You Are Here: Home » Fans' Corner, Featured » “சூப்பர் ஸ்டாரை பார்க்கவேண்டும்” — கனவு கண்ட ரசிகர்கள்; தேடி வந்த வாய்ப்பு!

சூப்பர் ஸ்டாரின் லட்சக் கணக்கான ரசிகர்களைப் போல உங்களுக்கு அவரை பார்க்கவேண்டும், பேசவேண்டும், ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை உள்ளது. ஆனால் நீங்கள் இருப்பதோ வேறு ஒரு மாநிலத்தில். சென்னையில் இருப்பவர்களுக்கே அரிதாகிவிட்ட இந்த வாய்ப்பு  நமக்கு கிடைக்குமா? நடக்குமா ? இருந்தாலும் “அது ஒரு நாள் நடக்கும்!” என்று நம்புகிறீர்கள். நீங்கள் நம்பியதைப் போலவே உங்களை அந்த வாய்ப்பு தேடி நீங்கள் இருக்கும் இடத்திற்கே வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எப்படி இருக்கும் உங்களுக்கு?

வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதில்லையா? சூப்பர் ஸ்டாரை அது போல நேரில் கண்டு ரசித்த இரு ரசிகர்களின் பரவச அனுபவம் இது. நண்பர் நோபல் மூலமாக இவர்களை பற்றிய ஒரு ஹிண்ட் கிடைத்தது எனக்கு. அது போதாதா நமக்கு… பாலைவனமா இருந்தாலும் கால்வாயை வெட்டி கப்பல் விட்டுடமாட்டோம்…??

தொடர் முயற்சியில், மேற்படி ரசிகர்களை தேடிப் பிடித்துவிட்டேன். இதோ நமது தளத்திற்காக தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்கள் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

நம்பிக்கையும், நல்லெண்ணமும் இருந்தால் வாய்ப்புகளை நீங்கள் தேடி போகவேண்டியதில்லை. அது உங்களை தேடி வரும் என்பதற்கு இந்த இருவரும் உதாரணம்!

THOUGHTS BECOME THINGS & WHAT YOU THINK YOU BECOME!

என் பெயர் அபிலாஷ். நான் திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க்கில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் தீவிர ரசிகன் நான். ரசிகன் என்று சொல்வதைவிட அவரை நேசிக்கும் ஒரு உள்ளம் என்று சொல்லலாம்.

உலகெங்கிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் போல அவரை பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்கிற ஆசை உள்ளவன். ஆனால் அதற்க்கனா வழி எனக்கு தெரியாது. இருப்பினும் என்றாவது ஒரு நாள் அவரை பார்ப்பேன், பேசுவேன் என்று திடமாக நம்பினேன். சொல்லப் போனால் அதற்காக அவ்வப்போது பிரார்த்தனை செய்வதுண்டு. அவ்வளவு தான்.

ஆனால், என்னை தேடி நான் இருக்கும் ஊரிலேயே இப்படி ஒரு வாய்ப்பு வந்தது இறைவன் அருள் தான்.

‘கோச்சடையான்’ படப்பிடிப்புக்காக ரஜினி திருவனனந்தபுரம் வந்திருப்பதாகவும், தாஜ் விவந்தா ஓட்டலில் தங்கியிருபப்தாகவும் கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷப்பட்டேன். அப்போதும் கூட அவரை பார்க்கப்போகிறேன், புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. என் நண்பன் மாதவன், தாஜ் ஓட்டலில் பூ வேலைப்பாடுகள் (Flower Decorations) செய்து தருபவர். அவர் எனக்கு ஃபோன் செய்து, “ரஜினி வந்திருக்கிறார். பார்க்கலாம் வருகிறாயா?” என்று அழைத்தார். எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. சரி வருகிறேன் என்று கூறிவிட்டு, 19 ஆம் தேதி முன்னிரவு தாஜ் ஓட்டலுக்கு சென்றேன்.

அங்கு நாங்கள் ரஜினி அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம். அவரை பார்க்கவேண்டும்… அது போதும். எக்காரணம் கொண்டும் அவரது ப்ரைவசியை நாம் டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கீழே தரைத் தளத்தில் காத்திருந்த நொடிகளில், திடீரென்று மின்னல் வெட்டியது போல சுறுசுறுப்புடன் ரஜினி வேகமாக நடந்து வந்தார். என்ன சொல்வது… ஒவ்வொரு இந்தியனும் பார்க்கத் துடிக்கும் ஒரு மாபெரும் நடிகர், சர்வசாதரனாமாக எளிமையாக எந்த வித துணையுமின்றி நடந்துவருவதை பார்த்து ஒரு கணம் சிலிர்த்துப்போனோம். அவரிடம் பேச நினைத்தது எதுவும் எங்களால் படபடப்பில் பேசமுடியவில்லை. “எப்படியிருக்கீங்க சார்?”  என்றோம். பதிலுக்கு சிரித்துக்கொண்டே, “ஃபைன்!” என்றார். பதிலுக்கு “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்க அவர் மறக்கவில்லை. அவர் அங்கு நின்றது ஒரு கணம் தான். ஆனால் அதற்குள் அந்த இடத்தில் கடும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.  உடனே அங்கிருந்த ஒருவர், “சாரிடம் கேட்டு உடனே ஃபோட்டோ எடுப்பதாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். கூட்டம் கூடிவிடப்போகிறது என்றார்.” சரி, இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதால் “சார்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் உங்களுடன் புகைப்பம் எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றேன். “Why not… Come on… come on” என்று எங்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார்.

மேற்கொண்டு சில வார்த்தைகள் பேச நினைத்தோம். அதற்குள் கூட்டம் கூடிவிடவே, அவர் உடனே சில்லா வேண்டியதாயிற்று. அவருடன் நாங்கள் செலவிட்ட அந்த நேரம் சுமார் 2 நிமிடங்கள் இருக்கும். ஆனால், அந்த 2 நிமிடத்தில் என்ன நடந்தது என்றே நாங்கள் மறந்துவிட்டோம். அதாவது எங்களை நாங்கள் மறந்துவிட்டோம். நீங்கள் கேட்பதால் கஷ்டப்பட்டு நினைவுப்படுத்தி சொல்கிறேன்.

நாங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்றால் மிகையாகாது. இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதன் மூலம் இறைவன் எங்களை ஆசீர்வதித்தான் என்று தான் கருதுகிறோம். நாங்கள் அந்தளவு அவரை நேசிக்கிறோம். அவர் மிகப் பெரிய மனிதர். அவருக்கு எங்கள் நன்றி!!

——————————————————————-
Also check :
சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டுமா?
http://onlysuperstar.tamilmovieposter.com/?p=14277
——————————————————————-

Nurture good thoughts. Rest will follow you!

Do you have a dream of meeting our Superstar ? Do you have the desire to take a snap with him? Even the fans in Chennai do not get the chance to meet our Superstar, but is it possible for a fan in a different region or state to meet him ? Have you ever thought that way and still have the confidence that you will meet him some day ? If you get such an opportunity  at your door steps, how would you just feel ? Unable to explain it in words ? Isn’t it??

Same way there are two fans who got that opportunity and share their experiences with us. I got a hint from one of my friend about these fans who met Superstar @ Trivandrum. And that’s enough for me!

Thoughts become things & What you think you become!

“I am Abhilash. I work in the Accounts division in a Techno Park in Thiruvananthapuram. I am a die-hard fan of Superstar Rajni. More than a fan, I should say I am his well-wisher and love Rajni a lot. As every fan worldwide, I too had a desire to meet Rajni sir and I always kept dreaming about it and wished it happened some day. But, I did not know whom to contact or what to do in regards to this. But still felt some day I would meet him in person. That opportunity knocked my door now, I never expected that Thalaivar would be here for a shoot and I would be able to meet him. I heard that Thalaivar would be here for Kochadaiyaan Shooting in Thiruvananthapuram for few days and I really felt happy about it. Even then I didn’t know or didn’t expect that I would meet him.

My friend Madhavan works as a Floral Decorator in Taj Vivanta. He called me up one day and said Superstar has come Trivandrum and staying in Taj and will you come here, let’s meet him. I didn’t even give a second thought and I rushed there immediately. It was night time on 19th of April. I just wanted to see him and felt we should not disturb his privacy by any means. So we waited in the lobby.

Just as a lightning strikes, our Superstar came in his usual speedy walk. Every Indian wants to meet him and there he is so simple and stylish in his own way. Immediately I asked him “How are you Sir ?”. He said “Fine” and he did not forget to ask “How we were doing ?” too. He just stood for a minute there, but immediately there was some crowd which was about to gather from nowhere. Someone there suggested us “If you want to take a photo with him, take it immediately or crowd would gather and it would create havoc in the place.” Immediately I asked Rajni sir “Sir, If you don’t mind can we take a photograph with you ?”… Sir did not hesitate and immediately said “Sure, Why not come on.. come on…” We wanted to talk a lot with him. But we were speechless, the moment we saw him infront. I am recollecting this memories because you asked me, we are still about to come out of that sweet shock :) . We are really lucky to have met him and we thank god for giving us such an opportunity. Rajni sir is truly a legend and a great heart. Thanks to him as well.

Translation by : Praveen
[END]

கிறோம்

14 Responses to ““சூப்பர் ஸ்டாரை பார்க்கவேண்டும்” — கனவு கண்ட ரசிகர்கள்; தேடி வந்த வாய்ப்பு!”

 1. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Intha chance seekiram kidakanum

 2. RAJA RAJA says:

  CONGRATS TO THAT FRIENDS

 3. Abhy Abhy says:

  hai,

  We got a chance to take a snap with simple man in the world.

  I love you sir. I think this is my life time achievement. God blesses me and my friend. That's why we go chance.

  Regards,

  Abilash. M.S.

 4. chithamparam chithamparam says:

  சூப்பர் ஸ்டாரை நாம் பார்க்க வேண்டும் என்று நினைப்பதை விட சூப்பர் ஸ்டார் எம்மைப் பார்க்க ஆசைப்படும்படியாக முயன்றால் அதற்குரிய வழியில் உழைத்தால் நிச்சயம் நிறைவேறும்

 5. R O S H A N R O S H A N says:

  ரொம்ப சந்தோசமா இருக்கு…….இதை படிக்கும் போதே சிலிர்க்குது……..அந்த 2 நிமிடங்களை உங்களோட வார்த்தைகளில் எங்களை அனுபவிக்க வைத்து விட்டீர்கள்……….நன்றி ஜி…….இந்த மாதிரி தலைவர் சம்பந்தமான விஷயங்களை படிக்கும் பொது ரொம்ப பாசிடிவ் ஆக பீல் பண்றேன்………..

 6. Anoop Anoop says:

  Both are sooo lucky to meet him & even more lucky to get a snap with him………am unlucky and feeling so sad that i couldn't meet super star even though he was staying (in Vivanta by Taj) so close to me in Trivandrum…..

 7. Anonymous says:

  சூப்பர் சூப்பர் சூப்பர்!!!

  ஒரு பக்கம் பொறாமையாகவும் மறு பக்கம் சந்தோஷமாகவும் உள்ளது :) நானும் அவர்களை போல ஒரு ரசிகன் என்பதால் என்னால் அவர் சந்தோஷத்தையும் படபடப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது!!!

  கண்டிப்பாக எல்லோருக்கும் அந்த சான்ஸ் கிடைக்கும்!!! நம்புவோம் நம்பிக்கை வைப்போம்!!!

 8. Mohamedamhar Mohamedamhar says:

  Suntar ji…super starukku lattcchakkanakkana fans irukkiratha solliyirukkiratha..plz inimel athumathiri poda vendam..rajinikku kodikkanakil fans irukkiranga..neengale appadi podathinga..ungamela niraya mariyatha irukku..rajinikku kittatthatta ulaham muluvathum 100000 rasihar mantram irukku…athula indiavil 130 kodi makkal irukkanga…athula kittathatta 100 kodi makkal rajini theevira fan athu mattumalla japan,malesiya,srilanka,singapore,australia,usa,uk untpada innum ettanayo naaduhalil..50 kodikkumel rasiharhal irukkanga…totala 150 kodikkumel irukkanga it's true..ithu unmaya illayandu oru new update neenga podanum..inimel kodikkumel kodi fansa vacchirukkira thalaivarai ulaha super star,world super star entru only super star.com thalatthil podungal athu udane ulaham muluvathum reacchahividum..it's kindly my reguest..plz plz..suntar you are a one tha hero in this time..oru naal ulahame ungala patthi pesum en entru theriyuma..oru naal illa oru naal neenga super staraye phetti eduppeenga sure it's true..intha wapla ungada ulaippu niraya irukku athukku palan coming soon..

 9. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  சூப்பர் சூப்பர் சூப்பர்….

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 10. m nagendra rao m nagendra rao says:

  சூப்பர் !

 11. s.vasanthan s.vasanthan says:

  அதிஸ்ரக்காரப்பசங்க ,,, நானும் தலைவருடன் போட்டோ எடுத்து ஹாலில் பெரிசா போஸ்டர் போட்டு ஒட்டணும்,இம் நமக்கு எப்ப அதிஸ்ரம் அடிக்கிறதோ ,

 12. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

  லக் நண்பா லக்… ஜமாயுங்க .. தூள் ..

 13. நான் 15 வருசமா கேரளாவில் இருக்கேன் இங்க தலைவர் படம் ரிலீஸ் ஆனா மம்மூட்டி மோகன்லால் படம் எல்லாம் தள்ளி நிக்கும். கேரளாவிலும் சூப்பர் ஸ்டார் தலைவர் தான்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates