You Are Here: Home » Featured, Flash from the Past » சூப்பர் ஸ்டாரின் படங்களில் பாம்பு செண்டிமெண்ட் வந்தது எப்படி?

சூப்பர் ஸ்டாரின் படங்களில் பாம்பு இடம்பெற்றால் அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகிவிடும் என்று ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது. மிகுந்த பொருட்ச்செலவில் படம் எடுக்கப்பட்டு, கோடிக்கணக்கில் அவரது படம் பிசினஸ் செய்யப்படுவதால், இந்த சென்டிமென்ட்டை உடைக்க எவரும் விரும்புவதில்லை. படம் ஓடினா சரி… என்று சூப்பர் ஸ்டாரும் இதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ - கண்டு கொள்வதில்லை.

இதுபோன்ற செண்டிமென்ட்டுகளிளெல்லாம் நம்பிக்கையில்லாத ஷங்கர் படத்தில் (எந்திரன்) கூட இது போன்ற காட்சி வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

சரி… இந்த பாம்பு செண்டிமெண்ட் எப்படி சூப்பர் ஸ்டாரின் படங்களில் வந்தது?

இது பற்றி பிரபல புகைப்படக்காரர் ரவி, குங்குமம் இதழில் கூறியிருப்பதாவது :

“நடிகை ஸ்ரீப்ரியா மூலமாக ‘பைரவி’ படத்தில் புகைப்படக்காரராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ரஜினிக்கு அப்போது ராகு தசை நடந்துகொண்டிருந்தது. ராகு தசையில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாம்புடன் தொடர்பு இருக்கும் என்பார்கள். அதானலோ என்னவோ, ரஜினி படங்களில் பாம்பு செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆனது. ரஜினி பாம்புடன் நடித்த முதல் படம் ‘பைரவி’ தான். அதன் பிறகு ‘தம்பிக்கு எந்த ஊரு’, தொடங்கி ‘படையப்பா’ வரை பல படங்களில் பாம்புடன் ரஜினி நடித்த காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது.

‘பைரவி’ ஷூட்டிங் முடிந்த கையோடு, ரஜினியும் கமலும் இணைந்து ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்பு தொடங்கியது. அதற்காக சிங்கப்பூர் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் ரஜினி. ஊருக்கு செல்வதற்கு முன்தினம், காளி என்னை அவரது வீட்டுக்கு அழைத்திருந்தார்.

காலை ஏழு மணிக்கு போனேன். ‘பைரவி’ படத்திற்காக அன்றைய பேப்பரில் விளம்பர் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் தாணு. அதில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்’ என்ற வாசகம் இருந்தது. அதை பார்த்ததும் ரஜினி பதறிவிட்டார். அந்தப் பேப்பரை என்னிடம் காட்டி “ரவி… ரவி… எங்கே பாரு! இப்படியே நம்மளை எத்திவிட்டு காலி பண்ணிடுவாங்க போல’ என பதற்றத்தோடு சொன்னார். எந்த பட்டத்தை பார்த்து பயந்தாரோ, அது தான் பின்னாளில் நிலைத்து நின்றது.

இன்றைக்கு புதுசாக நடிக்க வருகிற நடிகர்கள் கூட ஒரு பட்டத்தை போட்டுக்கொண்டு பெருமை அடிக்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுதி இருந்தும்கூட பயந்தவர் தான் சூப்பர் ஸ்டார். - இவ்வாறு கூறுகிறார் ரவி.

Also Check :
————————————————————————-
இந்த பாம்பு செண்டிமெண்ட் குறித்து சூப்பர் ஸ்டார் தூர்தர்ஷன் 1995 பேட்டியில் கூறியது என்ன?
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=511
————————————————————————-

[END]

4 Responses to “சூப்பர் ஸ்டாரின் படங்களில் பாம்பு செண்டிமெண்ட் வந்தது எப்படி?”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    SUPERSTAR patam kadavule koduthathu. Today Thalaivar's mega hit BAASHA in Sun tv @11a.m don't miss. Here now power cut, idiot jaya go to hell 12hr power cut per day

  2. kochadaiyaan kochadaiyaan says:

    இதுபோன்ற செண்டிமென்ட்டுகளிளெல்லாம் நம்பிக்கையில்லாத ஷங்கர் !!!!!
    ***********************AN********
    1.gentlemAN
    2.endhirAN
    3.anniyAN
    4,indiyAN
    5.mudhalvAN
    ***********************AN ****************
    roja - madhubala - gentleman madhubala
    bombay manisha - indiayan manisha koirala
    iruvar -aish —jeans -aishwarya rai
    dilse - manisha —- mudhalvan - manisha
    yuva - ranimukerje —- nayak - rani mukerje
    raavan aish ——— endhiran - aishwarya :) ———————-heroine sentiment —————-:)

    ————————————-
    He has rubbished about this in Vikatan Ques & Answer.
    (Jeans, Boys, Naayak, Sivaji ?)
    - Sundar

  3. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Logic is very simple. Name of Super Star is Sivaji Rao. Thalaivar himself clarifed to Vijay TV Gopinath that it should be prounounced as Shiv ji and also clarified that Shiv means Lord Shiva/Parameswaran. Hence snakes will not go out of the control of Thalaivar as he is Lord Shiva. That's the reason, snake could not do bite Thalaivar at the time of Annamalai shoot despite not stitching the mouth for the snake. Whereever Thalaivar goes, snakes follow. Trust the clarification is genuine.

  4. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

    இன்றைக்கு புதுசாக நடிக்க வருகிற நடிகர்கள் கூட ஒரு பட்டத்தை போட்டுக்கொண்டு பெருமை அடிக்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுதி இருந்தும்கூட பயந்தவர் தான் சூப்பர் ஸ்டார். – இவ்வாறு கூறுகிறார் ரவி.

    வாவ் கிரேட் .. இதுதான் நம்ம சூப்பர் ஸ்டார்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates