









You Are Here: Home » Featured, VIP Meet » “தான் எம்.ஜி.ஆரைப் போல வரவேண்டும் என்று ரஜினி எந்தக் காலத்திலும் ஆசைப்பட்டதில்லை” — திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – Part 2
திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களுடனான நமது சந்திப்பின் தொடர்ச்சி இது…
—————————————————————-
Please check the below link for the Part 1
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14030
—————————————————————-
சூப்பர் ஸ்டார் வளர்ந்து வந்த காலகட்டத்தில் இருந்த தமிழ் சினிமாவுக்கும் - தற்போது அவர் ஒரு DEMI-GOD என்கிற ஸ்டேட்டஸை அடைந்தபின்னர் காணப்படும் தமிழ் சினிமாவுக்கும் - நிறைய வித்தியாசங்கள் உள்ளது பஞ்சு அவர்கள் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. மேலும், வளர்ச்சி என்பது படிப்படியாக தான் வரவேண்டுமே ஒழிய, அது ஒரே இரவில் நடந்தால், அது நிலையாக இருக்காது என்கிற கருத்தையும் அவர் முன் வைக்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் இக்கட்டான காலகட்டம் என்றால் 1979 DEPRESSION காலகட்டத்தை தான் குறிப்பிடுகிறார். அதிலிருந்து மீண்டு வர சூப்பர் ஸ்டார் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி இவர் குறிப்பிடும்போது நமக்கு ஒரு கணம் சிலிர்ப்பாக இருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் தனிப்பட்ட சுபாவங்கள், அவர் கதை கேட்கும் விதம், கதாசிரியர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு, தொழிலில் அவர் காட்டிய ஈடுபாடு, தயாரிப்பாளர்கள் மேல் அவர் கொண்ட அக்கறை என பலவற்றை பட்டியலிடுகிறார்.
இண்டஸ்ட்ரியை இவரை விடக் சரியாக கணித்து வைத்திருப்பவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது என்பதை உறுதி படுத்துவது போல, எதிர்கால சினிமா எப்படி இருக்கும் என்பதை புட்டு புட்டு வைக்கிறார். இவர் கூறுவதை போலத் தான் எதிர்கால சினிமா நிச்சயம் இருக்கும். (நடிகர் நடிகைகளுக்கு வேலை இருக்காது!)
இசைஞானி பற்றி இவர் கூறியிருக்கும் தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த காலத்தில் கலைஞர்கள் முன்னுக்கு வரவும், செட்டில் ஆகவும் எத்துனை கஷ்டப்பட்டனர் என்பதை கேட்கும்போது பாரமாக இருக்கிறது.
இப்படி பல ஆச்சரியங்களை, பிரமிப்புக்களை, கவலைகளை, கலவையாக அளித்தது இவருடனான சந்திப்பு. தமிழ் சினிமா இவரைப் போன்றவர்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போது தான் அது ஆரோக்கியமான பாதையில் செல்லும்.
இனி பேட்டியின் தொடர்ச்சி….
நாம் : அவரின் ஆன்மீக ஆர்வத்தை பற்றி சொல்லிவிட்டீர்கள். பிறருக்கு உதவும் அவரது குணத்தை பற்றி ஏதாவது தெரியுமா?
திரு.பஞ்சு அருணாச்சலம் : அவர் ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்தவர். அதனால இயல்பாகவே அவருக்கு பிறருக்கு உதவும் குணம் இருக்கு. அவர் கிட்டே வேலை செய்றவங்களை நல்லா வெச்சிருக்கிறார். அவரோட டிரைவர், உதவியாளர்கள் இவங்களுக்கெல்லாம் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். ஒருத்தர் டிரைவரா இருந்தாரு. அவர் ரிட்டையர் ஆனதுக்கு பிறகு கூட, பென்ஷன் மாதிரி மாசா மாசம் ஒரு அமவுண்ட் கொடுத்துட்டு வர்றாரு.
நாம் : அவரோட முன்னாள் டிரைவர் ஒருத்தர் சமீபத்துல காலமாயிட்டாரு. அவருக்கு அஞ்சலி செலுத்துறதுக்கு கூட நேர்ல போயிருந்தார் அவர்.
திரு.பஞ்சு அருணாச்சலம் : ஆமாம் நான் கூட கேள்விப்பட்டேன்…..
திரு.பஞ்சு அருணாச்சலம் : வேலை செய்றவங்க ரிட்டையர் ஆகும்போது ஒரு நல்ல தொகை கொடுத்து அனுப்புவாரு. அது மட்டுமில்லே… அவரோட பிரெண்ட்ஸை கூட நல்லா வெச்சிருக்கார். வெளி நபர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணிட்டுருந்தார். சிலர் அதை மிஸ் யூஸ் பண்ணினாங்க. உதாரணத்துக்கு, கல்யாணம் பண்ண நெறைய பேருக்கு உதவி பண்ணினார். அதை சில பேர் தவறா பயன்படுத்திக்கிட்டாங்க. ஏற்கனவே கல்யாணம் ஆனவங்கள்லாம் அதுல நுழைஞ்சி அவரை அப்செட் பண்ணிட்டாங்க. படிப்புக்கு பண்ணினார். அதுலயும் அப்படித் தான். சரியான பயனாளிகளுக்கு உதவிகள் போய் சேருவதில் சிக்கல். So, காலப்போக்கில் எல்லாத்தையும் STREAMLINE செய்துகிட்டார். அதுப்படி இப்போ உதவி செஞ்சிக்கிட்டு வர்றார்.
அவர் கண்ணுக்கு தெரிஞ்சி யார் கஷ்டப்படுறாங்களோ, உதவி தேவைப்படுதோ அவங்களுக்கு தயங்காம உதவி செய்றார். அவரே கேட்காமலே செய்வார்.
ரெண்டு விஷயத்தை அவர் விரும்ப மாட்டார். அவருக்கு வேண்டியவங்க கஷ்டப்படுறதை விரும்பமாட்டாரு. அவங்க திமிர்த்தனமா வீண் செலவு செஞ்சிட்டு கஷ்டப்படுறதையும் விரும்பமாட்டாரு.
அவர் கண்ணுக்கு தெரிஞ்சி யார் கஷ்டப்படுறாங்களோ, உதவி தேவைப்படுதோ அவங்களுக்கு தயங்காம உதவி செய்றார். அவரே கேட்காமலே செய்வார்.
நாம் : அவரோட இடத்தை அதாவது - சூப்பர் ஸ்டார் என்கிற அந்த நாற்காலியை - பிடிக்க இன்றைய நடிகர்கள் சிலர் முயற்சி பண்றதை பத்தி?
திரு.பஞ்சு அருணாச்சலம் : அதெல்லாம் கிடையாது சார். அதெல்லாம் பத்திரிக்கைங்க பண்ற ஹைப். எல்லாரும் முன்னுக்கு வரணும்னு ஆசைப்படுவாங்க. நடிகனா பிறந்த எல்லாரும் முன்னுக்கு வரணும்னு ஆசைப்படுவாங்க. அதுல தப்பே கிடையாது. ரஜினிகாந்தை எய்ம் பண்ணி யாருமே வரலே. தான் முன்னுக்கு வரணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கு. அதை மறுக்க முடியாது. அதுக்கு நான் சந்தோஷப்படுறேன்.
ரஜினிகாந்த் வந்து தான் எம்.ஜி.ஆரா வரணும்னு எந்தக் காலத்துலயும் ஆசைப்பட்டதில்லே. நினைச்சி கூட பார்த்ததில்லே. ‘தன் வேலையை ஒழுங்கா செய்யனும். தன் படம் நல்லா ஓடனும். யாரும் நஷ்டப்படக்கூடாது.’ இது தான் அவரோட சிந்தனையில இருக்கும். ‘எனக்கு அவார்ட் வாங்கணும். ஒரு கதை சொல்லுங்க’ன்னு என்கிட்டே அவர் இதுவரை சொன்னதே இல்லே. என்கிட்டே மட்டுமில்லே… யார் கிட்டேயும் சொன்னதில்லே. கதை சொல்லும்போது, “இந்தப் படம் ஓடுமா?”ன்னு தான் கேட்பாரு. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ பண்ணப்போ, கேட்டாரு. “இந்தப் படம் ஓடுமா?”ன்னு. “கதை நல்லாயிருக்கு. ரொம்ப எமோஷனலா இருக்கு. நான் நடிச்சா ஓடுமா”ன்னு தான் கேட்டார். நான் சொன்னேன்… “ஓடும்… ஓடனும்”. லேடீஸ்க்கு தான் நான் இதை எழுதுறேன். உங்கப் படத்துக்கு எல்லாம் நல்ல கூட்டம் வருது. ஆனா, லேடீஸ் கம்மியா வர்றாங்கன்னு சொல்றாங்க. இந்த படத்துல பாருங்க லேடீஸ் நிறைய வருவாங்கன்னு சொன்னேன். அதே மாதிரி தான் அந்தப் படம், பெண்கள் ஆதரவோட நல்லா போச்சி.
ரஜினிகாந்த் வந்து தான் எம்.ஜி.ஆரா வரணும்னு எந்தக் காலத்துலயும் ஆசைப்பட்டதில்லே. நினைச்சி கூட பார்த்ததில்லே. ‘தன் வேலையை ஒழுங்கா செய்யனும். தன் படம் நல்லா ஓடனும். யாரும் நஷ்டப்படக்கூடாது.’ இது தான் அவரோட சிந்தனையில இருக்கும்.
நாம் : இன்றைய நடிகர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது என்ன? ஏன்னா நீங்க சமீபத்துல கூட ஒரு சொன்னீங்க, தயவு செஞ்சி யாரும் ரஜினியை இமிடேட் பண்ணி பன்ச் டயலாக் பேசாதீங்க அது காமெடியா இருக்குன்னு…
திரு.பஞ்சு அருணாச்சலம் : இப்போ நான் அட்வைஸ் பண்ணனும்னா… ரஜினிகிட்டேயே சொல்வேன்… கதைக்கு என்ன தேவையோ… சீனுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேசுங்க. பன்ச் டயலாக் அது இதெல்லாம் வேண்டாம்.
நாம் : ரஜினி சார் கிட்டேவா….? இல்லே… பொதுவா சொல்றீங்களா?
திரு.பஞ்சு அருணாச்சலம் : ஆமா… இயல்பா பேசுங்கன்னு தான் நான் அவனுக்கு சொல்வேன். ஆமாம்… ஏன்னா… அவன் அப்படித் தான் பேசிக்கிட்டுருந்தான். “எனக்குன்னு தனியா ஸ்டைலா ஒரு வார்த்தை எழுதுங்க”ன்னு சொன்னதே கிடையாது அவன்.
முரட்டுக்காளைல ‘பொதுவாக என் மனசுத் தங்கம்’னு எழுதினேன். அவர் அரசியலுக்கு வருவார்னு யாரும் எதிர்பார்க்கலே… அல்லது இப்படி உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாரா எதிர்காலத்துல வருவார்னும் யாரும் நினைக்கலே. ஆனா எனக்கு அந்த நம்பிக்கை இருந்திச்சு. தைரியமா எழுதினேன். அது அமைஞ்சி போச்சு. அவ்ளோதான். இப்போ கூட படம் பார்த்தீங்கன்னா தெரியும்… அந்த காரக்டருக்கு அந்த பாட்டு பொருத்தமா இருக்கும். இயல்பா வந்தது அது. அது தான் நிக்கும். அதுனால தான் அந்தப் பாட்டு இன்னைக்கும் ஃபேமஸாயிருக்கு. அது இல்லாம சும்மா திணிச்சீங்கன்னா.. அது ரஜினிக்கும் சரியா வராது… வேற யாருக்கும் சரியா வராது.
முரட்டுக்காளைல ‘பொதுவாக என் மனசுத் தங்கம்’னு எழுதினேன். அவர் அரசியலுக்கு வருவார்னு யாரும் எதிர்பார்க்கலே… அல்லது இப்படி உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாரா எதிர்காலத்துல வருவார்னும் யாரும் நினைக்கலே. ஆனா எனக்கு அந்த நம்பிக்கை இருந்திச்சு. தைரியமா எழுதினேன்.
நீங்க கேட்ட கேள்விக்கு வர்ரேன்… மத்தவங்களாம் அதை காப்பியடிச்சிட்டு பன்ச் டயலாக், அது இதெல்லாம் பேசறாங்கன்னா… அவங்க மார்கெட்டை அவங்களே கெடுத்துக்குறாங்க. அவங்களை எல்லாரும் கிண்டல் பண்றாங்க. அதை யார் அதிகமா பண்றாங்கன்னு வெளியே சொல்ல விரும்பலே. யார் அப்படி பண்றாங்களோ அவங்களுக்கு கெட்டப் பேர் தான் ஜாஸ்தி.
நாம் : அதுவும் இண்டர்நெட்லதான் ரொம்ப கெட்டப்பேர். காமெடி பண்ணிடுறாங்க…
திரு.பஞ்சு அருணாச்சலம் : ஒரு நாலு படம் நடிச்சி முடிக்கிறதுக்குள்ளே… எனக்கு இன்ட்ரோ ஸாங் வேணும்… என்னை புகழ்ந்து பாட்டு வேணும், வசனம் வேணும் இப்படினெல்லாம் கேட்கிறாங்க. அப்படி பண்ணும்போது என்னாகும்னா ஆட்டோமேட்டிக்கா அவங்க பவர் ஜனங்க மத்தியில குறைஞ்சிடும். என்னடா… ஓவரா போட்டு தம்பட்டம் அடிக்கிறாங்கன்னு.
நாம் : ரஜினி சாருக்கு இயல்பா அமைஞ்ச விஷயங்களை இவங்க செயற்கையா சேர்த்துக்குறாங்க…
திரு.பஞ்சு அருணாச்சலம் : இப்போ இருக்குற நடிகர்களை நான் குறை சொல்லலே… தொழிலே கேட்டுப் போச்சு. முதல்ல சம்பளம் என்னன்னு பேசிட்டு… அட்வான்ஸ் வாங்கிட்டு… அடுத்த வருஷம் தான் ஆக்ட் பண்ணப் போறாங்க. ரஜினியை பொருத்தவரைக்கும் யாரு கதை எழுதுறாங்க? யார் டைரக்டர்? இதெல்லாம் முடிவு பண்ணினதுக்கப்பரும் தான் நடிக்கவே ஒத்துக்குவான்.
நாம் : அட்வான்ஸ்…?
திரு.பஞ்சு அருணாச்சலம் : அட்வான்ஸ் அது இதெல்லாம் கொடுங்கன்னு கேட்கவே மாட்டான். நீங்க படத்தை முதல்ல முடிச்சிட்டு எனக்கு அப்புறமா சம்பளம் கொடுங்கன்னு தான் சொல்வான். என்ன பேசினமோ அதை கரெக்ட்டா வாங்கிடுவான். அந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் படம் கொடுப்பான். அவனுக்கு வார்த்தை ரொம்ப முக்கியம். பொய் சொல்லக் கூடாது அவனுக்கு. உண்மையை சொல்லணும். அட்வான்ஸ் கொடுத்தா வாங்கமட்டான். “ஏன் இப்போ வட்டிக்கு வாங்கி அட்வான்ஸ் கொடுக்குறீங்க?”ன்னு கேட்பான். அப்புறம் என்ன பண்ணுவீங்க… வட்டி ஏறிப்போச்சுன்னு சொல்லி… படத்துல ஏதாவது ஒரு சீன்ல காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க. செட் போடுறதுல காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க. அதெல்லாம் வேண்டாம் அப்படின்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிடுவான். நான் ஒரு கோடி ரூபா சம்பளம் வாங்குறேன்னா… நான் இன்னைக்கே அம்பது லட்ச ரூபாய் கொடுங்கன்னு கேட்டேனா? அப்படின்பான்.
“ஏன் இப்போ வட்டிக்கு வாங்கி அட்வான்ஸ் கொடுக்குறீங்க?”ன்னு கேட்பான். அப்புறம் என்ன பண்ணுவீங்க… வட்டி ஏறிப்போச்சுன்னு சொல்லி… படத்துல ஏதாவது ஒரு சீன்ல காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க. செட் போடுறதுல காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க. அதெல்லாம் வேண்டாம்.
“அம்பது லட்ச ரூபாய்க்கு வட்டி என்ன ஆச்சு? ஒன்றரை லட்ச ரூபாய் வட்டி. அந்த பணத்தை எப்படி ஈடுகட்டுவீங்க? படத்தோட பட்ஜெட்ல கை வைப்பீங்க. எதுக்கு இந்த வம்பு? இதெல்லாம் வேண்டாம். படத்தை முடிச்சி, பிசினஸ் பண்ணிட்டு அப்புறம் எனக்கு சம்பளம் கொடுங்க போதும்.” இது தான் அவனோட பாலிஸி.
எனக்கு தெரிஞ்சி ஆரம்பத்துல இருந்து அவன் யார்கிட்டேயும் பணம் கேட்டதேயில்லை. சம்பளம் பேசிக்குவான். உங்களால எப்போ முடியுமோ அப்போ கொடுங்கன்னு சொல்வாரு. கடன் கிடன் வாங்கி எனக்கு தரவேண்டாம். படத்தை எடுங்க முதல்ல. அப்புறம் பார்த்துக்கலாம் அப்படின்பார்.
கதையை கேட்பாரு. அவருக்கு பிடிச்சிருந்தா உடனே கால்ஷீட் கொடுத்திடுவாரு.
நாம் : அவர் கதை கேட்பதை பத்தி கொஞ்சம்….
திரு.பஞ்சு அருணாச்சலம் : இப்போ இருக்குறவங்க மாதிரி… ஒரு நாலஞ்சு பேரை வெச்சு… அப்படி இப்படியெல்லாம் இல்லே. அவர் மட்டும் தான் கேட்பாரு. நம்பிக்கை தான் அவருக்கு. ரொம்ப அனுபவசாலி. ரொம்ப கெட்டிக்காரரு. ஜனங்க பல்ஸ் தெரிஞ்சவர்.
ஆனா என்னை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்திட்டாருன்னா… கால்ஷீட் கொடுத்திடுவாரு… எல்லாம் ஓகே பண்ணிடுவாரு. ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் என் கிட்டே கதையை கேட்பாரு. டயலாக்ஸ் எல்லாம் அப்போ பேசி அப்போவே ஷூட் பண்றது தான். எல்லாம் ஒரு நம்பிக்கை தான். அதுனால் தான் எனக்கு அதிகம் படம் பண்ணினாரு அவர். நிச்சயம் இவர் FLOP கொடுக்கமாட்டாரு. எப்படியும் ஹிட் பண்ணிடுவாருன்னு நம்புவாரு. அந்த நம்பிக்கை அவர் கிட்டே ஏற்படுத்துறது ரொம்ப முக்கியம்.
ஒன்ஸ், ஒருத்தரை நம்பி கால்ஷீட் கொடுத்துட்டாருன்னா அப்புறம் அவங்களோட வேலையில் தலையிட மாட்டாரு. அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவாரு.
ஒன்ஸ், ஒருத்தரை நம்பி கால்ஷீட் கொடுத்துட்டாருன்னா அப்புறம் அவங்களோட வேலையில் தலையிட மாட்டாரு. அவங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவாரு.
நாம் : சார் நீங்க அவருக்கு எழுதின பாட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னா… அது ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துல வர்ற ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ பாட்டு தான். அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்….
திரு.பஞ்சு அருணாச்சலம் : சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு. எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. படத்தோட அந்த பாட்டை பார்க்கும்போது அது ஒரு இம்பாக்ட். அதை தவிர அந்த பாட்டை தனியா கேட்டீங்கன்னா… அது ஒரு வகை இம்பாக்ட்.
கவிக்குயில்ல வர்ற ‘குயிலே கவிக்குயிலே’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்துல வர்ற ‘காதலின் தீபம் ஒன்று’… அப்புறம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ல வர்ற ‘விழியிலே மலர்ந்தது’ பாட்டு இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மெலோடி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை தான் நான் விரும்பி எழுதுவேன்.
நாம் : அதெப்படி சார்… ராஜா என்பார் மந்திரி என்பார் பாட்டுல ‘உலகில் உனக்கோர் சரித்திரம் உண்டு’ன்னு எழுதினீங்க… அப்போவே நீங்க அவரை வாழ்த்தி எழுதினதா நாங்க ஃபீல் பண்றோம்.
திரு.பஞ்சு அருணாச்சலம் : நிச்சயமா…. அது இயல்பா வரணும். இதெல்லாம் எதிர்பார்த்து நாம எழுதுறதில்லே. நம்மளை அறியாம இயல்பா வரணும். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிப்பாரு என்கிற ஐடியாவே இல்லாத சமயத்துல - அவர் அரசியல்ல இருந்தாரு அது வேற விஷயம் - ஆனா அவர் தனியா ஒரு கட்சி ஆரம்பிப்பாருன்னோ அல்லது டி.எம்.கே.வுல இருந்து அவர் விலகிப் போவாருன்னோ யாரும் எதிர்பார்க்காத காலகட்டத்திலேயே ‘வேட்டைக்காரன்’ படத்துல ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று கவிஞர் எழுதினாரு. அவ்வளவும் நடந்ததே அவருக்கு. ‘உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்’ அப்படின்னு எழுதியிருந்தார் கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கு. அந்த பாட்டுல வர்ற அத்துனை வார்த்தையும் எம்.ஜி.ஆருக்கு பொருந்திச்சு. அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பாருன்னோ… இல்லே அவர் சீஃப் மினிஸ்டரா உட்காருவாருன்னோ…. இல்லே அவர் எங்கே போனாலும் அவருக்கு மரியாதை கிடைக்குன்ம்னோ கவிஞர் கணிச்சி எழுதினாருன்னு நான் சொல்லமாட்டேன். அவர் எழுதினாரு. அது நடந்துச்சு. அவ்ளோதான்.
அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பாருன்னோ… இல்லே அவர் சீஃப் மினிஸ்டரா உட்காருவாருன்னோ…. இல்லே அவர் எங்கே போனாலும் அவருக்கு மரியாதை கிடைக்குன்ம்னோ கவிஞர் கணிச்சி எழுதினாருன்னு நான் சொல்லமாட்டேன். அவர் எழுதினாரு. அது நடந்துச்சு. அவ்ளோதான்.
‘உலகில் உனக்கோர் சரித்திரம் உண்டு’ன்னு நான் ரஜினிக்கு எழுதும்போது அவருக்கு அது பத்தாவது படமோ பதினோராவது படமோ இருக்கும். அப்போவே இந்தளவுக்கு அவர் எதிர்காலத்துல வருவாருன்னு நினைச்சி நான் எழுதினதா சொல்லமுடியாது. அப்படி சொன்னா அது பொய். நல்லா வருவாருன்னு நம்பிக்கை இருந்ததே தவிர இந்தளவு வருவாருன்னு எதிர்பார்க்கலை. ஆனா, முரட்டுக்காளைக்கு அப்புறம் நம்பினேன். இனிமே இவரை அசைக்க முடியாதுன்னு நம்பிக்கை வந்துச்சு. ஆனா, 1976 இல் புவனா ஒரு கேள்விக்குறில்லாம் எடுக்கும்போது இந்த மாதிரி ஒரு வார்த்தை நான் எழுதியிருக்கேன் அப்படின்னா அது இயல்பா வந்தது தான்.
நாம் : இப்போ சில நடிகர்கள் பாடலாசிரியர்களை தங்களை புகழ்ந்து எழுதச் சொல்லி நிர்பந்தம் பண்றதா கேள்விப்படுறோம்….
திரு.பஞ்சு அருணாச்சலம் : அதான் சொல்லிட்டேனே. எப்பவுமே, இயல்பா வர்றதுக்கும் திணிக்கிறதுக்கு வித்தியாசம் இருக்கு. உதாரணத்துக்கு, “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்” என்று எம்.ஜி.ஆருக்கு எழுதினா ரசிகன் கைதட்டுவான். அதே மாதிரி எனக்கும் ஒரு பாட்டு எழுதுங்கன்னு சொன்னா, கை தட்டமாட்டான். கை கொட்டி சிரிப்பான். கிண்டல் பண்ணுவான் வெளியே வந்து. “ஒரு அஞ்சு படம் வரலை… அதுக்குள்ளே மாலை வேணுமாம்… மரியாதை வேணுமாம்” அப்படின்னு ஏளனம் செய்வான். ஜனங்களே கிண்டல் செய்வாங்க.
(நாங்கள் அனைவரும் சிரிக்கிறோம்!)
நாம் : அப்புறம் ஒரு கேள்வி. “ரஜினி இனி அவர் ஏஜுக்கு எத்த மாதிரி ரோல்ஸ் தேர்ந்தெடுத்து நடிக்கணும். அமிதாப் மாதிரி…” அப்படின்னு ஒரு சாரார் சொல்றாங்க. வேற ஒருத்தர், “அப்படி இல்லே… அவர் எம்.ஜி.ஆர். மாதிரி கடைசி வரைக்கும் ஹீரோவா நடிச்சிட்டு ரிட்டையர் ஆகிடனும்”னு சொல்றாங்க. எது சரி? உங்க கருத்து என்ன?
திரு.பஞ்சு அருணாச்சலம் : என்னை கேட்டீங்கன்னா… அவரோட நண்பரா ஒரு வெல் விஷரா நான் சொல்றது என்னன்னா…. அவர் உடல் நலம் கருதி…. இப்போ செய்துகிட்டு இருக்கிற மாதிரி, ஒன்னு ரெண்டும் படம் இன்னும் நடிச்சிட்டு பேசாம அவர் ரெஸ்ட் எடுத்திட்டு சந்தோஷமா இருக்கட்டும். பேரக்குழந்தைகளோட அவர் சந்தோஷமா நேரத்தை ஸ்பென்ட் பண்ணனும். கண்ட கண்ட படம்லாம் அவர் இனிமே ஆக்ட் பண்ணவேண்டாம். இனிமே எதுவும் தேவையில்லை. அவருக்கு என்ன குறைச்சல்? பணத்துக்கா, புகழுக்கா? ஒருவேளை ஏதாவது ரொம்ப அபூர்வமா ஒரு நல்ல காரக்டர் அமைஞ்சா அதை பண்ணலாம். அந்த காரக்டர் பெரிய அளவுல பேசப்படும் என்கிற மாதிரி ஏதாவது ஒரு படம் அமைஞ்சா பண்ணலாம்.
அவர் உடல் நலம் கருதி…. இப்போ செய்துகிட்டு இருக்கிற மாதிரி, ஒன்னு ரெண்டும் படம் இன்னும் நடிச்சிட்டு பேசாம அவர் ரெஸ்ட் எடுத்திட்டு சந்தோஷமா இருக்கட்டும்.
நாம் : So, அவர் உடல் நலத்தை பார்த்துகிட்டு ஒன்னு ரெண்டு படம் பண்ணா போதும்னு நினைக்கிறீங்க…
திரு.பஞ்சு அருணாச்சலம் : எஸ்… ஆமாம்… போதும்…இனிமே அவர் தேவையில்லாம டென்ஷனை இழுத்துபோட்டுக்கிட வேண்டாம். தவிர, ஷூட்டிங்க்னு வந்தா அநாவசியமா இந்த வெயில், லைட்டிங்… தூசி அது இதெல்லாம் சந்திக்கவேண்டி வரும். ஷூட்டிங் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு அந்த லைட் முன்னாடி நிக்கிறது அவ்வளவு சுலபமில்லே. இப்போ…. ஏர்-கண்டிஷன் செட்லாம் போடுறாங்க. இருந்தாலும் கசகசன்னு ஒரு பத்து பேர் இருக்குற இடத்துல இருந்தாலே அசௌகரியமா இருக்கு. அதுவும் ஏஜ் ஆனவங்களுக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம்.
இனிமே அவர் தேவையில்லாம டென்ஷனை இழுத்துபோட்டுக்கிட வேண்டாம். தவிர, ஷூட்டிங்க்னு வந்தா அநாவசியமா இந்த வெயில், லைட்டிங்… தூசி அது இதெல்லாம் சந்திக்கவேண்டி வரும். ஷூட்டிங் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
நாம் : திருமதி. லதா ரஜினி அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ஏன்னா.. இண்டஸ்ட்ரியில் ரஜினி சாரை நீங்கள் பார்த்துக்கொண்டீர்கள். ஆனால், குடும்பத்தில் அவரை பார்த்துகொண்டது அவங்க தான். அவர் இந்தளவு ஆளாகியிருக்கிறார்னா அதுக்கு அவங்களும் ஒரு காரணம். அவங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்….
திரு.பஞ்சு அருணாச்சலம் : ஆமாம்… அவங்க தான் அவரை கரெக்டா பார்த்துகிட்டாங்க. நல்லா படிச்சவங்க. விபரம் தெரிஞ்சவங்க. குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு, ஊழியர்கள் நிர்வாகம்ன்னு எல்லாத்தையும் பார்த்துகிட்டாங்க. ரஜினிக்கும் இது பற்றி எந்தக் கவலையும் இல்லாம… குறிப்பா வீட்டுக் கவலை இல்லாம… அவர் தொழில்ல கவனம் செலுத்த முடிஞ்சதுக்கு அவங்க தான் காரணம். ஒரு காலத்துல ரஜினி காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங் கிளம்பினார்னா ராத்திரி 11 மணிக்கு தான் திரும்பி வருவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தம்மா எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சிக்கிட்டாங்க…
சமீபத்துல கூட சௌந்தர்யாவோ ஐஸ்வர்யாவோ சொல்லியிருந்தாங்க…. “நாங்க குழந்தையா இருக்கும்போது கூட, எங்கப்பா எங்க கூட நேரம் ஸ்பென்ட் பண்ணினதில்லே… எங்களை கொஞ்சினதில்லே… ஆனா… இப்போ அவரோட பேரன்களோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்றார். விளையாடுறார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” அப்படின்னு… பரிணாம வளர்ச்சிங்கிறது அவ்ளோ தானே.
ஒரு காலத்துல ரஜினி காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங் கிளம்பினார்னா ராத்திரி 11 மணிக்கு தான் திரும்பி வருவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்தம்மா எல்லாத்தையும் பொறுப்பா கவனிச்சிக்கிட்டாங்க…
மொத்தம் மூணே பருவம் தான் வாழ்க்கையில். ஒன்னு… இளமை - கனவுகள். அப்புறம் நிறைவேறும்போது அதை சரியா செய்யணுமேன்னு தோணும். அதுக்காக பாடுபடுறது. அதுக்கப்புறம்… எல்லாம் நிறைவேறியவுடன் நாம உட்காருந்துகிட்டு மத்தவங்களை வேலை வாங்குறது. அவ்ளோ தான் லைஃப்.
நாம் : ரஜினி ஒரு வில்லன் நடிகரா தன்னோட கேரியரை ஆரம்பிச்சு…. இந்தளவு உயர்ந்திருக்காரு. அவரோட இந்த TRANSFORMATION க்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டாருன்னு இப்போ இருக்குற யங்கர் ஜெனரேஷனுக்கு சில சமயம் தெரிவதில்லே. அவங்களுக்காக ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?
திரு.பஞ்சு அருணாச்சலம் : அப்படியில்லே… இன்னைக்கு உள்ள நிலைமைல… எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு மீடியாக்கள் வந்தாச்சு. சானல்ஸ் எல்லாம் அடிக்கடி ப்ரோக்ராம் போடுறாங்க. பர்த்டே வந்தால் அவரோட படம் போடுறாங்க. பேட்டி போடுறாங்க. அவர் பேட்டி இல்லேன்னாலும், அவரை பத்தி மத்தவங்க பேசுறதை போடுறாங்க…. ஃபேஸ்புக்ல எழுதுறாங்க… பத்திரிக்கைல போடுறாங்க….. அவரை பத்தி அவரோட நண்பர்கள் அபிப்ராயம் என்னன்னு கேட்டு எழுதுறாங்க. இதெல்லாம் அந்த காலத்துலயே கிடையாதே? முரட்டுக்காளைல்லாம் வரும்போது… அவரோட நெருங்கிய நண்பர்கள் யாரு, பெங்களூர் ப்ரெண்ட்ஸ் யாருன்னு எனக்கே தெரியாது. ஆனா இப்போ? வெளியுலகத்துக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே.
இப்போ உள்ள சூழ்நிலைல, வளர்ச்சி என்பது ஒரு காளான் மாதிரி. அது கிடுகிடுனு வந்துடும். ஆனா நிரந்தரமா அதாவது ஒரு 20, 30 வருஷத்துக்கெல்லாம் இருக்காது. நடிப்பு மட்டுமில்லே எந்தத் துறையிலும் இனிமே நீண்ட நாள் தாக்கு பிடிக்க முடியாது. முன்னெல்லாம் பாட்டு பாடனும்னா… சிங்கரா வரணும்னா நல்லா பாடனும். ஒரே பாட்டை சோலோவா பாடனும். முழு சாங்கும் ஒரே டேக்ல ஓ.கே. ஆகணும். இப்போ அப்படி கிடையாது. பாடவே தெரியலேன்னாலும், குரல் நல்லா இருந்தா கொஞ்ச கொஞ்சமா பாட வெச்சு அதை கம்ப்யூட்டர்ல ஒண்ணா சேர்த்து ஒரு ஃபுல் பாடலா பாட வைக்கிறதுக்கு டெக்னாலஜி வந்துடுச்சு. சினிமாவும் அப்படித்தான். கஷ்டப்பட்டு ஃபைட் பண்ணனும், நடிக்கணும் அப்படியெல்லாம் இனிமே இல்லே. “ஒரு 10 நாள் கால்ஷீட் கொடுங்க போதும். மீதியைஎல்லாம் நாங்களே பார்த்துக்குவோம் அப்படின்னு சொல்லுவாங்க.” பாதி ஃபைட் இவங்க பண்ணினா… மீதி ஃபைட்டை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பண்ணிடுறாங்க. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா… கம்ப்யூட்டரே எல்லாம் பாத்துக்கும். நடிகர்களை உருவாக்குறது… அவங்களை நடிக்க வைக்கிறது எல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்லயே நடந்துடும். ஏற்கனவே அமெரிக்காவுல இந்த தொழில்நுட்பம் வந்துடுச்சு. இங்கேயும் சீக்கிரம் வந்துடும். இப்போதைக்கு அந்த தொழில் நுட்பம் ரொம்ப காஸ்ட்லி. அது வரும்போது, ரவிவர்மாவின் ஓவியத்துல இருக்குற உருவங்களுக்கு கூட உயிர் கொடுத்து நடிக்கவைக்க முடியும். எதிர்காலத்துல கதாநாயகன், கதாநாயகி எல்லாம் கம்ப்யூட்டரே உருவாக்கிடும்.
அதே மாதிரி கஷடப்பட்டு சம்பாதிக்கணும் என்கிற அவசியம் இருக்காது. ஒரே ஒரு பாட்டுல புகழ் வந்துடும். ரெண்டு விளம்பரத்துல நடிச்சு சம்பாதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க.
எதிர்காலத்துல கதாநாயகன், கதாநாயகி எல்லாம் கம்ப்யூட்டரே உருவாக்கிடும்.
ஆனா அன்னைக்கு அப்படியில்லே. ‘அன்னக்கிளி’ (1976) படத்துக்கப்புறம், இளையராஜா ஃலைப்ல செட்டிலாகுறதுக்கு 100 படம் பண்ணவேண்டியிருந்தது. 3500, 4000, 5000, 6000, 8000, 10,000 இப்படித்தான் படிப்படியா சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு. So, இளையராஜா ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறதுக்கு 100 படம் பண்ணவேண்டியிருந்தது. ஆனா இன்னக்கு? ஒரே பாட்டுல கோடிக்கணக்குல வாங்குற அளவுக்கு போய்ட்டாங்க.
நாம் : அதனால தான் எந்தளவு வேகமா மேலே வர்றாங்களோ அதைவிட வேகமா கீழே விழுந்துடுறாங்க… வளர்ச்சி என்பது படிப்படியா இருந்தா எந்தா தொல்லையும் இல்லே..
திரு.பஞ்சு அருணாச்சலம் : வேகமா வளர்றாங்கன்னு சொல்றதைவிட அவ்வளவு வேகமா வர்றாங்கன்னு தான் சொல்வேன். ஜனங்களும் அப்படித்தான் இருக்குறாங்க. ஒரு பாட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா அதை ரசிக்கிறாங்க. அடுத்த மாசம் வேற ரெண்டு பாட்டு வந்து நல்லாயிருந்தா அதை ரசிக்கிறாங்க. இதை மறந்துடுறாங்க.
இந்த வருஷம் இருக்குற மியூசிக் டைரக்டர் அடுத்த வருஷம் இருக்குறதில்லே. ஒரு வருஷத்துக்கு எத்தனை மியூசிக் டைரக்டருங்க இங்கே வர்றாங்க… அந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு ரெண்டு பேர் வந்தாலே பெரிய விஷயம். ஏன்னா அப்போ, இசையமைப்பாளரா வர்றவங்களுக்கு எல்லாம் விஷயமும் தெரிஞ்சிருக்கணும். கண்டவன் மியூசிக் டைரக்டரா வர முடியாது. ஆனா இன்னைக்கு பார்த்தீங்கன்னா… மியூசிக்ல மொத்தம் 75% அவங்களுக்கு ஹெல்ப் பண்றது மெஷினரீஸ் தான். அதாவது கம்ப்யூட்டர், ஆட்டோமேடிக் கீபோர்ட் இப்படி. உலகத்துல எத்தனை விதமான இசைக்கருவிகள் இருக்கோ அத்துனை விதமான இசைக்கருவிகளும், அத்துனை விதமான தாள வாத்தியங்களின் சவுண்டும் ஏற்கனவே ப்ரீ-ரெக்கார்ட்டட்டா வருது. இந்த பீட் நல்லாயிருக்கா… அந்த பீட் நல்லாயிருக்றா… அப்படின்னு போட்டு பார்த்து அதையெல்லாம் சேர்த்து ஒரு பாட்டை உருவாக்கிடுறாங்க. ஆனா அப்போ, இது எல்லாத்தையும் மியூசிக் டைரக்டர் தெரிஞ்சி வெச்சிருக்கணும். இப்போ… மியூசிக் கொஞ்சம் தெரிஞ்சிருந்தாலும் போதும்… மியூசிக் டைரக்டராயிடலாம். எல்லாமே ரெடிமேடா கிடைக்குது. ஏன் சாப்பாடு கூட அப்படி ஆயிடிச்சு. ஃபாஸ்ட் புட் அது இதெல்லாம் கிடைக்குது.
நாம் : ரஜினி சாரோட இசை ஞானம் எப்படி?
திரு.பஞ்சு அருணாச்சலம் : அருமையான மியூசிக் சென்ஸ் அவருக்கு. யார் யார்கிட்டே என்ன வேலை கொடுக்கணும்னு அவருக்கு தெரியும். இந்த படத்துக்கு இளையராஜா கரெக்டா இருப்பாரு. இந்த படத்துக்கு ரஹ்மான் கரெக்டா இருப்பாரு அப்படின்னு சரியா ஜட்ஜ் பண்ணுவாரு.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” என்கிற குறள் மாதிரி, அந்தந்த வேலையை சரியா அவங்க கிட்டே விடுவாரு. அப்படி ஒப்படைச்சிட்டாருன்னா பிறகு எதுலயும் தலையிட மாட்டாரு. மியூசிக்ல மட்டும் இல்லே. எல்லா விஷயங்களிலும் அப்படித்தான்.
மத்தபடி, இசை ஆர்வம் அப்படின்னு சொன்னா… அவருக்கு கர்னாடிக் மியூசிக் ரொம்ப பிடிக்கும். பக்தி பாடல்களை விரும்பி கேட்பாரு. படத்துக்காக அவர் மாஸ் சாங்க்ல வர்றது, நடிக்கிறது… அது வேற. இது வேற. இது அவரோட பர்சனல் டேஸ்ட் சம்பந்தப்பட்டது. மனசுக்கு அமைதி தரக்கூடிய மென்மையான இசை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
நாம் : ஒரு தயாரிப்பாளரா அவரை வைத்து நீங்கள் எடுத்த படங்களில் உங்களுக்கு அதிக லாபம் கொடுத்தது எந்தப் படம்?
திரு.பஞ்சு அருணாச்சலம் : என்னை பொறுத்தவரை எல்லாப் படமும் நல்ல லாபம் தான்.
நாம் : அவரின் இக்கட்டான நேரங்களில் உங்களிடம் ஆலோசனை கேட்பாரா?
திரு.பஞ்சு அருணாச்சலம் : எனக்கு தெரிஞ்சி அவரோட இக்கட்டான தருணம்னு சொன்னா… அந்த 79 இல் நடந்த விஷயங்கள் தான். ஜர்தா பீடா, ட்ரிங்க்ஸ் இதெல்லாம் அதிகமாகி ரொம்ப அப்செட்டா இருந்த சமயத்துல - நான் சொல்றது கல்யாணத்துக்கு முன்னாடி - நான் சத்தம்போட்டு கொஞ்சம் அதையெல்லாம் மாத்திகிட்டார். அவருக்கே நாம மாறனும் என்கிற எண்ணம் இருந்தது. இருந்தாலும் நான்லாம் சொன்னவுடனே கொஞ்சம் சரி பண்ணிக்கிட்டார். “உடம்பை முதல்ல கவனிச்சிக்கோங்க. அப்புறம் சினிமாவில் நடிக்கலாம்”ன்னு அவருக்கு சொன்னேன். அப்புறம் விஜயா ஹாஸ்பிட்டல்ல சேர்ந்து, நல்ல ட்ரீட்மென்ட் ரெஸ்ட் எடுத்துகிட்டு கொஞ்சம் கொஞ்சமா தேறி நல்லா வெளியே வந்தான். நான் சொன்னதுனாலன்னு இல்லே. அவனுக்கே அந்த ஃபீலிங் இருந்திச்சு. அதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா எல்லாருமே பார்த்தாலே பயப்படுற மாதிரி முரட்டுத்தனமா இருந்தான். நாம என்ன செய்றோம் என்பதே அவனுக்கு தெரியாத காலகட்டம் அது. ஏர்போர்ட்ல கலாட்டா பண்ணினான் அப்படின்னால் ந்யூஸ் வந்தது. அவரோட ஃலைப்ல இக்கட்டான நேரம் என்பது அது தான். அதை தாண்டி வந்ததுக்கப்புறம்…. முழுக்க முழுக்க தன்னைத் தானே உணர்ந்து ஒரு தெய்வீக வாழ்க்கை வாழ ஆரம்பிச்சான். தெய்வீக சிந்தனைகள், நல்ல புக்ஸ் படிக்கிறது, மெடிடேஷன் அப்படி இப்படின்னு தன்னை மாத்திக்கிட்டான். ஒரு பழுத்த பழமாயிட்டான். அதாவது அருணகிரிநாதர் மாதிரி. ரொம்ப கஷ்டப்பட்டு பின்னர் மாறினான். அதாவது கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா நாம எங்கேயோ போயிருப்போமே அப்படின்னு அவனுக்கு புரிஞ்சிடிச்சு. அதாவது ஏதாவது தவறுதலா நடந்திருந்தா ரஜினி என்கிற ஒரு அத்தியாயமே காணாமல் போயிருக்கும். அவன் தன்னை உணர்ந்து மாறிவிட்டான் என்பதே சரி.
அதை தாண்டி வந்ததுக்கப்புறம்…. முழுக்க முழுக்க தன்னைத் தானே உணர்ந்து ஒரு தெய்வீக வாழ்க்கை வாழ ஆரம்பிச்சான். தெய்வீக சிந்தனைகள், நல்ல புக்ஸ் படிக்கிறது, மெடிடேஷன் அப்படி இப்படின்னு தன்னை மாத்திக்கிட்டான். ஒரு பழுத்த பழமாயிட்டான். அதாவது அருணகிரிநாதர் மாதிரி. ரொம்ப கஷ்டப்பட்டு பின்னர் மாறினான்.
நாம் : அவரை சுற்றி ஏற்படும் அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை அவர் எப்படி எடுத்துக்கொள்வார்?
திரு.பஞ்சு அருணாச்சலம் : மேக்சிமம் அதையெல்லாம் நாசூக்கா அவாய்ட் பண்ணிடுவாரு சார் அவரு. யார் மனசும் புண்படாம அந்த சர்சையில இருந்து வெளியே வர பார்ப்பார். எங்களை அது பத்தி கேக்கவும் மாட்டாரு. நாங்களும் சொல்லவும் மாட்டோம். ஏன்னா… அவரோட முடிவு தான் எதுவும். அவர் முடிவு எடுத்து ஒன்னை செய்யனும்னு நினைச்சாருன்னா அதை நாங்க யாரும் தடுக்க முடியாது. அதேபோல, இப்படி செய் அப்படின்னும் சொல்ல முடியாது. எனக்கு தெரிஞ்சி அவருக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைன்னு எதுவும் ஏற்பட்டது இல்லை.
நாம் : எங்கள் தள வாசகர்களுக்கு, ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
திரு.பஞ்சு அருணாச்சலம் : நான் சொல்லலே… அவர் சொன்னது தான் இது. முதல்ல நீ உன்னை வளர்த்துக்கோ. உன்னை நிலை நிறுத்திக்கொள். உன்னுடைய குடும்பத்தை காப்பாத்து. ரசிகர் மன்றம், அரசியல், கட்சி இதெல்லாம் அப்புறம். முதல்ல நீ உன் கடமையை ஒழுங்கா செய்து, உன் குடும்பத்தை பார்த்துக்கோ. அப்புறம் மத்ததுக்கு வா. இதைத் தான் அவர் சொல்லுவார். நானும் அதையே தான் சொல்ல விரும்புறேன்.
முதல்ல நீ உன்னை வளர்த்துக்கோ. உன்னை நிலை நிறுத்திக்கொள். உன்னுடைய குடும்பத்தை காப்பாத்து. ரசிகர் மன்றம், அரசியல், கட்சி இதெல்லாம் அப்புறம். முதல்ல நீ உன் கடமையை ஒழுங்கா செய்து, உன் குடும்பத்தை பார்த்துக்கோ. அப்புறம் மத்ததுக்கு வா. இதைத் தான் அவர் சொல்லுவார். நானும் அதையே தான் சொல்ல விரும்புறேன்.
நாம் : அவரோட 60 ஆம் கல்யாணத்துக்காக வீட்டுல நடந்த விழாவுக்கு போயிருந்தீங்கலே. அதை பத்தி சொல்லுங்க…
திரு.பஞ்சு அருணாச்சலம் : அது ரொம்ப எளிமையா நடந்த ஒரு நிகழ்ச்சி. நண்பர்கள், தெரிஞ்சவர்கள் எல்லாரையும் கூப்பிட்டு பண்ணாங்க. அது கூட சேர்த்து அவருக்கு ரஜினின்னு பேர் வெச்ச விழாவும் சேர்ந்து கொண்டாடினாங்க. அவ்வளவு தான்.
நாம் : இத்துனை ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
திரு.பஞ்சு அருணாச்சலம் : பாடம்னு கிடையாது. நான் 16 வயசுல சினிமாவுக்கு வந்தேன். அப்போ பெரிய பெரிய ரைட்டர்சுக்கு கூட, ஆயிரக்கணக்குல தான் சம்பளம். லட்சக் கணக்குல கூட கிடையாது. நான் சினிமாவுக்கு வந்தது பணம் சம்பாதிக்க இல்லே. நான் சினிமாவை நேசிச்சேன். அதுனால வந்தேன். மத்தபடி இவ்ளோ சம்பாதிக்கணும், அவ்ளோ சம்பாதிக்கணும் அப்படினெல்லாம் நினைச்சிகிட்டு வரலே. இன்னைக்கு வர்றவங்க சம்பாதிக்கணும்னு தான் வர்றாங்க. ஏன் சொல்றேன்னா… அதை நேசிச்சிட்டு வரும்போது, எல்லாம் கத்துக்கணும் என்கிற ஆர்வம் இருக்கும். பணம் தான் நோக்கமா இருந்துச்சுன்னா அந்த ஆர்வம் வரவே வராது. வெற்றி தோல்வி என்பது இங்கு சகஜம். எம்.ஜி.ஆருக்கே கூட தோல்வி வந்திருக்கு. சிவாஜிக்கு கூட தோல்வி வந்திருக்கு. அது வேற விஷயம். ஆனா லைஃப்ல எதை அடையணும்னு நினைக்கிறோமோ அதை அடைஞ்சிடனும். நான் என்னை நம்பி இருந்தபோது எனக்கு எதுவும் ஏற்பட்டதில்லே. ஒரு கட்டத்துல ஒய்வு பெறும் வயது வந்ததும், மத்தவங்களை நம்பி பொறுப்பை ஒப்படைச்சேன். அங்கே தான் எனக்கு சறுக்கல் ஏற்பட்டது. நான் சொல்றது பண விஷயம். உண்மையிலேயே சினிமாவை நேசிச்சீங்கன்னா வாங்க. பணம் மட்டும் சம்பாதிக்க வர்றாதீங்கன்னு தான் சொல்வேன். உங்க வாழ்க்கை கெட்டுப் போயிடும்.
திரு.பஞ்சு அருணாச்சலம் : நல்லா படைப்புக்களை ரசிச்சி பாருங்க. வொர்ஷிப் எல்லாம் விட்டுடுங்க. அந்த காலம் முடிஞ்சி போச்சு. அப்போ பொழுதுபோக்கு என்பது சினிமா மட்டுமே. வேற எதுவும் இருக்கலே. ஆனால் இப்போ பொழுதுபோக்குக்கு நிறைய விஷயங்கள் வந்துடுச்சு. உலகம்னா என்னன்னே மக்களுக்கு அந்தக் காலத்துல தெரியாது. வெளிநாடுன்னாலே சிங்கப்பூர் தான் எல்லாருக்கும் அப்போ. இப்போ வீட்டுக்கு ஒருத்தரு யூ.எஸ்.போறாங்க. So, நல்லாயிருக்கிறதை ரசிங்க. நல்லாயில்லாததை விட்டுடுங்க. அதை திட்டவும் வேணாம். அதை ஆஹா…ஓஹோன்னு புகழ்றதும் வேண்டாம். உங்கள் வேலையையும் கெடுத்துகிட்டு….எதுக்கு?
நல்லா படைப்புக்களை ரசிச்சி பாருங்க. வொர்ஷிப் எல்லாம் விட்டுடுங்க. அந்த காலம் முடிஞ்சி போச்சு.
மூணு படம் ஓடுறதுக்குள்லே… சூப்பர் டூப்பர் ஹீரோன்னு ஒருத்தரை தூக்கி விடுறதும் வேண்டாம். பொத்னு கீழே போடுறதும் வேண்டாம். அவங்க அவங்க எய்ம்ல கரெக்டா இருப்பாங்க. அவங்க பாட்டுக்கு சம்பாதிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க. ஆனா உங்க நிலைமை? லைஃபை என்ஜாய் பண்ணுங்க தப்பு இல்லே. டைம் டேபிள் போட்டுக்கிட்டு, உங்கள் வேலைக்கு இடையே பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்க.
நீங்க ஒரு ரசிகரா இருந்தா ரசிப்பு தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆனா ஒரு படத்தை பார்த்து ரசிச்சீங்கன்னா… அவனுக்கு தான் என் வாழ்க்கைன்னு சொல்லி கெடுத்துக்காதீங்க. சினிமாவை சினிமாவா பாருங்க. குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே சிக்கிக்காதீங்க. வெளியே வாங்க. உலக ரொம்ப பெரிசு. ரசிக்க வேண்டிய விஷயங்கள் உலகத்துல நிறைய இருக்கு.
————————————————————————————————
சந்திப்பு நிறைவடையும் நேரம் வந்ததும், ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலை பரிசளித்தேன். “மறக்காமல், சூப்பர் ஸ்டாரிடமும் நூலாசிரியரிடமும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்…” என்று கேட்டுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
கடைசியாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றேன். “நான் போக வேண்டிய தூரம்… சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருக்கு சார்… எல்லாம் நல்லபடியா நடக்க உங்களை மாதிரி பெரியவர்கள் தான் ஆசீர்வாதம் செய்யனும்..” என்றேன். “எப்போவும் உண்டு!” என்று கூறி உடனே, தூக்கிவிட்டார்.
அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு அனைவரும் விடைபெற்று கிளம்பினோம்.
நல்ல வாய்ப்புக்காக நண்பர்கள் நமக்கு நன்றி கூறினார்கள். “நீங்கள் நன்றி சொல்லவேண்டியது எனக்கல்ல… நம்மை ஒன்று சேர்த்த தலைவருக்கு. அப்புறம் எல்லாவற்றையும் நிகழ்த்தும் இறைவனுக்கு!” என்றேன்.
உண்மை தானே?
————————————————————————————————
நமது அடுத்த சந்திப்பு…. இதுவரை நாம் சந்தித்த சந்திப்புக்களிலேயே சிகரம் போன்றது…. நம்மை சிந்திக்கத் தூண்டுவது… நமக்கு பெருமை தேடி தருவது!! (முன்னோட்டம் விரைவில்!)
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)
[END]
இந்த சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
தலைவரை பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் நேரில் கேட்டு தெரிந்து கொண்டதில் தலைவர் மீதான அன்பு கூடிகொண்டே போகிறது. அத்துணை கேள்விகளுக்கும் பொறுமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் அளித்தார் திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.
அந்த இனிய மாலை பொழுது என் நினைவில் இன்றும்.. என்றும் இருக்கும். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் , எதார்த்தத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது. (குறிப்பாக STARDOM, POLITICS, SINCERITY, FRIENDSHIP ETC.) இன்றும் காலத்தால் அழியாத பாடல்களையும், படங்களையும் தந்த அய்யா பஞ்சு அவர்களுக்கு நன்றி.
ONLYSUPERSTAR.COM பயணத்தில் நானும் பங்கு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு விஷயம் தான் உடன் பாடில்லை, அவர் எபோதும் act பண்ணிக்கொண்டோ, அல்லது அரசியலோ, அல்லது பெரியார் போல சமுக சேவை செய்துகொண்டோ, சந்தோஷமாக இறுக்க வேண்டும். வீட்டில் சும்மா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்க பிறந்தவர் அல்ல நம் தலைவர் .
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஒ சூப்பர்.
ப.சங்கரநாராயணன்
சுந்தர் அண்ணா மிக அருமை .அருமையான பதிவு .வாழ்த்துக்கள்
தலைவரை முழுவதும் படித்து வைத்திருப்பார் போலும்….பஞ்சு சாரின் பேச்சுக்கள் தலைவரின் உள்ளத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது..!
**
//அவர் கண்ணுக்கு தெரிஞ்சி யார் கஷ்டப்படுறாங்களோ, உதவி தேவைப்படுதோ அவங்களுக்கு தயங்காம உதவி செய்றார். அவரே கேட்காமலே செய்வார்.//
-
அது தாங்க அவருடைய பிறவிக் குணமே…என்ன செய்தாலும் விளம்பரம் இல்லாமல் செய்கிறார்…சில நடிகர்கள் போல் நம் தலைவரும் பேனர் வைக்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டு சாலைகள் முழுவதும் தலைவர் பேனர்கள் தான் இருக்கும்…!
**
//எதிர்காலத்துல கதாநாயகன், கதாநாயகி எல்லாம் கம்ப்யூட்டரே உருவாக்கிடும்.//
-
அப்படி மட்டும் நடந்தால், எதிர்காலத்தில் வரும் எல்லாப் படங்களிலும் தலைவர் தான் ஹீரோ..அப்ப தான் கல்லா கட்டும்….!
**
அருமையான பதிவை அளித்த சுந்தர் அண்ணாவிற்கு நன்றி !
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார் "
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
அருமையான படைப்பு, சுந்தர் உங்களோட அத்தனை ஆர்டிகல்லும் கடந்த 4 வருடமாக படிக்கிறேன். உங்கள் உழைப்பு அருமை. keep it up
hats off to you bro
excellent work
good post mr.sundar.
rajesh.v
super
Loved the interview.. thnx anna
மிகுந்த மனநிறைவை தந்தது இரண்டாம் பகுதியும். உண்மையில் நம் தளத்திற்கு மிக பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர், நீங்கள் குறிப்பிடும் அடுத்த சந்திப்பு என் யுகம் சரியாக இருக்குமேயானால் அது திரு.பாலசந்தர் அவர்கள் சரியா?
——————————-
No.
- Sundar
Arumayana ,pathukaka vendiya pathivu. Hats off na.
very nice sundar anna
இவ்வளவு அருமையான கேள்விகளை கேட்டு அற்புதமான பதில்களை (உண்மையான)பெற்றுள்ளிர்கள்,சூப்பர் நன்றி .
Sundarji excellent article……
next interview with mr.shankar or mr.vairamuthu?
cheers,
balaji .v
அருமையான சந்திப்பு
தலைவர் மீது அவர் எந்த அளவுக்கு மரியாதையும் உரிமையும் வைத்திருக்கிறார் என்பது அவரது பதில்களிலிருந்து தெளிவாகிறது
அவரது அனுபவபூர்வமான பதில்கள் நம் அனைவருக்குமே ஒரு பாடம் தான்
திரு அருணாசலம் அவர்களுக்கு தலைவரின் ரசிகர்கள் சார்பாக எண்களின் மனமார்ந்த நன்றி
உங்கள் உடல் நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகள்!!!
உணர்வு பூர்வமான உரையாடலை வழங்கிய சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
ரஜினி சார் தான் குடுத்த ஒரு பேட்டியில் (பில்மலாயா-1978) ஒரு சிவாஜி மாதிரி வரணும்னு ஆசையை உள்ளது.அனல் ஒரு ஜெய்சங்கர் அளவுக்கு வருவ்வேன்னு தோணுது என்று சொல்லியுள்ளார்.
டியர் சுந்தர் நல்ல பதிவு அன்புடன் உங்கள் கோச்சடையான் ராஜ்குமார்
சுந்தர் அண்ணா…அல்டிமேட் ஆர்டிகல்….நிச்சயமா சொல்றேன்…படிக்க படிக்க ஒரு தத்துவ மேதையின் வாழ்கை பதிவை படிக்கிற ஒரு மேம்பட்ட உணர்வு எனக்குள் இருப்பதை உணர்ந்தேன்…..