









You Are Here: Home » Featured, Flash from the Past » “ஸ்ரீ ராகவேந்திரர் கேட்டதெல்லாம் கொடுப்பாரா?” சூப்பர் ஸ்டார் கூறிய பதில் என்ன? (இன்று ஸ்ரீ ராகவேந்திரர் அவதார தினம்!)
இன்று (29/02/2012 புதன்கிழமை) குருவுக்கெல்லாம் குருவாக விளங்கும், மகாகுரு, கலியுக தெய்வம் மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் அவதாரத் திருநாள்.
இன்று இது குறித்து ஏதாவது பதிவு ஏதாவது போடலாமா என்று நினைத்தேன். ஆனால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. மனதில் பல்வேறு சஞ்சலங்கள். குழப்பங்கள். இந்நிலையில், கரூரிலிருந்து நம் தள வாசகர் நண்பர் மணிகண்டன் என்பவர் ஃபோன் செய்து, “சார்… இன்னைக்கு என்ன விஷேஷம் தெரியுமா?” என்று கேட்டார். “ஒ… தெரியுமே. ராகவேந்திர சுவாமிகளோட அவதாரத் திருநாள் தானே….?” என்றேன். “ஆமாம் சார். நம்மை சைட்டுல இது பற்றி நிச்சயம் ஒரு பதிவு போடணும் சார் நீங்க” என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார். அவர் கூறியதை ஸ்ரீ ராகவேந்திரரின் கட்டளையாகவே ஏற்று இந்த பதிவை அளிக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும் ஸ்ரீ ராகவேந்திரருக்கும் உள்ள தொடர்பை பற்றி நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. ‘தாய்’ வார இதழில் (சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு) சூப்பர் ஸ்டார் ராகவேந்திர சுவாமிகள் குறித்து தொடர் எழுதி வந்தார். பல வாரங்கள் எழுதி வந்த அந்த தொடரில் நிறைவு செய்யும்போது அவர் குறிப்பிட்டது என்ன தெரியுமா? “அவர் இல்லையேல் நான் இல்லை” என்பது தான்.
சூப்பர் ஸ்டார் அந்த தொடரில், ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவற்றை குறிப்பிட்டு, ராகவேந்திரரின் பெருமைகளை பறைசாற்றியிருந்தார். அதை பார்த்த வாசகர் ஒருவர், “உங்க ராகவேந்திரர் கேட்டதையெல்லாம் தருவாரா? அந்த சக்தி அவருக்கு உண்மையில் இருக்கிறதா?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார், “கேட்டதையெல்லாம் கொடுக்குறதுக்கு அவர் ஒன்னும் மந்திரவாதியில்லை. மகான். நமக்கு எது கொடுக்கணும், எது கொடுக்கக்கூடாதுன்னு அவருக்கு தெரியும்” என்றார் ஷார்ப்பாக.
(சூப்பர் ஸ்டாருக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள மிகப் பெரிய புகைப்படம் இது!)
தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து சிவாஜி ராவை தடுத்தாட்கொண்டு, காப்பாற்றி, அவர் மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து சென்னைக்கு ரயிலேற்றி அனுப்பியதில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பெறும் பங்குண்டு. அன்று இரவு சூப்பர் ஸ்டார் கனவில் கண்ட ராகவேந்திரரின் மந்த்ராலய காட்சியும், பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் மந்த்ராலயத்துக்கு நேரில் சென்றபோது கண்ட காட்சியும் ஒன்றாக இருந்தனவாம்.
இன்றும் கூட, நினைத்தபோதெல்லாம் மாறுவேடத்தில் சூப்பர் ஸ்டார் மந்த்ராலயம் சென்றுவருகிறார். பக்தர்களோடு பக்தராக அந்த மகானை தரிசித்து வருகிறார்.
இன்று கலியுக தெய்வமாய் கற்பக விருட்சமாய் வீற்றிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் கேட்டதை கொடுத்து வருகிறார். உங்கள் பக்தி தூய்மையாகவும், உறுதியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேட்டது நிச்சயம் கிடைக்கும்.
அவர் மந்த்ராலயத்தில் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் பலப்பல.
இயக்குனர் சங்கம் சார்பாக நடைபெற்ற D40 விழாவில், இன்னும் பல ஆண்டுகள் கழித்து நீ நடித்த படம் மக்கள் மனதில் இருக்குமென்றால் அது எந்தப் படம் என்று கே.பி. அவர்கள் கேட்டபோது, ரஜினி சொன்னது : ஸ்ரீ ராகவேந்திரர்.
உங்களுக்கும் ஏதாவது தாங்க முடியாத பிரச்னையா? துன்பமா? உங்களை அந்த மகானிடம் ஒப்படையுங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையாயிருங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை!
[END]
நானும் ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு மேலாக ராகவேந்திரரை கும்பிட்டு வருகிறேன் அதன் பின் மனதில் பெரிய நம்பிக்கை பிறந்துள்ளது
இந்த காலத்தில் கடவுள் நேரில் தோன்றி வரம் தருவதில்
மனிதர் ரூபத்தில்
அவர்களில் செயல்கள் மூலமாக தான் சொல்ல வேண்டியதை அனைவர்க்கும் தெரியபடுதிகிறார்
ஜி,
வணக்கம். மிக அருமையான பதிவு வெளியிட்டதற்கு சுந்தர் ஜிக்கும், முதல் காரணமாக இருந்த நண்பருக்கும், வெளி இட மூல காரணமாக இருந்த பகவானுக்கும் நன்றிகள் பல. சுந்தர் ஜி, உங்களின் உடல் பூரண நலம் பெற எல்லாம் வல்ல பகவானை இறைஞ்சுகிறேன்.
அன்புடன்
சங்கர்
நாத்திகவாதியாக இருந்த எனக்கு கடவுளை அறிமுகப்படுத்தியதே தலைவர் தான்…! சந்திரமுகி பட வெற்றிவிழாவில் தலைவர் பேசிய உரை , என்னுள் கடவுள் பற்றிய விதையை ஆழமாக ஊன்றிவிட்டது…!
****
“கேட்டதையெல்லாம் கொடுக்குறதுக்கு அவர் ஒன்னும் மந்திரவாதியில்லை. மகான். நமக்கு எது கொடுக்கணும், எது கொடுக்கக்கூடாதுன்னு அவருக்கு தெரியும்”
-
கேட்டது கிடைக்காமல் போனால் மனம் வருந்துபவர்களுக்கு சரியான மருந்து,…..நன்றி தலைவா !
***
//தாய்’ வார இதழில் (சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு) சூப்பர் ஸ்டார் ராகவேந்திர சுவாமிகள் குறித்து தொடர் எழுதி வந்தார். //
-
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது….படிக்கணும் போல் தோன்றுகிறது…!
***
"தாயும் நீயே தந்தையும் நீயே !
உயிரும் நீயே உண்மையும் நீயே !
இறைவா !
வெள்ளத்தில் வீழ்ந்தவரை
கரையேற்ற சக்தி கொடு !
பள்ளத்தில் கிடப்பவரை
மேடேற்ற சக்தி கொடு !
தீமைக்கும் கொடுமைக்கும்
தீ வைக்க சக்தி கொடு !
வறுமைக்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு !
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு !
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு ! "
—
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
குரு வாரத்தில் (வியாழக்கிழமை) குருவை பற்றி படித்ததே பெரும் பாக்கியம்.
நன்றி
ப.சங்கரநாராயணன்
Fantastic article sundarji….
Take care ur health…..God with us…
Cheers,
Balaji .V
YA EXCELLENT ARTICLE..
maha guru oda asirvadam namma THALAIVARku iruku:)..
i have realised dis..
23 rd feb i went to raghavendra temple..on the way to office i went by thalaivar s area only..immediately i felt i should give him the prasadam..then went and gave it to the security people and told to give it to thalaivar..(chance eh illa…THALAIVARKU thanaga ellam nadakudu..nadakum..)..
as u said sundar anna RAGHAVENDRA SWAMI kita if v give ourselves then he wil change our lives..experienced &experiencing it..
மந்திராலயம் சென்று மகான் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்து இருக்கிறேன்….
அந்த அனுபவம் சொல்லி புரியாது… அனுபவித்தால் தான் தெரியும்….
இதே போன்றதொரு அனுபவம் காசி சென்றிருந்த சமயம் கங்கையில் குளித்த போதும் எனக்கு ஏற்பட்டது…..
——————————-
Great Gopi. You are blessed.
- Sundar
God bless to all. Ippo full a recover akitingala na? Take care.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமக!! இந்த மந்திரம் நம்மை காப்பாற்றும், சுந்தர் அவர்களே , பதிவை வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி !! அவதார தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் மகான்களுக்கெல்லாம் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்.
என்றும் அன்புடன்
ஸ்ரீமணிகண்டன் கோவை
Dear Sundar,
Will it be possible to upload the series that Rajini wrote our Guru Swamy Raghavendra Swamy in Thai magazine ? This would be great service for us…
—————————————
I had those magazines. But lost during house shifting few years back. Anyway will try.
- Sundar
பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்யதர்மாய ரதாயச பஜதாம்
கல்ப விருக்ஷாய நமதாம்
காமதேனுவே
குருவே சரணம்
Thanks Sundarji… Re-publishing those details would really help our Guru's devotees and thalaivar fans
மிக மிக அருமையான பதிவு…
***************************
"அவர் கூறியதை ஸ்ரீ ராகவேந்திரரின் கட்டளையாகவே ஏற்று இந்த பதிவை அளிக்கிறேன்."
**********
@ sundarji, whatever question you ask, you will always receive the answer (courtesy: The Power, book by Rhonda Bryne)..
**********
நான் இந்த பிறவியில் சின்ன பேறு பெற்றுள்ளேன். எனவேனில், நான் எனது சிறு வயது முதல் வளர்ந்தது 'புவனகிரி'யில் தான். புவனகிரியை பற்றி ஒரு சில ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
*********************
'புவனகிரி'யில் தான் ஸ்ரீ ராகவேந்த்ரர் பிறந்தார். இப்போது சுவாமிகளுக்கு என்று அங்கு (பிறந்த இடத்தில்) தனி கோயில் உள்ளது. இது மந்த்ராலயம் போன்ற சிறப்பு மிக்க ஸ்தலம் ஆகும் (ராகவேன்றார் பக்தர்களுக்கு). ஏனெனில், மந்த்ராலயத்தை தவிர மற்ற எல்லா ஆலயங்களும் (700னும் ) மடங்கள் தான்.
தவிர, இந்த ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டியது, சாஷாத் நம் 'சூப்பர் ஸ்டார்' தான். இன்னும், உலகெங்கும் இல்லாத அளவிற்கு, இங்கு சுவாமிகளுக்கு மிக உயர சிலை வைப்பது குறித்து சமிபத்தில் ஆலோசனை செய்து வருகிறார்கள்…
*********************
சுவாமிகள் மீது பக்தி உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் வாழ்வில் சுபங்கள் நடக்கும். இது புதுச்சேரியில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ளது.
*******************
எல்லோருக்கும் ஸ்ரீ ராகவேந்த்ரரின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**************
**சிட்டி**.
ஜெய் ஹிந்த்!!!
Dot.
சுந்தர், தாய் தொடரின் பேர் அவர் இல்லமால் நான் இல்லை என்பது தான்.. நான் பல வருடம் போற்றி பாதுகாத்து வந்த அந்த பொக்கிஷத்தை (பேப்பர் கட்டிங்) தொலைத்து (சில வருடத்துக்கு முன் தான்) விட்டேன். உங்களால் அது ஒரு காப்பி கிடைத்தால் மிக்க மகழ்ச்சி அடைவேன்.. கெடைக்குமா..
இப்படிக்கு தலைவர் தொண்டன்
ராம்ஜி
மண்ணில் வாழ்ந்த மகான் நம் ஸ்ரீராஹவேந்த்ரச்வாமி