You Are Here: Home » Featured, Rajini Lead » ரஜினி அழுதாரா? பரபரப்பை கிளப்பியிருக்கும் செய்தியின் பின்னணி என்ன?

ஸ்தூரி ராஜா தயாரிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்த ’3‘ படம் நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக அதன் தெலுங்கு பதிப்பை வாங்கி வெளியிட்டுள்ள ‘நாட்டி’ குமார் என்பவர் பரபரப்பாக புகார் அளித்திருந்தார். மேலும், “சூப்பர் ஸ்டாரின் குடும்பம் தால் என்பதால் படத்தை நான் நல்ல தொகைக்கும் வாங்கியிருந்தேன்” என்று ஒரு குண்டை வீசிய நாட்டி குமார், ரஜினி இதில் தலையிட்டு தமக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருந்தார். (Why this Kolaveri Naughty Kumar?)

இது போதாதா நமது பிரகஸ்பதிகளுக்கு? மினிமம் கியாரண்ட்டி முறையில் படத்தை இங்கு வாங்கியவர்கள் கூட “நஷ்டம் நஷ்டம்” என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். (மினிமம் கியாரண்ட்டி முறையில் ஒரு படத்தை வாங்கி வெளியிடும்போது அதன் நஷ்டத்தை ஈடு செய்யும்படி சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களோ திரையரங்கங்களோ உரிமை கோர முடியாது.)

இது பற்றி கட்டுரை வெளியிட்ட வாரமிருமுறை இதழ் ஒன்று, திருப்பூர் சுப்பிரமணியம் என்ற சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் நெருக்கமான விநியோகஸ்தர் ஒருத்தரோட பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் அவர் கூறியிருந்ததாவது : ‘குசேலன்’ படத்தின் சிக்கலின் போது என்னிடம் பேசிய ரஜினி, “பாபா படத்தை நான் தயாரித்தேன். எனவே நஷ்டம் என்று வந்தபோது பணத்தை திருப்பிக் கொடுத்தேன். ஆனால், ‘குசேலன்’ படத்தில் நான் நடிக்க மட்டுமே செய்தேன். அதிலும் என்னை நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்று சிலர் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று கூறி கண்கலங்கியதாக கூறியிருந்தார். இதோட அர்த்தம் ரஜினி அழுதார் என்பதல்ல. மிகவும் வருத்தமுடன் இருக்கும் ஒரு நிலையை தான் கண்கலங்கினார் என்று குறிப்பிடுவோம். இது தான் நடந்தது. ஓகே?

இதையொட்டி, நக்கீரன் தனது சமீபத்திய இதழில் வெளியிட்டிருக்கும் கட்டுரை ஒன்றில், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் சிலரிடம் பேசி, ‘குசேலன்’ படத்தின்போது நடந்தது என்ன என்பது குறித்தும் தற்போது ’3′ படம் தொடர்பாக நடைபெறுவது என்ன என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளது.

இதில், குசேலன் பிரச்னையின்போது மனமுடைந்து ரஜினி கலங்கினார் என்று கூறிய திருப்பூர் சுப்பிரமணியத்தின் கருத்து குறித்து, ‘குசேலன்’ படத்தின் போது பிரச்னை செய்த திரையரங்கு உரிமையாளர்கள் சிலரிடம், (வேற யாரு? கோயம்பேடு ரோகினி தியேட்டர் க்ரூப் தான்!) ரஜினி கண்கலங்கினார் என்று இப்படி ஒரு கருத்தை திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறாரே, உண்மையா என்று கேட்டுள்ளது. அதற்கு அவர்கள் அப்போது நடைபெற்ற சில நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்கமளித்துள்ளனர். இது தாங்க நடந்தது.

இந்த செய்தி இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்த காரணம், நக்கீரன் வெளியிட்ட வால்போஸ்டர் தான். வேறொன்றுமில்லை. அப்படி என்ன தாங்க இருந்திச்சு அந்த போஸ்டர்ல? “மிரட்டலுக்கு பயந்து ரஜினி அழுதாரா?” என்ற தலைப்பு தான். (Why this Kolaveri Nakkeeran?)

பரபரப்புக்காக பத்திரிக்கைகள் இப்படி தலைப்பு கொடுப்பது இன்று நேற்றல்ல… பல வருஷமா நடந்துகிட்டு வருது. அதுவும் ரஜினி விஷயத்துல கேட்கவே வேண்டாம். So, no worries!

[END]

23 Responses to “ரஜினி அழுதாரா? பரபரப்பை கிளப்பியிருக்கும் செய்தியின் பின்னணி என்ன?”

 1. Manikandan Bose Manikandan Bose says:

  "மிரட்டலுக்கு பயந்து ரஜினி அழுதாரா?”

  — இதை கேட்டா குழந்தை கூட சிரிக்கும்.

 2. kumaran kumaran says:

  தலைவருக்கு இதல்லாம் ஜுஜுபி மேட்டர். அவரோட கவலையெல்லாம் இந்திய மற்றும் தமிழக மக்களுக்காகதான் அதற்காக வேண்டுமானால் கண் கலங்குவார்.

 3. Anonymous says:

  மிக தெள்ள தெளிவாக புரியவைத்த சுந்தர் அண்ணாவிற்கு என் நன்றிகள் பல!! நேற்று அந்த நக்கீரன் போஸ்டரை பார்த்தவுடன் கோபம் வந்தது இப்போது சிரிப்பு தான் வருகிறது!!!

 4. anand vasi anand vasi says:

  How is this punch ? நீ அடிச்சா தலைவர் அழுவார்.. ஆனா தலைவர் அடிச்சா நீ அழ மாடே, ஒன்ன சுத்தி நாலு பேர் அழுவாங்க டா…

 5. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  நக்கீரன் போஸ்டரை பார்த்த உடனே அதை வாங்கி படித்து விட்டு நான் செய்த முதல் காரியம்.. நமது தலைவரின் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் .. தயவு செய்து போஸ்டரை பார்த்து புத்தகத்தை வாங்காதீர்கள் என்று… மேலும் உள்ளே உள்ள செய்திகளையும் சுருக்கமாக கூறினேன்… ( நக்கீரனுக்கு இதென்ன புதுசா? புத்தகம் விற்கும் விலையை விட சர்ச்சைகளில் சிக்கி அபராதம் கட்டும் தொகை தான் அதிகம் :-) ..

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 6. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Ivanungaluku ithe velaiya pochu. Intha mathiri news a avoid pannanum. analum kavalai, gopam vara thaan seyuthu

 7. Mohamedamhar Mohamedamhar says:

  Yaraalayum ulaha super stara kayappaduttha mudiyathu..nanbarhale

 8. harisivaji harisivaji says:

  இது கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா தான் இருக்கு

 9. haribasker haribasker says:

  நக்கீரன் எல்லாம் ஒரு பத்திரிக்கை என்று மதித்து அதற்கு நாம் வேறு விளக்கம் கொடுக்கனுமா என்ன.,,இதே கோபால் தான் ரஜினி ரசிகன்(80s 90s) என்று ஒரு பத்திரிக்கை நடத்தி பொழச்சவரு.

 10. Sankaranarayanan Sankaranarayanan says:

  இந்த பத்திரிக்கை கொசுகடி தாங்க முடியல. இவங்க திருந்தவே மாட்டங்க. விட்டு தள்ளுவோம்.

  சரியாக பதிவினை அளித்த சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி…..

 11. GNANASEKAR GNANASEKAR says:

  பத்திரிக்கைகள் லாப நோக்கத்துடன் பரபரப்புக்காக இப்படி தவறன தகவல்களை தருவது வாடிக்கை ஆக உள்ளது

  'மிரட்டலுக்கு பயந்து ரஜினி அழுதாரா' என்ற தலைப்பில் நக்கீரனுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளார் நம் தலைவர்/

 12. Saravanan Saravanan says:

  நாம என்னைக்குமே ரஜினி அய்யாவுக்கு துணையாய் இருப்போம் இது போன்ற தவறான செய்திக்கெல்லாம் நாம் கவலை பட வேண்டாம்

 13. s.vasanthan s.vasanthan says:

  பணத்திற்காக மனிதர்களில் உள்ள மந்தைகள் என்னவெல்லாம் செய்யும் என்பது நமக்கு தெரிந்த விடயமே .,

 14. Anonymous says:

  இவர்களுக்கெல்லாம் "பழிக்கவும் ரஜினி; பிழைக்கவும் ரஜினி"…..! இருட்டில் இருப்பவர்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டுமென்றால் "சூரியனை" நோக்கித்தான் வரவேண்டும்………..! இந்த மாதிரியான விசயங்களை விட்டுத் தள்ளுவோம்…!

  -

  "நல்லதே நினைப்போம்;நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும்"

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 15. Ramar Thoothukudi Ramar Thoothukudi says:

  எப்போ நடந்த விஷயம் …

  இப்ப இழுக்குரங்க …

  தலைவர் பாஷையில் சொன்னா…..

  cool ..

 16. sriram sriram says:

  நக்கீரன் ஒரு மஞ்ச பத்திரிகை ,தலைவர் மிரட்டலுக்கு பயந்து அழுதாராம் போங்க பா போய் பிள்ள குட்டிய படிக்கவைங்க !

 17. muthu muthu says:

  தலைவர பத்தி எவனும் தப்பா எழுத கூடாது …

 18. RAJA RAJA says:

  நக்கீரன் ஒரு மஞ்ச பத்திரிக்கை என்பது ஊர் அறிஞ்ச விஷயம் அதில் வரும் செய்திகளுக்காக நாம் ஏன் கவலை பட வேண்டும் ,அந்த பத்திரிக்கையை வாங்குவதற்கும் ஆள் இல்லை படிபதற்கும் ஆள் இல்லை

 19. murugan murugan says:

  ivanga thirundhavey maattaanga!!!

 20. rajini venu rajini venu says:

  அண்ணா நீங்க இந்த நல்லவர் கோபால் அவர்களை திட்டவும் விட மாட்டிங்க போங்க நல்ல இருக்கட்டும் இந்த ………..

 21. B. Kannan B. Kannan says:

  தலைவர் எவ்வளவோ பார்த்துட்டார், இனி எவ்வளவோ பார்க்க போறார்.. இந்த மேட்டர் ஜிஜ்ஜூபி.. இதுக்கு போய் தலைவர் கண் கலங்குவாரா? ஹஹாஹஹா..

  விடுங்கப்பா, தலைவர் வழியில் நாமும் நம் வேலையை பார்போம்..

  சியர்ஸ்..

  பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

  பா. கண்ணன்.

 22. dr suneel dr suneel says:

  நல்லவேளை போஸ்டர் பார்த்து புத்தகம் வாங்கும் பழக்கம் என்னை விட்டு அகன்றது..

 23. ALAGAN RAJKUMAR ALAGAN RAJKUMAR says:

  டியர் சுந்தர் நல்லா இருக்கீங்களா ,சரி விசயத்திற்கு வருவோம் ஒரு காலத்தில் நக்கீரன் குடும்பதிர்க்கே சாப்பாடு போட்டது ரஜினி ரசிகன் பத்திரிக்கை தான்.கோபால் வளந்துட்டதாய் ரொம்ப நினைப்பில் இருப்பதால் அத எல்லாம் மறந்துட்டார் .நன்றி கேட்ட உலகம் தானே இது .

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates