You Are Here: Home » Featured, VIP Meet » சூப்பர் ஸ்டாரின் வேகத்துக்கு ‘கத்திரி’ போட்ட திரு.கல்யாணம் – ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – PART 2

போர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடனான நமது சந்திப்பின் தொடர்ச்சி இது.

முதல் பாகத்தை படிக்க http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14399 என்ற லின்க்கை செக் செய்யவும்.

முதல் பாகத்தில் திரு.கல்யாணம் அவர்களின் திரையுலக அனுபவம், அவரது நிர்வாகத் திறமை, சூப்பர் ஸ்டார் திரைப்படங்களை கண்டு ரசிக்கும் பாங்கு உள்ளிட்டவற்றை தெரிந்துகொண்டோம். இந்த இரண்டாம் பாகத்தில் மேலும் பல சுவாரஸ்யமான பயன் தரும் விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

நாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திரைத்துறையை சார்ந்தவர்களிடமிருந்தும்,  முக்கியஸ்தர்களிடமிருந்தும் அவருக்கு ஃபோன் வந்துகொண்டேயிருந்தது. அவர்களிடம் பேசிக்கொண்டே நம்மையும் லாவகமாக ஹேண்டில் செய்தார். இவ்வளவு பிஸியான ஒரு நபர் நமக்கு  அப்பாயிண்ட்மென்ட் கொடுத்ததே பெரிய விஷயம் என்று அப்போது தான் எனக்கு தோன்றியது.

சரி மேற்கொண்டு நமது உரையாடலுக்குள் நுழைவோம்…

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

நாம் : “ரஜினி சார் கிட்டே கத்துக்க வேண்டிய விஷயம் என்ன?”

திரு.கல்யாணம் : “ரஜினி சார் கிட்டே கத்துக்க வேண்டியது - ஒழுக்கம். DISCIPLINE. வாழ்க்கைல எப்படி முன்னேறனும்… வாழ்க்கைல எப்படி இருக்கணும்… வாழ்க்கைல எப்படி தக்க வெச்சிக்கணும்? இதெல்லாம் தான் அவரை பார்க்கும்போதும் பேசும் போதும் தெரியுது. அதை நாம் மெயின்டெயின் பண்ணினா நமக்கும் வெற்றி தான்”

ரஜினி சார் கிட்டே கத்துக்க வேண்டியது - ஒழுக்கம். DISCIPLINE. வாழ்க்கைல எப்படி முன்னேறனும்… வாழ்க்கைல எப்படி இருக்கணும்… வாழ்க்கைல எப்படி தக்க வெச்சிக்கணும்? இதெல்லாம் தான் அவரை பார்க்கும்போதும் பேசும் போதும் தெரியுது. அதை நாம் மெயின்டெயின் பண்ணினா நமக்கும் வெற்றி தான்

நாம் : “நாங்களும் அவரோட வெற்றிக்கான ஃபார்முலாவை கடைபிடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கோம் சார்.”

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

திரு.கல்யாணம் : “அப்புறம் இன்னொன்னு சொல்றேன்…! பிரதிபலனை எதிர்பார்க்காம ஒரு காரியம் செய்தீங்கன்னு சொன்னா, எந்த காரியமா இருந்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்காம ஒரு விஷயத்தை செய்றீங்கன்னு சொன்னா.. அதுக்கு அப்போவே பலன் கிடைச்சுரும். சில சமயம் பலன் கிடைக்காது. ஒரு ஒழுக்கமா இருந்து, நீங்க சரியா இருந்தீங்கன்னா… எதிரியா இருந்தாலும் நல்லாயிருக்கனும்னு நினைச்சி நீங்க தொடர்ந்து நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு வந்தீங்கன்னா… அதுக்கு ஒரு நாள் பலன் கிடைச்சே தீரும். நீங்க ஒரு நல்ல உயரத்துக்கு வந்தே தீருவீங்க. ஆனா அதுக்கு முயற்சி பண்ணனும். சும்மா  ஒரு முயற்சி பண்ணிட்டு விட்டுடக்கூடாது. தொடர்ந்து முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும். அந்த முயற்சியையும் எப்படி பண்ணனும்னா ஈடுபாட்டோட பண்ணனும். அடிமனசுல இருந்து ஒரு ஆழமான ஈடுபாட்டோட பண்ணனும். சும்மா மேலோட்டமா பண்ணிட்டு விரக்தியா விட்டுட்டு போய்டக்கூடாது. ஈடுப்பாட்டோட செய்யனும். இந்த வேலை செய்றோமா, அதை மட்டும் செஞ்சிட்டு போவோம்னு நினைக்கக்கொடாது. அது தொடர்பா வேற என்னென்ன பண்ணாலாம் அப்படின்னு நினைக்கணும். அதையும் செய்யனும்.”

ஒழுக்கமா இருந்து, நீங்க சரியா இருந்தீங்கன்னா… எதிரியா இருந்தாலும் நல்லாயிருக்கனும்னு நினைச்சி நீங்க தொடர்ந்து நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு வந்தீங்கன்னா… அதுக்கு ஒரு நாள் பலன் கிடைச்சே தீரும். நீங்க ஒரு நல்ல உயரத்துக்கு வந்தே தீருவீங்க.

திரு.கல்யாணம் : “உதாரணத்துக்கு As a manager, நான் தான் ரஜினி சாருக்கு காஃபி கொடுப்பேன். ஃபிளாஸ்குல நான் தான் காபி ஊத்துவேன். கப் மேல எதுவும் பட்டுடக்கூடாது. இடது கையில் கொடுக்ககூடாது. இப்படி நிறைய விஷயம் இருக்கு!”

நாம் :
“நீங்க சொல்றதை பார்த்தா ஏதோ M.B.A. படிச்சிட்டு இந்த துறைக்கு வந்த மாதிரி இருக்கு சார்”

திரு.கல்யாணம் : “நான் படிச்சது 9 ஆம் கிளாஸ் தான். எல்லாம் அனுபவப் படிப்பு தான்.”

நாம்: “ஏட்டுக் கல்வியை விட அனுபவப் படிப்பு பெஸ்ட். சார்… உங்களுக்கு ஏதாவது ஒரு காலேஜ்லயோ I.I.M.லயோ இது பத்தி ஒரு லெக்சர் கொடுக்குறதுக்கு சந்தர்ப்பம் வந்தா ஏற்றுக்கொள்வீர்களா?”

திரு.கல்யாணம் : “தாராளமா… நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை நாலு பேருக்கு சொல்றதுல எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. நமக்கு தெரிஞ்ச ஒரு நல்ல விஷயத்தை நாலு பேருக்கு பரிமாறி அவங்க பலனடையும்போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே… அது ரொம்ப இனிமையான விஷயம்”

திரு.கல்யாணம் : “என் பையன் யூ.எஸ்.ல M.B.A. படிச்சான். டாடி என்ன சொல்றாரோ அது தான் இங்கே பாடத்துல இருக்கும்மான்னு என் மனைவிகிட்டே சொன்னான். எல்லாம் ஒன்னு தான் பரிமாறுகிற விதம், இடம் தான் வேற வேற. இலை போட்டு சாப்பிடுறதும் இருக்கு. தட்டுல சாப்பிடுறதும் இருக்கு. சாப்பாடு ஒன்னு தான்…”

என் பையன் யூ.எஸ்.ல M.B.A. படிச்சான். டாடி என்ன சொல்றாரோ அது தான் இங்கே பாடத்துல இருக்கும்மான்னு என் மனைவிகிட்டே சொன்னான்.

சூப்பர் ஸ்டாரிடம் பிடித்த விஷயம் என்ன ?

நாம் : “ரஜினி சார் கிட்டே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன சார்?”

திரு.கல்யாணம் : “TIME. டைம் தான் அவர் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம். AMAZING PUNCTUALITY. இந்த தியேட்டரை திறக்கறதுக்கு ரஜினி சார் வந்தாரு. 6.30 க்கு வரச் சொன்னோம். டைம். 6.20க்கெல்லாம் வந்துட்டாரு. நான் சொல்றது 2005 இல். தியேட்டரை ஓபன் பண்ணவுடனே ஏதோ ஒரு படத்தோட ப்ரீவ்யூ இருந்திச்சி அப்போ. ரஜினி சார் தான் ரிப்பன் கட் பண்ணினாரு. அவரை வெச்சு ரிப்பன் கட் பண்றதுல என்ன ஒரு பிரச்சனைனா… அவர் பாட்டுக்கு ரிப்பன் கட் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பாரு. அவரை ஒரு செகண்ட் கூட நிக்க வைக்கமுடியாது. So, ஃபோட்டோக்ராபர்ஸ் எல்லாம் “சார்… அவர் பாட்டுக்கு ரிப்பன் கட் பண்ணிட்டு போய்டுவாரு. நாங்க அவரை நிக்க வைக்க முடியாதுன்னு சொன்னாங்க. நீங்க தான் அவரை கொஞ்ச நேரம் ஃபோட்டோ எடுக்குறதுக்கு ஹோல்ட் பண்ணனும்” அப்படின்னு கேட்டுக்கிட்டாங்க.

“நான் என்ன பண்ணினேன்னா ரிப்பன் கட் பண்ற கத்திரியை அது கட் பண்ணாத மாதிரி கல்லுல தேய்ச்சு மழுக்க வெச்சிட்டேன். திறப்பு விழாவுக்கு ரஜினி சார் ஜெட் வேகத்துல வந்தாரு. ரிப்பன் கட் பண்றாரு. அது கட் ஆகலே. திரும்ப திரும்ப கட் பண்றாரு. அது கட் ஆகலே. அந்த கேப்பை பயன்படுத்திக்கிட்டு ஃபோட்டோக்ராபர்ஸ் வீடியோக்ராபர்ஸ் எல்லாம் ஃபோட்டோஸை வேணும்கிற அளவுக்கு ‘க்ளிக்’ பண்ணி தள்ளிட்டாங்க.”

(நாங்க விழுந்து விழுந்து சிரிக்கிறோம்)

ரிப்பன் கட் பண்ற கத்திரியை அது கட் பண்ணாத மாதிரி கல்லுல தேய்ச்சு மழுக்க வெச்சிட்டேன். திறப்பு விழாவுக்கு ரஜினி சார் ஜெட் வேகத்துல வந்தாரு. ரிப்பன் கட் பண்றாரு. அது கட் ஆகலே. திரும்ப திரும்ப கட் பண்றாரு. அது கட் ஆகலே. அந்த கேப்பை பயன்படுத்திக்கிட்டு ஃபோட்டோக்ராபர்ஸ் வீடியோக்ராபர்ஸ் எல்லாம் ஃபோட்டோஸை வேணும்கிற அளவுக்கு ‘க்ளிக்’ பண்ணி தள்ளிட்டாங்க

திரு.கல்யாணம் : ரஜினி சார் ஒரு மாதிரி பார்த்தாரு. நான் உடனே பையன்களை சத்தம் போட்டேன். “போங்கடா… போய் வேற கத்திரிக்கோல் கொண்டு வாங்க”ன்னேன். “ஸாரி சார்… இந்த பசங்க தான் ஏதோ கத்திரிக்கோலை மாத்தி வெச்சிட்டாங்க போல” அப்படின்னேன்.

திரு.கல்யாணம் : அப்படியே அந்த நேரத்தை அஞ்சு நிமிஷம் ஆக்கிட்டோம். கட் பண்ணினா வேலை முடிஞ்சிடிச்சுன்னு அவர் பாட்டுக்கு போய்ட்டேயிருப்பாரே. அப்புறம் வாசு சார் கூப்பிட்டு ரஜினி சார் கிட்டே சொல்லிட்டாரு. “இந்த கல்யாணம் தான் எதோ கத்திரியை மாத்தி கட் பண்ணாத மாதிரி வெச்சிருக்கார்”அப்படின்னு. நான், “இல்லே இல்லே… பசங்க தான் மாத்தி வெச்சிட்டாங்க” அப்படின்னு சமாளிச்சேன். இன்டர்வெல்லுக்கு அப்புறம் அவர் கிட்டே உண்மையை சொல்லிட்டோம். சிரிச்சார் அதுக்கு.

சர்வ ஜனோ சுகினோ பவந்து

நாம் : “அவரைப் பற்றி இறுதியாக என்ன சொல்ல விரும்புறீங்க நீங்க?”

திரு.கல்யாணம் : “ரஜினி சார் எல்லாரும் நல்லாயிருக்கனும்னு விரும்புறாரு. அக்கம் பக்கம், எதிரிகள் என எல்லாரும் நல்லாயிருக்கனும்னு விரும்புறாரு அவரு. அவரோட எண்ணங்கள் நல்லாயிருக்கு. அவரை மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு ஆசைப்படுறாரு அவர். அதுல ஒன்னு ரெண்டு மைனசாகும். அதை பத்தி அவர் கவலைப்படுறதில்லை. எல்லாரும் நல்லாயிருக்கனும் அவ்ளோ தான்!”

நாம் : “எங்க வெப்சைட் ரீடர்ஸ்க்கு என்ன சொல்ல விரும்புறீங்க?”

திரு.கல்யாணம் : “உங்க சைட் ரீடர்ஸ்க்கு… இந்த  மாதிரி அவர்கிட்டே உள்ள நற்பண்புகளை, என்ன மாதிரி உள்ள ஆளுங்க கிட்டே கேட்டு அதை தெரிஞ்சிக்குறதை நிஜத்துல ஃபாலோ பண்ணனும். நீங்க அவரை பத்தி எவ்வளவோ நல்ல விஷயங்களை உங்க சைட்டுல போடுறீங்க அதை ஃபாலோ பண்ணனும். உங்களோட தவறுகளையெல்லாம் திருத்திக்கிட்டு முன்னேற்றப் பாதையில உங்களை செலுத்திக் கொண்டே போகணும். அப்படி செஞ்சாலே அதுவே நீங்க அவருக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை.”

“நீங்க அவரை பத்தி எவ்வளவோ நல்ல விஷயங்களை உங்க சைட்டுல போடுறீங்க அதை ஃபாலோ பண்ணனும். உங்களோட தவறுகளையெல்லாம் திருத்திக்கிட்டு முன்னேற்றப் பாதையில உங்களை செலுத்திக் கொண்டே போகணும். அப்படி செஞ்சாலே அதுவே நீங்க அவருக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை.”

நாம் : “ரொம்ப நன்றி சார். உங்க கூட கொஞ்ச நேரம் பேசினாலும்… சும்மா நறுக் நறுக்னு நிறைய விஷயத்தை சொல்லியிருக்கீங்க… இந்த உபசரிப்பு… அக்கறை… அன்பு… நாங்கள் எதிர்பாராதது. எங்களுக்கு இது ஒரு புது அனுபவம்.”

திரு.கல்யாணம் : “வாழ்க்கையே ஒரு அனுபவம் தான். அதான் சொன்னேனே பார்த்து தெரிஞ்சிக்கிறது வேற. பழகி தெரிஞ்சிக்கிறது வேற. ரெண்டாவது… உண்மையா இருந்தா எல்லாம் டக் டக்னு வந்துடும். உண்மைக்கு ஞாபக சக்தி தேவை இல்லே. பொய் பேசினேன்னு வெச்சிக்கோங்க… அதை எப்படி உங்க மனசுல ரெக்கார்ட் பண்ணுவீங்க? இவன் வாயை திறந்தாலே பொய் தான் வரும் அப்படின்னு ரெக்கார்ட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பீங்க. அது தேவையில்லே பாருங்க இப்போ. பொய் சொல்லி ஒரு காரியம் சாதிக்கணும்னு அவசியமே இல்லே. நான் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. என் கிட்டே ஒளிவு மறைவு இல்லே”

வாழ்க்கையே ஒரு அனுபவம் தான். அதான் சொன்னேனே பார்த்து தெரிஞ்சிக்கிறது வேற. பழகி தெரிஞ்சிக்கிறது வேற. ரெண்டாவது… உண்மையா இருந்தா எல்லாம் டக் டக்னு வந்துடும். உண்மைக்கு ஞாபக சக்தி தேவை இல்லே.

நாம் : “ரஜினி சார் உங்க மகனோட திருமணத்துக்கு சமீபத்துல வந்துட்டு போனார். அது பற்றி?”

திரு.கல்யாணம் : “ரஜினி சார் என்னோட மகன் திருமணத்துக்கு வந்து என்னோட மகனையும் மருமகளையும் வாழ்த்தினதுல எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. முஹூர்த்த நேரத்துக்கு முன்னாடியே வந்து முஹூர்த்தம் முடிஞ்சதும் கூட இருந்து பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போனாரு பாருங்க அது இன்னும் எனக்கு சந்தோஷம். அது அவர் என் மேல வெச்சிருந்த அன்பை காட்டிச்சு. கமல் சார் கூட வந்தாரு.”

திரு.கல்யாணம் : “அறுபதாம் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடனும்னு அவசியமே இல்லே. எனக்கு ரொம்ப மரியாதை பண்ணினாரு. எல்லாரையும் வெளியில மேடை போட்டு அதுல நின்னு தன் ஃபோட்டோ எடுத்துக்கிட்டாரு. நான் வீட்டுக்குள்ளே இருந்தேன். வெளியில இருக்குற ஃபோட்டோக்ராபரை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு ஃபோட்டோ எடுத்தாங்க. ஒருத்தரையும் உள்ளே ஃபோட்டோ எடுக்கலே. எல்லாருக்கும் வெளியில தான்னு சொல்லிட்டாங்க அம்மா. “இல்லே… இல்லே…கல்யாணத்தை நிக்க சொல்லு” அப்படின்னு சொல்லி என்னை நிக்க வெச்சு ஃபோட்டோ எடுத்தாரு.”

ரஜினி சார் என்னோட மகன் திருமணத்துக்கு வந்து என்னோட மகனையும் மருமகளையும் வாழ்த்தினதுல எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. முஹூர்த்த நேரத்துக்கு முன்னாடியே வந்து முஹூர்த்தம் முடிஞ்சதும் கூட இருந்து பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போனாரு பாருங்க அது இன்னும் எனக்கு சந்தோஷம்.

நாம் : “உங்க மேல அவருக்கு இந்த ஸ்பெஷல் அன்பு எதனால ஏற்பட்டதுன்னு நினைக்கிறீங்க? உங்க WORKMANSHIP அதாவது வொர்கிங் ஸ்டைலை பார்த்தா?”

திரு.கல்யாணம் : “எல்லாம் அவர்கிட்டே கத்துக்கிட்டது தான். ஆனா PATTERN தான் வேற வேற. நான் என்னோட PATTERN ஐ யூஸ் பண்ணிகிட்டேன்.”

அவருடைய விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டேன். மறக்காமல் அவரின் ஆட்டோகிராபை மறக்காமல் என்னுடைய விசிட்டிங் கார்டில் வாங்கிக்கொண்டேன். “நெத்தியடி” என்றார் சிரித்துக்கொண்டே.

ஹரி எதேச்சையாக கைகளை கட்டிக்கொண்டு நிற்க, “ஏன் கை கட்டிக்கிட்டு இருக்கீங்க? எங்கே போனாலும் கைகட்டக்கூடாது….!” என்றார் உரிமையுடன்.

கேட்டுப் பெறுவதல்ல மரியாதை

நாம் : “நான் எதிர்பார்த்ததைவிட உங்களது சந்திப்பு சிறப்பாக அமைஞ்சிருக்கு சார். ஃப்ராங்கா சொல்லனும்னா நான் இந்தளவு உங்க கிட்டே ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கலே… காரணம் என்ன?” என்றேன்… மனதில் எதையும் மறைக்காமல்.

திரு.கல்யாணம் : “ஒன்னு உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டாவது நடந்துக்குற முறை. அப்புறம் ‘மரியாதை’ எப்பவுமே நாம கேட்டு கிடைக்கிறது இல்லே. அது தானா வர்றது” என்றார்.

கடைசியாக ஃபோட்டோ எடுக்கும்போது ஹரி சரியாக ஸ்மைல் செய்யவில்லை. எனவே, இன்னொரு டேக் என்றேன். “அவர் சிரிக்கமாட்டேங்கிறாரா? அதானே பார்த்தேன்” என்று கூறி மீண்டும் போஸ் கொடுத்தார்.

ஒன்னு உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டாவது நடந்துக்குற முறை. அப்புறம் ‘மரியாதை’ எப்பவுமே நாம கேட்டு கிடைக்கிறது இல்லே. அது தானா வர்றது” என்றார்.

திரு.கல்யாணம் : “எப்பவுமே சைடுக்கு கொஞ்சம் மரியாதை அதிகம் கிடைக்கும். அவர் சொன்ன வார்த்தை - வொர்க் பண்ணிட்டுருக்கோம். இதையும் சைட்ல பண்ணிட்டுருக்கோம் அப்படின்னாரு பாருங்க… அந்த சிட் டிஷ்ஷுக்கு எப்பவுமே எஃபக்ட் ஜாஸ்தி. எதுலயுமே சைட் டிஷ் இருக்கணும். வொர்க் பனாலும் சரி.. சாப்பிட்டாலும் சரி… எல்லாத்தையுமே கூட்டி கழிச்சி பாருங்க…. சரியா இருங்க… இட்லியே சாப்பிட்டுகிட்டு இருந்தா எப்படி… வடையை கொண்டு வந்து வை… சாப்பாடே சுவாரஸ்யமா ஆயிடும். ஒரு வேலைல இன்னொரு சைடு. அதுல சில சமயம் வருமானம் வரும். சில சமயம் மனநிறைவு கிடைக்கும். ஏதோ ஒன்னு… மன நிறைவும் ரொம்ப முக்கியம்.

நேற்று ஒருத்தரு என்னை கேட்டாரு… அதெப்படி சார்… 15 வருஷமா அப்படியே இருக்கீங்க?”ன்னு. அவன் கிட்டே ஜோக்கா “டெய்லி ரெண்டு டின் பீர் சாப்பிடுவேன்”னு சொன்னேன். அதை அப்படியே நம்பிட்டு போய்ட்டான். (சிரிக்கிறார்!) “அதை நான் தொட்டதே கிடையாது. நான் சொல்றது புரியுதா? தண்ணியடிக்க மாட்டேன்… தம்மடிச்சது கிடையாது… வெத்தலை பாக்கு போடமாட்டேன்….சுவீட் சாப்பிட மாட்டேன்…. நெய் சாப்பிட மாட்டேன்…. கேக் சாப்பிட மாட்டேன்… ப்ரெட் சாப்பிடமாட்டேன்… இதுக்குமேலே என்ன வேணும்?”

சற்று புரியாமல்…………… “என்ன காரணம் சார்?” என்று கேட்க, அதற்கு அவர், “இதெல்லாம் எனக்கு அந்த ஏஜ்ல கிடைக்கவேயில்லே. சரி… இதெல்லாம் தொடவேக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம்; வெறி தான். வேற ஒண்ணுமில்லே. ரேஷன் அரிசி கூட - வாங்க கூட முடியாத - வாங்க வழியில்லாத ஃபேமிலில இருந்து வந்தவன் நான்”

“இதெல்லாம் எனக்கு அந்த ஏஜ்ல கிடைக்கவேயில்லே. சரி… தொடவேக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம், வெறி தான். வேற ஒண்ணுமில்லே. ரேஷன் அரிசி கூட - வாங்க கூட முடியாத - வாங்க வழியில்லாத ஃபேமிலில இருந்து வந்தவன் நான்”

நாம் : “அப்படி இருந்து நீங்க இந்தளவு உயர்ந்திருக்கீங்கன்னா அதுக்கு என்ன காரணம்?”னு நீங்க நினைக்கிறீங்க?

திரு.கல்யாணம் : “உழைப்பு தான். சாதாரண உழைப்பு இல்லே. நாயா பேயா உழைச்சிருக்கேன். இப்போவும் அப்படித்தான். அப்படி உழைச்சதுக்கான பலனை நான் இப்போ அனுபவிக்கிறேன். தட்ஸ் ஆல்!!”

தவறாமல் எங்களை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு போகும்படி சொன்னார். நாங்கள் மேல் தளத்தில் விருந்தினர் அறையில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது அவர் இல்லை. வெளியே எங்கோ போய்விட்டார். மறக்காமல் மாலை ஃபோன் செய்து நன்றி தெரிவித்தேன்.

—————-—————-—————-—————-—————-—-
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
. (குறள் 611).
—————-
—————-—————-—————-—————-—-

[For complete works on Thirukkural and Meaning for them please visit www.thirukkural.com]

[END]

12 Responses to “சூப்பர் ஸ்டாரின் வேகத்துக்கு ‘கத்திரி’ போட்ட திரு.கல்யாணம் – ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு – PART 2”

  1. Senthil Namasivayam Senthil Namasivayam says:

    //"யோக்கியதை இல்லாத ஃபேமிலில இருந்து வந்தவன் நான்”//

    i request you to replace the word "yokithai" with "Pakkiyam".
    the word Yokithai may hurt the mr.kalyanam sir's family members' heart. they can't recommend to their friends circle to view this interview.
    pl. consider this request.

    your site doing a useful entertainment.
    thank you very much.
    Vazhga Valamudan

    ————————————

    Good suggestion at a right time. Thanks.
    It has been done.
    - Sundar

  2. **Chitti** **Chitti** says:

    முதல் புகைபடத்தில் ரஜினியுடன் கூட இருப்பது யாருங்கோ??!!!
    ****
    சுந்தர் அவர்களுக்கு, மிக்க சந்தோஷம்! அவ்வளவு பெரிய மனிதரின் நட்பும் சந்திக்க வாய்ப்பும் கிடைத்ததற்கு!
    ****
    நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன், அவரின் (சிவாஜி ராவின்) பல நல்ல குணங்களை!!!
    ****
    நல்லதே நினை, நல்லதே செய், (நமக்கு) நல்லதே நடக்கும்!!!
    ****
    அந்த முழு வாசகம் உள்ள புகைப்படத்தை இந்த பதிவில் வெளியிட்டமைக்கு சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி!!!
    ****
    'Time Management is the most important of all managements and if we manage (proper planning, utilizing, being punctual) time, that itself would lead us to victory of our destination'.
    ****
    அது என்னங்க 'சர்வ ஜனோ சுகினோ பவந்து'???. அதன் அர்த்தத்தை சொன்னிங்கன்னா என்னை போன்ற இளைஞர்களுக்கு உதவியாய் இருக்கும்.
    ****
    நம் தள வாசகர்களுக்கு திரு. கல்யாணம் சொன்ன அறிவுரை - நூற்றுக்கு நூறு சரியான உண்மை. அதை நான் பின்பற்ற முயற்சி செய்கிறேன்!!!
    ****
    "உண்மையை பேசுங்க!!! சத்தியத்தை பேசுங்க!!!, உண்மை, சத்தியம், நியாயம் அது தான் என்னிக்குமே ஜெயிக்கும்!!!"
    *****
    "ரேஷன் அரிசி கூட – வாங்க கூட முடியாத – இல்ல யோக்கியதை இல்லாத ஃபேமிலில இருந்து வந்தவன் நான்"
    - இந்த வார்த்தைகளில் இருந்தே அவரின் அந்த வலியும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியையும் தெரிந்து கொள்ள முடிகிறது…
    ****
    உண்மையிலேயே நம்ம சூப்பர் ஸ்டார் பாணியில், கல்யாணம் அவர்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.
    ****
    cool, I am very happy with the way the interview has gone like transparent and lovely contented with rich messages which would help us to go ahead in the direction of our life time aim.
    ****
    Thanks, Thanks, Thanks so much for both Mr. Kalyanam as well as Sundarji for giving us such a fabulous messages through this article and thanks so much to Mr. kannan and hari sivaji also for accompanying sundarji.
    ***
    இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு.
    **சிட்டி**.
    ஜெய் ஹிந்த்!!!
    Dot.

    ————————————————————————————————-
    ////////அது என்னங்க ‘சர்வ ஜனோ சுகினோ பவந்து’???. அதன் அர்த்தத்தை சொன்னிங்கன்னா என்னை போன்ற இளைஞர்களுக்கு உதவியாய் இருக்கும்./////////

    அர்த்தத்தை சொல்லுங்கன்னு சொன்னா சொல்லிட்டு போறேன். அதென்ன 'என்னை மாதிரி இளைஞர்கள்'னு தனியா ஒரு பிட்டு? நாங்கல்லாம் யாராம் அப்போ?

    சமஸ்க்ருதத்துல "சர்வ ஜனோ சுகினோ பவந்து" அப்படின்னா எல்லா மக்களும் சௌக்கியமா இருக்கணும்னு அர்த்தம். பிரார்த்தனையில் ஒரு முக்கிய அங்கம் இது. இதையே தான் வள்ளலார் எல்லாரும் இன்புற்றிருக்கவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார்.

    'முத்து' படத்துல சூப்பர் ஸ்டார் தன்னோட அறிமுக காட்சியிலயும் இதை சொல்லுவார். ஞாபகமிருக்கா?

    - சுந்தர்

  3. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Thalaivar uku nalla manithargalin natpu kidaithulathu. Kalyanam sir photo eduka use panna technique super. Hats off na for ur effort.

  4. raja raja says:

    பணம் இல்லாதவர்கள் பணம் வந்தவுடன் நாம் எல்லாத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்று நினைக்கிற கால கட்டத்தில் ,பணம் வந்த பிறகும் ,பணம் இல்லாத பொது நீ எனக்கு கிடைக்க வில்லை இப்பொழுதும் நீ வேண்டாம் என்று பல விசயங்களை ஒதுக்கி வைத்துள்ள திரு கல்யாணம் அவர்களை என்னவென்று சொல்வது என்றே தெரிய வில்லை ,எங்கள் தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் HATS OFF to you KALYANAM SIR

  5. saravanan saravanan says:

    வணக்கம் அண்ணா,

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    பொருள்:
    நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்தால், அதுவே பெரிய வலிமையாக முடியும்..

    நன்றி.

    ——————————————————
    மிக்க மகிழ்ச்சி சரவணன். திருக்குறள் எனக்கு மிகப் பெரிய டானிக் போல. அதில் இல்லாத விஷங்களே இல்லை. இப்போதும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் திருக்குறள் புத்தகத்தை புரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

    - சுந்தர்

  6. Anonymous says:

    Wonderful article Anna. Each & every sentence stated by Kalyan sir is marvelous!! Since Kalyan sir have extra ordinary thinking capabilities & behavior tats y GOD placed him to be within Thalaivar's Circle :)
    * Its not a easy thing to be inside Thalaivar's Heart!!!
    Its really a great great INSPIRATION interview :)

  7. rajesh v rajesh v says:

    i appreciate your hard work sundarji

  8. Arjun Arjun says:

    மூன்றாவது புகைபடதில்லுள்ள ஓலி வட்டம் அற்புதம்.

  9. balajiv balajiv says:

    Very good interview sundarji…hats off to kalyanam sir…

    cheers,

    balaji .v

  10. J.Sameeki J.Sameeki says:

    @Sundar - Thanks for bringing us such wonderful and lively interactions with good people. There are many lessons for us to learn from such interactions.

    @Chitti - The person in the first photo is director Priyadharshan (known as Priyan), very successful malayalam film director who has also made a mark in Hindi film industry. Priyan and his wife (Lissi, a yesteryear actress mainly in Malayalam, who is in that photo with super star, P Vasu and Priyan), own the Four Frames preview theatre.

    Priyan is also the director of the award winning Tamil film Kanjeevaram in which Prakash Raj acted. I never watched this film but I think it is about the life and struggles of small weavers.

    JS

  11. harisivaji harisivaji says:

    ஆஅஹ்ஹாஆஆஆஅ

    தலைவர் உட்ட்காந்த நாற்காலியில் நானும் உட்கார்ந்தேன்

    ………..

    அங்கு தான் உட்காந்து உணவ்ருந்தினேனே

    (நான் இன்னும் பதிவை படிக்கவில்லை ..படித்து விட்டு வருகிறேன் )

  12. **Chitti** **Chitti** says:

    @ J. Sameeki,

    *****************

    Thank you so much for the lovely neat explanation.

    *****************

    @ 'younger than all of us' Sundarji,

    Thank you so much for the great explanation. I really feel proud about you that though you're few years older than us but you keep your mind very fresh and young like a pure clarity river. So, you're feeling so younger..I really appreciate it. hahahahha.

    ***************

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates