









You Are Here: Home » Featured, Rajini Lead » படம் ரிலீசாகாத நிலையிலும் இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர்” பட்டியலில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!
ரஜினி ரசிகர்கள் எல்லாரும் காலரை தூக்கி விட்டுக்கோங்க. இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர் — 2012″ பட்டியலில் 4வது ஆண்டாக இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!
இந்த ஆண்டும் இந்தியா டுடேவின் ‘சக்திமிக்கவர்கள் 50′ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்தியா டுடே இதழ் அகில இந்திய அளவில் சக்திமிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் தொழில்துறை சக்கரவர்த்திகள், மீடியா ஜாம்பவான்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என்று பல்வேறு பிரிவினர் இடம்பெற்றுருக்கின்றனர்.
அன்னா ஹசாரே முதலிடத்தில் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில், சூப்பர் ஸ்டாருடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், டீ.வி.எஸ். குழுமத்தின் வேணு ஸ்ரீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சன் குழுமத்தின் கலாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர தமிழகத்தின் அரசியல் டாப் டென், அகில இந்திய அரசியல் டாப் டென் என தனித் தனி பட்டியல்கள் உண்டு. முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, ப.சிதம்பரம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், டி.ஜி.பி. ராமானுஜம் உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவர் பற்றியும் விரிவான விபரங்களுடன் புகைப்படத்தோடு வெளியிட்டு அவர்கள் முந்தைய ஆண்டு என்ன ரேங்க்கில் இருந்தார்கள் என்பதை அடைப்பு குறிக்குள் போட்டு வெளியிட்டுள்ளனர். தவிர, ஏன் இந்த பட்டியலில் அவர்கள் இடம்பெற்றார்கள் என்பதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவருகிறார். இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட 8 ரேங்குகள் கீழே வந்துள்ளார். அவர் நடித்த படம் எதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் அவர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அமீகான், ஷாருக் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது நடித்து வெளியிட்டுவிடுகின்றனர்.
சூப்பர் ஸ்டாரோ படம் எதுவும் வெளிவராத நிலையிலும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் தலைவா!
Also check - (From our archives)
—————————————————————————-
இந்தியா டுடே பவர் லிஸ்ட் பட்டியலில் சூப்பர் ஸ்டார்
2011 ஆம் ஆண்டு
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=10736
2010 ஆம் ஆண்டு
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=6270
2009 ஆம் ஆண்டு
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=2839
—————————————————————————-
[END]
இந்திய டுடேக்கு பெருமை..
அன்னாஜி அவர்கள் இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது இந்த பட்டியலுக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு நல்லது நடக்கும் பொழுது அதனை பலமாக எதிர்த்தால் அது கலியுகமாக கருதப்படும். என்ன ஆச்சரியம் தற்பொழுது கலியுகம் தான் நடந்து வருகிறது.
தீர்ப்பு எழுதிவிட்டு நாட்டாமை செய்வது போல பலர் அன்னாஜியை பற்றி நல்லது எது கேட்டது எது என வாதம் செய்கின்றனர். இந்த பட்டியலில் முதல் இடத்தில அவர் இடம் பெற்றுள்ளது அவர்களுக்கு நல்ல பதில்.
இனிவரும் ஆண்டுகளில் இந்த பட்டியலில் டாப் 5 இடங்களில் தலைவர் இடம்பெறுவார் என்பது திண்ணம்.அதற்கான காலம் நெருங்கிவருகிறது.
.
rajni will rule tamil nadu
———————————————-
வஸி கலியுகம் பற்றி நீங்கள் சொன்னதை படித்ததும் இன் நினைவுக்கு வந்தது இது.
சத்தியம் பொய்யாகும்
தர்மம் தலைசாயும்
அறநெறிகள் அலைமோதும்
அதர்மம் அரசாளும்
பருவம் நிலைமாறும்
பசுமைக்கு பஞ்சம் வரும்
வறுமை சதிராடும்
மண்ணுலகே நரகாகும்
அது முற்றிய கலியின் அடையாளம்
அதன் முடிவே கல்கி அவதாரம்
அதன் முடிவே கல்கி அவதாரம்
(இறைவன் கல்கி அவதாரம் எடுக்க இன்னும் ஆயிரம் வருஷங்களுக்கு மேல் இருக்கு. ஆனா, இப்போவே இந்த சூழ்நிலைகள் உலகத்தில் இருக்கே… அப்படின்னா அப்போ எப்படி இருக்கும்னு நினைச்சி பாருங்க. 1976-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி வெளியான 'தசாவதாரம்' திரைப்படத்தில் வரும் பாடல் இது!)
- சுந்தர்
நோயுற்று மே 2011 இல் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்த போது தமிழகத்தின் இதயத்துடிப்பு நின்று போனது போல இருந்தது…. உண்மை வரிகள்… கோச்சடையான் 30 கோடி க்கு விற்பனையாகி சாதனை… வாழ்த்துக்கள் தலைவா….
சூப்பர் சுந்தர் அண்ணா …
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
அடுத்த ஆண்டு அம்புகுறி மேல் நோக்கி இருக்கும், இது நிச்சயம்.
வாழ்த்துக்கள் தலைவா!
வாழ்த்துக்கள் தலைவா!
Thalaivar whole india ke superstar, SULTAN forever.
Super Starna Summava….
படம் ரிலீஸ் ஆனாலும் சரி, இல்லனாலும் சரி நாம் அவரை கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம்…தினம் ஒரு விதமாய் ! அளவிட முடியா அற்புதங்கள் பொதிந்து கிடக்கும் அதிசயப் பிறவி நம் தலைவர் !
-
திரைப்படங்கள் தாண்டியும் மக்கள் தலைவரை ரசிப்பதால் தான், தலைவர் படம் ரிலீஸ் இல்லையென்றாலும் செல்வாக்கு குறையாமல் இருக்கிறார்…..!
-
"என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னர் தான் ! "
-
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்"
-
உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
விஜய் ஆனந்த்
நாம் பெருமை படும் செய்தி .