









You Are Here: Home » Featured, VIP Meet » சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த பம்பர் பரிசு… எப்போ, எங்கே, எதுக்கு? – ‘சந்திரமுகி’ ஸ்டண்ட் இயக்குனர் தளபதி தினேஷுடன் ஒரு சந்திப்பு! — Part I — PONGAL SPL 3
(இந்த பதிவை பொங்கல் தினத்தன்றே (ஜனவரி 15) அளிக்கவிருந்தேன். ஆனால், பல்வேறு பணிகள் இருந்தபடியாலும் + வேறு சில பதிவுகள் அளிக்கவேண்டியிருந்தபடியாலும் அளிக்க முடியவில்லை. இதோ இன்று தயார். தாமதமானாலும் இந்த பொங்கல் பரிசு உங்களை கவரும் என்று நம்புகிறேன். ஆதரவிற்கு, வாழ்த்துக்களுக்கு என்றும் நன்றி. - சுந்தர்)
‘தளபதி’ தினேஷ். நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ‘தளபதி’ துவங்கி, ‘எஜமான்’, ‘பாட்ஷா’, உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஸ்டாருடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். ‘சந்திரமுகி’ படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவர். அந்த படத்தின் அசத்தலான இன்ட்ரோ ஃபைட்டை வடிவமைத்தவர்.
நமது தளத்தின் சிறப்பு பேட்டிக்காக அவரை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்தோம். இரண்டு தொகுதிகளாக நடைபெற்ற இந்த சந்திப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.
சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றிய அனுபவம், அவரிடம் கண்டு வியந்த விஷயங்கள், அவரின் தனிச் சிறப்பு, அவரின் பங்க்சுவாலிட்டி, பெருந்தன்மை, அவர் கொடுத்த பரிசு, உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை - அரிய தகவல்களை - நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் திரு.தினேஷ்.
அவரின் அப்பாயின்மென்ட் கிடைத்த குறிப்பிட்ட நாளன்று அவரது வீட்டிற்கு சென்றோம். நம்முடன் நமது நண்பர்கள் ரஜினி மனோஜ், ஜான் ஆகியோர் வந்திருந்தனர். வாசல் வந்து வரவேற்றார்.
உள்ளே சென்று அமர்ந்த பிறகு, நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தேன். பின்னர் அவருக்கு பூங்கொத்தை அளித்து வாழ்த்து கூறினோம்.
நமது தளம் பற்றி பொதுவாக கேட்டறிந்தார். இந்த சந்திப்பை பதிவிட்ட பிறகு கூறுமாறும், இண்டஸ்ட்ரி நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறினார். மிக எளிமையாக இருந்தார். சந்திப்பு மிக மிக காஷுவலாக ஜஸ்ட் நண்பர்களின் ஒரு உரையாடல் போலவே அமைந்தது.
சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றிய அனுபவம், அவரிடம் கண்டு வியந்த விஷயங்கள், அவரின் தனிச் சிறப்பு, அவரின் பங்க்சுவாலிட்டி, பெருந்தன்மை, அவர் கொடுத்த பரிசு, உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை - அரிய தகவல்களை - நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் திரு.தினேஷ்.
நாம் : தலைவரை நீங்கள் முதன்முதலில் பார்த்தது எப்போது? அதாவது அவருடன் இண்டராக்ட் செய்தது எப்போது?
‘தளபதி’ தினேஷ் : முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் அவரை முதன் முதலா நேரில் பார்த்தேன். அப்போ நான் சூப்பர் சுப்பராயன் சார்கிட்டே அசிஸ்டெண்ட்டா இருந்தேன். ரஜினி சாரை நான் முதன் முதலில் ஒரு டெக்னீஷியனாக பார்த்தது ‘நான் சிகப்பு மனிதன்’ பட ஷூட்டிங்கில் தான். சாராயக் கடையில் நடக்கும் ஃபைட்டில் வருவேன். அப்போல்லாம் அவரு கூட எனக்கு ரொம்ப பழக்கம் கிடையாது. ஒரு டெக்னீஷியனா அவரை பிரமிப்பா பார்த்துக்கிட்டுருப்பேன். எல்லார் கிட்டயும் அவர் கூட ஃபைட் பண்ண விஷயத்தை சொல்லி… சொல்லி மாஞ்சு போவேன். என்னை பார்த்தாலே… அவன் அதை பற்றி தான் பேசுவான்னு நினைச்சு எல்லாரும் ஓட ஆரம்பிக்கிற அளவுக்கு பேசியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.
நாம் : அவருடன் நெருக்கமாக பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது எந்த படத்தில் பணிபுரியும்போது ?
‘தளபதி’ தினேஷ் : அவர் கூட நல்லா பழகுறதுக்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சது ‘தளபதி’ படத்தில் தான். அதுக்கு முன்னாடி பல படங்கள்ல நடிச்சிருந்தாலும் எல்லாம் கும்பல்ல கோவிந்தா தான். பத்தோட பதினொன்னா பைட்டர்ஸுக்கு நடுவே வருவேன். ஆனா ‘தளபதி’ தான் எனக்கு பெரிய பிரேக். சூப்பர் சுப்பராயன் சார் தான் அந்த படத்துக்கு ஃபைட் மாஸ்டர்.
மணிரத்னம் சார் அவர் கிட்டே ஒரு நாள், “ரஜினி சார் கூட இன்ட்ரோ ஃபைட் பண்றதுக்கு ஒரு பர்ஃபெக்டான ஆள் வேணும். உங்க யூனிட்ல யாராச்சும் இருக்காங்களா?”ன்னு கேட்க, அதுக்கு சுப்பராயன் சார் என்னை ரெகமன்ட் பண்ணார். மணிரத்னம் சார் என்னை நேர்ல வரச் சொல்லி பார்த்தாரு. அவருக்கு ரொம்ப பிடிச்சு போக, ‘தளபதி’ படத்துல முதல் ஃபைட்டுல வந்தேன். அப்போ வீனஸ் ஸ்டூடியோன்னு ஒன்னு இருந்தது. அங்கே தான் மூணு நாள் அந்த ஃபைட்டை ஷூட் பண்ணினோம்.
எல்லார் கிட்டயும் அவர் கூட ஃபைட் பண்ண விஷயத்தை சொல்லி… சொல்லி மாஞ்சு போவேன். என்னை பார்த்தாலே… அவன் அதை பற்றி தான் பேசுவான்னு நினைச்சு எல்லாரும் ஓட ஆரம்பிக்கிற அளவுக்கு பேசியிருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.
அது ஒரு மிக உன்னதமான அனுபவம். அதுக்கு முன்னாடி நான் நிறைய படம் அவரு கூட பண்ணியிருந்தாலும், அதெல்லாம் க்ரூப் ஃபைட் தான். தனி ஃபைட் பண்ணதில்லே. அதுவும் மணிரத்னம் படம் வேற. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுல பெரிய விஷயம் என்னன்னா, ஒரிஜினல் ‘தளபதி’ நான் தான் படத்துல. அதாவது மம்மூட்டிக்கு ரைட் ஹேண்டே நான் தான். நான் இறந்தவுடனே என் இடத்துக்கு தான் ரஜினி சார் வருவார். “பத்து வருஷமா என் கூட இருந்தவன் அவன். அவனை நீ கொன்னுட்டே. உன்னை சும்மா விடமாட்டேன்” அப்படின்னு சொல்லுவார் மம்மூட்டி. என்னை சாகடிச்சாதல்தான் ரஜினி சார் கூட மம்மூட்டி போய் சண்டை போடுவார். பிற்பாடு என் இடத்துக்கு அவர் வருவார். அதுல இருந்து தான் எனக்கு ‘தளபதி’ தினேஷ்ன்னு பேரு வந்துச்சு.
நாம் : (சிரித்துக்கொண்டே) அடுத்து இதைப் பத்தி தான் கேக்கனும்னு நினைச்சேன். அதுக்குள்ளே நீங்களே சொல்லிட்டீங்க.
‘தளபதி’ தினேஷ் : அது எப்படி வந்ததுன்னு கேளுங்க. அந்தப் பேரை கூட நானா வெச்சுக்கலை. ரஜினி சாரே வெச்ச பேரு தான் அது. அதுக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கு…. நிறைய பேருக்கு தெரியாது. ‘தளபதி’ படம் முடிஞ்சி ரெண்டு மூணு வருஷம் இருக்கும். அப்போல்லாம் என்னை யாரும் ‘தளபதி’ தினேஷ்னு கூப்பிட மாட்டாங்க. ஜஸ்ட் தினேஷ்ன்னு தான் கூப்பிடுவாங்க. ஏ.வி.எம்.முக்காக ‘எஜமான்’ படம் ரஜினி சார் பண்ணினார். அதுல நெப்போலியனோட ரைட் ஹேண்டா வருவேன் நான். ‘செம்பட்டை’ங்குறது என்னோட பேரு அதுல. ஆந்திராவுல இருக்குற ராஜமுந்திரில ஷூட்டிங். அதகு ரொம்ப சின்ன ஊரு. இப்போ டெவலப் ஆகியிருக்கலாம். அப்போ அது ஒரு சின்ன ஊர். கிட்ட தட்ட வில்லேஜ் மாதிரி தான். அந்த ஊர்ல மொத்தம் ஒரே ஒரு ஹோட்டல் தான். அந்த ஹோட்டல்ல தான் ஜூனியர் ஆர்டிஸ்ட் எங்களுக்கும் ரூம், ரஜினி சாருக்கும் ரூம். அவர் எப்போவுமே எல்லாத்துலயுமே அட்ஜஸ்ட் பண்ணி போய்கிட்டேயிருப்பார். இது வேணும், அது வேணும்கற மாதிரியெல்லாம் அவர் கிட்டே எந்த தொந்தரவும் இல்லே.
ஒரு நாள் காலைல, என் ரூம் பால்கனில நின்னு நான் எக்சர்சைஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். எனக்கு பக்கத்து ரூம்ல எதிர் ரூம்ல இருக்குறவங்கல்லாம் யாருன்னு தெரியாது. அப்போ ஆப்போஸிட் சைடுல அந்த ரூமோட பால்கனில ரஜினி சார் நின்னுக்கிட்டு இருந்தார். “சார் வணக்கம் சார்” அப்படின்னேன். “என்ன தளபதி எப்படியிருக்கீங்க?ன்னு என்னைக் கேட்டார். நான் உடனே, “என்ன சார் என்னை போய் தளபதிங்குறீங்க?… நீங்க தானே தளபதி?”ன்னேன். அப்போ தான் மேலே நான் சொன்ன மேட்டரை சொன்னாரு. “தளபதில நீ இறந்து போனதுக்கு அப்புறம், உன்னோட இடத்துக்கு தான் நான் வர்ரேன். அப்போ நீ தானே ஒரிஜினல் தளபதி..!!” அப்படின்னு சொல்லி சிரிச்சார். என்ன பெருந்தன்மை பாருங்க அவருக்கு. ரஜினி சார் சும்மா நம்மளை பார்த்து விஷ் பண்ணினாலே அதை போறவங்க வர்றவங்க எல்லார் கிட்டயும் சொல்லிகிட்ட்ருப்போம். இந்த மேட்டரை விடுவோமா..? இதை எல்லார் கிட்டயும் சொல்லி சொல்லி நான் சந்தோஷப்பட, அதுல இருந்து எல்லாரும் என்னை ‘தளபதி’ தினேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியே என் பேரு அதுவாகவே ஆகிடுச்சு. (கண்களில் ஒரு வித நன்றியுணர்ச்சி தெரிகிறது.)
நாம் : ஒ… அப்போ ‘தளபதி’ தினேஷ் என்கிற பேர் அவர் வெச்சது தானா? சூப்பர்…. சூப்பர்…. ஒ.கே. சந்திரமுகில நீங்க வந்த கதையை சொல்லுங்க? அதாவது ஸ்டண்ட் மாஸ்டரா அந்த படத்துக்கு நீங்க எப்படி வந்தீங்க?
‘தளபதி’ தினேஷ் : நான் கிட்ட தட்ட 150 படத்துக்கு மேலே ஃபைட் மாஸ்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். பேர் சொல்ற மாதிரி எதவும் அமையலே. ஆனா, ‘வின்னர்’ படம் ஓரளவுக்கு என்னக்கு நல்ல பேரை கொடுத்திச்சு. அப்போ வாசு சார் அந்த படத்தை அவருக்கு போட்ட காட்டச் சொன்னாரு. நான் என் செலவுல ஒரு ப்ரீவ்யூ தியேட்டர்ல அவருக்கு படத்தை போட்டு காட்டினேன். “நல்ல பண்ணியிருக்கீங்க. நான் உங்களை சீக்கிரம் என் அடுத்த படத்துக்கு கூப்பிடுறேன்” அப்படின்னு சொன்னார்.
சொன்னது போலவே, ‘சந்திரமுகி’ படத்தை முதல்ல கன்னடத்துல விஷ்ணுவர்தன் சாரை வெச்சு ‘ஆப்தமித்ரா’ன்னு எடுத்தார். அதுக்கு ஃபைட் மாஸ்டரா என்னை தான் கூப்பிட்டார். கன்னடத்துல அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஃபைட்டை பிரமாதமா பேசினாங்க. அப்புறம் தமிழ்ல அந்த படம் சிவாஜி ப்ரொடஷன்ஸ்க்காக ரஜினி சாரை வெச்சு எடுத்தாங்க. அதுக்கும் என்னை தான் வாசு சார் ரெகமன்ட் பண்ணினார். ரஜினி சார் கிட்டே என் பேரை சொல்லி “தினேஷ் தான் ஃபைட் பண்றாரு”ன்னு சொல்லியிருக்கார். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாகிவிட்டதால, தினேஷ் மாஸ்டர்ன்னு சொன்னவுடனே, ரஜினி சாருக்கு யாருன்னு தெரியலே. என்னை ஒரு ஃபைட்டராத் தான் நினைச்சிக்கிட்டு இருக்கார் ரஜினி சார். நான் மாஸ்டரானது அவருக்கு தெரியாது. எனக்கும் அவர் கூட இடையில் சில வருடங்கள் ஒர்க் பண்ணுற சான்ஸ் கிடைக்கலே. நான் அந்தப் படம் இந்தப் படம்னு ஏதாவது உப்புமா படம் பண்ணிக்கிட்டே இருந்தேன். மாசம் ஃபுல்லா பிசியா இருக்கும். முப்பது நாளும் வேலை இருக்கும். அது போதும். அதுனால் அவரை பார்த்து சான்ஸ் கேக்கலே. தவிர, எனக்கும் பேர் சொல்லிக்கிற மாதிரி பெரிய படம் எதுவும் அமையலே. அதனால அவரை நடுவுல பார்க்குற வாய்ப்பு அமையலே. அதுனால தினேஷ்னு என் பேரை சொன்னவுடனே அவருக்கு உடனே தெரியலே. அதனால ரஜினி சார், “யாருன்னு தெரியலயே…அவரை வந்து என்னை பார்க்கச் சொல்லுங்க”ன்னு சொல்லியிருக்கார் பி.வாசு சார் கிட்டே.
அப்புறம் ஒரு நாள் நான், வாசு சார், பிரபு சார், ராம்குமார் சார் இவங்கல்லாம் ரஜினி சார் வீட்டுக்கு போனோம். அப்போ தான் நான் அவர் வீட்டுக்கு முதல் முறையா போனேன். என்னை பார்த்தவுடனே, “அடேடே… நீயா… எப்படியிருக்கேப்பா? நீ ஏன் மாஸ்டரானது என் கிட்டே சொல்லலே?”ன்னு உரிமையோட கேட்டார். “சொல்ற மாத்ரி எதுவும் படம் அமையலே சார். அதனால தான் நான் உங்க கிட்டே சொல்லலே” அப்படின்னேன். “சரி…ஓ.கே. ஆப்தமித்ரால விஷ்ணுவர்தன் சார் காலை தூக்குற மாதிரி என்னை வெச்சு பண்ணுவியா?”ன்னு கேட்டார். ஏன்னா, அந்த படத்துல ஃபைட்டுல அது தான் ஹைலைட். “நிச்சயம் பண்ணலாம் சார்” அப்படின்னேன்.
‘தளபதி’ தினேஷ் : பர்ஸ்ட் டைமா டூப் போடாம ரஜினி சார் முழு ஃபைட்டும் பண்ணினது என் படத்துல தான். ‘சந்திரமுகி’ படத்துல எல்லா ஸ்டண்ட்டும் ரஜினி சார் தான் பண்ணியிருப்பார். ஒரு இடத்துல கூட டூப் கிடையாது.
நாம் : ஆமா சார்.. நீங்க சொல்றது கரெக்ட். “Making of Chandramuki” டி.வி.டி. வந்துச்சு. அதுல இது க்ளீனா தெரியும். எல்லா ஃபைட்டும் ரஜினி சார் தான் பண்ணியிருப்பார்.
‘தளபதி’ தினேஷ் : ரஜினி சார் “என்னை வெச்சு நல்லா பண்ணுவியா?”ன்னு கேட்டதுக்கு, “நிச்சயமா சார். உங்க கூட நிறைய நாள் வொர்க் பண்ணியிருக்கேன். அதுனால் உங்க ஆக்டிவிடீஸ்ல்லாம் எனக்கு நல்ல தெரியும்.” அப்படின்னேன். காரணம், அவர் கூட அதிக நாள் வொர்க் பண்ணின ஸ்டண்ட் பர்சன் நானாத்தான் இருப்பேன். வேற மாஸ்டர்ல்லாம் கூட வொர்க் பண்ணியிருப்பாங்க. ஆனா அவங்க எல்லாம் ரெண்டு மூணு நாள் வொர்க் பண்ணுவாங்க. அப்புறம் வேற படத்துக்கு போயிடுவாங்க. நான் எஜமான், பாட்ஷா மாதிரி படத்துலயும் அவர் கூட ரொம்ப நாள் - கிட்ட தட்ட ஒரு மாசம் ரெண்டு மாசம் தொடர்ச்சியா - நடிச்சதால, அவரோட ஆக்டிவிடீஸ் பத்தி எனக்கு தெரியும். வொர்க் பண்ணும்போது, குளோசா அவரை அப்சர்வ் பண்ணியிருக்கேன். “அதுனால, உங்களை வெச்சு இது வரை எடுக்காத மாதிரி எடுக்குறேன் சார்” அப்படின்னேன் அவர் கிட்டே. “அப்படி எடுத்தா உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் Rs.25,000/- கிஃப்டா தர்றேன்”னு சொன்னார். எனக்கு ஒரே த்ரில்லிங்கா இருந்திச்சு. அதுக்கப்புறம் ‘சந்திரமுகி’ ஷூட்டிங் ஆரம்பிச்சு வொர்க் பண்ணினோம்.
ரஜினி சாரை வெச்சு செய்றதால என்னோட கூட வொர்க் பண்ணுறவங்க எல்லாரையும் கூப்பிட்டு எப்படி வித்தியாசமா பண்ணலாம்னு அவங்க கூட டிஸ்கஸ் பண்ணினேன். அவங்களோட ஒப்பீனியனை கேட்டேன். ஆளுக்கு கொஞ்சம் ஐடியாஸ் கொடுத்தாங்க. சந்திரமுகில பார்த்தீங்கன்னா, சும்மா நடந்து வருவாரு. அதுக்கே க்ளாப்ஸ் பிச்சுகிட்டு போகும். நடந்து வர்றதையே நிறைய ஆங்கிள்ள எடுத்தோம். அதே மாதிரி முதன் முதலா கண்ணாடில அவரை நடக்க வெச்சு கீழே காமிராவை வெச்சு ஷூட் பண்ணினதும் நாம தான்.
நாம் : (சிரித்துக்கொண்டே) ஆமா சார்… நீங்க ஆரம்பிச்சு வெச்சீங்க. அப்புறம் மத்தவங்க எல்லாம் அதே மாதிரி சீன் வெச்சு எங்களை இம்சை பண்ணிட்டாங்க.
என்னோட கூட வொர்க் பண்ணுறவங்க எல்லாரையும் கூப்பிட்டு எப்படி வித்தியாசமா பண்ணலாம்னு அவங்க கூட டிஸ்கஸ் பண்ணினேன். அவங்களோட ஒப்பீனியனை கேட்டேன். ஆளுக்கு கொஞ்சம் ஐடியாஸ் கொடுத்தாங்க. சந்திரமுகில பார்த்தீங்கன்னா, சும்மா நடந்து வருவாரு. அதுக்கே க்ளாப்ஸ் பிச்சுகிட்டு போகும். நடந்து வர்றதையே நிறைய ஆங்கிள்ள எடுத்தோம். அதே மாதிரி முதன் முதலா கண்ணாடில அவரை நடக்க வெச்சு கீழே காமிராவை வெச்சு ஷூட் பண்ணினதும் நாம தான்.
‘தளபதி’ தினேஷ் : இன்ட்ரோ ஃபைட் எடுத்து முடிச்சவுடனேயே, அதை கட் பண்ணி எடுத்துட்டு வரச் சொன்னாங்க. அப்போ ஹைதராபாத்துல ராமோஜி ராவ் ஃபில்ம் சிட்டியில ‘சந்திரமுகி’ ஷூட்டிங் போய்கிட்டுருந்துச்சு. ஃபைட் எடுத்து முடிச்ச பிறகு கூட அவங்களுக்கு திருப்தி இல்லே. எப்படி வந்திருக்குமோ, என்ன வந்திருக்குமொன்க்ரா டென்ஷன் அவங்களுக்கு இருந்துச்சு. அதனால அங்கே வரச் சொன்னாங்க. நான் அந்த போர்ஷனை மட்டும் கட் பண்ணி எடிட் பண்ணி, டி.வி.டி.ல எடுத்துட்டு போய் போட்டு காமிச்சேன். ஃபைட்டை ஃபுல்லா பார்த்துட்டு எழுந்திருச்சு நின்னு சல்யூட் அடிச்சார்.
(நம்மையறியாமல் நாம் உடனே கைதட்டுகிறோம்!)
கேரவனில் தான் அதை போட்டு காமிச்சேன். “சூப்பரா வந்திருக்கு மாஸ்டர். நான் எதிர்பார்த்ததைவிட நல்லா வந்திருக்கு ஃபைட். குட்” அப்படின்னு கைகொடுத்தார். அதுக்கு பிறகு படம் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாச்சு. எல்லாரும் எதிர்பார்த்ததைவிட நல்லா போச்சு. ஃபைட்டும் பேசப்பட்டது. ஓப்பனிங் சீன்ல காலை தூக்கும்போது தியேட்டரே சும்மா அதிரும்.
நாம் : ஆமா சார்.. ஒரு வித்தியாசமான இன்ட்ரோ. எங்களை பொறுத்தவரை ரொம்ப சஸ்பென்சா இருந்தோம். தலைவரோட இன்ட்ரோ எப்படியிருக்குங்க்றதை நினைச்சு. ஆனா அடி தூள் கிளப்பிடீங்க.
‘தளபதி’ தினேஷ் : படமும் முடிஞ்சிடுச்சு. நல்லாவும் போச்சு. தலைவர் சொன்ன அந்த Rs.25,000/- கிஃப்ட்டை எப்போ தருவாருன்னு தெரியல எனக்கு. ஒரே படபடப்பு. பணம் முக்கிய்மில்லேன்னாலும் அவர் கையால் அதை பரிசாக வாங்குவது மிகப் பெரிய விஷயம் இல்லையா….
நானும் கூப்பிடுவாரு கூப்பிடுவாருன்னு காத்திருக்கேன். கூப்பிடவேயில்லை. 50 நாள் ஆச்சு, 100 நாள் ஆச்சு, 200 நாள் ஆச்சு ஒரு தகவலும் இல்லே. என் பிரண்ட்ஸ் கிட்டே அடிக்கடி இதை பத்தி பேசுவேன். தலைவர் ஒரு வேளை மறந்துட்டாரோன்னு தோணும். அதுக்காகவே, ஆடியோ பங்க்ஷன், படத்தோட சக்சஸ் பார்டி, 100 நாள் பங்க்ஷன், இங்கேயல்லாம் அவர் முன்னாடி அடிக்கடி போய் நிற்பேன். சும்மாவே அவர் கண்ணில் அடிக்கடி படுற மாதிரி இங்கே அங்கே போய்கிட்டேயிருப்பேன். (சிரிக்கிறார்).
தலைவர் ஒரு வேளை மறந்துட்டாரோன்னு தோணும். அதுக்காகவே, ஆடியோ பங்க்ஷன், படத்தோட சக்சஸ் பார்டி, 100 நாள் பங்க்ஷன், இங்கேயல்லாம் அவர் முன்னாடி அடிக்கடி போய் நிற்பேன். சும்மாவே அவர் கண்ணில் அடிக்கடி படுற மாதிரி இங்கே அங்கே போய்கிட்டேயிருப்பேன்.
(நாம் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்!)
‘தளபதி’ தினேஷ் : கடைசீல வெள்ளி விழாவுல (200 days) ஷீல்டு கூட அவர் கையால வாங்கிட்டேன். தலைவர் கண்டுக்கவே இல்லே. ‘சரி… நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்… மறந்துட்டாரு போலருக்கே…’ அப்படின்னு நினைச்சு என்னை தேற்றிக்கொண்டேன். அப்புறம் சில மாதங்கள் போச்சு. வேற படங்கள்ல கமிட் ஆகி வொர்க் பண்ணிக்கிட்டுருந்தேன்…. ஒரு நாள் காலைல 8.30 மணிக்கு ஃபோன். நான் ஷூட்டிங் கிளம்பிட்ருந்தேன். “தளபதி தினேஷ் சாரா? நாங்க ராகவேந்திரா மண்டபத்துல இருந்து பேசுறோம்……
[End of Part 1]
….To be Continued on Part 2 in a day or two
Hats off anna for u r hard work. continue eppo? Waiting. BAASHA la full a ivar varuvare.. Antha experience..
Good article. !!!! Dinesh sir is like a body guard for thalaivar, especially in Basha he stands tall.. good one !!!
//“அடேடே… நீயா… எப்படியிருக்கேப்பா? நீ ஏன் மாஸ்டரானது என் கிட்டே சொல்லலே?”ன்னு உரிமையோட கேட்டார். “//
.
ரேம்போ intresting - க இருக்கு சுந்தர்…சீக்கிரம் அந்த 2nd பார்ட் யும் போடுங்க…
.
மாரீஸ் கண்ணன்
வாவ் அண்ணா நன்றி!!!
நேரில் சென்று வந்த அனுபவத்தை விட நீங்கள் அதை வர்ணிக்கும் போது சூப்பராக உள்ளது!!!
வாழ்க தலைவர் புகழ்!!! வளர்க அவர் தொண்டு!!!
சஸ்பென்சா ?? சீக்கிரம் சார்
)
climax la break vitutingale sundar sir….waiting ..for the continuation…
nice interview . .
& Well return article
Excellent compilation and thanks for your untiring efforts. it is not fair to stop the 1st Episode with a big suspense like mega serial.
Wonderful Interview. AWESOME SUNDAR. His home looks very simple. I read the entire article and enjoyed very much. Looking forward and curious to read Part 2
அருமையான நேர்காணல் …. 2 பார்ட் எப்போ சார்
அன்புடன்
விஜி
இரண்டாவது பாகத்துக்காக தளபதி தினேஷ் சார் மாதிரி எங்கள வெயிட் பண்ண வெச்சுடீங்களே ஜி… ஹூம்..!! வெயிட் பண்ணி தானே ஆகணும் (வர வர சஸ்பென்ஸ் வெக்கிறதே உங்க வேலையா போச்சு அண்ணே)
'''''''''''''''''
சாதிக்(மதுரை)
Japanese rajini fans…..singing kolaveri di…
http://www.youtube.com/watch?v=OtU94FcSP6s
// நானும் கூப்பிடுவாரு கூப்பிடுவாருன்னு காத்திருக்கேன். கூப்பிடவேயில்லை. 50 நாள் ஆச்சு, 100 நாள் ஆச்சு, 200 நாள் ஆச்சு ஒரு தகவலும் இல்லே. என் பிரண்ட்ஸ் கிட்டே அடிக்கடி இதை பத்தி பேசுவேன். தலைவர் ஒரு வேளை மறந்துட்டாரோன்னு தோணும். அதுக்காகவே, ஆடியோ பங்க்ஷன், படத்தோட சக்சஸ் பார்டி, 100 நாள் பங்க்ஷன், இங்கேயல்லாம் அவர் முன்னாடி அடிக்கடி போய் நிற்பேன். சும்மாவே அவர் கண்ணில் அடிக்கடி படுற மாதிரி இங்கே அங்கே போய்கிட்டேயிருப்பேன்.//
சுந்தர் இதை தினேஷ் ரொம்ப எதார்த்தமா சொல்லி இருக்காரு. இதைப்போல சம்பவங்க அனைவரது வாழ்விலும் இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப ரசிச்சேன் இவர் சந்திரமுக்கு அமைத்த சண்டையை விட
//‘சரி… நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்… மறந்துட்டாரு போலருக்கே…’ அப்படின்னு நினைச்சு என்னை தேற்றிக்கொண்டேன். //
கலக்கல்.. இயல்பா பிரதிபலிச்சு இருக்காரு.
தளபதி தினேஷை எனக்கு பாட்ஷா படத்துல ரொம்பப் பிடிக்கும்.
அருமையான சந்திப்பு - இயல்பான உரையாடல்
தகவல்களுக்கு மிக்க நன்றி
தங்களின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கும் ரசிகர்களில் ஒருவன்…
என்ன இது ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் மாதிரி நல்ல இடத்துல சஸ்பென்ஸ் கொடுத்திட்டீங்களே?……
Nice interview
thanks na
இரண்டாவது பாகத்துக்காக தளபதி தினேஷ் சார் மாதிரி எங்கள வெயிட் பண்ண வெச்சுடீங்களே ஜி!
சுந்தர், ரொம்ப சுவாரஸ்யமான இடத்துல பிரேக் விட்டீங்க பாருங்க…. 'நீயா நானா' கோபியவே மிஞ்சுடீங்க போங்க….
கலக்கல் பதிவு பாஸ்….சீக்கிரம் தொடர்ச்சிய போடுங்க ரொம்பவே வெயிட் பண்றோம்!
சூப்பர்…எப்ப மீதி?
நம்மை போல் ஒரு தலைவர் ரசிகன் எப்படி எதிர்பாற்பனோ அதே போல் தினேஷ் அவர்கள் எதிர்பார்த்துள்ளார்
அதையும் வெளிபடையா சொல்லுவது ரொம்ப பெரிய விசயம்