You Are Here: Home » Featured, Happenings » “3 படத்துக்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்த தொடர்பும் இல்லை; பொய்யான செய்திகளை நம்பவேண்டாம்” - சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை!

ஸ்தூரி ராஜா தயாரிக்க, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில், வெளியாகியிருக்கும் 3 படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அது தொடர்பாக சூப்பர் ஸ்டார் தலையிட்டு அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உறுதியளித்துள்ளதாகவும் ஊடகங்களில் சிலவற்றில் நேற்று செய்தி வெளியானது. (நமது தளம் அல்ல).

சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை, 3 படத்தை பற்றி அவர் நேரடியாக எந்த கருத்தும் இது வரை கூறியதில்லை. படத்தை பாருங்கள் என்றோ, படத்தை வாங்குங்கள் என்றோ கூறியதில்லை. படத்தின் துவக்க விழாவிலோ அல்லது இசைவெளியீட்டு விழாவிலோ கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

மேலும் உலகமே திரும்பிப் பார்த்த ‘கொலைவெறி’ பாடலுக்கு கூட தனது கருத்தை அவர் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ஒரு தகப்பனாக  அந்த படத்தை பார்த்துவிட்டு, மகள் இயக்குனர் ஐஸ்வர்யாவிடம் மட்டும் சில வார்த்தைகள் கூறிவிட்டு ‘கோச்சடையான்’ படப்பிடிப்புக்கு லண்டன் சென்றுவிட்டார். இது தான் நடந்தது. ஆனால், அவரை படத்தின் வியாபாரத்துடன் தொடர்பு பற்றி செய்திகள் வெளியாகிவருகிறது. இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் சிலரும் சூப்பர் ஸ்டார் தரப்பை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து அனைவருக்கும் தெளிவு ஏற்படுத்த அறிக்கை ஒன்றி சூப்பர் ஸ்டார் கைப்பட எழுதி நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

வியாபாரம் தொடர்பாக தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அது குறித்து வெளியாகும் செய்திகளை எவரும் நம்பவேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினி அவர்கள் கூறியிருப்பதாவது, “என் மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடிப்பில் வெளியாகியிருக்கும் 3 படத்திற்கும் எனக்கும் வியாபார ரீதியாக தொடர்பு படுத்தி பொய்யான செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட விநியோகஸ்தர்கள் யாரும் என்னை சம்பந்தப் படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ரஜினிகாந்த்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

[END]

24 Responses to ““3 படத்துக்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்த தொடர்பும் இல்லை; பொய்யான செய்திகளை நம்பவேண்டாம்” - சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை!”

 1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  3 telugu version thaana loss? Tamil version ok

 2. Sgokul Sgokul says:

  ஒரு ஏமாந்தவன் கிடைச்சா , நல்ல முளக அரைக்க

  பாப்பானுங்க .

  தலைவா நீங்க மூணு படத்த ப்ரொமோட் பண்ணாததே ரொம்ப நல்லதா போச்சி.

  ———————————-

  ரஜினி இரக்க சுபாவமுள்ளவர் தான். ஆனால் ஏமாளி அல்ல.

  - சுந்தர்

 3. saranya saranya says:

  ippa ellarukum santhosham thane.

 4. vasi.rajni vasi.rajni says:

  தலைவர் கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடுள்ள அறிக்கைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்பொழுது அவர் அறிக்கை வெளியிடுள்ளார் என்றால் அது நிச்சயம் பெரிய விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.

  .

  3 படத்தை நான் இன்னும் பார்க்கவே இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது தனுஷ். மாப்பிளை படத்திற்கு பிறகு ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்வதும், ரஜினி ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு கருத்துகள் வெளியிடுவதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

  .

  அவர் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.தனுஷ் சீடன் போன்ற சிறந்த கதாபத்திரங்கள் அவ்வபோது தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

  .

  தலைவர் தற்பொழுது கோச்சடையன் mission நில் உள்ளார். உலகின் முன்றாவது motion capturing performance படம் கோச்சடயான் என்பது பலருக்கு தெரியும். இறைவன் அருளால் இந்தப்படம் உலக சினிமாவையே திரும்பிபார்க்க வைக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

  .

  தலைவரை இந்த சூழ்நிலையில் இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது.

  .

  rajni will rule tamil nadu

  ———————————————

  /////3 படத்தை நான் இன்னும் பார்க்கவே இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது தனுஷ். மாப்பிளை படத்திற்கு பிறகு ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்வதும், ரஜினி ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு கருத்துகள் வெளியிடுவதும் அவருக்கு வாடிக்கையாகிவிட்டது./////

  உயிருக்கு பயந்து ஓடும்போது ஓடும் ஓட்டம், உணவுக்கு ஓடும் ஓட்டத்தில் இருப்பதில்லை. தனுஷ் மட்டுமல்ல… திரையுலகில் பொதுவாகவே அனைவரும் இப்படித் தான். இதற்க்கு விதிவிலக்கு ஒரு சிலர் மட்டுமே. அவர்கள் தாங்கள் இந்த நிலைக்கு வர எத்துனை கஷ்டங்கள் & அவமானங்களை தாங்கியிருப்போம் என்பதை மறப்பதேயில்லை. ஆகையால் அரும்பாடுபட்டு வெற்றி தேவதையை தொடர்ந்து தங்களிடம் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

  ஆனால் அடக்கத்திற்கு பெயர் பெற்ற தனுஷின் நடவடிக்கைகள் அண்மைக்கலாமாக விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அவரை ரசிகர்கள் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை அவர் மறக்கவே கூடாது.

  - சுந்தர்

 5. saranya saranya says:

  ungalukku ippa santhosham thane. intha nilaimayai thane ellorum aavalaaga edhirpaartheergal.. inga varum comments ah vachi paakum pothu yaarume intha padatha paakala nu theriyuthu. avar marakkarathu irukkattum neenga thaan ellathayum maranthuteenga. antha ponnu appadi enna thaan eduthiruku nu oru thadavayavathu poi paakanum nu yaarukum thonala illa.

 6. @ சரண்யா, நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. 3 ஐஸ்வர்யா தனுஷின் படம் என்பதாலேயே அந்தப் படத்தை அனைத்து ரஜினி ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மன்னிக்கவும். அது அவரவர் விருப்பம். ரஜினி படமேயானாலும் நன்றாக இருந்தால் தான் அவரது ரசிகர்கள் போய் பார்ப்பார்கள். இது ரஜினிக்கும் தெரியும். மேலும் கண்டிப்பாக நாம் போய் இந்தப் படத்தை பார்த்தே தீரவேண்டும் என்று என்ன அவசியம்? ரஜினி கேட்டுக்கொண்டாரா? இல்லை தனுஷ் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டாரா?

  ரசிகர்கள் ரஜினி மீது வைத்துள்ள அன்புக்கும் இது போன்ற படங்களின் வெற்றிக்கும் தயவு செய்து முடிச்சு போடாதீர்கள். எந்த ஒரு படத்திற்கும் WORD OF MOUTH என்பது மிகவும் முக்கியம். இந்த படத்தை பொறுத்தவரை அது கிடையாது என்பதே உண்மை. மேலும், கொலைவெறி பாடல் ஏற்படுத்திய மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை படத்தின் டீம் பூர்த்தி செய்ய மறந்துவிட்டது என்பதே உண்மை.

  (சுந்தர் சார்… தயவு செய்து இதை அப்ரூவ் செய்யவும்!)

  ——————————————————————-

  'நாமெல்லாம் ஒரே குடும்பம். நம் குடும்ப உறுப்பினரை விட்டு தரக்கூடாது' என்ற அடிப்படையில் தான் சரண்யா இதை பற்றி கூறியிருக்க வேண்டுமே தவிர வேறொன்றுமில்லை.

  - சுந்தர்

 7. saranya saranya says:

  neengal ellaam practical aaga yosikkum arivaaligalaaga irukkireergal. naan emotional aaga yosikkum muttaalaaga irukkiraen endru ninaikiraen. parava illai naan appadiye irukkiren. ennai poruthavarai thalaivar santhoshamaga irukka vendum avvalavu thaan.

 8. Mano Mano says:

  Personally I like dhanush acting. He is an individual. He should have a personality. Just because he is thaluvars sil it does mean he has to behave in a certain way. He is a good son, father husband and a caring son in law. This media always blows things out of proposition. Thalivar perai solli vyaparam pakanum. Believe me dhanush is thousand times better than other so called build up actors. He has talent. People with talent do talk as though they know everything. This fellow has been in the field for 10 yrs. acts well won awards. So noe when he is entering his thirties he starts talking abut. It is part of growing up. I have never seen him being disrespectful to anyone. Hope he gets his space. After all he is my thaluvars son in law who has proved himself. Empty vessels a satham podium pithy, a national award winner, a man who introduces young talents can talk. Thalivar seems to be happy with him. No problem.

  ————————-

  Hope Saranya is now convinced. Thanks Mam.

  - Sundar

 9. Shoaib Shoaib says:

  I am sorry but Dhanush has been acting like a bloody prick ever since the day that sily song Kolaveri went viral. He thinks he has become a pan Indian superstar after Kolaveri when the truth is that nobody would give a crap about him beyond the borders of Tamil Nadu if he was not Rajini's son-in-law. It is nauseating to watch him insult and humiliate Aishwarya everytime they appear together on TV. Great of Aishwarya to not react for if she did then she would be stooping down to Dhanush's low level which no Rajini child should do. Of course 3 would be a flop in Telugu because as I said before nobody gives a rats ass about Dhanush beyond the borders of Tamil Nadu. I had a bit of respect for Dhanush but cannot stand him anymore after his behaviour since that dumb song released.

 10. Mano Mano says:

  Shoaib bro he is only 28 yrs old. Let us give him a break here. People start doing crazy stuffs once one movie is a hit. I am sure he will be more groomed. He is talented. What abt the other good songs maa? He does have talent. Let us not be judjemental here. Abt the aish teasing thing that is his wife, he is entitled to tease her even though we get annoyed. Let us accept him as he is. Being a thalivar fan personally I have seen him accept all shades of people, all kinds of people. Let us follow our thalivar here also. Dhanush again I say is much much better than those self proclaimed pistachio padam, six pack actors. Didn't u notice Kathy talk rubbish in 7 arivu audio release. He said 7 arivu would surpass endiran. He also said he likes only Telugu audience. Isn't that crap. All go through this growing phase. Let us hope. Am sure he is a fine person.

 11. harisivaji harisivaji says:

  எல்லாம் நன்மைக்கே …

 12. Sudhagar_US Sudhagar_US says:

  சரியான நேரத்தில் சரியானதொரு விளக்கம்…இல்லாவிடில் இன்னும் ஓரிரு நாளில் ஏதாவது ஒரு தமிழ் விநியோகிஸ்தரிடம் இருந்தும் அறிக்கை வந்திருக்கும் நாங்கள் படத்தை வாங்கியதே ரஜினி சார் மேல் வைத்த நம்பிக்கையால் தான் என்று!

  நல்லவர்களை தேடி பிடித்து ஏளனம் செய்யும் உலகமாச்சே!

 13. Dev Dev says:

  Very well said, Shoaib! Dhanush is too immature to understand the amount of damage he is creating to his own image in public! The other day on Vijay TV, when the '3' movie team were being interviewed. Dhanush asked the audience (his own people) to send resumes/scripts and he claimed that he can make sure that they will shine on the silver screen once 'he' likes the script. Immediately after that, he pointed to Aniruddh and Aishwarya and told the audience "just like i brought these 2 to the silver screen". I was laughing my butts off at Dhanush's perverted perception that Aishwarya and Anirudh were there on the silver scren only because of him!! (In reality, Anirudh is there because of Aish)

  We all know how brutal the cine world is if one is arrogant and self centered….look what happened to Rajesh Khanna and our own Kamal. Kamal, with his awesome acting capabilities and looks could not achieve the real superstardom only because of his attitude. Anyways, I don't want to stir the hornet's nest here talking about another star….the focus is on Dhanush. If he continues like this, i would predict a maximum of 3 more years before he goes into oblivion! I think Rajini is too decent not to interfere into his son-in-law's affairs…no pun intended……

 14. Shoaib Shoaib says:

  Fully Agree Dev. I mean there is no question that this dude Dhanush has gone nuts of late. Yes, you are right Dhanush, Aishwarya Rajinikanth the daughter of the biggest star in Indian cinema needed a small time good for nothing hero such as yourself to bring her to the silver screen. What's next? Big B says "Dhanush is my inspiration and role model"? Get a life dumbo. What pisses me off even more is that there are posters here who actually defend what this idiot has been doing and saying of late. Teasing and belittling someone even your wife are two different ball games. What Dhanush does on every interview he appears with his wife is a desperate attempt to belittle her or make her look insignificant and that is very, very low of him. Then he attends the premier of MI4 with Abhishek Bachchan and talks of Abhishek as being a great friend. I would like to ask Dhanush how exactly did Abhishek become his friend? Is it through Kasturi Raja or Selva? What a bloody joke! Abhishek even acknowledges Dhanush's existence because Dhanush's wife was Abhishek's childhood friend and because Dhanush's father-in-law and Abhishek's father are very close friends. No doubt in my mind that Dhanush suffers from a major case of inferiority complex and it is in his best interest to get some professional help. As Dev says Dhanush is dumb enough not to realise the harm his juvenile and ill advised behaviour is doing to himself. I don't give a monkey's bottom about the crap uttered by the likes of half baked heroes like Kathy say about the potential of his good for nothing half baked brother Surya (who is another joker that the some Tamil Nadu based media outlets that no one gives a crap about tries to promote as the next big Tamil star when the fact is that he is not and NEVER EVER will be) or what other aspiring fake superstars say or do as they only end up making an ass of themselves (I mean a bigger ass of themselves than what they already are) The difference when Dhanush starts acting like an ass is that it affects Rajini cause this donkey is married to his daughter. If Dhanush does not go back to the simple way he use to be I agree with Dev that this is the begining of the end of his success (whatever the little he has been having thus far) I will state here that prior to marrying Aishwarya I did not even know who the hell Dhanush was. The string of commercial hits Dhanush has had from Pollathavan and Padikathavan (one of the many titles of his illustrious father-in-law that he has used) onwards have largely been because Rajini fans have also been watching his movies. Someone needs to knock some sense into this idiot and remind him of who is where he came from what his journey has been like and how Kolaveri has not and will never make him a pan Indian star that he thinks he has become

 15. **Chitti** **Chitti** says:

  @ சரண்யா,

  என்னங்க இப்படி சொல்லிடிங்க??? நான் '3 ' படம் பார்த்துடேங்க. என்னை பொறுத்தவரை படம் அருமை. என்ன, பின் பாதி short n sweet ஆகவும், ஆரம்பத்தில், தனுஷ் இறப்பதை காட்டாமல் இருந்திருந்தால் படம் வெற்றியடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனக்கு படம் பிடிச்சு இருக்குங்க.

  *****

  மற்றும், உங்களின் உணர்வுகளை ஒரு உண்மையான ரசிகனாக (for both @ onscreen and off screen) புரிந்து கொள்ள முடிகிறது. வருத்தப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே!

  *****************

  @Shoaib,

  Don't worry buddy. I could understand your feelings. Dhanush would realize the fact that still he has to go on for a long way. And you know, all this happens like when you had dinner with PM and worldwide popularity through a single song and everything. He is also a normal human being only and he is not like our wonderful human Sivaji Rao who would not take his victories into head even in his earlier stages.

  Super Star is entirely different from others - humbleness, simplicity and everything. That's what made us to love and make a unbreakable bond with him ever. So, by considering all this, I could accept Dhanush's normal human behavior actions after his fame. Just a few more steps, he would realize then and that he has to behave rightly (he would be polished like thalaivar. That's why Thalaivar said in one interview for the question - "How can be you are so humble despite of being having demi-god status with more intense in tamil nadu and now the whole world?". He replied that, "the height which you kept me is really distinct and huge, if I fell from there, I would be no-where. Thats why I need to be like this (being humble and simple)". He's the real phenomenon.

  And so, Dhanush also would understand this some day. Imagine in dhanush place, if somebody's there (apart from good actors like ajith, vikram and surya) like simbhu, vijay or anybody..Oh my God! I could not even imagine the situation. Their crook character, arrogance, self centered behavior would have come lime light like anything. Thats all. so comparing with them, I can (and may be all of us, we, rajni fans) adjust with Dhanush's activity now.

  *****

  @ Mano,

  very great mature explanation. Kudos to you and hats off, mam. good! keep it up.

 16. s.vasanthan s.vasanthan says:

  தலைவர் அறிக்கை விட்டதே பலரின் பொய்யான பரப்புரையை முடிவிற்கு கொண்டு வரவே ,,மற்றபடி படம் தமிழில் வெற்றியே ,படமும் மோசமானது இல்லை ,பார்ப்பது பார்க்காதது அவர்களது உரிமை .

 17. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Is hindi baashaa releasing tomorrow? No news about release

 18. RAJA RAJA says:

  தலைவருடைய கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்கிறது

 19. RAJA RAJA says:

  விட்ட இவனுங்க தலைவருடைய பேர பசங்க படம் நடிச்சு அது சரியா போகலேனாலும் தலைவர் தான் வந்து சமாதானம் பண்ணி வெக்கணும் நு சொல்லுவாங்க போல. தலைவர் போனா போதுன்னு பாவ பட்டு பாபா படத்துக்கு பணத்தை திருப்பி கொடுத்தது தப்பா போச்சு ,இன்னொருத்தார் (அவர் யாருன்னு ஊருக்கே தெரியும்) மாதிரி இருந்து இருக்கணும்.

  ——————————-

  Thalaivar refunded for Baba means he was the producer. But in 3's case he is not the producer or beneficiary. Even director Aishwarya too was a paid technician only.

  - Sundar

 20. kannan kannan says:

  //What Dhanush does on every interview he appears with his wife is a desperate attempt to belittle her or make her look insignificant and that is very, very low of him. //

  என்னாலும் அந்த interview பார்த்தபின்பு கோபத்தை அடக்கமுடியவில்லை.ஐஸ்வர்யாவுக்கு தனுசுக்கு பிடித்த கலர் எதுவென்று கூட தெரியாதா.ஐஸ்வர்யா சொன்ன கலரை வேண்டுமென்றே அது அல்ல வேறு கலர் என்று சொன்னால் பார்க்கிற மக்கள் என்ன நினைப்பார்கள் ரஜினி பொண்ணுங்கிற திமிரு என்று சொல்லமாட்டார்கள்(ஒருவேளை தனுசுக்கு அதுதான் வேண்டுமோ . அதில் ஒரு நக்கல் சிரிப்பு வேறு.உண்மையை சொல்கிறேன் அனைத்து மாவட்ட ரசிகர்களும் அந்த interview பார்த்தபிறகு மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள்.நம் தலைவரின் பொண்ணு இயக்கும் முதல் படம் அதனால் சிறப்பான வரவேற்பை கொடுக்கலாம் என்று நினைத்தார்கள்.ஆனால் அப்பொழுது தனுஷ் அடக்கமாக பேசுவது போலவே பந்தா பண்ணியதையும் , ஐஸ்வர்யாவை புறக்கணிப்பதையும் பார்த்து அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டனர்.தலைவர் பொண்ணு வாழ்க்கை என்பதற்காக உள்ளுக்குள்ளே புழுங்கி கொண்டிருக்கிறார்கள்.

 21. Mano Mano says:

  Hi everyone don't u think if everyone behaves like our thalivar the world would be a better and peaceful place than what it is now? I learnt a lot from him. I use it in my life on day today basis. I am teased by my husband& relatives as fanatic. One of the thing I have learnt from him is accept everyone as they are. I have accepted dhanush as he is. And fully believe he is a talented fellow. He will grow up. Humbleness is associated only with thalivar not with any other celebrity as far as I know. Dhanush is young and has had a humongous succeeds. He will surely calm down. I believe.

 22. Mano Mano says:

  @ சிட்டி thx u for your compliments. We r all one big family.

 23. kochadaiyaan kochadaiyaan says:

  cinema oru soothattam ..idhil lose aagivittathu endru polambuvathe ..thavaru …thalaivar baba padathai adhiga vilaikki vitra ore kaaranathirkaaga ..thiruppi kuduthaar …kuselam adhiga vilaikki vitru padam odathathal thiruppii kudukka sonnaru …rendu padamae laabam kidaikka villai ..asal mattum kedachchadhaala thaan senjaaru …once again ..panathai kallavil vaangi pottavarai thaan ketkka vendum ..50 crore business seithaal ..adhai vitravaridam thaan ketka vendum..adhai vittu ..padathukku sambandamae illathavarai iluthu laabam pakka nenaikirargal..thalaivarum sariyana vilakkam than kuduthu irukkaru ..apparum…namma aalaunga ..kasthuri raja ..selvaragavan padam eduthu ooothikitta kooda kekka aarambichciduvaanunga…moola illama…

  3 :: padatha pathi … direction part is good ..aishwarya potential is proved ..she is far better than any directors in tamil industry …talent proved that ..she is in top 10 according to me …indha song hype ..vachchi business panrathellam cinema voda bala padam..adhu than cinema…andha vayitherichala padam oda koodathunnu vendikitavanga neraya peru…..ozhunga shot pannala …neenga enna than manirathanam vachi song eduthu irundha kooda …andha song alavauku illannu reject than panni iruppanga rasigarunga..aana story kku jst she shooted parallely…..aana vera version eduthu TV promo vukku use panni irukkalam adha seiyama vittathu avnga thappu …danush overa aatam potathu ennamo unmai ..yaaru podala aattam ..producer nashtam padatha alavukku potta thappe illai …andha viral vithaikkararu …ballavan padam edutha potthu andha producerukku kodutha torture enakku theriyum ..beach la ukkandhu phone la polambi irukkaru…5 varusham munnadi …kamal kittaye nalla peru edutha producer avar.

  interval mela padatha …sothapithan palamm than padam sumaraaga iruppatharkku kaaranam…mayakkam enna padam odavillai …adhuvum adhe kadai mathrii irupathum oru karanam…gap kooda romba pakkam …evan 180 movie also had tha same shade ….padam flop aagarathu ellam satharana vishayam..

  we wish tha pair for the future success…

  thalaivar padam nalla paddiya valarvatharkku vaazhthukkal….:)

 24. dr suneel dr suneel says:

  மூன்று படம் ஓர் முக்கியமான முதல் முயற்சி, தனுஷ் ஓர் நடிகராக ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக வளர்ந்துவருகிறார்..தனுஷ் தலைவரின் நிழலில் வளரவேண்டாம் என்று நினைப்பதில் தவறேதும் இல்லை..ஐஸ்வர்யா இத்தனை அழுத்தமாக தன முதல் படத்தை எடுப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை..

  ஆனால்- தனுஷின் off screen persona- மிக செயற்கையாக இருக்கிறது, மிகையான தன்னடக்கம்- போன்றவை தெரிகிறது, கொஞ்சம் எரிச்சல் வந்தாலும்..அதை பொருட்படுத்தாமல் அவரை நடிகராக மட்டும் பார்த்தால் போதும் என்று தோன்றுகிறது..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates