You Are Here: Home » Featured, VIP Meet » 20 முதல் 60 வரை – சூப்பர் ஸ்டாரின் வளர்ச்சி, எளிமை, மக்கள் செல்வாக்கு etc.etc. — திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களுடன் ஒரு சந்திப்பு! PART 1

ஞ்சு அருணாச்சலம் அவர்களை பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டவர். இசைஞானி இளையராஜாவை ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தி தமிழ் திரையுலகின் தலையெழுத்தை மாற்றியவர். சூப்பர் ஸ்டாரை வைத்து ஆரம்ப காலம் முதல் 90களின் மத்தி வரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர். அவருடன் நிறைய படங்களில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர். சூப்பர் ஸ்டார் பெரிதும் மதிக்கும் மூத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் அவரின் குடும்ப நண்பர். நலம் விரும்பி.

ஓரளவு ஓய்வுக்கு பின்னர் எனது உடல் நலம் ஓரளவு தேறியதை அடுத்து, ஒரு மாற்றம் வேண்டி இவரது சந்திப்பிற்கு முயற்சி செய்தேன். நமது முயற்சிக்கு வெற்றி கிட்டியது. தி.நகரில் உள்ள அவரது ஃபிளாட்டில் சந்திக்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன்னர் கிடைத்தது. நமது தள வாசகர்கள் & நண்பர்கள் அஷ்ரப் அலி மற்றும் பாலுமகேந்திரன் ஆகியோருடன் சென்றிருந்தேன்.


குறித்த நேரத்தில் அவரது இல்லத்திற்கு சென்றவுடன், இன்முகத்துடன் நம்மை வரவேற்றார். நண்பர்களை அவரிடம் அறிமுகம் செய்துவைத்து, நமது தளம் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் கூறி பூங்கொத்தை அளித்தோம். பின்னர் சௌகரியமாக எங்களை அமரச் செய்தார். வரவேற்ப்பறையில்
நமது சந்திப்பு நடைபெற்றது.

எங்களது கேள்விகளுக்கு சரளமாக பதிலளித்தார். கேள்வி-பதில் போலல்லாமல் ஒரு உரையாடல் (CHAT) போல எங்கள் சந்திப்பு அமைந்தது.  சில கேள்விகளுக்கு அவர் பதில் கூறும்போது (முதுமை காரணமாக) சற்று DEVIATE ஆனாலும் குறுக்கீடுகள் இன்றி, அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டோம். ஒரு மூத்த சகோதரனை போல சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை அவன், இவன் என்றே சந்திப்பு நெடுக குறிப்பிட்டார். அதில், அவரது அன்னியோன்ய அன்பு தான் வெளிப்பட்டது.


தற்போது திரையுலகம் செல்லும்போக்கு, அவரது மனதில் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்துகொள்ளமுடிந்தது. மக்களின் பல்ஸ் தெரிந்த, இண்டஸ்ட்ரியின் நெளிவு சுளிவுகள் ஓரளவு அறிந்த இவரைப் போன்ற சீனியர் தயாரிப்பாளர்கள் இன்றைய சூழலில் தயாரிப்பை விட்டு ஒதுங்கியிருப்பது திரையுலகிற்கு தான் நஷ்டம். குறிப்பாக ரஜினி ரசிகர்களான நமக்கு பெரும் நஷ்டம்.

நீங்கள் அவரை சந்தித்தால் அவரிடம் கேட்க விரும்பும் அத்துணை கேள்விகளையும் நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே, சுவாரஸ்யத்துக்கு, நெகிழ்ச்சிக்கு இந்த தொகுப்பில் பஞ்சமிருக்காது.

இன்றைய இளைஞர்களுக்கும் தற்கால ரசிகர்களுக்கும் அவர் சொல்ல விரும்பும் அறிவுரை, அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.

இந்த சந்திப்பு இரண்டு தொகுப்புகளாக தயார் செய்யப்பட்டுள்ளது. முதல் தொகுப்பு தற்போது வெளியிடப்படுகிறது. இரண்டாம் தொகுப்பு விரைவில் வெளியிடப்படும்.

சந்திப்புக்கு பொருத்தமான வீடியோ கிளிப்புகளும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பதிவு குறித்தும், சந்திப்பு குறித்தும் உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும். நிறை, குறைகளை தயங்காது சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்ளவும், சுறுசுறுப்பாக அடுத்த சந்திப்பிற்கு தயாராகவும், உங்கள் கருத்துக்கள் உதவும்.

சந்திப்பின் போது, உடனிருந்த நண்பர்கள் அஷ்ரப் அலி மற்றும் பாலுமகேந்திரன் ஆகியோருக்கு நன்றி.

- சுந்தர்

—————————————————————————————————-

ரஜினியுடன் முதல் சந்திப்பு

நாம் : நீங்கள் முதன் முதலில் ரஜினி அவர்களை சந்தித்தது எப்போது?

திரு.பஞ்சு அருணாச்சலம் : ‘கவிக்குயில்’ (1976) படத்தில் ரெண்டு ஹீரோவில் ஒரு ஹீரோவா ரஜினி நடிச்சிருப்பார். அப்போ தான் அவரை சந்திச்சேன். ‘கவிக்குயில்’ ஷூட்டிங் ஸ்பாட் தான் நான் அவரை முதன் முதலில் சந்திச்சது.

கவியரசு கண்ணதாசன் & ரஜினி

நாம் : நீங்கள் கவியரசு கண்ணதாசனின் வலது கரமாக இருந்தீர்கள். கவியரசு ரஜினி அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பு குறித்து ஏதாவது சம்பவம், அல்லது கவியரசுவின் வாக்கு ஏதாவது உண்டா?

திரு.பஞ்சு அருணாச்சலம் : கவிஞர் (கண்ணதாசனை இப்படித் தான் குறிப்பிடுகிறார் பஞ்சு) ரஜினி மீது நல்ல மதிப்பும் பாசமும் வைத்திருந்தார். ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு கவிஞர் வநதிருந்தார். அவர் தான் அந்த நிகழ்ச்சிக்கு CHIEF GUEST. அப்போது படத்தில் பணியாற்றிய இளையராஜா உட்பட அனைவரையும் நல்ல முறையில் வாழ்த்தி பேசினார். குறிப்பாக ரஜினி பற்றி நன்றாக பேசினார். கவிஞர் என்ன பேசினார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நன்றாக பேசினார். அவரது உரையில் நெகிழ்ந்துபோன ரஜினி, அவர் காலில் விழுந்து ஆசிபெற்றார். எனக்கு தெரிந்து ரஜினி முதன் முதல்ல கால்ல விழுந்து ஆசி வாங்கி ஷீல்டு வாங்கிக்கிட்டது கவிஞர் கிட்டே தான்.

நாம் : கவிஞர் வேறு ஏதாவது ரஜினி அவர்கள் குறித்து தீர்க்க தரிசனமாக ஏதாவது கூறினாரா?

திரு.பஞ்சு அருணாச்சலம் : இல்லை. கவிஞர் ஒரு போதும் எதிர்காலத்தை பற்றி பேசமாட்டார். அப்பப்போ என்னவோ அதை பற்றி தான் பேசுவார். ஒரு வளர்ந்து வரும் நடிகரை எந்தளவு பாராட்ட வேண்டுமோ அந்தளவு தான் அவர் ரஜினியை பாராட்டினார். அதற்கு மேல் பேசினால், ஜால்ரா அடிக்கிற மாதிரி ஆயிடும். அப்போல்லாம் மேடையில் ஒருவரை அனாவசியமாக புகழ்ந்து பேசமாட்டார்கள். இப்போது தான் அந்த கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. ஒருவரை புகழ்ந்து பேசி புகழ்ந்து பேசி கடைசியில் மார்கெட்டையே  காலி செய்துட்டு போய்டுறாங்க.

அப்போல்லாம் மேடையில் ஒருவரை அனாவசியமாக புகழ்ந்து பேசமாட்டார்கள். இப்போது தான் அந்த கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. ஒருவரை புகழ்ந்து பேசி புகழ்ந்து பேசி கடைசியில் மார்கெட்டையே  காலி செய்துட்டு போய்டுறாங்க.

நாம் : நான் ஏன் இதை கேட்டேன்னா சார்… மற்றவர்கள் வாக்கிற்கும் கவிஞன் வாக்கிற்கும் வித்தியாசம் உள்ளது. கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள். அதுவும் கண்ணதாசன் போன்ற தெய்வக் கவிஞர்களின் வாக்கு நிச்சயம் பொய்க்காது. அதனால் தான் கேட்டேன்.

திரு.பஞ்சு அருணாச்சலம் : நல்லா தான் பேசினார் கவிஞர். “ரஜினி பற்றி என்கிட்டே நிறைய சொல்லியிருக்காங்க. அவர் பெரிய ஸ்டைல் நடிகர் அது இதுன்னு. அவர் படம்லாம் நான் நிறைய பார்த்ததில்லே. இந்த படம் தான் பார்த்தேன். நல்லா அருமையா உணர்ச்சி பூர்வமா ஒரு முதிர்ச்சியடைந்த நடிகரா நடிச்சிருந்தார். நல்லா வருவார்.” அப்படின்னு கவிஞர் சொன்னார். அது எனக்கு நல்லா ஞாபகமிருக்கு.

காரணம் அந்தப் படத்துக்கு முன்னாடி ரஜினி பத்து பன்னிரண்டு படம் நடிச்சிருந்தாலும், அந்த படத்திலெல்லாம் நடிப்பதற்கு அவருக்கு பர்ஃபார்மன்ஸ் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கலே. இந்தப் படத்துல அவரோட நடிப்பு திறமையை காண்பிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சது. ஆக்ட் பண்றதுக்கு ஸ்டைல் பண்றதுக்கு இதுக்கெல்லாம் அவருக்கு முன்னாடி வாய்ப்பிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் வருவது போல, ஃபீல் பண்ணி பர்பார்மன்ஸ் பண்றதுக்கு வேற எதுலயும் அந்த காலகட்டம் வரைக்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலே. அப்புறம் அவருக்கு ஸ்கோப் கிடைச்ச ஒரு படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

நூறு படம் பண்ணினார்னா அதுல கிட்டத்தட்ட 85 படங்கள் ஆக்க்ஷன் படங்கள் தான். பர்ஃபாமன்ஸை காட்ட வாய்ப்பு கிடைச்சது சுமார் 15 படங்கள் தான்.

நாம் : ‘புவனா ஒரு கேள்வுக்குறி’ ரஜினிக்கு இப்போ நீங்கள் பார்க்கிற ரஜினிக்கும் என்ன வேறுபாடு?

திரு.பஞ்சு அருணாச்சலம் : ‘கவிக்குயில்’ படத்தப்போ எனக்கு ரஜினி சார் அவ்வளவா பழக்கமில்லே. சிவக்குமார் சார் தான் பழக்கம். நானும் ரஜினியும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும்போது ஜஸ்ட் விஷ் பண்ணிக்குவோம். அப்போ ‘மூன்று முடிச்சு’ படம் ரஜினி நடிச்சிட்டிருந்தார். என்கிட்டே வந்து கேட்டார்…. “சார் நானே பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. டப்பிங் பண்ண வைக்கலாமா? உங்க ஒப்பீனியன் என்ன?” அப்படின்னு கேட்டார். நான் சொன்னேன், “உன் சொந்தக்குரல்ல பேசு. டப்பிங் பண்ணி பேசினா முழு உணர்வு வெளிப்படாது. கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பரவாயில்லே. கத்துகிட்டு நீயே பேசு. அப்புறம் அதுவே ஒரு ஸ்டைலாயிடும்” அப்படின்னேன். அதுக்கப்புறம் ரஜினி அவரோட படத்துக்கு அவரே டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டார். அதுக்கு முன்னாடி அவன் டப்பிங் பண்ணினான என்பது குறித்து எனக்கு நினைவில்லே. ஆனா ‘காயத்ரி’ படத்துல இருந்து அவனே சொந்தக் குரல்ல பேச ஆரம்பிச்சிட்டான். அவனுக்கு அதுல ரொம்ப சந்தோஷம்.

சிங்கப்பூர் நைட் லைப்ஃபை என்ஜாய் செய்த ரஜினி

நாம் : ரஜினி அவர்களுடன் உங்கள் நட்பு நெருக்கமானது எப்போது? அதாவது உங்கள் இதயத்தில் அவர் இடம் பிடித்தது எப்போது?

திரு.பஞ்சு அருணாச்சலம் : அப்புறம் நெருங்கிப் பழகுறதுக்கு எப்போ வாய்ப்பு கிடைச்சதுன்னா, ‘ப்ரியா’ ஷூட்டிங்கல தான்.  மொத்தம் 30 நாள் ஷூட்டிங். ஒரே ரூம்ல தான் தங்கினோம். ஒண்ணா சாப்பிடுறது, டிஸ்கஸ் பண்றது வெளியே சுத்தி பாக்குறது இப்படி போச்சு அந்த நாட்கள். நைட் முழுக்க பேசிக்கிட்டே இருப்போம். ஷூட்டிங் முடிஞ்சி ஈவ்னிங் வந்தா பெரும்பாலும் சிங்கப்பூர் ஸ்ட்ரீட்ஸை சுத்திப்பாக்க போயிடுவோம். நைட் ஒரு மணி ரெண்டு மணி வரைக்கும் கூட சில சமயம் கூட இருப்பாரு. “எனக்காச்சும் பரவாயில்லேப்பா… ஸ்பாட்ல வேலை எதுவும் இல்லே. காலைல நிதானமா பத்து பதினொரு மணிக்கு கூட வருவேன்.  ஆனா நீ அப்படி இல்லே. காலைல ஆறு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாயிடனும். போதும் போலாம்”ன்னு சொன்னா கூட கேட்க்க மாட்டான். மூணு மணி நாலு மணி வரைக்கும் கூட சுத்துவேன். சிங்கப்பூர்ல நைட் லைஃப் நல்லாயிருக்கும்.  அவனும் அப்போ தான் முதன் முதல்ல ஃபாரீனுக்கு வர்றானா… அதுனால நல்லா என்ஜாய் பண்ணுவான். அப்போல்லாம் ஃபாரீனுக்கு ஷூட்டிங் போறது ரொம்ப கஷ்டம். அபூர்வம். நைட் ஃபுல்லா சுத்தி பார்த்துட்டு இவன், நாலு மணிக்கு படுத்தாகூட கரெக்ட்டா ஆறு மணிக்கு காலைல எழுந்திருச்சு ஷூட்டிங்கிற்கு ரெடியாயிடுவான். எனக்கு தெரியாது…. நான் தூங்கிகிட்டு இருப்பேன். பத்து மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன். இதுலே இருந்து அவன் மேல எனக்கு மரியாதையும் ஏற்பட்டிச்சி. அவன் கூட ஃபிரெண்ட்ஷிப்பும்  நெருக்கமாச்சு. இன்னை வரைக்கும் அதே ஃபிரெண்ட்ஷிப் தான்.

நைட் ஃபுல்லா சுத்தி பார்த்துட்டு இவன், நாலு மணிக்கு படுத்தாகூட கரெக்ட்டா ஆறு மணிக்கு காலைல எழுந்திருச்சு ஷூட்டிங்கிற்கு ரெடியாயிடுவான். எனக்கு தெரியாது…. நான் தூங்கிகிட்டு இருப்பேன். பத்து மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன். இதுலே இருந்து அவன் மேல எனக்கு மரியாதையும் ஏற்பட்டிச்சி.

எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்க காம்பினேஷன்ல  வொர்க் பண்ண படம் எல்லாம், என்னோட படமா இருந்தாலும் சரி, ஏ.வி.எம்.க்கோ அல்லது வேற யாருக்கோ பண்ணதா இருந்தாலும் சரி… எங்க காம்பினேஷன்ல வந்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் தான். ஒன்னு ரெண்டு சுமாராப் போச்சே தவிர மத்தது எல்லாம் சூப்பர் ஹிட் தான். காரணம் எனக்கும் அவனுக்கும் இடையே இருந்த அண்டர்ஸ்டாண்டிங்.

அன்றைய ரஜினி Vs இன்றைய ரஜினி

நாம் : அப்போ இருந்த ரஜினிக்கும், இப்போ உள்ள ரஜினிக்கும்…. என்ன DIFFERENCE நீங்க உணர்றீங்க சார்…?

திரு.பஞ்சு அருணாச்சலம் : ரஜினியை பொறுத்தவரைக்கும் அவர் அதே ரஜினி தான். ஆனா அவரோட மார்கெட் தான் எங்கேயோ போயிடுச்சு. அப்போ பண்ண பத்து படத்துக்கு இப்போ பண்ற ஒரு படம் ஈக்வல். வருஷத்துக்கு பத்து படம் பண்ணது போய், இப்போ ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு படம் பண்றார். தவிர அவருக்கு ஏஜ் ஆகுது இல்லே. அதையும் மனசுல வைக்க வேண்டியிருக்கு. பட் ஆனா அவர் சொன்ன மாதிரி, அவர் இப்போ ஒரு படம் பண்ணா நூறு படம் பண்ண மாதிரி. So, எதையும் யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு.

மத்தபடி என்கிட்டே அவர் பழகுறதுல எந்த வித்தியாசமும் இல்லே. என்ன ஒரே ஒரு வருத்தம். அது காலத்தின் கட்டாயம். வேற வழி இல்லே. அப்போ ரெகுலரா ஆக்ட் பண்ணிட்டு இருந்தார். ஆறு படம் பண்ணினார்னா அதுல மூணு படம் நான் அவர் கூட ஏதாவது ஒரு வகையில ஒர்க் பண்ணுவேன். ஆகையால் டெய்லி சந்திக்கிறதுக்கான வாய்ப்பு இருந்தது. ஆனா இப்போ, இல்லே. அவர் ஷங்கர் படத்துல நடிக்கும்போது, செட்ல நான் போய் அரட்டையடிச்சுக்கிட்டுருந்தேன்னா மத்தவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். அவர் வரச் சொல்லுவாரு. நான் போகமாட்டேன். நான் போனா கண்டிப்பா உட்கார வெச்சு ஒரு 15 நிமிஷமாவது பேசுவாரு. அவ்ளோ பெரிய செட் போட்டு கோடிக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கும்போது, நான் போய் அங்கே உட்கார்ந்தா அது சரியா வராது.

அவர் ஷங்கர் படத்துல நடிக்கும்போது, செட்ல நான் போய் அரட்டையடிச்சுக்கிட்டுருந்தேன்னா மத்தவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். அவர் வரச் சொல்லுவாரு. நான் போகமாட்டேன். நான் போனா கண்டிப்பா உட்கார வெச்சு ஒரு 15 நிமிஷமாவது பேசுவாரு. அவ்ளோ பெரிய செட் போட்டு கோடிக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கும்போது, நான் போய் அங்கே உட்கார்ந்தா அது சரியா வராது.

நாம் : கரெக்ட் சார்…. உங்க கணிப்பு சரி தான்.

உடல் நலம் சரியில்லாது போன சமயம்….

நாம் : அவருக்கு போன வருஷம் உடம்பு சரியில்லாம் போய் ரொம்ப சீரியஸா இருந்தாரு. அப்போ என்ன ஃபீல் பண்ணீங்க?

திரு.பஞ்சு அருணாச்சலம் :
ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ஏனா, எனக்கு தெரிஞ்சி தலைவலி இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்னை தான் அவருக்கு வருமே ஒழிய, அவர் ஜூரம், அப்படி இப்படின்னு படுத்தது கிடையாது. முப்பது வருஷத்துல இந்த மாதிரி ஹாஸ்பிடலுக்கெல்லாம் அவர் போய் படுத்ததேயில்லை. அதே மாதிரி, எந்த ஷூட்டிங்க்லயும், “எனக்கு உடம்பு சரியில்லே… ரெண்டு மூணு நாள் கழிச்சி வர்ரேன்…” அப்படி இப்படின்னெல்லாம் சொன்னது கிடையாது. ரொம்ப ஆக்டிவா இருப்பான். ஹெல்த்தை நல்லா மெயின்டைன் பண்ணிட்டு வருவான். ஹெல்த் கான்சியஸ் உள்ள ஒரு ஆள். நிறைய படிச்சவன். சில பல பழக்கங்கள் இருந்தால் கூட ஹெல்த் மேல ரொம்ப அக்கறையுள்ளவன். முன்னே யங் ஏஜ்ல நிறைய இருந்தது. ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் எல்லாத்தையும் ஒழுங்குபடுத்திக்கிட்டான். அவன் கண்ட்ரோலுக்கு எல்லாத்தையும் கொண்டு வந்துட்டான். நல்ல உடற்பயிச்சி, சுத்தமான உணவு வகைகள், நல்ல இயற்கை காற்று, அவனுக்கு சொந்தமா தோட்டம் இருக்கு… அங்கே போய் ரெகுலரா வாக்கிங் போவான், ஸ்விம்மிங் பண்ணுவான்… இப்படி ஒரு நீட்டான ஆளுக்கு ஏன் இப்படி வந்ததுன்னு ஆச்சரியமா இருந்தது.

அந்த சமயத்துல போய் அவனை பார்க்கவே முடியலே. ஏகப்பட்ட கெடுபிடி. அதுகூட வாஸ்தவம் தான். அந்த நேரத்துல எல்லாரும் பார்க்கனும்னு ஆசைப்படுவாங்க. அவ்ளோ பேரும் பார்த்துகிட்டு இருந்தாங்கன்னா…

நாம் : ஆமா… விசிட்டர்ஸ் மூலமா INFECTION (தொற்று) ஏற்பட வாய்ப்பிருக்கு….

திரு.பஞ்சு அருணாச்சலம் : அதுமட்டுமில்லே… அவனுக்கே என்னமோ போலாயிடும். நமக்கு என்னமோ ஏதோன்னு பயம் வந்துடும் அவனுக்கு. அதனாலயே நாங்கல்லாம் போகாம அவாய்ட்  பண்ணிட்டோம். அவங் வீட்டுலயும் கேட்டுகிட்டாங்க. ‘இப்போ அவரை யாரும் பார்க்க வரவேண்டாம். அவர் குணமடைஞ்சு வீட்டுக்கு திரும்பியதும் கண்டிப்பா வாங்க”ன்னு சொன்னாங்க. அதுனால அவர் வீட்டுக்கு திரும்பியவுடன் தான் போய் பார்த்தோம்.

அவனுக்கே என்னமோ போலாயிடும். நமக்கு என்னமோ ஏதோன்னு பயம் வந்துடும் அவனுக்கு. அதனாலயே நாங்கல்லாம் போகாம அவாய்ட்  பண்ணிட்டோம்.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் ரஜினி நடிப்பாரா….

நாம் : உங்க தயாரிப்புல அவர் இனி நடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கா? ஏன்னா, இடையில் அந்த பேச்சு அடிபட்டது.

திரு.பஞ்சு அருணாச்சலம் : ஆமா உண்மைதான். ஆனா, இனிமே அதுக்கு வாய்ப்பில்லே. ஏன் இல்லேன்னா, அவர் எனக்கு தர தயாராத் தான் இருக்கார். ஆனா நான் எடுக்க முடியாது. காரணம் பட்ஜெட் அது மாதிரி போயிடுச்சு. எனக்கு வசதியில்லேன்னு இல்லே. ரஜினி நடிக்கிறார்னா யார் வேணும்னாலும் எனக்கு கடன் தருவாங்க. பணத்தை கொட்டுவாங்க. ஆனா, எனக்கு வயசாயிடுச்சு. மென்டலா ஹெல்த் ரொம்ப வீக். இப்போ போய் நான் 100 கோடி, 150 கோடில்லாம் வாங்கி, படத்தை தயாரிக்க முடியாது. அவ்ளோ பெரிய பணத்தை, படத்தை, பட்ஜெட்டை எல்லாம் மேனேஜ் பண்ற கப்பாஸிட்டி எனக்கு கிடையாது. மறதி வேற அதிகமாயிடிச்சு. உடம்பு வேற அடிக்கடி சரியில்லாம் போயிடுது. தவிர இது முடியவே முடியாதுன்னு இல்லே. நான் இந்த டென்ஷனை இழுத்து போட்டுக்கிட விரும்பலை.

அவ்ளோ பெரிய பணத்தை, படத்தை, பட்ஜெட்டை எல்லாம் மேனேஜ் பண்ற கப்பாஸிட்டி எனக்கு கிடையாது. மறதி வேற அதிகமாயிடிச்சு. உடம்பு வேற அடிக்கடி சரியில்லாம் போயிடுது. தவிர இது முடியவே முடியாதுன்னு இல்லே. நான் இந்த டென்ஷனை இழுத்து போட்டுக்கிட விரும்பலை.

நாம் : ஆனா… உங்களை மாதிரி அவரோட நலம் விரும்பிகள் அவர் படத்தை ப்ரொட்யூஸ் பண்ணினாங்கன்னா நாங்கள் நிம்மதியா இருப்போம் சார்.

(சிரிக்கிறார்….)

ஆனா… உங்களை மாதிரி அவரோட நலம் விரும்பிகள் அவர் படத்தை ப்ரொட்யூஸ் பண்ணினாங்கன்னா நாங்கள் நிம்மதியா இருப்போம் சார்.

நாம் : உண்மையிலேயே சார்… அவரோட சுபாவம் உங்களுக்கு தெரியும். எங்களோட டேஸ்ட் தெரியும். ஜனங்களோட பல்ஸும் புரிஞ்சவங்க நீங்க…. OUTPUT ஐ அழகா கொண்டுவந்துடுவீங்க….

(எது எப்படியோ நிச்சயம் நன்றி மறக்காம வெற்றி விழா எடுப்பாங்க. இல்லையா நண்பர்களே?)

நாம் : இப்போவும், குருசிஷ்யனை எங்களால மறக்க முடியலே. 28 நாள்ல படத்தை முடிச்சு, சாங்ஸ் எல்லாத்தையும் சூப்பர் ஹிட் பண்ணி வாவ்…. அது ஒரு கனாக்காலம்….

நாம் : அவரோட நீங்க நெருங்கி பழகியிருக்கீங்க… அவரோட எளிமை, பணிவு இதை குறிப்பிடுகிற மாதிரி சம்பவம் ஏதாவது….?

திரு.பஞ்சு அருணாச்சலம் : ஒன்னு ரெண்டு இல்லே… அது நிறைய இருக்கு… (எதை ஞாபகப்படுத்தி சொல்வது? என்கிற தடுமாற்றம் அவரிடம் தென்படுகிறது).

நாம்: ஏதாவது ஒரு சம்பவத்தை ஷார்ப்பா சொல்லுங்க சார்….

திரு.பஞ்சு அருணாச்சலம் :
தேவையே இல்லே. ஏன்னா… அவர் இந்த நிலைமைக்கு வந்த பிறகு, மத்தவங்க நடந்துக்குற முறைக்கும் அவர் நடந்துக்குற முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சொல்லப் போனா அவருக்கு எளிமையும் பணிவும் அதிகமாயிருக்கு.

என்ன…முன்பெல்லாம் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி அவன். அவன் நினைச்சது நடக்கலேன்னா கோபம் வந்துடும். இத்தனை மணிக்கு வருவாங்கன்னு சொல்லி, எல்லாரும் லேட்டா வர்றாங்கன்னு வெச்சிகோங்களேன்… கோபம் வந்துடும் அவனுக்கு…ஏன்னா அவன் கரெக்ட் டயத்துக்கு செட்டுக்கு வந்துடுவான். நான் சொல்றது ஆரம்ப காலத்துல. டெக்னீஷியன்ஸ் லேட்டா வந்தாங்கன்னா…அவனுக்கு பிடிக்காது. ஏன், எதுக்குன்னு கேட்டு துளைச்சிடுவான். “ஏன் இப்படி பண்றாங்க? அவங்களுக்கு பணம் கிணம் சரியா கொடுக்கலையா நீங்க?”ன்னெல்லாம் கேட்பான். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்ல எல்லாம் மிஸ்ஸானாக்கூட கோபம் வரும். ஆனா அதை வெளியே காட்டிக்க மாட்டான். அவன் கூட நெருங்கி பழகுனவங்களுக்கு தான் அது தெரியும். தனியா கூப்பிட்டு சொல்லிடுவாரு. “இந்த மாதிரியெல்லாம் செஞ்சா சரியாவராது… சரியா ஆர்கனைஸ் பண்ணுங்க”ன்னு ப்ரொடக்ஷன் மானேஜரை கூப்பிட்டு சொல்லிடுவாரு. ‘வொர்க்ல கான்சன்ட்ரேஷன் இல்லேன்னா நீங்கல்லாம் ஏன்பா சினிமாவுக்கு வர்றீங்க?’ன்னு சத்தம் போடுவாரு. டைரக்டராகட்டும், நடிகராகட்டும், எழுத்தாளனாகட்டும், யாரா இருந்தாலும் வேலைல கான்ஸன்டிரேஷன் பண்ணுங்க அப்படின்பார். அப்புறம் ஜாலியா இருங்க. என்னவென்னாலும் பண்ணுங்க. வேலைல சுணக்கம் இருக்கக்கூடாதுங்க்றது அவனோட பாலிஸி. இது அவன் ரத்தத்துலயே ஊறிப் போச்சு.

வொர்க்ல கான்சன்ட்ரேஷன் இல்லேன்னா நீங்கல்லாம் ஏன்பா சினிமாவுக்கு வர்றீங்க?ன்னு சத்தம் போடுவாரு. டைரக்டராகட்டும், நடிகராகட்டும், எழுத்தாளனாகட்டும், யாரா இருந்தாலும் ‘வேலைல கான்ஸன்டிரேஷன் பண்ணுங்க’ அப்புறம் ஜாலியா இருங்க. என்னவென்னாலும் பண்ணுங்க’ அப்படின்பார்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி தான்

நாம் : அவரோட மக்கள் செல்வாக்கை நீங்க பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது உண்டா?

(இதற்கு எந்த மாதிரி பதில் சொல்வது என்று ஒரு கணம் அவருக்கு புரியவில்லை. யோசிக்கிறார்.)

நாம் : ஷூட்டிங் ஸ்பாட்ல, ஏர்போர்ட்ல இப்படி ஏதாச்சும்… சம்பவங்கள்….

திரு.பஞ்சு அருணாச்சலம் :
எனக்கு தெரிஞ்சி எம்.ஜி.ஆருக்கு அப்புறம் பப்ளிக்ல வெச்சு ஷூட்டிங் பண்ணமுடியாத அளவுக்கு கூட்டம் வர்ற ஒரு ஆர்டிஸ்ட் ரஜினி தான். அப்போ நடந்ததையே சொல்றேன். முரட்டுக்காளைக்காக நாங்க ஷூட்டிங் போயிருந்தப்போ, கோயம்புத்தூர், கோபிசெட்டிப்பாளையம் இங்கெல்லாம் ஷூட்டிங் நடந்தது. இப்போ இருக்குற மாதிரி அப்போ அவோரடா ஸ்டேட்டஸ் இல்லே. ஜஸ்ட் வளர்ந்துட்டு வர்றாரு. அவ்வளவு தான். அப்போவே அவரை பார்க்க அந்த பாட்டு ஷூட்டிங்குக்கு கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். தெருத் தெருவா கூட்டம். மாநாடு மாதிரி இருந்திச்சு. அவ்ளோ கூட்டத்தையும் அழகா மானேஜ் பண்ணி எஸ்.பி.எம். ஷூட் பண்ணினாரு. அந்த கூட்டத்தையே அந்தப் பாட்டுல கூட அழகா சேர்த்துட்டாரு. ரஜினிக்கு பப்ளிக் சப்போர்ட் என்பது சினிமாவையும் தாண்டி வெளியே வந்துடுச்சுன்னு நிரூபணம் பண்ணின படம் முரட்டுக்காளை.

தெருத் தெருவா கூட்டம். மாநாடு மாதிரி இருந்திச்சு. ரஜினிக்கு பப்ளிக் சப்போர்ட் என்பது சினிமாவையும் தாண்டி வெளியே வந்துடுச்சுன்னு நிரூபணம் பண்ணின படம் ‘முரட்டுக்காளை’.

இது ஜஸ்ட் ஒரு பிகினிங் தான். அதுக்கப்புறம் எல்லாமே ஏறுமுகம் தான். அடுத்தடுத்த படங்கள்ல அவரோட செல்வாக்கு ஜனங்கள் கிட்டே எந்தளவு உயர்திருக்கும்னு நீங்களே யூகம் பண்ணிக்கோங்க. அவுட்டோர்ல் அவரை வெச்சு ஷூட் பண்றதே கஷ்டமா இருக்கும்.
—————————————————————
வேடிக்கை பார்க்க வந்த மக்களே படத்தில் இடம்பெற்ற ‘முரட்டுக்காளை’ பாடல் - வீடியோ
—————————————————————

Video URL : http://www.youtube.com/watch?v=ODskDW_W3HY

நாம் : சார்… ஒரே ஒரு பர்சனல் கேள்வி. நடுவுல நீங்க கொஞ்சம் காலம் தாடியோட இருந்தீங்க. ஏன்னு தெரிஞ்சிக்கலாமா? ஏதாவது பிரார்த்தனையா?

திரு.பஞ்சு அருணாச்சலம் : விசேஷ காரணம் எதுவுமில்லே. பங்க்ஷன், மேரேஜ் இங்கெல்லாம் போகாம ஒரு பத்து நாள் வீட்ல இருந்தாலே தாடி வெச்சிடுவேன். சில சமயம் அது தொடர்ந்துரும். எனக்கு இப்போ வயசு 72 ஆகுது. நான் இது வரைக்கும் காஸ்மெடிக், பவுடர் இதெல்லாம் எதுவும் யூஸ் பண்ணதில்லே. நான் மட்டுமில்லே… ரஜினிகாந்தும் அப்படித் தான். ஒரு படம் முடிஞ்சவுடனே, அடுத்த படம் ஸ்டார்ட் பண்றதுக்கு இடைப்பட்ட காலத்துல தாடி வெச்சிடுவான். தாடி வெச்சுக்குவான் என்பதில்லே. அது ரெஸ்ட்ல இருக்குற பீரியட். படம் பாக்குறது, ப்ரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுன்னு ரிலாக்ஸா இருப்பான். தோற்றத்தை பத்தி அப்போ கவலைப்படமாட்டான்.

ஜாதி, மதம், இனத்துக்கு அப்பாற்ப்பட்டது சினிமா

நாம் : அவர் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி பண்றாரு. வெளியே தெரியுறதில்லே. அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

(இதெல்லாம் சொல்லனுமா என்கிற தயக்கம் அவரிடம் தென்படுகிறது)

நாம் : எதுக்கு கேட்கிறோம்னா, அவர் தான் செய்யும் நல்ல விஷயங்களுக்கு விளம்பரம் விரும்புறதில்லே. அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவரை அவரோட பூர்வீகத்தை விமர்சிக்கிறவங்களுக்கு இது புரியலே. அதுக்காகத் தான் கேட்கிறோம்.

திரு.பஞ்சு அருணாச்சலம் : அது அவர் அரசியலுக்கு வருவார்னு எதிர்ப்பார்ப்பு இருந்தப்போ அதை ஒரு ஆயுதமாக்க பார்த்தாங்க. எம்.ஜி.ஆர்.கிட்டயே அது நிக்கலை. ஜனங்க கிட்டே ஒருத்தருக்கு பாப்புலாரிட்டி வந்துடுச்சுன்னு வெச்சிகோங்களேன்… ஜாதி, மதம் இதெல்லாம் எடுபடாது. கலை, இசை இதெல்லாம் ஜாதி மதம், இனத்துக்கு அப்பாற்ப்பட்டது. இங்கேயிருந்து எத்தனையோ பேர் மத்த ஸ்டேட்ஸ் போய் அங்கே ஜொலிக்கிறாங்க. அங்கேயிருந்து நிறைய பேர் இங்கே வந்து ஜெயிக்கிறாங்க.

அது அவர் அரசியலுக்கு வருவார்னு எதிர்ப்பார்ப்பு இருந்தப்போ அதை ஒரு ஆயுதமாக்க பார்த்தாங்க. எம்.ஜி.ஆர்.கிட்டயே அது நிக்கலை.

நாம் : அதனால் தான் சார், அந்த காலத்தோல் பெரியவங்க… ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ன்னு பேர் வெச்சாங்க. தமிழ் நடிகர் சங்கம்னு வெக்கலே. ஏன்னா, கலைஞர்களுக்குள் அப்போ இருந்தவங்க வேறுபாடு பார்க்கலை.

நாம் : அவரோட ஆன்மீக் ஈடுபாடு பற்றி ?

திரு.பஞ்சு அருணாச்சலம் : இப்போன்னு இல்லே… ஆரம்பத்துல இருந்தே அவருக்கு ஆன்மீகத்துல ஈடுபாடு உண்டு. டெய்லி சுமார் அரை மணிநேரம் அவரோட பூஜை ரூம்ல மெடிடேஷன்ல உட்காருவார். கல்யாணம் ஆன புதுசுல எல்லாம் அவர் வீட்டுக்கு போவேன் நான். இங்கே லோக்கல்ல தான் எங்கேயாவது ஷூட்டிங் இருக்கும். “வீட்டுக்கு வாங்க சார். அப்படியே ஒண்ணா போயிடலாம்”னு கூப்பிடுவாரு. நானும் போவேன். குளிச்சிட்டு வந்து அப்படியே விபூதி பூசிகிட்டு பூஜை ரூம்ல அப்படியே அமைதியா உட்கார்ந்துடுவாரு.  கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது அந்த மாதிரி எல்லாத்தையும் விட, அதுக்கு அடுத்த ஸ்டேஜ் ஒன்னு இருக்கு. மோன நிலைன்னு சொல்லுவாங்க. அவர் அந்த ஸ்டேஜுக்கு போய் ரொம்ப காலமாகுது.

கோவிலுக்கு போறது, சாமி கும்பிடுறது அந்த மாதிரி எல்லாத்தையும் விட, அதுக்கு அடுத்த ஸ்டேஜ் ஒன்னு இருக்கு. மோன நிலைன்னு சொல்லுவாங்க. அவர் அந்த ஸ்டேஜுக்கு போய் ரொம்ப காலமாகுது.

நாம் : ரஜினி இந்தளவுக்கு ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா? ஏன் என்றால் “உலகில் உனக்கு சரித்திரம் உண்டு”ன்னு எழுதுனீங்க நீங்க. அதனால கேட்கிறேன்.

திரு.பஞ்சு அருணாச்சலம் : நிச்சயம் இல்லே. ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ இந்த படங்களை எல்லாம் அவர் அரை மனதாகத் தான் ஒப்புக்கொண்டார். பின்னர் முழு ஈடுபாடு காட்டி நடித்தார். அவர் இந்தளவு ஒரு பெரிய ஸ்டாராக வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது உண்மையான ஈடுபாடும் உழைப்புமே தவிர, தாம் ஒரு பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பினால் அல்ல. It all happened because of his sincerity not aim.

(அவர் சொல்றது புரியுதா நண்பர்களே? ரொம்ப நுட்பமான விஷயம் இது! இதை தான் வள்ளுவர் அழகா சொல்லியிருக்கிறார்….
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”ன்னு.
)

—————————————————————————————-
ரஜினி & பஞ்சு அருணாசலம் கூட்டணி - கலக்கல் வீடியோ காட்சிகள்
—————————————————————————————-

Video URL : http://www.youtube.com/watch?v=ucVDVFsgLcU

ஒரு நடிகனாக வேண்டும் என்பது மட்டும் தான் அவரது AIM. ஆனால் அது எந்தளவு போகும் என்பதை அவரே எதிர்பார்த்தது கிடையாது. ஆரம்பத்துல இருந்து அவர் கூட நான் இருப்பதால் இது எனக்கு தெரியும். ப்ரியாவில் நடிக்கும்போதேல்லாம் என்னை அடிக்கடி கேட்பார், “என்ன சார்… இந்த படம் நல்ல போகுமா? நான் இன்னும் எத்தனை நாளுக்கு தாக்குபிடிப்பேன்?” அப்படினெல்லாம் கேட்பாரு. “நீ சும்மாயிருப்பா… நீ பிரமாதமா வருவே”ன்னு நான் சொல்வேன். காரணம் அவனுக்குன்னு ஒரு ஸ்டைல், ஆக்டிவிடீஸ் உண்டு. இதை வெச்சு எத்தனை நாளைக்கு ஃபீல்டுல நிக்க முடியும் என்பது அவனுக்கே ஒரு புதிராக இருந்தது. அதுனால அப்போல்லாம் ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்குவான். வருஷம் 15, 20 படம் நடிப்பான். ஏன்னா, இருக்கும்போதே ஓரளவு சம்பாதிச்சிட்டனும்னு ஒரு வேகம் இருந்தது அவன்கிட்டே.

“என்ன சார்… இந்த படம் நல்ல போகுமா? நான் இன்னும் எத்தனை நாளுக்கு தாக்குபிடிப்பேன்?” அப்படினெல்லாம் கேட்பாரு.

முரட்டுக்காளைல்லாம் வந்த பிறகு, அது ஓஹோன்னு ஓடின பிறகு தான் அவனுக்கு ஒரு தன்னம்பிக்கை வந்தது. “நமக்கு இங்கே நிச்சயம் ஒரு நிரந்தர இடம் இருக்கு”ன்னு நம்பிக்கை வந்தது. அதுக்கு பிறகு படங்களை குறைச்சிக்க ஆரம்பிச்சிட்டான். அது கூட சுயநலத்தினால் அல்ல. தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களோட நலனை மனசுல வெச்சு தான். நல்ல விலை கொடுத்து படத்தை டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் வாங்குவாங்க. அது ஓடுறதுக்குள்ளே இவன் அடுத்த படத்தை விடக்கூடாது இல்லையா….? ஆகையால் முரட்டுக்காளைக்கு பின்னர், வருஷத்துக்கு 3 அல்லது 4 படம்னு குறைச்சிக்கிட்டான்.

……………… TO BE CONTINUED IN PART 2

அடுத்த பாகத்தில்:
—————————————————————————————
“உலகில் உனக்கு சரித்திரம் உண்டு”ன்னு எழுதுனீங்க… அது எதை மனசுல வெச்சி?

இன்றைய பில்டப் நடிகர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

இன்றைய ரசிகர்களுக்கு, இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

திருமதி. லதா ரஜினி அவர்கள் பற்றி உங்கள் கருத்து?

ரஜினி அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

மேற்படி கேள்விகளுக்கு திரு.பஞ்சு அருணாச்சலம் கூறும் சூடான பதில்கள் அடுத்த பாகத்தில்…
—————————————————————————————

[END OF PART 1]

22 Responses to “20 முதல் 60 வரை – சூப்பர் ஸ்டாரின் வளர்ச்சி, எளிமை, மக்கள் செல்வாக்கு etc.etc. — திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களுடன் ஒரு சந்திப்பு! PART 1”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Happy to know about u r health.

    Super interview with Thalaivar's close friend. Thanks na for u r effort. Our site growing more & more heights..

  2. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Why Panchu sir's Kathal Samrajyam movie not released? Iru kangal sollum kathal sethi.. Nice song.

  3. GokulDass GokulDass says:

    ரஜினி அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

    ————————-

    Waiting for his reply

  4. s.vasanthan s.vasanthan says:

    சுந்தர் உண்மையில் சூப்பர்,குரு சிஷ்யன் மாதிரியான அருமையான பொழுதுபோக்கு படம் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்பொழுது யாரால் எடுக்க முடியும் ?.(எது எப்படியோ நிச்சயம் நன்றி மறக்காம வெற்றி விழா எடுப்பாங்க. இல்லையா நண்பர்களே?)ஆம் உண்மை .

  5. Ganesan Ganesan says:

    Hello Sundar,

    Really done very good effort…nowadays every body think to interview present famous directors those who is going to direct future thalaivar movies.

    But you are different person, do always interview those close heart to our Thalaivar…

    We want like this interview only…

    Continue these kind of good efforts…

    Thanks & Best Regards,

    M.Ganesan

  6. rajesh v rajesh v says:

    அவர் சொல்றது புரியுதா நண்பர்களே? ரொம்ப நுட்பமான விஷயம் இது! இதை தான் வள்ளுவர் அழகா சொல்லியிருக்கிறார்….

    “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

    உள்ளத் தனையது உயர்வு”ன்னு

    ———————————————————————————

    kalakureenga sundar. arumaiyana padhivu.

    rajesh.v

  7. Naveen Ra Na Veen Naveen Ra Na Veen says:

    Super interview na thanks :)

  8. murugan murugan says:

    அருமையான உரையாடல் !!!
    ஒரு தனையனை பற்றி தகப்பனிடம் கேட்டு தேரிந்து கொள்வதுபோன்ற உணர்வு !!!
    தெளிவான கேள்விகள் - எளிமையான பதில்கள் !!!
    நமது தலைவரின் ரசிகர்களுக்கு நம்மால் முடிந்த செய்திகளை கொண்டு சேர்க்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கும் மன உறுதிக்கும் எங்கள் வணக்கம்!!!
    முதல் தொகுப்பே முத்தாய்ப்பாய் உள்ளது !!!
    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் !!!

  9. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

    //எனக்கு தெரிந்து ரஜினி முதன் முதல்ல கால்ல விழுந்து ஆசி வாங்கி ஷீல்டு வாங்கிக்கிட்டது கவிஞர் கிட்டே தான்.//

    //ரஜினிக்கு பப்ளிக் சப்போர்ட் என்பது சினிமாவையும் தாண்டி வெளியே வந்துடுச்சுன்னு நிரூபணம் பண்ணின படம் முரட்டுக்காளை//

    //அவர் இந்தளவு ஒரு பெரிய ஸ்டாராக வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது உண்மையான ஈடுபாடும் உழைப்புமே தவிர, தாம் ஒரு பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பினால் அல்ல//

    கலக்கல் கேள்விகள் … அருமையான பதில்கள்….

    தலைவர் கவிஞர் கண்ணதாசன் காலில் விழுந்து ஆசி வாங்கினார் என்பது புது செய்தியாகவும் அதே நேரம் வியப்பாகவும் உள்ளது….

    சூப்பர் சுந்தர் அண்ணா ..

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  10. Ashraf Ali Ashraf Ali says:

    சுந்தர் ஜி,

    நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததை விட; நம் இணையத்தளத்தில் அதை படிக்கும் போது மிகவும் சுவாரசியமாக உள்ளது.

    ***

    Very nice Composition Sundar ji.

    ****

    Take Care.

    With regards,

    Ashraf Ali.

  11. Sankaranarayanan Sankaranarayanan says:

    அற்புதமான உரையாடல் ஆழ்ந்த கருத்துக்கள். உண்மையான நட்பின் வெளிப்பாடு.

    நன்றி சுந்தர்ஜி…

    ப.சங்கரநாராயணன்

  12. Somesh Somesh says:

    Fantastic Sundarji…The people you choose for interview are really the men behind SS's success. Only these people will know all about SS. The example cited here: SS will get angry if people are not punctual, and his tendency to scold him show how committed he is towards his profession.

  13. dr suneel dr suneel says:

    ஜி,மூத்த கலைஞர் , நேர்மைக்கு பெயர்போன நல்ல மனிதர், எத்தனையோ மனிதர்களை கண்டவர் ..இவரைப்போன்ற ஆளுமைகளுடன் உரையாட ஒரு கொடுப்பினை வேண்டும்..

  14. Anonymous says:

    ரஜினி என்கின்ற ஆலமரம் தானாக உருவானதல்ல…முட்டி, மோதி, போராடி, வென்று விருட்சமாய் வளர்ந்துள்ள மரம்…ஒரு மரம் வளர வளர அது தரும் நிழலும் அதிகமாகுமாம்…அதுபோலத் தான் தலைவரும்…நல்ல குணங்கள் மூலம் தன்னை வளர்க்க வளர்க்க, அவரின் நிழலில் சுகப்பட்டவர்கள் ஏராளம்….இதைத் தான் இந்த பேட்டி உணர்த்துகிறது…!

    -

    இந்த தளத்தில் எத்துணையோ பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சொன்னாலும், அவர்கள் எல்லோரும் தலைவரை பற்றி பெருமையாய்ச் சொல்லும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான்…அவரது எளிமை, பணிவு, தன்னடக்கம், குருபக்தி, தொழிலில் ஈடுபாடு, மனிதாபிமானம், பிறரை மதித்தல்………..என்றும் மாறாதவை இவை….

    ****

    " தலைவர் ஒரு கற்பூரம் !

    ஏழை கொளுத்தினாலும் ,பணக்காரன் கொளுத்தினாலும்

    ஒரே ஜோதி தான் ! "

    -

    "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  15. marees kannan marees kannan says:

    இந்த வயதிலும் நம் தளத்திற்கும் நம் ரசிகர்களுக்கும் பொறுமையாக பதில் அளித்த திரு பஞ்சு சார் அவர்களை எப்படி சொல்லவதென்றே தெரிய வில்லை ….ஒரு தகப்பன் ஸ்தானத்தில் அவர் தலைவரை பற்றி சொல்லி இருக்கும் கருத்துக்கள் அற்புதம். நாம் தலத்தில் மறக்க முடியாத மற்றும் ஒரு தனி சிறப்பான பதிவு & சந்திப்பு. கோடான கோடி நன்றி திரு.பஞ்சு சார். நீங்கள் நீண்ட ஆரோக்கியதுடன் வாழ எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  16. Anonymous says:

    தலைவரின் பூர்விகத்தை ஒரு குறையாக கூறுபவர்களுக்கு பஞ்சு சார் அளித்த பதில் சூப்பர் :) இந்த பதிவை விட அடுத்த பதிவில் இருக்கும் கேள்விகளின் பதில்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது :)

  17. Sudhagar_US Sudhagar_US says:

    அற்புதமான பேட்டிகளில் இதுவும் ஒன்று….பஞ்சு ஐயா அவர்களை பேட்டி கண்டது தலைவர் வீட்டில் இருந்து ஒருவரை சந்தித்தது போன்ற உணர்வு! தலைவரின் மிக உண்மையான நலம் விரும்பி மற்றும் சத்தமில்லாத சாதனையாளர்.
    நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் சுந்தர். கண்டிப்பாக விகுவிரைவில் தலைவர் வீட்டில் இருந்தே உங்களுக்கு அழைப்பு வரும், நீங்கள் அதையும் எங்களிடம் சொல்ல தான் போகிறீர்கள் நாங்களும் கேட்க தான் போகிறோம் :)

  18. ponraj ponraj says:

    இறைவனுக்கு நன்றி. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி. உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

    இனிமையான சந்திப்பு. நண்பர்களுக்கு நன்றி.

  19. Praveen Praveen says:

    FROM 20 TO 60 - SUPERSTAR'S GROWTH, SIMPLICITY, FAN FOLLOWING etc etc. - PANCHU ARUNACHALAM'S EXCLUSIVE INTERVIEW - PART -1…..

    We do not have to introduce Mr. Panchu Arunachalam to you all as you know him very well. He was an assistant to Poet Kannadasan. He was also multi-talented as Lyricist, Dialogue writer and Producer. He was also the one to introduce Isaignyani Ilaiyaraja through the movie "Annakkili" which changed the whole dimension of Tamil Cinema. He has produced a lot of films for our Superstar right from the beginning till mid-90's. He has also worked with him in lots of other disciplines as well. Moreover, he is like his family friend and a good well wisher.

    After my recovery, I wanted a change and thus planned to meet Mr.Panchu Arunachalam in his T.Nagar residence. Thus, I went along with our website friends Mr.Balu Mahendran and Mr. Ashraf Ali to have an exclusive interview with him for our website readers. When we reached his residence, he immediately welcomed us with his smiling face. We then presented the Bouquet that we had taken along with us to him and then he made us sit comfortably in the reception. Our Interview happened their in that reception lobby.

    It was more a chat rather than an interview. He used to call our Superstar Avan,Ivan with lots of love on him all through our chat. Though because of his age, his talks deviated a bit - his points about Superstar were perfect. It's a sad thing that he feels bad about the present situation in the film industry and we could realize it through his talks and that is the reason he has avoided producing any movie these days. It's definitely a great loss to our cine industry. His advice to youth in his interview is really inspiring and a must follow one. Whatever you wanted to ask him when you meet him, we tried to ask the same questions as much as possible. We have attached a few pics and videos related to our interview. You can also pin-point any mistakes that we have made in this interview and also post your comments and suggestions to us for further development of rest of the interview articles. I thank our friends Balu Mahendran and Ashraf Ali for accompanying me for the interview.

    FIRST MEET WITH RAJNI…

    We : When did you meet Rajni first ?

    He : In a movie called "Kavikkuyil" (1976) Rajni would have acted as a hero amongst 2 heroes. I met him first during the shooting of that Kavikkuyil movie.

    KAVIYARASU KANNADASAN AND RAJNI…

    We : You were like a right-hand to Kaviyarasu Kannadasan. Do you remember any instance where Kaviyarasu talked about Rajni ?..

    He : Kavignyar (As he calls Kannadasan) appreciated Rajni in his speech during the Silver Jubilee function of Aarilirundhu Aruvathu Varai. I don't remember what he spoke. But he spoke high about Rajni and Ilaiyaraja in that function. That made Rajni fall in his leg to seek his blessings and also receive the shield. That was the first time Rajni ever took blessings from a person on stage I think.

    We : Did he talk anything futuristic and proud about Rajni ?

    He : No. He never used to talk futuristic things. He used to appreciate Rajni as a growing star. That is all. Moreover, back then no one used to appreciate or speak high of someone on stage. Nowadays, It's so disturbing to see someone speaking high about someone else on stage for the sake of it and to increase their market value during film functions and then all of a sudden disappear nowhere in the market.

    We : Why I asked you this question is because they would say a Poet's talk would never go false. That too Kannadasan's talk would definitely not go false.

    He : He used to tell good about Rajni. He said Rajni was a stylish actor. I have never seen any of his movies. But I happened to see this movie. He has acted extremely well in this movie. I remember Kannadasan saying this in that function. Rajni got an opportunity to feel and perform his act in that movie well. Till then he only got movies where he could act and perform a few styles. But it was this movie where he felt from his inner self and performed. Then, ofcourse he got Bhuvana Oru Kaelvikuri. If he has done 100 movies, amongst them 85 were all action movies. Only some 15 of them he got to perform his acting.

    We : What is the difference between the Rajni you saw in Bhuvana oru Kaelvikuri and the present Rajni ?

    He : I didn't know him much during Kavikkuyil shooting. I knew only Actor Shivakumar. We just used to wish each other when we see. But one day, He himself approached me during the shoot and asked me "Sir can we have dubbing for me ?.. I am feeling it difficult to dub.. " . I replied saying - "No need. You do it yourself. Only if you do it yourself, we can get the emotions fully and the feel of the dialogue too. Even if its difficult, try to learn and do it. Later on, your own voice will become a Style.".. Then later he started to do it himself and never asked me about dubbing. He later on dubbed for the movie Gayathri and continued to enjoy dubbing.

    RAJNI ENJOYED SINGAPORE NIGHT LIFE…

    We : When did Rajni conquer your heart ?.. Or when did he become closer to you as a friend ?..

    He : Then I got to meet him during the shooting of "PRIYA" movie. That is when we went to Singapore together. We infact ate together and slept in the same room. He enjoyed the night life in Singapore a lot. We used to roam the streets of Singapore late in the night after 11 pm. It would go on till 2 am or 3 am. Eventhough I used to tell him - Let's go and sleep as you have to be there in shooting spot at 6 am and it's ok for me to be there even by 10 or 11 am, he never used to listen. It was the first time he was visiting a foreign country and he thoroughly enjoyed the visit. Those days it was very difficult to visit a foreign country for shoot. Though, we used to reach the room by 4 AM, he would sleep and get up and be ready by 6 AM sharp for the shooting and I would never realize it at all as I would be sleeping till 10 or 11 am sometimes. Thats when I got the respect on him and our friendship developed and till now we maintain the same friendship.

    RAJNI IN THE PAST V/S RAJNI AT PRESENT….

    We : What difference do you find in Rajni from the past and the Rajni at present Sir ?

    He : As far as Rajni is concerned, he is the same Rajni even now. But only his market has gone up. Those days he used to act in 10 movies per year. Nowadays, he acts in 1 movie after 2 or 3 years. The market of his movie nowadays is equal to the market value of 10 movies that he used to do those days. Since, he is also getting older - he is thinking and then doing all the movies these days. Right, as he says in his style, if he does 1 movie it is equivalent to 100 movies.

    But there is no difference in the way he interacts with me etc. Because he is still the same. But those days when he used to do 6 movies, I atleast used to work with him in 3 movies somehow. But these days because of time, it's not the case. And now, when he is doing a movie with Shankar, I can't visit the sets and chat with him when the producers have spent Crores of rupees for the sets and it would be disturbing to anyone. He will still call me and talk. But If I go there and sit with him for 15 minutes when those huge sets are erected at a high cost, it will definitely be problematic to anyone. So, I avoid it myself.

    We : What you said is Correct Sir.

    WHEN RAJNI HAD HEALTH PROBLEMS…

    We : When Rajni suffered due to health problems last year, how did you feel Sir ?..

    He : I really felt very bad for it. Infact, I wanted to see him during that time. But could not do so. There was a lot of fuss happening around that time. True, many would have wished to see him. But everyone cannot be allowed na ?.. Infact, he was very health conscious always. He never used to skip the shooting saying I have fever, let me take 2-3 days leave and all. I have never seen him saying that. Ofcourse, he used to suffer from a few mild headaches. But has never fallen sick on bed and all. I was shocked to hear that he was hospitalized. I have never seen him on bed hospitalized in these 30 years. He might have had a few bad habits earlier in his life. But later on he brought it to his control and he always used to exercise regularly and take care of his health. He loved nature's fresh air and used to walk in his garden often. He also used to swim and exercise regularly to keep himself fit. I really wondered how it affected such a health conscious person.

    We : Yeah, there are chances that infection may spread through the visitors..

    He : Not only that. He himself would have felt that something has happened to me, if we had all visited that time. So he avoided everyone. And moreover, his family also requested us not to visit him now and asked us to visit after his recovery once he is back home. I too agreed and visited him after he was back home.

    WILL RAJNI ACT IN PANCHU ARUNACHALAM'S PRODUCTION ?…

    We : Will Rajni act in your home production movie ?.. Because we heard such a talk sometime in the middle ?..

    He : Yeah true. But now, its not possible. It's not that I cannot produce a movie starring him. He is even now ready. But I will not agree to it because of the markets now. Not because I don't have such huge amounts. If I am producing a Rajni movie, there will be lots of people who will offer me loans and money will just pour in. But I don't want to take that tension with me when I am this old and I am not so mentally strong enough to produce a movie too. I cannot manage such a huge budget movie these days.

    We : If well-wishers like you produce his movie, we would be happy sir.

    (Laughs..)

    We : Really sir. You know his character. You know our taste as well. You know people's buzz too. So definitely you can bring in a great output.. Even now we remember Guru Shishyan. You finished it in 28 days and songs were all super hit. Wow !.. We still can't forget it !,,

    We : Sir, you have been close with him. Do you remember anything that portrays Rajni's simplicity ?..

    He : There are many things. What can I remember in it and tell ?..

    We : Tell us some sharp incidence sir ?…

    He : Not necessary. Because the way he is now even after becoming such a great star and the way few people are now itself differentiates him from many, which itself depicts that he is simple. He has become more simple, infact.

    He was a tension party those days. He used to be on time to the shooting spot. But a few technicians and co-artists used to be late. He used to be very angry. He would ask me If I had paid them properly or if I had something pending from my side. He also used to politely tell them to be on time and concentrate on work more. He never used to depict his anger on anyone. Only a few people close to him know about it as he would call us separately and tell the same. He used to call a production manager who didn't organize things properly and tell him that Organize things properly from next time, if you cannot organize or concentrate properly on work, then why do you come to cinema ?.. He would shout saying this angrily. He would stress on concentration on work as Work is very important during the work time and would say later on you can do anything you want. He always felt there should be no defect in a work and that was his policy. Later on, I think it flowed as blood in his veins.

    AFTER MGR, IT'S RAJNI…

    We : Have you ever admired his fan following ?..

    He thinks…

    We : In a shooting spot or airport any such incidences that come to your mind ?…

    He : As far as I know, till date after MGR, if fan following comes into picture then it should definitely be Rajni. Because after MGR, the people flocking to see an artist at shooting spot happened only to Rajni. That was during Murattukkaalai shoot for a song. There were lots of people flocking the streets to see Rajni, then he was just a growing artist. But still managed to pull so much crowd. It looked like some election meet. Every streets were filled with lots of people in Gobichattipalayam and Coimbatore where the song was shot. It was well managed by director SPM and he even managed to keep a part of the same crowd in the song that appears in the movie too. It was just a beginning, later on just think how it would have increased. It was really tough to keep him outdoors and shoot.

    We : Sir, A personal question. You were with a beard recently. Was it some offering to god or prayer kind ?..

    He : Not like that. Whenever I used to have some festivals or marriage functions, I used to be at home for over 10 days. That was the period when I used to have a beard. I am 72 years old now. I never have used any cosmetics or face powder till date. Not only me, till date even Rajni has never used such things between the shoot of any of his 2 movies. When he completes a movie, you can immediately spot him with a beard. That is when he spends time with his friends and relaxes a bit till his next movie is started. That is the time he never wants to use any cosmetics and feel free. So he too sports a beard that time.

    We : He has helped many people. But he has never publicized anything. Do you know any such thing ?.. Why I am asking is because , many criticize his birth place when talks arise about it..

    He : There are many people who went from here and became successful in some other place and there are many others who came from other places and were successful here. It didn't happen with MGR itself. When people admire a person beyond caste, creed etc, no one can stop it. Cinema is beyond all caste, religion, place of birth etc. No one can do anything.

    We : Thats the reason those people named it as South Indian Film Association and not as Tamil Film Association.

    We : What do you think about his spiritualistic interest ?..

    He : Not only now, he used to be spiritual right from the beginning. When we used to work together, his shooting locations used to be close to his house - he used to call me to his home so that we could travel together. I too used to go and then he used to bath, apply ashes to his forehead and go and sit in the Pooja room for hours. He used to meditate a lot. Apart from praying, visiting temples etc there is a stage beyond all that. He has attained it long back.

    We : Did you ever felt that Rajni would grow so big ?.. Because you had written in a book that "There would be a history about you in this world"…

    He : Definitely not. Because Aarilirundhu aruvathu varai and Engeyo kaeta kural were the movies which he agreed to do half-heartedly. But then, sincerely put in his efforts to complete the movie well. So, I never thought he would go on to grow so big as a Superstar. He definitely wouldn't have thought so too. It all happened because of his sincerity not aim.

    He also used to ask me during Priya shoot : "Sir will this movie run successfully ?.. And how many days more will I survive in this industry ?.. ".. I used to tell - "Keep quiet. You will definitely grow well.." But he himself used to know that he had a unique style and activities that were not seen in anyone and with that he wondered if he could survive long and he used to agree to do 15 movies a year too sometimes, so that he could earn lot when he is at the top. But after Murattukkaalai's huge success, he became confident. He then realized his worth and also considering producer's well-being he also reduced the number of movies he acted in a year to 3 or 4 so that after one movie becomes a hit, he could sign in the next movie.

    To be Cont'd in PART 2…

    —————————————-
    Thanks Praveen. Yet again masterpiece from you.
    - Sundar

  20. tandavan tandavan says:

    Superb Praveen Sir.Thanx.Nice of u.

  21. Amar Amar says:

    First a big thanks to praveen for the translation… very wonderful interview. Very interesting information said by Panju sir. Very nice. Its very interesting like the u did the interview with Kitty sir n balasubramaniam. Waiting for the part 2

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates