You Are Here: Home » Superstar Movie News » தலைவருடன் ஒரு புகைப்படம் – தயங்கிய ஆதி; குறிப்பறிந்து அசத்திய சூப்பர் ஸ்டார் !

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கவேண்டும் - அட்லீஸ்ட் ஒரே ஒரு ஃபிரேமிலாவது என்பது தான் தான் பெரும்பாலான இளம் நடிகர்களின் கனவு. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களில் ஒருவர் தான் ஆதி. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கும் ஆதி, சூப்பர் ஸ்டாருடன் தான் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

“படத்தில் உங்கள் ரோல் என்ன?”

ஆதி : அதை நான் சொல்லக்கூடாது. அது பற்றி இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.

“மோஷன் கேப்சர் படத்தில் நடிப்பது எப்படி இருந்தது ?”

ஆதி : ஆர்வமாகவும், அதே சமயம் சவாலாகவும் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். நமது பார்வையாலர்களுல்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொண்டு வரும் சௌந்தர்யாவுக்கு முதலில் பாராட்டுக்கள். இந்த மோஷன் கேப்சர் படத்தில் நடிப்பதில் கடினமான விஷயம் என்னவென்றால், நம் எதிரே நிஜத்தில் இல்லாத விஷயங்களை கற்பனை செய்து அதற்கு ஏற்றபடி நடிக்கவேண்டும் என்பது தான். அதே சமயம், நம் உடல் மீது பொருத்தப்பட்டிருக்கும் வயர்களும், இமேஜ் கேப்சர் காமிராக்களும் அசௌகரியமாக இருக்கும். சுலபத்தில் நகரமுடியாது. ஆனால் அதையெல்லாம் சகித்துக்கொண்டு நடிக்கவேண்டும்.

சூப்பர் ஸ்டாரை சந்தித்தது பற்றி சொல்லுங்களேன்?

ஆதி : படப்பிடிப்பு முழுதும் அவர் மிகவும் யதாரத்தமாகவும், எங்களை உற்சாகப்படுத்தியும் நடந்துகொண்டார். படப்பிடிப்பின் கடைசி நாள் அவருக்கு விடைகொடுத்து அனுப்ப, அவரது வேனுக்கு சென்றிருந்தேன். அவருடன் புகைப்படமெடுக்கவும் மிகவும் ஆரவமாக இருந்தேன். ஆனால், அவரிடம் அதே கேட்க்க எனக்கு தயக்கமாக இருந்தது. சில நிமிடங்கள் பேசிவிட்டு அது பற்றி எதுவும் கேட்காமலே கனத்த இதயத்துடன் கிளம்பினேன். ஆனால் என்ன ஆச்சரியம், என் உள்ளத்தில் இருப்பதை புரிந்துகொண்ட ரஜினி சார், என்னை அழைத்து, “வாங்க ஒரு ஃபோட்டோ எடுத்ததுக்குவோம்” என்றார் அன்புடன். என் வாழ்வில் மிகவும் இனிமையான தருணங்கள் அவை தான். ‘கோச்சடையானில் நான் நடித்ததற்கு பலனாக இந்த ஒரு ஃபோட்டோவோ எனக்கு போதுமானது.

வாழ்த்துக்கள் ஆதி!

(Courtesy : http://www.sify.com/movies/aadhi-s-photo-finish-with-the-superstar-news-tamil-mezvfpaecff.html)

6 Responses to “தலைவருடன் ஒரு புகைப்படம் – தயங்கிய ஆதி; குறிப்பறிந்து அசத்திய சூப்பர் ஸ்டார் !”

  1. Rajinidasan @ Jayaku Rajinidasan @ Jayaku says:

    வாழ்த்துக்கள் ஆதி. நிச்சயம் நானும் ஒரு நாள் தலைவரை பார்ப்பேன் அவருடன் புகைப்படம் எடுப்பேன்.

  2. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    வாழ்த்துக்கள் ஆதி….. கலக்குங்க …..

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

  3. harisivaji harisivaji says:

    வாழ்த்துக்கள் ஆதி. நிச்சயம் நானும் ஒரு நாள் தலைவரை பார்ப்பேன் அவருடன் புகைப்படம் எடுப்பேன்.

  4. B. Kannan B. Kannan says:

    Congrates ஆதி.. Waiting for our's turn..

  5. sriram sriram says:

    தலைவா! சந்திரமுகி - மனசுல நனைச்சாலும் புரியும்

  6. muthu muthu says:

    வாழ்த்துக்கள்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates Lingual Support by India Fascinates