









You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 67: பில்லா II இசை வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் & கோச்சடையான் ஷூட்டிங்கில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற ரஜினி!
1) சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையின் அடையாளம் - த்ரிஷா பரவசம்!
நடிகைகளின் SHELF LIFE சினிமாவில் ரொம்பவும் கம்மி. மேக்சிமம் ஐந்தாண்டுகள் வரை தாக்குபிடித்தாலே பெரிய விஷயம். அப்படியிருக்கும்போது கடந்த 12 ஆண்டுகளாக த்ரிஷா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவர் திரையுலகில் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை பெற்றபோது ரஜினி, கமல் ஆகிய இருவரோடும் நடித்திருக்கவில்லை. (2010 ஆம் ஆண்டு இறுதியில் தான் இவர் கமலுடன் நடித்த ‘மன்மதன் அம்பு’ திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.) இருப்பினும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்காததை த்ரிஷா பெரும் இழப்பாகவே கருதுகிறார். தமிழ் திரையுலகை பொறுத்தவரை, சூப்பர் ஸ்டாருடன் நடிக்காமல் தங்களது கேரியர் முழுமை அடைவதில்லை என்று நடிகைகள் ஆணித் தரமாக நம்புகிறார்கள்.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் த்ரிஷா சூப்பர் ஸ்டார் பற்றி கூறியிருப்பதாவது :
“நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக்கமானேன். திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம். அவர்களின் படங்களை பார்க்க அனுமதிப்பார்கள். முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாது. இப்போது நடிகையாகி விட்டதால் பிரிமியர் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடிகிறது. இப்போதும் ரசிகர்களுக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்களை பார்க்கிறேன்.”
“ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையையும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர். இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை மட்டுமே பார்க்கின்றனர். புதுமுக நடிகர்களையும் ஊக்கப்படுத்துகின்றனர்.” இவ்வாறு திரிஷா கூறினார்.
(த்ரிஷா சொல்வது சரிதான். அழகான நடிகைகளை ஊக்கப்படுத்த நாம் என்றுமே தயங்கியதில்லை… ஹி…ஹி….!)
2) கோச்சடையான் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு - ரஜினி திருவனந்தபுரம் சென்றார்!
கோச்சடையான் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. அதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷராப், ஷோபனா ஆகியோர் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. சவுந்தர்யா டைரக்டு செய்தார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்தார். லண்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில், கதாநாயகி தீபிகா படுகோன் கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெறும் படப்பிடிப்பில், அவர் கலந்து கொள்கிறார்.
படப்பிடிப்பு குழுவினர் நேற்றே திருவனந்தபுரம் புறப்பட்டு போய்விட்டார்கள். ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் முன்னதாக செப்டம்பர் மாதம் கோச்சடையான் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. கோச்சடையான் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளிலும் ரிலீசாகிறது. ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உள்ளதால் ஜப்பான் மொழியிலும் இதனை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
(கேரளா செல்லும் சூப்பர் ஸ்டார் புகழ் பெற்ற திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடும் என்று தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் சூப்பர் ஸ்டார் இந்த கோவிலுக்கு வந்து சென்றதாக தெரிகிறது!)
3) “அப்பா எவ்ளோ பெரிய ஒரு நடிகர் என்பது டீன் ஏஜ் வரை எங்களுக்கு தெரியாது” - ஐஸ்வர்யா தனுஷ்!
பிரபலங்களுக்கு வாரிசாக இருப்பத் ஒருவிதத்தில் சௌகரியம் என்றால் மற்றொரு விதத்தில் அது ஒரு மிகப் பெரிய சுமை. தன்னுடைய பாப்புலாரிட்டி தனது குழந்தைகளின் தனித் தன்மையை எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதாலும் தனது செல்வாக்கு மற்றும் புகழின் வெளிச்சம் அவர்களை எந்த விதத்திலும் டாமினேட் செய்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தினாலும், சூப்பர் ஸ்டார் தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோரின் புகைப்படங்களை அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை வெளியிடவில்லை. வெளியுலகிற்கு அவர்களை காட்டவில்லை.
இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறுவதாவது : “எங்கள் அப்பா ஒரு மிகப் பெரிய நடிகர், நட்சத்திரம் செல்வாக்கான நபர் என்பது எங்களுது டீன் ஏஜ் வரை எங்களுக்கு தெரியாது. ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தால் அவர் நடிகர் அல்ல. எங்கள் அப்பா. அவரை சுற்றி ஒளிவட்டமோ படாடோபமோ துளியும் இருக்காது. எங்கள் புகைப்படங்களை எங்கள் பெற்றோர்கள் வெளியிடாத காரணத்தால் பலருக்கு நாங்கள் தான் சூப்பர் ஸ்டாரின் குழந்தைகள் என்பதே தெரியாது. ஆகையால் நினைத்த இடங்களுக்கு எங்களால் சுதந்திரமாக செல்ல முடிந்தது. நினைத்தால் நானும் சௌந்தர்யாவும் பீச்சுக்கு போவோம். ஓட்டலுக்கு போய் டிபன் சாப்பிடுவோம். சுதந்திரமாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் நாங்கள் வளர்க்கப்பட்டோம். பிறர் வீட்டில் தங்கவோ இரவை கழிக்கவோ நாங்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. நன் முதன் முதலில் சென்ற டிஸ்கோவே எனது திருமணத்திற்கு பிறகு தான்.”
அப்பாவை கண்டு பயம் ஏற்பட்டதுண்டா என்ற கேள்விக்கு, ஐஸ்வர்யா தனுஷ் கூறுவதாவது : “எனக்கு அவர் மீது எப்போதுமே மரியாதை தானே தவிர பயம் கிடையாது. ஒருவர் மீது நீங்கள் பயம் கொள்வதால் ஒரு பயனும் கிடையாது. அர்த்தமும் கிடையாது. உலகம் போற்றும், உரிமை கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள்களாக இருப்பதால் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அது பெரிசா ஒன்னும் இல்லை. அது தவிர்க்க இயலாதது என்பதை நான் உணர்தே இருக்கிறேன்.”
“உங்களோட காதலுக்காக அப்பா, அம்மா கிட்டே சண்டை போட்டதுண்டா?”
“எங்கப்பா, அம்மாவே லவ் மேரேஜ் தானே. அப்புறம் நான் எதுக்கு கஷ்டப்படனும்? “இது தான் சரி.. இது தான் தப்பு. இது தான் எங்க முடிவு. ஆனால், நீ யோசிச்சு சுயமா உன்னோட முடிவை எடு.” - இப்படி சிந்திக்க தான் எங்கப்பா என்னக்கு சொல்லிக் கொடுத்தாங்க.”
அடுத்த படத்தை உடனடியாக துவக்க விரும்பும் ஐஸ்வர்யா இம்முறை தனது கணவரின் துணையின்றி தானே களத்தில் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
“3 படம் ரிலீஸ் சமயத்தில் கோச்சடையான் ஷூட்டிங்கிற்காக அப்பா லண்டன் போனது, எனக்கு மிகவும் வெறுமையாக இருந்தது. 3 படத்தை அதன் சவுண்ட் மிக்ஸ் செய்வதற்கு முன்பு அப்பா பார்த்தார். ஆனால் ஒரு விமர்சகராகவோ, இண்டஸ்ட்ரி சீனியராகவோ அவர் பார்க்கவில்லை. ஒரு பாசமுள்ள அப்பாவாகவே பார்த்தார். இந்தளவு அவர் எதிர் பார்க்கவில்லை. படம் அவரை மிகவும் நெகிழ வைத்தது என்பதே நிஜம்.”
(முதல் படம் உங்களூக்கு நிறைய அனுபவம் கொடுத்திருக்கும். அதையே மூலதனமா வெச்சி, அடுத்த படத்தை ஆரம்பிங்க. நிச்சயம் திரையுலகே திரும்பிப் பார்க்குற மாதிரி ஒரு வெற்றிப் படமா அது அமையும்! வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா!!)
4) ரஜினி - கமல் இணைந்து கலக்கிய நினைத்தலே இனிக்கும் ரீ-ரிலீஸ்?
‘கர்ணன்’ படத்தின் அபார வெற்றி பலரை திகைக்க வைத்துள்ளது. அதிலும் படத்தின் நெகடிவ் ரைட்ஸை வைத்துள்ள ராஜ் டீ.வி.க்கு குஷியோ குஷி. எனவே தங்களிடம் ரைட்ஸ் உள்ள கடந்த காலங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்களை டிஜிட்டல் வடிவத்தில் மெருகேற்றி வெளியிட ராஜ் டீ.வி. முடிவு செய்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் மறுபடியும் திரையில் இணைவது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து நடித்து பட்டையை கிளப்பிய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை தமிழகம் முழுதும் மீண்டும் வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
1979 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான இப்படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டதற்கு ஒரே காரணம் அவர் குரு கே.பி.யின் படம் இது என்பதால் தான். அத்துனை பெரிய நட்சத்திர பட்டாளத்திலும் ரஜினி தனித்து தெரிவார். இதுவே வேறு யாராவது ஒரு நடிகர் என்றால் படத்தின் பிரமாண்டத்தில் காணாமல் போயிருப்பார்கள். மேலும் நகைச்சுவையிலும் தம்மால் ஜொலிக்க முடியும் என்று ரஜினி காட்டிய படம் இது.
‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆனந்த தாண்டவமோ’, ‘பாரதி கண்ணம்மா’, ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு’, ‘சம்போ சிவசம்போ’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற பாடல்கள் பல ஆண்டுகள் வானொலியை ஆக்கிரமித்தன.
சாம்பிளுக்கு சம்போ சிவ சம்போ பாடலை இத்துடன் இணைத்துள்ளேன்.
Ninaithale Inikkum (1979) Siva Sambo Song
Video Url : http://www.youtube.com/watch?v=R08CYTB3efc
(இந்தப் படத்துல கண்ணாடி, வாட்ச், தொப்பி என எதைப் பார்த்தாலும் சுட்டுவிடுகிற குறும்பான காரக்டர் சூப்பர் ஸ்டாருடையது!)
5) பில்லா 2 படத்தின் ஆடியோ ரஜினி வீட்டில் எளிமையாக நடைபெற்றது?
அஜீத் நடிப்பில் உருவாகியிருக்கும் பில்லா 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்கள் அனைத்தும் தயாராகிவிட்ட நிலையில், படத்தின் ஆடியோவை சூப்பர் ஸ்டாரை வைத்து வெளியிட படக் குழுவினர் குறிப்பாக அல்டிமேட் ஸ்டார் அஜீத் விரும்ப்பினார். ஆனால் பாடல்கள் தயாரானபோது அவர் லண்டனில் இருந்தார். சூப்பர் ஸ்டார் சென்னை திரும்பியவுடன், இசை வெளியீடு இருக்கும் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக, நம் நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். அப்போது நாம் சொன்னது “நிகழ்ச்சி எளிமையாக ஒரு - CLOSED EVENT - ஆக ரஜினி அவர்கள் வீட்டிலேயே நடைபெற வாய்ப்பிருக்கிறது. பிரம்மாண்டமான விழாவிளெல்லாம் ரஜினி கலந்துகொள்ள வாப்பில்லை” என்று தான்.
நாம் சொன்னபடியே, பில்லா 2 இசை வெளியீடு ரஜினி அவர்கள் வீட்டிலேயே எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது. படத்தின் அஜீத், படத்தின் இயக்குனர் சாக்ரி டோலேட்டி, உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் மட்டும் இந்த இசை வெளியீட்டில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பில்லா 2 இசை வெளியீடு ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ரஜினி வீட்டில் நடந்துவிட்டது என்றும், புகைப்படங்கள் மற்றும் செய்தி விரைவில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ‘கோச்சடையான்’ படப்பிடிப்புக்காக கேரளா செல்வதால், அவர் கேரளாவுக்கு புறப்படும் முன், இசை வெளியீடு நடைபெற்றுவிட்டது என்றும் கூறப்படுகிறது.
(பாட்டை கேட்க ஆவலாயிருக்கோம் தல!)
[END]
Intha varuda DIWALI 2 month munnadi varugirathu. Nama ooru singari song sema.. Thalaivar style a keka venam.
* பில்லா 2 ஆடியோ கண்டிப்பாக தலைவருடைய ஆசிர்வாதத்துடன் ரிலீஸ் ஆகும்!!! அது எப்போ எங்கே எப்படி என்று பொறுத்திருந்து பாப்போம்!!
* திரிஷா போட்டோ சூப்பர் சூப்பர் சூப்பர்
சுந்தர் அண்ணா
வர வர தலைவர் போட்டோகளில் கவனம் செலுத்துவதை விட "தீப்ஸ்" "தமன்ஸ்" "திரிஸ்" போட்டோகளில் பின்னுகிறார்!!!
இந்தப் படத்துல கண்ணாடி, வாட்ச், தொப்பி என எதைப் பார்த்தாலும் சுட்டுவிடுகிற குறும்பான காரக்டர் சூப்பர் ஸ்டாருடையது!)
/////////////////////////
அதுல்ல இன்னொரு ஹைலைட் வந்து தலைவர் ஏர்போர்ட் செக்கிங் ல சீல் அ திருடிட்டு வந்துடறது தான் ,கேக்கும் போது சொல்லுவாரு அவன் சும்மா கிச்சு கிச்சு மூடர மாதிரி ம்பன்னிட்டே இருந்தான் நு அது செம கலாய்ச்சல்