You Are Here: Home » Featured, Moral Stories » கொஞ்சம் உண்மை + கொஞ்சம் நம்பிக்கை = மாபெரும் நிகழ்வு! – நினைத்தேன் எழுதுகிறேன் – 3

ரு தேர்தலில் ராட்சத பலத்துடன் மெஜாரிட்டி பெறும் ஒரு அரசியல் கட்சி அடுத்த தேர்தலில் ஒற்றை இலக்க எண்கள் வாங்கி மண்ணை கவ்வுவது எப்படி?

அதே போல ஒரு குறிப்பிட்ட பிரச்னை குறித்த விழிப்புணர்வும், எழுச்சியும் கோடிக்கணக்கான மக்களிடம் வெகு சீக்கிரம் பரவுவது எப்படி?

த்தனையோ பேர் சொல்லியும் மக்களிடம் எடுபடாத கருத்துக்கள், ஒரு சிலர் சொல்லும்போது மட்டும் எடுபடுவது எப்படி?

இன்றைக்கு இருப்பது போன்ற தொலை தொடர்பு, தகவல் தொடர்பு சாதனங்கள், (மொபைல், சாட்டிலைட் டிவி etc.etc.) எதுவும் இல்லாத காலத்திலேயே - மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்த காலகட்டங்களிலேயே - சரித்திரத்தில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்ட போராட்டங்கள் தோன்றியது எப்படி? மாபெரும் புரட்சிகள் ஒரு இரவில் வெடித்தது எப்படி?

இவற்றுக்கெல்லாம் சுவாரஸ்யமான - அறிவியல் ரீதியிலான - மனோதத்துவ காரணம் ஒன்று உண்டு.

குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!

1952 ஆம் ஆண்டு ஜப்பான் அருகே உள்ள ஒரு தீவுக்கு அருகாமையில் ஆப்பிள், கொய்யா உள்ளிட்ட பழ வகைகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. கடலில் மிதந்த ஆப்பிள் பெட்டிகள் தீவுக்கு அருகே கரை ஒதுங்க, அதை அந்த தீவில் உள்ள குரங்குக் கூட்டம் கண்டது.

ஆவலோடு ஆப்பிள்களை குரங்குகள் ஒரு கை பார்த்தன. அந்த குரங்கு கூட்டத்தில் உள்ள புத்திசாலி குரங்கு ஒன்று, மண் படிந்திருந்த ஆப்பிளை தண்ணீரில் முக்கி கழுவி பின்னர் சாப்பிட, இதை பார்த்த மற்ற குரங்குகளும் அதே போலச் செய்ய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் அனைத்து குரங்குகளும் ஆப்பிளை தண்ணீரில் முக்கி கழுவிவிட்டு பின்னர் தான் சாப்பிட்டன.

இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. Ok?

ஆனால், இந்த தீவுக்கு அருகே சில கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு தீவில் உள்ள குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் பழங்கள் கொடுத்தபோது, அவை பழங்களை நீரில் கழுவி பின்னர் சாப்பிட்டன என்பது தான் ஆச்சரியம். இதற்க்கு முன்பு அவைகளுக்கு அந்த பழக்கம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப் புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் பிறகு நடந்த அதிசயம்.

இந்த அதிசயத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த  போது ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்தார்கள். எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று உணர்ந்தனர். அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு “நூறு” என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.

எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று உணர்ந்தனர்.

இந்த தத்துவத்தை தான் “நூறாவது குரங்கின் விளைவு” (Hundredth Monkey Effect / Hundredth Monkey Phenomenon) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின் வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையை எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம். பல ஏளனங்களை தாண்டி மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டியவுடன் அது ஒரு அலையாக மாறிவிடுகிறது. அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.

எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம்.

குறிப்பிட்ட ஒருவர் மனம் மாறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன் அதே அளவு எண்ண அலைகள் (Thought Frequency) உடைய பலரது மனமும் மாறிவிடும். அந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியபிறகு (ஒரு நூறு பேர் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) சட சடவென்று அனைவரது எண்ணமும் மாறிவிடும். புரட்சிகள், எழுச்சிகள் வெடிப்பது இப்படித்தான்.

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி ஏன் சொன்னார் என்று இப்போது புரிகிறதா?

உதாரணத்திற்கு உ.பி. தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். வீண் ஆடம்பரம், தற்புகழ்ச்சி, தனக்கு தானே சிலைகள் வைத்துக்கொண்டது என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், சென்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி பெற்ற மாயாவதி அரசு தற்போது மக்களின் மௌனப் புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. சரியான மாற்று அல்ல என்றபோதும், ‘சமாஜ்வாடி கட்சியே மேல்’ என்ற முடிவுக்கு மக்கள் வந்து, அதை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியிருக்கின்றனர். (என்ன செய்வது? தமிழக மக்களை போலவே அவர்களுக்கும் சரியான மாற்று இல்லை.) ஆனால் இந்த உண்மை புரியாமல், ‘இந்த சமூகம் எங்களுக்கு ஓட்டு போடலை, அந்த சமூகம் எங்களுக்கு ஓட்டு போடலை, அந்த ஜாதி மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட்டாங்க’ அப்படி இப்படின்னு புள்ளிவிபரங்களை சொல்லி, அவங்களை அவங்களே ஏமாத்திக்கிறாங்க…. மக்களையும் முட்டாளாக்குறாங்க!

வீண் ஆடம்பரம், தற்புகழ்ச்சி, தனக்கு தானே சிலைகள் வைத்துக்கொண்டது என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், சென்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி பெற்ற மாயாவதி அரசு தற்போது மக்களின் மௌனப் புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.

தமிழக மக்களை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது

இங்கு தமிழ்நாட்டில், தற்போது அதிமுக அரசுக்கு எதிரான ஒரு அலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. கடும் மின்வெட்டு, சாலை வசதியின்மை, அநியாய பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என பலவேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் மக்கள். தமிழகமே வெந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் முதல்வரை புகழ்ந்து காணப்படும் ‘காக்கா’ பேனர்கள், தனி நபர் துதிபாடு, போன்றவற்றால் மக்கள் சொல்ல இயலாத கோபத்தில் இருக்கின்றனர். ஆள்வோருக்கு எத்தனையோ பொன்னான வேலைகள் காத்திருக்க ஆட்சிக் கட்டிலில் ஏறி ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், மக்களுக்கு பயன் தரும் விஷயங்கள் எதையும் ஜெ. செய்யாது, தி.மு.க. ஆட்சியில் கட்டிய கட்டிடங்களை மாற்றுவதும், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் சோதனையிடுவதும், சசிகலா உறவினர்கள் மற்றும் ஆட்களை கைது செய்வதும் தான் (இதுக்கு காரணமே வேற) தற்போது தவறாது நடந்துவருகிறது.

தமிழகமே வெந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் முதல்வரை புகழ்ந்து காணப்படும் ‘காக்கா’ பேனர்கள், தனி நபர் துதிபாடு, போன்றவற்றால் மக்கள் சொல்ல இயலாத கோபத்தில் இருக்கின்றனர். மாயாவதி அரசு தூக்கி எறியப்பட்டதை போல அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்த அரசு தூக்கி எறியப்படலாம். தமிழக மக்களை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

கொலை கொள்ளைகளை நடக்கும் முன் தடுக்க வேண்டிய புலானாய்வு போலீசாரின் திறமை, அரசியல் பகைவர்களை உளவு பார்ப்பதிலேயே செலவழிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், சென்ற தேர்தலை போலவே, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் கிட்டாது போகலாம். மாயாவதி அரசு தூக்கி எறியப்பட்டதை போல அடுத்த சட்டமன்ற தேர்தலில் இந்த அரசு தூக்கி எறியப்படலாம். தமிழக மக்களை எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஜெ.வை பர்கூரிலேயே தோற்கடித்தவர்கள் அவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். (குறள் 553)

(பொருள் : நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.)

நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா?

நல்ல விஷயங்களை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்

உங்களை சுற்றியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் உங்கள் மனதில் தோன்றினால் அதற்கு உடனடியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டு துவக்குங்கள். தாமதமே வேண்டாம். அது நடைமுறையில் ஒத்துவருமா? இல்லை எவராவது கேலி கிண்டல் செய்வார்களா என்று ஒரு போதும் தயக்கம் கொள்ளாதீர்கள். உங்களது முயற்சிகளில் தடைகளோ குறைகளோ இருக்குமானால், அதை பொருட்படுத்த வேண்டாம். அது நாளடைவில் சரியாகிவிடும். இன்றைக்கு நாம் பின்பற்றும் பல விஷயங்கள் எல்லாம் அது தொடங்கும்போது இருந்த விதத்தில் இல்லை. காலப்போக்கில்  மெருகூட்டப் பட்டவையே.

நல்ல மாற்றங்களில் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள்

அதே போல, பிறர் ஆரம்பித்துள்ள உங்களை கவர்ந்த நல்ல விஷயங்களிலும் தயங்காது பங்கு கொள்ளுங்கள். அதற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்.  உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு ஒரு விதையாக இருக்க முடிந்தால் அதுவல்லவா  அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள், சமூக மாற்றங்கள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம் பங்கிற்கு நாம் ஏதாவது செய்யவேண்டாமா? நாம் மறையும் முன், இந்த உலகத்தில் நமது அடையாளமாக ஏதாவது விட்டு செல்லவேண்டாமா?

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று பராசக்தியிடம் சூளுரைத்த பாரதியை போன்று நாமும் இருப்போம்.

நடக்குமோ நடக்காதோ நல்ல விஷயங்களை இன்றே உங்கள் எண்ணங்களில் பயிர் செய்யுங்கள். அவை நடக்கும் என்று மனப்பூர்வமாக நம்புங்கள். நீங்கள எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் அவை நடக்கும்.

கொஞ்சம் உண்மை + கொஞ்சம் நம்பிக்கை = மாபெரும் நிகழ்வு!

சூப்பர் ஸ்டார் - கே.வி.ஆனந்த் கூட்டணி தொடர்பாக முதன்முறையாக நாம் நமது பதிவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது நினைவிருக்கலாம். அப்போது என்னிடம் நிறைய பேர், “எந்த நம்பிக்கையில் இந்த செய்தியை நீங்கள் எழுதினீர்கள்? உங்கள் ஆசையை வெளியிட்டீர்கள்? அது நடக்குமா?” என்று என்னை ஏளனமாக கேட்டனர். ஆனால் இன்று…? அந்த செய்தி உண்மையாகிறதோ அல்லது பொய்த்துப் போகிறதோ… அது பற்றி எனக்கு கவலை இல்லை.

“இப்படி ஒரு கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இந்த கூட்டணி அமைந்தால், நன்றாக இருக்கும்!” என்ற எண்ணத்தை சூப்பர் ஸ்டாரிடம் கொண்டு போய் சேர்த்தாகிவிட்டது. அதுவே நமக்கு போதுமே! இதுவரை இல்லையென்றாலும், இனி நிச்சயம் சூப்பர் ஸ்டார் கே.வி.ஆனந்துடன் ஒரு படம் செய்வதை பற்றி பரிசீலிப்பார் அல்லவா?

ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி செய்திகளையும் இந்த நம்பிக்கை அடிப்படையில் தான் வெளியிடுகிறேன். அவரது அரசியல் பிரவேசம் குறித்து எத்தனையோ ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர் வரமாட்டார் என்பதற்கு என் நண்பர்கள் சிலர் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. ஆனால் அவர்களுக்கு நான் அளிக்கும் பதில் ஒன்று தான். “அவர் வரமாட்டார் என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் நூறு என்றால்… அவர் வருவார் என்பதற்கு நான் கூறும் காரணம் ஒன்றே ஒன்று தான்: நம்பிக்கை!” அவ்வளவு தான்!

“அவர் வரமாட்டார் என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் நூறு என்றால்… அவர் வருவார் என்பதற்கு நான் கூறும் காரணம் ஒன்றே ஒன்று தான்: நம்பிக்கை!” அவ்வளவு தான்!

நாளை ஒருவேளை ரஜினி அவர்கள் எதிர்பாராதவிதமாக அரசியலுக்கு வர நேர்ந்தால் - அப்போது ஒரு ஓரத்தில் என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.

எனது நம்பிக்கையையும், ‘வருவார்’ என்று கருதும் உங்கள் நம்பிக்கையையையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேண்டுகோள்

ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசத்தோடு மட்டும் இந்த பதிவை இணைத்து பார்த்து, இந்த பதிவின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யவேண்டாம். அதற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டு நிஜ வாழ்க்கையில் ஒரு பெரிய வட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள, இது உத்வேகமாய் இருக்கவேண்டும். அப்போது தான் நான் மகிழ்ச்சியடைவேன். இதை படிக்கும் ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் இதை செயல்படுத்த முன்வந்தாலே எனக்கல்ல வெற்றி…நமக்கு தான்!!!!!!!!!!!!!!!!

வேண்டாம் எதிர்மறை சிந்தனை!

மற்றபடி நிஜ வாழ்வில், நெகட்டிவான விஷயங்கள் அனைத்திலும் இருந்தும் & எதிர்மறையான நபர்கள் அனைவரிடமிருந்தும் ஒதுங்கியே இருங்கள்! அது உங்கள் வாழ்க்கைக்கே நல்லது!!

எங்கேயும் எப்போதும் நல்லதையே பேசுங்கள்; நல்லதையே நினையுங்கள்; நல்லதே செய்யுங்கள். தாமதமானாலும்…… நல்லதே நடக்கும்!

இன்றைக்கு சரித்திரத்தில் சான்றுகளாகி நிற்கும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் ‘முடியாது’ / ‘நடக்காது’ என்று பலரால் சொல்லப்பட்டவையே!

Also Check :
——————————————————————————
‘நன்றி’ மட்டும் போதுமா? – நினைத்தேன், எழுதுகிறேன் – 1
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13896

“உண்மையான ரஜினி ரசிகன் யார்?” நினைத்தேன்… எழுதுகிறேன் — 2

http://onlysuperstar.tamilmovieposter.com/?p=13930
——————————————————————————

[END]

26 Responses to “கொஞ்சம் உண்மை + கொஞ்சம் நம்பிக்கை = மாபெரும் நிகழ்வு! – நினைத்தேன் எழுதுகிறேன் – 3”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Thank you for sharing Unknown incident. Positive thoughts will make vibration. Natula ippa nadakuratha pakum pothu Thalaivar vanthu kapathida matara nu thonum . Super article na..
    மின்வெட்டு , price hike..etc issue la Jayalalitha va thati keka aal illa. People are silent.. Waiting for election?

  2. N.EASWAR N.EASWAR says:

    எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது. ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் ரசிகர்களுக்கு அவர் கூறிய அறிவுரை நினைத்து பார்க்கிறேன். அந்த வீடியோ கிளிப் உங்களிடம் உள்ளதா.

  3. murugan murugan says:

    அருமையான பதிவு

    அரிய கருத்தை எளிய முறையில் விளங்க வைத்தமைக்கு மிக்க நன்றி

    அந்த நூறாவது குரங்கைப்போல உடனே மாறமுடியவில்லையானாலும் அதற்க்கான முயற்ச்சியை எடுப்போம் !!!

  4. balachandar balachandar says:

    "ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்." என்பதற்கு என் மனதில் ஒன்று தோன்றி இருக்கிறது..சொல்ல வேண்டும் என்று நினைக்கிறன் சொல்கிறேன்.எந்த ஒரு விஷயமும் improvement என்கிற விஷயம் வேண்டுமானால் அதில் updation எப்போதும் இருந்தால் நல்ல இருக்கும்.நம் நாட்டில் எத்தனையோ இயற்கை வளங்கள் இருக்கிறது.எத்தனையோ செல்வ செழிப்பு இருக்கிறது.அத்தனைக்கும் விட நமக்கு ஒரு பெரிய சக்தி என்ன என்று யோசித்தால் மக்கள் தொகை.மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இருந்தாலும் கூடி விட்டது என்று சொல்லி புலம்புவதில் அர்த்தம் இல்லை.மாறாக அதில் இருக்கும் பலம் பற்றி யோசிக்கலாம்.100 படை வீரர்கள் 10000 படை வீரர்கள் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால் பளிச்சென்று 10000 வீரர்கள் சிறந்தது என்றே சொல்கிறோம்.அது போல் தான் 120kodi மக்கள் இருகிறார்கள் என்றால் உலக அளவில் சாதிபதற்கு அதிகம் பேர் வருவார்கள்.

    சரி விஷயம் அது இல்லை ..இவ்வளவு விஷயங்கள் இருந்தும் நம் நாடு இன்னும் முன்னேறும் நாடாக இருப்பதற்கு ஏன் என்று யோசிக்க வேண்டும் அல்லவா?கேட்டால் சிலர் கூறுவார்.ஜப்பானிய மக்கள்,அமெரிக்க மக்கள் புத்தி சாலிகள்.உழைப்பாளிகள்..நம் ஆட்கள் இப்படி இல்லை என்று கூறுவார்.அப்படி எல்லாம் இல்லை.எல்லாவற்றிற்கும் தலைவர் பாபாவில் கூறியது "ஒருநாடுல தலைவன் ஒழுங்கா இருந்த தான் நாடு நல்ல இருக்கும்னு."அது போல் நம் நாட்டில் politics விசயத்துல எந்த வித updation இல்லாமல் போனது முக்கியமான காரணம்.உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஒருவன் இருமுறை தான் அதிபராக முடியும். மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும்.ஆனால் அமெரிக்காவில் இது மட்டும் தான் தெரியும்..

    நம் நாடு அரசியல் இப்படி இருக்க வேண்டும்

    1 .ஒருவன் இருமுறை தான் mla /mp /மினிஸ்டர் இருக்க வேண்டும்.இருமுறை இந்த பதவியில் நீடித்து விட்டால் அந்த நபரை சேர்ந்த குடும்ப உறுபினர்கள் யாரும் 30 வருடத்திற்கு தேர்தலில் நிற்க கூடாது.

    2 .இது அரசியல் கட்சியின் தலைவர் பதவியிலும் கடைபிடிக்க வேண்டும்.

    3 .நாட்டில் இரு கட்சி தான் இருக்க வேண்டும் என்று இல்லை.யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.

    4 .யார் மீதாவது ஊழல் புகார்( எதிர்கட்சிகள் சொல்லும் புகார் அல்ல..எதாவது லோகாயுக்டா போன்ற அமைப்பு ) வந்து விட்டால் தீவிர அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்.

    இதில் உங்களுக்குள் சில மாற்றுகருத்துக்கள் இருக்கலாம்.எனக்கு கூட முதல் 3 வரிகளில் மட்டுமே முழு திருப்தி.4 வது வரியில் திருப்தி இல்லை.இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டேன்…

  5. s.vasanthan s.vasanthan says:

    தலைவர் எப்போது என்ன செய்தலும் அது நன்மைக்கே என்று எப்போதும் நம்புவான் உண்மையான மனிதன்(ரசிகன்) ,சுந்தர் தேங்க்ஸ் .

  6. muthu muthu says:

    நல்ல பதிவு …நன்றி

  7. karthik panchavarnam karthik panchavarnam says:

    இந்த பதிவு எனது ப்ளாக் இல் உங்கள் பெயரில் இடம் பெற விரும்புகிறேன் தங்கள் அனுமதியுடன்.. கார்த்திக் பஞ்சவர்ணம்

    ——————————-
    என் பாக்கியம். மிக்க நன்றி.
    - சுந்தர்

  8. chithamparam chithamparam says:

    i also wish to share this on by blog
    all 3 are mindblowing

    ——————————
    Thanks Chithambaram.
    - Sundar

  9. R O S H A N R O S H A N says:

    //“அவர் வரமாட்டார் என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் நூறு என்றால்… அவர் வருவார் என்பதற்கு நான் கூறும் காரணம் ஒன்றே ஒன்று தான்: நம்பிக்கை!” அவ்வளவு தான்!//

    சூப்பர் ஜி……இந்த மாதிரி பாசிடிவ் ஆன எண்ணங்கள் தான் நம் ரசிகர்களை இன்னும் துடிப்போடு வைத்திருக்கிறது……its a refreshing post on our fan's long wish……..

    //எங்கேயும் எப்போதும் நல்லதையே பேசுங்கள்; நல்லதையே நினையுங்கள்; நல்லதே செய்யுங்கள். தாமதமானாலும்…… நல்லதே நடக்கும்!//

    நல்ல பல விஷயங்கள் இந்த மாதிரி அடிக்கடி போஸ்ட் பண்ணுங்க ஜி…..ரொம்ப useful ah இருக்கும்……

  10. Mano Mano says:

    Wow good one sundar…. Really great article… Thalivar should be proud of fans like u… Take care of your health… The world needs people like u.

  11. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி, தங்களுடைய சிறந்த டாப் டென் பதிவுகளில் இதுவும் ஒன்று. எண்ணங்களை எழுத்தாக்குவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதுவும் இதுபோன்ற மிகவும் நுணுக்கமான சூட்சுமமான கருத்துகளை பதிவு செய்வது மிக மிக கடிமான விஷயம் ஜி.
    .
    திமுக ஆட்சியை மக்கள் அகற்றி ஒரு ஆண்டுகூட நிறைவேறாத வேலையில், தற்பொழுதைய ஜெயலலிதா ஆட்சியை மக்களை வேதனையில் தள்ளியுள்ளது. இவர்கள் ஆட்சியின் லட்சணம் நாம் சொல்லி எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
    .
    ஆனால், தற்பொழுது சூடுபிடித்துள்ள சங்கரன்கோவில் இடைதேர்தலில் நமது ரசிகமன்றதினர் நடுநிலை வகிக்காமல் அதிமுக கட்சிக்கு பகிரங்க அதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்துவருதாக செய்திகள் வருகிறது. இது தான் நம்மை போன்ற ரசிகர்களுக்கு மன வேதனையை தருகிறது.
    .
    அரசியல் அனாதைகள் என நமது ரசிகர்களை சிலர் சொல்வது தற்பொழுது தெளிவாக தெரிந்து வருகிறது. தலைவர் இன்னமும் அமைதியுடன் இருப்பது மிக மிக விரக்தியை தருகிறது. குறைந்த பட்சம் தலைவர் ஒரு அறிக்கையாவது தலைவர் வெளியிட வேண்டும். இல்லையேல் அப்பாவி ரசிகர்கள் மெம்மேலும் பாதிகபடுவது தொடர்கதையாகிவிடும்.
    .
    rajnikanth will rule tamil nadu

  12. rajinivenu rajinivenu says:

    இது உங்கள் நம்பிக்கை மட்டும் இல்லை கோடான கோடி ரசிக பெருமக்களின் ஆசை மட்டும் இல்லை நம்பிக்கையும் அதுதான் அந்த விடியலை நோக்கி தான் எல்லோரும் காத்திருப்போம்

  13. Sankaranarayanan Sankaranarayanan says:

    அற்புதம் அற்புதம் மிக மிக அற்புதம். நல்ல எண்ணங்களை விதைத்து வரும் எங்கள் சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி.

  14. PRADEEP KUMAR PRADEEP KUMAR says:

    Sundar.. Where is Mrs. Krishanan Madam..?

    ——————————-
    Her mother fell sick last year and she needed to take care of her all 24×7. I don't know after that.
    - Sundar

  15. dr suneel dr suneel says:

    ஜி,

    உங்கள் எண்ணங்களில் ஏற்பட்ட முதிர்ச்சி எழுத்தில் தெரிகிறது..

  16. Praveen Praveen says:

    Translation

    Some truth + some confidence = Great Phenomenon

    Do you know why does a Political party which wins an election with a huge majority once and loses even the deposit in the next elections and just finishes off with a single digit results ?

    Do you know why the awareness and upsurge for some serious national issues spread so fast among the people ?

    Do you know why people obey only a few persons (leaders) and give ear to their words alone, when they don’t care others ?

    Do you know how did all the people joined together in the past overnight to fight for their freedom, when there were no present technologies like mobile or satellite TV or to get any updates or to keep themselves informed about the nation’s situation ?

    All these have a scientific and an interesting reason or answer behind them.

    The lesson that monkeys taught!

    In the year 1952, a freight vessel which carried fruits like Apple and Guava, suffered an accident and drowned near an island in Japan. When the wooden cartons containing those Apples and Guava reached the shore floating, the monkeys which were in the island happened to see them. All the monkeys started tasting them out of joy. An Intelligent monkey among them decided to dust the sand that was on the fruit, so it took the fruit to the waters to wash it and then decided to taste it. Seeing one monkey do it, rest of the monkeys also did the same.
    There is nothing surprising in this. Ok ?

    But, there was another island close to this island, where the tourists offered fruits to the monkeys there. Those monkeys present in that island, also started to wash the fruit and then consumed it. This was what was surprising to many. Because earlier they didn’t have that habit. Then almost all monkeys in and around Japan started following the same procedure.

    Scientists and Researchers wanted to know the reason behind that. So, when they observed and conducted a few experiments on this research, they came to a conclusion that when every 100th monkey (they numbered for Ex.) was reached with this kind of a habit, the mindset or the behavior it carried used to travel through their mind waves to other monkeys as well.

    This was later written in a book called 100th Monkey Phenomenon by Author Ken Keyes. Reaching such a number, which they considered the threshold was only difficult. But once it was reached, later on it used to travel through their minds to other living beings as well was what they concluded. They infact told that this fact suited well to human beings as well. Initially to begin such a new habit or to find it in ourselves, it is really difficult. But once we have found such a thing, it automatically circulates through the mind waves to others too and they would also follow the behavior, once it reaches the threshold number of people. And this leads to a big change in their life.

    If someone tends to change his mind, through the same thought frequency that circulates as waves through their mind – others would also tend to get the same change in their mindset. And people rise for a situation by this effect only.

    Take for example, U.P Elections. Mayawati’s Govt. ruled the state winning the previous elections big time with a huge majority. But she forgot people’s welfare and started erecting statues of her own etc and they ruled the Govt. however they wanted, which led to a mindset change in the people of the state. And they wanted some change to happen for them. So, this time they decided to choose Samajwadi Party, which did not campaign big or have had any grandeur effect with people so far in U.P. But people without any hopes on them, decided to vote for them and suddenly needed a change and decided to go with Samajwadi Party, seeing all the after-effects of voting to Mayawati led party. (Same applies to the people of TN who expected a change and got it – but is of no use).

    POLITICIANS – Please DO NOT UNDER ESTIMATE TAMIL PEOPLE

    The present situation or the people’s mindset now is against AIADMK which is ruling the state. AIADMK’s Jayalalithaa who won the elections this time is always busy in changing the buildings constructed by the previous DMK Government or rename it or renovate it as needed, busy raiding the houses of a few Old officers from the DMK, arresting the relatives of Sasikala for enquiry etc. (though the reason differs). The Policemen who need to PREVENT the thieves from looting banks or jewellery shops which frequently happens in the city are busy watching or protecting the present Govt. for their own self-use. Already people have a few negative effects in their mind – regarding the present situation of the ruling party which brought in rise in the price of milk, food products, bus travel expense, petrol etc and not to forget heavy powercut. If this continues, Jayalalithaa should be ready to suffer in the coming elections from the people of TN, whose mind may require a change for good. Being a 100th monkey which can bring in such an effect is definitely a great thing. Why shouldn’t you be one to bring in such an effect to the other people through their minds ?.. Think about it..

    TAKE PART IN SOME GOOD CHANGES HAPPILY…

    If you want to start something good, please start off immediately. Do not hesitate much. Do not think if it will affect you further or if people would criticize you for it etc. Because time will take care of it all. Same way, if someone starts something good – do not hesitate to take part in it as well. Happily take part in it and offer your support. If you can be the 1st among those 100 to instill those values in their minds, that is what is a meaningful life !… So many political or social changes have taken place, when one of the person starts a moment and many tend to participate in such a change. We should also leave our footprints atleast in something for having born in this World na ?… Think about it…

    Some truth + some confidence = Great Phenomenon

    We had released a news article about Superstar-K.V.Anand combo few months back itself. When I happened to update such an article here, many readers questioned me – How can you write such an article ?.. Do you believe that it will happen or is it your wish ?.. I did not care if the news later on became a truth or was just a rumour.. “This combo can happen.. If at all it happens, it is going to be huge and interesting.” – And I happened to carry this kind of a feel and it would have reached Superstar for sure right ?… And he would definitely think about it…
    That’s enough for me…

    There were a lot of news regarding Rajni’s political entry. Those journalists also tend to write it with this belief in their mind only. And regarding Rajni’s political entry, lots of fans have lost hopes and some do not even want to talk about it. Few of my friends also say that he will definitely not come. They also give their own reasons for it too. Valuable point. But I give them only 1 reply. You may have 100 reasons with you that he will not to enter into politics. But, I have only 1 reason that he will enter politics. And that’s – BELIEF !… Yes, I believe that one fine day he will come to politics. And in future if he enters so, just think about me that moment.

    REQUEST

    I request all of you to see this article as an inspiration in your lives to carry on with your lives well and if you find any difficulty in your life and if you tend to read this article, it will certainly help you as a stepping stone for your success is what I feel. And do not take this article as inspiration for Rajni’s political entry alone.

    DO NOT THINK NEGATIVE

    Do not think negative in your life. Also , tend to avoid people who are negative and who talk bad. Stay positive, be good, do good. Life will definitely be valuable. Even if it’s late, definitely something good will be awaiting. So wait. And infact, so far in our society what all changes have happened were all initially opposed as “Impossible”/ “No chance” kind. But they all happened. Remember that !… 

    —————————————————————-
    Thanks for the spectacular work Praveen.
    - Sundar

  17. Anonymous says:

    உங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ள, மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை தூண்டும் விதத்தில் இருக்கிறது…உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே …வெறும் பொருள் கொடுத்து உதவுவது மட்டுமே தானம் அல்ல….தன்னுடைய அறிவை / கருத்தை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் தானமே…அந்த வகையில் இந்தப் பதிவு பயனுள்ளதே..!

    ***

    "நூறாவது குரங்கின் விளைவு" இன்றைய உலகில் அதிக அளவில் தவறாக கையாளப்பட்டு வருகிறது என்பதே உண்மை…தினசரி சாலைகளில் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன…அவற்றில் போக்குவரத்து விதிகளை மதித்து செல்லும் வாகனகள் குறைவு…ஒருவர் சிக்னலை மீறினால், அவர் பின்னால் 10 பேர் சிக்னலை கடந்து, நெரிசல் உண்டாக்கி விடுகின்றனர்…தினமும் நாம் காணும் காட்சி இது….இது போல பல நிகழ்வுகளை நாம் தினம் காணலாம்…இதற்கு மாற்று என்னவெனில் ஒவ்வொருவரும் மாற்றத்தை தனக்குள் விதைக்க வேண்டும்…மாற்றத்தை தன்னிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்…அது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்…!

    ***

    "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  18. Anonymous says:

    என்ன ஒரு அருமையான கதை!! "மனதில் எப்பவும் பாசிடிவான கருத்துகளை மட்டுமே நினையுங்கள் என்று கூறிய சுந்தர் அண்ணாவிற்கு "ஹட்ஸ் ஆப்" :)
    அரசியல் பொறுத்தவரை தலைவர் எப்போதே பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டார்!! ஆரம்பத்திலிருந்து ஒரு நடிகராக சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்!!! கூடிய சீக்கிரம் முழு நேரமாக தலைவர் களத்தில் இறங்கி குரல் கொடுப்பார்!!!

  19. Sudhagar_US Sudhagar_US says:

    எண்ணங்களே செயலாகிறது! நல்ல சிந்தனை.

    நன்றிகள் சுந்தர்.

  20. Balaji Balaji says:

    Such a wonderful and fantastic article…sundarji..

    Faith is very important for all us….

    God with us……don't worry, thalaivar surely will come and rule the country….

    Cheers,

    Balaji .V

  21. Karthi Karthi says:

    சிறந்த பதிவு சுந்தர். வாழ்த்துக்கள். தாங்கள் அடுத்தகட்டத்திற்கு சென்று கொண்டுளீர்.

  22. harisivaji harisivaji says:

    இதில் பல விசயங்கள் ஒளிந்திருக்கிறது

    அனைத்தும் பார்க்கும் பார்வையில் உள்ளது

    ஒருகாலத்தில் ஏளனாமாக பார்த்த பல இன்று நடந்து கொண்டு இருக்கிறது

    ஏன் தலைவரை பற்றி வரும் ஜோக் என்று பல சல்லலாம்

    இதற்கு சிறந்த உதாரணம்

    தலைவர் உலக கோப்பை கிரிக்கெட் பார்க்கிறப்போ

    commentator தலைவரை பற்றி சிறந்த நடிகர் என்று சொன்ன பின் ..அப்போ கிரிக் இன்போ தலத்தில் ..தலைவரை பற்றி வந்த ஜோக் ..ரஜினி வந்துட்டார் இந்திய வெற்றி பெரும் என்று நக்கலாக சொன்னார்கள் (அப்பொழுது தான் சச்சின் அவுட் ஆனா சமயம்)…..

    இது ஒரு விளையாட்ட சொன்னது என்றாலும்

    இன்று அது உண்மை ஆகிவிட்டது

    இது நம்மை போல உள்ள ரசிகர்களின் நம்பிக்கை தானே காரணம்

  23. arulselvan arulselvan says:

    ஜி,

    இந்த மாதிரி எல்லாம் எழுதுவீங்களா? கலக்கிடீங்க.

    ————————————-
    நீங்க நல்லவரா இல்லே கெட்டவரா?
    - சுந்தர்

  24. **Chitti** **Chitti** says:

    @சுந்தர்ஜி அவர்களுக்கு,

    **************

    இப்படிப்பட்ட ஒரு பதிவை போட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே (என்னை பொறுத்தவரை) உங்களின் முதல் பத்து பதிவுகளில் இதுவும் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    ***********

    "குரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை!" - மிகவும் அருமை. பழங்காலத்தில் எப்படி அனைத்தும் (எந்தவொரு வசதியும்) இல்லாமல் நடந்தது என்று மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    **********

    "“நூறாவது குரங்கின் விளைவு” (Hundredth Monkey Effect / Hundredth Monkey Phenomenon) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார். "

    - இதெல்லாம் எங்கதான் படிக்கிறிங்களோ தெரியலங்க..

    ***********

    அதைவிட, இந்த தத்துவத்தை இந்தகால நிகழ்சிகளோட ஒப்பிட்டு, ஒரு குட்டி ரஜினியாவே மாறிடிங்க போங்க பாஸ். don't edit this pls…

    ***********

    "நல்ல விஷயங்களை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள்".

    "நல்ல மாற்றங்களில் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள்".

    - அருமையான பொருள் நிறைந்த எழுத்துக்கள். ஒரு எழுத்தாளனாகவே மாறி விட்டீறையா நீங்கள்.

    *********

    "நான்

    வீழ்வேனென்று நினைத்தாயோ?"

    - கண்டிப்பாக நான் விழ மாட்டேன். எனக்கு ஒன்னும் பேராசை எல்லாம் இல்லீங்க. ஒரு பத்து பேர் திரும்பி பார்த்தா போதும். என் நிலைமைக்கு அதுவே பெரிய சாதனை தான். (இறப்பதற்குள்).

    **********

    “அவர் வரமாட்டார் என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் நூறு என்றால்… அவர் வருவார் என்பதற்கு நான் கூறும் காரணம் ஒன்றே ஒன்று தான்: நம்பிக்கை!” அவ்வளவு தான்!"

    - simply great!!!

    ************

    "ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசத்தோடு மட்டும் இந்த பதிவை இணைத்து பார்த்து, இந்த பதிவின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யவேண்டாம்."

    - உங்களை பற்றி எங்களுக்கு தெரியாத என்ன. எவ்வளவு பெரிய உண்மையையும், தத்துவத்தையும் சொல்லி இருக்கீங்க…

    **************

    "அதற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டு நிஜ வாழ்க்கையில் ஒரு பெரிய வட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள, இது உத்வேகமாய் இருக்கவேண்டும். அப்போது தான் நான் மகிழ்ச்சியடைவேன். இதை படிக்கும் ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் இதை செயல்படுத்த முன்வந்தாலே எனக்கல்ல வெற்றி…நமக்கு தான்!!!!!!!!!!!!!!!!"

    - கண்டிப்பாக நானும் அதில் ஒருவனாக இருப்பேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

    ***********

    "மற்றபடி நிஜ வாழ்வில், நெகட்டிவான விஷயங்கள் அனைத்திலும் இருந்தும் & எதிர்மறையான நபர்கள் அனைவரிடமிருந்தும் ஒதுங்கியே இருங்கள்! அது உங்கள் வாழ்க்கைக்கே நல்லது!!"

    - 100% right.

    **************

    Totally, this article is simple fabulous.

    *****

    ***

    **சிட்டி**.

    ஜெய் ஹிந்த்!!!

    Dot..

  25. **Chitti** **Chitti** says:

    My dear Rajni Aficionados,

    ***************

    I hope all of you are doing fine and great.

    *********

    I sincerely appreciate Sundarji for penning out such a wonderful article and at the same time, the translation work done by Mr. Praveen is also really laudable. My best wishes to both of you.

    *****

    My points: (though everything has been told by Sundarji)

    1. Keeping ourselves with confidence and goodness through out the life is most important in this 'Kaliyuga'.

    2. Unless, then we will fell into the pit of current unpleasant state like 95% people being in this world.

    3. Be good; Do good - (told by Thalaivar); Be happy and make others happy. Almost both are same.

    4. Everybody can become like Dr. Vaseegaran in Enthiran. - that's everybody can make a wonderful, huge fabulous chitti out of us. That kind of knowledgeable, kindness and spiritual all in higher levels.

    ********

    Once again for this great initiative, I sincerely thank and appreciate Sundarji. God bless you.

    ***

    By,

    **Chitti**.

    - Be happy and make others happy.

    "Thoughts becomes Things".

    Dot.

  26. swami swami says:

    சுந்தர்,

    Although we may want our OSS to enter politics, I think it may not happen. He has returned from his death bed. So please let us not trouble him. He should live for 100 years and be in good health. That's what we all want.

    Thanks.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates