You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு - சித்ராஞ்சலியில் என்ன நடக்கிறது? ஒரு பிரத்யேக ரிப்போர்ட்!

திருவனந்தபுரத்தில் தற்போது நடைபெற்று வரும் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரத்திற்கு கோச்சடையான் டீம் வந்திறங்கி இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஸ்டுடியோவுக்குள் MOTION CAPTURE அறைக்குள் இருக்கும் டீம், காலை 10 மணிக்கு சென்றால், இரவு 9 மணிக்கு வரை வெளியே வருவதில்லை. மோஷன் கேப்ட்சருக்கு என்றே  பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள லைக்ரா சூட்களுடன் ரஜினி, மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் நடித்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து தன்னுடைய டெக்னிகல் டீமையே சௌந்தர்யா அழைத்து வந்திருப்பதாகவும், ஸ்டூடியோ டெக்னீஷியன்களை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், சித்ராஞ்சலியில் பணிபுரியும் DIGITAL ANIMATORS சுமார் 3 பேரை மட்டும் சௌந்தர்யா பயன்படுத்திக்கொண்டுள்ளார். வேறு யாரும் செட் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க கூட அவர் அனுமதிக்கவில்லை.

இந்த மூன்று பேரு கூட புகழ்பெற்ற ஹாலிவுட் படமான ‘LORD OF THE RINGS’ படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்துக்கொண்ட ரேமன் ரிவேரோவுக்கு உதவியாக அந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இது 3D-MOTION CAPTURE FILM என்பதால் மற்ற ரெகுலர் படப்பிடிப்பு போலில்லை. மிகவும் கடினமானது. அசைவுகளை ரெக்கார்ட் செய்யும்போது ஒரு சின்ன தவறு நடந்துவிட்டால் போதும், அவற்றிற்கு அனிமேஷன் செய்வது மிகவும் சிக்கலாகிவிடும். ஆகையால் நிறைய காட்சிகள் ரீ-ஷூட் செய்யப்படும்.” என்று ஒரு ஸ்டூடியோ வட்டாரத் தகவல் கூறுகிறது.

ஆயினும் முதல் ஷெட்யூலில் லண்டனில் இந்த வகை படப்பிடிப்பை நடத்தி ஓரளவு அனுபவம் பெற்றுவிட்டதால், தற்போது சுலபமாக இருக்கிறதாம். படக்குழுவினர் இன்னும் ஒரு நாள் கேரளாவில் இருப்பார்கள். அதற்க்கு பிறகு அனிமேஷன் டீம் உள்ளிட்ட டெக்னிகல் டீம் படத்தின் உருவாக்கத்தில் இரண்டு வாரங்கள் ஈடுபடுவார்கள்.

[END]

10 Responses to “‘கோச்சடையான்’ படப்பிடிப்பு - சித்ராஞ்சலியில் என்ன நடக்கிறது? ஒரு பிரத்யேக ரிப்போர்ட்!”

 1. Anonymous says:

  தலைவரை புது வடிவத்தில் பார்ப்பதற்கு பயங்கர ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்…! இந்தியாவின் முதல் பெர்பார்மன்ஸ் காப்ச்சரிங் படம்……! புது புது கதவுகளை திரை உலகிற்கு திறந்து விடும் மந்திர மனிதன் நமது தலைவர்…! கோச்சடையான் படம் மேலும் ஒரு புதிய கதவை இந்திய, ஆசிய திரை உலகிற்கு அறிமிகப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை…..!

  **

  எந்திரனில் உலகத்தை வாய்பிளக்க வைத்த சூப்பர் ஸ்டார், கோச்சடையானிலும் பிரம்மிக்க வைப்பார் என்பது உண்மை……!

  **

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 2. s.vasanthan s.vasanthan says:

  விரைவான தகவல்களுக்கு நன்றி சுந்தர் .

 3. balajiv balajiv says:

  Good news sundarji for the latest and fast updates…..

  how is ur health condition now? take care…

  cheers,

  balaji .v

 4. Sudarsan Ranadhiran- Sudarsan Ranadhiran- says:

  ////கோச்சடையான் டீம், காலை 10 மணிக்கு சென்றால், இரவு 9 மணிக்கு வரை வெளியே வருவதில்லை.///

  கடின உழைப்புடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது…

  இந்த படம் உலகளவில் வெற்றி பெரும் என நம்புறேன்…

  !m! சுதர்சன் !m!

 5. murugan Thiruvananth murugan Thiruvananth says:

  hai thalyvar thiruvananthapurathile eantha studio/hotel le irukkaru ? avarae nearil pakka mudinthal romba santhosham

 6. chithamparam chithamparam says:

  சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 3
  http://vanavil7.blogspot.com/2012/04/3.html
  Like us on FB
  http://www.facebook.com/Vanavil7
  Follow us on Twitter
  https://twitter.com/#!/vanavil7

  Thank you for your regular updates

 7. Rajinimanoj Rajinimanoj says:

  மிக விரைவாக செய்துகளை கொண்டு வந்து சேர்க்கும் சுந்தர் அண்ணாவிற்கு நன்றி!!! தலைவர் கண்டிப்பாக இந்த படத்தின் மூலமாக தமிழர்களுக்கு பெருமை தேடி தருவார் :)

 8. Mohamedamhar Mohamedamhar says:

  இந்த படம் உலகளவில்

  வெற்றி பெரும் என

  நம்புறேன்…

  !

 9. rajkumar rajkumar says:

  hi sundar …… i m rajkumar thalaivar fan from new york ……. please put the kochadaiyaan photos and upadates of kerela chiranjli studios….

 10. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  KOCHADAIYAAN the Legend will be path breaking film

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates