









You Are Here: Home » Moral Stories » ‘நன்றி’ மட்டும் போதுமா? – நினைத்தேன் , எழுதுகிறேன் – 1
பொதுவாக எனது தனிப்பட்ட விஷயங்களை, அனுபவங்களை இந்த தளத்தில் நான் அதிகம் எழுதுவதில்லை. கடந்த பல வருடங்களாக இதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இனி சில விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். எவரும் தவறாக எண்ண வேண்டாம்.
நினைத்தேன், எழுதுகிறேன் என்ற தலைப்பில் இவை வெளிவரும். இது போன்ற விஷயங்களை தனியாக பிளாக் ஆரம்பித்து எழுதுவதே உசிதம். இருப்பினும், அப்படி துவங்கும் பிளாக்குகளை தொடர்ந்து பராமரிக்க முடிவதில்லை. இந்த புதிய மேடை உங்களை நிச்சயம் ரசிக்கவைக்கும். சில சமயம் சிந்திக்கவைக்கும். இந்த ஒரு பதிவு நீங்கலாக அடுத்து வரும் இது தொடர்பான பதிவுகள் நீச்சயம் நீங்கள் அனைவரும் விரும்பும் வண்ணம் அமையப்பெறும்.
சரி… விஷயத்துக்கு வருகிறேன்….
கடந்த வாரம் முழுதும் உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றுவந்தமையால் நமது தளத்தில் அப்டேட்டுகள் எதுவும் அளிக்க இயலவில்லை என்று முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். நண்பர்கள் பலர் விரைந்து குணம் பெற வாழ்த்து தெரிவித்தனர். நன்றி. நன்றி.
என்ன பெரிசா ஹாஸ்பிடல் அனுமதி? இதை இத்துனை பெரிதுபடுத்தவேண்டுமா? என்னாப்பா ஸீன் போடுறே? என்று சிலர் எண்ணக்கூடும். தொடர்ந்து பரபரப்பான பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்கள் சில நாள் வெளியுலக தொடர்பற்று (குறிப்பாக இணையத் தொடர்பற்று) மருத்துவ தனிமையில் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இதில் வேறு சில மன உளைச்சல்கள் வேறு. அனுபவிச்சங்களுக்கு தான் அது தெரியும். புரியும்.
மருத்துவமனையில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டதால் வாய் கசந்து சாப்பிட எதுவும் பிடிக்காது போய், எதை பலவந்தமாக உட்கொண்டாலும் வாந்தி எடுத்துவிடுவேன். ஆகையால் உடலில் மருந்து மாத்திரைகள் சேராமல் சிகிச்சைக்கு பின்னரும் காய்ச்சல் நீடித்தது. ஆசை ஆசையாக நாம் சாப்பிட விரும்பும் உணவு வகைகளை மருத்துவமனையில் சாப்பிட அனுமதித்தாலும் எனக்கு அவைகளை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வந்தது.
சரியாக உணவு உட்கொள்ளாததால், உடல் நலிவுற்றது. மிகவும் பரபரப்பாக ஒரு தேனியை போல், அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் என்னால் மருத்துவமனையில் ஒவ்வொரு மணித்துளியையும் கழிப்பது ஒரு வருடத்தை கழிப்பதை போலிருந்தது. இணையம் நம்மை எந்தளவு அடிமையாக்கியிருக்கிறது என்று நன்கு உணர்ந்துகொண்டேன். (நல்லவேளை நான் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகவில்லை!). பெற்றோர் அருகில் இருந்து கவனித்துகொண்டாலும் தனிமை மிகவும் வாட்டியது. உடலும் மனமும் சோர்வுற்றிருந்த நேரத்தில் எம்மை பார்க்க ஓடோடி வந்த நம் நண்பர்கள் மூலம் ஓரளவு புத்துணர்வு பெற்றேன்.
கொஞ்சம்கொஞ்சமாக உணவு உட்கொள்ள ஆரம்பித்த பிறகு மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறேன். இருப்பினும் இன்னும் சில வாரங்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை OP க்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மருத்துவர்கள் சான்றளித்த பின்னரே பணியில் மீண்டும் சேரமுடியும். அநேகமாக இன்னும் ஒரு வாரமோ இரு வாரமோ ஆகலாம்.
மருத்துவமனையில் இருந்த சில நாட்களில் கிடைத்த தனிமையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது. நான் நெடுங்காலம் யோசித்து வந்த பல விஷயங்களில் தெளிவு பிறந்தது. உரிய நேரம் வரும்போது செயல்படுத்த எண்ணியிருக்கிறேன். பார்க்கலாம். என் மீது எப்போதும் மாறாத அன்பும் அக்கறையும் கொண்டுள்ள சில மூத்த ரசிகர்கள் இது தொடர்பாக எமக்கு தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றை நன்கு ஆராய்ந்து உரியவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன்.
வீடு திரும்பியவுடன், ‘கோச்சடையான்’ குறித்து அனைவரும் முழு ஆர்வத்தில் இருப்பது தெரிந்து, அதற்கேற்ற செய்திகளை சேகரித்து பதிவளித்தேன். அதில் மேற்படி மருத்துவமனை அனுமதி குறித்து கூறியிருந்தேன். இதையடுத்து நிறைய நண்பர்கள் கமெண்ட்டுகள் வாயிலாகவும், அலைபேசியிலும் நலம் விசாரித்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி. தங்கள் அனைவரின் அன்பினாலும் நான் நெகிழ்ந்துபோயிருக்கிறேன் என்றால் மிகையாகாது.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். (குறள் 92)
நண்பர்களே தங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் அன்புக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். இங்கு எமக்கு ஆதரவாக கருத்துக்களும் ஆறுதல் வார்த்தைகளும் கூறிய அனைவருக்கும் ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையில் மட்டும் பதிலுரைப்பது போதாது. உங்கள் வார்த்தைகள் நோயால் சோர்வுற்றிருந்த எனக்குள் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை. மருத்துவத்தையும் விஞ்சிய அதிசயம் இது. இயன்றவரை சுயநலமற்று உங்களை மகிழ்விப்பதே பிரதியாகும். இறைவன் அதற்குரிய ஆற்றலை எமக்கு வழங்குவானாக.
எத்துணையோ துன்பங்கள், அவமானங்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கிடையேயும் நான் இந்த தளத்தை நடத்திக்கொண்டிருப்பது உண்மையில் முகமறியா நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் கள்ளங்கபடமற்ற இந்த அன்பு ஒன்றுக்காகத் தான். எத்துனை பேருக்கு இது வாய்க்கும் சொல்லுங்கள் பார்க்கலாம்? இல்லையெனில், எனக்கு ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளுக்கு விடையாக தளத்தை என்றோ மூடிவிட்டு போயிருப்பேன்.
நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த மதிப்பு என்னை மேலும் பரிசுத்தனாக்குகிறது என்பதே உண்மை. கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றும், எதிர்நோக்கும் ஒவ்வொரு நாளையும் நன்மையையே எதிர்ப்பார்க்க பழகிக்கொண்டுவிட்டேன். என் நெருங்கிய நண்பர்கள் விரும்புவது போல, என் அன்றாட வாழ்க்கை, கடமைகள் மற்றும் பணிகளுக்கு சிறிதும் குறைவு வராமல் இந்த தளத்தை – எனக்கு சக்தியுள்ளவரை – நடத்த முயற்சிப்பேன்.
மற்றபடி அனைவருக்கும் நான் கூற விரும்புவது என்ன தெரியுமா?
ஆரோக்கியம் என்பதை, அது இருக்கும்போது எவரும் உணருவதில்லை. இந்த HEALTH என்பது ஏதோ ஓய்வெடுப்பதாலும் தூங்குவதாலும் மட்டும் கிடைக்காதுங்க. நல்ல சிந்தனை, அமைதியான மனது, பொறுமை, நிதானம், தியானம், மிதமான உடற்பயிற்சி, நல்ல சேர்க்கை, பதட்டமின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாமை, உழைப்பு, அதற்கு ஏற்ற தூக்கம், எல்லாவற்றுக்கும் மேல் சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் இப்படி பல விஷயங்களை சார்ந்ததே நமது ஆரோக்கியம். நான் இங்கு பட்டியலிட்ட இந்த முக்கிய சமாச்சாரங்கள் நமது உடலில் உள்ள ஹார்மோன்களை கட்டுபடுத்துகிறது என்பதை மருத்துவ உலகமே ஒப்புக்கொள்கிறது. மேலே சொன்னதையெல்லாம் ஒருவர் செஞ்சாலே ஆரோக்கியம் எப்போவும் உண்டு. நோயாவது கீயாவது.
சிகரெட், பான்பராக், மதுப்பழக்கம் இருப்பவர்கள் அவற்றை அடியோடு உடனே நிறுத்திவிடுங்கள். மனவுறுதியோடு இருந்தால் எதுவும் சாத்தியம். 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் ஒரு பயங்கர ஸ்மோக்கர் என்பது உங்களுக்கு தெரியுமா? புகைப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியதால் தான் நான் கண்ட உடல் ரீதியிலான முன்னேற்றங்கள் பல.
“WEALTH CAN’T BUY HEALTH. BUT HEALTH CAN ALWAYS BUY WEALTH” - சமீபத்தில் மருத்துவமனையில் நான் பார்த்த வாசகம் தான் இது. என் மீது அக்கறை கொள்ளும் அனைவரும் தாங்களும் மேற்படி விஷயங்களில் கவனம் செலுத்தி நிம்மதியும் சந்தோஷமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலே நான் சொன்னவைகளை எல்லாம் உங்களுக்கு சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். அட்லீஸ்ட் சொல்ற நாம் சிலதை ஃபாலோ பண்ணலாமேன்னு எனக்கு தோணும் இல்லையா? அதுக்கு தான் இந்த பதிவு! மொத்தத்தில் இந்த பதிவு எனக்கும் சேர்த்து தான்!
அடுத்து நம் அனைவரையும் தற்போது அச்சுறுத்தி வரும் ஒரு பிரச்னையை பற்றி பேசுவோம்…
நன்றி!
நல்ல விஷயம். தொடருங்கள். ராகவேந்திரர் அருள் என்றும் உங்களுக்கு உண்டு, எங்களின் அன்பு ஆதரவுடன்.
ஆரோக்கியம் என்பதை, அது இருக்கும்போது எவரும் உணருவதில்லை.
—-
அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று
ஜெய்
Don't worry Sundar Anna We are with you அதற்கும் மேல் GOD BE WITH US
hi sundar anna,
take care of ur health. as u said HEALTH is more precious than anything. take care of it.. all the best for ur new decisions and go ahead with it.. god will be with u.
GET WELL SOON SUNDARJI….!
FM
SANKAR S
MR.Sundar take care of your health and thank you very very much for all your update. god bless you.thank u.
உண்மைதான் ,நீங்க எதை எழுதுவதனாலும் நமது தளத்திலேயே எழுதுங்கள் ..(ஆரோக்கியம் என்பதை, அது இருக்கும்போது எவரும் உணருவதில்லை)100 விகிதம் உண்மை .
உடல் பூரண குணமாக இறைவனிடம் வேண்டுகிறேன் கடந்த 2 மாதமாக ஊரில் இல்லை அதனால் கமன்ட் பண்ணமுடியவில்லை dont worry கடவுள் இருக்கான்
Hi my dear Rajni Aficionados,
I hope everybody is doing fine n great..Enjoy your life..Life is to live with love….That's it.
***************************************
To mr. sundarji,
********************
Good on you and very happy to see you recovering good health. yes, you're absolutely right with all of your above mentioned points.
********
we don't actually cherish of what we have right now. we take all the things granted and get-going. It's like the below quote:
"we don't realize the value of certain things such as health, wealth, any relationships or any things which gives us happiness when we have it. We realize all those only in two occasions. 1. before getting them and 2. after losing them.
*********
Take care of your health well now. And then, decide now what you want out of your life and make the life meaningful. Cherish the life now. We may not have hundred things of you want to enjoy but we have thousand things for one who need them in life to live.
**************
At last I want to tell you is, do whatever but with passion and joy. Live life. Life is phenomenal. May god bless you and may joy and peace be with you always.
***********
by,
Chitti.
loving life…
Jai hind !!!
Dot..
rightly said sundarji.
get well soon.
Get well soon buddy.. Pray for your quicker recovery..
When GOD is with us, who can be against us..
Cheers..
Defiantly this post will help to many friends who is not think about their health
Get well Sooooooooooooooooooooooooooooooooooon Sundaji.
sundar,
get well soon.
Dont Worry !!!God is always with us…
உடல் நலமான பிறகு தலைவர் மீண்டும் தன வேலையில் இறங்கிவிட்டார். நிச்சயம் சாதனை படைப்பார் கடவுளின் அருளால். அதே போல் சுந்தரும் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் நம் எல்லோருக்கும் அருமையான பதிவுகளை தருவார். Health is Wealth.
/// ஆரோக்கியம் என்பதை, அது இருக்கும்போது எவரும் உணருவதில்லை. ///
ஆமாம் இதை தலைவர் கூட ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .. இந்த தருணங்கள் நமக்கு நாம் கடந்து வந்த பாதையை உணர்துக்கின்றன ! தனிமை ஒருவரின் விலை உயர்ந்த சொத்து !
இது உங்களின் மிக சிறந்த பதிவுகளில் ஒன்று ….நல்லதே செய்வோம் ..அதை நல்லா செய்வோம் !!!
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ! தத் சுகி பவ !
After all what we need:
A life which is peacefull
A body which is usefull
-Rajinikanth
Ungalathu ennangal, rasanai , patri intha ninathen eluthigiren paguthiyil eluthavum. Waiting to know these.
Wealth can't buy health, but health do it .. True words.
Take complete rest and get recovery soon na.
Trillion thanks to your hard work , time spending for it. We pray to god to give time and situation to serve us forever . Nama site ku varathu saptra, thungura mari important ayiduchu.
//6 ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் ஒரு பயங்கர ஸ்மோக்கர் என்பது உங்களுக்கு தெரியுமா? புகைப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியதால் தான் நான் கண்ட உடல் ரீதியிலான முன்னேற்றங்கள் பல.//
————————————-
super sundarji
rajesh.v
Take care sundar. Our prayers are with you. Health is wealth and its important that we maintain 5 elements of nature in our body well to make our family running. God bless.
Dear Sundarji,
Surely u get well soon, I prayed to god for ur health….
Pls don't worry sundarji, god with us….
Be happy and take right decision and go ahead ur life…
Cheers,
Balaji .V
Get well soon sundar ji
sundar anna take care of your health..
நல்லதொரு தொடக்கம்…தொடர்ந்து எழுதுங்கள் பல பதிவுகளை எதிர்நோக்கியுள்ளோம். சுவர் இருந்தால் தான் சித்திரம்! நீங்கள் குறிப்பிட்ட அத்தனை வார்த்தைகளும் சத்தியம். மிகப்பெரிய எதிர்கால திட்டங்கள், எதிர்பார்ப்புகள், கற்பனைகள் வேண்டாம்…இவை அனைத்தும் தேவை இல்லாத மன உளைச்சலை தர கூடியவை. இன்றைய தினத்தில் சிறப்பாக செயல்படுவோம், நாளைய தினத்திற்கு திட்டமிடுவோம் அவ்வளவே!
—————————————-
//மிகப்பெரிய எதிர்கால திட்டங்கள், எதிர்பார்ப்புகள், கற்பனைகள் வேண்டாம்…//
சுதாகர், நான் சொன்னதன் உட்பொருளை நீங்கள் அறியமாட்டீர்கள். நேரம் வரும்போது உங்களுக்கு புரியும்.
"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல." (குறள் 337)
என்ற குறளை அழுத்தந்திருத்தமாக நம்புபவன் நான்.
- சுந்தர்
god bless u brother .
Get well soon, Sunder! Health is wealth! Take care! God bless you and your family!
Hi sundarji,
Take care of your health.. am sure that u vl bounce back soon…
Thanks
Ganesh Abirami
hi sundarji…worry about ur healthcare…take care..praying for your quick recovery…..venkat
கெட் வெள் சூன் சார்…..
விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
GET WELL SOON Dear Sundar Anna… “ GOD IS ALWAYS WITH US” …. THANKS FOR UR ADVICE…
-RAJINIROX G.Udhay
Nice article Sundar Sir. Very true and nice words. Happy that u r recovering. Get well completely very soon. I knew how tough it was for u to take so much of medicines. Praying for ur complete recovery and good health in future. God Bless.
get well soon sundar
சீக்கிரம் பரிபூரண நலம் அடைய வாழ்த்துக்கள் நண்பரே !!
சில நாட்களாக அலுவல் காரணமாக பிரயாணத்தில் இருந்ததில் , தங்கள் படைப்புகளையும் , தங்களுக்கு நேர்ந்த இந்த உடல் நல குறைவு செய்தியும் யாம் அறியேன் .
தங்கள் அறிவுரைகளுக்கு நன்றி . அறிவுரை சொல்ல தகுதி என்பது தேவை இல்லை . நல்ல நோக்கம் ஒன்றே போதும் .
ஒருவர் துன்பத்தில் இருக்கும் போதுதான் பல வாழ்க்கை உண்மைகளை அறிய முடியும் என தலைவர் சொல்லியது உண்மைதான் !!!!
நல்ல எண்ணம் ! நல்ல பழக்கம் ! நல்ல செயல் !
இவை கொண்டு நலமாக வாழ என் நல வாழ்த்துக்கள் .
Thanks for your concern on others. Unable to speak to you as you were in hospital and taking rest to restore to normalcy. Praying for your speedy recovery to normalcy soon. May God bless you.
Get well Sundar !!!
சுந்தர்ஜி, விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
மிக அருமையான பதிவு… நல செய்திகளை அன்போடு பண்போடு பகிர்ந்துகொண்ட சுந்தர்ஜிக்கு நன்றி.. உங்கள் உடல் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.
ப.சங்கரநாராயணன்
Hello Sundarji,
Wish u a speedy recovery!!!
உங்களின் இந்த முயற்சிக்கு நான்(கள்) எப்பொழுதும் துணை இருப்போம்…
.
மாரீஸ் கண்ணன்
கொஞ்சம் வேலை பளு காரணமாக தொடர்ந்து நம் தளத்தை பார்வை இட இயலவில்லை. தங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். டேக் கேர் பிரதர்!
என்றும் அன்புடன்,
சாதிக் (மதுரை)
வெரி குட் article and sharing . நீங்க நல்ல இருகண்ணும் … !
சாரி சுந்தர் ரொம்ப நாள் நம்ம தளம் பார்கவில்லை …தொடர்ந்து டூர்
நீங்கள் வேகமாக நலம் பெற பிரார்த்திக்கிறேன். சென்னை வந்தவுடன் பேசுகிறேன் ..ஆண்டவன் நல்லவர்களி சோதிப்பான் கை விட மாட்டான் …!!!