You Are Here: Home » Featured, VIP Meet » டூப் இன்றி ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அசத்திய சூப்பர் ஸ்டார் — ‘தளபதி’ தினேஷ் கூறும் சுவாரஸ்யமான தகவல்கள் — Part II — PONGAL SPL 4

…Continued from Part 1 @ http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13544

தளபதி தினேஷ் அவர்களுடனான நமது சந்திப்பு தொடர்கிறது….

‘தளபதி’ தினேஷ் : கடைசீல வெள்ளி விழாவுல (200 days) ஷீல்டு கூட அவர் கையால வாங்கிட்டேன். தலைவர் கண்டுக்கவே இல்லே. ‘சரி… நாம கொடுத்து வெச்சது அவ்வளவு தான்… மறந்துட்டாரு போலருக்கே…’ அப்படின்னு நினைச்சு என்னை தேற்றிக்கொண்டேன். அப்புறம் சில மாதங்கள் போச்சு. வேற படங்கள்ல கமிட் ஆகி வொர்க் பண்ணிக்கிட்டுருந்தேன்…. ஒரு நாள் காலைல 8.30 மணிக்கு ஃபோன். நான் ஷூட்டிங் கிளம்பிட்ருந்தேன். “தளபதி தினேஷ் சாரா…? நாங்க ராகவேந்திரா மண்டபத்துல இருந்து பேசுறோம். காலைல பத்து மணிக்கு ரஜினி சார் உங்களை வந்து பார்க்கச் சொன்னாரு” அப்படின்னு சொன்னங்க. இது எப்போன்னா வெள்ளி விழால்லாம் முடிஞ்சு சில மாசம் கழிச்சி ஒரு நாள்.

வாக்குறுதி அளித்தபடி லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்ட்டா கொடுத்த சூப்பர் ஸ்டார்

சொன்ன மாதிரி நாங்க ராகவேந்திரா மண்டபம் போனபோது, “வாங்க வாங்க..” ன்னு எங்களை எதிர்கொண்டு வரவேற்றாரு ரஜினி சார். நாங்கள் வருகிறோம் என்பதால் ஆல்ரெடி எல்லாத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். நாங்க ஒரு நாலஞ்சு பேர் போயிருந்தோம். ஒரே ராஜ மரியாதை எங்களுக்கு. என்னை பத்தி என் குடும்பத்தை பற்றி அக்கறையோட விசாரிச்சார். எங்க கூட வந்தவங்களையும் விசாரிச்சார்.

அவரோட ரூம்ல எங்களை உட்கார வெச்சு, என் கைக்கு தயாரா வெச்சிருந்த ஒரு ப்ரேஸ்லெட்டை  எடுத்து போட்டுவிட்டாரு. எனக்கு ஒரு நிமிஷம் சும்மா வானத்துல பறக்குற மாதிரி இருந்திச்சு. அது சுமார் 7 சவரன் இருக்கும். இன்னைக்கு ஒரு சவரன் Rs.21,000/-. அப்போ என்ன ஒரு சவரன் தங்கம் Rs.9,000/- இருந்திருக்கணும். நாங்க வீட்டுக்கு வந்தவுடனே அதை எடை போட்டு பார்த்தோம். 7 அல்லது 7.5 சவரன் இருக்கும். நீங்களே கணக்கு பண்ணி பாருங்க. கிட்டத்தட்ட அதோட மதிப்பு Rs.63,000/- இருக்கும்.

நான் நெகிழ்ந்து போய், “ரொம்ப நன்றி சார்”ன்னேன். “இப்போ சந்தோஷம் தானே?” அப்படிங்கற அர்த்தத்துல சிரிச்சார்.

என்னால வாழ்க்கையில மறக்க முடியாத நாள் அன்னைக்கு. சொன்னதை விட அதிகமாகவே அதுவும் மனசு நிறையிற மாதிரி செஞ்சாரு பாருங்க… அது தான் ரஜினி சார். ஒரு கலைஞனுக்கு இதை விட வேற என்ன சார் பெரிய அங்கீகாரம் வேணும்?

(நாம் உடனே நம்மையறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தோம்.)

நாம் : வெல்டன் சார். கங்கிராட்ஸ். தேங்க்ஸ் டு தலைவர்.

ரஜினி மனோஜ்  : லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்ட்டா கொடுத்திருக்கார் பார்த்தீங்களா தலைவர். உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்குமே…..

என்னால வாழ்க்கையில மறக்க முடியாத நாள் அன்னைக்கு. சொன்னதை விட அதிகமாகவே அதுவும் மனசு நிறையிற மாதிரி செஞ்சாரு பாருங்க… அது தான் ரஜினி சார். ஒரு கலைஞனுக்கு இதை விட வேற என்ன சார் பெரிய அங்கீகாரம் வேணும்?

‘தளபதி’ தினேஷ் : இதுல என்ன ஒரு விசேஷம்னா… ரஜினி சார் கூட எவ்வளவோ ஃபைட் மாஸ்டர்ஸ் - ரொம்ப சீனியர்ஸ் எல்லாம் - வொர்க் பண்ணியிருக்காங்க. அவர் யாருக்கும் இது போல ஸ்பெஷலா பரிசு எதுவும் கொடுத்ததில்லே. நான் தான் பர்ஸ்ட் அவர் கிட்டே இப்படி ஒரு பரிசு வாங்குறதுக்கு. மத்தவங்க வாங்கியிருப்பாங்க. மியூசிக் டைரக்டர்ஸ், பாடலாசிரியர்கள் இவங்க அவர்கிட்டே கோல்ட் கிப்ட் வாங்கியிருக்காங்க. ஆனா, ஃபைட்டுக்குன்னு அவர் யாருக்கும் கோல்ட் கிப்ட்டா கொடுத்ததில்லே. கஷ்டம்னு சொல்லி வர்றவங்க யாருக்காவது ஏதாவது கொடுத்திருப்பாரு. ஆனா இது மாதிரி வாங்கினது நான் தான் பர்ஸ்ட்.

ரஜினி சார் கூட எவ்வளவோ ஃபைட் மாஸ்டர்ஸ் - ரொம்ப சீனியர்ஸ் எல்லாம் - வொர்க் பண்ணியிருக்காங்க. அவர் யாருக்கும் இது போல ஸ்பெஷலா பரிசு எதுவும் கொடுத்ததில்லே. நான் தான் பர்ஸ்ட் அவர் கிட்டே இப்படி ஒரு பரிசு வாங்குறதுக்கு.

நாம் : சந்திரமுகி ஃபைட்  நிச்சயமா DESERVES THAT சார். ரெண்டு ஃபைட் தான்னாலும் ரெண்டுமே டாப் கிளாஸா இருக்கும். ‘பாபா’ படத்துக்கப்புரம் படம் வந்ததால ரசிகர்கள் இந்த படத்துல ஸ்டண்ட் எல்லாம் நல்லாயிருக்கணுமேன்னு பிரார்த்தனை பண்ணாத குறை தான் .

தளபதி’ தினேஷ் : அந்த ஃபைட்டை மொத்தம் மூனரை நாள்லயே எடுத்து முடிச்சிட்டோம். பொதுவா இது போன்ற இன்ட்ரோ ஃபைட் பத்து பதினஞ்சு நாள் எடுப்பாங்க. அதுவும் ரஜினி சார் ஃபைட்ன்னா நிச்சயம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து குறைஞ்சது 15 நாளாவது எடுப்பாங்க. இத்துணைக்கும் அந்த ஃபைட் சீனை முதல் நாள் எடுக்கும்போது அவரால வர முடியாத ஒரு சூழ்நிலை. ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வந்தாரு. அவர் மூடு தெரிஞ்சி, முதல் நாள் சும்மா லைட்டா தான் எடுத்தோம். வாக்கிங் ஷாட்ஸ் எல்லாம் எடுத்து முடிச்சிட்டோம். அவர் பக்கா PROFESSIONAL. தன்னோட பிரச்னையை வெளியில துளி கூட காட்டிக்காம அழகா எங்களுக்கு கோ-ஆப்பரேட் பண்ணினார். இதையெல்லாம் இன்னைக்கு இருக்குறவங்க கத்துகிடனும் அவர் கிட்டே.

அந்த ஃபைட் சீனை முதல் நாள் எடுக்கும்போது அவரால வர முடியாத ஒரு சூழ்நிலை. ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வந்தாரு. தன்னோட பிரச்னையை வெளியில துளி கூட காட்டிக்காம அழகா எங்களுக்கு கோ-ஆப்பரேட் பண்ணினார். இதையெல்லாம் இன்னைக்கு இருக்குறவங்க கத்துகிடனும் அவர் கிட்டே.

முதல் நாளிலேயே ஹெவியா அவரை வொர்க் வாங்க கூடாதுங்குறதுக்காக சின்ன சின்ன ஷாட்ஸ் தான் எடுத்தோம். அதுல ஒரு சீக்வென்ஸ்ல  வாயசைச்சுகிட்டே வருவார்.  நான் ஒரு ஐடியா கொடுத்தேன்…”வெறுமனே வாயசைச்சுகிட்டே வந்தா சரியாயிருக்காது சார். அதுக்கு பதிலா ஏதாவது பபிள்கம் மாதிரி மென்னுகிட்டே வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்”ன்னேன். “இது நல்லாயிருக்கே”ன்னு சொல்லி அதுக்கு ஒத்துக்கிட்டார். அப்புறம் தான் பபிள்கம்மை சுண்டி போட்டு வாயில் காட்ச் செய்வது போல ஒரு ஷாட் வைத்தோம். அது சிகரெட் ஸ்டைலுக்கு ஈக்வலா வந்தது. ஃபேன்ஸ் மத்தியில் கிளாப்ஸையும் அள்ளிச்சு.

நாம் : உண்மை சார். தலைவர் பபுள்கம்மை சும்மா சுண்டி போட்டு பிடிக்குற ஸ்டைலே தனி.

‘தளபதி’ தினேஷ் : ரஜினி சார் டூப்பே போடாம நடிச்சதால, நிறைய ரோப் ஷாட்ஸ் வெச்சிருப்போம். என்னோட அசிஸ்டென்ட் ஒருத்தரு சொன்னாரு, “நீ எந்த தைரியத்துல நீ இப்படி அவரை வெச்சு ரிஸ்கான ஷாட்லாம் வெச்சிருக்கே…? ஷூட்டிங்கப்போ ரோப் ஏதாவது அறுந்து அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் அவளளவு தான். உன் வீடு கீடு எல்லாம் ரசிகருங்க அடிச்சு உடைச்சு துவம்சம் பண்ணிடுவாங்க தெரியுமா?” அப்படின்னாரு படபடப்போட.

ஆனா எனக்கு உள்ளுக்குள்ளே அந்த பயம் எல்லாம் கிடையாது. முதல்ல ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. பேர் வாங்கணும் என்பது மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. இருந்தாலும் ரஜினி சார் யோகா அது இதெல்லாம் பண்ணி அவர் பாடியை நல்லா ஃபிட்டா வெச்சிருந்தார். அதுனால் அந்த மாதிரி ஷாட்டுக்கு எல்லாம் அவரோட பாடி நல்லா ஒத்துழைச்சது. (Thoughts become things!)

“நீ எந்த தைரியத்துல நீ இப்படி அவரை வெச்சு ரிஸ்கான ஷாட்லாம் வெச்சிருக்கே…? ஷூட்டிங்கப்போ ரோப் ஏதாவது அறுந்து அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் அவளளவு தான். உன் வீடு கீடு எல்லாம் ரசிகருங்க அடிச்சு உடைச்சு துவம்சம் பண்ணிடுவாங்க தெரியுமா?” அப்படின்னாரு படபடப்போட.

சந்திரமுகிக்கு அப்புறம் அவர் ரேன்ஜ் எங்கேயே போய்டுச்சு. பெரிய பெரிய பட்ஜெட் படத்துல நடிக்க ஆரம்பிச்சு உலக அளவுல எங்கேயோ போயிட்டார். பீட்டர் ஹெய்ன் மாதிரி பெரிய மாஸ்டர்ஸ் அவர் கூட ஒர்க் இப்போ பண்றாங்க. நாம கூட கிடைச்சா பண்ணலாம் பார்க்கலாம்.

(நண்பர்களை பார்த்து, “நீங்க ஏதாவது கேக்க நினைச்சீங்கன்னா கேளுங்க” என்றேன். இதையடுத்து ரஜினி மனோஜ் சில கேள்விகள் கேட்டார்)

ரஜினி மனோஜ் : ‘பாட்ஷா’ படத்துல ரஜினி சாரோட அடியாளா நீங்க வருவீங்க. ஆனந்தராஜ் அவரை கம்பத்துல கட்டி வெச்சு அடிக்கிற சீன்ல, உங்களை க்ளோசப்ல காட்டுவாங்க. நீங்க டீ-கிளாசை உடைப்பீங்க. அந்த சீனை பத்தி சொல்லுங்களேன்.

நாம் : ஏன், கேக்குறார்ணா, ரஜினி சார் கூட மோதுற வில்லனா, அவரோட சண்டை போடுற ஒருத்தரா இதுக்கு முன்னாடி வந்த  நீங்க, பாட்ஷாவுல அவரோட ஆளா நடிச்சிருப்பீங்க. அதுனால கேக்குறார்னு நினைக்கிறேன்.

ரஜினி மனோஜ் : ஆமா சார்…. அதுனால் தான்….

‘தளபதி’ தினேஷ் : கிட்ட தட்ட 500 படத்துக்கும் மேலே நான் நடிச்சிட்டேன். சின்ன சின்ன காரக்டர்ஸ் பண்ணிட்டேன். ஆனா ‘பாட்ஷா’ படத்துக்கு அப்புறம் தான் என்னை பட்டிதொட்டியெல்லாம் தெரிஞ்சதுன்னு சொல்லலாம். ‘தளபதி’ படத்துல நான் வந்திருந்தாலும் முழுக்க முழுக்க மழைலயே என்னை காட்டுவாங்க. அதுனால் என் முகம் கூட சரியா தெரியாது. ஆனா, இதுல நிறைய சீன்ல வருவேன். ‘தளபதி’ கூட எனக்கு கொஞ்சம் தான் ரீச் கொடுத்திச்சு. காரணம் அதுல நான் ஆப்போசிட். அவரை எதிர்த்து சண்டை போடும் ஆள். ரசிகர்கள் திட்டுவாங்க. அவர்கள் மனதில் நிற்கமுடியாது. ஆனால், பாட்ஷாவுல அவரோட் ஆள் என்பது ப்ளஸ் பாயின்ட்.

‘தளபதி’ ரிலீஸ் அன்னைக்கு உதயத்துக்கு தெரியாத்தனமா பர்ஸ்ட் நாள் போயிட்டேன். என்னை ஸ்க்ரீன்ல காட்டும்போது ஃபேன்ஸ் அசிங்கம் அசிங்கமா திட்டுறாங்க…. ஏண்டா போனோம்னு ஆயிடுச்சு. (சிரிக்கிறார்)

நாம்: (ரஜினி மனோஜை காண்பித்து) எல்லாம் இவனை மாதிரி ஆளுங்க தான் சார்…

(மனோஜ் நெளிவதை பார்க்க காமெடியாக இருந்தது. ஆனா அவரு அப்போ பிறக்கவேயில்லை என்பது வேற விஷயம்!)

ரஜினி மனோஜ் : இப்போ கூட ‘பாட்ஷா’ படத்தை ரீசண்ட்டா சிட்டில ரீ-ரிலீஸ் பண்ணாங்க. நல்லா போச்சு சார்.

‘தளபதி’ ரிலீஸ் அன்னைக்கு உதயத்துக்கு தெரியாத்தனமா பர்ஸ்ட் நாள் போயிட்டேன். என்னை ஸ்க்ரீன்ல காட்டும்போது ஃபேன்ஸ் அசிங்கம் அசிங்கமா திட்டுறாங்க…. ஏண்டா போனோம்னு ஆயிடுச்சு. (சிரிக்கிறார்)

‘தளபதி’ தினேஷ் : பாட்ஷாவுல ரஜினி சார் சொல்லி தான், என்னை போட்டாங்க. அவர் தான் என்னை ரெகமன்ட் பண்ணாரு. ஆக்சுவலா பொன்னம்பலம் சாரை கூட ட்ரை பண்ணாங்க. பட்  அவர் கொஞ்சம் பிசியா இருந்ததுனால என்னை போட்டாங்க. அந்த டயத்துல நான் தான் அவரோட பர்சனல் பாடிகார்டுன்னு கூட பேசிக்கிட்டாங்க. (சிரிக்கிறார்)

சூப்பர் ஸ்டாரின் ஸ்டண்ட் திறன் எப்படி?

நாம் : ரஜினி சாரோட ஸ்டண்ட் திறமை எப்படி சார்? ஏனெனில், ஸ்டண்ட் ஷூட்டிங் என்பதே ஒரு கண்கட்டு வித்தை தான். உண்மையில் யாரும் அடித்துக்கொள்வதில்லை…. அப்படி எடுக்கிறார்கள். எனவே நீங்கள் கூறுவதை உள்வாங்கி செய்யவேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் அதாவது ஸ்டண்ட் இயக்குனர்கள் என்ன தான் திறமைசாலிகள் என்றாலும், அந்த பக்கத்திலிருந்து - அதாவது ஹீரோக்கள் சைடில் இருந்து - நல்ல ஒத்துழைப்பு முக்கியம். நீங்கள் கூறுவதை அவர்கள் க்ரகித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை காமிரா முன்பு காட்டவேண்டும். அந்த வகையில் ரஜினி சார் எப்படி?

‘தளபதி’ தினேஷ் : அவர் எப்படின்னு சொன்னா, அவரோட ஷாட் முடிஞ்சிடுச்சுன்னாக் கூட காரவ்னுக்குள்ளே போகமாட்டார். ஸ்பாட்ல நடக்குறதை, நாங்க ரிகர்சல் எடுக்குறதை இதையெல்லாம் பார்த்துக்கிட்டேயிருப்பார். மத்த ஹீரோஸ் எல்லாம் அவங்க ஷாட் முடிஞ்சிடுச்சுன்னா உடனே கேரவனுக்குள்ளே போய்டுவாங்க. கூப்பிட்டா தான் வருவாங்க. ஆனா இவர் மேக்கப் போட மட்டும் தான் கேரவனுக்குள்ளே போவார். மற்றபடி நாங்க செய்றதை அமைதியா கவனிச்சிக்கிட்டுருப்பார். நாம் வந்து சொன்னவுடனே கப்னு புடிச்சிடுவார்.

அதே மாதிரி, எதையும் செய்யமாட்டேன்னு சொல்ல மாட்டார். “ரோப் சீக்வென்ஸ் எல்லாம் ட்ரை பண்றேன். நல்லா வந்தா எடுத்துக்கோங்க. வரலேன்னா விட்டுடுங்க.” அப்படின்னு கூலா சொல்வார்.

சூப்பர் ஸ்டாரின் பங்க்சுவாலிட்டி மற்றும் தொழில் பக்தி

நாம் : ரஜினி சார் பற்றி உங்கள் ஒப்பீனியன் என்ன…?

‘தளபதி’ தினேஷ் : அவர் கிட்டே நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. உதாரணத்துக்கு இந்த பங்க்சுவாலிட்டி. ஒரு சின்ன சம்பவம் ஞாபகத்துக்கு வருது. அவர் எந்தளவு பங்க்சுவல் மற்றும் தொழிலுக்கு மரியாதை தருகிறவர் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இதை சொல்கிறேன்.

சந்திரமுகில அவரோட ஃபைட்டை நாங்க சிவாஜி கார்டனில் அடுத்த நாள் எடுக்கவிருக்கிறோம். முந்தைய நாள் நைட் ஒரு பத்து அல்லது பத்தரை இருக்கும். நான் என் பெட்ரூமில் இருந்தேன். அப்போ தான் தூங்கப் போனேன். ஹால்ல இருக்குற என்னோட லாண்ட லைன் ஃபோன் ரிங் ஆச்சு. என்னோட அம்மா, ஃபோனை எடுத்திருக்காங்க. “நான் ரஜினி பேசுறேன். தினேஷ் இருக்காரா?” அப்படின்னு கேட்டிருக்கார். அவங்களுக்கு பேசுறது ரஜினி சார்னு தெரியாது. அவங்க ரஜினி சார் பேசுவாருங்கிறதும் தோணலை. யாரோ என்னோட ஃப்ரெண்டுன்னு நினைச்சு, என்கிட்டே வந்து, “யாரோ ரஜினியாம்…. உன்கிட்டே பேசனுமாம்” அப்படின்னாங்க.

அவங்களுக்கு பேசுறது ரஜினி சார்னு தெரியாது. அவங்க ரஜினி சார் பேசுவாருங்கிறதும் தோணலை. யாரோ என்னோட ஃப்ரெண்டுன்னு நினைச்சு, என்கிட்டே வந்து, “யாரோ ரஜினியாம்…. உன்கிட்டே பேசனுமாம்” அப்படின்னாங்க.

எனக்கே ரஜினி சார் எனக்கு பண்ணுவாரான்னு டவுட் வந்திச்சு. அப்படியிருக்கும்போது அவங்களுக்கு எப்படி தோணும்? நான் என் ப்ரெண்ட்ஸ் தான் யாரோ என்னை டீஸ் பண்றாங்கன்னு நினைச்சேன். தூக்க கலக்கத்துல போய் ரிசீவரை எடுத்தேன்….எதிர் முனையில், “ஹாய்  தினேஷ்… நான் ரஜினி பேசுறேன். காலைல ஷூட்டிங்கிற்கு எத்துனை மணிக்கு வரணும்?” அப்படின்னு கேட்டார். நான் தூக்கமெலாம் பறந்து போய் சுதாரிச்சிக்கிட்டு சொன்னேன், “உங்க சௌகரியம் சார்… நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்” அப்படின்னேன். “நோ…நோ.. நீங்க டயம் சொல்லுங்க. அந்த டயத்துல நான் அங்கே இருப்பேன்” அப்படின்னார். “சார்.. நான் காலைல 7.00 மணிக்கெல்லாம் போய்டுவேன். முதல்ல போய் எல்லாத்தையும் அரேஞ் செய்யானும். நீங்க ஒரு 9.00 மணிக்கு வந்தீங்கன்னா கரெக்ட்டா இருக்கும்”ன்னு சொன்னேன்.

நான் சொன்னமாதிரி காலைல ஏழு மணிக்கு மவுண்ட்-பூந்தமல்லி ரோட்டில் இருக்கும் சிவாஜி கார்டன்ஸ் போயிட்டேன். ரஜினி சார் சரியா எட்டு மணிக்கு வந்தாரு. காஸ்ட்யூம் மாற்றிக்கொண்டு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு 9.00 ஷார்ப்பா ரெடியாயிட்டார். கரெக்ட்டா என் முன்னாடி 9.00 மணிக்கு “மாஸ்டர் நான் ரெடி”ன்னு சொல்லி நிக்கிறார். அவரோட பங்க்சுவாலிட்டி மற்றும் தொழில் பக்தி ரெண்டையும் பார்த்து நான் மிரண்டு போயிட்டேன். என் யூனிட்டும் கூட.

அவர் நைட் நம்ம கிட்டே கேக்கனும்கிற அவசியமே இல்லே. அவர் மானேஜரை கேக்கலாம். இல்லே டைரகடர் கிட்டே கேக்கலாம். நம்ம கிட்டே கேக்கணும் என்கிற அவசியமே இல்லை. அவர் 9 மணிக்கு வரலாம். இல்லே… 10 மணிக்கு கூட வரலாம். யாரும் அவரை கேட்க போறதில்லே. ஆனாலும் என் கிட்டே கேட்டு கரெக்ட்டா சொன்ன நேரத்துக்கு வந்து நின்னாரு பாருங்க… வாவ்…  இதெல்லாம் தான் நான் கூட அவரை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் தான்.

நாம் : அவரோட உதவும் குணம் பற்றி ஏதாவது தெரியுமா? ஏதாவது சம்பவம்?

‘தளபதி’ தினேஷ் : அவர் நிறைய பேருக்கு நிறைய செய்றார். எங்களோட ஸ்டண்ட் யூனியன்ல இருக்குற வயதான சிலருக்கு ஒவ்வொரு மாசமும் மருந்து மாத்திரை வாங்குறதுக்கு பணம் அனுப்புறார். தவிர நிறைய பேர் நிறைய உதவி வாங்குறாங்க அவர் கிட்டே. அவரை பார்ப்பது சுலபமில்லே. ஆனால், பார்க்கும்போது சினிமாவை சார்ந்தவர்கள் ஏதாவது வேண்டுகோள் வைத்தால் அதை நிச்சயம் செய்வார். நிறைய பேருக்கு இது போல செய்கிறார். இது வெளியே தெரிவதில்லை. இந்த உதவிகள் எல்லாம் கடைசி காலம் வரை அவர்களுக்கு ரெகுலராக கிடைக்கும். பென்ஷன் போல.

எங்களோட ஸ்டண்ட் யூனியன்ல இருக்குற வயதான சிலருக்கு ஒவ்வொரு மாசமும் மருந்து மாத்திரை வாங்குறதுக்கு பணம் அனுப்புறார். தவிர நிறைய பேர் நிறைய உதவி வாங்குறாங்க அவர் கிட்டே. இந்த உதவிகள் எல்லாம் கடைசி காலம் வரை அவர்களுக்கு ரெகுலராக கிடைக்கும். பென்ஷன் போல.

நாம் : மிகப் பெரிய விஷயம் சார். இது. கூடப் பிறந்தவங்க கூட கடைசி காலத்துல நமக்கு கைகொடுப்பங்க என்பது நிச்சயமில்லாத உலகம் இது.

‘தளபதி’ தினேஷ் : வாழ்ந்து கெட்டவர்கள் சினிமாவில் நிறைய பேர் சினிமாவில் இருக்கிறார்கள். திரையுலகை பொறுத்தவரை, சம்பாதிக்கும் காலத்தில் சேர்த்து வைக்கவேண்டும். இல்லையென்றால் பிற்பாடு திண்டாட்டம் தான். இப்போதெல்லாம் சினிமாவுக்கு படித்தவர்கள் வருவதால், அவர்கள் ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’னு கொஞ்சம் வெவரமா இருக்காங்க.

“சினிமாவை பொறுத்தவரை சக்சஸ் ஆவது ரொம்ப கஷ்டம். ஆனால் சக்சஸ் ஆகிட்டால் இதில் கிடைக்கும் பணம், மரியாதை, புகழ் போல் வேறு எதிலும் இல்லை. அரசியல் கட்சி தலைவராகட்டும், டிஸ்ட்ரிக்ட் கலெக்டராகட்டும், ஏன். சி.எம்.மே ஆகட்டும், அவங்கவங்க வீட்டுல இருந்து தான் சாப்பிட சோறு எடுத்து செல்லவேண்டும். ஆனா சினிமாவில் மட்டும் தான், மூன்று வேளை  சாப்பாடு போட்டு சம்பளமும் கொடுக்குறாங்க. வேறு எந்த துறையிலும் இது கிடையாது. மற்ற துறையில் எல்லாம் அவர்கள் தான் சாப்பாடை பார்த்துக்கொள்ளவேண்டும். இங்கு சோறு மட்டுமில்லாமல் மூணு வேளை டீ , காபி கூட தருகிறார்கள். மற்ற துறையில் இருப்பவர்களுக்கு கூட அதிகபட்சம் சம்பளம் ரூ.50,000/- இருக்கும். ஆனால் சினிமாவில் தான் கோடிகளில் சம்பளம். ஆனாலும் சினிமாவைத் தான் கேவலமாக பேசுகிறார்கள்…” என்றார்.

நாம் : (‘மன்னன்’ பாணியில்) “வயித்தெரிச்சல்” சார் என்றேன். அதற்கு உண்மை என்பது போல சிரித்தார்.

நாம் : எங்களுக்காக எங்க தள வாசகர்களுக்காக இந்த ‘பொங்கல்’ பிஸியில் கூட நேரம் ஒதுக்கி தந்து பல அரிய விஷயங்களை ஷேர்  பண்ணிகிட்டீங்க. ரொம்ப நன்றி சார். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

“சினிமாவை பொறுத்தவரை சக்சஸ் ஆவது ரொம்ப கஷ்டம். ஆனால் சக்சஸ் ஆகிட்டால் இதில் கிடைக்கும் பணம், மரியாதை, புகழ் போல் வேறு எதிலும் இல்லை. அரசியல் கட்சி தலைவராகட்டும், டிஸ்ட்ரிக்ட் கலெக்டராகட்டும், ஏன். சி.எம்.மே ஆகட்டும், அவங்கவங்க வீட்டுல இருந்து தான் சாப்பிட சோறு எடுத்து செல்லவேண்டும். ஆனா சினிமாவில் மட்டும் தான், மூன்று வேளை  சாப்பாடு போட்டு சம்பளமும் கொடுக்குறாங்க.

‘தளபதி’ தினேஷ் : மேற்கூறிய விஷயங்களை ரஜினி ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள எனக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கும் நன்றி. உங்கள் தள வாசகர்கள், மற்றும் ரஜினி சாரின் ரசிகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சந்திப்பு நிறைவு பெற்றவுடன் அவருக்கு நம் தளம் சார்பாக ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலை பரிசளித்தோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். நண்பர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு விடைபெற்றோம். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

(பொங்கலன்று மாலை வாழ்த்து கூறுவதற்கும், பதிவு தயாராகி வருவதை கூறவும் தினேஷ் அவர்களுக்கு ஃபோன் செய்தேன். சந்திரமுகி 804 வது நாள் விழாவில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் முன்னிலையில் இவர் ஷீல்டு பெறும் ஒரு அரிய படத்தை பதிவில் ஏற்றியிருப்பதாக சொன்னேன். “சார்… அந்த ஸ்டில் எனக்கு ஒரு காப்பி கொடுங்கள் சார். ப்ளோ பண்ணி வீட்டுல மாட்டனும். என்கிட்டே அது இல்லே” என்றார் ஆர்வமாக. “நிச்சயமாக சார். பதிவை பப்ளிஷ் செய்தவுடன் பிரிண்ட்-அவுட்டுடன் உங்களை சந்திக்கிறேன். அப்போது புகைப்படத்தை சி.டி.யில் தருகிறேன்” என்றேன். நன்றி கூறி விடைபெற்றார்.)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு  (குறள் : 597)

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

[END]

17 Responses to “டூப் இன்றி ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அசத்திய சூப்பர் ஸ்டார் — ‘தளபதி’ தினேஷ் கூறும் சுவாரஸ்யமான தகவல்கள் — Part II — PONGAL SPL 4”

  1. Ashraf Ali Ashraf Ali says:

    Very useful Article . . Thanks Sundar Ji..

    ***

    Rajini Fans should follow the Time Punctuality from our Superstar.

    ****

    சும்மா நானும் ரஜினி ரசிகன் சொல்றதில் பெருமை இல்ல…

    ****

    தலைவர் போல நேரம் தவறாமை, எளிமையை வாழ்கையில் கடைபிடிக்கணும் ; நம்மை பார்பவர்கள்

    இவன் உண்மையிலேயே ரஜினி ரசிகன் தான் மெச்சி மகிழனும்.

    ****

    என்னை பொறுத்த வரைக்கும் ஒரு ரசிகனா தலைவருக்கு செய்யிற பதில் மரியாதை இதுவாதான் இருக்கும்.

    ****

    With Regards,

    Ashraf Ali. S.

  2. harisivaji harisivaji says:

    தலைவர் சொன்னதை செய்வார்

    எப்போ எப்புடி செய்வார் யாருக்கும் தெரியாது

    இப்படி பிரைவேட் ஆ சொன்னதையே செஞ்சவர்

    publicaa சொன்னதை செய்யாம விட்டுவிடுவாரா

  3. Manoj Manoj says:

    The article is nice and sweet . The narration of dinesh sir indicates how enthu he feels when he describes about Thalaivar!!! waiting for your avatar in kochadaiyaan thalaiva… Photo shoot should be done soon!!!!!

  4. s.vasanthan s.vasanthan says:

    நாங்களும் சேர்ந்து உரையாடியது போல் உள்ளது,நன்றி சுந்தர் .

  5. Anonymous says:

    "தளபதி தினேஷ்" சார் ரொம்ப சிம்பிலானர்வர். பெரிதா சாதித்துவிட்டு துளியும் அலட்டி கொள்ளாதவர்!! தலைவரிடம் நெருக்கமாக இருக்கும் அனைவரும் சிம்பிளாக இருக்கிறார்கள் !!!

  6. Sankaranarayanan Sankaranarayanan says:

    நன்றி சுந்தர்ஜி…….

    திரு தினேஷ் அவர்களுக்கும் நன்றி. தலைவருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவர் தலைவரிடம் இருந்து கற்று கொண்டதையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ப.சங்கரநாராயணன்

  7. Anonymous says:

    சூப்பரான பொங்கல் பரிசாக இந்த பேட்டி அளித்த திரு.தளபதி தினேஷ் அவர்களுக்கு நன்றி

  8. Somesh Somesh says:

    Very open hearted interview. He shared things straight from his heart. How are you able to identify the artists aptly? .(Room pottu yosipeengalo :) ) Every one whom you interview have many useful and eventful things to share about thalaivar. Great work Sundarji.

  9. jayaramputtur jayaramputtur says:

    thanks சுந்தர் nice article…. thanks for your efforts….

  10. jayaramputtur jayaramputtur says:

    Indians and Japanese performing for Rajini tamil movie song Oruvan Oruvan - Muthu movie
    http://www.youtube.com/watch?v=q0YF_N-bA9g

  11. govind govind says:

    அருமையான கலந்துரையாடல் , தினேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ………..

  12. Sudhagar_US Sudhagar_US says:

    நிறைவான பதிவு, அதுவும் திரையுலகம் குறித்து அவர் சொன்ன கருத்துகள் முழுக்க எற்ப்புடையது.

    பாட்ஷா-வில் இவர் தோற்றம், கதாபாத்திரம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் அந்த டீ-கிளாசை உடைக்கும் காட்சி, கிளைமாக்ஸ்சில் இவர் பாம் remove பண்ணும் விதம் டாப் கிளாஸ் :D

    கடுமையான உழைப்பால் பெயர் சொல்லும் இடம் பிடித்திருக்கும் திரு.'தளபதி' தினேஷ் மாஸ்டர் மீண்டும் தலைவருடன் பணிபுரிய வாய்ப்பு அமைய வாழ்த்துவோம்.

  13. கிரி கிரி says:

    சுந்தர் பேட்டி அருமை! :-) தளபதி தினேஷ் க்கு எங்கள் நன்றி

  14. R.Ramarajan R.Ramarajan says:

    Thalaivar thirupi kodukum pothu double la thaan, anbum .. Kuselan exp missing. Interesting incident. Thanks

  15. SADIQUE SADIQUE says:

    "ஏதாவது வேண்டுகோள் வைத்தால் அதை நிச்சயம் செய்வார். நிறைய பேருக்கு இது போல செய்கிறார். இது வெளியே தெரிவதில்லை. இந்த உதவிகள் எல்லாம் கடைசி காலம் வரை அவர்களுக்கு ரெகுலராக கிடைக்கும். பென்ஷன் போல." - எங்கள் தலைவரை தூற்றுபவர்களே… தெரிந்து கொள்ளுங்கள் உண்மையை… (நன்றி தளபதி தினேஷ் சார்)

    SIMPLY THE BEST SUNDARJEE… THANKS FOR THIS WONDERFUL ARTICLE.

    ''''''''''''''''''''''''''''

    என்றும் நீங்கா அன்புடன்.

    சாதிக்(மதுரை)

  16. tveraajesh tveraajesh says:

    சுந்தர் படு அசைத்தால். தினேஷ் சொல்லி இருக்கும் அனுபவங்கள் படு ஜோர். இந்த பதிவை கூட ஒரு புத்தகமாய் போடலாம். சிம்ப்லி சுபெர்ப்.

  17. balajiv balajiv says:

    Simply superb and awesome article…..

    cheers,

    balaji

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates