You Are Here: Home » Featured, Superstar Movie News » மோகன்லாலில் விஸ்மயா ஸ்டூடியோவில் ‘கோச்சடையான்’ & பிரமாதாக வந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் காரக்டர்!

திருவனந்தபுரம் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் நடைபெற்றுவரும் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் தற்போது விஸ்மயா  மேக்ஸ் ஸ்டூடியோவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான நவீன ஸ்டூடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியதாவது : “உலகப் புகழ் பெற்ற லண்டன் பைன் வூட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு முடித்தபின்பு, தற்போது திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். படத்தின் POST PRODUCTION பணிகள், விஸ்மயா மேக்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அனிமேஷன் பணிகளை இங்கு செய்ய முடியும்”.

ரஜினியும், தீபிகா படுகோனேவும் படபிடிப்பில் இருப்பதால், ஸ்டூடியோவை சுற்றிலும் விசேஷ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இடைவேளைகளில் ரஜினி எவரையும் சந்திப்பதில்லை. நேரே நவீன வசதிகளுடன் உள்ள கேரவனுக்கு போய்விடுகிறார்.

படப்பிடிப்பு காட்சிகள் லீக் செய்யப்படும் அபாயம் இருப்பதால் ஸ்டூடியோ ஊழியர்கள் உட்பட எவரும் மொபைல் போன் கொண்டு செல்ல சௌந்தர்யா அனுமதிக்கவில்லை.

விசேஷம் என்னவென்றால், படத்தில் கையாளப்பட்டுள்ள மோஷன் காப்ச்சரிங் டெக்னாலஜி மிகச் சிறப்பாக வந்துள்ளதாம். இதுவரை ப்ராசஸ் செய்யப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்தபோது, ரஜினியின் காரக்டர் பிரமாதமாக வந்துள்ளதாம்.

இந்த வார இறுதிக்குள் கோச்சடையானின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவுபெற்று விடுமாம். ஆகையால் POST PRODUCTION பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் கோச்சடையான் ரிலீஸ் ஆகவுள்ளது.

ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டாரின் ‘கோச்சடையான்’ படத்தின் படப்பிட்ப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருவதால், நிச்சயம் நகருக்கு நல்ல பப்ளிசிட்டி தான். உலகப் புகழ்பெற்ற தரமான பைன் வூட் ஸ்டூடியோவிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுவிட்ட பிறகு, இங்கு ஏன் மீண்டும் படப்பிடிப்பு  நடத்தப்படுகிறது என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் பதிலளித்துள்ளார்.

“முன்பு லண்டன் சென்றபோது ‘கோச்சடையான்’ குழுவில் உள்ள இரண்டு நடிகர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அவர்கள் வரமுடியவில்லை. ஆகையால் அவர்கள் இடம்பெற வேண்டிய காட்சிகளை தவிர்த்து மற்ற காட்சிகளை ஷூட் செய்தோம். தவிர சில நட்ச்சதிரங்களின் தேதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே தான் இங்கு திருவனனந்தபுரத்தில் மறுபடியும் ஷூட் செய்துவருகிறோம். தவிர இங்கு அனிமேஷன் படத்துக்கு தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானளவு உள்ளன” என்றார். எந்த நடிகர்களுக்கு விசா கிடைக்கவில்லை என்பதை கூற முரளி மனோகர் மறுத்துவிட்டார். ஆனால், திருவனந்தபுரம் படப்பிடிப்பு தளத்தில் ரமேஷ் பாபு மற்றும் ராஜூ சுந்தரம் ஆகியோரை காண முடிந்தது. எனவே மேற்படி இரு நடிகர்கள் இவர்களாக இருக்கலாம் என்று ஐயம் ஏற்பட்டுள்ளது.

முற்றிலும் ஒரு புதிய முறையில் வித்தியாசமான சூழலில் படப்பிடிப்பு நடைபெற்றதால் படப்பிடிப்பு மிகவும் கடினமாக  இருந்ததாக தெரிகிறது. மேக்கப்போ, காஸ்ட்யூமோ, செட்டிங்கோ இவை எதுவுமின்றி, நடிகர்கள் அவர்களாகவே பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடிக்கவேண்டும். இது நிச்சயம் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் தான். (மேற்படி மேக்கப், காஸ்ட்யூம் இவையெல்லாம் கம்ப்யூட்டரே வடிவமைத்துவிடும்.). ஆனால், கோச்சடையான் படத்தில் நடிக்கும் நட்ச்சத்திரங்கள் அனைவரும் சவாலை ஏற்று மிகவும் நன்றாக நடித்து கொடுத்துள்ளார்கள்.

ரஜினியை பொறுத்தவரை அவர் பக்கா PROFESSIONAL. நீட்டாக அவர் பங்கை முடித்து தந்திருக்கிறார். அவர் சார்ந்த பகுதிகள் மிகவும் நன்றாக வந்துள்ளது. 3D உருவாக்கத்தில் அவரது காரக்டர் மிகவும் நன்றாக வந்திருப்பதாக முரளி கூறுகிறார்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால், படம் செப்டம்பர் ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. “நாங்கள் ஜனவரி மாதம் முதலே, படத்தின் POST PRODUCTION பணிகளை செய்துவருகிறோம். படத்தின் சில பாகங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது.

“படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனித் தனியே உருவாக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் மட்டும் டப் செய்யப்படுகிறது.” என்ற தகவலையும் முரளி வெளியிட்டார்.

(News Courtesy : Sify.com, Times of India)

Rajinikanth in Mohanlal’s studio!

The unit of Kochadaiyaan who were shooting at the Chitranjali studio in Thiruvananthapuram has shifted to Malayalam superstar Mohanlal’s Vismaya Max studio.

Media One’s Murali Manohar the producer of the film told a newspaper: “After shooting in the high end Pinewood Studios we are now shooting in Trivandrum and doing post production work at Vismaya Max, which has got world class animation required to complete the work.”

Rajinikanth and Deepika Padukone are in Thiruvananthapuram and special security personals are deployed outside the studio.  In between shots, the superstar heads straight to the state-of-the-art caravan parked outside the studio and is yet to meet anyone from the media.

The staff in the studio is not allowed to take their mobile phones inside, as Soundarya fears that someone will leak footage of the shoot.

The buzz is that 3D motion capture technique being used in the film has come out very well. It seems Rajinikanth’s character looks stunning in the processed footage.

The entire shoot of Kochadaiyaan will be over by the weekend and post-production work is going on in full swing. The film made in Tamil will have a Hindi, Telugu and an English version. It will release in September.

Rajinikanth’s character looks stunning

With work on Rajinikanth’s most anticipated film taking place in Trivandrum, Kerala’s capital city is sure to get a publicity boost. But co-producer of Kochadaiyaan, Dr Murali Manohar, reveals the real reason why the team chose to work here after canning most of the film at one of London’s high-end studios.

“Two of our actors could not get the required visa permits to make it to London. We also had to make room for scenes which couldn’t be shot due to date issues of certain actors,” he says, adding that the Trivandrum studio provided the world-class facilities required to finish the work. While the producer did not mention who the two actors in question were, sources contemplate it could be actors Ramesh Babu and Raju Sundaram, who were present at the shoot in Trivandrum.

“The shoot has been hectic and strenuous as it is set in a different and difficult environment. The actors had to perform without sets, make-up or costume, but they have all stepped up to the task. Rajinikanth has been a thorough professional and has taken to the job extremely well. Being 3D, the results are amazingly realistic and Rajinikanth’s character looks stunning in the processed footage,” reveals Murali.

With the filming done, the team is working towards a September release. “We are simultaneously working with the post-production aspects since January and have finished few sections of the film,” he says. Murali also points out that the flick will be made in Tamil, Telugu and Hindi, each being a different version, and will also be dubbed in English.

[END]

10 Responses to “மோகன்லாலில் விஸ்மயா ஸ்டூடியோவில் ‘கோச்சடையான்’ & பிரமாதாக வந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் காரக்டர்!”

 1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Ready for new experience. Thanks na for instant hot updates.

 2. s.vasanthan s.vasanthan says:

  சூப்பர் ,,,,,,,,,

 3. Naveen Ra Na Veen Naveen Ra Na Veen says:

  Superrrr waiting for the day :) :)

 4. kumaran kumaran says:

  எது எப்படி இருந்தாலும் superstar மீண்டும் youngsters மத்தியில் ஹாட் ஹீரோ ஆக திரும்ப வேண்டும்

 5. vasi.rajni vasi.rajni says:

  தமிழ் சினிமா உலகை மீண்டும் திரும்பிபார்க்க வைக்க போகிறது கோச்சடையான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படத்தின் படபிடிப்பு இவ்வளவு விரைவாக முடியும் எட்று ரசிகர்கள் யாரும் நினைத்தே பார்க்க வில்லை.

  .

  கோச்சடையான் படத்தின் output நிச்சயம் normal animation மாதிரி இருக்காது என்பதற்கு இந்த வீடியோ உதரணமாக இருக்கும்

  .
  http://www.youtube.com/watch?v=1wK1Ixr-UmM

  .

  rajni will rule tamil nadu

 6. Anonymous says:

  என்ன இந்த வாரமே ஷூட்டிங் முடிந்துவிடுமா :) :) வாவ் அப்போ சீக்கிரம் தலைவர் தரிசனம் தான் !!!

 7. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  காத்திருக்கின்றோம்… காந்தக் கண்ணா…..

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 8. chithamparam chithamparam says:

  Thank you for your regular updates

  தலைவா சீக்கிரம் வாங்க

 9. Mohamedamhar Mohamedamhar says:

  தலைவா சீக்கிரம் வாங்க…thalaivar thalaivarthan..

 10. kochadaiyaan kochadaiyaan says:

  moththamaga 25 naal shooting nadandhu irukumo !!!

  oru trailer release panna …supperraaaa irukkum….eppadi irukkumngara idea kedaikkum !!!padathukku sambandha pattatho …sambandha padathaatho …eduva irundhaalum nalla irukkum..:) jst hw the movie looks …:)

  good luck to thalaivar !!!

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates