You Are Here: Home » Featured, Flash from the Past » Photo Buzz 8: கமலின் ‘மருதநாயகம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி? உண்மை என்ன?? ‘மருதநாயகம்’ துவக்க விழாவில் ரஜினி கலந்துகொண்ட அபூர்வ புகைப்படம்!!

முந்தைய பதிவு ஒன்றில் தான் கூறியிருந்தேன்… சூப்பர் ஸ்டாரின் படம் குறித்து நம்பகமான செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவது மிகவும் சிரமமான காரியம் என்பதை. அதை மெய்ப்பிப்பது போல் ஒன்று நேற்று நடைபெற்றது. நேற்று மதியம் நண்பர் ஒருவர் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதில் கமலின் மருதநாயகம் படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்று தாம் ஒரு இணையத்தில் படித்ததாக கூறியிருந்தார். நாம் அந்த செய்திக்கான மூலத்தை ஒரு ஆங்கில இணையம் ஒன்றில், தேடிப்பிடித்தபோது நானும் உண்மை என்று நம்பிவிட்டேன்.

சரி… மாலை பதிவளிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம், அவசரப்படவேண்டாம் என்று நினைத்து ‘டுவீட்’ மட்டும் செய்துவிட்டு விட்டுவிட்டேன். ஆனால், நேற்று மாலை அந்த செய்தி உண்மையல்ல என்றும், கமல் அப்படி பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் விசாரித்தபோது தெரிந்தது. நல்ல வேளை பதிவு எதுவும் போடவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன். இப்போ புரியுதா? செய்தியை முதலில் போடுவதிலும் சங்கடம் இருக்கிறது. தாமதித்து போடுவதிலும் சங்கடம் இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி அவர்களும் கமல் அவர்களும் விமானத்தில் ஒன்றாக மலேசிய கலைநிகழ்ச்சிக்கு சென்ற பொது, அவர் அளித்த பேட்டியை தற்போது அளித்த பேட்டி போல சம்பந்தப்பட்ட மும்பை பத்த்ரிக்கை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு கமல் அவர்கள், தனது விஸ்வரூபத்துக்கு அடுத்து நடிக்கவிருப்பது ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் மட்டுமே. (சூப்பர் டைட்டில்! நாம மிஸ் பண்ணிட்டோமே…!!)

எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் தமிழ்த் திரையுலக முக்கியப் பிரமுகர்கள், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ராணி அவர்கள் தலைமையில், அக்டோபர் 16, 1997 ஆம் ஆண்டு நடைபெற்றது.

வெகு விமரிசயாக இங்கிலாந்து மகாராணியால் தொடங்கப்பட்ட இந்த படம், அப்போது தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பின்னர் நிதிச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் நின்றுபோனது. அதற்கு பிறகு இப்படத்தை தொடர கமல் அவர்கள் முயன்றபோதும் முடியவில்லை. ஆனால், இந்தப் படத்தை எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் எடுத்துவிட முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். வாழ்த்துக்கள்.

மேற்படி துவக்க நிகழ்ச்சியில், இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன், அவர்கள் தனது துணைவி கமலா அம்மாள், ஆகியோரை கமல் அறிமுகப்படுத்தி வைக்கும் பொன்னான காட்சியை தான் இந்த அரிய புகைப்படத்தில் பார்க்கிறீர்கள்.

சிவாஜி அவர்களின் கம்பீரத்தையும், சூப்பர் ஸ்டாரின் பணிவையும், கமல் அவர்களின் பூரிப்பையும் ஒருங்கே இந்த படத்தில் காணலாம். இங்கே ராணியின் பார்வை நம் ராஜா பக்கம் இருப்பதையும் பாருங்கள்.

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மருதநாயகம்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கமல், கமலின் மகள் அட்சரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

(காலங்கள் மாறிவிட்டது. ஆட்சிகள் மாறிவிட்டது. ஆள்வோர்கள் மாறிவிட்டனர். மாறாதது நம் தலைவரின் புன்சிரிப்பு மட்டுமே!)

——————————————————-
Check our other other Photo Buzz articles from our archives at the following link:

http://onlysuperstar.tamilmovieposter.com/?s=BUZZ

——————————————————-

[END]

16 Responses to “Photo Buzz 8: கமலின் ‘மருதநாயகம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி? உண்மை என்ன?? ‘மருதநாயகம்’ துவக்க விழாவில் ரஜினி கலந்துகொண்ட அபூர்வ புகைப்படம்!!”

 1. **Chitti** **Chitti** says:

  wonderful post..Thanks for letting us know this..

  ****************

  Both our Super Star and his arch rival Kamal are great persons now I believe. And more over, Rajini could have learned of the habit of learning all the things, might be from Kamal. Dear Friends, this is just my guess. So, no need to back turn with fire reply against me.

  ************

  However, both should live long life and has to give best cinemas to us and in addition to our thalaivar is, he has to come out with god's grace and had to make Tamil nadu well against of any other state or country in this world to get to know it as he said earlier…(like he did through 'Robot')..

  ******************************

  by,

  **Chitti**.

  Loving life.

  Jai Hind!!!.

  Dot..

 2. chithamparam chithamparam says:

  Thank you for clarifying

 3. manoj manoj says:

  Good pics!!! Thalaivar looks so good!!!

  Regarding both joining hands. Its very tough and not possibile…

  But as sundar ji said , good title missed by us.. This title would have more apt for thalaivar!!!

  Joining hands with oscar films.. heard shankar is going to direct. I am not sure if it is true !!!

 4. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  As usual ur ending lines are superb na..

 5. vasi.rajni vasi.rajni says:

  தலைவர் இனிமேல் சினிமா செய்து பணமோ, புகழோ, அந்தஸ்தையோ பெற வேண்டிய அவசியம்இல்லை.
  இதனை அவர் D40 நிகழ்ச்சியிலேயே கூறிவிட்டார்
  .
  கடந்த ஏப்ரல் மாத மத்தியில் பாஜக தலைவர் நிதின் கட்காரி தலைவரை சந்தித்து ஒரு இனிப்பான செய்தியை வெளியிடார். http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10811
  .
  ஆனால், விதியின் விளையாட்டு, அடுத்த சில நாட்களின் தலைவர் நோய்வாய்பட்டு இறைவன் அருளால் நமக்கு மீண்டும் கிடைத்து விட்டார்.
  .
  ஆனால், அடுத்து தலைவர் செய்ய போகும் விஷயம் (சினிமா அல்லது பொதுவாழ்க்கை) மிகவும் குழப்பமான நிலையிலேயே உள்ளது.இதை நினைக்கும் பொழுதுதான் நமது துரதிஷ்டவாசத்தை எண்ணி மனம் விரக்தியடைகிறது.
  .
  மக்கள் திலகத்தால் செய்ய முடிந்த அரசியல் புரட்சியை தலைவர் நிச்சயம் செய்ய முடியும். சமிபத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி இடையே நடந்த விஷயத்தில் தமிழக மக்கள் விரக்தியடந்துள்ளனர்.
  .
  3 ஆம் அணியை தேடியும் சரியான தலைவனை தேடியும் மக்கள் தவம் கிடக்கின்றனர். இதற்க்கு வரத்தை இறைவன் விரைவில் கொடுக்க வேண்டும்.
  .
  rajnikanth will rule tamil nadu

 6. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Hi Sundar, I like the finishing of the last sentence. You could have added Thalaivar's simplicity, humbleness etc.

 7. David Baasha David Baasha says:

  எதிலும் நிதானமாக உண்மையை சொல்ல நினைக்கும் உங்கள் மனதின் ஆரோக்கியம் தான் உடலின் ஆரோக்கியம்.

  உண்மை என்றும் மாறாது அதுபோல் தலைவரின் புண் சிரிப்பும் மாறாது.உங்கள் மனதிற்கு, ஒரு குறையும் வராது.

 8. Shiva Shiva says:

  Superp..Thalaiver gonna rock again..

 9. Sudhagar_US Sudhagar_US says:

  இந்த செய்தி பொய்த்து போனதில் எனக்கு நிம்மதியே!

  தலைவரும், கமழும் சேர்ந்து நடிக்க எனக்கும் ஆசை தான் ஆனால், அது இருவருக்கும் சம பலம் படைத்த கதாபாத்திரமாக இருக்க வேண்டும். 'மருதநாயகம்' பொறுத்தவரை அது கண்டிப்பா நடக்க வாய்ப்பு கிடையாது. அப்படியே பின்னொருநாளில் நட்புக்காக தலைவர் நடிக்க ஒப்பு கொண்டாலும் அதில் அவர் வெறும் வியாபார உத்திக்காக மட்டுமே பயன்படுத்தபடுவார்.

  'தலைவன் இருக்கிறான்' சூப்பர் ஸ்டாருக்கு மிக மிக பொருத்தமான தலைப்பு தான், அதே போல 'தொப்பை' சீனி(பவர் ஸ்டார் :D ) அடுத்து கடிக்க….சாரி நடிக்க போகும் பட தலைப்பும் இதே ரகம் 'படை தலைவன்'.

 10. mani mani says:

  என் நண்பர் ராஜேந்திரகுமார் இணையதளத்தில்
  எழுதியது. சூப்பர் ஸ்டார் அடிக்கடி கடவுள் இருக்கிறார் என்பது பற்றி கூறுவார்
  ஆகவே என் நண்பர் எழுதியதை இங்கு copy செய்துள்ளேன்.

  ராஜேந்திரகுமார்..

  கடவுள் எங்கே இருக்கிறார்?

  நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
  “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”
  “நிச்சயமாக ஐயா..”
  “கடவுள் நல்லவரா?”
  “ஆம் ஐயா.”
  “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”
  “ஆம்.”
  “எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”
  (மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
  “உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”
  “ஆம் ஐயா..”
  “சாத்தா‎ன் நல்லவரா?”
  “‏இல்லை.”
  “எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”
  “கடவுளிடமிருந்துதா‎ன்.”
  “சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”
  “ஆம்.”
  “அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”
  (மா‎ணவர் பதில் சொல்லவில்லை)
  “இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”
  ……“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
  …….
  “ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
  “ஆம் ஐயா..”
  “நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”
  “ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
  “ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
  (‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
  “ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”
  “நிச்சயமாக உள்ளது.”
  “அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”
  “நிச்சயமாக.”
  “இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”
  (வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
  “ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”
  (குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
  “சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”
  “ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”
  “நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”
  “சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”
  “ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது
  “பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
  “ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
  அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
  இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏
  “சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
  “”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
  “உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
  (பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
  “அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
  (மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
  “இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
  (வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
  “யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”
  “அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”
  “மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
  (மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)
  “நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி
  “அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
  இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

  ———————————————-
  Weldone. Amazing. I have eariler read it in a blog. Anyway thanks for presenting this amazing conversation yet again.
  - Sundar

 11. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

  தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் மட்டுமே. (சூப்பர் டைட்டில்! நாம மிஸ் பண்ணிட்டோமே…!!)

  — அட ஆமா …

  -என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 12. sathish sathish says:

  According to sources a popular producer offers upto 30 crores for the movie kochadiyaan telugu rights ,,,thalaivaaaaa

 13. Anonymous says:

  ராஜேந்திரகுமார் அவர்களின் பதிவு மிக மிக அருமை.

 14. Anonymous says:

  "தலைவன் இருக்கிறான்" நாம் மிஸ் பண்ணி விட்டோம்!! பரவாஇல்லை அதை விட சூப்பரான ஒன்று நமக்கு கிடைக்கும்!!! இரண்டு போட்டோவும் அரியது தான்!!! ஆனால் இரண்டாவது போட்டோவை இப்போது தான் நான் பார்கிறேன்!!! "கருப்பு வைரம்" டா தலைவர்!!

 15. Sankaranarayanan Sankaranarayanan says:

  திரு மணி அவர்கள் எழுதிய திரு ராஜேந்திரகுமார் அவர்களின் பதிவு மிகவும் அருமை.

  நன்றி……

  ப.சங்கரநாராயணன்

 16. M Jegan Mano Raj M Jegan Mano Raj says:

  ராஜேந்திரகுமார் அவர்களின் பதிவு மிக மிக அருமை.

  ஜெகன் மனோ ராஜ், தூத்துக்குடி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates