடுத்தபடியா யார் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?”
“அதை கமல்ஜி தான் சொல்லணும். ஹஹஹா”
“இருந்தாலும் ஒரு சின்ன கெஸ்ஸ், சூர்யா, விக்ரம்..?
“ஸீ, சூர்யா விக்ரம் இவங்கல்லாம் அழகான எழுத்து, ஐ மீன் வேர்ட்ஸ். பட் கமல் வந்து…. என்ன சொல்றது…ஒரு டிக்ஷனரி மாதிரி. இந்த எல்லா எழுத்தும் அந்த டிக்ஷனரிக்குள்ள நீங்க பாக்கலாம். பட் நீங்க அவர்கிட்ட இந்த கேள்வி கேட்டீங்கன்னா அவர் சிவாஜியை டிக்ஷனரின்னு சொல்வார். தட் இஸ் கமல்”
முதல்லயே கேக்கணும்னு நினைச்சோம், நீங்க எப்படி சார் இந்தப் பக்கம்? பெங்களூருல கோச்சடையான் ஷூட்டிங்கா?”
“இல்ல, ஸ்டோரி டிஸ்கஷன்.”
“படம் எப்படி சார் வந்துக்கிட்டிருக்கு?”
” இன்னும் முழு ஸ்கிரிப்ட் ரெடி ஆகல. பட் கான்செப்ட் நல்லா டெவெலப் ஆகியிருக்கு. நிறைய டெக்னிகல் விஷயங்கள் இருக்கறதால டைரக்டர் ஷங்கர் கிட்ட கூட நான் இதைப் பத்திப் பேசினேன். பிகாஸ் ஹி இஸ் வெரி குட் அட் இட் யு நோ. ரொம்ப பிரமாதமா இருக்கு சார். எந்திரன் பார்ட் 2 மாதிரியே இருக்குன்னு சொன்னார். ஐ ஆம் ஹாப்பி.”
“எந்த மாதிரி கதையா இருக்கும் சார்?”
“எந்த மாதிரியா இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?”
“வித்யாசமா, வெரைட்டியா, லேட்டஸ்டா..”
“எல்லாமே உண்டு. லேட்டஸ்டா இருக்கும். ஆனா லேட் ஆகாது. ”
“3Dல எடுக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?”
அதான் சொன்னேனே, லேட்டஸ்டா இருக்கும்னு, சினிமா நிறைய வளர்ந்திடுச்சு. முன்னாடி மாதிரி பூஜை போட்டோம், ஏவிஎம் இல்லேன்னா விஜயா ஸ்டூடியோவுல செட் போட்டோம்னு எடுக்கற சமாச்சாரம் இல்லை. சினிமா ஒரு டெக்னாலஜி மாதிரி ஆயிடுச்சு.
“இருந்தாலும் கதை ஒன் லைன் சொல்ல முடியுமா?
“சொல்லிட்டாப் போச்சு”
சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வரி…..
Part 2
தலைவர், “புராணம் இதிகாசம் தொடங்கி இன்னிக்கு இருக்கற மாடர்ன் உலகம் வரைக்கும் எப்பவுமே இருக்கற ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வி “அறிவா இல்லே மனசா?, அஞ்ஞானமா இல்லே விஞ்ஞானமா? மனுஷனா இல்லே கடவுளா?” இதை பேஸ் பண்ணித் தான் கோச்சடையான் இருக்கப்போவுது”
நாம் சற்றே குழம்பிய நிலையில், “என்ன சார், இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க?”
“நீங்க ஒன் லைன் தானே கேட்டீங்க, அதான் சொன்னேன். See, இது ஒரு பிரம்மாண்டமான படம். எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டா அப்புறம் படம் பாக்கற இன்டெரெஸ்ட் போயிடும்”
“ஓகே சார்”
தலைவர், “அது சரி, இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டதும் உங்களுக்கென்ன தோணிச்சு?”
“கிட்டத்தட்ட நீங்க சொன்ன மாதிரி தான். பட் இன்னும் நிறைய கற்பனை பண்ணியிருந்தோம்”
“எப்படி? கொஞ்சம் சொல்லுங்க”
“ஒரு பொக்கிஷம். ஆனா அதோட மதிப்பும் ஆபத்தும் தெரியாமலேயே ஒரு குடும்பம் அதை பாதுகாத்துக்கிட்டு வராங்க.அந்தப் பொக்கிஷத்தோட மதிப்பு தெரிஞ்ச, அதை வியாபாரமாக்கத் துடிக்கற ஒரு அறிவியல் க்ரூப்பும், அதோட வரலாறும் ஆபத்தும் தெரிஞ்ச ஒரு மாந்த்ரீக க்ரூப்பும் அந்தக் குடும்பத்துக்குள்ள கலக்கறாங்க. அதனால ஏற்படற திருப்பங்கள், பிரச்சினைகள் ஒரு பக்கம். இதுக்கு நடுவுல அந்தப் பொக்கிஷத்தையும் அந்தக் குடும்பத்தையும் ஒரு மாய மனிதன் சரியான நேரத்துல அப்பப்போ வந்து காக்கறார். ஒரு பிரம்மாண்டமான க்ளைமாக்ஸ். ஆனாலும் அந்தப் பொக்கிஷத்தை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்தாத்தான் அதோட ஆபத்து குறையும் - இங்கேர்ந்து ராணாவுக்கு லீட் எடுக்கலாம். அந்த மாய மனிதன், அறிவியல் க்ரூப், மாந்த்ரீக க்ரூப், அந்த அப்பாவிக் குடும்பம் - இதெல்லாம் பிளாஷ்பேக் மாதிரி வரிசையாக் காட்டாம முன்னும் பின்னுமாக் காட்டலாம்.
தலைவர், “நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் டெவெலப் பண்ணினா நல்லா வரும் போலிருக்கே, ரவி கிட்ட பேசறேன்”
“அந்த மாய மனிதன் தான் கோச்சடையான். அவருக்கும் ராணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு ஹிஸ்டாரிக் ட்ராக்ல மெயின் கதைக்கு இணையா கொண்டு போகலாம். கிட்டத்தட்ட மூணு கதை இணையா போவும் இந்தப் படத்துல. தமிழ சினிமாவுல யாரும் பண்ணாதது. இது வரைக்கும் வந்ததெல்லாம் மூணு கதையை ஒரு புள்ளியில இணைப்பாங்க. ஆனா எல்லாக் கதையம் தனித்தனியாத் தான் வரும். நம்ம சொல்றது கொஞ்சம் வித்யாசமா இருக்கும்”
“இண்டரெஸ்டிங், கண்டிப்பா ரவி கிட்ட பேசறேன்” அதற்குள் தலைவர் போன் ஒலிக்கிறது. காலர் டியூனாக தனுஷின் கொலைவெறி.
“ரவி, சொல்லுங்க, வந்துக்கிட்டே இருக்கேன், btw , வழியில சில புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. நமக்கு சில நல்ல பாயின்ட்சும் கிடைச்சிருக்கு. வி வில் டிஸ்கஸ்”
அவர் போன் பேசி முடித்ததும் நாம், “நீங்களும் கொலைவெறி ரசிகராயிட்டீங்களா?”
“ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு பாட்டை மறுபடி மறுபடி கேக்கறேன். தனுஷ்னால இல்லை, நிஜமாவே நல்ல சாங். வேர்ல்ட் பூரா பாப்புலராயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்”
“ஆமாம் சார். முதல்ல சாதாரணமாத் தான் ஸ்ப்ரெட் ஆச்சு. ஆனா தனுஷ் உங்க மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச பிறகு உங்களை மாதிரியே புல் ஸ்பீட்ல பரவிடுச்சு”
சிறிய வெட்கத்துடன், “எல்லாம் God’s கிரேஸ்”
நாம் இறங்கும் இடம் வருவது தெரிந்தது. “நாங்க இறங்க வேண்டிய இடம் வரப்போவுது. கடைசியா ஒரு கேள்வி, இன்றைய தேதியில வாழ்க்கைன்னா என்ன சார்?”
“பெரிய பெரிய மகான்கள், ஆச்சார்யாக்கள் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. என்கிட்டே கேக்கறீங்களே?”
“கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நீங்க தான் சார் குரு. அதுவுமில்லாம அவங்க சொல்றது புரியாது. நீங்க சொல்றது புரியும்”
வழக்கமான யோசனைக்குப் பிறகு, ” இன்னிக்கு, வாழ்க்கைன்னா, பீக் ட்ராபிக்ல கார் ஓட்டற மாதிரி. ரொம்ப ரிஸ்கி அண்ட் சாலெஞ்ஜிங். நீங்க ஒரு நல்ல டிரைவரா இருக்கணும், ரூல்ஸ் தெரிஞ்சிருக்கணும் - அதாவது ஆன்மா, புத்தி ரெண்டும் கிளீனா இருக்கணும். அப்புறம் வண்டி, அதாவது உங்க உடம்பு நல்ல கண்டீஷன்ல வெச்சுக்கணும் - மெயின்டைன் பண்ணி, தொடச்சு, ஆயில் போட்டு, சும்மா கன் மாதிரி. நீங்க ஓட்டும்போது பின்னாடிலேர்ந்து யாராச்சும் உங்க மேல மோதுவாங்க, ரோடு சரியிருக்காது, இல்லேன்னா உங்களுக்கு வழி தெரியாது - அதான் உங்க வாழ்க்கையில நடக்கற எதிர்பாராத சம்பவங்கள். அந்த மாதிரி நேரங்கள்ல தான் ஸ்டெடியா, நிலைகுலைஞ்சு போகாம பிரச்சினையை சமாளிச்சு, நாம் போக வேண்டிய இடத்துக்கு கரெக்டாப் போகணும். பென்ஸ்ல போறவன் பெரிய ஆள், மாருதில போறவன் சின்ன ஆள் - இதெல்லாம் நம்மளை நாமே அழிச்சிக்க உருவாக்கினது. கார் எதுவா இருந்தாலும் டயர்ல காத்தும் டாங்கில பெட்ரோலும் இருக்கற வரைக்கும் தான் மதிப்பு. இந்த உண்மையை நாம அடிக்கடி மறந்துடறோம். அது தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். எப்படியாவது சீக்கிரம் முன்னுக்குப் போயிடணும்னு சில பேர் போவாங்க. அவங்களை ட்ராபிக் இன்ஸ்பெக்டர், ஐ மீன் கடவுள் பாத்துப்பாரு.”
எங்களை இறக்கி விட்டுவிட்டு சூப்பர் ஸ்டாரின் கார் விரைந்தது. இறங்கிய பிறகு தான் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் அவரை வாழ்த்த நமக்கு வயதில்லை, அவரை வணங்கினால் அவரை அன்னியப்படுத்துவது போல் ஆகிவிடும்.
“தலைவா” என்று வாய் அவரை அழைத்தாலும் மனம் அவரை ஒரு நண்பர் ஸ்தானத்தில் தான் வைத்திருகிறது. இப்பவும் துருதுருன்னு எனர்ஜெடிக்கா இருக்கறவரை எப்படிங்க பெரிசுன்னு சொல்ல முடியும்??
பின் குறிப்பு:
தலைவரின் அடுத்த வருட பிறந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதிலிருந்தே உற்சாகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. சும்மாவா? 12 -12 -12 ஆச்சே!!!
[END]
Links:
—————————————————————————————-
Part 1
http://crazycricketlover.blogspot.com/2011/12/62-26-1.html
Part 2
http://crazycricketlover.blogspot.com/2011/12/62-26-2.html
—————————————————————————————-
சூப்பர்
மிகவும் நன்றி
நானும் கூடவந்த மாத்ரி ஒரு உணர்வு
வாவ்……. சூப்பர்………..
உண்மையாக நாமும் கூட இருந்த ஒரு மிக பெரிய சந்தோசம். கடைசி பதில் மிக அற்புதம்.
நல்ல பதிவினை தந்த நண்பர்களுக்கும், எங்கள் சுந்தர்ஜி அவர்களுக்கும் மிகவும் நன்றி……
ப.சங்கரநாராயணன்
chancey இல்ல சுந்தர்ஜி
really superb !!!
கிரேசி கிரிக்கெட் லவ்வர் நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியும் பாராட்டுதல்களும் !!!
As you said, this is written by fans like us, who understand and admire each and every move of our Thalaivar.. Good one…Thanks for sharing Sundarji.
Looks that as if we travelled with superstar. Great work friends. Very much positive in approach. I like that answer of thalaivar regarding deepika's alleged bad luck.
Finally thalaivar's take on life is awesome.
Keep it up.
வாவ்!!! தலைவர் கூடவே வந்தது போல் இருக்கிறது!!! கடைசியாக "அவங்களை ட்ராபிக் இன்ஸ்பெக்டர், ஐ மீன் கடவுள் பாத்துப்பாரு"
சூப்பர் சூப்பர்!!! அப்படியே தலைவர் கூறுவது போல் இருக்கிறது. இவர்கள் இந்த மாதிரி எழுதிகிறார்கள் என்றால் தலைவரை எந்த அளவுக்கு ரசித்திருபார்கள்!!!!!
அருமை… சூப்பர்….
அன்புடன்
விஜி
good….
ஆஹா ஓஹோ பிரமாதாம்! தலைவர் நம் கூட பேசுற மாதிரி ஒரு மாயை நிலை ஏற்படுத்துகிறது இந்த கற்பனை பேட்டி. 12 -12 -12 (அட ஆமா…!!) இப்பத்தான் எனக்கே தெரியுது… அடிச்சு தூள் பண்ணிடுவோம்…
இன்னும் இது போல பல "கற்பனை" உரையாடல்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும் அண்ணா ! உங்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்… மற்றும் நம் உயிரினும் மேலான தலைவர் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்… தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சாதிக் (மதுரை)
Like real one . Every one's dream that must come true.