









You Are Here: Home » Featured, Role Model » சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டுமா?
“சூப்பர் ஸ்டாரை பார்த்து பேசனும். அவர் கூட போட்டோ எடுத்துக்கணும்” - இப்படி ஆசைப்படாத ரசிகனே யாரும் இருக்க முடியாது. எல்லாருக்கும் அந்த ஆசை லட்சியம் இருக்கு. ஆனா அதுக்கான வழிமுறை? அது தான் யாருக்கும் தெரியலே…!
ஒரு காலத்துல, சூப்பர் ஸ்டார் படம் நடிக்கிறார்னா டெய்லி காலைல ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி ரசிகர்களை சுமார் அரை நேரமோ ஒரு மணி நேரமோ சந்திப்பாரு. (நான் சொல்றது 1997 க்கு முன்பு). வெளியூர்ல இருந்து வர்ற ரசிகர்கள் உட்பட குறைஞ்சது ஒரு 100 இல்லே 200 பேர் அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்குவாங்க. (நான் கூட இந்த டைம்ல தாங்க எடுத்தேன்!).
அதுக்கப்புறம் படிப்படியா அது குறைஞ்சி போய் ரசிகர்கள் கூட இது மாதிரி ஃபோட்டோ எடுத்துக்குறதை சுத்தமா நிறுத்திட்டாரு. அதாவது என்னைக்கு அரசியல் பரபரப்பு அவரை சூழ்ந்திச்சோ அப்போலேர்ந்து அவர் நம்ம கிட்டே இருந்து விலகிப் போயிட்டாரு. அதுக்கப்புறம் தி.மு.க.காரனும் த.மா.க.காரனும் தான் அவரை போய் பார்த்துக்கிட்டுருந்தாங்க. அதாவது அரசியலுக்கு போனாரு. நம்மகிட்டே இருந்தும் விலகிப்போயிட்டாரு.
பின்னாளில் எப்போதாவது அரிதாகவே ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுப்பது நடக்கிறது. அவர் மேல எந்த தப்பும் இல்லீங்க. இப்படி புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களின் எண்ணிக்கை லட்சகணக்கில் போய்விட்டதால், ஒருவரை விட்டு ஒருவரை எடுக்க விரும்பாது அது பற்றி பரிசீலனை செய்வதை கூட நிறுத்திட்டாரு.
“சரி… நம்ம கூட ஃபோட்டோ எடுக்குறதால அவனுக்கு என்ன பிரயோஜனம்? மேலும் மேலும் அவனோட மன்ற ஈடுபாடும் நம்ம மேல வெறித்தனமும் தான் அதிகமாகுது. அதையெல்லாம் விட்டுட்டு அவன் குடும்பத்தை கவனிக்கட்டும். நம்மளை வெறுத்தாலும் பரவாயில்லே” அப்படிங்கிற ஒரு நிலைப்பாட்டுக்கு அவர் வந்துட்டாரு. அது தான் உண்மை.
இருந்தும், அப்பப்போ அரிதாக சில ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை வருகிறது. தவிர்க்க இயலாத அந்த சூழ்நிலைகளில் எந்த வித முகச்சுளிப்பும் இல்லாமல், அதற்கு அவர் ஒத்துழைத்து சம்பந்தப்பட்ட ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அனுப்புகிறார். அது அப்பப்போ நடந்துகிட்டு தானுங்க வருது.
சரி… ஒரு ரசிகனா இருக்கிறவன் அவனோட ஃபேவரைட் ஐகான் அதாவது அவன் விரும்பும் ஒரு தலைவரோட / நடிகரோட புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புவது எந்த தவறும் இல்லையே…?? சரி தானே ?? இதுல என்ன தப்பு இருக்க முடியும்? ஒரு ரசிகன் இதுக்கு கூடவா ஆசைப்படக் கூடாது? நிச்சயம் ஆசைப்படலாம் தப்பே இல்லை.
சரி… அதுக்கு என்ன பண்ண முடியும்? என்ன பண்ணனும்?
அப்போல்லாம் தலைவர் கூட ஃபோட்டோ எடுக்கணும்னா சம்பந்தப்பட்ட மாவட்ட தலைமை மன்றத்துக்கிட்டேயிருந்து அவங்க லெட்டர் பேட்ல கடிதம் வாங்கிட்டு வரணும். வந்து சத்தியநாராயணா சார் கிட்டே அதை காமிக்கணும். அப்போ தான் தலைவரை பார்க்க முடியும். இப்போ மாவட்ட தலைவர்களே தலைவரை பார்ப்பது குதிரைக் கொம்பா இருக்குது. சராசரி ரசிகன் நிலைமையை கேட்கவா வேணும்?
சரி… இதுக்கு என்ன தான் வழி?
ஒரே ஒரு வழி தான் இருக்கு!!
VISUALIZE பண்ணுங்க. தலைவரை பார்க்குற மாதிரியும் அவர் கூட பேசுற மாதிரியும் அடிக்கடி VISUALIZE பண்ணிகிட்டே இருங்க. அதாவது கலாம் சொன்னாரே “கனவு காணுங்கள்”னு… அப்படி…! கனவு கண்டுட்டு கடமையை கோட்டை விட்டுடாதீங்க. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. நம்ம மனசுக்கு இருக்குற பவர் வேற எதுக்கும் இல்லேங்க. அதனால தான் THOUGHTS BECOME THINGS அப்படின்னு சொல்றாங்க. WHAT YOU THINK YOU BECOME ன்னு தலைவர் சொல்றது தெரியும்ல…?
அப்படியே எதையும் செய்யாம VISUALIZE பண்ணிக்கிட்டே இருந்தா நடந்துடுமா? அது தான் இல்லே. அப்படி VISUALIZE பண்ணும்போது ஒரு சராசரி ரசிகனா இல்லாம தலைவரை நீங்க ஒரு திறமைசாலியாகவோ அல்லது ஒரு சாதனையாளனாகவோ மீட் பண்ணுறதா VISUALIZE பண்ணுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். தலைவரை மீட் பண்ணின மாதிரியும் ஆச்சு. நீங்களும் சாதனை செஞ்ச மாதிரியும் ஆச்சு.
தன்னோட ரசிகர்களை வெறும் ரசிகர்களா அல்லாம திறமைசாலிகளாகவும் சாதனையாளர்களாகவும் பார்க்குறதுல தலைவருக்கு என்னைக்கும் விருப்பம் தான். ஒருத்தரு ரெண்டு பேர் என்ன, இப்படி ஆயிரம் பேர் வந்தாலும் அவர் மணிகணக்கா நின்னு சந்திப்பாரு. உறுதி!
இதுக்கு ஒரு சுலபமான பார்முலா இருக்கு.
உங்களோட லட்சியத்தை செட் பண்ணிக்கிட்டு அதில் தனி திறமையுடன் முழு ஈடுபாடு காண்பித்து உழைத்துக்கொண்டே இருங்கள். கூடவே அப்படி உழைத்து முடித்து அதில் சிகரத்தை எட்டிய நிலையில் தலைவரை மீட் செய்வதுபோல லட்சியம் வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் அது நடக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பர்ஸ்ட் / டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் வர்றது லட்சியமா இருக்கலாம். கல்லூரி மாணவர்களுக்கு யூனிவர்சிடி கோல்ட் மெடல் வாங்குறது லட்சியமா இருக்கலாம். ஸ்போர்ட்ஸ்ல இண்டரஸ்ட் இருக்குறவங்களுக்கு அதுல புகழ் பெறுவது லட்சியமா இருக்கலாம். வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டி ஒரு PROUD HOUSE OWNER ஆக மாறுவது லட்சியமா இருக்கலாம். எழுத்து துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதில் புகழ் பெறுவது, பாராட்டுக்கள் பெறுவது லட்சியமா இருக்கலாம். பிசினஸ் செய்துகிட்டிருப்பவர்கள் அதிலேயே பேரும் புகழும் பெற்று தனிச் சிறப்புடன் திகழ்வது லட்சியமா இருக்கலாம். இப்படி… அவங்கவங்க சார்ந்த துறையில ஒரு சாதனையை அளவுகோலா வெச்சிகிட்டு ஹார்ட் வொர்க் பண்ணுங்க. அதை அடைஞ்சதும் தலைவரை மீட் பண்றதா நினைச்சுக்கோங்க. சீக்கிரமே நடக்கும்!
நீங்க தலைவரை மீட் பண்ணும்போது நீங்க யாரு, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு அவருக்கு தெரிஞ்சி நீங்க மீட் பண்ணனும். அது தான் சாதனை.
சொல்றதுக்கு நல்லா தான் இருக்கு? நடைமுறையில சாத்தியமா??
ஏன் சாத்தியம் கிடையாது??
அப்படி ஒருத்தரு பார்த்திருக்காரே…!!
அவன் ஒரு ரஜினி ரசிகன். சிறு வயது முதலே ரஜினியை பார்க்கவேண்டும். அவருடன் பேசவேண்டும். ஃபோட்டோ எடுத்துகொள்ளவேண்டும் என்ற ஆசைகள் மனதில் நிரம்பிய சராசரி ஏழை ரசிகன். (இவன் அப்பா ஒரு டாக்சி டிரைவர்!)
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்பில் ஓரளவு சிறந்த மாணவன் இவன். வகுப்பில் செம ரகளை டைப். அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலவென இருக்கும். மற்றவர்களை இமிடேட் செய்து அவர்கள் குரலில் பேசுவது இவனுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆகையால் இவனை சுற்றி எப்போதும் இவன் செய்யும் சேட்டைகளை இமிடேஷன்களை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கும். பிளஸ் டூ படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்பு மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் கிண்டியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் கேட்டரிங் டெக்னாலஜி சேர்ந்தார். ஆறு மாதத்தில் டிப்ளமோ அப்புறம் கை நிறைய சம்பளம் என்பதால் அவர் இதை தேர்ந்தெடுத்தார். (தற்போது M.Sc. Psychology வரை படித்திருக்கிறார் என்பது வேறு விஷயம்.)
இவருடைய நண்பர் கௌதம் என்பவரின் தந்தை மூலமாக இயக்குனர் வேலு பிரபாகரனின் அறிமுகம் கிடைக்க, இவரது மிமிக்ரி திறமையை கண்டு வியந்த அவர், இவரை பகுத்தறிவு பிரச்சார மேடைகளில் தந்தை பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் குரலில் பேச பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தார். பெரியார் திடலுக்கு இவரை அனுப்பி தந்தை பெரியாரின் உரைகளை மேடைப் பேச்சுக்களை கேட்க செய்தார். ஓரளவு இவர் ஹோம் வொர்க் செய்துகொண்டதும், இவரது முதல் மேடை நிகழ்ச்சிக்காக போரூர் ரவுண்டானா அருகே பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டத்தில் பேச வைத்தார். அப்படியே தத்ரூபமாக பெரியார், அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர். என தலைவர்களின் குரலில் பேசி அசத்தினார். பிறகென்ன ஒவ்வொரு பகுத்தறிவு பிரச்சார மேடையும் இவரில்லாமல் களை கட்டாது.
இப்படியாக பிரச்சார மேடைகளுக்கு சென்றுகொண்டிருந்த இவரை, இயக்குனர் பாக்யராஜின் அலுவலகத்தில் பணிபுரியும் இவரது நண்பர் ஒருவரின் உறவினர், இவரை பாக்கியராஜிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் இவரை பொதிகையில் ஒளிபரப்பான ஒரு தொடரில் அறிமுகப்படுத்த, அதற்கு பிறகு தொலைக் காட்சியில் இவர் புகழ் ஆரம்பித்தது. மிமிக்ரி மனோ என்று இவரை அழைக்க ஆரம்பித்தார்கள்.
மிமிக்ரியில் நல்ல புகழ் கிடைத்துவிட, கார்பரேட் கம்பெனிகள் இவருக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். ஓரளவு வருமானம் வரத் துவங்கிவிட, சொந்தமாக கார் ஒன்று வாங்கினார். இவரது காரில் “Confidence is my power” “Don’t expect; But be confident” என்று முன்னும் பின்னும் எழுதி வைத்துள்ளார்.
இப்போதும் தனது பள்ளி நண்பர்கள் ஸ்ரீநாத், மோகன் தாஸ், யாமிணி, இயக்குனர் வேலு பிரபாகரன், இயக்குனர் பாக்யராஜ், ‘காதல்’ சுகுமார் இவர்களை தனது வளர்ச்சிக்கு காரணமாக குறிப்பிடுகிறார் இவர்.
ஓரளவு வருமானம் வரத் துவங்கிவிட, சொந்தமாக கார் ஒன்று வாங்கினார். இவரது காரில் “Confidence is my power” “Don’t expect; But be confident” என்று முன்னும் பின்னும் எழுதி வைத்துள்ளார்.
வெவ்வேறு விழாக்களில் ஏ.வி.எம். சரவணன், குன்னக்குடி வைத்தியநாதன், ஆகியோரின் கைகளால் ‘தமிழகத்தின் சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட்’ விருது பெற்றுக்கிறார். இவர் மொத்தம் இது போன்று ஆறு விருதுகளை வாங்கியிருக்கிறார்.
‘மானாட மயிலாட’ சீசன் 4 ல் ‘காதல்’ சுகுமாருடன் இவர் இணைந்து கலக்கோ கலக்கு என்று கலக்க உலகம் இவரை கவனிக்க ஆரம்பித்தது. உள்ளுக்குள் ரஜினி அவர்களை பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கென எந்த முயற்சிகளும் இவர் எடுக்கவில்லை. காரணம், இவரே அடிக்கடி ரஜினி போல பேசுவதால், இவருக்கு அவருடனேயே இருப்பது போல ஒரு ஃபீலிங் வந்துவிட்டது.
இருந்தாலும், மேடை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் இவரை பார்க்கும் சின்னி ஜெயந்த், மயில் சாமி உள்ளிட்ட பிரபலங்கள் இவரிடம், “டேய்… ரஜினி மட்டும் உன்னை பார்த்தாருன்னா… ரொம்ப சந்தோஷப்படுவாறு. அவரை ஈசியா நீ இம்ப்ரெஸ் பண்ணிடுவே. நான் உன்னை அவர் கிட்டே கூட்டிகிட்டு போறேன். Don’t worry!” என்று ஆசை வார்த்தைகளை வீசுவர். அப்போதெல்லாம் இவருக்கு அந்த ஆசை அரும்பும். ஆனால், இவர் அதற்காக எந்த வித பிரயத்தனமும் எடுப்பது கிடையாது. (சரியான நேரடி வாய்ப்புக்காக காத்திருந்தார் என்பதால்.)
‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் இவரது திறமையை பார்த்து வியந்து போன ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் - அவர் பெயர் தமிழமுதன் - இவரை வைத்து படமெடுக்க விரும்பி, அழகு சுந்தரம் என்பவரை இயக்குனராக போட்டு - ‘புழல்’ என்ற படத்தை எடுத்தார். ஓரளவு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலக தமிழர்கள் மத்தியில் அறியக்கூடிய பிரபலமாக மாறிப் போனார் இவர். தற்போது அதியமான் இயக்கத்தில் ‘தப்புத் தாளங்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி அவர்களை பார்த்தால் என்ன பேசவேண்டும் என்று மனதிற்குள் தெளிவாக ஒரு ஸ்கெட்ச் இருந்தது இவரிடம். அந்த சிந்தனையை ‘நம்பிக்கை’ என்னும் தண்ணீர் ஊற்றி பட்டுப்போகாமல் வளர்த்துவந்தார்.
(ஒரு விஷயத்தை இங்கே தான் நீங்க புரிஞ்சிக்கணும். சரியான வாய்ப்புக்காக காத்திருப்பது என்பது வேறு. தவறான அணுகுமுறைகளால் தேடல்களால் நமது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பது வேறு. இவர் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்து வைத்திருந்தார் என்பதே உண்மை!)
அப்போ… எப்போ தாங்க இவர் ரஜினியை பார்த்தாரு?
அங்கே தான் மேட்டரே இருக்கு!
இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்.
ஒரு நாள் இவர் தனது படக்குழுவினருடன் பாங்காக் போய்விட்டு ரிட்டர்ன் வரும்போது பார்த்தால் ஏர்போர்ட்டில் தலைவர் நிக்கிறார். மனசுக்குள் ஒரு ஃபிளாஷ். கும்பிட காத்திருந்த தெய்வம் குறுக்கே வந்தது போல. ஏற்கனவே அவரை பார்த்தால் என்ன பேசவேண்டும் அப்படின்னு இவர் மனசுல ஆழமா ஹோம்வொர்க் செஞ்சி பதிய வெச்சிட்டதால இவருக்கு ஒரு பக்கம் பதட்டமா இருந்தாலும் ஒரு பக்கம் தன்னை அழகா எக்ஸ்போஸ் பண்ணிக்க தைரியம் இருந்தது.
அதற்கு பிறகு ஃபிளைட்டில் ஒன்றாக இவர் தலைவருடன் பயணித்தாலும் (இவர் எகானமி கிளாஸ்…. அவர் பிசினஸ் கிளாஸ்) அவரை ஃபிளைட்டில் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இருப்பினும் ரஜினியை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று மனசுக்குள் ஒரு போராட்டம். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு (FLIGHT ATTENDANTS கண்ணில் மண்ணை தூவிவிட்டு) இருக்கையைவிட்டு எழுந்து பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருக்கும் ரஜினியை இவர் நெருங்குகிறார்…. இவர் போட்டோ எடுக்க விரும்புகிறார் என்று கருதி… “சென்னைல லேண்ட் ஆனதும் ஃபோட்டோ எடுத்துக்கலாம்” என்று ரஜினி கூற, இவரோ…. “சார்.. எனக்கு ஃ போட்டோ எடுக்கவேண்டாம்… உங்க கூட கொஞ்சம் பேசனும்” என்று கூறுகிறார்.
“என்ன… என்ன…?” என்று ரஜினி கேட்க….
அதற்குள் ரஜினி அருகே உட்கார்ந்திருந்த யாரோ ஒரு நபர் “போய்யா .. போ… டிஸ்டர்ப் பண்ணாதே போ…” என்று விரட்டுகிறார்.
ஆனால், ரஜினி அவரை தடுத்து, “நீங்க சொல்லுங்க….” என்பது போல பார்க்க…. இவர் தான் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதையும், இதுவரை 1500 மேடை நிகழ்ச்சிகளுக்கும் மேல் செய்திருப்பதை பற்றியும், ‘புழல்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததை பற்றியும் அவரிடம் சொல்கிறார். தவிர ‘மானாட மயிலாட சீசன் 4′ இல் இவர் பர்ஃபார்ம் செய்ததை பற்றியும் கூறுகிறார். ரிலாக்ஸாக சந்திக்க ஐந்து நிமிடங்கள் அப்பாயின்மென்ட் கேட்கிறார்.
அடிப்படையில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதால் அந்த சொற்ப நேரத்தில் இவரால் தலைவரது கவனத்தை ஈர்க்க முடிந்தது என்பது தான் விஷயமே. “சரி… நீங்க வீட்டுக்கு வந்து பாருங்க” என்கிறார் ரஜினி.
சென்னை வந்த இவருக்கு இருப்பு கொள்ளவில்லை. பசிக்கவில்லை… தூக்கம் வரவில்லை… எப்போடா பொழுது விடியும் என்று காத்திருந்து… அடுத்த நாள் காலை குளித்து ரெடியாகிவிட்டு போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு பறக்கிறார். அங்கு சென்றால்… தலைவர் அங்கு இல்லை. அவர் வேளச்சேரி வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. சற்று ஏமாற்றமடைந்த இவர் தலைவர் தன்னை வரச் சொன்ன தகவலையும் சொல்லிவிட்டு இவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு, உடனே கிளம்பிவிட்டார்.
திரும்பும் வழியில், வடபழனி நூறடி ரோட்டில் லக்ஷ்மன் சுருதி அருகே வரும்போது தலைவர் வீட்டிலிருந்து ஃபோன்.
“ரஜினி சார் வீட்டுல இருந்து பேசுறோம்… சார் இப்போ தான் வந்தாரு. உங்களை உடனே வரச் சொல்றாரு. வரமுடியுமா?”
சென்னை வந்த இவருக்கு இருப்பு கொள்ளவில்லை. பசிக்கவில்லை… தூக்கம் வரவில்லை… எப்போடா பொழுது விடியும் என்று காத்திருந்து… அடுத்த நாள் காலை குளித்து ரெடியாகிவிட்டு போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு பறக்கிறார். அங்கு சென்றால்… தலைவர் அங்கு இல்லை.
“Oh…. நான் இப்போ வடபழனியில இருக்கேன் சார்….”
“சரி.. எவ்ளோ நேரத்துல உங்களால வரமுடியும்?”
இவர் வடபழனி டு போயஸ்கார்டன் தூரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் ஒரு நொடி கணக்கிட்டுவிட்டு “ஒரு அரை மணிநேரத்தில் வந்துடுறேன் சார்..!” என்று கூறுகிறார்.
எதிர்முனையில், “வடபழனியில இருக்காராம். அரை மணி நேரம் ஆகும்னு சொல்றார்” என்று தலைவரிடம் கூட ஃபோன் பேசும் நபர் கூற, தலைவர் “ஓ.கே வரச் சொல்லுங்க” என்று கூறுகிறார் சூப்பர் ஸ்டார்.
அடுத்த நொடி இவர் காரை திருப்புகிறார். சென்னை போக்குவரத்தில் லாவகமாக அதே சமயம் வேகமாக தனது காரை விரட்டியபடி பறக்கிறார். இவர் கோடம்பாக்கம் பிரிட்ஜ், நுங்கம்பாக்கம் சிக்னல் என்று போக்குவரத்தில் நீந்தி தலைவரின் வீட்டை சென்று அடைவதற்குள் அரை மணி நேரத்துக்கும் மேலேயே ஆகிவிடுகிறது.
ராகவா வீரா அவென்யூவில் இவர் காரை நிறுத்திவிட்டு இறங்கி வேகமாக நடக்கிறார். (ஓடுகிறார்…) அங்கே தலைவர் போர்டிகோவில் சௌந்தர்யாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்.
இவரை பார்த்ததும் “வாங்க வாங்க..” அன்று அன்புடன் அழைக்கிறார். தனது மகளிடம், “He is a big mimicry artiste. You know…?” என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார்.
“என்னப்பா லேட் பண்ணிட்டே… நான் உனக்காக அரை மணி நேரமா காத்துக்கிட்டுருக்கேன்…” என்று கூறி, “காமிரா ப்ளீஸ்” என்று புகைப்படமெடுக்க ஆளை கூப்பிடுகிறார்.
“சார்… நான் உங்க கூட ஃபோட்டோ எடுக்க வரலை. ஜஸ்ட் ஒரு 5 நிமிஷம் பேச வந்திருக்கேன்”
“ஸாரி… யூ…ஸீ… நான் இப்போ வைரமுத்து சாரை பார்க்க போயிட்டுருக்கேன். உங்களுக்காக அரைமணிநேரம் வெயிட் பண்ணினேன்”
“இருக்கட்டும் சார். நான் எட்டு வருஷமா காத்துக்கிட்டுருக்கேன் சார். ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கினா தப்பில்லே” இவர் சற்று துடுக்கத் தனமாக கூற ரஜினி உடனே பலமாக சிரிக்கிறார்.
சற்று யோசித்த ரஜினி… “ஒ.கே. சொல்லுங்க…. என்ன பேசணும்?”
“ஒண்ணுமில்லே சார்… நான் ‘புழல்’னு ஒரு படம் பண்ணினேன் சார். அதோட 100வது நாள் விழாவுக்கு நீங்க வந்தீங்கன்னா என்ன பேசுவீங்கன்னு ஒரு சின்ன மிமிக்ரி உங்க கிட்டே பண்ணி காட்டணும்னு ஆசைப்படுறேன் சார்”
“இருக்கட்டும் சார். நான் எட்டு வருஷமா காத்துக்கிட்டுருக்கேன் சார். ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கினா தப்பில்லே” இவர் சற்று துடுக்கத் தனமாக கூற ரஜினி உடனே பலமாக சிரிக்கிறார்.
ஆர்வமான ரஜினி…. “ஓ… குட்… proceed” என்று கூற…
இவர் துவக்குகிறார்.
உரையின் ஆடியோ வடிவத்தை இணைத்திருக்கிறேன்.
RAJINI’S SPEECH AT PUHZAL 100 DAYS FUNCTION
http://www.youtube.com/watch?v=VDBkfBqaaH0&feature=youtu.be
என்ன கேட்டீங்களா? சூப்பர்ல… தலைவர் போலவே அதே மாடுலேஷன். அதே குரல். அதே வேகம். தூள் கிளப்பியிருக்கிறார்ல?
“சந்தோஷம் HAPPINESS என்னைக்கும் வந்துட்டு போயிடும். ஆனா சமாதானம் என்னைக்குமே இருக்கும்…. ஹா…ஹா…ஹா…” அப்படின்னு இவர் சொல்லி முடிச்சவுடனே “வொண்டர்புல்…. மார்வலஸ்…. WHAT A CONCEPT WHAT A CONCEPT” என்று வியந்து இவரை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொள்கிறார்.
“நீங்க….நீங்க எங்கேயிருக்கீங்க?” இவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது.
“வியாசர்பாடியா… குட்… குட்… WHAT A கான்செப்ட்….. WHAT A CONCEPT…” வியப்பு இன்னும் அடங்கவில்லை.
“இப்போ…நான் சொல்றேன்… ஃபோட்டோ…. ஃபோட்டோ எடுங்க ப்ளீஸ்!” என்று அங்கிருந்த தனது மகளை போட்டோ எடுக்கச் சொல்கிறார். இவரை கட்டிபிடித்து, தோளில் கைபோட்டு மூன்று நான்கு புகைப்படங்கள் எடுக்கிறார் தலைவர்.
மறுபடியும் இவரை இறுக்கி அணைத்துக் கொள்கிறார்…. : “எக்ஸலன்ட்… எக்ஸலன்ட்…” தனது விழியோரத்தில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொள்கிறார் ரஜினி. (ரஜினி தாங்க!)
“ஆறு வருஷத்துக்கு முன்னாடி உங்களை பார்க்க வந்தேன் சார். அப்போ ரசிகனா வந்தேன். என்னை உள்ளே விடலை. இப்போ நடிகனா வந்திருக்கேன். உள்ளே விட்டுருக்காங்க. நாளைக்கு இதை விட ஒரு பெரிய ஆளா வந்து உங்களை சந்திப்பேன்” தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.
“சார்… உங்ககிட்டே என்னை கூட்டிகிட்டு வந்து காட்டுறேன்னு சின்னி ஜெயந்த்ல இருந்து மயில்சாமி வரைக்கும் நிறைய பேர் சொன்னாங்க. ஆனா இப்போ நான் என்னோட சொந்த முயற்சியில தான் உங்களை வந்து சந்திச்சிருக்கேன்!”
மறுபடியும் பலமாக சிரிக்கிறார் ரஜினி.
கமலின் 27 வகை குரல்களையும் தம்மால் பேசிக்காட்ட முடியும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இவர் கூறுகிறார்.
“ஆறு வருஷத்துக்கு முன்னாடி உங்களை பார்க்க வந்தேன் சார். அப்போ ரசிகனா வந்தேன். என்னை உள்ளே விடலை. இப்போ நடிகனா வந்திருக்கேன். உள்ளே விட்டுருக்காங்க. நாளைக்கு இதை விட ஒரு பெரிய ஆளா வந்து உங்களை சந்திப்பேன்”
“வைரமுத்து சாரை பார்க்கணும்…. இல்லேன்னா நிறைய பேசுவேன் உங்கிட்டே”
“ஓகே சார்… உங்களுக்கு எப்போவாவது போரடிச்சா, மனசு சரியில்லேன்னா சொல்லுங்க சார்…. நான் வந்து உங்களை entertain பண்றேன்”
“Sure… Sure….”
இவர் தற்போது நடித்துவரும் பிராஜெக்டுகள் உட்பட பலவற்றை சுருக்கமாக விசாரித்துவிட்டு… “நல்லா பண்ணுங்க.. நல்லா வருவீங்க!” என்று வாழ்த்துகிறார்.
இவர் என்னிடம் உரையாடிய போது, தலைவர் கூறிய வார்த்தைகளை, அப்படியே தலைவரின் குரலிலேயே பேசிக்கொண்டே உரையாடினார். எனக்கு தலைவருடன் பேசுவது போலவே இருந்தது. அப்படி ஒரு தத்ரூபம். திறமை.
———————————————————————————-
ஒரு விஷயம் நீங்க கவனிக்கணும். ரஜினி அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது, இவர் தன்னை எக்ஸ்போஸ் செய்துகொண்ட விதம் கவனிக்கத்தக்கது. சராசரி ரசிகன் போல ஃபோட்டோ எடுப்பது மட்டுமே குறிக்கோள் என்று இவர் இருந்திருந்தால், சென்னை விமான நிலையத்திலேயே ஒரு சில நொடிகள் சந்திப்பிலேயே அது முடிந்திருக்கும். ஆனால் இவர் அணுகுமுறையால் (மன உறுதின்னு சொல்லலாம்) இதை சாத்தியமாக்கியிருக்கிறார்.
அதே சமயம், இது போன்று ரஜினி தான் இப்படி சந்திக்கும் நபர்களை எல்லாம் “வீட்டிற்கு வாருங்கள்” என்று கூப்பிடுவதில்லை.
அப்போ…. இவரை மட்டும் ஏன் கூப்பிட்டார் தெரியுமா?
இவர் ரசிகன் என்பதால் மட்டுமல்ல. ஒரு வளர்ந்து வரும் கலைஞன். நடிகன். இவரைப் போன்று அடிமட்டத்திலிருந்து வருபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்று கருதியதால் தான் வீட்டிற்கு அழைத்தார். இவர் கூறுவதை பொறுமையாக கேட்டார். ஃபோட்டோவும் எடுத்தார்.
இவரிடம் இருந்த திறமை,அப்புறம் நம்பிக்கை, செயலின் மீது கொண்ட உறுதி, எல்லாவற்றுக்கும் மேல்…தைரியம்! (FORTUNE FAVOURS THE BOLD) இவையெல்லாம் தான் இந்த சந்திப்பை சாத்தியமாக்கியது!
ரஜினி அவர்களிடம் தனக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டுவிட்டாலும், அடுத்தடுத்து தாம் சும்மா சும்மா அவரை சந்தித்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று கூறுகிறார் மனோ. அவரிடம் கூறியதைப் போல, அடுத்து இதை விட ஒரு பெரிய நிலைக்கு போய் பின்னர் தான் அவரை சந்திப்பேன் என்றும் கூறுகிறார்.
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
கடைசீயா நான் இவர் கிட்டே கேட்ட கேள்வி:
நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
திரு.மனோ : இருக்கு. அதுக்காக அவரை சும்மா தொந்தரவு பண்றது கிடையாது. கடவுளுக்கும் மேல என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!
எப்பூடி…!!!!!!!
இவரது மொபைல் காலர் ட்யூனில் ஒலிக்கும் பாடல் என்ன தெரியுமா?
“வெற்றிக் கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா”
ஹொவ் இஸ் இட்?
ஒரு சிலருக்கு நான் சொல்லியிருக்கும் விஷயங்கள் காமெடியாக தெரியலாம். ஆனா, சீரியசான வழிமுறைகளால நீங்க உங்களை தொலைக்க தான் வாய்ப்பிருக்கு. ஆனால், நான் கூறியிருக்கும் இந்த முறையால் நீங்கள் சூப்பர் ஸ்டாரை சந்திக்க வாய்ப்பிருப்பதோடு மட்டுமல்ல நீங்கள் உங்களை புதிதாக கண்டெடுப்பீர்கள்.
இன்றே உங்கள் லட்சியத்தை நோக்கி பயணத்தை துவக்குங்கள்!
ஒரு சாதனையாளராக நீங்கள் ரஜினி அவர்களை பார்க்க விரும்பினால் உங்களை யார் தடுக்க முடியும்?
[END]
can u plz share ur story when u met super star
———————————————-
Check the following article http://onlysuperstar.tamilmovieposter.com/?p=5420
- Sundar
Superrrrrrrb post Sundar ji!! Loved it a lot!!
Lucky person speak with god. Anna super thoughts. namum kanavu kanbom.
————————————
Did you saw thalaivar's speech in video?
- Sundar
சூப்பர் மிமிக்ரி சார்!! Hats off to Mano!!
Good suntar ji..ungada ovvoru posttum supar..super..neengal tarum tahavalhal anaitthum arumai innum orriru varudangalil ithuthan mutal nilai inayamaha irukkum endru ninaikkireen..good keep it up.
sooper article !!!
soooooper Rasigan !!!!
motivating :claps:
excellent :claps:
>>>>>>>>>>>>>>>>
வர வர உங்க பதிவுகள் நல்லா இருக்கு
சூப்பர் ரசிகர்!!!!ஆனால் நடைமுறையில் "எல்லோருக்கும்" இது சாத்தியம் என்று கூற முடியாது!! இவருக்கு ஆயிரம் திறமைகள் இருந்தாலும், தன் நம்பிக்கை, விடா முயற்சி, கொள்கை என அனைத்தும் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கிறது. இது இவருக்கு பலமாக அடித்துள்ளது!! இல்லை என்றால் தலைவரை திடீரென்று விமானத்தில் பார்பாரா, பேசுவாரா, சின்ன திரையில் கலக்குவாரா, சினிமாவில் இப்போது நுழைந்திருப்பாரா!!! என்ன தான் அதிர்ஷ்டம் இருந்தாலும் திறமை இல்லையென்றால் தலைவர் இவரை வீட்டிற்க்கு அழைத்திருக்க மாட்டார் என்பதும் உண்மை!!
ஒரு சில பேர் தலைவருடன் பத்து தடவை, ஐம்பது தடவை போட்டோ எடுத்துவிட்டேன் என்று சாதனை புரிந்து வருகிறார்கள்!! இதனால் பத்து பைசா கூட உபயோகம் இல்லை!! அதற்க்கு பதிலாக இவரை போல் ஏதாவது செய்தால் சுந்தர் அண்ணன் கூறியது போல் தலைவருடன் போட்டோ எடுத்தார் போல ஆயுற்று, அதே சமயம் சாதனையாளனாகவும் ஆகியதாக இருக்கும்!!!
இதுவரை தலைவருடன் போட்டோ எடுத்தவர்கள் அனைவரும் சாதனை செய்து தான் எடுத்துள்ளனரா???? இல்லை தானே!! ஒரு ரசிகனுக்கு தேவை தலைவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்
—————————————————-
"அதிர்ஷ்டம்" - அடுத்தவனோட சாதனைக்கும் உழைப்புக்கும் நாம கொடுக்குற பேர்!
///////ஆனால் நடைமுறையில் “எல்லோருக்கும்” இது சாத்தியம் என்று கூற முடியாது!!//////
முடிஞ்சவன் சாதிக்கிறான். முடியாதவன் இது மாதிரி பேசிகிட்டே காலத்தை ஓட்டுறான்.
இப்படி பேசுறதுக்கு பதிலா நான் சொன்ன மாதிரி ஏதாவது ஒரு லட்சியத்தை ஃபிக்ஸ் பண்ணி அதுல ஹார்ட் வொர்க் பண்ற வழியை பாருங்க. கூடவே, தலைவரை பார்க்குற அந்த தருங்களை visualize செய்யுங்க. நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
- சுந்தர்
Ennoda (nokia-2626) mobile la video paka mudiyala na.
Enjoy Coming week Thalaivar movie special in Raj tv @ 10.30p.m
Superb Article..You got an information from Mano(Not every one will be able to get this kind of spectacular moments/information)…..But the way you presented has added magic to it…
fantastic article ji.
if there someone other than thalaivar then mano would have been scolded after when said that he had waited for 8 yrs and its not a matter for waiting 5 mins for him. but its thalaivar who encouraged him by listening to him for his talent. only thalaivar could do it.
Sundarji,
Thalaivar rocks in Kochadaiyaan….videos
http://www.indiaglitz.com/channels/tamil/videos/3...
My dear humane Rajni aficionados,
********************************************
Hope everybody is fine and doing excellent.
****
one more hats off to sundarji. meeting such a great people and getting the information. Really hats off.
***
coming to the article,
perfectly sundarji presented the article. Good! I really liked it and loved it. He has given the perfect formula.
***
But I would like to add a little bit of ingredients to the formula to make it shine like a diamond. And that's,
"Don't aim for small thing. But for really high. you should think that if we achieved this dream, we will be fantastic. That kind of feeling - you have to be blown away while imagining itself. It will be really helpful for making you to visualize and achieve."
***
Since Dr. Kalam himself told that,
"I insist that aiming small is a crime. I see youth development has multiple dimensions".
***
Hats off to Mr. Mano. Good and very happy for him. He met super star of his own. That's the confidence, that's the belief that he would see him one day definitely, that's imagination, that's the clarity, that's love as well as passion towards seeing him. If we have that, we can also meet super star.
***
I love his qualities. And I am proud of our super star fans, like mano and our function hero, John, Techberry, magnificent businessman worth of 100 crores and so many people are changing their lives to the extra ordinary position by admiring our super star and following the few principles of our sivaji rao.
Good and very very happy to know them all!
I hope that one day I will also become one of them!!!
***
All the power is within you. You can do anything and everything. - Swami Vivekananda.
***
If you really want something, the universe will conspire in helping you to achieve it. - The Alchemist.
***
So, that is the thing. I hope that I too would meet our thalaivar after achieving my great dream/aim.
***
by,
**Chitti**.
Jai Hind!!!
Dot.
http://www.youtube.com/watch?&gl=IN&hl=en...
ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே ..
Good one Sundar
@Rajnimanoj,
****
don't say like that. God gives a push only for those who really have burning desire and courage to take steps and work on it to achieve it.
***
I like the quote below,
"Luck favors only brave people who do have courage to advance confidently in the direction of their dreams (whatever obstacles come)".
Excellent article சுந்தர்!
sir simply mass article sorry for late comment. I am just blown away and this article has thought me so many lessons how to meet thalaivar. I am taking a print out of this article so it keeps remaining
Thanks for the link
மிகவும் அருமை.