You Are Here: Home » Featured, VIP Meet » “சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் ஸ்டைல் எப்படி?” — ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – PART 1

மிழ் திரையுலகில் ‘ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம்’ என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் அமைந்துள்ள ‘ஃபோர் பிரேம்ஸ்’ என்ற ப்ரீவியூ திரையரங்கின் தலைமை நிர்வாகி இவர். பப்ளிக் தியேட்டர் மற்றும் ப்ரீவியூ தியேட்டர் துறையில் 30 வருடங்களுக்கும் மேல் அனுபவம் பெற்றவர். பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நெருங்கிய நண்பர். சூப்பர் ஸ்டாருக்கோ அதையும் தாண்டி ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர்.

பொதுவாக எந்த திருமண நிகழ்ச்சிகளுக்கு சூப்பர் ஸ்டார் வந்தாலும், மணமக்களை வாழ்த்திவிட்டு வந்த வேகத்தில் பறந்துவிடுவார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற கல்யாணம் அவர்களின் மகன் திருமணத்தில் கலந்துகொண்ட அவர், அரை மனிநேரத்துக்கும் மேல் இருந்தார் என்றால், கல்யாணம் எந்தளவு அவரின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இன்று கல்யாணம் அவர்கள் ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கிறார் அவர் வீட்டு திருமணத்திற்கு திரையுலகே திரண்டு வருகிறது என்றால் இது ஏதோ நட்சத்திரங்களுடன் அவர் நட்பை பெற்றிருப்பதால் மட்டும் அல்ல. இதற்க்கு பின்னால் அவரது பல வருட அயராத உழைப்பு இருக்கிறது. எங்கள் சந்திப்பின் ஒரு கட்டத்தில் “ரேஷன் அரிசி கூட வாங்க வழியில்லாத ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான்” என்று கூறுகிறார் கல்யாணம். அப்படிப்பட்ட ஒரு சாமானியன் இன்று சமுதாயத்தில் இந்த உயரத்தை எட்டியிருப்பது எப்படி? அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன? அதற்கு இவர் பின்பற்றிய வழிமுறைகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கப்போகிறோம். இது மட்டுமா? சூப்பர் ஸ்டாரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்ற இவர், அது பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பரிமாறிக்கொள்கிறார். சூப்பர் ஸ்டாரிடம் ரசிகர்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் & பின்பற்றவேண்டிய விஷயங்கள் பற்றியும் மனம் திறக்கிறார். புதிய கோணத்துடன்.

படியுங்கள்… பின்பற்றுங்கள்…. பயனடையுங்கள்!

இன்று கல்யாணம் அவர்கள் ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கிறார் அவர் வீட்டு திருமணத்திற்கு திரையுலகே திரண்டு வருகிறது என்றால் இது ஏதோ நட்சத்திரங்களுடன் அவர் நட்பை பெற்றிருப்பதால் மட்டும் அல்ல. இதற்க்கு பின்னால் அவரது பல வருட அயராத உழைப்பு இருக்கிறது.

——————————————————————————————

னக்கும் திரு.கல்யாணம் அவர்களுடன் ஏற்கனவே ஒரு நல்ல அறிமுகம் உண்டு. எனவே நமது தளத்தின் பேட்டிக்காக தொடர்பு கொண்டபோது உடனே அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிட்டார். குறிப்பிட்ட நாளில் நம்முடன் நண்பர் ஹரி சிவாஜியையும், ராஜாவையும் அழைத்துக்கொண்டு ஃபோர் பிரேம்ஸ் சென்றோம். நாம் சென்றபோது திரு.கல்யாணம் அங்கில்லை. எனவே மொபைல் மூலம் தொடர்பு கொண்டேன். “வெயிட் பண்ணுங்க… ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றார். ரிசப்ஷனில் அமர்ந்தோம். சொன்னது போலவே, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காரில் வந்து இறங்கினார். வந்தவர், “வாங்க… வாங்க… ” என்று நேரடியாக தனது அறைக்கு அழைத்து சென்றார்.

“உட்காருங்க… முதல்ல…” என்றவர்… இரண்டே சேர்கள் தான் அங்கிருப்பதைப் பார்த்து “உடனே ஒரு சேர் கொண்டு வாங்க…” என்று உதவியாளரிடம் கூற, அடுத்த நொடி சேர் வந்தது.

“என்ன சாப்பிடுறீங்க? மீல்ஸ்…?” என்று கேட்டார். எங்கள் பதிலுக்கு காத்திராமல், மூன்று மீல்ஸை ஆர்டர் செய்து உடனே தருவிக்கும்படி உதவியாளரிடம் கூறினார். அவரது இந்த உபசரிப்பால் ஒரு கணம் நாங்கள் திக்குமுக்காடிவிட்டோம்.

“நாம பேசிகிட்டிருப்போம்… அதுக்குள்ளே சாப்பாடு வந்துரும்…. சாப்பிட்டுட்டு போகலாம்” என்றார்.

நண்பர்களை தனித் தனியே அறிமுகம் செய்து வைத்தேன். பின்னர் மலர்க்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்தோம்.

பொதுவாகவே பிரபலங்களையோ முக்கியஸ்தர்களையோ சந்திக்கும்போது பேட்டி போலல்லாமல் ஒரு சாதாரண உரையாடல் போலவே அமையும்படி பார்த்துக்கொள்வேன். அப்பொழுது தான் சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும். திரு.கல்யாணம் அவர்களுடனான சந்திப்பும் அப்படியே.

நமது தளத்தின் விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்து, “இது ரஜினி சார் பத்தின வெப்சைட் சார். இருந்தாலும் சும்மா சினிமா பத்தி மட்டும் நியூஸ் போடாம அதையும் தாண்டி பல நல்ல விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லனும்னு நினைக்கிறோம்” என்றேன்.

சட்டென்று சீரியசானவர், “சும்மா சினிமான்னு சொல்லக்கூடாது. சினிமா தான் எல்லாமே….இல்ல?” என்று ஹரியை பார்த்து கண்ணடித்துக்கொண்டே என்னிடம் கோபமாக கூறுவது போல பாவனை செய்தார்.

“பிறந்ததுல இருந்தே எனக்கு எல்லாமே சினிமாதான். என்னை பிளேடால நீங்க அறுத்தீங்கன்னா கூட என் ரத்தம் சினிமா சினிமான்னு தான் சொல்லும். சினிமா என்பது பொக்கிஷம். ‘சும்மா’ என்ற உங்க வார்த்தை அதை கவிழ்த்துடுச்சு!” சொல்லிவிட்டு நண்பர்களை பார்த்து “என்ன நான் சொல்றது சரி தானே?” என்ற அர்த்தத்துடன் சிரிக்கிறார்.

அந்த வார்த்தை அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை உணர்ந்து வருந்தினோம்.

நாம் : “சினிமாவை நீங்கள் எந்தளவு நேசிக்கிறீங்கன்னு புரியுது சார்”

திரு.கல்யாணம் :
“நேசிப்பது சுவாசிப்பது எல்லாம் எனக்கு சினிமா தான்”

திரு.கல்யாணம் : “சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளின் பர்சனல் விஷயங்களை எல்லாம் ஃபோகஸ் செய்து அதை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார்கள். அது தான் சினிமாவில் இருக்கும் தவறு. ஆனா சினிமாவுக்கு வெளியே எவ்வளவோ விஷயங்கள் இருட்டுல நடக்குது. அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சினிமாவுக்கு வெளியே வேற பக்கம் போனீங்கன்னா எவ்வளவோ அயோக்கியத்தனம் நடக்குது. அது யாருக்கும் தெரியுறதில்லே!” என்று தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினார்.

சினிமாவுக்கு வெளியே வேற பக்கம் போனீங்கன்னா எவ்வளவோ அயோக்கியத்தனம் நடக்குது. அது யாருக்கும் தெரியுறதில்லே!”

திரு.கல்யாணம் : “இந்த சினிமாவினால் தான் நான் வளர்ந்தேன். எனக்கு மதிப்பு மரியாதை எல்லாமே பெற்றுத் தந்தது சினிமாதான். நடிகை ஸ்னேஹா சினிமாவுக்கு வந்த புதுசுல “சார் உங்க கூட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்படுறேன்” அப்படினாங்க. “என் கூட எதுக்கும்மா?ன்னு கேட்டேன். “உங்க கூட ஃபோட்டோ எடுத்தா நல்லா வருவேன்” அதான். அப்படின்னு சொன்னங்க. “அதே மாதிரி மேலே வந்துட்டாங்கல்ல!!!!!!!!!!” என்றார் பெருமை பொங்க.

நாம் உடனே சிரித்துக்கொண்டே, “அப்போ நாங்களும் சீக்கிரம் பெரியாளாயிடுவோம்னு சொல்லுங்க….” என்றோம்

நம் தளத்தை பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியுமென்றாலும் ஃபார்மலாக ஒரு இன்ட்ரோடக்ஷன் கொடுத்துக்கொண்டோம்.

நல்ல விஷயம்… நல்ல முயற்சி….

நாம் : “எங்களோட இந்த ONLYSUPERSTAR.COM வெப்சைட் ரஜினி சாரோட மூவி பத்தின அப்டேட்ஸ் மட்டுமில்லாம, அதையும் தாண்டி அவர் கிட்டே நாம் கத்துக்கிட வேண்டியது என்ன? அவர் கிட்டே இன்ஸ்பிரேஷனா இருக்கிறது என்ன? உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான - பயன்தரும் - விஷயங்களை அவர் கூட நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைச்ச உங்களை மாதிரி பெரியவங்க கிட்டே கேட்டு - அதை உலகம் முழுக்க இருக்குற அவரோட ரசிகர்கள் கிட்டே கொண்டு போய் சேர்க்கிறது தான் எங்களின் இந்த எளிய முயற்சி!”

திரு.கல்யாணம் :
“நல்ல விஷயம். நல்ல முயற்சி உங்களோடது…!” மனம் திறந்து பாராட்டுகிறார்.

நாம் : “உங்க கிட்டே சில கேள்விகள்… எதுக்கு பதில் சொல்லனும்னு நீங்க விரும்புறீங்களோ அதுக்கு சொன்னா போதும். பதில் சொல்ல விரும்பலேன்னா அதை விட்டுடலாம்”

திரு.கல்யாணம் :
“எதையும் விடவேண்டாம்…. எல்லா கேள்வியையும் கேளுங்களேன் தாராளமா”

வந்த வேகத்தில் ரிவர்ஸில் திரும்பிய கார்

நாம் : “ரஜினி சாரை நீங்கள் முதலில் சந்தித்தது எப்போது?”

திரு.கல்யாணம் : “1984 இல் ‘கங்குவா’ பட ரிலீசப்போ தான். அப்போ நான் ஆனந்த் தியேட்டர்ல மானேஜரா இருந்தேன். அவரோட ஸ்பெஷாலிட்டியே அவரோட வேகம் தான். காரை வேகமா ஓட்டிகிட்டு வந்தார். “டிக்கட் இருக்கா?”ன்னு கேட்டார். படம் அப்போ ஃபுல்லாயிடுச்சு. So, “இல்லே!”ன்னு சொன்னேன். உடனே, எந்த வேகத்துல கார்ல வந்தாரோ, அதே வேகத்துல - ரிவர்ஸிலயே - திரும்பிட்டாரு. சினிமால ஸ்டண்ட் சீன்ல பார்க்குற மாதிரி இருந்திச்சு… அது தான் ரஜினி சார். அந்த ஸ்பீட் தான் ரஜினி சார்!”

“டிக்கட் இருக்கா?”ன்னு கேட்டார். படம் அப்போ ஃபுல்லாயிடுச்சு. So, “இல்லே!”ன்னு சொன்னேன். உடனே, எந்த வேகத்துல கார்ல வந்தாரோ, அதே வேகத்துல - ரிவர்ஸிலயே - திரும்பிட்டாரு. சினிமால ஸ்டண்ட் சீன்ல பார்க்குற மாதிரி இருந்திச்சு…

சற்று இடைவேளை விட்டு தொடர்கிறார்….

திரு.கல்யாணம் :
“அந்த ஸ்பீட்லயே நல்லா உயரத்துக்கு போயிட்டாரு. அந்த ஸ்பீடை பார்த்துட்டு நானும் மேலே வந்துட்டேன்!”

நாம் : “அதாவது அவரோட வேகத்தை பார்த்து நீங்க இன்ஸ்பைர் ஆகிட்டீங்க?”

திரு.கல்யாணம் : “ஆமாம்!”

நாம் : “ஸ்பீட்னு நீங்க எதை சொல்றீங்க? அவரோட PHYSICAL மூவ்மென்ட்ஸையா? இல்லே செயலாற்றுவதையா?”

திரு.கல்யாணம் : “எல்லாத்தையும் தான். அவரோட  PHYSICAL மூவ்மெண்ட்ஸ், பேசுறது, நடக்கிறது, டிஸைட் பண்றது எல்லாமே தான்!”

சூப்பர் ஸ்டார் மூவி பார்க்குற ஸ்டைல்

நாம் : “எத்தனையோ படம் அவர் இங்க ஃபோர் பிரேம்ஸ்ல பார்த்திருப்பாரு. அவர் மூவி பார்க்குற ஸ்டைல் எப்படி?”

திரு.கல்யாணம் : “படம் 6.30 க்கு ஸ்டார்ட் ஆகுதுன்னு வெச்சிக்கோங்க கரெக்டா 6.20 க்கெல்லாம் உள்ளே இருப்பாரு. தான் விருப்பப் பட்ட படங்கள் தான் பார்ப்பாரு. பார்க்கனும்னு நினைச்சா பார்த்துடுவாரு!”

நாம் : “நான் என்ன கேட்கிறேன்னா நாங்க இப்போ ஒரு படம் பார்க்கிறோம்னா நல்லா ஜாலியா கைதட்டி விசிலடிச்சி ரசிச்சு பார்ப்போம். அவர் அந்த மாதிரி….?”

திரு.கல்யாணம் : “லாஸ்ட் கிளாஸ் ஆடியன்ஸ் மாதிரி படத்தை ரசிப்பாரு”

நாம் : “Oh……!!!!!!!!!”

திரு.கல்யாணம் :
“எஸ்… கடைசி கிளாஸ் ஆடியன்ஸ் மாதிரி படங்களை ரசிப்பாரு!”

நாம் : “அவர் படத்தையா இல்லே மத்தவங்க படத்தையா?” சற்று சந்தேகத்தோடு கேட்டோம்.

திரு.கல்யாணம் : “அவர் படத்தை விட மத்தவங்க படத்தை தான் அதிகம் ரசிப்பாரு அவர். ரொம்ப மைன்யூட்டா ரசிப்பாரு. சின்ன சின்ன விஷயத்தை கூட நோட் பண்ணுவாரு. படத்துல நடிச்ச நடிகர்கள், வொர்க் பண்ண டைரக்டர்கள் கூட மறந்துபோகிற விஷயத்தை அவர் கரெக்டா ஞாபகம் வெச்சிருப்பாரு. “இந்த சீன் இப்படி இருந்திச்சு”. “இந்த சீனை இப்படி பண்ணியிருக்கலாம், அப்படி பண்ணியிருக்கலாம்” அப்படின்னு டிப்ஸ் கொடுப்பாரு. இண்டர்வல் வரைக்கும் பார்த்தா போதும், அதுக்கப்புறம் மீதியை அவரே சொல்லிடுவாரு!”

திரு.கல்யாணம் : “இதெல்லாம் எல்லாருக்கும் வராது… ஒரு படத்தோட ப்ரீவியூவப்போ நடந்தது இது. படத்தோட இன்டர்வெல்க்கு முன்னாலயே சரியா பண்ண சீன்லாம் எது, தப்பா பண்ண சீன்லாம் எது அப்படின்னு இப்படின்னு டைரக்டர்கிட்டே இவர் விளக்கம் சொல்லி புட்டு புட்டு வெச்சதும் டைரக்டர் ஆடிப்போயிட்டாரு. அவர் இதை எதிர்பார்க்கலே. ஏதோ கூப்பிட்டாங்க… படம் பார்க்க வந்தோமா போனோமான்னு இல்லாம… ரொம்ப இன்வால்வ் ஆகி பார்த்தது அவங்க எதிர்பாராதது.”

கலைஞர்களுக்கு பாராட்டு அப்புறம் தான் சாப்பாடு

நாம் : “சார் நிறைய பேரை அவர் படம் பார்த்துட்டு பாராட்டியிருக்காரு. அதை ப……….” நாம் சொல்லி வாய் மூடுமுன் கல்யாணம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

திரு.கல்யாணம் : “படம் பார்த்துட்டு போகும்போதே தன்னோட அசிஸ்டென்ட் மூலமா படத்தோட டைரக்டர் ஃபோன் நம்பர், காமிரா மேன் ஃபோன் நம்பர், வசனகர்த்தா ஃபோன் நம்பர், இதெல்லாம் வாங்கிட்டு போய்டுவார். கார்லய ஃபோன் பண்ணி சம்பந்தப்பட்டவங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாரு. படத்துல ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாருன்னா சில சமயம் லிப்ட்ல இருந்து இறங்கும் போதே, “எல்லா டெக்னீஷியன்ஸ் நம்பரும் வாங்கிக்கோங்க” அப்படின்னு அசிஸ்டென்ட் கிட்டே சொல்லிட்டு போய்டுவார். வீட்டுக்கு போனதும் சம்பந்தப்பட்ட நபர்கள் கிட்டே பேசி வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் தான் சாப்பிடவே போவாரு”.

படத்துல ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாருன்னா சில சமயம் லிப்ட்ல இருந்து இறங்கும் போதே, “எல்லா டெக்னீஷியன்ஸ் நம்பரும் வாங்கிக்கோங்க” அப்படின்னு அசிஸ்டென்ட் கிட்டே சொல்லிட்டு போய்டுவார். வீட்டுக்கு போனதும் சம்பந்தப்பட்ட நபர்கள் கிட்டே பேசி வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் தான் சாப்பிடவே போவாரு

நாம் : “வெரி குட். படத்தை கஷ்டப்பட்டு எடுத்து ரிலீஸ் பண்ணி திக்கு திக்குன்னு வெயிட் பண்ணிக்கிட்டுருக்கிறவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும்!”

திரு.கல்யாணம் :
“சில சமயம் நம்பர் தப்பாயிடும். உடனே எனக்கு ஃபோனடிப்பாரு. என்ன… என்ன… நம்பர் தப்பா கொடுத்துடீங்க?” அப்படின்னு சொல்லி சரியான நம்பர் கேட்டு வாங்கி சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்ஸ் கிட்டே பேசாம அடுத்த வேலை பார்க்கமாட்டாரு.”

நாம் : “சில சமயம் சிலர் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மூவீஸ் எடுத்து சில படைப்பாளிகள் பிரமிப்பு ஏற்படுத்தியிருப்பாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல படம் பார்த்துக்கிட்டுருக்கும் போதே யாருக்காவது ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்ன சம்பவம் ஏதாவது உண்டா?”

திரு.கல்யாணம் :
“படம் பார்த்துக்கிட்டுருக்கும்போது, அந்தப் படத்தோட டைரக்டரோ, புரொட்யூசரோ, நடிகரோ - படம் சம்பந்தப்பட்ட யாரும் - உள்ளே இருக்கக்கூடாதும்பார். ‘வந்தீங்களா… விஷ் பண்ணீங்களா…. கிளம்புங்க கிளம்புங்க’ன்னு சொல்லி அவங்க எல்லாரையும் பேக் பண்ணி அனுப்பிச்சுடுவாரு”

படம் பார்த்துக்கிட்டுருக்கும்போது, அந்தப் படத்தோட டைரக்டரோ, புரொட்யூசரோ, நடிகரோ - படம் சம்பந்தப்பட்ட யாரும் - உள்ளே இருக்கக்கூடாதும்பார்.

நாம்: “என்ன காரணம் சார் அதுக்கு?”

திரு.கல்யாணம் : “ஃப்ரீனெஸ் தான். அதாவது சுதந்திரத்துக்காக. அவங்க கூட இருந்தா சரியா ரசிக்க முடியாது. இவர் சிரிச்சா ஒரு அர்த்தம் சிரிக்கலேன்னா ஒரு அர்த்தம். இப்படி அவங்களா கற்பனை பண்ணிக்குவாங்க. 100 க்கு 90% படம் பார்க்கும்போது அவரை ரிசீவ் பண்ண வர்றவங்களை சந்தோஷப்படுத்தி, ‘நீங்க கிளம்புங்க’ன்னு சொல்லி கிளம்ப வெச்சிடுவாரு. அதனால முக்கால்வாசி நானே எல்லாரையும் எஸ்கேப் பண்ண வெச்சிடுவேன். ‘ரஜினி சார் படம் பார்க்குறாரு. கூட நாமளும் உக்காந்து படம் பார்க்கலாம்னு நினைச்சா நடக்காது’”

நொறுக்குத் தீனிக்கு நோ!

நாம்: “பிரேக்ல என்ன சாப்பிடுவாரு?”

திரு.கல்யாணம் : “அவர் இந்த நொறுக்குத் தீனி இதெல்லாம் தொடவே மாட்டாரு. பெரும்பாலும் க்ரீன் டீ, லெமன் டீ, மல்லி காபி இது தான். சில சமயம் பிஸ்கெட். அவ்ளோ தான் அவரோட ஐட்டம்”

நாம் : “ஸோ, ரொம்ப டயட் கான்சியஸா இருப்பாரு தலைவர்?”

திரு.கல்யாணம் :
“ஆமாம்…. மல்லி காபி கொடுத்து பழக்கப்படுத்தினது நான் தான். ‘எந்திரன்’ ஷூட்டிங் செட்ல கூட, மல்லி காபி கல்யான் சார் கொடுப்பாரு எனக்கு. அதே மாதிரி வேனும்பார். சக்ஸ்சேனா கூட என்கிட்டே சொன்னாரு, “என்ன நீ எல்லாரையும் கெடுத்து வெச்சிருக்கே. இப்போ மல்லி காபி ரஜினி சார் கேட்குறாரு. நான் எங்கே அதுக்கு போறது?” அப்படின்னு கோவிச்சிக்கிட்டாரு.

(அனைவரும் சிரிக்கிறோம்)

அவர் இந்த நொறுக்குத் தீனி இதெல்லாம் தொடவே மாட்டாரு. பெரும்பாலும் க்ரீன் டீ, லெமன் டீ, மல்லி காபி இது தான்.

நாம்: “சார்… அவர் படம் பார்க்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாச்சும் இருக்கா?”

(யோசிக்கிறார்….)


சுவாரஸ்யமான சம்பவம்

நாம் : “அதாவது உங்களோட ப்ரீவ்யூ தியேட்டர் வரலாற்றுல ரஜினி சார் படம் பார்க்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம்…? நிச்சயமா இருக்கும்… அதைப் பத்தி?”

திரு.கல்யாணம் : “படையப்பா படத்தோட ப்ரீவ்யூ ஷோவப்போ…. 6 வது ரீல் ஒடும்போது படம் பிரேக் ஆயிடுச்சு. எலி மெஷினுக்குள்ளே புகுந்து ஏதோ வயரை கடிச்சி படம் ஓடிக்கிட்டுருக்கும்போதே ஆடியோ கட்டாயிடிச்சு. சர்வீஸ் என்ஜினீயரை கூப்பிட்டா அவர் சிட்டிக்கு வெளியே எங்கேயே 30 கி.மீ. தூரத்துல இருந்தாரு. அவரை உடனே வரச்சொன்னோம். அவர் 20 நிமிஷத்துல தியேட்டருக்கு வந்துட்டாரு. அந்த 20 நிமிஷ பிரேக்ல ரஜினி எந்த வித டென்ஷனும் இல்லாம ரொம்ப கூலா இருந்தாரு. வேறா யாராவது இருந்தா அதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. ஆனா அவர் அலட்டிக்கவேயில்லே. ரொம்ப டென்ஷனா எல்லாம் இருந்தாங்க. ஆனா அவர் எல்லார் கிட்டயும் கலகலப்பா பேசி, ஜோக் அடிச்சிகிட்டு இருந்தார். அந்த 25 நிமிஷம் போனதே தெரியலே அவரால. வேற யாராவது அவர் இடத்துல இருந்திருந்தா சத்தம் போட்டிருப்பாங்க. “என்ன தியேட்டர் வெச்சிருக்கான் இவன்?” அது இதுன்னு. ஆனா ரஜினி சார் கூலா இருந்தாரு. இது யாராலயும் முடியாது. அந்த அரை மணிநேரமும் ஒருத்தர் விடாம எல்லார் கிட்டயும் பேசி அந்த சிச்சுவேஷனை அழகா ஹாண்டில் பண்ணினாரு.”

அந்த 20 நிமிஷ பிரேக்ல ரஜினி எந்த வித டென்ஷனும் இல்லாம ரொம்ப கூலா இருந்தாரு. வேறா யாராவது இருந்தா அதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. ஆனா அவர் அலட்டிக்கவேயில்லே. ரொம்ப டென்ஷனா எல்லாம் இருந்தாங்க. ஆனா அவர் எல்லார் கிட்டயும் கலகலப்பா பேசி, ஜோக் அடிச்சிகிட்டு இருந்தார்.

திரு.கல்யாணம் : “அடுத்து ஏதோ படம் பார்க்கும் போது மேடம் கூட சொன்னாங்க “படம் பாதியில கட்டாச்சு… படையப்பா சூப்பர் ஹிட். அதே மாதிரி இதையும் பண்ணுங்க கல்யாணம் படம் சூப்பர் ஹிட்டாகும்” அப்படின்னு.”

நாம் சற்று சந்தேகத்தோடு “உண்மையா இல்லே சும்மா தமாஷுக்கு சொல்றாரா” என்ற அர்த்தத்தில் பார்க்க…. எங்கள் பார்வையின் அர்த்தம் புரிந்தவர்….

திரு.கல்யாணம் : “சும்மா காமெடிக்கு தான் சொன்னங்க. சீரியஸா இல்லே… நீங்க வேற…”

நாம்  :
“ரஜினி சார் டாட்டர் சௌந்தர்யா கல்யாணத்துல நீங்க தான் முன்னே நின்னு எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டீங்க…. அவரோட 60 ஆம் கல்யாணத்துக்கு வந்தீங்க…. இப்படி எல்லாத்துலயும் நீங்க தான் ஃபர்ஸ்ட். இப்படி அவரோட ஒரு குடும்ப உறுப்பினர் போல நீங்க மாறியது எப்படி?”

திரு.கல்யாணம் : “இதைப் பத்தி என்ன சொல்றது. அவரை என்னோட குடும்ப உறுப்பினர் மாதிரி நான் நினைக்கிறேன். அவரும் அப்படியே என்னை நினைக்கிறார். தட்ஸ் ஆல்!”

திரு.கல்யாணம் : “ஆனந்த் தியேட்டர் உமாபதி சார் கூட என்கிட்டே ஒரு தடவை சொன்னாரு… “எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க நான் பெற்ற பிள்ளைகள் அப்படினா நீ நான் பெறாத மகன்” அப்படின்னார். ஏன்னா நான் அப்படி நடந்துகிட்டேன்”

பாபா - எப்படியிருக்கு ரெஸ்பான்ஸ்னு கேட்டாரு

நாம் : “அவரோட படத்தை பத்தி உங்க கிட்டே அபிப்ராயம் கேட்பாரா… நீங்க என்ன சொல்லுவீங்க?”

திரு.கல்யாணம் : “என்ன சொன்னாங்க எல்லாரும்னு என்கிட்டே கேட்பாரு… “சூப்பர்”ன்னு சொன்னாங்க நான் சொல்லுவேன். அவ்ளோ தான். ஒரே வார்த்தைல படத்தோட ரிசலட்டை சொல்லிடுவேன்”

திரு.கல்யாணம் : “பாபா படத்தப்போ மட்டும் எப்படியிருக்கு ரெஸ்பான்ஸ்னு கேட்டாரு. “டிவைடா இருக்கு”ன்னு சொன்னேன்”

இது வரை சினிமா பார்த்ததில்லை

நாம்: “நீங்க உங்க தியேட்டர்ல கூட படம் பார்க்குறதில்லேன்னு கேள்விப்பட்டிருக்கேன். எப்படி உங்களால அப்படி இருக்க முடியுது சார்?

திரு.கல்யாணம் : “இதுவரைக்கும் நான் சினிமா பார்த்ததில்லே. பப்ளிக் தியேட்டர்ல 16 வருஷம் சர்வீஸ். ப்ரீவ்யூ தியேட்டர்ல ஆல்ரெடி 15 வருஷம் சர்வீஸ். இப்போ 7 வருஷம் சர்வீஸ். இதைத் தவிர சினிமாவுல ஒரு 5 வருஷம் சர்வீஸ். இந்த 58 வயசுல ஒரு 12 வருஷம் கழிச்சிட்டு பார்த்தா மீதி எல்லாம் சினிமா தான் எனக்கு. படம் பார்க்குறதில்லேன்னா காரணம், நான் ஆரம்பத்துல ஸ்டூடியோவுல இருந்தேன். ஷூட்டிங் நடக்குற இடத்துல இருந்தேன். அப்போவே எல்லாரையும் நான் பார்த்துட்டேன். அதுனால என்னத்தை போய் சினிமாவுல புதுசா பார்க்குறதுன்னு ஒரு எண்ணம் தான். அப்புறம் தியேட்டர்ல வேலை கிடைச்சது. சினிமா தியேட்டர்ல மானேஜரா சேர்ந்தேன். தியேட்டருக்கு மானேஜரா இருக்கும்போது, ஒரு மானேஜரா நான் போய் உட்கார்ந்து படம் பார்க்கும் போது என்னாகும்னா வேலைக்காரங்களுக்கு ஒரு அலட்சியம் தோணும். வேலைல மந்தம் ஏற்படும். நான் படம் பார்க்காம இருந்தாத்தான் அவங்க ஒழுங்கா இருப்பாங்க அப்படிங்கிற எண்ணம் தான் காரணம்.”

நாம் :
“எப்படி சார் உங்களால இப்படி இருக்க முடியுது?” அதிசயத்துடன் கேட்டோம்.

திரு.கல்யாணம் : “கண்ட்ரோல் தான். எல்லாம் மனுஷனுக்குமே கண்ட்ரோல் அவங்க கிட்டே தானே இருக்கு. உதாரணத்துக்கு எடுத்துக்கோங்க… என்கிட்டே ஒரு நாலு பேர் வேலை பார்க்குறாங்கன்னு வெச்சிக்கோங்க… நான் ஒருவேளை படம் பார்த்துகிட்டுருக்கேன்னா  - அப்போ யாராச்சும் வந்தா என் STAFF அவங்ககிட்டே கால் மேல கால் போட்டு பேசுவாங்க. “சார் இருக்காரா?”ன்னு கேட்டா, “அவர் படம் பார்த்துக்கிட்டுருக்காரு”ன்னு அலட்சியமா பதில் சொல்வாங்க. அது இப்போ கிடையாது பாருங்க”

ஒரு மானேஜரா நான் போய் உட்கார்ந்து படம் பார்க்கும் போது என்னாகும்னா வேலைக்காரங்களுக்கு ஒரு அலட்சியம் தோணும். வேலைல மந்தம் ஏற்படும். நான் படம் பார்க்காம இருந்தாத்தான் அவங்க ஒழுங்கா இருப்பாங்க 

திரு.கல்யாணம் : “கீழே இருக்குறவங்களை பாதுகாக்குறது அதாவது அவங்களை சாமர்த்தியமா வேலைவாங்குறது, பாதுகாக்குறது எல்லாமே நம்ம கிட்டே தாங்க இருக்கு”

நாம் : “சரி… சினிமாவே பார்க்குறதில்லேன்னு சொல்றீங்க…. எப்படி அப்டேட்டா இருக்கீங்க? பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த சினிமா இப்போ இல்லே. டெக்னாலஜில இருந்து எல்லாமே மாறிடிச்சு. அப்படி இருக்கும்போது நீங்க எப்படி அப்டேட்டா இருக்கீங்க?”

திரு.கல்யாணம் : “பார்த்து தெரிஞ்சிக்கிறது என்பது வேற. பழகிப் புரிந்துகொள்வது என்பது வேற. நான் சொல்றதை நல்லா நோட் பண்ணிக்கோங்க!”

நாம் : “இளைய தலைமுறை ஆர்டிஸ்ட் முதல் ரொம்ப சீனியர் ஆர்டிஸ்ட் வரைக்கும் இங்கே படம் பார்க்க வர்றாங்க. எப்படி எல்லார் கூடவும் உங்களால ப்ரெண்ட்ஷிப் மெயின்டெயின் பண்ண முடியுது?”

திரு.கல்யாணம் :
“என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாரையும் பேர் வெச்சி தான் கூப்பிடுவேன். இவர் கீழே அவர் மேலே அப்படி எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒரே ஃபாமலி போல தான்!”

…. TO BE CONTINUED IN PART 2

—————————————————————————————————————-
இரண்டாம் பாகத்தில்….

* ஃபோர் பிரேம்ஸ் திறப்பு விழாவின் போது சூப்பர் ஸ்டாரை ஏமாற்றிய சுவாரஸ்யமான சம்பவம்

* சூப்பர் ஸ்டாரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?

* சூப்பர் ஸ்டாரிடம் பிடித்த விஷயம்?

* சூப்பர் ஸ்டார் சமீபத்தில் இவர் வீட்டு திருமணத்திற்கு வந்தது பற்றி?

* வாழ்க்கையில் வெற்றிக் கொடியை நாட்ட செய்ய வேண்டியது என்ன?

—————————————————————————————————————-

14 Responses to ““சூப்பர் ஸ்டார் படம் பார்க்கும் ஸ்டைல் எப்படி?” — ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – PART 1”

 1. saravanan saravanan says:

  ஹலோ அண்ணா,

  சாதனை பண்ணிகிட்டே இருக்கீங்க!!!

  நான் இந்த பதிவை எதிர்பார்க்கவே இல்லை..

  தடாலடியான ஒரு பதிவு..

  எங்கே இருந்து உங்களுக்கு இந்த எண்ணம் ஊற்றெடுக்கின்றது?

  மேலும் பல முக்கிய நபர்களையும், அவர்கள் நம் தலைவருடன் பார்த்து பழகிய விஷயங்களையும் என் போன்ற ரஜினி ரசிகர்களுக்கு சமர்பிக்க, அன்பார்ந்த வாழ்த்துக்கள்..

  இதனிடையே, நீங்கள் உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளவேண்டும். நீங்களும், உங்களோடு இருக்கும் நண்பர்களும், உங்கள் பெற்றோர்களையும் நலமோடு பார்த்துக்கொள்ளுங்கள்..

  என் போன்ற ரசிகர்களுக்கு, நீங்கள் தான் ரஜினியை பற்றி தெரிந்து கொள்ள ஒரு பாலமாகவும், ஒரு நூலகமாகவும் இருக்கின்றீர்கள். அதனால் உங்கள் நலமும் எங்களுக்கு முக்கியம்..

  இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்லணும்,

  முன்னாடியெல்லாம் கடவுளிடம் கும்பிடும்போது, நான் என் பெற்றோர் மற்றும் ரஜினியையும் சேர்த்து நல்லபடியா பார்த்துகோங்க கடவுளேனு வேண்டிப்பேன்.

  இப்போ எல்லாம், நான் என் பெற்றோர் மற்றும் ரஜினி, பிறகு புதிதாக திரு.சுந்தர் அண்ணாவும் சேர்ந்துகிட்டாங்க வேண்டுதலில்..

  நல்ல உணவை மேற்கொண்டு நல்லபடியாக உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.. வாழ்க வளமுடன்..

  ——————————————————————-

  ——————————————————————-

  தங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. மிக்க மிக்க மிக்க நன்றி சரவணன் அவர்களே!!

  நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் ஊறு வராமல் நடந்துகொள்ள என்றும் முயற்சிப்பேன்.

  ////////எங்கே இருந்து உங்களுக்கு இந்த எண்ணம் ஊற்றெடுக்கின்றது?////////

  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

  இனத்துள தாகும் அறிவு. (குறள் 454)

  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

  என்னை சுற்றி எப்பவுமே பாசிட்டிவான நபர்கள் தான் இருக்குறாங்க. அவங்க கிட்ட மட்டும் தான் நான் ப்ரெண்ட்ஷிப் வெச்சுக்குறேன். நெகடிவ்வான விஷயங்களையோ நபர்களையோ மறந்தும் கூட நான் என்டர்டெயின் பண்றதில்லே. (தலைவர் கிட்டே கத்துகிட்டது தான் இது). எதையுமே பாசிட்டிவ்வா பார்க்குறதுனால என்னாகுதுன்னா எனக்கு நடப்பதும் பாசிட்டிவாகவே நடக்குது. இப்போ பிரச்சனைகளை கூட ஒரு வாய்ப்பா மாத்துற கலை கைகூடிடிச்சு. (இதுக்கு தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்!)

  (சரி… நான் இங்கே அப்பப்போ எடுத்து விடுற திருக்குறள்களுக்கான அர்த்தத்தை எத்துனை பேர் GOOGLE பண்ணி பார்க்குறீங்க? அட்லீஸ்ட் யாரவது ஒருத்தர்? அப்படி யாராவது இருந்தா உடனே என்னை உங்கள் மொபைல் எண் மற்றும் ஈ-மெயில் முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள். simplesundar@gmail.com)

  எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  - சுந்தர்

 2. murugan murugan says:

  அருமையான உரையாடல் - தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி - அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் நோக்கும்…

 3. saravanan saravanan says:

  உண்மையா நான், நீங்கள் சொல்லும் திருக்குறளுக்கு இதுவரை அலசி ஆராய்ந்தது இல்லை அண்ணா..

  ஒரு உத்வேகம் வந்துவிட்டது, இனிமே கண்டிப்பாக நீங்கள் சொல்லும் திருக்குறளுக்கு அர்த்தங்களை தெரிந்து கொள்வேன்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..

  நன்றி..

  ——————————————————————

  பொருளை போடாமல் வெறும் குறளை மட்டும் நான் போடுவதன் காரணம், நீங்கள் அதன் தேடி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால் தான். அப்போது தான் அது மனதில் பதியும். நன்றி.

  - சுந்தர்

 4. RAJA RAJA says:

  //ஒரு மானேஜரா நான் போய் உட்கார்ந்து படம் பார்க்கும் போது என்னாகும்னா வேலைக்காரங்களுக்கு ஒரு அலட்சியம் தோணும். வேலைல மந்தம் ஏற்படும். நான் படம் பார்க்காம இருந்தாத்தான் அவங்க ஒழுங்கா இருப்பாங்க அப்படிங்கிற எண்ணம் தான் காரணம்.”//

  இது தான் அவருடைய பேட்டியில் மிக ஹைலைட், ஒரு உயர் அதிகாரி எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்.

  சுந்தர் ஜி நான் இதுவரை உங்களுடன் வந்து கலந்து உரையாடிய பிரபலங்களில் திரு கல்யாணம் அவர்கள் மிகவும் வித்தியாசமானவர். எதையுமே வெளிபடையாக பேசினார், அவர் கஷ்டபட்ட காலத்தையும் மறக்காமல் சொன்னார், அவர் தலைவரிடம் எப்படி வெளிபடையாக நடந்து கொள்வார் என்றும் சொன்னார். மறக்க முடியாத ஒரு சந்திப்பு .

  கடினமாக மற்றும் நேர்மையாக உழைத்தால் கண்டிப்பாக நல்ல நிலையை அடையலாம் என்பதற்க்கு திரு கல்யாணம் அவர்கள் ஒரு மிக சிறந்த உதாரணம்.

 5. harisivaji harisivaji says:

  நிறைவான அனுபவம்

  நல்ல எண்ணங்கள் உள்ளவர்களிடம் பழகி

  அதை போல் வெற்றி பெற்றவர்களை சந்தித்து

  அவர்களிடம் உரையாடும் பொது வரும்

  அந்த உத்வேகம் …நாமும் வெற்றியட உதவும்

  ……

  திரு கல்யாணம் அவர்களின் வெளிபடையான உண்மையான பேச்சு …அவரது நிர்வாக திறன் …

  எல்லாம் வளரும் தலைமுறை பின்பற்றவேண்டிய

  ஒன்று

  இப்படி பட்ட மனிதர்களை சந்திக்க வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி

  ===

  அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

  Translation:

  Man's wisdom seems the offspring of his mind;

  'Tis outcome of companionship we find.

 6. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Ovuru interview pothum (from different field) sathanaiyalarin anubavathai therinthu kolkirom. As Mr.Saravanan said anna you r treasure for us.
  Iinme kuraluku artham pakuren.

 7. Anand vasi Anand vasi says:

  Sundar anna,,, Chanceless ponga…unga dedication ku oru ellai ye illa…just cant remain without commenting….nice arcticle for the fans…..once again superbb,,, ur magic made me to comment after a long time….great…

 8. Mohamedamhar Mohamedamhar says:

  ரஜினி ரசிகர்களுக்கு சமர்பிக்க,

  அன்பார்ந்த வாழ்த்துக்கள்..

  இதனிடையே, நீங்கள்

  உங்கள் உடல் நலத்தையும்

  கவனித்துக்

  கொள்ளவேண்டும்.

  நீங்களும்,

  உங்களோடு இருக்கும்

  நண்பர்களும், உங்கள்

  பெற்றோர்களையும்

  நலமோடு பார்த்துக்கொள்ளுங்கள்..

  என் போன்ற

  ரசிகர்களுக்கு, நீங்கள்

  தான்

  ரஜினியை பற்றி தெரிந்து கொள்ள

  ஒரு பாலமாகவும்,

  ஒரு நூலகமாகவும்

  இருக்கின்றீர்கள். அதனால்

  உங்கள் நலமும்

  எங்களுக்கு முக்கியம்..

  வாழ்க வளமுடன்..

  ——————————————————————–

  ——————————————————————–

  தங்கள்

  அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

  மிக்க மிக்க மிக்க

  நன்றி சரவணன்

  அவர்களே!!

  நீங்கள் என்

  மீது வைத்திருக்கும்

  இந்த நம்பிக்கைக்கும்

  நல்லெண்ணத்திற்கும்

  ஊறு வராமல்

  நடந்துகொள்ள என்றும்

  முயற்சிப்பேன்.

 9. Mano Mano says:

  There r no words to say abt sundar. U r indeed a gem. Take care brother. Health is wealth. More than thalivar nowadays your face comes to my mind when I read articles abt thalivar in your site. Keep going u good soul. Godspeed.

 10. **Chitti** **Chitti** says:

  @சுந்தர்ஜி அவர்களுக்கு,
  முதல் படம் மிகவும் அருமை.
  ******************
  எங்கே இருந்து தான் இந்த படங்களை எல்லாம் வாங்குறீங்கன்னு தான் தெரியலை.
  ***
  அதில், தலைவருக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் தெரியுது பாருங்க. அப்புறம், அதிலே பின்னாடி உள்ள அந்த புகைபடத்தில் எதோ அருமையான வாசகம் எழுதி இருக்கு. அது என்னன்னு தான் தெரிய வில்லை.
  ***
  உங்களிடம் அந்த முழு வாசகம் உள்ள புகை படம் இருந்தால் போடவும். ஏனெனில், அந்த வாக்கியம் இப்படி முடிவடைகிறது.
  "…………The adventure.
  The call. That started it all" அப்படின்னு. எனக்கு இந்த வாக்கியம் பிடித்து இருக்கிறது.

  ———————————————-
  சிட்டி, அந்த வார்த்தைகள் -
  THE MYSTERY, THE SUSPENSE, THE ADVENTURE.
  THE CALL…. THAT STARTED IT ALL.
  வாவ்…என்ன மாதிரி ஒரு வாக்கியம்…!
  - சுந்தர்

 11. **Chitti** **Chitti** says:

  ///“வெயிட் பண்ணுங்க… ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றார். ரிசப்ஷனில் அமர்ந்தோம். சொன்னது போலவே, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காரில் வந்து இறங்கினார். "http:///

  இந்த கொள்கை தான் ரொம்ப முக்கியம். வி.வி.ஐ.பி எல்லாம் இந்த கொள்கைகளை பின்பற்றுவார்கள். (நேரம் தவறாமை).
  ******
  ///"“என்ன சாப்பிடுறீங்க? மீல்ஸ்…?” என்று கேட்டார்"http:///

  உண்மையிலேயே இவர் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதற்கு இந்த ஒரு கேள்வியே போதுமானது.

  ******
  ///"உடனே, எந்த வேகத்துல கார்ல வந்தாரோ, அதே வேகத்துல – ரிவர்ஸிலயே – திரும்பிட்டாரு. சினிமால ஸ்டண்ட் சீன்ல பார்க்குற மாதிரி இருந்திச்சு… அது தான் ரஜினி சார். அந்த ஸ்பீட் தான் ரஜினி சார்!”///

  அது தாங்க நம்ம சூப்பர் ஸ்டாருக்கும் சொதப்பல் ஸ்டார்களுக்கும் உள்ள வித்தியாசமே!!!
  ******
  ///“படம் 6.30 க்கு ஸ்டார்ட் ஆகுதுன்னு வெச்சிக்கோங்க கரெக்டா 6.20 க்கெல்லாம் உள்ளே இருப்பாரு" ///

  பார்த்தீங்களா, நீங்களும் (நம் தள வாசகர்கள்) பெரிய மனிதர்களாக வேண்டும் என்றால், நேரம் தவறாத (punctuality) கொள்கையை பின்பற்றுங்கள். இது தான் முதல் படி எல்லாவற்றுக்கும். (நேரம் தவறாமையும், நேரத்தை ஒழுங்கா பின்பற்றுதலும்).
  ******
  ///"படத்துல ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாருன்னா சில சமயம் லிப்ட்ல இருந்து இறங்கும் போதே, “எல்லா டெக்னீஷியன்ஸ் நம்பரும் வாங்கிக்கோங்க” அப்படின்னு அசிஸ்டென்ட் கிட்டே சொல்லிட்டு போய்டுவார். வீட்டுக்கு போனதும் சம்பந்தப்பட்ட நபர்கள் கிட்டே பேசி வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் தான் சாப்பிடவே போவாரு" ///

  என் வழிகாட்டியே (சிவாஜி ராவ்)! இந்த கொள்கை தான் என்னை உன்னிடம் காந்தத்தை போல் ஈர்க்கிறது. (சினிமாவை விடுங்க, மற்ற எல்லா துறைகளிலும்) இந்த மண்ணில், இந்த கொள்கை எத்தனை பேரிடம் இருக்கிறது சொல்லுங்கள். (நானும், இந்த கொள்கையை கடை பிடிக்க முயற்சிக்கிறேன். என்ன, நானும் சாதாரண மனிதன் தானே. அதனால், பல சந்தர்ப்பங்களில், இதை பின்பற்றாமல், அதன் எதிர் கொள்கை (பொறாமை)யில் சிக்கி சீரழிந்து விடுகிறேன் அல்லது பாராட்ட மறந்து விடுகிறேன். என்ன செய்ய!!!
  ******
  இவரின் (திரு. கல்யாணம்) ஆளுமை திறன், நட்பு பாராட்டுதல் (நட்பு என்பதை விட ஒரு படி மேல - அன்பு காட்டுதல்),இதெல்லாம் தாங்க இவரோட வளர்ச்சிக்கும், பல நல்ல மனிதர்களின் உறவிற்கும் காரணம்.
  தலைவரின் கொள்கைகளில் பலவற்றை இவரும் பின்பற்றுகிறார். தலைவர் தன்னை சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களையே கூட வைத்திருக்கின்றார் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
  ******
  அது மட்டும் இல்லாமல், அதற்கு இன்னொரு மிக முக்கிய காரணம் என்றால், (What you give, the same you're going to get in more) நீ பிறர்க்கு என்ன செய்கிறாயோ, அதுவே உனக்கு பின்னாளில் வந்து சேரும்.
  *******
  இந்த பேட்டியை எங்களுக்கு கண்முன்னே நிறுத்திய சுந்தர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
  வாழ்க! வளர்க உங்களின் தொண்டு !! (Take care of yourself also).
  ******
  I'm so proud to be a fan of the great Sivajin Rao and as well for being admirer and trying-to-be follower too.
  ******
  இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு.
  **சிட்டி**.
  ஜெய் ஹிந்த்!!!
  Dot.

 12. **Chitti** **Chitti** says:

  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
  மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
  இனத்துள தாகும் அறிவு. (குறள் 454)
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

  அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

  நூற்றுக்கு நூறு உண்மை ஹரி சிவாஜி அவர்களே!

  Sundar says : //"என்னை சுற்றி எப்பவுமே பாசிட்டிவான நபர்கள் தான் இருக்குறாங்க. அவங்க கிட்ட மட்டும் தான் நான் ப்ரெண்ட்ஷிப் வெச்சுக்குறேன். நெகடிவ்வான விஷயங்களையோ நபர்களையோ மறந்தும் கூட நான் என்டர்டெயின் பண்றதில்லே. (தலைவர் கிட்டே கத்துகிட்டது தான் இது)."http://

  தலைவர்ட்ட இருக்குற மிக சிறந்த இந்த கொள்கையை பின்படுகிறீர்கள். மிகவும் நன்று. இது தான் நல்ல காரியங்கள் மற்றும் நாம் நல்ல நிலைக்கு வருவதற்கு முதல் படி.

  Sundar says : // "(சரி… நான் இங்கே அப்பப்போ எடுத்து விடுற திருக்குறள்களுக்கான அர்த்தத்தை எத்துனை பேர் GOOGLE பண்ணி பார்க்குறீங்க? அட்லீஸ்ட் யாரவது ஒருத்தர்? அப்படி யாராவது இருந்தா உடனே என்னை உங்கள் மொபைல் எண் மற்றும் ஈ-மெயில் முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள். "http://

  இது வரைக்கும் அப்படி பார்க்குறதில்லே. இனிமேல், முயற்சிக்கிறேன் சுந்தர்ஜி.

 13. Anonymous says:

  கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவர்களை தலைவர் தேடித் தேடி நட்பு வைத்துக் கொள்கிறார்…கல்யாணம் சார் அதற்கு நல்ல உதாரணம்…."சோற்றுக்கே வக்கில்லாமல் " என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்….கல்யாணம் சாருக்கு அந்த துணிவு இருக்கிறது…அதனால் தான் என்னவோ தலைவருக்கு கல்யாணம் சாரை ரொம்பவும் பிடித்திருக்குமோ..?

  ***

  நமது தளம் புதிய பரிமாணத்தை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறது….இளங்கோ, கல்யாணம் சார் அவர்களின் பேட்டிகள், இளங்கோ அவர்களைப் பற்றிய பேட்டிக்கு "சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை " அவர்களின் பின்னூட்டம் போன்றவைகளே அதற்கு சான்றுகள்…இன்னும் பல சாதனையாளர்கள் நம் தளம் மூலம் நம் ரசிகர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பது என் விருப்பம்……அது தான் நாம் தலைவருக்கு செய்யும் உண்மையான பெருமை….!

  -

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 14. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Thanks a million for your untiring efforts. Consolidation of this article is so crisp and very nice. Hats off to you. Suresh R Athreyaa

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates