You Are Here: Home » Featured, Happenings » இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்! Excl.Pics!!

யக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டு மணமகளை வாழ்த்தினார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படத்தின் மேற்பார்வை இயக்குனர் இவரே. இயக்குனர் சௌந்தர்யா  எடுக்கும் காட்சிகளில் திருத்தம் கூறக்கூட இவருக்கு உரிமை உண்டு. இதற்கு முன்பு சூப்பர் ஸ்டாரை வைத்து படையப்பா, முத்து ஆகிய பிளாக் பஸ்டர்களை கொடுத்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் - கற்பகம் தம்பதிகளின் மகள் ஜனனிக்கும் (எம்.பி.ஏ.பட்டதாரி) தொழிலதிபர் ரவிசேகர் - கலாவதி தம்பதியரின் மகன் சதீஷ் குமாருக்கும் இன்று சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு திரையுலகப் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் திரளாக கலந்துகொண்டு மணமக்களுக்கும் மணமகளின் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடும் என்ற தகவல் கடந்த மாதமே வெளியாகிவிட்டாலும் அவர் காலை நடைபெறும் முஹுர்த்தத்தில் கலந்துகொள்வாரா அல்லது மாலை நடைபெறும்  வரவேற்ப்பில் கலந்துகொள்வாரா என்பது தெரியாமல் இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சரியாக இன்று காலை 11.00 மணியளவில் சூப்பர் ஸ்டார் திருமண மண்டபத்திற்கு வந்தார். ரஜினியை பார்த்ததும் திருமணத்திற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களும் நடிகர் நடிகைகளும் உற்சாகம் அடைந்தனர்.

வந்தவர் நேரே மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு சிறிது உட்கார்ந்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டதால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Superstar Rajini @ K S Ravikumar’s Daughter Wedding - Complete Gallery

[END]

14 Responses to “இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார்! Excl.Pics!!”

 1. kumaran kumaran says:

  தலைவரை தமிழக மக்கள் அனைவரும் (90 சதவீதம் ) தன சொந்தமாக நினைகிறார்கள்

 2. chithamparam chithamparam says:

  தலைவர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்

  கே.எஸ்.ரவிக்குமார் மாப்பிள்ளை மாதிரி இருக்காரே ஹி…ஹி…ஹி

 3. B. Kannan B. Kannan says:

  By GOD's Grace Thalaivar is back and rocking..

 4. simple fan of Supers simple fan of Supers says:

  இயக்குனர் சேரன் சின்ன பிள்ளை போல தலைவர் அருகிலேயே பிரமித்து நின்று ரசிக்கிறாரோ ? அப்பப்போ தன் அறிவு ஜீவித்தனமான பேச்சுக்களால் தலைவரைப் பற்றி எதிர்மறையான விமரிசனங்கள் வைக்கும் இவரால் அவர் முன்னால் இப்படி வாய் திறவா பிரமிப்பில் இருக்கிறார் என்று பாருங்கள்.

  அதை விட நம்ம முன்னாள் கதாநாயகி வைஜந்திமாலா அவர்களை பாருங்கள் வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை . சுத்தி போடணும் இந்த மனுஷனுக்கு

 5. kochadaiyaan kochadaiyaan says:

  thalaivar konja neram thaan irundhaaraam …ore paraparappam ..kozhandainga ellam vittuttu odi poi paathangalam ..makkal !!! konja nerathula kelambittaram ..vaasal varai chendru ullae chella villai ..nanbanai mattum varavazhathitu visarithuvittu vandhuviten…cheran thamboola thattai keezhe vaikkavillayam ..enna guru bakthi !!:) thalaivar family …expected at evnging nnu sonnan…:)

 6. sathish sathish says:

  சூப்பரா இருக்கீங்க சூப்பர் ஸ்டார்

 7. R.Ramarajan-Madurai R.Ramarajan-Madurai says:

  Thalaivar eppavume super a irukar. Ippa thaan Asal movie launch still pathen. Meesai illama apdiye irukar

 8. murugan murugan says:

  Only Super Star ' Rajnikant '

 9. Karthik Karthik says:

  கலக்கல் !

 10. sudha sudha says:

  தலைவருக்கு சுத்தி போட சொல்லுங்க..அத்தனை பேரும் அவரை எப்டி பாக்கிறாங்க பாருங்க..

 11. sAKTHIVEL sAKTHIVEL says:

  RASIGAR MEET PANNA PODUNGA BOSSUUU

  V NEED TO KNOW FANS REACTION

  I DON'T KNOW ABOUT OTHERS

  I'LL BE HAPPY THAT RASIGARS GOT HAPPY AND FULFILLED

 12. Anonymous says:

  தலைவரும் மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கார்…..! அதே துள்ளல், அதே சிரிப்பு, அதே கம்பீரம், அதே உற்சாகம்…..! புதுமண தம்பதிகள் ரொம்ப ரொம்ப லக்கி…..! அவங்க வாழ்க்கைல இனி எல்லாமே வெற்றி தான் !

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 13. RAJA RAJA says:

  சென்ற வருடம் பல திரை நட்சத்திரங்களின் திருமணம் கலகலப்பின்றி இருந்தது அது தலைவர் உடல் நிலை சரி இல்லாமல் வரதாதால்.பல பேர் நினைத்து இருப்பார்கள் அட டா பேசாமல் இந்த வருடம் திருமணம் வைத்து இருக்கலாமே என்று

 14. RAJINIROX G.Udhay.. RAJINIROX G.Udhay.. says:

  முதல் புகைப்படத்தில் வெள்ளை சட்டை போட்டு இருக்கும் மனிதரின் மகிழ்ச்சியை பாருங்கள் ..நமது தலைவரை பார்த்து விட்ட சந்தோசம் அவருக்கு … மணமக்களும் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்… கிரேட் தலைவா …

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates