









You Are Here: Home » Featured, Superstar Movie News » ‘ராணா’வின் முன்னோட்டம் தான் ‘கோச்சடையான்’ — கே.எஸ்.ரவிக்குமார் தகவல்!
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
முன்னதாக சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ராணா’ மீண்டும் துவக்கப்படுமா என்பது குறித்தும் ரசிகர்கள் தேர்ந்துகொள்ள ஆவலாக இருக்கின்றனர்.
இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒரு ஆங்கில வெப்சைட் சார்பாக கேட்டபோது அவர் கூறியதாவது : ‘கோச்சடையான்’ அதி வேகமாக வளர்ந்து வருகிறது. சௌந்தர்யா படத்தை திறம்பட கையாண்டு வருகிறார். சொல்லப்போனால் இது ராணாவுக்கு ஒரு வகையில் முன்னோட்டம் மாதிரி. ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ள ராணாவுக்கு இது ஒரு வகையில் முன்னோட்டம் போன்று எடுத்துக்கொள்ளலாம். ராணா நிச்சயம் கைவிடப்படவில்லை. அது நிச்சயம் துவங்கும்!” என்று கூறுகிறார்.
கோச்சடையான் ஒரு வகையில் ராணாவுக்கு முன்னோட்டம் என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறுவதில் அர்த்தம் உள்ளது. உடல்நலம் சரியாகி பின்பு சூப்பர் ஸ்டார் நடிக்கும்போது அவர் தன் உடலை அதிகம் ஸ்ட்ரெயின் செய்யக்கூடாது. அவரது உடல் ஆக்க்ஷன் காட்சிகள் மற்றும் காமிராவின் லைட்டிங்கிற்கு சிறிது சிறிதாக பழக்கப்படவேண்டும். அதற்கு ஏற்ற படம் தான் ‘கோச்சடையான்’. எனவே இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அதிக ஸ்ட்ரெயின் எடுத்துக்கொள்ளாமல் மிதமாக நடித்திருக்கிறார். ஒரு வகையில் இது ராணாவுக்கு பைலட் வண்டி போல.
‘கோச்சடையான்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று, இறுதிகட்டத்தை எட்டிவிட்டதையடுத்து தாம் அடுத்து நடிக்க வேண்டிய படம் குறித்து சூப்பர் ஸ்டார் விரைவில் முடிவு செய்வார் என்று நம்பலாம்.
[END]
கோச்சடையன் வெற்றி ராணா எடுக்க தூண்டுகோலாக இருக்கும்
நன்றி
ஆம், நேற்று நடன இயக்குநர் ரகுராம் அவர்களது நிகழ்சியில் கலந்து கொண்ட திரு. K.S. Ravikumar கோச்சடையான், ராணாவின் முதல் பகுதி என்பதை உறுதி்படுத்தினார். இந்நிகழ்சிக்கு நமது SUPER STAR அவர்கள் திரு. KB அவர்கள் மூலமாக வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.
intha matter englishik translet pannuga sir please
——————————————-
http://www.sify.com/movies/kochadaiyaan-is-a-preq...
- Sundar