You Are Here: Home » Flash from the Past » தலையை தடவிப் பார்த்து சந்தோஷப்பட்ட ரஜினி — ‘சிவாஜி’ ஃபோட்டோ செஷன் படங்கள் & மேக்கப் துளிகள்!

‘சிவாஜி தி பாஸ்’ திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர் வெங்கட் ராம். பிரபல புகைப்பட நிபுணர். பல்வேறு முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு தற்போது இவர் தான் ஃபோட்டோகிராபர்.

‘சிவாஜி’ திரைப்படத்தின்போது சூப்பர் ஸ்டாரை எடுத்த சில புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார் வெங்கட் ராம்.

அந்த படங்களை நமது தளத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்தபோது, சுட்டபழமாக இருந்தாலும் அதை சுவையாக கொடுப்பது தான் நம்ம பாலிஸி. வெறும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு, பாருங்களேன் என்று கூற எனக்கு விருப்பமில்லை. புகைப்படங்களுக்கு ஏற்ற ஒரு செய்தியயை அளிக்கலாம் என்று முடிவு செய்தபோது தோன்றியது தான் இது.

சூப்பர் ஸ்டாருக்கு சிவாஜி படத்தில் மேக்கப் போட்ட பானு அவர்களின் சிறு சிறு, கருத்துக்களோடு, சிவாஜியில் சூப்பர் ஸ்டாருக்கு ஹேர் ஸ்டைல் செட் செய்ய யூனிட் எடுத்துக்கொண்ட முயற்சிகளை பற்றி சேர்த்து இதில் தந்திருக்கிறேன். புகைப்படங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

‘சிவாஜி’ திரைப்படத்தின் நேர்த்திக்காக அதன் ஷங்கரும் அவரது யூனிட்டாரும் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சி பற்றியும் ஒரு தனிப் புத்தகம் எழுதிக்கொண்டே போகலாம். ஒரு படம் ஷூட்டிங் தொடங்கி அது தடையின்றி நடைபெற்று ரிலீசாகி வசூலை குவித்து வெள்ளி விழா காண்பது என்பது அத்துனை சுலபமல்ல. எத்துனை எத்துனை தொழில்நுட்பக் கலைங்கர்களின் உழைப்பு & தொழிலாளர்களின் வியர்வை அப்பப்பா… நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

இனி சிவாஜி தி பாஸ் - மேக்கப் துளிகள்!

* சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு பார்த்து பார்த்து மேக்கப் செய்தவர் பானு என்கிற பெண். சிகையலங்கார நிபுணர் இவர். அடிக்கடி ரஜினியால் பாராட்டப்பட்டவர். அமெரிக்காவில் மேக்கப் குறித்து பட்டம் பெற்றவர்.

* ‘நான் வொர்க் பண்ணிய முதல் முழு பிக்சர் ‘சிவாஜி’ தான். அதற்கு முன்பு பல்வேறு விளம்பரப் படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். மற்ற சில தமிழ் படங்களில் முக்கியமான நடனக் காட்சிகளின்போது மேக்கப் & ஹேர் டிரெஸ்ஸிங் செய்த அனுபவம் உண்டு’ என்கிறார் பானு. சந்திரமுகியில் ஜோதிகாவுக்கு பானு தான் மேக்கப்.

* சிவாஜியில் நீ தான் மேக்கப் & ஹேர் டிரஸ்ஸர் என்று ஷங்கர் சொன்னதும் அந்த பிரமிப்பு அடங்கவே பானுவுக்கு ரொம்ப நேரம் ஆனதாம்.

* சூப்பர் ஸ்டாரின் ஹேர் ஸ்டைல் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்குள் பல்வேறு வகையான விக்குகளை ரஜினிக்கு பொருத்தி பொருத்தி பார்த்து த்ரில் வாங்கிவிட்டார்கள். ஆனால் அவர் கொஞ்சமும் கோபப்படவில்லை. சலிப்படையவில்லை. நூற்றுக்கணக்கான விக்க்குகளை பொருத்துவதும் கழற்றுவதும் எளிதான வேலை அல்ல.

* படத்தில் ரஜினிக்கு மட்டும் கிட்ட தட்ட 40 விக்குகள் சோதித்து பார்க்கப்பட்டன. எல்லாமே அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷலாக ஆர்டர் செய்து இறக்குமதி செய்யப்பட்டவை.

* ‘இது தான் விக்’ என்று முடிவானதும் அதை விளக்கி, ரஜினி அவர்களின் தலை அளவை எடுத்து அமெரிக்க நிறுவனத்துக்கு அனுப்பினார்கள். அவர்கள்; விக்கி தயாரித்து கூரியரில் அனுப்பினார்கள். இப்படி தான் அனைத்து விக்குகளும் வந்தன.

* ‘ஒவ்வொரு விக்கையும் முடிவு செய்வதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. வித விதமான விக்குகளின் புகைப்படங்களை சேகரித்தோம்.இண்டர்நேட்டுக்குள் புகுந்து வலை வீசினோம். உலகின் பல்வேறு பேஷன் மாகஸின்களை வரவழைத்தோம். அவற்றிலிருந்து ஷார்ட் லிஸ்ட் செய்து முடிவு செய்தோம்’ என்கிறார் பானு.

* மேக்க்கப்பின்போது ரஜினி தினமும், ‘இன்றைக்கு ஒரு சிந்தனை’ என்று ரஜினி தான் படிக்கும் புத்தகத்திலிருந்து ஒரு வரி பானுவுக்கு படித்துகாட்டுவார். அதிகமான சிந்தனைகளை அவர் படித்து காட்டியது ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகத்திலிருந்து.

* ‘அதிரடிக்காரன்’ பாடலுக்கு பானு செய்த சிகையலங்காரத்தை பாராட்டிய ரஜினி, ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுக்களை பரிசளித்தார்.

* விக் பொருத்தும்போது தலையின் நடுப்பகுதியை அடையாளம் கண்டு பொருத்தவேண்டும். அப்படி அடையாளர் காணுவது எனக்கு சில சமயம் சரியாக வராமல் போகும். அப்போது ரஜினியே “இது தான் எனக்கு சென்டர்” என்று தலையில் கை வைத்து அடையாளம் காட்டுவார். என்று ஒரு சுவையான தகவலை சொல்கிறார் பானு.

* விக் வைப்பதற்கு வசதியாக நாங்கள் அவரது தலையின் முன் பகுதியை ஷேவ் செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். உண்மையில் அவருக்கு அவ்வளாவாக வழுக்கை இல்லை. நாங்கள் கேட்டுக்கொண்டதால் அவர் ஷேவ் செய்துகொண்டார். விக் பொருத்துவதும், அந்த இடத்தில் நன்கு பொருத்துவதும் இதனால் எளிதாயிற்று. என்கிற தகவலையும் தருகிறார் பானு.

* செட்டில் இருப்பவர்களை கூர்ந்து கவனித்து அவர்களை போலவே இமிடேட் செய்வது ரஜினிக்கு கை வந்த கலை. ஜோக் அடித்துக்கொண்டு அவர் செய்த கலாட்டாக்களுக்கு அளவேயில்லை. பானுவை போல பானுவிடமே இமிடேட் செய்து காண்பித்திருக்கிறார் ரஜினி.

* படத்துக்காக ரஜினிக்கு மொட்டையடிக்க அவரது பர்சனல் முடி திருத்தும் கலைஞர் கண்ணன் என்பவரை மும்பைக்கு அழைத்து போய், அங்கு அவருக்கு மொட்டையடித்தார்கள். எடுத்தவுடனேயே முழுவதுமாக மொட்டை போடவில்லையாம். கொஞ்சம் கொஞ்சமாக முடியை மழித்து, வேறு ஏதாவது ஸ்டைல் நன்றாக இருக்குமா என்று பார்த்து பார்த்து பிறகு தான் மொட்டை போடுவதற்கு முழு ஷேவ் செய்தாராம் கண்ணன்.

தன் மொட்டையை தடவிப் பார்த்து சந்தோஷமடைந்த ரஜினி, “இப்படியே இருந்திடலாம்னு பார்க்குறேன்!” என்றாராம் தமாஷாக.

* தலையில் லாங் ஹேர் நீண்ட முடி வைத்துக் கொண்ட போது மட்டும் சற்று சிரமப்பட்டாராம் ரஜினி.

* ஜோதிகா தவிர சூர்யா, விக்ரம், சோனாலி பிந்த்ரே என்று பல கலைஞர்களுக்கு பானு மேக்கப் போட்டிருந்தாலும் ‘சிவாஜி’யில் சூப்பர் ஸ்டாருக்கு மேக்கப், ஹேர் ஸ்டைல் செய்ததும் ஃபாரின லொக்கேஷன்களுக்கும் கூடவே சென்று பணியாற்றுவதும் தன்னுடைய வளர்ச்சிக்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் பானு.

(நன்றி: புகைப்பட நிபுணர் திரு.வெங்கட்ராம் & கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் ராணி மைந்தன் எழுதிய “சிவாஜி தி பாஸ்” புத்தகம்!)

[END]

15 Responses to “தலையை தடவிப் பார்த்து சந்தோஷப்பட்ட ரஜினி — ‘சிவாஜி’ ஃபோட்டோ செஷன் படங்கள் & மேக்கப் துளிகள்!”

 1. Somesh Somesh says:

  Sundarji,

  Thanks for taking us to the photo shoot of Sivaji :)

 2. murugan murugan says:

  thank you sir இத அப்படி இங்கிலீஷ் அப்டேட் pannuga

 3. harisivaji harisivaji says:

  Nice FlashBack

 4. Rajan Rajan says:

  SUPER STAR IS AMAZING

 5. s.vasanthan s.vasanthan says:

  இப்படி முன்பு ரஜினி ரசிகன் புத்தகம் இருக்கும் போது சூட்டிங் படங்களைப்பர்த்து சந்தோசப்படுவோம் ,ஆனால் பல ஆண்டுகள அதுவும் வருவதில்லை .ஆதலால் சுந்தர் இதுபோன்ற அரிய சூட்டிங் படங்களை தொடர்ந்து தர வேண்டும் .நன்றி .

 6. R.Gopi R.Gopi says:

  //“சிவாஜி தி பாஸ்” புத்தகம்!//

  இது நியாயமாக நீங்கள் எழுதி வெளிவந்து இருக்க வேண்டிய புத்தகம்….. என் ஆதங்கம் எனக்கு…..

  —————————————-
  என்ன செய்றது பாஸ்… ரஜினியின் கடைக்கோடி ரசிகனா பிறந்துட்டேனே… ரஜினி அவர்களை தூற்றுபவர்கள் கூட சுலபத்தில் எதையும் சாதிக்க முடிகிறது. ஆனால் அவரை நேசிப்பவர்களுக்கு…??
  - சுந்தர்

 7. m nagendra rao m nagendra rao says:

  சூப்பர் நியூஸ்

 8. Sankaranarayanan Sankaranarayanan says:

  உழைப்பின் வலி உண்மையான வெற்றி பெறும்போது பெருமையாக இருக்கும். சிவாஜி படத்தில் பணியாற்றிய அத்துணை கலைங்கர்களும் இதனை அனுபவித்திருப்பார்கள் கூடுதலாக நம் தலைவரின் அன்பையும், ஷங்கரின் அற்புத கலை திறைமையும் கிடைக்க பெற்று இருப்பார்கள்.

  நன்றி சுந்தர்ஜி

  ப.சங்கரநாராயணன்

 9. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Athiradi patula vara Thalaivar hair style thaan top. Wig illama ye motta BOSS kalakunar

 10. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Thanks na for giving Interesting news happening in SIVAJI photo shoot

 11. seerethran seerethran says:

  translate it…everytime ..pls

 12. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  அழகான போட்டோஸ் னா… போட்டோக்கு ஏற்ற அழகான வரிகள்… நன்றி சுந்தர் அண்ணா…

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 13. arulselvan arulselvan says:

  //“சிவாஜி தி பாஸ்” புத்தகம்!//

  இது நியாயமாக நீங்கள் எழுதி வெளிவந்து இருக்க வேண்டிய புத்தகம்….. என் ஆதங்கம் எனக்கு…..

  —————————————-

  என்ன செய்றது பாஸ்… ரஜினியின் கடைக்கோடி ரசிகனா பிறந்துட்டேனே… ரஜினி அவர்களை தூற்றுபவர்கள் கூட சுலபத்தில் எதையும் சாதிக்க முடிகிறது. ஆனால் அவரை நேசிப்பவர்களுக்கு…??

  - சுந்தர்

  ————————————————————————————-

  Hard work never fails.

 14. BaluMahendran BaluMahendran says:

  Nice போட்டோஸ் சுந்தர் gee . தகவல்கள் அனைத்தும் சூப்பர்.பகிர்வுக்கு நன்றி .சிவாஜி படம் என் வாழ்கையில் மறக்க முடியாத படம் (தலைவரின் எல்லா படமும் தான்).சென்னைக்கு வந்த பின்பு பார்த்த தலைவரின் படம்.அதுவும் ஸ்பெஷல் ஷோ அம்பத்தூர் ராக்கி theatre இல் ,நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு பார்த்த படம்.

 15. Sudarsan - Erode Sudarsan - Erode says:

  Thalaivar Romba Cool'a Irukkaar..

  Avar thalai maadiri vera enda nadigarukkum varaadu..

  Very Stylish…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates