You Are Here: Home » Fans' Corner, Featured » ‘கோச்சடையான்’ இனிய துவக்கம் எதிரொலி - சென்னை ரசிகர்கள் அன்னதானம் !

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ திரைப்படம் வெற்றிகரமாக துவங்கியதையடுத்து சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்து கொண்டாடினர்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்துகொண்டு, பயனுள்ள வகையில் சமுதாயத்துக்கு தங்கள் பணிகளை செய்துவருகின்றனர் ரஜினி ரசிகர்கள் பலர். அவர்களில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த  ‘பாரிவள்ளல் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம்’ நண்பர்களும் அடங்குவர்.

சென்ற ஆண்டு டிசம்பர் 12 அன்று, குழந்தைகள் காப்பகத்தில் உணவளிக்க SLOT கிடைக்காததையடுத்து தற்போது கோச்சடையான் துவக்கத்தை கொண்டாடியுள்ளனர்.

கடந்த வாரம் ‘காக்கும் கரங்கள்’ ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தில் மதியம் எளிய முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அறுசுவை உணவை காப்பகத்தின் குழந்தைகள் உண்டு மகிழ்ந்தனர்.

இந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும் ஆசியும் சூப்பர் ஸ்டாருக்கு என்றும் ஒரு கவசம் போலிருந்து காக்கும் என்று நம்புவோமாக.

நல்ல செயல் புரிந்தமைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்!

[END]

7 Responses to “‘கோச்சடையான்’ இனிய துவக்கம் எதிரொலி - சென்னை ரசிகர்கள் அன்னதானம் !”

  1. Anonymous says:

    ரஜினி எப்படிப்பட்ட மனிதர் என்பது இந்த உலகம் அறியும்….அவரது ரசிகர்கள் நாங்களும் அவர் வழி தான் என்பதற்கு நம் சென்னை ரசிகர்களின் இந்த அன்னதான நிகழ்ச்சி ஒரு உதாரணம்….தலைவரின் பெயர் சொல்லி நாம் செய்யும் எந்த ஒரு செயலும் இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்…அது தான் தலைவரின் ஆசையும் கூட !

    -

    சென்னை ரசிகர்களின் இந்த ஒப்பற்ற முயற்சி மென்மேலும் சிறந்து , வரும் காலங்களிலும் இந்த நற்பணிகள் தொடர பிரார்த்திக்கிறேன்…!

    -

    முதல் போட்டோவில் உள்ள மரப்பலகையில் உள்ள வாசகம் மிகவும் அருமை…!

    "வறுமை கொடியது

    முதுமையில் வறுமை மிக மிக கொடியது

    இளமையில் வறுமை இதனினும் கொடியது

    இவர்களைக் காப்பது நமது கடமை "

    -

    ஆகவே , "கடமையைச் செய்வோம் ; பலனை எதிர்பார்ப்போம் "

    -

    உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

    விஜய் ஆனந்த்

  2. sekar sekar says:

    இது எல்லாம் ரஜினிக்கு தெரிமா.

    இந்த நியூஸ் அவருக்கு போய் சேர வேண்டும்.

    எவ்வளுவு கஷ்டப்பட்டு நமது நண்பர்கள் இதை செயகெரர்கள் . ஆகவே இது கண்டிப்பாக அவருக்கு தெரிய வேண்டும்

    u

  3. RAJA RAJA says:

    தலைவரின் ரசிகர்கள் என்றுமே தனி தன்மை வாய்ந்தவர்கள் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்

  4. s.vasanthan s.vasanthan says:

    இப்படிப்பட்ட உண்மையான நல்ல காரியங்கள் யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் ,இது தலைவருக்கு தெரிய வேண்டும் என நினைப்பது ,உண்மையான நல்ல காரியம் இல்லை .ஏன் என்றால் அதிலும் எதிர்பார்ப்பு இருக்கு ,பொதுவா தலைவர் எதை செய்தலும் ,யாராவது பாராட்டனும் எல்லோருக்கும் தெரியனும் என்று எப்போதும் அவர் எண்ணியதில்லை ,அப்படித்தான் நாமும் செய்யணும் .விஜய் ஆனந்த் தொடர்ந்து எழுதும் தலைவரின் வாசகம்( கடமையைச் செய்வோம் ; பலனை எதிர்பார்ப்போம் )உண்மை ,அதற்கான பலன் தான வரும் .

  5. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Billion people blessing for Thalaivar.
    Engalukaga ulaikum Sundar annavukum, nam rasigarkalukum இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்!
    Inrum மின்வெட்டு Jayalaitha vin kodunkol atchi il thodarkirathu. We pray for KOCHADAIYAAN's rule to saving TN

  6. GokulDass GokulDass says:

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

  7. Anand vasi Anand vasi says:

    Happy Tamil year to Thalaivar Maniacs…A great Start for engal KOCHADAIYAAN!!!! :)

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates