









You Are Here: Home » Featured, VIP Meet » ரஜினி அளித்த விருந்து & ‘பட்டினத்தார்’ ஆலயத்தில் நடைபெற்ற அதிசயம் — திரு. டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு சந்திப்பு! Part 2
—————————————————————————————————
டி.எம்.எஸ். அவர்களிடம் நாம் பெற்ற ஆசி…!
திரு. டி.எம்.எஸ். அவர்களுடனான நமது சந்திப்பு குறித்த பதிவின் முதல் பாகத்தை படித்திருப்பீர்கள். அதில் நாம் குறிப்பிட்டபடி நமது நோக்கம் ஆசி பெறுவதே. ஆனால், நாம் சென்றபோது திரு. டி.எம்.எஸ். மிகவும் உற்சாகமாக எங்களுடன் பேசியபடியால், அவரிடம் சற்று எங்களால் அளவளாவ முடிந்தது.
முன்னதாக அவரிடம் நாம் ஆசிபெற எண்ணிய போது தனது மனைவி திருமதி.சுமித்ரா அவர்களையும் அழைத்து, இருவரும் சேர்ந்து என்னை ஆசீர்வதித்தனர். அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றேன். என்னுடைய தனிப்பட்ட மற்றும் பொதுவான சில வேண்டுதல்களை அவரிடம் தெரிவித்து அவை சீக்கிரம் நிறைவேற ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டேன். “ஓம் சரவணவ பவ” என்று திருமுருகனின் சடாஷர மந்திரத்தை கூறியபடி ஆசீர்வதித்தார்.
நண்பர்கள் கண்ணன் வைரமணி மற்றும் விஜய் ஆனந்த் இருவரும் அடுத்தடுத்து அவர்களிடம் ஆசிபெற்றனர். திரு. டி.எம்.எஸ். மற்றும் அவரது மனைவி, பிறகு அவரது மகன் என தனித்தனியே ஒவ்வொருவரும் புகைப்படமெடுத்துக் கொண்டோம்.
முருகன் திருவருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று கூறி வாழ்த்தினார். நமது தளத்தின் சார்பாக இதுவரை எத்தனையோ சந்திப்புக்களில் எத்தனையோ முக்கியஸ்தர்களை நான் பார்த்துவிட்டேன். ஆனால், இந்த சந்திப்பு உண்மையில் இறைவன் எனக்கு அளித்த பரிசு என்றால் மிகையாகாது.
—————————————————————————————————
இரண்டாம் பாகத்துக்குள் செல்வோமா…
நாம் : “சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளையொட்டி கொடுத்த விருந்துக்கு நீங்கள் சென்று வந்த அனுபவத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?”
(அவரது வீட்டு வரவேற்பறையில், சூப்பர் ஸ்டாருடன் இவர் இதர முக்கியப் பிரமுகர்களுடனும் இண்டஸ்ட்ரி சீனியர்களுடனும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து…)
திரு. டி.எம்.எஸ். : “ஆமா… பாலச்சந்தர் அவருக்கு ‘ரஜினி’னு பேர் வெச்சு 35 வருஷங்கள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி அது. ரஜினியே கூப்பிட்டிருந்தாரு. போயிருந்தேன். அம்மா சாப்பாடு போட்டாங்க அந்த பங்க்ஷன்ல. (லதா ரஜினியை குறிப்பிடுகிறார்). அம்மாவே சமைச்சு அவங்க கையால சாப்பாடு போட்டாங்க. நான் சாப்பிட்டுக்கிட்டுருக்கும்போது ஐயா வந்துட்டார். நான் அள்ளி அள்ளி சாப்பிட்டுக்கிட்டுருக்கேன். “சாப்பாடு எப்படியிருக்கு”ன்னு கேட்டார். நான், “சாப்பிடுறதை பார்த்தாலே தெரியலே”? அப்படின்னேன். அந்தளவு பிரமாதமான சாப்பாடு.
நாம் : ரஜினி அவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?
திரு. டி.எம்.எஸ். : ஆக்க்ஷன் படங்களாகவே தொடர்ந்து நடிக்காமல் நடிப்பு திறனை காட்டக்கூடிய படங்களையும் அவர் செய்ய வேண்டும்.
நாம் : எளிமையாக தன் திரையுலக வாழ்க்கையை துவக்கிய ரஜினி இன்று உலகம் போற்றும் நடிகராக உயர்ந்திருப்பது பற்றி?
திரு. டி.எம்.எஸ். : இன்னைக்கு உலகம் பூரா அவரை கொண்டாடுதுன்னா அதற்கு காரணம் அவர் செய்த பாக்கியம் தான். மேலும் அது அவரோட பிறவியின் பயன். அவர் ஒரு சித்தர் அல்லவா… தவிர அவருக்கு இருக்கிறது கருணை உள்ளம். கருணை உள்ளத்துக்கு தன்னை சுத்தி நடக்குற எல்லாமே புலப்படும். அவர் இப்படி ஒரு ஸ்டைல் பண்ணி அப்படி ஒரு பார்வை பார்த்தா எல்லாரும் பயப்படுவாங்க. ஆனால் அவர் பரமசாது. மற்றவர்களை புரிந்துகொள்ளக்கூடிய சக்தி உள்ளவர். இவர் இங்கே பூஜையெல்லாம் போட்டு படம் ஸ்டார்ட் பண்றார்னா, அங்கே (இமயமலை) போய் கூட ஒரு பூஜை போட்டு, படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டு வர்றார். பக்தி ரொம்ப உள்ளவர்.
திறமை என்று பார்த்தால் அது எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் அதை ஒருவர் பயன்படுத்துவதில் தான் வித்தியாசம் இருக்கிறது.
ஐயாவை எல்லாரும் பாராட்டுறாங்கன்னா அந்த ஸ்பீட் எல்லாருக்கும் வராது. இப்படி ஒரு பார்வை, அப்படி ஒரு பார்வை பார்த்தாருன்னா எல்லாரும் கை தட்டுவாங்க. யங்ஸ்டர்ஸ்ல இருந்து வயசானவங்க வரைக்கும் எல்லாரும் அவரை விரும்புறாங்க. அவரோட மானரிசங்களை ஃபாலோ பண்ண ட்ரை பண்றாங்க.
நாம் : நீங்க மிகப் பெரிய முருக பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்க கேட்டதெல்லாம் முருகப் பெருமான் கொடுத்திருக்கிறார் என்பதும் தெரியும். முருகனுக்கும் உங்களுக்கும் உள்ள அந்த பந்தத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். உங்களை முருகன் சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்று கருதுகிறீர்களா ஐயா?
திரு. டி.எம்.எஸ். : முருகன் எப்படின்னா… என் பிறவி தெய்வம் அவர். நான் பிறந்திருப்பதே அவரால் தான். என் அப்பா அம்மா தான் என்னை பெற்றார்கள் என்றாலும் அதற்க்கும் ஒரு அருள் வேண்டுமல்லவா. “நீ நல்லா பாடுவே… உலகமெல்லாம் உன்னை போற்றுவார்கள்!” என்று எனக்கு வரமளித்த தெய்வம் முருகன் தான். “சித்தர்கள் எல்லாம் உன்னை பாராட்டுவார்கள்!” என்று கூறி என்னை முருகனின் பக்தராக படைத்தார்.
முருகனுடைய பாட்டுக்களை எல்லாம் மெய்மறந்து பாடுவேன். ஆடியன்ஸ் எல்லாரும் தாங்கள் பாடுவதை போல உணர்வார்கள். அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை படைத்திருக்கிறார். இனி எல்லாருடைய இதயத்திலும் டி.எம்.எஸ். இருப்பார். அனைவரும் என்னை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அதே போன்று தான் ரஜினிக்கும். இதெல்லாம் தெய்வத்தின் அருள். இது பற்றி நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. தெய்வம் எப்படி வந்து காப்பாற்றும் என்றால், ஏதோ ஒரு வடிவத்தில் வந்து காப்பாற்றும். நாம் அதை காண முடியாது.
நாம் : முருக பக்தரான நீங்கள் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது என்ன நினைப்பீர்கள்?
திரு. டி.எம்.எஸ். : எனக்கு உடம்பு சரியில்லாம் போகும்போதெல்லாம், முருகனை கேட்பேன்… “ஏன் சாமி எத்துனை பாட்டு உங்க மேல பாடியிருப்பேன்? என் மேல உங்களுக்கு கருணை இல்லையா? இப்படி வியாதி வந்து படுக்குறதுக்காகவா என்னை இத்துனை நல்ல பாடல்கள் எல்லாம் பாட வெச்சீங்க?”ன்னு கேட்பேன். ஒரு வாரத்துல கம்ப்ளீட்டா குணமாகி வீட்டுக்கு வந்துடுவேன். அவனோட கருணை தான் எல்லாமே. என் மனசுல நான் அழுதா அவன் அழுதது போல உணர்ந்தான் என் முருகன். அதே போன்று தான் ரஜினிக்கும். அவருக்கு எந்த கோளாறு வந்தாலும், கொஞ்ச நாள் இருந்து பிறகு காணமல் போய்விடும். அது தான் என்னுடைய வாக்கு. அந்த வாக்கு குணமாக்கிவிடும் கவலைப் படாதீங்க.
நாம் : ‘பட்டினத்தார்’ படத்தை பார்த்தால் எங்களுக்கு இந்த உலகத்தின் மீது உள்ள பற்று போயே போய்விடுகிறது. அதில் பட்டினத்தாராகவே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
திரு. டி.எம்.எஸ். : நான் நடிச்ச ‘பட்டினத்தார்’ & ‘அருணகிரிநாதர்’ ஆகிய படங்களில் தான் என்னுடைய ஒரிஜினல் வாய்ஸை நீங்கள் கேட்கலாம். மத்த படங்களில் பிறருக்காக நைஸ் செஞ்சு பாடுவேன். ஆனா, நான் நடிச்ச படங்களில் தான் என்னோட உண்மையான குரலில் பேசி பாடியிருப்பேன்.
(ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி …. பாடலை பாடிக் காட்டுகிறார். இன்றெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.)
திரு. டி.எம்.எஸ். : இந்த படங்களிலெல்லாம் நடிக்க வாய்ப்புக்கள் என்னை தேடி வந்தன. “ஐயா… நீங்க தான் இதுக்கு பொருத்தமானவர். நீங்க தான் நடிக்கணும்” என்று கேட்டுக்கொண்டார்கள். நானும் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்தேன். வாய்ப்புக்களை தேடி நான் போனதில்லை. என்னை தேடி தான் அத்துனை வாய்ப்புகளும் வந்தன.
நாம் : ‘அருணகிரிநாதர்’ படம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?
திரு. டி.எம்.எஸ். : ‘அருணகிரிநாதர்’ படம் டி.ஆர்.ராமண்ணா டைரக்ட் பண்ணின படம். அவரோட மனைவியும் படத்துல நடிச்சிருந்தாங்க. என்னோட அக்காவா வருவாங்க. படத்துல நான் ஒரு காமாந்தகாரனா வருவேன். கட்டின பெண்டாட்டியும் என்னை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு தாசி வீடே கதியா கிடப்பேன். கடைசியில தொழு நோய் வரும். முருகன் வந்து என்னை தடுதாட்கொள்வான்.
முத்தைத் தரு பத்தித் திருநகை - ‘அருணகிரிநாதர்’ பாடல் - Video
(Must Watch)
Video URL : http://youtu.be/2vRkCV3symk
நாம் : இயல்பாகவே நீங்க முருக பக்தர். அந்தப் படத்தை நடிச்சதுக்கு எப்படி உணர்ந்தீங்க?
திரு. டி.எம்.எஸ். : நல்லா ஒன்றிப் போய் நடிச்சேன். அருணகிரிநாதரகவே மாறிடுவேன். படம் முழுக்க அப்படித் தான் இருப்பேன்.
“அக்கா… அக்கா…. என்னை பாருக்கா…. ”
(வேசிகளிடம் சென்று தொழு நோய் பீடிக்கப்பட்டு, பார்ப்போர் அருவருக்கும் நிலையில், தன் சகோதரியிடம் பேசும் வசனம் இது. ‘அருணகிரிநாதர்’ படத்தில் டச்சிங்கான ஒரு காட்சி இது. அதை அப்படியே எங்கள் முன் நடித்து காண்பித்தார் திரு.டி.எம்.எஸ்.)
‘அருணகிரிநாதர்’ படத்துல நடிக்கும்போது, தாசிப் பெண்கள் கிட்டே கையை பிடிச்சி ஆடிப் பாடுற மாதிரி சீன்ல எல்லாம் நடிக்கும்போது, அந்த பெண்களே ஆச்சரியப்படுவாங்க. “சாமிக்கு பாடத் தான் தெரியும்னு நினைச்சோம். இதெல்லாம் கூட தெரியுமா?” அப்படின்னு.
படத்துல எல்லாம் பின்னணி பாடும்போது இந்த டான்ஸ் பாட்டுக்கு தானே பாடுறேன். So, அதுனால எனக்கு ஈசியா அதெல்லாம் வந்துடுச்சு. பாட்டு ஞானம் இல்லேன்னா… பாடகனாக முடியாது… ஒரு கலைஞனாக முடியாது. ஏழு வயசுல இருந்து பாடிக்கிட்டுருக்கேன். எந்தப் பாட்டு கேட்டாலும் அதை அப்படியே ரிப்பீட் பண்ணி பாடுவேன்.
நாம் : ‘அருணகிரிநாதர்’ மற்றும் ‘பட்டினத்தார்’ படங்களில் நீங்கள் நடித்தது உண்மையில் நீங்கள் செய்த மிகப் பெரிய பாக்கியம் & முருகனின் அருள். சரி… நிஜத்திலும் முருகனின் அருள் உங்களுக்கு கிட்டியது உண்டா? அது தொடர்பான சம்பவங்கள்?
திரு. டி.எம்.எஸ். : நான் இன்னைக்கு செய்யாத வேலையெல்லாம் செஞ்சிகிட்டுருக்கேன்யா. அதுக்கு காரணம் அந்த முருகன் தான். நான் நினைக்கிறதெல்லாம் அவன் செய்வான்.
ஒரு கோவில் பூசாரி ஒருத்தர் என்னோட ரசிகர். அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அவரோட மனைவி என் கால்ல வந்து விழுந்தாங்க. “ஐயா என்னோட புருஷனை காப்பாத்துங்க”ன்னு சொல்லி. நான் உடனே முருகன் கிட்டே சொன்னேன்…. “முருகா… இவங்க என்னை நம்பி வந்து என் கால்ல விழுந்துட்டாங்க. நான் உன் கால்ல விழுறேன். நீ இவங்களை காப்பாத்து.” அப்படின்னேன். என்ன ஆச்சரியம்? அவருக்கு குணமாகி இன்னைக்கும் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கார்.
(உடனே நம் தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை இவர் மூலமாக முருகப் பெருமானிடம் வைத்தோம். அதற்கு அவர்….)
திரு. டி.எம்.எஸ். : நீங்க முருகன் கிட்டே சொல்லுங்க… “உங்களை நிறைய தடவை கும்பிட வேண்டாம்… ஒரே ஒரு தடவை கும்பிட்டா போதும்… டி.எம்.எஸ். சொன்னாரு அப்படின்னு!”
‘ஓம் சரவணா பவ முருகா’ன்னு மனசு நிறைஞ்சு சொல்லுங்க. மத்தது எல்லாம் அவன் பார்த்துப்பான். அவனுக்கு சத்தியம் தான் ரொம்ப முக்கியம். அது ஒன்னுக்கு தான் முருகன் மயங்குவான். உங்களோட வில் பவர் ரொம்ப முக்கியம்.
நாம் : திருவொற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா ஐயா?
(பட்டினத்தார் தன் இறுதிக் காலத்தில் சமாதியடைந்த இடம் தான் இந்த திருக்கோவில். சுற்றுச் சுவரும் பாதுகாப்பும் இல்லாமல் இருந்த இந்த கோவில், சமீபத்தில் வடநாட்டு செல்வந்தர் ஒருவரால் நிதியளிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.)
திரு. டி.எம்.எஸ். : என்னோட ரசிகர் விஜயராஜ் என்பவர் எடுத்துகிட்டுருக்குற படத்துக்காக (டாக்குமெண்டரி) போனவருஷம் அங்கே போயிருந்தேன். அப்போ ‘பட்டினத்தார்’ திருக்கோவிலுக்கு போயிருந்தேன். கோவிலுக்கு வெளியே கருவாடும் மீனும் வித்துக்கிட்டுருந்துச்சு. எனக்கு ஒரு மாதிரி இருந்தது. “இந்த நிலையை மாற்றக்கூடாதா?”ன்னு பட்டினத்தார்கிட்டே வேண்டிகிட்டேன்.
கோவிலுக்கு நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் அங்கே மீனவ குப்பம் மற்றும் குடிசைகள்ல இருக்குற பெண்கள் எல்லாம் ஓடி வந்தாங்க. ‘பட்டினத்தார் சாமி வந்திருக்காரு… பட்டினத்தார் சாமி வந்திருக்காரு’னு… வந்து என் கால்ல விழுந்து வணங்கினாங்க. “ஐயா… எங்க வீட்டுக்காரங்க எல்லாம் தினம் குடிச்சிட்டு வந்து வீட்டுல கலாட்டா பண்றாங்க. சம்பாத்தியத்தை வீட்டுக்கு கொடுக்குறதில்லே. குடிச்சே அழிக்கிறாங்க…. நீங்க தான் இதுக்கு ஒரு வழி சொல்லனும்”னு கேட்டுகிட்டாங்க.
நான் சொன்னேன், “அம்மா யார் யார் வீட்டுல புருஷன்மார்கள் குடிச்சிட்டு வர்றாங்களோ அவங்களை வீட்டுல சேர்க்காதீங்க. ‘குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ளே விட முடியாது’னு தைரியமா சொல்லுங்க. அவங்க தானா வழிக்கு வருவாங்க” அப்படின்னேன். நான் சொன்னது நல்லாவே வொர்க்-அவுட் ஆச்சு. பெண்டாட்டிகள் வீட்டுல சேர்க்கலைன்னதும் புருஷன்கள் குடிக்கிறதை நிறுத்தினாங்க. ஒழுங்கா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. வீட்டுக்கு சம்பளத்தை முழுசா கொடுக்குறாங்க. இப்போ அங்கே பூவும் பழமும் தான் விக்கிறாங்க. கருவாட்டு வாசனை அடிச்ச இடத்துல இப்போ பூ வாசனை. எல்லாம் பட்டினத்தார் சுவாமிகளோட கருணை தான்.
நாம் : குடிப்பவர்களை திருத்துவது அத்துனை சுலபமில்லை. குடிப்பழக்கத்தால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உண்டு. ஆனால் உங்களின் இந்த திருவாக்கால் அப்பகுதி மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த திருப்பம்… என்ன சொல்ல உங்களுக்குள் உறைந்திருக்கும் முருகப் பெருமானின் அற்புதமேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
நாம் : இறுதியாக எங்களுக்கு எங்கள் தள வாசகர்களுக்கும் ரஜினி அன்பர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
(கேட்டது தான் தாமதம். கீழ்கண்ட பாடலை பாடியே காண்பித்துவிட்டார்.)
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு - ‘பட்டினத்தார்’ பாடல் VIDEO
(MUST WATCH)
URL : http://youtu.be/8culYaizZB8
———————————————————————————-
ஒன்றென்றிரு - ‘பட்டினத்தார்’ பாடல் வரிகள்
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு
உயர் செல்வமெல்லாம் அன்பென்றிரு
பசித்தோர் முகம் பார்
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்கமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்கு உபதேசம் இதே….
நாட்டமென்றே இரு சத்குரு பாதத்தை நம்பு
பொம்மாலாட்டம் என்றே இரு
பொல்லா உடலை பொம்மாலாட்டம் என்றே இரு
சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டம் என்று இரு
சுற்றத்தை
வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டம் என்றே இரு
மனமே உனக்கு உபதேசம் இதே..
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு
———————————————————————————-
சந்திப்பு நிறைவடையும் நேரம் வந்ததையொட்டி மீண்டும்
அவரது கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றுவிட்டு நன்றி கூறிவிட்டு திரும்பினோம்.
நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
[END]
அருமையான பதிப்பு சுந்தர் அண்ணா………நன்றி
Hi Sundar,
This is a very fine slot.TMS who is a true devotee of Lord Murugan……
Its great to get blessings frm him which you have got it…
I like the way our forum moves nowadays….
showing job opportunities and also displaying the interview of great persons like TMS……Good sundar..Rajini will help otheres always …but even the rajini forum will guide others …..
great
The interview and the song links are very nice! thanks a lot! and best wishes!
T.M.S avargalin Mannalum thiruchenduril mannanave… naal Full a kekalam, Theivigamana padal. Anna you r blessed to get interview with him. Thank you na.
"நான் சாப்பிட்டுக்கிட்டுருக்கும்போது ஐயா வந்துட்டார்"
******
ரஜினியை இவர் ஐயா என்று கூப்பிடுவது ஆச்சியரிமாக உள்ளது.
**
"இனி எல்லாருடைய இதயத்திலும் டி.எம்.எஸ். இருப்பார். அனைவரும் என்னை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அதே போன்று தான் ரஜினிக்கும். இதெல்லாம் தெய்வத்தின் அருள்."
******
நூற்றுக்கு நூறு உண்மை.
**
ஒரு வாரத்துல கம்ப்ளீட்டா குணமாகி வீட்டுக்கு வந்துடுவேன். அவனோட கருணை தான் எல்லாமே.
******
உண்மை தான். சூப்பர் ஸ்டார் சந்திரமுகி இரனூராவது நாள் விழாவில் சொன்னது போல் தான். நாம் எந்த தெய்வம் வணங்குகின்றோமோ அவரிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் எல்லாம் ஜெயம் தான். அப்படி ஒரு ஸ்திர பக்தி வேண்டும்.
*******
"அவனுக்கு சத்தியம் தான் ரொம்ப முக்கியம். அது ஒன்னுக்கு தான் முருகன் மயங்குவான். உங்களோட வில் பவர் ரொம்ப முக்கியம்".
***
இதைத்தாங்க தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஒரு மனிதனின் வெற்றிக்கு வழிகள் என்று சொல்வாங்க. நம்மளோட வேலைய நாம் நம்ம திருப்திக்கு ஏற்றவாறு செஞ்சோம்னா ஆண்டவன் அதற்கு தகுந்த மாதிரி நமக்கு உதவி செய்வான்.
இதை தான் நம்ம ஆள் பாட்ஷாவில்,
"நம்மள நாம கவனிச்சாத்தான், ஆண்டவன் நம்மள கவனிப்பான்" அப்டின்னு சொல்வாருங்கோ!!!!
******
ரஜினி என்னும் மாமனிதனுக்கு ரசிகனாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.!!!
****
இந்த பரத கண்டத்திற்கு (உங்களால்) நல்ல நேரம் நெருங்கிட்டு இருக்கு!!!
****
**சிட்டி**!!!
ஜெய் ஹிந்த்!!!
Dot .
great
good interview !!!
“எளிமையாக இருக்க
ரஜினி யாரிடமும் கற்றுக்
கொள்ளவில்லை..
அது அவர் கூடப் பிறந்த
குணம்!”
நண்பர் சுந்தர் அவர்களே:
திரு. T.M. சௌந்தரராஜன் அவர்களுடன் நீங்கள் எடுத்த பேட்டி ஒரு பத்திரிகையில் வெளியிடத் தக்க அளவிற்கு மிகச் சிறப்பானது.
TMS சிறப்பைப் பற்றி எழுத இந்தப் பேட்டியில் உள்ள இடம் போதாது. இருந்தாலும் ஒரு சிறிய பாடல் குறிப்பு.
ஹிந்தியில் பாடிய பாடகர்களில் முகேஷ், முஹம்மது ரபி, கிஷோர் குமார் தலையான மூவர். இதில் ரபி அவர்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரே இசையுடன் ரபி, TMS இருவரும் பாடக் கேட்டேன். எத்தனை தடவை கேட்டாலும் ரபி பாடல் அவர் பாணியில் மிகவும் இனிமையாக இன்னும் ஒலிக்கிறது. அதைக் கேட்டு விட்டு TMS பாடக் கேட்கும் போது இன்னும் சிறப்பாக காதில் தேனாக ஒலிக்கிறது. அதனால் ஒரு மிக பெரிய கலைஞர் TMS என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரிஜினல் ஹிந்தி பாடல்:
முகம்மத் ரபி : Sou Baar Janam Lenge
மின் இணைப்பு: http://bit.ly/IvbViH/
டி.எம். சௌந்தரராஜன்: ஓர் ஆயிரம் பார்வையிலே
இசை: (காப்பி மன்னன்) வேதா
மின் இணைப்பு: http://bit.ly/IBzQaR/
இந்தக் கருத்தை வெளியிட்டால் சுந்தருக்கு மிக்க நன்றி.
-==== மிஸ்டர் பாவலன் ===-
பரவசமான அனுபவம் !!!
சமீபத்தில் தான் பட்டினத்தார் திரைக்காவியத்தை பார்க்க நேர்ந்தது !!!
அந்த திரைப்படத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வர சில மாதங்கள் ஆனது எனக்கு !!!
மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய அற்புதமான திரைப்படம் !!!
சுந்தர் அவர்களே நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி !!!
வாழும் பட்டினத்தாரிடம் ஆசி பெற்றுவிட்டீர்கள் !!!
பெரியவர்கிட்ட கல்யாண ப்ராப்தி ரஸ்துன்னு ஆசீர்வாதம் கிடைச்சதா ? சுபஷ்ய சீக்ரம்
Hi Sundarji,
Very nice interview.Really a tonic for all the youngsters.
But I dont like the below sentence. Its not a bad thing to sell fish near the temple. That is not a very bad job to do.Since the temple was situated in the Fisherman's area.
//அப்போ ‘பட்டினத்தார்’ திருக்கோவிலுக்கு போயிருந்தேன். கோவிலுக்கு வெளியே கருவாடும் மீனும் வித்துக்கிட்டுருந்துச்சு. எனக்கு ஒரு மாதிரி இருந்தது. “இந்த நிலையை மாற்றக்கூடாதா?”ன்னு பட்டினத்தார்கிட்டே வேண்டிகிட்டேன்.//
————————————————-
கருவாடோ மீனோ விற்பதை எவரும் தவறு என்று சொல்லவில்லை. தயவு செய்து இது போன்று விபரீத அர்த்தங்களை கற்பிக்க வேண்டாம். கோவில் வளாகத்துக்குள் விற்பது தவறு என்று தான் சொல்கிறேன். ஒரு கோவிலுக்கு போறீங்க…. அங்கே அர்ச்சனை பண்ண பூ, பழம் கிடைக்கலே. கடைகளும் இல்லே. கருவாடு, மீனும் தான் வித்துகிட்ருக்கு…. அதை வாங்கி போய் அர்ச்சனை பண்ண முடியுமா? கிடைக்கவேண்டிய பொருள் இடம் மாறி கிடைச்சா அதை ஏத்துக்க முடியுமா?
முன்பு அந்த இடத்தில் பழம், பூ முதலியவை கிடைக்கும் வாங்கி அர்ச்சனை செய்யலாம் என்று வந்து, கடைகள் இன்றி ஏமாந்தவர்கள் நிறைய பேர். திருவொற்றியூர் கோவிலுக்கும் இந்த கோவிலுக்கும் ரொம்ப தூரம். உடனே சென்று அங்கும் வாங்கி வர முடியாது. கோவிலுக்கு வருபவர்களுக்கு எது தேவையோ அது அங்கே கிடைக்கனும்னு நினைத்திருக்கிறார் டி.எம்.எஸ். அவ்வளவே.
- சுந்தர்
Even a popular magazine reporter can't present better than this. Fantastic presentation. That too from a legend and Saint like TMS.
சுந்தர் நீங்கள் மிகவும் பாக்கியசாலி. இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. சிலரது குரல் செவிக்கு இனிமை, இன்னும் சிலரது குரல் மனதுக்கு இனிமை. ஆனால் TMS அவர்களின் குரல் ஆத்மாவையே சென்றடையும் அளவுக்கு இனிமை கம்பீரம் வார்த்தை உச்சரிப்பு ஸ்வர சுத்தம், எல்லவற்றுக்கும் மேலாக அற்புதமான பாவம். ஈரேழு பதினான்கு லோகத்திலும் இதுபோன்ற ஒரு குரலை கேட்க முடியாது. TMS அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நாம் செய்த பாக்கியம்.
———————————————-
மிக்க நன்றி ஸ்ரீராம். டி.எம்.எஸ். அவர்களை பார்க்கமுடியுமா? பார்த்தாலும் பேசமுடியுமா? என்றெல்லாம் எனக்கு இந்த முயற்சியை துவக்கும்போது சந்தேகங்கள் எழுந்தவண்ணமிருந்தன. இறைவன் அருளால் தான் அனைத்தும் சாத்தியமாயிற்று என்று நினைக்கிறேன்.
- சுந்தர்
சுந்தர் அருமையான பேட்டி! ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து இருக்கீங்க என்று தெரிகிறது.
பாவலன் கூறியது போல ஒரு பத்திரிகையில் வெளியாகும் அளவிற்கு தரமான பேட்டி. TMS அவர்கள் இந்த பேட்டியின் போது மன நிறைவை அடைந்து இருப்பார் என்று கருதுகிறேன்.
உங்களுடைய அடுத்த கட்ட முயற்சியான பேட்டி எடுப்பது சிறப்பாக வருகிறது. வாழ்த்துகள்.
———————————-
மிக்க நன்றி கிரி.
மற்றும் பாவலன் உள்ளிட்ட நண்பர்களுக்கும் நன்றி.
ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமைக்கு அனைவருக்கும் நன்றி.
- சுந்தர்
சூப்பர் சூப்பர் சூப்பர்…!!!!!!!!!!!! சுந்தர் அண்ணா…!!! கலக்கிட்டிங்க….!!!!!! டி.எம்.எஸ். அவர்கள் தலைவரை ஐயா ஐயா என்றே அழைப்பதிலிருந்தே தலைவரின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது புரிகின்றது..
என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..
உண்மைலேயே தெய்வீக சித்தர் ஒருவரின் அருள் வாக்கினை கேட்ட ஒரு நிறைவு உள்ளது.
மிக்க நன்றி சுந்தர்ஜி….
அருமையான பதிவு. நாங்களும் TMS ஐயா அவர்களுடன் உரையாடியது போன்ற உணர்வை ஏற்படுத்தி, அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். ரொம்பவும் சந்தோசமாக உணர்கிறேன்….. TMS அவர்கள் குரல் நான் அரை ட்ராயர் போட்டு இருந்த காலத்தில் இருந்தே என்னை மயக்கிய குரல். மேலும் எனது திருமணம் நடந்தது செந்தூர் வேலன் முன்னிலையில், அவன் சந்நிதியில் தான். அப்படியுள்ள ஒருவனுக்கு இந்த கட்டுரை எப்படி இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. குமரனை நம்பி கோரிக்கை வைப்பவர்கள் , திரும்ப அவனிடம் குறையென்று போகவே அவசியம் வராது. கருணை சாகரம். நினைத்தாலே போதும். நிறைவேறும் எல்லாம். முழுவதும் படித்து முடிக்கும் வரை , ஐயா அவர்கள் பாடிய மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் பாடிய பாடல்…. முருகா … முருகா என்று மனதுக்குள் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருந்தது…. …..
Thank you, Thank you so much for sharing this article…..!
வீட்டில சொல்லி கண்டிப்பா சுத்திப் போடுங்க பாஸ்..!
————————————-
மிக்க நன்றி ரிஷி அவர்களே. தங்களின்