You Are Here: Home » Fans' Corner, Featured » ‘கோச்சடையான்’ வெற்றியடைய மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை ரசிகர்கள் தங்கத் தேர் இழுப்பு!

‘கோச்சடையான்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடக்கும், படம் வெற்றி பெறவும், மதுரை ரசிகர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை செலுத்தினர்.

————————————————————————————————————-

சூப்பர் ஸ்டார் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில், ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்தகொண்ட போது உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை மேலும் மோசமானதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வெற்றிகரமாக திரும்பினார். அப்போது, சூப்பர் ஸ்டார் உடல் நலம் பெற்று தாயகம் திரும்பி மீண்டும் திரைப்படத்தில் நடித்தால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக்கொண்டனர் இளங்கோ மணி, எஸ்.கோபி கிருஷ்ணன், ரஜினி சிவா  உள்ளிட்ட மதுரை ரசிகர்கள்.

————————————————————————————————————-

சூப்பர் ஸ்டார் தற்போது கோச்சடையான் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கி லண்டனில் வெற்றிகரமாக முதல் ஷெட்யூலையும் முடித்துவிட்டு திரும்பிவிட்டார். இதையடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிட முடிவு செய்த ரசிகர்கள், மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பெயருக்கு விசேஷ பூஜை மற்றும் அர்ச்சனை செய்து அவர் என்றும் நலமுடன் வாழ வேண்டி தங்கத் தேர் இழுத்தனர்.

இதில் மதுரை நகர ரஜினி மன்றப் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இளங்கோ மணி தலைமையில், டாக்டர் அழகர் சாமி முன்னிலையில், எஸ்.கோபி கிருஷ்ணன், ரஜினி சிவா , துரைப் பாண்டி, செல்லூர் சீனி, டீக்கடை கார்த்தி, எல்.ஆர்.ராஜன், வீரா செல்லம், டி.மருதுபாண்டி, தளபதி சிவா, சின்னக் காலை, முரளி பாட்ஷா, முத்துப் பாண்டி, ஹரி ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு மதுரை ரசிகர்களும், கிளை மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

(நன்றி : ராயல் ராஜ், திருவரங்கம் நகர தலைமை ரசிகர் மன்றம், திருச்சிராப்பள்ளி)

[END]

9 Responses to “‘கோச்சடையான்’ வெற்றியடைய மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை ரசிகர்கள் தங்கத் தேர் இழுப்பு!”

 1. Anonymous says:

  உன்மையிலேய தலைவர் அதிசயப் பிறவி தான் ! பிரதிபலன் பாராமல் எதையும் செய்யும் ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார். ! இது வெறும் திரைப்பட வெற்றிகளின் மூலம் சம்பாதித்தது அல்ல…அதையும் தாண்டி அவரிடம் இருக்கும் தூய்மை, ஒழுக்கம், மனிதாபிமானம்….!

  -

  மதுரை ரசிகர்களின் இந்த தெய்வீக பிரார்த்தனை தலைவருக்கு மேலும் பலம் கூட்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை…!

  -

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 2. RAJA RAJA says:

  நண்பர் சேகர் அவர்களே தன அபிமான நடிகருக்கு தான் செய்வது தெரிய வேண்டும் என்று செய்வது வேறு ரசிகர்கள் ,அல்லது அந்த நடிகரே செய்ய சொல்லுவார் (நான் யாரையும் கலாய்கலிங்க)

  ஆனால் நமது ரசிகர்கள் செய்வது தலைவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல ,தலைவரின் மேல் உள்ள அன்பால் ,அவருக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நம் ரசிகர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள்

 3. kochadaiyaan kochadaiyaan says:

  WELL SAID VIJAI ANANDH :claps:

 4. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Che Ingaye irunthum intha news theriyama pochu. Thank u na.

 5. Jegan kerala Jegan kerala says:

  Any news about shooting of kochadaiyan in kerala?

 6. Shoaib Shoaib says:

  Was disgusting to watch that dumb idiot Dhanush humiliate Rajini's daughter Aishwarya on public television yet again yesterday. Just because one dumb ass song became a hit Dhanush seems to have lost his head.

 7. R.Gopi R.Gopi says:

  முதல் புகைப்படம் கோவிலுக்குள் எடுக்கப்பட்டதா?

  அப்படி என்றால் கோவில் உள்ளே, ரஜினி படம் போட்ட கொடி காட்டியது சரியில்லை….

  கோவில் என்பது புனிதமான வழிபாட்டு தலம்…. அங்கு எந்த விதமான கொடிகளுக்கும் வேலை இல்லை….

  இதற்கு உடனே அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எடுத்து வருவார்களே என்று யாரும் வாதிட வேண்டாம்…. அடுத்தவர் ஒரு தவறு செய்தால் அதையே நாமும் செய்ய வேண்டும் என்பதில்லை…..!!!

  இது போல் புனிதமான வழிபாட்டு தலங்களில் இறைவனே முதன்மையானவன்… ஒரு மனிதரின் புகைப்படம் போட்ட கொடி காட்டுவது தவறு என்றால் அதற்கு ரஜினியும் விதிவிலக்கல்ல…..

 8. anand vasi anand vasi says:

  Hardwork never fails…..Our Superstar works more than this proverb….and Such is his fan's prayers…all this combined together will make our Sweetest KOCHADAIYAAN, The Greatest Blockbuster than Before. NO PAINS, NO GAINS.. :)

 9. SAMUEL DHYRIAM SAMUEL DHYRIAM says:

  Dear sir, Thanks for the information about Rajni sir, He is a goood man in heart, sincere,honest,and grateful,never forget his family, and friends, and above all straight forward and God loving in nature, so, I assure you final truimp will be his.-best wishes.-SAMUEL DYRIAM.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates