









You Are Here: Home » Featured, Moral Stories » “பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!” – சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Swami Vivekananda B’day Spl!!
நான் பெரிதும் மதிக்கும், வணங்கும் பரமாத்மாக்களில் சுவாமி விவேகானந்தர் முதன்மையானவர். என்னுடைய குரு என்றே சொல்லலாம். இன்று (Jan 12) அவருக்கு பிறந்த நாள்.
நம் அன்புக்குரிய சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் பெரிதும் போற்றும், வணங்கும் ஒரு மகான் சுவாமி விவேகானந்தர். இன்றும் கூட சூப்பர் ஸ்டாரின் வீட்டில் சுவாமிஜியின் படம் மூன்று அறைகளிலும், அவரது அலுவலகத்தையும் அலங்கரிக்கிறது. சூப்பர் ஸ்டாரின் செயல்களில், அவரது பேச்சில், சுவாமிஜியின் இன்ஸ்பிரேஷன் நிறைய இருக்கும். அவரின் புகழ்பெற்ற மேற்கோள், “நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” (What you think, you become!) என்பதும் சுவாமி விவேகானந்தர் கூறியது தான்.
“ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர்.
எளிய குடும்பத்தில் பிறந்த அவரது வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் வசதி வாய்ப்புக்களும், மாட மாளிகைகளும் செல்வங்களும் அவரை தேடி வந்தபோதும், “பாரதத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளை விழித்தெழச் செய்ததே எம் பணி. அதற்காகவே எம்மை இறைவன் அனுப்பியிருக்கிறான்” என்று அவற்றை தூசியென மறுத்த யுகபுருஷன் விவேகானந்தர்.
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
“வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்” என்பதை விளக்கும் வகையில், சுவாமிஜியின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வொன்றை பார்ப்போம்…
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.
மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.
அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
பிரச்சனைகளை எதிர்கொள்வதும் இப்படித் தான்.
பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்!
————————————————————-
Also check :
Our team’s visit to Swami Vivekananda Express
Check complete pics and article
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=11738
————————————————————-
[END]
சூப்பர் சுந்தர்! ரொம்ப நன்றி!
ithai padithathum ninaivil thonriya thalaivarin dialogue..
'Vaalkaiyil bayam irukalam aanal bayame vaalkai aayirakudhu'
@ சுந்தர்ஜி அவர்களுக்கு,
அருமையான கதை. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் அன்று அதை நினைவு கூறும் வகையிலும், வாழக்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் இந்த கதை மூலம் அருமையான பதிவு வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
************
ஆம், நம் தலைவர் இவ்வளவு உயரத்தில் இருந்தும், அவர் அமைதியாக, அடக்கமாக, பணிவாக, (மிக முக்கியமாக சினிமா துறையில் யாரிடமும் இல்லாத கொள்கையாக) திறமைசாலிகளை தேடி சென்று விடாமல் பாராட்டுவது, எளிமையாக இருப்பது, அவரின் ஆன்மிகம் இன்னும் மற்றும் பல நல்ல குணங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க காரணம் அவரின் பால பருவத்தில் ராமகிருஷ்ண மிஷனில் தன்னை இடுபடுத்தி கொண்ட காரணத்தினால் தான். அப்போது அவர் கற்ற விஷயங்கள் தான் இப்போது அவரிடம் வெளிப்படுகிறது.
*********
தலைவரிடம் இருபதிற்கும் மேற்பட்ட நல்ல கொள்கைகள் இருக்கின்றது. சாதாரணமாக, ஐந்து கொள்கைகளையே வாழ்க்கை முழுவதும் கடை பிடிப்பது என்பதே கஷ்டமான காரியம் - உதாரணமாக உண்மையாக இருப்பது, எவருக்கும் தக்க மரியாதை தருவது (சிறுவர்கள் என்றாலும் எழுந்து நின்று மரியாதை தருவது), பலமிக்கவர்கள் மத்தியில் தைரியமாக செயல்படுவது (உதாரணத்தை நான் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை, உங்களுக்கே புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன்), இப்பொழுதும் தனக்கு பழைய காலகட்டங்களில் உதவியவர்களை மறக்காமல் இருப்பது ஆகிய இந்த கொள்கைகளை வாழ்க்கை முழுவதும் சாதாரண மனிதனாக கடைபிடிப்பதே கடினம். ஆனால், தலைவரால் இந்த உயரத்தில் இருந்தும் இது மட்டும் அல்லாது, மேலும் பலவற்றை கடை பிடித்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார் என்றால் அது ஒரு நாளிலோ, அல்லது ஒரு வருடத்திலோ வந்தது அல்ல. பல வருடங்களாக கடைபிடித்து ஒரு அரை ஞானி ஆகிவிட்டார்.
********
அதற்கு அப்புறம் தான், நமக்கு எல்லாம் அவரின் படங்கள் மூலம் கூறினார். அதனால் தான், நாமும் அவற்றை கடைபிடிக்க முயல்கிறோம்.நிஜத்தில் அவர் எதையும் கடைபிடிக்கவில்லை என்றால், அவை எல்லாமும் எடுபடாமல் போகி இருக்கும்.
************
so, my dear friends, let us take oath that we would follow at least one or two principles through out our life. It might be very difficult in the earlier stage to follow.
But we should never give up. where is our super star and other people get differ means?
never-giving- up attitude or persistence.
********
So, try to follow at least one principle through out the year with out giving up. if you do so, in the end of 10-15years, you will also become the half of our true real super star in our lives.
*******
And Wish you very happy new year. May you have all the life which you always wanted to live ahead. May the joy and peace be with you all.
And wish you very happy pongal with a delighting gift of 'ENTHIRAN'..
*
*
*
*
"Get ready folks"…….
**********************
by,
இந்த பரத கண்டத்திற்கு நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு - பாபா. (உங்களால் எங்களுக்கு).
**சிட்டி**.
"thoughts becomes things".
ஜெய் ஹிந்த்!!!
Dot.