You Are Here: Home » Superstar Movie News » “சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது பரவசமாக அதே சமயம் பதட்டமாக இருந்தது!” – நடிகர் ஆதி சிலிர்ப்பு!

ரவானுக்கு பிறகு ஆதி ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்த படத்திலிருந்து சற்று பிரேக் எடுத்து, ‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் வந்திருக்கிறார் ஆதி.

அவர் லண்டன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டியது. ஆனால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும் ஆதி கவலைப்படவில்லை. சூப்பர் ஸ்டார் முன்பாக, இங்கே தாய்நாட்டிலேயே படத்தின் முதல் ஷாட் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி பெருமைப் படுகிறார்.

“ரஜினி சாரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அத்துனை எளிமை. அவருக்கான காட்சிகள் எதுவும் படம்பிடிக்கவில்லைஎன்றாலும், எங்களை உற்சாகப்படுத்த அவர் தளத்திற்கு வநதிருந்தார். மேலும் படத்தில் அவரை பார்த்து அவரது தோள்களில் கையை போட்டு நான் பேசவேண்டிய காட்சியை படம்பிடிக்கவேண்டியிருந்ததால் அதற்கு உண்மையான ஒரு உணர்வை எனக்கு கொடுக்க வேண்டி, அவர் வநதிருந்தார்.

அவர் முன்னாள் நடிப்பது பரவசமாகவும் அதே சமயம் பதட்டமாகவும் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் ஆதி. அவரை ஆசுவாசப்படுத்தவேண்டி, அவருக்கு கைகள் கொடுத்து நலம் விசாரித்து ரஜினி அவரை சகஜப்படுத்தியதாக தெரிகிறது. தவிர அவரது தந்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் இயக்குனர் ரவி ராஜா பின்செட்டி பற்றி சூப்பர் ஸ்டார் விசாரித்ததாக தெரிகிறது.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை அவரிடம் ஆசி பெறவேண்டி பயன்படுத்தினேன் என்று கூறும் ஆதி சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதை திரில்லிங்காக உணர்கிறாராம்.

வாழ்த்துக்கள் ஆதி!

[Courtesy : http://www.sify.com/movies/aadhi-joins-kochadaiyaan-unit-in-kerala-news-tamil-mexoJoiidij.html]

END

9 Responses to ““சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது பரவசமாக அதே சமயம் பதட்டமாக இருந்தது!” – நடிகர் ஆதி சிலிர்ப்பு!”

  1. fan fan says:

    Hi Friends,

    If the news is true expect official announcement from AVM about Sivaji the boss in 3D…kaekum pothae summa athiruthu illae…

  2. Anonymous says:

    ஆதிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  3. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    ஆதி .. இனி எல்லாமே உங்களுக்கு அமர்க்களம் தான் .. கலக்குங்க… தலைவரோட நடிக்கின்றீர்களே ..!!!

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  4. PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

    ரவிராஜா பினிசெட்டி பெத்தராயுடு இயக்குனர்.

  5. s.vasanthan s.vasanthan says:

    தலைவர் படத்தில ஒரு சின்ன சீன்ல வந்தாலும் ,உங்களுக்கு ஒரு வெள்ளிவிழா படம் கொடுக்கிற பப்ளிசிட்டிய விட, பலமடங்கு பப்ளிசிட்டி கிடைக்கும் .வாழ்த்துக்கள் .

  6. Anonymous says:

    நண்பர் சுந்தர் அவர்களே:

    தலைவரைக் கேவலப்படுத்தும் வகையில் நக்கீரன் பத்திரிகையில் ஒரு கவர் ஸ்டோரி வந்திருக்கிறது. இது ரஜினி ரசிகர்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையும் உள்ளது. ரஜினி ரசிகர்கள் சார்பாக நீங்கள் அந்த ஆசிரியருக்கு ஒரு பதில் கட்டுரை எழுதினால் நலம்.

    -=== மிஸ்டர் பாவலன ===-

    ———————————————————-
    நேத்து சூரியன் மேல சரியான மழை பெஞ்சது அப்படின்னு அவங்க எழுதுவாங்க. அதுக்கு நான் மறுப்பு கடிதம் எழுதணுமா? விடுங்க பாஸ். இதுக்கெல்லாம் ரீயாக்ட் பண்றதே தப்பு!
    - சுந்தர்

  7. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

    இருக்காத பின்னே ..

  8. dr suneel dr suneel says:

    ஆதி , நல்ல நடிகர், நல்ல எதிர்காலம் உண்டு என்று எண்ணுகிறேன்..வாழ்த்துக்கள்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates