You Are Here: Home » Featured, Rajini Lead » “இதுவும் கடந்து போம்!” — சென்ற வருடம் இதே நாள் ‘ராணாவின் கோலாகல துவக்கம் & ரஜினி மருத்துவமனையில் அனுமதி!

ப்ரல் 29… 2011…. சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நாள் என்றால் மிகையாகாது. ஏன் ரஜினி ரசிகர்களின் வாழ்விலும் தான்.

மிகவும் பரபரப்பான நிலையில், திரைத் துறை பெரியவர்கள் மற்றும் அவரை வளர்த்து ஆளாக்கியவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரது முன்னிலையிலும் குதுகலமாக தொடங்கப்பட்ட ‘ராணா’ படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டாருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் நிறுத்தப்பட்டது.

‘எந்திரன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு துவங்கிய சூப்பர் ஸ்டாரின் படம் ‘ராணா’ என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் அவர்கள் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள், பிற்பகல் பேரிடியாய் அந்த செய்தி வந்திறங்கியது. ஆம்… சூப்பர் ஸ்டார் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தான் அது.

அடுத்த சில மணித்துளிகளில் ஒட்டுமொத்த உலகமுமே பரபரப்பாகிவிட்டது. “ரஜினிக்கு என்னமோ… ஏதோ….” என்ற பரிதவிப்பு… சோகம்… அழுகை என கலவையான உணர்ச்சி பெருக்குகள்.

(‘ராணா’ பூஜையையொட்டி சென்னை முழுக்க எழுப்பபட்டிருந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ஏ.வி.எம்.மில் நடைபெற்ற பூஜை பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் என்று ஒரு விறுவிறுப்பான பதிவை நாம் அன்று தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் அன்று மாலை அதை வெளியிடுவதற்கு முன்பே, சூப்பர் ஸ்டாரின் உடல்நலக் குறைவு பற்றிய செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதால் மேற்படி சிறப்பு பதிவை நாம் அளிக்கமுடியாமல் நிறுத்திவைத்தோம்.)

அடுத்தடுத்த நிகழ்வுகளில் இடைவெளி விட்டு விட்டு சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை மோசமடைய, ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மே மாத இறுதியில் சிங்கபூருக்கு சிகிச்சைக்கு சென்றார். இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி திரும்பி வந்தார். அனைவரும் மனம் குளிரும் வண்ணம்.

அடுத்தடுத்து மேடைகள், விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு, தனது உடல் நிலை பற்றிய இட்டுக்கட்டி பரப்பப்பட்ட செய்திகளை புஸ்வாணமாக்கினார்.

இதோ ‘கோச்சடையான்’ என்ற படம் துவக்கப்பட்டு அதன் படப்பிடிப்பே முடிந்துவிட்டது. செப்டம்பர் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் போராடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் தான் எத்துனை எத்துனை வதந்திகள்… அப்பப்ப்பா…நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. ஆனால், அந்த நிலை மாறி, இன்று இந்த நிலை பார்க்கிறோம் என்றால் எல்லாம் வல்ல இறைவனின் கருணையேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

http://onlysuperstar.tamilmovieposter.com/wp-content/uploads/2011/05/Rana-Launch.jpg

சிலர் நினைக்கக்கூடும், பஞ்சு அருணாசலம், கே.பாலச்சந்தர், டி.எம்.எஸ்., வாலி போன்ற பெரியவர்கள் எல்லாம் கலந்துகொண்டு ஆசீர்வதித்து படத்தை பூஜை போட்டு துவக்கிய நாளன்றே இது போல அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏன் வந்தது? என்று.

இறைவனின் திருவிளையாடல்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியுமா? மேற்படி பெரியவர்களின் ஆசி தான் நமக்கு சூப்பர் ஸ்டாரை எமனிடம் இருந்து மீட்டுத் தந்திருக்கிறது என்பது தான் உண்மை. “உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும்” என்று ஒரு கர்மா அவருக்கு இருந்திருக்கவேண்டும். ஆகவே தான் அதையறிந்து இறைவன் மேற்படி பெரியவர்கள் அனைவரின் ஆசியையும் அவருக்கு ஒருங்கே அளிக்க வைத்தானோ?

‘ராணா’ என்ற படம் பூஜைப் போடப்படவில்லை எனில் இப்படி தன்னை வளர்த்து ஆளாக்கிய - குரு ஸ்தானத்தில் உள்ள - பெரியவர்கள் அனைவரிடமும் ஒருங்கே ஆசி பெரும் வாய்ப்பு சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்திருக்குமா? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.

இறைவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு?

[END]

11 Responses to ““இதுவும் கடந்து போம்!” — சென்ற வருடம் இதே நாள் ‘ராணாவின் கோலாகல துவக்கம் & ரஜினி மருத்துவமனையில் அனுமதி!”

  1. kumaran kumaran says:

    மறக்க நினைக்கும் நாள். வேண்டாம் ப்ளீஸ்

  2. s.vasanthan s.vasanthan says:

    மறக்க முடியாத நாள் ,சுந்தரும் மறக்கவில்லை,இதுவும் கடந்து போம்!”சரியான தலைப்பு .

  3. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

    Maraka virumbum naal. Iravnin arulal meendu vanthar. Praying god to bless all of us

  4. murugan murugan says:

    முற்றிலும் உண்மை சுந்தர் ஜி !!!

    நினைத்துகூட பார்க்க முடியாத நினைத்தாலே நெஞ்சம் பதறுகிற தருணம் அது !!!

    எவருக்கும் எந்த பதிலும் கூற முடியாத மனநிலை !!!

    அந்நாளில் பிராத்தனை ஒன்றே நமக்கு உற்ற துணை !!!

    எல்லாம் நன்மைக்கே!!!

    தலைவர் ராணாவாக மீண்டும் வருவார் !!!

    சரித்திரம் படைப்பார் !!!

    சோதனைகளை சாதனைகலாக்கும் சக்தி தலைவருக்கு கை வந்த கலையாயிற்றே !!!

  5. kochadaiyaan kochadaiyaan says:

    enna solvathu theriyavillai …andha naal …piragu ..adhe paraparappudan oru 4 / 5ndu iruvagal …nenachale ..imsaiyaga irukirathu …thalaivar meendu vanduttar …vetriyum ettivittar …thalaivarukku pala noorandu vaazha andavanai asirvatham seiya vendi kolkiren ..:) …indha nerathil ..praarthanai seitha rasigarkalukkum…amithabh avargalukkum (maruthuvamanai link kodutha ) nanrigal

  6. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி, ராணா தமிழக சட்ட பேரவை தேர்தல் முடிந்த சில நாட்களில் அரபிக்கபட்டது.

    .

    எந்திரனை முடித்து விட்டு ரசிகர்களை சந்திக்க போவதாக சொன்ன தலைவர், அந்த நேரத்தில் தமிழக அரசியல் களம் உச்சகட்ட உஷணத்தை எட்டியது. இதனால், தலைவர் அமைதி காத்து வந்தார்.

    .

    ஒட்டு பதிவு முடிந்த பிறகு தலைவரை சந்தித்த பாஜக தேசிய தலைவர் தலைவர் 2 ஆண்டுகளில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அறிவித்தார்.

    .

    தலைவர் நன்கு கூர்ந்து கவனித்து வரும் நம்போன்ற ரசிகர்களுக்கு, தலைவர் ரானாவில் கட்டிய ஆர்வம் மற்றும் உட்சாகத்தை உணர முடிந்தது. ரானாவிற்கு பிறகு தனது வேறு பரிமாணத்தை உலகத்திற்கு கட்ட தலைவர் தயாராகிவருகிறார் என்று தெளிவாக புரிந்து.(i know we are so closed at the time).

    .

    ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக பல்வேறு விஷயங்கள் அரங்கேறி விட்டது. இதெல்லாம் எதனால் நிகழ்தது என்று நம்மால் கூற முடியவில்லை.

    .

    ஆனால், நடப்பது அனைத்தும் நன்மைக்கே!! இது மட்டும் தெரிகிறது. தலைவர் கோசடையான் முடிந்து மீண்டும் ரானாவில் நடிப்பார் என்று தெரிகிறது. தலைவர் முன்பு நினைத்தது போல அனைத்தும் சிறப்பாக நடக்க வேண்டும். அதற்க்கு நிச்சயம் இறைவன் அசிர்வதிப்பார்.

    .

    rajni will rule tamil nadu

  7. sathish sathish says:

    தலைவா நீ வாழ்க பல்லாண்டு

  8. Sankaranarayanan Sankaranarayanan says:

    உங்கள் பதிவு மிகவும் சரியானது அனைத்து பெரியோரின் ஆசியும், இறை அருளும் என்றும் நம் தலைவருக்கு உண்டு.

    நன்றி

  9. Jegan kerala Jegan kerala says:

    Remembering the days where i rushed to paper shops every morning to see the health status of thalaivar,every one hour i searchd our site for your updates,searching in google about thalaivar's heatlh,fear of rumours and sleepless nights,…………..finaly he is back, and myslf too….

  10. RAJA RAJA says:

    நரம்பில்லாத நாக்கு எப்படி எல்லாம் பேசும் வதந்திகளை பரப்பும் என்று நமக்கு உணர்த்திய கால கட்டம் அது.

    தலைவா நீங்கள் மீண்டு வந்து அந்த நரம்பில்லாத நாக்குகளுக்கு பதிலடி கொடுத்து விட்டீர்கள்

  11. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

    மறக்க நினைக்கும் மறக்கமுடியாத நாள்…

    என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates