You Are Here: Home » Featured, Superstar Movie News » திருவனந்தபுரம் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு — உதவி செய்யும் V V I P ரசிகர்!

சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிலாந்தில் பைன்வூட் ஸ்டூடியோவில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்புக்கு பின்னர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்தில் ரம்மியமான ஒரு சூழலில் சிறிய மலை மீது அமைந்திருக்கும் இந்த ஸ்டூடியோவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஸ்டூடியோவான சித்ராஞ்சலி, சுமார் 12,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.

இங்குள்ள ரெக்கார்டிங் தியேட்டர் தொழில் நுட்ப கலைஞர்கள் பல விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். பிரபல மலையாள இயக்குனர்களான அடூர் கோபாலக்ருஷ்ணன், ஷாஜி கரூன் ஆகியோர் இந்த ஸ்டூடியோவையே தங்கள் படங்களுக்கு பயன்படுத்துவர்.

‘கோச்சடையான்’ படத்தை இயக்குனர் சௌந்தர்யா MOTION CAPTURE 3D தொழில்நுட்பத்தில் படம்பிடித்து வருகிறார். இந்த ஸ்டூடியோவில் உள்ள வசதிகளும் ப்ரைவசியுமே அவர் இந்த இடத்தை தேர்வு செய்ய காரணமாகும். மாநில அமைச்சரும் நடிகருமான கணேஷ் குமார், இங்கு படப்பிட்ப்பு இடையூறின்றி நடைபெற அனைத்து உதவிகளையும் செய்து தந்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் மிகப் பெரிய ரசிகராம் அவர்.

ரஜினி உள்ளிட்ட படக் குழுவினர் தங்கியுள்ள தாஜ் விவாந்தா ஹோட்டல் வளாகத்துக்குள் செய்தியாளர்களோ, பத்திரிக்கையாளர்களோ நுழைய முடியாத அளவிற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் நேற்று முன் தினம் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. (இவை நமது டுவிட்டரில் நேற்றே வெளியிடப்பட்டுவிட்டன).

(தலைவர் இருக்குற மூணு படத்துலயுமே அவர் சந்தோஷமா சிரிக்கிறதை பார்த்தீங்களா? அது மட்டுமா அவர் கூட இருக்குற காவலர்கள் உட்பட எல்லார் முகத்துலையும் சந்தோஷத்தை பாருங்களேன். இதை தான் POSITIVE AURA ன்னு சொல்வாங்க!).

(New courtesy: http://www.sify.com/movies/rajinikanth-pinewood-to-chitranjali-news-tamil-metpAfefdhc.html)

[END]

5 Responses to “திருவனந்தபுரம் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு — உதவி செய்யும் V V I P ரசிகர்!”

 1. kochadaiyaan kochadaiyaan says:

  இதெல்லாம் ஓவரு ஆமாம் !!!!

  thalaivarukku vayasu ….30 maathiri irukku :) kannu pada poguthaiya thalaivare !!! thrishty suththi podanum ….:) nethi ulaaviya news thaan thirishtiya nenachchikanum :)

 2. chithamparam chithamparam says:

  சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 3
  http://vanavil7.blogspot.com/2012/04/3.html

  Like us on FB
  http://www.facebook.com/Vanavil7

  Follow us on Twitter
  https://twitter.com/#!/vanavil7

 3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  தங்கத் தலைவா … உங்களின் இந்த தெய்வீகமான சிரிப்பிற்கு ஈடு இணை ஏது…

  கோச்சடையானின் தரிசனத்திர்க்காக காத்திருக்கின்றோம் ..

  புகைப்படங்கள் அருமை சுந்தர் அண்ணா …

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 4. s.vasanthan s.vasanthan says:

  தலைவர் சந்தோசமா அவரோட வேலைய பார்க்கிறாரு ,அவர் எப்போதும் சந்தோசமா இருக்கணும் .

 5. Suresh R Athreyaa Suresh R Athreyaa says:

  Thanks for the update Sundar.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates