You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 66 : கோச்சடையானின் அடுத்த கட்ட படப்பிடிப்பு & சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் தயாரிப்பது யார்?

1) ரஜினியிடம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? பட்டியலிடுகிறார் ஸ்ரேயா!

ஒரு ஆங்கில நாளிதழின் இணைப்பு இதழுக்காக “உங்கள் இன்பிரேஷனாக நீங்கள் யாரை கருதுகிறீர்கள்?” என்று நடிகர் கார்த்தி, பாடகி சின்மயி, பாடகி தன்வி ஷா, நடிகை த்ரிஷா, நடிகை ஸ்ரேயா சில பிரபலங்களிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர்களில் நான்கு பேரை குறிப்பிடவேண்டும். உள்ளிட்டோரிடம் இது பற்றி கேட்கப்பட்டது.

ஸ்ரேயா தனது இன்ஸ்பிரேஷனாக கூறிய நான்கு பேர்களில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர். “ரஜினி சார் எனக்கு எப்போதுமே மிகச் சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரது இரக்கம், எளிமை, தொழில் பக்தி, எங்கும் எதிலும் நேர்த்தி இதெல்லாம் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. நான் பெரிதும் மதிக்கும் நபர்களில் ஒருவர்!” என்கிறார் ஸ்ரேயா.

(ஒரு சூப்பர் ஃபோட்டோ போடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சதுப்பா! ஹி…ஹி..!!)

2) கோச்சடையானின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு?

லண்டனில் பின் வூட் ஸ்டூடியோவில் முதல் கட்ட ஷூட்டிங் திருப்திகரமாக நடைபெற்றதையடுத்து மிகவும் உற்சாகத்தில் உள்ளது ‘கோச்சடையான்’ டீம். குறிப்பாக சூப்பர் ஸ்டார்.

படத்தின் தனித் தன்மைக்கும் வெற்றிக்கும் சூப்பர் ஸ்டார் உத்திரவாதம் அளித்துள்ளதையடுத்து ரசிகர்கள் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு உள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீம், கேரளாவிற்கு செல்லவிருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ‘எந்திரன்’ திரைப்படத்தின் ஒரு சில பகுதிகளும் இந்த ஸ்டூடியோவில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3D படத்திற்கு தேவையான அனைத்தும் உள்கட்டமைப்பு வசதிகளும் எடிட்டிங் சூட்களும் இங்கு பிரத்யேகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(இங்கே ஷூட் பண்றதுக்கும் ‘மேக்கிங் ஆப் கோச்சடையான்’ வீடியோ ரிலீஸ் பண்ணா நல்லாயிருக்கும்!)

3) ரஜினி சொல் கேட்டிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்திருக்கும் - குமரி அனந்தன்

நரசிம்மராவ் பிரதமராக இருந்த கடைசி கட்டங்களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். 1996 இல் ரஜினி வலிய வந்து ஆதரவு கொடுத்தும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் மேலிடம் தவறிவிட்டதால், தமிழ் நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் இழந்ததாக குமுறுகிறார். இது தொடர்பாக தனது கருத்துக்களை தான் அளிக்கும் பேட்டிகளில் தெரிவித்தும் வருகிறார். (1996 இல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சூப்பர் ஸ்டார் ரஜினி இது தொடர்பாக மூன்று முறை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!)

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : “காங்கிரஸ் மேலிடம் தமிழக மக்களை குறைவாகவே எடைபோட்டு வருகிறது. மாநிலத் தலைவர்களின் கருத்துக்களை கேட்பதே இல்லை. இங்கே ரஜினிகாந்த்துக்கு இருக்கிற செல்வாக்கு பொறந்த குழந்தைக்கு கூட தெரியும். அவர் ஆதரவு தரமாட்டரான்னு ஒவ்வொரு தேர்தல்லயும் கட்சிகள் கிடந்து அலைமோதும். அவர் மூணு முறை கட்சியோட தேசியத் தலைமையை சந்திக்க டெல்லி வந்தார். தேர்தலை சந்திக்கிறது தொடர்பா அவர் சொல்றதை எல்லாம் கேட்டாங்களே தவிர, அதன் படி நடக்கலே. பிறகு எப்படி இழந்த ஆட்சியை பிடிக்க முடியும்? இப்படி பண்ணுன தவறுகள் தொடர்ந்ததால தமிழ் மக்கள் மனசுல காங்கிரஸ்னா வெறுப்பாயிடிச்சு. தவறுகள் திருத்தப்பட்டா மக்கள் மனசு மாறுவாங்க.”

(அப்போதைய இந்திய பிரதமரை சந்திச்சிட்டு ஃபோட்டோ எடுத்துக்காம வந்த ஒரே ஆள் நம்ம சூப்பர் ஸ்டார் தான் என்பது உங்களுக்கு தெரியுமோ?
)

4) ரஜினி & ஏ.வி.எம். சரவணன் சந்திப்பு - ரெக்கை கட்டும் யூகங்கள்!

ராஜா நடந்து போனாலே சேதி. அமைச்சர் வீட்டுக்கு வலிய வந்து விருந்து சாப்பிட்டுட்டு போனா….? அப்படியாகியிருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினி ஏ.வி.எம் சரவணன் சந்திப்பு பற்றிய சேதி.

சூப்பர் ஸ்டார் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர்களில் ‘சிவாஜி’ தயாரிப்பாளரான  ஏ.வி.எம். சரவணனும் ஒருவர். ஆரமபத்தில் எப்படி இவரை ‘முதலாளி’ என்று அழைத்தாரோ அதே போலத் தான் இன்னமும் ரஜினி வாய் நிறைய ‘முதலாளி’ என்று அழைக்கிறார்.

இடையில் சில காலம் உடல் நலம் சரியில்லாது இருந்தார் சரவணன். எப்போதுமே பரபரப்பாக வெளி நிகழ்ச்சிளிலும் திரைப்பட விழாக்களிலும் பார்க்கக்கூடிய இவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கும் பார்க்கமுடிவதில்லை. தன் அலுவலகத்தை தவிர வெளி இடங்களுக்கு அரிதாகவே வருகிறார் சரவணன்.

இந்நிலையில், இவரை பார்த்து நலம் விசாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கே வநதிருந்தார். வந்தவர் ஏ.வி.எம். டீ.வி. சீரியல்களில் தற்போது கவனம் செலுத்துவதை அறிந்ததும், “நீங்க சின்னப் படம் எடுக்கக்கூடாது. பெரிய படமா எடுங்க” என்றாராம். இது போதாதா யூகங்களுக்கு? ரஜினி-ஏ.வி.எம். மீண்டும் இணைகின்றனர் என்ற ரீதியில் செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

இந்த யூகங்கள் குறித்து ஏ.வி.எம். தரப்பும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒருவேளை நடந்தா நடக்கட்டுமே என்ற எண்ணம் தான்!

(ஜாதகத்துல சுக்ர தசை இருக்குறவங்களுக்கு தான் ரஜினி படம்  தயாரிக்கிற வாய்ப்பு கிடைக்குமாமே? என் ஜோதிட நண்பர் ஒருத்தர் சொன்னாருங்க!)

5) கே.எஸ்.ரவிகுமார் மகள் திருமணம் - ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஆர்.சதீஷ்குமாருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் ஜனனிக்கும் சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் வருகிற மே மாதம் 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

திருமணம் காலை 10 மணிக்கும் அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தற்போது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்கள் லண்டனில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த கே.எஸ் ரவிக்குமார் சென்னை திரும்பிவிட்டார்.

முக்கிய பிரமுகர்களுக்கு குடும்பத்தினருடன் போய் அழைப்பிதழ்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன் உட்பட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

(தலைவரை பட்டு வேட்டி சட்டையில பார்க்க இன்னொரு சான்ஸ்!)

6) கமலின் மருதநாயகத்தில் பூலித் தேவனாக ரஜினி?

கமலின் ‘மருதநாயகம்’ பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்து அவரது ரசிகர்களை ஏக்கப் பெருமூச்சு விட வைத்து பின்னர் அமுங்கிவிடுவது வழக்கம். 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட படம், பல்வேறு காரணங்களால் மேற்கொண்டு தொடர முடியாமல் நின்றுவிட, கமலும் அதற்கு பின்னர் பல்வேறு படங்களை ஆரம்பித்து முடித்துவிட்டார்.

இருப்பினும் அவ்வப்போது மருதநாயகம் பற்றி செய்திகள் வெளிவந்துகொண்டு தானிருக்கின்றன. அண்மையில் வெளியாகியிருக்கும் செய்தி: சூப்பர் ஸ்டார் ரஜினி அதில் பூலித் தேவனாக நடிக்கிறார் என்பது தான். மருதநாயகமும் பூலித் தேவனும் போர்க்களத்தில் ஒன்றாக சந்திப்பது போலவும், பூலித் தேவனின் வீரத்தை மருதநாயகம் வியந்து அவரிடம் நட்பு பாராட்டிவிட்டு செல்வதாகவும் காட்சி இடம்பெறுகிறதாம். இப்படியாக செய்தி ஒன்று உலவ ஆரம்பித்திருக்கிறது.

இது உண்மையாக வாய்ப்பேயில்லை என்பது தான் உண்மை. ஒருவேளை கமல் மருதநாயகத்தை மீண்டும் துவக்கினாலும், பூலித்தேவனாக மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட நடிகர்களில் எவராவது ஒருவர் தான் நடிப்பார்கள் என்பதை நாம் சொலல்வும் வேண்டுமோ?

(சரி… ஒருவேளை சூப்பர் ஸ்டார் நிஜமாவே இதுல நடிச்சார்ணா எப்படியிருக்கும்? ஓகே. உங்களுக்காக 1978 இல் வெளியான ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்துல இருந்து ஒரு ஸ்டில்! என்னா வில்லத்தனம் பார்த்தீங்களா கண்ணுல!!)

[END]

16 Responses to “Tidbits # 66 : கோச்சடையானின் அடுத்த கட்ட படப்பிடிப்பு & சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் தயாரிப்பது யார்?”

  1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Can we expect new still of KOCHADAIYAAN the legend in Tamil new year. Nama site engeyo poyuduchu after mr.elango sir's interview (mayil samy sir's comment)

  2. s.vasanthan s.vasanthan says:

    தகவல்கள் அனைத்தும் அருமை ,எக்காரணம் கொண்டும் யார் படத்திலும் சின்ன வேடத்தில் தலைவர் வர கூடாது ,ஆன யார்வேனும்னாலும் தலைவர் படத்தில நடிக்கலாம் ,(இந்த செய்தியில் ஒரு துளியும் உண்மை இருக்க வாய்ப்பில்லை ,அந்த படத்தை அவரால் எடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை ,எடுத்து முடிக்க வாழ்த்துக்கள். )

  3. Muthukumar Muthukumar says:

    Dear All,

    Please confirm about below news.
    http://www.t****************************

    Regards,
    Muthukumar A

    ——————————————————
    What's the necessity to confirm a news from other website and that too wrong & negative? We have been always striving to provide you maximum authentic news. But people tend to attract towards such news often.
    - Sundar

  4. Sudarsan Ranadhiran- Sudarsan Ranadhiran- says:

    சீக்கிரமா இந்த வருஷத்துக்குள்ள ஆண்டவனின்(ரஜினி) ருத்ர தாண்டவத்தை பார்க்க ஆசைபடுறேன்…

    ——————————————-
    Please avoid comparing Superstar with God.
    - Sundar

  5. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

    Hi Sundar, Chances are bright to join the combo-10th film - AVM Saravanan-SUPER STAR-KV ANAND : THINK DIFFERENTLY ! CHUMMA ATHIRUTHULLA

  6. Anonymous says:

    * மறுபடியும் ரஜினி கமல் கூட்டணி வாய்பே இல்லை!!!
    * தலைவர் ஒரு அக்கரையில் சரவணன் சார் கிட்ட சொல்லிருப்பாரே தவிர அவர் நடிப்பதற்காக சொல்லி இருக்க மாட்டார் என்பது என் கருத்து
    * ரஜினிகாந்த், கமலஹாசன் பங்கேற்க போகும் ரவி குமார் சார் மகளின் திருமணத்தில் ரஜினிமனோஜும் பங்கேற்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் :) :) :)
    அண்ணா எங்க இருந்து நா போட்டோ போடுறீங்க:) :) அத்தனையும் மாஸ்!!

    ————————————————-
    இன்விடேஷன் இல்லாம உள்ளே விட மாட்டாங்க தம்பி ! (கே.எஸ்.ரவிக்குமாரை பத்தி உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.)
    - சுந்தர்

  7. Mohamedamhar Mohamedamhar says:

    Suntar ji…Rajini sir kamalodu nadikka vhendiya avasiyamillai..topukkellam top talaivarthan..netthu porantha kolanthaitta kettalum sollum. superstarna yaaru,nadiharhalukkellam nadihar yaaru,world super starna yaarundu..aana neenga poi marutha naayahatthil nadikkirar endru solratha ehtru kolla mudiyathu..appadi oruvelai kamahl padathil rajini naditthal super starukkaha oru tadavai padam parpphen..aana kochadayana 100 thadavai parppen.

    ————————————
    I never say that Thalaivar is acting in Marudhanayagam. I say that such a news has cropped up. Also i shared u the news i read. (If that is true news i would have carried that as a separate article.)
    - Sundar

  8. vasi.rajni vasi.rajni says:

    கமலின் மருதநாயகம் பற்றிய செய்திகளில் தேவையில்லாமல் தலைவர் சிக்கிவிடுகிறார். தலைவர் சினிமாவை பொறுத்தவரை மிக தெளிவாக இருக்கிறார். சந்திரமுகியின் வெற்றிக்கு தலைவர் தன்னுடைய சினிமா பாதையை வேறொரு தடத்திற்கு மாற்றிவிட்டார் என்பதே உண்மை. தான் செய்யபோகும் படம் எந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தும், எந்த அவளவுக்கு முந்தய படத்தை முறியடிக்கும், என்பதை நன்கு உணர்ந்தே செய்கிறார். நிச்சயம் மருதனயகத்தில் தலைவர் நடிக்க மாட்டார்.

    .

    குமரி அனந்தன் கூறுவது காங்கரஸ் கட்சிக்கு நிச்சயம் உரைக்கும். தமிழக அரசியலில் தலைவருக்கு உள்ள இடம் குறித்து அனைவருக்கும் தெரியும். ரஜினி அரசியலுக்கு நுழைந்தால் மிக சொற்ப காலத்தில் அவரால் தமிழக வரலாற்றையே திருத்தி எழுத முடியும்.

    .

    சுந்தர்ஜி, 1995 -96 ஆண்டுகளில் வெளிவந்த பல(பிற) தமிழ் திரைபடகளில் தலைவரின் அரசியல் பிரவேச ஜுரம் தென்படும். சில படங்களில் வசனங்களாகவும், சில படங்களில் தலைவர் பற்றி முழுபாடலும் இடம் பெற்றுள்ளதை வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும். மக்கள் திலகதிற்கு கூட இப்படி நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம்.

    .

    தலைவர் எதிர்கால திட்டங்கள் குறித்து ரசிகர்கள் clueless அக உள்ளது உண்மை தான். ஆனால் தலைவர் நிச்சயம் நமது தொண்டர்களுக்கு நல்ல செய்தியை தருவார். தலைவர் இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. தன்னை கடவுளாக பார்க்கும் தொண்டர்களை நிச்சயம் அப்செட் செய்ய மாட்டார்.

    .

    அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தல் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். ஆனால், அவர் எப்பொழுது அதை அறிவிப்பார் என்பதே புரியாத புதிர்.

    .

    rajini will rule tamil nadu

  9. kochadaiyaan kochadaiyaan says:

    சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்—————————-இந்த news paper la ellam idhe maathiri thaan podaraanga…simple aa nadakkala …granda AVM la thaan nadandhadhu …thalaivar odambu sari illathappa nadantha matter ..varala ..annaiki ..my college mate ..s fmly relation to K.s.r ..and after completing the function he can to my house and went in mylapore.:) ..sari ..mudinja naan poven ..aana kalayanam function ellam poga ishtam illai enakku ..lemme ..try to accomadate Mr. Editor :) onlysuperstar.com :D ..:) unglluku invitation kedacha ..enakku sollittu kelambunga boss..:D

    ————————

  10. kochadaiyaan kochadaiyaan says:

    ANYONE INTERESTED IN GURU-SHISHYAN HINDI VERSION :) PLS CLICK BELOW
    http://www.youtube.com/watch?v=gOcoYbZby2Y&fe...

    :D :)

  11. s.vasanthan s.vasanthan says:

    யாராவது தலைவரின் ஹிந்தி படம் gangvaa ,dvd வைத்து இருந்த தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் ,

  12. PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

    Link for Gangvaa VCD,

    http://www.webmallindia.com/buy_dvd_online-movie-...

  13. s.vasanthan s.vasanthan says:

    மிக்க நன்றி பிரேமானந்த் ராமராஜூ …..

  14. chithamparam chithamparam says:

    ரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்டுரை
    http://www.vanavil7.blogspot.com/2012/04/blog-pos...

  15. chithamparam chithamparam says:

    Like us on facebook
    http://www.facebook.com/Vanavil7
    Follow us on twitter
    http://twitter.com/#!/vanavil7

  16. dr suneel dr suneel says:

    ஆகட்டும் பாக்கலாம்..சம்பந்தம் இல்லாமல் ஷாருக் போன்றவர்களுக்கு ஒரு காட்சியில் நடித்து உதவுகின்றபோது ,அவருடைய நெருங்கிய நண்பரின் படம் ஓடுவதற்காக தலைவர் நடிப்பதில் எந்த தவறும் இல்லை..மீண்டும் ஒரு படமேனும் இனைந்து நடிக்க வேண்டும் எனும் ஆசை எனக்கு உண்டு..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates