You Are Here: Home » Featured, Flash from the Past » நெருக்கடியில் சிக்கிய தேவர் பிலிம்ஸ்… கைகொடுத்த ‘தர்மத்தின் தலைவன்’ – RAJINI’S PUNCHTANTRA SERIES PART 1

க்களுக்கு பயன் தரும் வகையில் அமையும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஜனரஞ்சகமாக இருப்பதில்லை. ஜனரஞ்சகமாக இருக்கும்  நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயன் தரும் வகையில் அமைவதில்லை. இரண்டையும் பாலன்ஸ் செய்யும் வகையில் அமையும் நிகழ்ச்சிகள் ஒரு சில மட்டுமே. ராஜ் டி.வி.யில் ஒவ்வொரு திங்களும் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகிவரும் ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நிகழ்ச்சி அதில் ஒன்று.

திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் கூறும் ‘பன்ச்’ வசனங்களில் புதைந்துள்ள மேனேஜ்மென்ட் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை வெளிக் கொணர்ந்து திரு.பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் திரு.கிட்டி அவர்கள் எழுதிய ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் , தற்போது ராஜ் டி.வி.யில் தொடராக ஒளிபரப்பாகிவருகிறது.

இதுவரை, சுமார் எட்டு எபிஸோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் இன்னமும் முப்பது எபிஸோடுகள் வரை ஒளிபரப்பாகவுள்ளது. இனி தான் சுவாரஸ்யமான விறுவிறுப்பான பகுதிகள் ஆரம்பிக்கவிருக்கின்றன.

கொஞ்சம் ஓவரா இல்லே?

“படம் போகிற போக்கில் ரஜினி சாதாரணமாக கூறியவற்றையெல்லாம் வைத்து ஒரு புத்தகம். அதற்கு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி. இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா?”

“கடுகை துளையிட்டு அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய்வது போலிருக்கிறது இந்த நிகழ்ச்சி,” என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று துடிக்கும் ஒரு சாமான்ய மனிதனுக்கு இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து கிடைத்தால் என்ன? தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்றாலே, வெறும் பொழுதுபோக்கு மட்டும் தான் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், பொழுதுபோக்கிற்கு கூடவே வாழ்க்கை போக்கிற்கும் நம்மை தயார்படுத்தும் ஒரு நிகழ்ச்சி என்றால் இது மிகையாகாது. எப்படி பார்த்தாலும் முடிவில் இது ஒரு பயனுள்ள நிகழ்ச்சி தான் என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்கமுடியாது. எதையுமே குதர்க்கமாக பார்ப்பவர்களுக்கு எல்லாமே அப்படித் தான் தெரியும். ரஜினி அவர்களை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதால் சிலருக்கு இது பொறுக்கவில்லை என்பதே உண்மை.

திருப்பு முனை

இனி வரும் எபிஸோடுகளில் திரைப்படத்தின் போக்கில் ரஜினி அவர்கள் சாதாரணமாக கூறிய அந்த டயலாக்குகள் எப்படி சிலர் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனைகளை ஏற்படுத்தின என்பதையும் அறிந்துகொள்ளத் தான் போகிறோம். மேற்படி வசனங்களுக்கு REAL-LIFE EXAMPLES தோன்றி அவர்களுக்கு எப்படி இந்த டயலாக்குகள் திருப்பு முனையாக அமைந்தன என்பதை கூறவிருக்கிறார்கள். அப்போது புரியும் இது எப்படிப் பட்ட ஒரு உன்னதமான முயற்சி என்று.

கடந்த வாரங்களில் நாம் பார்த்த நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமாவில் பேசும் படம் துவங்கிய காலகட்டத்திலிருந்து, பல்வேறு காலகட்டங்கள் வரை எப்படியெல்லாம் வசனங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தன, கதாநாயகர்கள் தங்கள் கருத்துக்களை எப்படி மக்களிடம் சொன்னார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பல மூத்த வசனகர்த்தாக்கள், இயக்குனர்கள் ஆகியோர் அழகாக எடுத்துக் கூறினார். மேலும், சினிமா வசனங்கள் ஏதோ கேட்டுவிட்டு மறந்து போய்விடும் சங்கதி அல்ல. அவை சமுதாய மாற்றத்திற்கு ஆழமாக வித்திடுகின்றன என்பதையும் ஆதாரப்பூர்வமாக திரு.எல்.வி.பிரசாத் எடுத்துக் கூறினார்.

சூப்பர் ஸ்டாருடன் பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்த அவரது மதிப்பிற்க்குறியவர்களான திரு.கே.பாலச்சந்தர், பஞ்சு அருணாச்சலம், எஸ்.பி.முத்துராமன், ஆகியோர் மேற்படி எபிஸோடுகளில் வந்து சூப்பர் ஸ்டாரின் வசனங்கள் எப்படி ‘பன்ச்’ வசனங்களாக கூர்மை பெற்றன என்பதை விளக்கினர். தவிர, சூப்பர் ஸ்டாருடன் தாங்கள் பணிபுரிந்த அனுபவங்களையும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

வாழ்வில் மாற்றங்கள் கண்ட ரஜினி ரசிகர்கள்

ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலில் மொத்தம் 30 டயலாக்குகள் இடம்பெற்றுள்ளன. இனி வரும்  வாரங்களில் ஒவ்வொரு வசனம் பற்றியும் விரிவாக அலசி, அதை பற்றி கார்பரேட் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் பேசவிருக்கின்றனர். அவற்றின் கூடவே ரசிகர்களின் கருத்துக்களும் இடம்பெறவிருக்கின்றன. மேற்படி பன்ச் வசனங்களால் அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் கண்ட ரஜினி ரசிகர்களும் ரசிகர்கள் அல்லாத பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் அனுபவங்களை பேசவிருக்கின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்கள்

முதல் நான்கைந்து எபிஸோடுகளுக்கான படப்பிடிப்பு ராஜ் டி.வி.அலுவலகத்தில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணிகளில் நாம் ஈடுபட்டிருந்தபடியால், படப்பிடிப்பு நடைபெற்ற இரண்டு நாளும் அங்கு இருந்தோம். படப்பிடிப்பில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.

‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் இடம்பெற்ற வசனமான “நான் தட்டி கேட்பேன். கொட்டிக் கொடுப்பேன்” வசனத்தின் படபிடிப்பு நடைபெற்றபோது இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நம்மை பார்த்தவுடன், நம்மை அடையாளம் கண்டுகொண்டு, “அட… நீங்க எங்கே இங்கே?” என்று கேட்க மேற்படி நிகழ்ச்சியில் நமது தளம் ஆற்றும் பங்கைப் பற்றி குறிப்பிட்டோம். “ஜமாய்ங்க … ஜமாய்ங்க” என்று வாழ்த்தினார். (மேற்படி நிகழ்ச்சியில் நமது தளம் பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் ஒருங்கிணைப்பு பணியை கவனித்துக் கொள்கிறது.)

எஸ்.பி.எம். அவர்கள் கலந்துகொண்ட இந்த எபிஸோட் கடந்த திங்கள் கிழமை (23.01.2012) அன்று ஒளிபரப்பானது. அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் பற்றி எஸ்.பி.எம். அவர்கள் கூறும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்கள் கூறும் சுவையான தகவல்களை வீடியோவில் பார்க்கவும்.

“தட்டிக் கேட்பேன்; கொட்டி கொடுப்பேன்” வசனத்திற்கான நிகழ்ச்சியில், நூலின் ஆசிரியர் திரு.பி.சி.பாலசுப்ரமணியன், இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன், திரு.ஆர்.யூ.ஸ்ரீனிவாஸ், (பி.பி.ஒ. ஒன்றின் தலைமை செயல் அதிகாரி), திருமதி.கௌசல்யா நடராஜன் (ஆல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர்.

ஒரு தவறு செஞ்சிட்டா அந்த தவறு யாருக்கும் தெரியாதுன்னு நினைக்காதீங்க

ரஜினி அவர்கள் ஆரம்ப காலகட்டங்களிலேயே பன்ச் வசனங்கள் பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டார் திரு.எஸ்.பி.எம். மேலும் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ஒரு உரையாடலையும் மேற்கோள் காட்டினார். அதில் சிவக்குமாரிடம் ரஜினி கூறும் ஒரு வசனம் “நீ கடப்பாரையை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்பிட்டு அதை ஜீரணம் பண்ணிடணும்னு நினைக்கிறே. கடப்பாரை ஒரு நாள் உன் வயித்தை கிழிச்சிட்டு வெளியே வரப் போகுது பார்” என்று சொல்வார். அதுவே ஒரு பன்ச் டயலாக் தான்.” என்று கூறினார் எஸ்.பி.எம்.

இதை ஒரு திருக்குறளோட அழகாக பொருத்தி உதாரணம் கூறினார் எஸ்.பி.எம்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
.

“அதாவது ஒரு தவறு செஞ்சிட்டா அந்த தவறு யாருக்கும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. உங்க மனசாட்சிக்கு தெரியும். அது உங்களை உறுத்திக்கிட்டேயிருக்கும்.  அதுல இருந்து யாரும் தப்ப முடியாது,” என்று அழகாக ஒரு கருத்தை கூறினார் திரு.எஸ்.பி.எம்.

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்த பாரம்பரியமிக்க நிறுவனமா தேவர் பிலிம்ஸ். தேவர் அவர்களின் மறைவுக்கு பின்னர் அந்நிறுவனம் தத்தளிக்க, அவர்களுக்கு தான் எதாவத்பு நிச்சயம் செய்யவேண்டும் என்று விரும்பி தர்மத்தின் தலைவன் படத்திற்கு அவர்களை தயாரிப்பாலராக்கினார் சூப்பர் ஸ்டார். இதைப் பற்றியும் திரு.எஸ்.பி.முத்துராமன் குறிப்பிடுகிறார்.

வீடியோவில் இதை எஸ்.பி.எம். அவர்கள் விளக்குவதை காணலாம்.

Program Full Video

http://youtu.be/yFfyTaWvE3E

சூப்பர் ஸ்டாரை பற்றி இப்படி பல புதிய அரிய விஷயங்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


—————————————————————————-
நம் தள வாசகர் கூறுவது என்ன?

முதல் சில எபிஸோடுகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற பொது இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசவிரும்பும் நமது தளவாசகர்கள் என்னை தொடர்புகொள்ளும்படி நமது டுவிட்டரில் கேட்டிருந்தேன். அதை பார்த்து, என்னை தொடர்பு கொண்டு, நிகழ்ச்சியில் பங்குபெற்றார் விக்ரம் என்னும் தள வாசகர் ஒருவர். சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர் இந்த நிகழ்ச்சியில் தாம் பங்கு பெற்ற அந்த பரவச அனுபவத்தை விளக்கி நமக்கு மெயில் அனுப்பியிருக்கிறார். அதில் தாம் பங்கு பெற்ற எபிஸோடின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.வி.சி.குகநாதன் அவர்கள் ‘ரஜினி’ என்ற வார்த்தைக்கு அளித்த DEFINITION பற்றி கூறியிருக்கிறார்.

அடுத்த பாகத்தில் அது வெளியிடப்படும்….
—————————————————————————-

…. to be continued in Part 2
[END OF PART 1]

9 Responses to “நெருக்கடியில் சிக்கிய தேவர் பிலிம்ஸ்… கைகொடுத்த ‘தர்மத்தின் தலைவன்’ – RAJINI’S PUNCHTANTRA SERIES PART 1”

  1. Ramar Tuticorin Ramar Tuticorin says:

    சூப்பர் சுந்தர்

  2. R.Gopi R.Gopi says:

    //மேற்படி நிகழ்ச்சியில் நமது தளம் ஆற்றும் பங்கைப் பற்றி குறிப்பிட்டோம். “ஜமாய்ங்க … ஜமாய்ங்க” என்று வாழ்த்தினார். (மேற்படி நிகழ்ச்சியில் நமது தளம் பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் ஒருங்கிணைப்பு பணியை கவனித்துக் கொள்கிறது.)//

    ஆஹா… அப்படியா!!?? சரி சரி நடத்துங்க… நடத்துங்க….

    //எதையுமே குதர்க்கமாக பார்ப்பவர்களுக்கு எல்லாமே அப்படித் தான் தெரியும். ரஜினி அவர்களை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதால் சிலருக்கு இது பொறுக்கவில்லை என்பதே உண்மை.//

    ஹா ஹா ஹா ஹா…..பொங்கல், ”இட்லி வடை”, சட்னி, சாம்பார்…..

  3. R.Ramarajan R.Ramarajan says:

    Oru valiya Raj tv arasu cable la add ayiduchu. Yesterday morning watched this punch and s.p.m speech about devar films. Ini miss pannama papen.

  4. PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

    எல்லா எபிசோடும் எதாவது சைட்ல அப்லோட் ஆயிருக்கா?

    ———————————-
    No i think. Raj tv is holding talks with Dailymotion in this regard. Soon we shall see.
    - Sundar

  5. Sudhagar_US Sudhagar_US says:

    இதுவரை online எதிலும் program upload செய்யப்படாதது வருத்தமே…மிக ஆவழாக உள்ளோம் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க!

  6. swami swami says:

    I'm surprised Vc guhanathan said something good about our OSS. He was some time back, very critical of our SS. Hence, we can't trust whether he spoke from his heart!

    ————————————-
    Yes… he was once opposing Superstar. Later during Endhiran trailer launch held at Sathyam, he spoke very good. Now in this program he spoke very very good. This is called life.
    - Sundar

  7. Anonymous says:

    உண்மையிலேயே நிகழ்ச்சி ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ! நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது இடையிடையே சில கேள்விகளை காண்பித்து நிகழ்ச்சியை சுவாரசியமாக்கி விட்டனர்….

    உதாரணத்துக்கு "சூப்பர் ஸ்டாரை வைத்து பல வெற்றிப்படங்களை கொட்டி கொடுத்த SPM சூப்பர் ஸ்டாரை தட்டிக் கேட்பாரா?",,,விசுவாசம் என்பது காலம் கடந்த மதிப்பீடா இல்லை முன்னேற்றத்தின் குறுக்கீடா?" போன்ற கேள்விகள் நிகழ்ச்சியை சுவையானதாக மாற்றிவிட்டன !

    -

    அவற்றில் நான் மிகவும் ரசித்த கேள்வி -

    "நாம் யாரை தட்டிக் கேட்கலாம்;

    நம்மை தட்டிக் கேட்க யாரை அனுமதிக்கலாம்"

    -

    இறுதியாக பேசின கௌசல்யா நடராஜன் அவர்களின் பேச்சும், வசனத்தை அணுகிய வித்தியாசமான அணுகுமுறையும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது !

    -

    இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நிறைய பேரை போய்ச் சேர வேண்டும்…கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி "பன்ச்"தந்திரம் நூலை போலவே பலரது மனதில், வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்தும்; சாதனை படைக்கும் !

    -

    அனைவருக்கும் நன்றி !

    -

    "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  8. Sankaranarayanan Sankaranarayanan says:

    வணக்கம் சுந்தர்ஜி…

    இந்த எப்பிசோட் பார்த்த எண்ணற்ற ரசிகர்களில் ஒருவனாகவும், நேரில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் ஒருவனாகவும் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.

    சாதரணமாக தலைவர் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் உள்ளது எனும்போது, puch ஆக சொல்லும் வார்த்தைகளுக்கு பல வருடம் கழித்தும் பல விதமான அர்த்தம் உள்ளது என்ற உண்மை அன்றைய நிகழ்வில் உணர முடிந்தது.

    ஆம். தலைவர் ஒரு தீர்கதரிசி என்று அன்று கலந்துகொண்ட அத்தனை விருந்தினரும் சொன்னார்கள். திரு எஸ்.பி.எம் ஒரு படி மேலாக தலைவரின் puch dialogue அனைத்தும் பொன் மொழிகள் என்று புகழாரம் சூட்டினார்கள்.

    தலைவர் சொன்னதால்தான் இந்த வார்த்தைகள் அனைத்தும் முக்கியத்துவம் பெற்றது. சாதாரணமாக பொழுது போக்கிற்காகவும், பெயர்க்காகவும் படம் பண்ணுகின்ற காலத்தில், மக்களிடம் விழிப்புணர்வும், வாழ்கை நடைமுறை முறைபடுத்தவும் மனிதநேயத்துடனும், ஆன்ம உணர்வுடனும் நடந்துகொள்ளவும், நல்ல செய்திகளை தனது திரைப்படம் மூலம் சொல்லுப்பவர் நம் தலைவர் மட்டும்தான். ஆகையால்தான் அவரை நாம் நம்மில் ஒருவராக நேசிக்கின்றோம்.

    அவர் படத்திற்காக சொன்ன வார்த்தைகளில் எத்தனை விதமான பரிணமங்கள் என்று அன்று உணர்தேன். நிகழ்ச்சியை ரசித்தும், சிந்தித்தும் பார்த்தேன்.

    ஒவ்வொரு dialogue எப்படி மக்களால் ஏற்றுகொள்ள படுகிறது, என்னென்ன அர்த்தங்கள் உள்ளது என உணரமுடிந்தது.

    இது தலைவர் அர்களால் மட்டுமே சாத்தியம். ஆகாயல்தான் அவர் விழாக்களில் பேசும் வார்த்தைகளும், முக்கியத்தும் பெறுகின்றது.

    நல்லவர்கள் சொல்லும் வார்த்தைக்கு என்றும் மதிப்பு உண்டு என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்ச்சி அமைவதற்கு காரணமான வசனகர்தகளுக்கும், நூலாக வழங்கிய திரு பி.சி.பி. மற்றும் திரு கிட்டி அவர்களுக்கும், ராஜ் டிவி நிறுவனத்திற்கும், நமது தளத்திற்கும் அணைத்து ரசிகர்கள் சார்பாக நன்றிகள் சொல்லிகொள்கிறேன்.

    வரும் காலத்தில் நமது தலைவரின் வார்த்தைகள் மேற்படிப்பில் ஆராய்சிக்காக (Research and thesis ) எடுத்துகொள்ளபடும் என்பது நிஜம். இப்படிப்பட்ட தலைவருக்கு நாம் ரசிகர்கள், தொண்டர்கள் அவர் வழி நடப்பவர்கள் என்பதில் மிகவும் சந்தோசம்.

    தலைவரின் எண்ணப்படி இந்தியாவும் விரைவில் வல்லரசாக, அமைதியும், வளமும் உள்ள நாடாக உருவாக எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திப்போம்.

    நன்றியுடன்
    ப.சங்கரநாராயணன்

  9. Anonymous says:

    நிகழ்ச்சியில் பங்குபெற்றார் விக்ரம் என்னும் தள வாசகர் ஒருவர். சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான இவர் இந்த நிகழ்ச்சியில் தாம் பங்கு பெற்ற அந்த பரவச அனுபவத்தை விளக்கி நமக்கு மெயில் அனுப்பியிருக்கிறார்.

    Thanks a lot Sundar Anna…. ..எல்லா புகழும் தலைவருக்கே !!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates